​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 14 October 2025

சித்தன் அருள் - 1949 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் உரைத்த தீப வழிபாடு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே மதுரை கூட்டுப்பிரார்த்தனையில் இடைக்காடர் சித்தர் பெருமான் கூறிய அனைவரும் வீட்டில் ஏற்றி செய்ய வேண்டிய தீப பரிகாரம் 

என்பதன் வாக்குச் சுருக்கம் முழு வாக்கும் விரைவில் வெளிவரும். 

எவை என்று புரிய. ஆனால் ஒரு பாதை இறைவனிடத்தில் செல்ல!!!!. 

ஆனால்  அவ் பாதையில் யாங்கள் வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கின்றோம்.

 யாருமே வருவதில்லை.!!!

   ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் பின் நின்றிருப்பான். கெடுப்பதற்கே ஒருவன் இவ்வழியில் வராதே அவ்வழியிலே சென்றுவிடு.என்று!!


 இப்படித்தானப்பா, ஒருவன் ஒருவன் பக்தனாகவே இருந்து, பக்திக்குள்ளே இருந்து குறை சொல்லி எவை என்று அறிய, பின் எப்படி எப்படியோ சொல்லிக் கொண்டிருக்கின்றான். மூடன் என்பேன்அவனை. 


. இதை அறிவிக்க நிச்சயம் யாங்கள் இருப்போம். 

பின் அறிந்தும் மாற்றி விடுவோம். 

அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் இருக்கின்றோம். எதை என்று அறிய, எங்களிடத்தில் இருக்கும் புண்ணியத்தை உங்களுக்கு வழங்குகின்றோம். அகத்தியன் சொன்னதை போலே!!


 இவை அறிவித்து எந்நேரத்திலும் பின் யாங்கள் வருவோம். உங்களை காக்க!!!

ஏன் எதற்கு என்றால் இன்னும் புண்ணியம் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும் உங்களுக்கு நீங்கள்.

இதனால் தெரிவிக்கின்றோம்!!

இவைதன் அறிய ஆனாலும் பின்
 நீங்களோ பாவங்கள்!!!

 நல்லதை உங்களுக்கு எடுத்துரைக்க ஆள் இல்லையே.

 ஆள் இல்லை. இவைதன் நிச்சயம் யாங்கள் பின் பக்குவப்படுத்தி பின் திருத்தி எவை என்று அறிய உங்களை நீங்கள் வெல்வீர்களாக.


  இன்னும் எவை என்று அறிய பின் தாந்திரீகம் கூட எவை என்று கூட ரிஷிமார்கள் சொல்கின்ற பொழுது அதை சரியாக பயன்படுத்தி உயர்வீர்களாக!!!

  இவை என்று அறிவித்து இப்பொழுது யான் ஒன்றை சொல்கின்றேன்.


 சமமாக நட்சத்திரத்தை சரியாகவே எவை என்று அறிய பின் நவதானியங்களில் பின் இட்டு.

(வீட்டில் பூஜை அறையில் தரையை சுத்தப்படுத்தி 
அங்கு

முருகனின் சரவணபவ நட்சத்திரம் போல் நவ தானியத்தில் ஒரு நட்சத்திரம் செய்ய வேண்டும் முதலில் நீங்கள் நட்சத்திர கோடு வரைந்து அந்த கோடுகளுக்கு மேலே நவதானியங்களை அரைத்து  அனைத்தையும் கலந்து பொடியாக்கி அந்த பொடியில் நட்சத்திரத்தை உருவாக்கலாம் அதாவது கோலம் வரைவது போல்)

எவை எது என்று புரிய. ஒவ்வொரு இதிலும் அறிந்தும் கூட சரவண பவ எதை என்று அறிய பின் நிச்சயம் அறிந்தும் இவை ஒன்று ஒன்றுக்கு பின் தீபங்கள். 

ச.      தீபம்
ர.      தீபம்
வ.    தீபம்
ண.  தீபம்
ப.     தீபம் 
வ.    தீபம்

மொத்தம் ஆறு தீபங்கள்.


. இவையென்று  அறிவிக்க நலங்களகவே!!! இவையென்று  இதை தன் நிறுத்தி இதையென்று பின் புரிய!!!

அறியாத அளவிற்கு கூட இவைதன் பின் அறிந்தும் எவை என்று அனுதினமும் இப்படி இருக்க பின் முருகா!! முருகா!! என வேண்டி !!

(நவகிரக மாவுப்பொடியை)

இவைதன் ஒவ்வொரு நாளிலும் பின் நதிகளிலோ!!!! அறிந்தும் எதை என்று புரிய இடவேண்டும்.!!




  இவையென்று அறிய அல்லது எதை என்று பின் ஜீவராசிகளுக்கும் கூட !!!

(எறும்புகளுக்கு பறவைகளுக்கு பசு மாடுகளுக்கு)


இவைதன் செய்ய செய்ய புண்ணியம் பெருகும்.!!!

பெருகும்!!!!  எவையின் அத்தீபத்தை அரசன் இலை அறிந்தும் எவை என்று கூற.

(அரச இலையில் தீபம் ஏற்ற வேண்டும்)



இவைதன் உணர பின் எவை என்று அறிய நவதானியங்களும், அதாவது நவதினங்களுக்கு பிறகே எவை என்று அறிய சரியாகவே பின் நிச்சயம் ஆற்றின் பாதையிலே இட வேண்டும் இதை!!ஏதோ!!!

(இந்த பூசையை ஒன்பது நாட்கள் செய்து விட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு மீதி இருக்கும் நவதானியத்தை வாழை இலையில் அல்லது பாக்கு தட்டில் வைத்து நதியில் ஆற்றின் போக்கு அதாவது நீரோட்டத்தின் வழியாக மிதந்து செல்லுமாறு விட வேண்டும்)

(அந்தத் தட்டில் அல்லது இலையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து இறைவா அனைத்தும் நீயே!!! என்னுடைய அனைத்து கர்மங்களையும் பாவங்களையும் எடுத்துக்கொள் இறைவா அருள்புரிவாய் இறைவா புண்ணியத்தை இறைவா என்று வேண்டிக் கொண்டு)

இதை என்று அறிய பின் தீபத்தை இறைவனே அனைத்தும் நீயே!!!!எதை என்று நீயே என்று!!!!


ஒவ்வொரு முறையும் இவை செய்தல் அவசியம்!!!

அறிந்தும் இதற்கும் புண்ணியம் வேண்டும். அதனால்தான் யாங்கள் புண்ணியம் தருகின்றோம் என்று!!!!


எவை இன்னும் புதுமையான விஷயங்கள் எல்லாம் யாங்கள் சொல்வோம் வருங்காலத்தில்.


  இதனால் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். பின் மற்றவருக்கும் உதவுங்கள். புண்ணியங்கள் இவ்வாறாகவே அவரவர்கள்!!!! பின் உதவ உதவ, அவர்களுக்கு புண்ணியம், அவர்களுக்கு புண்ணியம் சென்று கொண்டே இருக்கும்.

(இந்த பரிகாரத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து மற்றவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து இப்படி அனைவரும் செய்யும்பொழுது அனைவருக்கும் புண்ணியம் சொல்பவருக்கும் புண்ணியம் செய்பவருக்கும் புண்ணியம்)


 அப்பா இவ்வாறுதான் காக்க முடியும். உங்களை!!!!

  குலதெய்வம் எதை என்று புரிய முதலில் பின் அறிந்தும் சிறிது சிறிது பின் சொல்லிக் கொடுத்தாலே அனைத்தும் தெரிந்து கொள்ளும்.

 வெற்றியை பெறுவது சிலருக்கு இவ்வுலகத்தில் பின் அதாவது என்னென்ன தேவை? என்பவை எல்லாம் அறிந்தும் அவை தேவை. இவை தேவைகள் பல தேவைகள் இருக்கும் அல்லவா? வாழுகின்ற பொழுது அவையும் கூட எப்படி பெறுவது??? என்பது ரிஷிமார்கள் உரைப்பார்கள்.

  இதைதன் ஒருவனுக்கு பின் கற்பிப்பது புண்ணியமா? அனைவருக்கும் கற்பிப்பது புண்ணியமா?

 சொல்லுங்கள், நீங்களே!!!

  அப்பப்பா மனிதன் இப்படித்தான் ஒருவனுக்கு மட்டும் சொல்லிச் சொல்லி பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான்.

இதையென்று அறிவித்து நிச்சயம் அதாவது பின் யாங்களே சில கர்மாக்களை அகற்றுவோம்.


  இவைதன் எப்பொழுதும் இல்லத்தில் ஒரு தீபமாவது எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் உத்தமம். 

(வீட்டில் ஒரு தீபமாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்க வேண்டும்)


 இதை என்று நிரூபிக்க இதனுள் பின் நவதானியங்களையும் விட்டே அடியிலே தங்கிவிட.

(நவதானிய பொடிகளை அடியில் பரப்பி அதன் மீது தீபம்)


  இவை என்று அறிய இதை ஏன் சொன்னேன்.??? என்றால்!!!!

 பின் கிரகத்திற்கும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு.

 போக போக நீங்கள் அறிவீர்களாக.


 இவை  தன் அறிய சொல்லிவிட்டேன். மீண்டும் வருகின்றேன்!!!

 இவைதன் பின் மீண்டும் உங்கள் செயலை தொடங்குங்கள்.

பிரார்த்தனையில் கூடிய மக்களை மீண்டும் சிவபுராணம் ஓத சொல்லி உத்தரவு தந்தார் இடைக்காடர் சித்தர்.

முழு வாக்குகளும் விரைவில் வெளிவரும் 

நன்றி ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்தியர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ லோபாமுத்தரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment: