​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 28 October 2025

சித்தன் அருள் - 1970 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.

நாள் 27-7 2025.

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.  ஈசன் பரிபூரணமாக பார்வதி தேவியுடனே சூட்சுமமாக அப்பனே பல பிறப்புக்கள் கடந்து கடந்து வந்துள்ளீர்கள் அப்பனே.
ஆனால் எதற்காக வந்திருக்கின்றோம் என்றெல்லாம் நீங்கள் அறியவில்லை அப்பா.  அப்பனே அவை அறிந்தால் மட்டுமே அப்பனே கஷ்டங்கள் வராதப்பா. அறிய முடியவில்லை என்றால் அப்பனே நிச்சயம் கஷ்டங்களோடுதான் மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பான்.  இறைவனை எங்கு தேடியும் அப்பனே காணாமல் சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பிறப்புக்கள் எடுத்து கஷ்டங்கள் தான் பட வேண்டும் அப்பனே.
ஏன் கலியுகத்தில் அதாவது இக்கலியுகம் அப்பனே நரகம் என்றே யான் அழைப்பேன் அப்பனே.  நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல யுகங்கள் அப்பனே கடந்து கடந்து இறைவன் சித்தர்கள் இன்னும் ரிஷிமார்கள் ஆட்சி செய்தனர் அப்பனே.
ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கோரிக்கை வைத்தனர் அப்பனே ஈசனிடத்தில், நிச்சயம் அனைத்தும் நீங்களே ஆண்டு கொண்டிருந்தால் எப்படி?
நிச்சயம் பின் உங்களையே வணங்கி வணங்கி யாங்கள் வந்துள்ளோம்.  அதனால் நிச்சயம் எங்களிடத்தில் ஒப்படியுங்கள் கலியுகம் என்றெல்லாம்.
அதேபோல் ஈசனும் கூட மனிதனிடத்தில் ஒப்படைத்தான் அப்பனே அறிந்தும் கூட. இதனால் அப்பனே நிச்சயம் சரியான வழியில்  முதலில் கூட அப்பனே.  ஆனால் காலப்போக்கில் மனிதன் அப்பனே மனது அப்பனே மாற்றம் அடைந்துவிட்டது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பல பல வழிகளில் கூட தொல்லைகள் அப்பனே  இன்னும் அப்பனே  எது என்று கூறிய அப்பனே  அதாவது ஈசன் கொடுத்தானே மக்களிடையே,  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அவையும் கூட,  அப்பனே  மனிதன் சரியாகவே பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே.
அதனால் அப்பனேகலியுகத்தில் மனிதன் ஆட்சிதான் நடக்க வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அப்பனே , நிச்சயம் தன்னில் கூட அப்பனே தன்னை திருத்து கொள்ள வேண்டும்.
அப்படி திருத்தாவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, கடுமையான அப்பனே, நிச்சயம் சவால்கள் எதிர்கொள்ள நேரிடும் அப்பா. 
அதனால்தான் அப்பனே கூட்டு பிரார்த்தனை கூட அப்பனே, உங்களை நீங்கள் வெல்ல வேண்டும் என்பேன் அப்பனே.  
“”” ஒருவர் ஒருவர் கூட அப்பனே அன்பால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சமமே என்று எண்ணத்தை அப்பனே வளர்த்துவிட்டால், அப்பனே உங்களை வென்றுவிட்டால், அப்பனே யாராலும் ஒன்றும் அப்பனே செய்ய முடியாது அப்பா.””””
இதனால்தான் அப்பனே மனிதன் மனிதன் அப்பனே அழித்து கொள்வான் அப்பனே. 
மனிதன் மனிதன் சண்டையில் இடுவான் என்பேன் அப்பனே.
என்றால் அப்பனே, மனிதன் ஆட்சி எதை என்று புரிய அப்பனே, இதனால்தான் அப்பனே,  இதனால் அப்பனே இறைவனும் அதாவது ஈசனும் அமைதி காத்து அமைதி காத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால் பின் நீங்கள்தான் கேட்டீர்கள் என்பேன் அப்பனே.  நிச்சயம் தன்னில்கூட இவ்வாறெல்லாம் நிச்சயம் அமைய வேண்டும். அதாவது கலியுகம் எங்களிடத்திலே என்று அப்பனே .  
இப்பொழுது பார்த்தீர்களா என்பேன் அப்பனே. மனிதனிடத்தில் ஒப்படைத்து விட்டான் இறைவன். ஆனால் அப்பனே நிச்சயம் அதர்மத்தை அப்பனே  நிச்சயம் தன்னை கூட கலியுகத்தில் அதர்மம் தான் ஓங்கி நிற்க வேண்டும் என்பது விதியப்பா.
அப்பனே இவ்வாறாக இருந்தால், அப்பனே யாங்கள் எப்படி? 
அதனால்தான் அப்பனே பின் அதாவது மக்களை பெருக்கி அப்பனே புண்ணிய பாதை, அப்பனே,  இப்  பாதை புண்ணிய பாதை பின் என்று, பின் வழி   உங்களுக்கு காட்டிவிட்டால்,  அப்பனே நீங்கள் அப்புண்ணிய வழியை பிடித்து கொள்வீர்கள் அப்பனே.  அப்பனே  அப்படியே  சென்று பல பேர்களை உங்களால் மாற்ற முடியும் அப்பா. 
“””””””””””” இதனால் அப்பனே மனிதனிடத்தில் இருக்கும் சக்தி எல்லை இல்லாதது என்பேன் அப்பனே. “”””””””””””””””
ஆனால் சரியாகவே உபயோகப்படுத்தவில்லை.  உபயோகப்படுத்தாத நேரத்தில்தான் அப்பனே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
அவ்வாறு எது என்று புரிய அப்பனே இறைவனும் உங்களுக்கு என்ன தேவை என்று உணர்ந்தும் கூட அப்பனே, அமைதிதான் காத்திருப்பான் என்பேன் அப்பனே.
என்றால் ஏனென்றால் அனைத்து சக்திகளும் உங்களிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே.  அதை சரியாகவே அப்பனே சரியாக பயன்படுத்துங்கள் என்பேன் அப்பனே.  அன்பால் உலகை வெல்லுங்கள் என்பேன் அப்பனே.
அனைவரும் ஒன்று சேர்ந்து, பின் அனைவரும் தம் பிள்ளைகளே என்று பின் எப்பொழுது நீங்கள் எண்ணுகின்றீர்களோ, அப்பொழுது நிச்சயம் அப்பனே அழிவு காக்கப்படும் என்பேன் அப்பனே.
மனிதன் எப்பொழுதெல்லாம் எல்லை மீறுகின்றானோ , அப்பொழுதெல்லாம் அப்பனே இயற்கை சீற்றங்கள் பலமாக, அப்பனே நிச்சயம் அப்பனே நீங்கள் நிச்சயம் அறிந்தும் கூட.
இதனால்தான் அப்பனே இங்கு இறைவனும் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே அமைதி காத்திருக்கின்றான் அப்பனே. 
மனிதன் தான் அனைத்திற்கும் காரணமாகின்றான் அப்பனே . 
அதனால்தான் அப்பனே பல வகையில் கூட அப்பனே கூட்டு பிரார்த்தனையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல நன்மைகளை நாங்கள் செப்புகின்ற பொழுது, நீங்களும் கூட அப்பனே நன்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது, அப்பனே இப்படி வாழ்ந்தால் நன்மை பெறலாம் என்று அப்பனே,  சிறுக சிறுக அப்பனே வாய்ப்பு உண்டு. பெருக பெருக பெருக்கி விடும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில்கூட. 
அதனால் அப்பனே உங்களை நீங்கள் பின் நிச்சயம் உணராவிடில் அப்பனே  இன்னும் அப்பனே வருத்தங்கள் தான் என்பேன் அப்பனே.
எத்  திருத்தலத்திற்கு சென்றாலும் அப்பனே ஒன்றும் நடக்காது என்பேன் அப்பனே. 
ஏனென்றால் அப்பனே உன்னை நீ உணராமல் அப்பனே பின் இறைவனை எப்படி நீ உணர்வாய் என்பேன் அப்பனே???
அதனால் உன்னை நீ உணர்ந்துவிட்டால் அப்பனே, இறைவனை எப்படி நிச்சயம் தன்னில் கூட உணர்ந்து விடுவாய் என்பேன் அப்பனே. 
அப்பொழுது நிச்சயம் தேசத்தில் அப்பனே தவறுகளும் நடக்காது அப்பா.
அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் உங்களை நீங்கள் வெல்லுங்கள் முதலில் அப்பனே. 
எப்படி வெல்வது அப்பனே?
பின் வருங்காலத்தில் அப்பனே ஏனைய வாக்குகளையும் கூட அப்பனே எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 
நிச்சயம் உங்களை நீங்கள் வென்றால் அப்பனே தன்னில் கூட, அன்பால் நீங்கள் வெல்வீர்கள் என்பேன் அப்பனே. 
தவறுகள் அப்பனே  குறைக்கப்படும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூ. 
இதனால் அப்பனே அறிந்தும் பின் பன்மடங்கு அப்பனே இப்படி நிச்சயம் தன்னில் கூட பின் கூட்டத்தை கூட்டி, அப்பனே நன்மைகள் உங்களுக்கு, அதாவது பின் தாய் தந்தைகள் அப்பனே அதாவது சொல்லி கொண்டே இருக்கின்றேன்.
தன் பிள்ளைகளுக்கு, அதாவது ஒழுக்கத்தோடு இப்படி வாழ்ந்தால் உயர்வு பெறலாம், நிச்சயம் தன்னில் கூட அதாவது அனைத்தும் சொல்லி கொடுப்பார்கள்  சிறு குழந்தையில் இருந்தே.
அதேபோலத்தான் அப்பனே நீங்கள் அனைவருமே எங்களுக்கு குழந்தைகள் தான் அப்பா. 
பின் உங்களுக்கு தெரியவில்லை வாழ்க்கை பற்றி.
உங்களிடத்தில் ஒரு பெரிய சக்தி,  மீண்டும் மீண்டும் இதைதான் நான் சொல்வேன். 
உங்களிடத்தில் ஒரு பெரிய சக்தி இருக்கின்றது அப்பா. 
அதை நீங்கள் அப்பனே பரிசுத்தமான அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே  இயக்கிவிட்டால்,  சரியாகவே அனைத்தும் தெரிந்துவிடும் அப்பனே.
அனைத்து உயிர்களும் தன் அதாவது தன் உயிர் போல் எண்ண வேண்டும் என்பேன் அப்பனே.  இப்படியே நிச்சயம் தன்னில் கூட எண்ணிவிடுங்கள் அப்பனே.
அதனால் நீங்கள் செய்யும் தவறு அப்பனே, பின் இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் என்பேன் அப்பனே.
நீங்கள் செய்யும் நன்மை அப்பனை, இயற்கை அப்பனே நிச்சயம் பேர் உதவிகள் செய்யும் என்பேன் அப்பனே. 
இயற்கைதான் இறைவன் என்று கூட அப்பனே  நிச்சயம் தன்னில்கூட. இன்னும் இன்னும் சூட்சமங்கள் அப்பனே அடங்கியுள்ளது என்பேன் அப்பனே.
இதனால் நீங்கள் முதல் வகுப்பில் தான் இப்பொழுதும் கூட இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 
இதனால் பத்தாம் வகுப்பு பாடத்தை எடுத்தால் அப்பனே, உங்களுக்கு ஒன்றுமே புரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே.
இதனால்தான் முதலில் இருந்தே அப்பனே வருகின்றேன் அப்பனே. 
இதனால் நன்மைகளே, ஆசிகளே அப்பனே.
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன. 
“”””””””பின் மனிதனிடத்தில் இல்லாத சக்தி அப்பனே  எங்கும் இல்லையப்பா. அதை முதலில் இயக்குங்கள் என்பேன் அப்பனே. “””””””””””
அதை இயக்குவதற்கு அப்பனே  எப்படி என்பதை எல்லாம் அடுத்தடுத்து வாக்குகள் பின் தெரிவிக்கும் பொழுது தெரிவிக்கும் பொழுது அப்பனே உங்களுக்கு புரியும் அப்பா. எப்பொழுது நீங்கள் மீண்டும் அப்பனே உங்களை உணர்ந்து அப்பனே  உணர்ந்து கொண்டால், அப்பனே மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே பின் குறைகள் இல்லை. 
அப்பனே அழகாகவே பின் சித்தர்கள், நிச்சயம் தன்னில்கூட ரிஷிமார்களும் ஆசீர்வதிக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே மீண்டும் எதை என்று கூற அப்பனே, இதனால் அப்பனே அதாவது யான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே?
“””” புண்ணிய வழியை காண்பித்து விட்டால், அப்பனே அதை நீங்கள் பிடித்து கொண்டு முன்னேறி விடுவீர்கள் என்பேன் அப்பனே.”””””
நிச்சயம் தன்னில் கூட அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன், அவை செய்தால் இதை நடக்கும் என்றெல்லாம் பொய்கள் தான் அப்பனே.
நிச்சயம் கலியுகத்தில் அப்பனே பின் அதாவது மனிதன் இறைவன் எதை என்று புரிய அப்பனே, இறைவன் பார்க்கத்தான் போகின்றானா ?? என்றெல்லாம் அப்பனே யான்தான் இறைவன் என்றெல்லாம் அப்பனே பொய் கூறுவான் அப்பனே. 
இன்னும் அப்பனே பக்திக்குள் இருந்தே அப்பனே பல தவறுகள் நடைபெறும் என்பேன் அப்பனே. 
பின் நிச்சயம் அவ்வாறாக அப்பனே நிச்சயம் நடக்கக்கூடாது என்பதற்கு இணங்க அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு பல பக்கவங்கள் ஏற்படுத்தி, அப்பனேஅதன் மூலம் அப்பனேபின் உங்களை பின் நிச்சயம் தன்னில் கூட.

“””” அப்பனே எப்பொழுதும் இறைவனுக்கு அப்பனே  பின் நிச்சயம் தன்னில் கூட களங்கத்தை ஏற்படுத்த கூடாதப்பா. “””””

ஏனென்றால் வருங்காலத்தில் இப்படித்தான் நடக்க போகின்றது என்பேன் அப்பனே. இறைவன் ஒன்றுமே செய்ய போவதில்லை. இறைவனை வணங்கியும் பிரயோஜனம் இல்லை. இதனால் நம்தானே இறைவனை வேஷம் போடுவோம் நிச்சயம்.
நிச்சயம் இறைவன் பேசுகின்றான் எதை என்று கூற, முருகன் பேசுகின்றான், சித்தர்கள் என்னிடத்தில்தான் இருக்கின்றீர்கள் இருக்கின்றார்கள் நிச்சயம்.
அவை இவை பரிகாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, ஆனாலும் அப்பனே ஒன்றும் நடக்க போவதில்லை அப்பனே.  
“”””உங்களை பின் நீங்கள் உணராவிடில் அப்பனே ஒன்றுமே அப்பனே நடக்க போவதில்லை.”””
“””எப்பொழுது உங்களை உணருகிறீர்களோ அப்பனே அப்பொழுது உங்களுக்கு அனைத்துமே நாங்கள் சொல்லி கொடுப்போம் அப்பனே.“””
“”””இடைக்காடன் சொல்லி இருக்கின்றானே அதை முதலில் செய்யுங்கள் என்பேன் அப்பனே நல்விதமாக. “”””
--------------------------------------------------------------------------------------------------
சித்தன் அருள் - 1912 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தரின் பாபநாச வாக்கு! 
https://siththanarul.blogspot.com/2025/07/1912.html
அடியவர்கள் அவசியம் இந்த பூசையை செய்து நலன்கள் பெறுக.
--------------------------------------------------------------------------------------------------

அப்பனே இதனால் அப்பனேன் அனைவருமே அப்பனே நல் நல்முறையாகவே என் அன்பை செலுத்துங்கள் அப்பனே. 
அப்பனே இறைவனுக்கு ஒன்றும் தேவையில்லை அப்பா.  (இறைவன்) இவ் உலகத்தில் அப்பனே நிச்சயம் அதாவது மிகப்பெரியவன் என்பேன் அப்பனே.  இறைவனுக்கு அனைத்தும் செய்ய தெரியும் அப்பா.
அனைத்தும் அவனே செய்து கொள்வான் என்பேன் அப்பனே. நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை என்பேன் அப்பனே.
நிச்சயம் இறைவன் உங்களுக்குதான் பின் சேவை செய்ய வேண்டும் அப்பனே. அதாவது அனைத்தும் உங்களுக்குதான் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே.
இறைவனுக்கு தெரியும். ஆனால் பின் நீங்களோ இறைவனுக்கு அதை படைக்கிறேன் இதை படைக்கிறேன் என்றெல்லாம் அப்பனே இறைவன் உயிரோட்டமாகதான் இருக்கின்றான் அப்பா.
அனைத்தும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பா. அதனால் அப்பனே நீங்கள் திருந்துங்கள் போதுமானது என்பேன் அப்பனே.
இறைவன் பார்த்து கொள்வான் இறைவனை.
அப்பனே நிச்சயம் தன்னில்  கூட உங்களை பார்த்து கொள்வது யாரப்பா???
 சொல்லுங்கள் என்பேன் அப்பனே??? 
இதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் நிச்சயம் அழிவு நிலையில் மனிதன் சென்றி கொண்டிருக்கும் பொழுது , பாவம் என்று வந்து அப்பனே,   இறங்கி வந்து அப்பனே, எவ்வாறு செய்தால் நன்மை நடக்கும் என்பவை எல்லாம் அப்பனே  எடுத்துரைத்து, எடுத்துரைத்து பக்குவங்களை படுத்தி படுத்தி,  அப்பனே நிச்சயம் எங்களுக்கு ஒருவன் போதும் அப்பா இவ்  உலகத்தை திருத்த என்பது அப்பனே.
நிச்சயம் தன்னில்கூட இவ்வாறாக பின் நல்லோர் ஒருவன் கிடைத்தால், அவற்றின் மூலம் பல வழிகளும் ஏற்படுத்தி, அப்பனே நிச்சயம் மனிதர்களாக எதை என்று அறிய அப்பனே முதலில் மனிதராக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
மனசாட்சியோடு அப்பனே வாழ கற்றுக்  கொள்ளுங்கள் போதுமானது அப்பா.
அப்பனே இறைவனுக்கு கொடுக்க வேண்டியது நீங்கள் அன்பு மட்டுமே அப்பனே.
அவ் அன்பிற்கு மட்டும்தான் இறைவன் கட்டுப்படுவான் என்பேன் அப்பனே.
மற்றவைக்கெல்லாம் கட்டுப்பட நிச்சயம் தன்னில்கூட இல்லையப்பா நிச்சயம்.
அதனால் எம்முடைய ஆசிகள் உலோபாமுத்திரையோடு.
இன்னும் அப்பனே பரிசுத்தமாக அனைவருக்குமே அப்பனே ஆசிகள் உண்டு.
குறைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 
“”””அனைவருமே எங்கள் குழந்தைகள் தான் அப்பா.  ஒரு குழந்தையை விட்டுவிட்டு மறு குழந்தையை நாங்கள் பாப்போமா  என்ன அப்பனே? “””” 
நிச்சயம் அவ்வாறு இல்லை அப்பா. அனைவருமே எங்களுக்கு குழந்தைகள் தான்.
அதனால் உங்குடைய விருப்பங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்கள் மனதிலே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே உங்கள் இல்லத்திலே, இறைவா பின் அன்போடு அழையுங்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் தீர்வு கிடைக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
சிலவற்றை அதாவது  சொல்லி கொண்டிருக்கின்றேன்.
அதாவது உலகம் , நரகலோகம் என்பேன் அப்பனே. 
நரகத்தில் ஒழுங்காக வாழ முடியுமா என்ன என்றெல்லாம் அப்பனே? 
நிச்சயம் அவ் நரகத்தில் கூட, நிச்சயம் தன்னில் கூட என் பக்தர்கள் நன்றாக வாழ்ந்து, மற்றவர்கள் கூட அப்பனே  நன்றாக வாழ வைக்க வேண்டும் அப்பா.
அப்பனே இதுதான் அப்பனே. அனைத்து வலிமைகளும் உங்களுக்கு தருகின்றேன் அப்பனே.
 நிச்சயம் அதனால் எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லைப்பா.  
அப்பனே உங்களுக்கு என்ன தேவை என்பதை எல்லாம் அப்பனே அனைவருமே அப்பனே என்ன தேவை என்றால் பணம்தான் தேவை முதலில் என்று சொல்வார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே நிச்சயம் மாயைதான் கேட்டு கொண்டிருப்பார்கள் என்பேன் அப்பனே.  ஆனாலும் அப்பனே அவையெல்லாம் கொடுத்தாலும், அழிவுகள்தான் அப்பனே.
இதனால் புண்ணிய பாதை உங்களை அழைத்து சென்று, இவ்வாறு இருந்தால் பின் நன்மை நடக்கும் என்று சொல்லிவிட்டால், நீங்கள் திருந்தி அப்பனே உங்கள் நிச்சயம் சந்ததி கூட அப்பனே, அப்படியே அப்பனே பரம்பரையாக நன்றாக வாழுமப்பா.
அப்பனே நான் இருக்கின்றேன் அழகாக குறைகள் வேண்டாம் அப்பனே.
அன்பு அன்பு செலுத்துங்கள் இறைவனுக்கு அப்பனே.
அன்பு திரும்ப அப்பனே பன்மடங்கு இறைவன் உங்களிடத்திலே செலுத்துவான் அப்பா. 
செலுத்துகின்ற பொழுது அனைத்தும் நடக்கும் அப்பா. 
அப்பனே அனைவரும் குறை கூட நான் கண்டுணர்ந்தேன் அப்பனே நிச்சயம் என்பேன் அப்ப பொருத்தாக வேண்டும் என்பேன் அப்பனே.
பின் விதியை எவராலும் வெற முடியாது வெல்ல முடியாது அப்பா நிச்சயம் தன்னில் கூட விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும்.
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் விதி பின் அதாவது அதிக கஷ்டமோடு அப்பனே  கடந்து கடந்து கடந்து போய்க்கொண்டே இருந்தால் பக்கத்திலே நாங்கள் இருப்போம் அப்பனே.
“””விதியை வெற்றி பெற்றால் அப்பனே  பின் மோட்ச கதிதான்.”””
அவ்வாறு எதை என்று அறிய அப்பனே அதாவது சில நேரங்கள் விதி கடுமையாக இருந்தால் அப்பனே,  ஆமை போல் வாழ வேண்டும் என்பேன் அப்பனே.
அமைதியாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்படி இருந்து விட்டால் நிச்சயம் என் இறைவன் உங்களை அழகாக பாதுகாப்பான் அப்பா.
எப்பொழுது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்? 
எப்பொழுது பின் எதை என்று புரிய, அப்பனே  புரியாமல் வாழ்ந்து வருகின்றீர்கள் கலியுகத்தில் என்பேன் அப்பனே.  
இன்னும் அப்பனே பின் போக போக, பைத்தியங்கள் அப்பனே  ஆகிவிடுவார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே.
என்னென்ன. ஏது. கிரகங்கள் பின் சற்று அப்பனே வலிமை எதை என்று புரிய அப்பனே சராசரியக இயங்காமல், அங்கும் இங்கும் சென்றடைகின்ற பொழுது, அப்பனே பின் அக்கதிர்கள் அப்பனே  நிச்சயம் பின் எதை என்று கூற கீழே விழுகின்ற பொழுது, நிச்சயம் அவ் மூளை தாக்குகின்ற பொழுது, மனிதனுக்கு என்ன செய்கின்றான் என்பதெல்லாம் தெரியாதப்பா. 
அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே  நாங்கள் பின் மாற்றுகின்றோம்.  நிச்சயம் தன்னில்கூட நீங்கள் அப்பனே அழகாக அன்பை செலுத்துங்கள் அப்பனே.
நிச்சயம் பல பதிகங்கள் படியுங்கள் அப்பனே. 
எப்படி எல்லாம் பின் வாழ வேண்டும்? 
எப்படி எல்லாம் வாழ்ந்தால் அப்பனே தர்மத்தை நிலைநாட்டலாம் என்றெல்லாம் அப்பனே.
இதனால் தர்மத்தை நீங்கள் நிலைநாட்டுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில்கூட.
அதனால் எப்படி நிலைநாட்டுவது என்றெல்லாம் அப்பனே நிச்சயம் நான் சொல்லி தருகின்றேன் அப்பனே. 
ஏனென்றால் உங்களுடைய அதாவது உங்களிடத்தில் அப்பனே பெரிய சக்தி அப்பனே  செயல்பட்டு கொண்டே இருக்கின்றது. அதை யாரும் சரியாக உபயோகப்படுத்துவதே  இல்லை என்பேன் அப்பனே. 
நிச்சயம் அதை உபயோகப்படுத்த,  பல பின் தாந்திரிகங்களும்  யான் சொல்லி தருகின்றேன் அப்பனே குறைகள் வேண்டாம். 
அப்பனே அனைவருமே அப்ப நிச்சயம் அன்பாக அப்பனே நிச்சயம் இருங்கள்.
அவ் மனதில் யாங்கள் குடியிருந்து வழி நடத்துவோம் அப்பனே. 
எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே.
நன்மையாகவே அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் செப்புகின்ற பொழுது உங்களுக்கு தெரியும் அப்பா. 
அப்பனே நிச்சயம் அனைவருக்குமே கந்தன் கருணையோடு அப்பனே,  பின் பாவம் பின் பாவநாசத்தை செய்யும் நிச்சயம் பாவநாதன் அப்பனே  பின் அம்பாளுடனே அப்பனே  ஆசீர்வாதங்கள் பெற்று செல்லுங்கள்.
மீண்டும் மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட அப்ப ரிஷிகளும் வந்து எவ்வாறு நிச்சயம் செய்தால்,  நிச்சயம் அவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட நடக்கும் என்பதை எல்லாம் பரிசுத்தமாக உங்களுக்கே சொல்லி கொடுப்பார்கள் என்பேன் அப்பனே.  
சொல்லிவிட்டேன்.  
மற்றவர்களை  எப்பொழுது நீங்கள் நம்பி  வாழ்ந்தால், அப்பனே இறைவன், அங்கு வேலையே இல்லை அப்பா. 
நிச்சயம் அழிவுதான் என்பேன்  அப்பனே. 
“””” உங்களை, நீங்கள் நம்புங்கள். நம்புங்கள்.”””
“””அப்பனே யாங்கள் வருவோம்.””””
“”” வழிகாட்டுவோம்.”””
அனைவருக்குமே உலோபமுத்திரையோடு  ஆசிகள், ஆசிகள்  பன்மடங்கு  அப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment