​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 27 October 2025

சித்தன் அருள் - 1968 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 4


அன்புடன் போகர் சித்தர்  அருளிய பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.

நாள் 27-7 2025.

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.


அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரியே போற்றி.
போற்றியே பணிந்தேனே செப்புவேனே போகனவனே.
அறிந்தும் அனைவரும் கூட நல்லெண்ணங்கள் மேன்மையோடு நதிகளை போற்றி துதிக்க.
ஆனாலும் அவ் பாடல் எவ்வாறு என்பதை எல்லாம் நீங்கள் அறிவதில்லை.
பின்  கங்கா காவேரி இன்னும் பின் புண்ணிய நதிகள் சிந்து இன்னும் பிரம்மபுத்திரா இன்னும் அதாவது பக்கத்தில் பின்  தாமிரபரணி நிச்சயம் தன்னில் அறிந்தும் பின் தெரிந்தும் தெரியாமலுமே வந்துவிட்டீர்கள்.
ஆனாலும் ஆசிகளோடு அகத்தியனை பணிந்தே பின் அம்மை உலோபாமுத்திரையை பணிந்தே இப்பொழுது ஈகின்றேனே பாடலை.
(பாடல்)
அறிந்தும் என்னென்று புரியாமலும் நின்றாலும் தாயே 
என்றென்றும் ஜீவிக்கும் அருளோடு வருபவளே 
அன்னை லோபா முத்திரையே 
என்றென்றும் கூட தன் தன் இனங்களுக்கு ஏற்ப உடைய அனைத்துலகும் காப்பாய் அருள்வாய் அழிப்பாய் அருள்வாய் அன்னை பராசக்தியே 
என்றென்றும் எங்கும் நிறைந்தவளாக இருப்பவளே!! 
புவனேஸ்வரியே அனைத்தும் அடக்கி ஆளும் பரிவினைச்  செய்பவளே!!
கருணை படைத்தவளே!! 
அன்பின் எல்லை இல்லாது இருப்பவளே!! 
அனைத்தும் அனைவருக்கும் கொடுப்பவளே !!
வித்தை  அறிந்தும் எதனால் அறிந்தவளே !!
அரியும் அரணும் ஒன்றென்று இருந்தாலும் இங்கே அறிந்தும் பாபநசத்தில் எல்லா பினிகளும் தீர்ப்பாய், அளிப்பாய், அருள் தருவாய் உலக நாயகியே !!
என்றென்றும் ஜீவிப்பவளே !!
என்றென்றும் அறிந்தும் அனைத்தையும் அருள்பவளே !!
பிள்ளைகளே பிள்ளைகள் என்று அறியாமல் இருந்தாலும் அறிய வைப்பவளே !!
பாபநாசனே அறிந்தும் அனைத்துலகம் காப்பாய் !!
எப்பொழுதும் உன் குழந்தைகளை நீ தாமிரபரணியில் தவழ்ந்து அறிந்து எப்படி எல்லாம் அறிந்தும் கூட பின் எப்படி எப்படி நீந்துகின்ற பின் அவ்வாறாக பின் வந்தெனை பின் ஆற்றின் போலே அனைவரும் பாவத்தை ஏற்பாய் தாமிர பரணியே !!
 அறிந்தும் எதனால் என்றென்றென்றும் அல்லும் குன்றி  புன்பட்ட மனதை எங்கெங்கும் நிறைந்தாய் எளிதாய் அளித்த பராசக்தியே புவனேஸ்வரியே !!
எங்கும் நிறைந்தவளே எதிலும் நிறைந்தவளே !!
கங்கையில் நிறைந்தவளே !!
காவிரி நிறைந்தவளே !!
தாமிரபரணியில் நீந்து நீந்தி அனைவரின் பாவத்தை ஏற்பாயே !!
உன்னையே நம்பி வந்து இங்கு அமர்ந்து இருக்கின்றார் !!
அவரின் பாவத்தை அடியோடு எடுத்து அனைத்தும் கொடுப்பாய் !!
நீந்தி நீந்தி உடம்பில் ஒளிகள் தீய சக்திகளை ஒளிப்பாய் !!
அருள் தருவாயே !!
கங்கா நதியே வருவாய் அருள் தருவாயே !!
இவர்களின் பீடைகளும் தரித்திரங்களும் எங்கே சென்றாலும் தீரவில்லையே !!
கங்கை தாயே உன்னை பணிகின்றேனே !!
இவர்களும் எங்கே செல்ல முடியவில்லையே !!
எப்படி தாயே உனைத்தான் வணங்கி வணங்கி பல பல புண்ணியங்களை பெற்றார்களே !!
நீயே தாயே கங்கை தன்னில் வந்து பின் பின் தவழ்ந்து ஆடும் தாமிரபரணியே !!
அழகாவே குருவே அகத்தியனே !!
அழகாக குருவே அகத்தியனே !!
உன் தாள் பணிந்தோம் அனைவக்கும் பின் ஆசிகள் கொடுத்து அருள்வாயே !!
வந்தோர் அனைவருக்கும் உலோபமுத்திரையோடு  அருள்கள் பல பல கொடுத்து !!
இன்னும் ஞான உபதேசத்தை பெற்று அனைத்து அருளீந்து இன்னும் மனிதர்கள் புண்ணியவர்களாக்க இவர்களுக்கும் இன்னும் ஞானத்தை அடையச் செய்து 
என்றென்றும் ஜீவிப்பவளே தாமிரபரணியே !! கங்கை சிந்துவே !!
அனைத்தும் நீயே !!
அனைத்தும் நீயே !!
வெவ்வேறு பெயர்களை அழைத்தாலும் !!
எங்கு வந்து பாவத்தை தொலைக்க உன்னிடத்தில் நாடி நாடி வந்துள்ளார்களே !!
ஆடி திங்களில் தன்னில் கூட !!
ஆடி திங்களில் தன்னில் கூட !!
எங்கெங்கு பிரச்சனைகளை பின் அறிந்து உன்னிடத்தில் வந்தார்களே !!
பாவங்களை பின் நாசமாக்கும் பாவத்தை ஏற்கும் நீலகண்டனே  !!
பல பல குறைகளோடு அனைவருமே இங்கு வந்திருக்கின்றாரே !!
பாடல்களை பல பாடி பாடி உன்னை போற்றி போற்றி பின் அறிந்து அறிந்து பின் போற்றுகின்றனர் !!
அவர்களின் குரலை கேட்க நிச்சயம் தன்னில் பாபநாசனே அருள்வாயே !!
என்னென்ன வேண்டும் உன்னை நம்பி இக் குழந்தைகள் வந்துள்ளனர் !!
அவர்களுக்கு தேவையானதை கொடுப்பாய் நிச்சயம் தன்னில் மனதை மாற்றி !!
பாவம் இல்லாத மனத்தை மாற்றி புண்ணியத்தை பெரும் பணத்தை கொடுப்பாயே !!
கங்காதரனே தாமிரபரனை அறிந்தும் பிரம்ம புத்திரனே !!
நிச்சயம் எங்கு சென்றாலும் கர்மா இவர்களை வாட்டுகின்றதே !!
நிச்சயம் தன்னில் அறிந்தும் எப்பொழுதும் மழையாய் பொழிவாயே !!
மழையாய் பொழிவாயே !!
எங்கிருந்து உன்னை தேடினாலும் எங்கிருப்பாயோ என்று தன்னில் கூட மனிதன் அறிந்திருக்கவில்லையே !!
அனுபவித்தாலும் எதனை என்று மனிதனுக்கு பாவங்களை பின் அறிந்து அறிந்து கொடுக்கும் ஈசனே !!
கலியுகத்தில் பின் புண்ணியங்களை பெருக்குவாயே !!
உன்னையே நம்பி நம்பி பின் ஓடோடி வந்து அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் எமக்கு இறைவன் செய்வானே என்று 
அன்போடு வந்து உணவை தரும் என்று உலாவரும் உன்னையே 
சிறுதேயும் பாவத்தை அழிப்பாயே திருநீலகண்டனே !!
அழகாக வீட்டிருக்கும் பின் பாபநாசனே !!
உன் பெயர் வைத்ததும் இப்பெயர் வைத்ததும் அகத்தியனே !!
எதற்காக வைத்துள்ளான் என்று ஈசனே நீயே அறிவாயே !!
அறிந்தும் அறிந்தும் நூற்றெற்று தலங்கள் இங்கு பின் அமைந்திருக்கின்றன !!
அங்கங்கு வருவா முடியாமல் போனாலும் நிச்சயம் தன்னில் வருக வருக !!
ஈசனே வருக வருக !!
நமச்சிவாயனே வருக வருக !!
கருணை படைத்தவனே வருக வருக !!
உன்னால் மட்டுமே கருமத்தை நீக்க முடியுமே இறைவா !!
ஈசா!!!! அறிந்தும் எதை என்றும் புரியாது இக்குழந்தைகளுக்கு பின் அருள்வாயே !!
என்றென்றும் ஜீவிக்கின்ற ஈசனே !!! 
என்றென்றும் ஜீவிக்கின்ற ஈசனே !!!
நிச்சயம் தன்னில் செல்ல பிள்ளையாக அனைவரும் தருமத்தைக் காக்க ஓடோடி சென்று வேலுடனே பின்னி குத்தி குத்தி எடுடா என்று முருகனக்கு பின் வரத்தை அளித்திடும் ஈசனே !!
என்னை அவ்வாறே உந்தனை அறிந்தும் அறியாதவர் இருந்தாலும் என்ன ஏது என் மனம் இறங்க !!
இக்குழந்தைகளுக்கு அறியாமல் இருந்தாலும் அருளைத்  தந்து மனதை மாற்றிவிடு !!
எவை எவை எக்குறைகளாயினும் பலவற்றை சுமந்து சுமந்து சுமந்து கண்ணீரோடு வாழ்கின்றாரே !!
எப்படி பயணம் தொடங்க வேண்டும் என்று எண்ணி !!
எப்படி பயணம் தொடங்க வேண்டும் என்று எண்ணி !!
தொடங்காமல் முடிக்கின்றார்களே இறைவா ஈசா அனைத்தும் நீயே !!
இதற்காகவே வந்தான் அகத்தியன் இங்கு !!
இதற்காகவே வந்தான் அகத்தியன் இங்கு !!
கயிலாய மலையில் நிச்சயம் சொன்னாயே !!
அகத்தியனே நீ நிச்சயம் தன்னில் அங்கு சென்றால் பின் அனைத்தும் தீமையும் ஒடுங்கும் !!
நிச்சயம் அறிந்தும் கூட ஓர் இடத்தில் ஒரு சித்தன் நிச்சயம் தன்னில் கண்ணீரோடு பின் இருக்கின்றானே !!
அக் கண்ணீரோடு தாமிரபரணியும் ஓடோடி வர !!
நிச்சயம் தன்னில் இங்கு அதில் பின் குளித்து அறிந்தும் குளித்து !!
எங்கெங்கும் நிறைந்த பரமா போற்றி !!
எங்கெங்கும் நிறைந்த பரமா போற்றி !!
இக்குழந்தைகளை பார்ப்பாய் அருள் தருவாயே !!
இக்குழந்தைகளை பார்ப்பாய் அருள் தருவாயே !!
என்றென்றும் உனையே வணங்கி வணங்கி !!
ஏதாவது ஈசன் கொடுப்பான் என்று நின்று கொண்டு இருக்கின்றார்களே !!
எங்கெங்கும் அலைந்தும் எதனால் ஒன்றும் !!
ஒவ்வொரு குறையும் வந்து வந்து பின் நீக்கும் அருள்தரும் பாப்பநாசனே !!
அன்பும் ஆதரவும் !!
அன்பும் ஆதரவும் !!
என் குழந்தை பழனி தன்னில் வீற்றிருக்கும் குமரா ஓடோடிவா !!
அறிந்தும் அவ் மலையில் தன்னில் சில தரித்திரங்களை எடுப்பாயே !!
அப் பழனி தன்னிற்கும் வருவதற்கும் புண்ணியம் வேண்டுமே !!
இப்பொழுதே அப்புண்ணியத்தை கொடுத்திடுடா !!
அன்பான முருகா !!
அழகான முருகா !!
இவர்களுக்காக நிச்சயம் தன்னில் யான் வந்தேனே !!
அகிலாண்டீஸ்வரியே !!
அகிலைத்தை காக்கும் ஈசனே !!
குற்றங்களை மன்னித்து பொறுப்பாய் பொறுப்பாய் !!
அனைத்தும் அளிப்பாய் இவர்களுக்கு !!
வாவா ஈசனே அகிலாண்டீஸ்வரியே !!
இக் குழந்தைகளுக்கு தெரிந்தும் தெரியாமலும் சில பாவங்கள் நீக்குவாயே !! 
இறைவா இறைவி அன்பு அன்பு அகலா ஞான கணபதியே !!
வருக வருக ரிஷிகளும் சித்தர்களும் வருக வருக !!
அருள் தருவாயே !!
சில குற்றங்களினாலும் இவர்களுக்கு மன உலைச்சலும் நோய்களும் !!
அதை நீக்கவே ஓடோடிவா என் குழந்தாய் குழந்தாய் !!
அருள் தருவாய் !!
(பாடல் நிறைவு )
அப்பப்பா போற்றி போற்றி.
 இன்னும் ஒரு சித்தன் வந்து செப்புவான்.
(போகர் பெருமான் வாக்கு நிறைவு)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment