அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 12
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
01.சித்தன் அருள் - 1903 - பகுதி 1
02.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
03.சித்தன் அருள் - 1911 - பகுதி 3
04.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
05.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
06.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
07.சித்தன் அருள் - 1917 - பகுதி 7
08.சித்தன் அருள் - 1918 - பகுதி 8
09.சித்தன் அருள் - 1923 - பகுதி 9
10.சித்தன் அருள் - 1931 - பகுதி 10
11.சித்தன் அருள் - 1932 - பகுதி 11)
(இரண்டாம் நாள் 23.06.2025 அன்று காலையில் உரைத்த வாக்கு)
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே அப்பா!!!
. இதனால் அப்பனே சரியாகவே என் வழியில் வருபவர்களுக்கு யான் பார்த்துக்கொள்வேன் அப்பனே!!!
. எதையும் கேட்கத் தேவையில்லையப்பா.
அப்பனே, நிச்சயம் மனிதர்களை யான் உணர்ந்தவன் அப்பனே!!!
. அதனால் கவலைகள் இல்லை. அப்பனே!!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினையப்பா. அதை எப்படி ??எங்கு ? தீர்க்கப்பட வேண்டும் ???என்பது எல்லாம் அப்பனே பின் விதியின் கட்டாயமாக இருப்பதால், அதற்காகத்தான் அங்கும் இங்கும் அப்பனே அலைந்து கொண்டு மனிதன்.
இதனால் ஒவ்வொருவருக்கும் பாவம், புண்ணியம் என்பதைப் பொருத்தே பிறவி என்பதை நீங்கள் அறிவீர்களாக.
இதனால் நன்மைகளாகவே எவ்விடத்தில்??? சென்றால்??, எவ்விடத்தில் இருந்தால்??? சில பாவங்கள் தொலையும் , புண்ணியங்கள் பெருகும் என்பதையெல்லாம் நிச்சயம் என் பக்தர்களுக்கு யானே நிச்சயம் சில நேரங்களில் திடீரென்று உணர்த்துவேன் அப்பனே.
(குருநாதர் தனது வாக்கில் குறிப்பிடும் திருத்தலங்களுக்கு செல்ல சொல்வது இதற்காகத்தான்)
இதனால் குறைகள் வேண்டாமப்பா.
இதனால் அப்பனே யான் சொல்கின்றபடி நீங்கள் கேட்டாலே போதுமப்பா!!!.
அப்பனே நீங்கள் எதையும் கேட்கத்தேவையில்லை என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இயக்குபவன் இறைவன் அப்பனே. !!!
நிச்சயம் இதனால் யான் அதாவது சித்தர்கள் சொல்லியதை நீங்கள் கேட்டாலே, அப்பனே நிச்சயம் உங்கள் உடம்பு தானாக அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் எங்கள் அருகிலே நீங்கள் இருப்பதால் , யாங்கள் எப்பொழுது? எதை புரிய, பாவங்கள் நீக்கப் பெற்று, அப்பனே புண்ணியங்களைச் சேர்த்து, உங்கள் வண்டியை யாங்களே தள்ளுவோம்.!!!
உங்கள் வண்டி என்னவென்றால் ?? இங்கு பொருள்!!!, உங்கள் ஆன்மா என்பேன் அப்பனே.
இதனால் அவ் ஆன்மாவிடம் நிச்சயம் எப்படி பேசுதல்? அப்பனே!
உள்ளுக்குள்ளே உங்களுக்கு எப்படித் தெரியவருதல் என்பவையெல்லாம் விபரமாகவே அடுத்தடுத்த வாக்குகளில் யான் சொல்வேன் அப்பனே.
இதனால் அப்பனே அதற்கும் கூட சில பக்குவங்கள் நிச்சயம் நீங்கள் படவேண்டும் என்பேன் அப்பனே.
அதற்காகத்தான் சில கஷ்ட நஷ்டங்கள் என்பேன் அப்பனே.
அப்பனே கஷ்டங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்பதையெல்லாம் நேற்றைய உரையிலே தெரிவித்து விட்டேன் என்பேன் அப்பனே.
கஷ்டத்தைக் கஷ்டத்தாலே நிச்சயம் அழிக்க வேண்டும் அப்பனே.
இதை பல வாக்குகளில் கூட யான் செப்பிவிட்டேன்.
நிச்சயம் அப்பனே கஷ்டங்களைக் கஷ்டங்களாக பார்கக்கூடாது என்பதையெல்லாம் நிச்சயம் ஏனைய வாக்குகளில் சொல்லிவிட்டேன்.
நிச்சயம் எந்தனுக்குக் கஷ்டங்கள் வருகின்றது என்றெல்லாம் நீங்கள் புலம்பக்கூடாது என்பேன் அப்பனே.
“””””””ஏன் ? எதற்கு? என்றால் கஷ்டங்களை அள்ளித்தருவது இறைவனே என்று,!!!
அப்பனே, மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் செப்பிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே. “”””””
“””””அதனால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் இறைவன் அறிவானப்பா. “”””
இதனால் சரியான முறையிலே, யாங்கள் சொல்லியதை நீங்கள் ஏற்று பின் செய்து வந்தாலே போதுமானதப்பா. பின் அனைத்தும் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே.
இதனால் அப்பனே ஏதும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு, அப்பனே நிச்சயம் எதையும் பின் எங்களிடம் கேட்டால்!?!?!?!
, யாங்கள் எதுவுமே தரமாட்டோம். சொல்லிவிட்டோம் அப்பனே.
அறிந்தும் கூட ஒவ்வொரு உயிரையும் பார்த்தால், தன் தன் தேவைக்காக உழைத்துக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
*** அதேபோல் அப்பனே நிச்சயம் நீங்கள் மனிதர்கள் உங்களுக்காக அதாவது உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. ***
“””””இவ் உழைப்பு என்பது மற்றவர்களுக்கு பின் ஒரு பத்து சதவிகிதமாவது சென்றால், சிறுக சிறுக புண்ணியங்கள் நீங்கள் சேர்த்துக்கொண்டே இருக்கின்றீர்கள் என்பதே அர்த்தமப்பா.!!!”””””
(நமக்காக 90 சதவீதம் உழைத்தால் 10% பிறருக்காக உழைக்க வேண்டும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் இதன் மூலம் புண்ணியங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்)
“”””””” இதனால் சிறுக சிறுக சேர்த்து, மிகப் பெரிதாகும் புண்ணியங்கள் என்பேன் அப்பனே. !!! “””””””””
நிச்சயம் அப்புண்ணியங்கள் பெரிதாகின்ற பொழுது, அப்பனே ஆனாலும் விதியின் தன்மையைக் கூட பார்த்தாலும் , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டம் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப் புண்ணியங்கள் இருக்கின்றதே, அப்புண்ணியம் அப்பொழுது உங்களுக்குப் பயன்படுமப்பா!!
.அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே மீண்டும், மீண்டும் சொல்வேன் அப்பனே. உங்களுக்கு அவை வேண்டும், இவை வேண்டும் என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அதாவது நீங்கள் கேட்டாலும் , சித்தர்கள் பின் எப்படிக் கொடுப்பார்கள்??? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.
அப்பனே, நிச்சயம், அதாவது, அப்பனே, நீங்கள் கேட்டாலும், அப்பனே, பின் சித்தர்கள் எப்படி கொடுப்பார்கள்??? என்பதை எல்லாம், அப்பனே, யோசித்துக் கொள்ளுங்கள் என்பேன்.
அப்பனே, நிச்சயம் கொடுக்காமலே அனைத்தும் கூட கொடுப்போம் அப்பனே.
இதனால்தான் அப்பனே, நீங்கள் எதையுமே கேட்க தேவையில்லை என்பேன் அப்பனே,
அதாவது நம்பி வந்து விட்டீர்கள். அகத்தியன் நன்றாக செய்வான். நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்று அப்பனே.
அப்பொழுது நிச்சயம் நீங்கள் கேட்டால்தான் யான் சரி செய்ய வேண்டுமா???? என்ன?
அப்பனே அப்படி இல்லையப்பா, ஒவ்வொரு உள்ளத்தையும் யான் அறிவேன் அப்பனே.
இதனால் அப்பனே சிறுக சிறுக அப்பனே, புண்ணியங்கள் செய்து கொண்டு வந்தாலே, அப்பனே, பெரும் புண்ணியமாக ஆகுமப்பா.
அப் புண்ணியங்கள் உங்களை தானாகவே வழிநடத்துமப்பா.
இதனால் அப்பனே யாங்கள் அமைதி பொறுத்தோம் இங்கு. அப்பனே, இவ்வாறு வழிநடத்துகின்ற பொழுது, இறைவனுக்கு கூட, அப்பனே, நிச்சயம் வேலை இல்லையப்பா. சொல்லிவிட்டேன். அப்பனே.
அவ்வாறு நல்லெண்ணங்கள்
இல்லாமல் புண்ணியங்கள் நிச்சயம், அப்பனே, சிறுக சிறுக சேர்க்காதப்பா. இதனால் அப்பனே உண்மை நிலையை தெரிய வேண்டும் அப்பனே இக்கலியுகத்தில்.
உண்மை நிலை தெரிந்தால் மட்டுமே கஷ்டங்கள் வராது அப்பா. அப்பனே,
ஆனாலும் உண்மை நிலை இக்கலியுகத்தில், நிச்சயம் மனிதனுக்கு மறைத்து வைக்குமப்பா.
அதனால் அப்பனே, இவ்வுலகத்தில் பல உண்மைகள், பல நன்மைகள் மறைத்திட வேண்டும் என்பதுதான் கலியுகத்தின் கட்டாயம்.
இதனால்தான் அப்பனே, நிச்சயம் அவ் மறைப்பொருளை எடுத்து வந்து, நல்ல விதமாக அனைவருக்கும் செப்பினால், நிச்சயம் அனைவரும் நீங்கள் புரிந்து கொண்டு, புண்ணிய பாதையில் சென்றால், அப்பனே நீங்கள் உங்களை வென்றிட்டு, இறைவனையும் தரிசிக்கலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே, நிச்சயம் மனிதனிடம் கேட்பது போல், அவை தா,!!!
இவை தா, !!
திருமணம் வேண்டும்,
இவை பற்று (ஆசை),
இவை அன்று, இவை வேலை கொடு, திருமணம் செய்து கொடு, நிச்சயம், தன்னில் கூட அவை வேண்டும், இவை வேண்டும், இல்லத்தில் சூழ்ச்சிக்கள், இவையெல்லாம், அப்பனே, மனிதனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்பேன். அப்பனே,
(இந்த இடத்தில் மனிதனிடத்தில் கேட்க வேண்டியது என்று குருநாதர் சொல்கின்றார் என்றால் இதை இப்படி புரிந்து கொள்ள வேண்டும்!!!.. இறைவனிடமும் சித்தர்களிடமும் சுயநலமாக எனக்கு இதெல்லாம் வேண்டும் என்று கேட்கக் கூடாது!! இதெல்லாம் இறைவனுக்கும் சித்தர்களுக்கும் சாதாரண விஷயம்.. இதையெல்லாம் மனிதர்களுக்குள்ளே கேட்டுக் கொள்கின்ற விஷயம் என்று குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார்!! அதற்காக இந்த இடத்தில் தவறாக புரிந்து கொண்டு போலியான சாமியார்களிடமும் ஜோதிடர்களிடமும் தீர்வினை தேடி அலையச் சொல்கின்றார் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது)
ஆனாலும், அப்பனே, இவையெல்லாம், அப்பனே, சாதாரணமானவை எங்களுக்கு, அப்பனே,
முழு முயற்சியோடு யாங்கள் சொல்லியதை நீங்கள் கேட்டாலே போதுமானதப்பா,!!
அப்பனே, யான் சொன்னேனே எதை என்று புரிய, நேற்றைய பொழுதில், அதுதான், அப்பனே, மற்றவருக்காக, அப்பனே, நீங்கள், நிச்சயம் பின் தியானித்து, பின் ஜெபித்துக் கொண்டு வந்தாலே, உங்களுக்காக யான் வழிவிடுகிறேன் என்பேன்.
அப்பனே, அதனால் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்!!!
, அப்பனே, யான் (உங்களுக்கு) செய்வதற்கு, அப்பனே,
(குருநாதர் நமக்காக செய்வதற்கு முன் நாம் அவர் சொன்னதை செய்ய வேண்டும்)
செய், அப்பனே, எதை என்று தெரியாமல், அப்பனே, செய்வீர்களா??? என்ன, அப்பனே?
அடியவர்கள் :- நிச்சயம் செய்வோம் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, நீங்க ஏதாவது வந்து செஞ்சா மட்டும்தான் நான் உங்களுக்கு செய்வேன்.
குருநாதர் :- அப்பனே, இதனால், செய்யாவிடில், அப்பனே, யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் எப்படியப்பா,?? மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அப்பனே,
அதனால் என் பக்தர்கள் யாருக்காவது பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர்:- ( மிக அருமையான நல் விளக்கங்களை அங்கு எடுத்துரைத்தார்கள் )
குருநாதர் :- இதனால் அப்பனே நல்விதமாகவே அனைவருமே இறைவனிடத்தில் கோரிக்கை வைக்கின்றீர்கள் அப்பனே.
அதனால், அப்பனே் யான் ஒன்றை கேட்கின்றேன் உங்களைப் பார்த்து அப்பனே.
அவ் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட உங்களிடத்தில் புண்ணிய பலன் வேண்டுமப்பா.
(குருநாதரிடம் நாம் வேண்டிக் கொண்டு நமக்காக குருநாதர் செய்வதற்கும் நம்மிடம் புண்ணியம் இருந்தால் மட்டுமே அது செய்ய முடியும்)
இதனால் கலியுகத்தில் புண்ணிய பலன்கள் மக்களிடையே குறைந்துவிட்டது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே, மீண்டும் கேட்கின்றேன் அப்பனே.
இறைவனிடம் கேட்கும் அளவிற்கு, நீங்கள் என்ன செய்தீர்கள்??? என்று நிச்சயம் அப்பனே, ஏதாவது ஒருவனை எழுப்பி கேள் அப்பனே?
சுவடி ஒதும் மைந்தன் :- ஐயா, இந்த புண்ணியம் செய்தேன்னு யாராவது ஒருத்தர் நீங்க எல்லாம் சொல்லுங்க.
அடியவர்கள் :- ( என்னென்ன புண்ணியங்கள் செய்தார்கள் என்று எடுத்துரைத்தனர்)
குருநாதர் :-
அப்பனே, பின் யாராவது ஒரு கேள்விகள் கேட்கச் சொல்.
அடியவர் :- அகத்தியர் பெருமானுடைய, அகத்தியர் அப்படின்ற படம் வந்து வெளிய வந்தது.
அதேபோல் இப்போதைய சூழ்நிலையில் அகத்தியர் ஐயாவுடைய அருள் வாக்கும், அருள்வாக்கு அப்படின்ற ஒரு திரைப்படமா வந்து எல்லார் மத்தியிலும் இந்த அருள்வாக்கு பேரு புகழும் பெற்று எல்லாரும் தர்ம பாதையில போயி, அவங்க அவங்க கர்ம வினைகளை தீர்த்து, எல்லாருமே இந்த அகத்தியருடைய அடியார்கள் எல்லாருமே பிறவா நிலை பெற்று அகத்தியருடைய பாதத்துல தங்களுடைய ஆத்மா சரண்டர் ஆகனும். அதுதான் என்னுடைய மிகப்பெரிய …
குருநாதர் :- தாயே !!! அறிந்தும் கூட, அப்பனே, அம்மையே கேட்டுக்கொண்டிருக்கின்றீர்களா் அனைவருமே? நிச்சயம் தாயவள் தந்தை ஒரு குழந்தைக்கு சிறுவயதிலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில ஒழுக்கமானதை கற்பித்து கற்பித்துவிட்டால், அதனையே கடைபிடித்து மிக உயர்ந்த இடத்தில் பிடிப்பான். அதேபோலத்தான் நீங்கள் அனைவருமே எம் குழந்தைகள். இதனால் யான் உங்களுக்கு நல்லதை செய்து, அதாவது நல்லதை சொல்லிக் கொடுத்துவிட்டால், நீங்கள் நிச்சயம் அதை பிடித்துக் கொண்டால், அனைத்தும் நலமாகவே நடக்கும். ஆனாலும் இதை அறியாத மூடனாக இருந்தும், எந்தனுக்கு அதைச் செய்,!! இதைச் செய்!!! என்றால், நிச்சயம் யான் செய்யப் போவதில்லை.
ஏன்,? எதற்கு,? எவை என்று தந்தைக்கு தெரியும் அல்லவா?
எப்படி, ஏது, எவ்விடத்தில் செய்ய வேண்டும் என்று? அதனால் நிச்சயம் பின் இவ்வாறு எது என்று கூற பல மக்களும் பின் கேள்வி கேட்பது எவ்வாறு நியாயம் தாயே கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எதுவுமே கேட்க தேவையில்லைன்றாரு. இறைவன் கிட்ட நீங்க சித்தர்கள் கிட்டயும் எதுவுமே கேட்க தேவையில்லை. இறைவனிடம் எதுவுமே கேட்க தேவையில்லை என்றாரு. ஏன் கேட்க தேவையில்லை? சொல்லுங்க ஐயா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
ஏன்னா இறைவன் எல்லாமே நமக்கு கொடுத்து அனுப்பிச்சிருக்கிறார். குருநாதர் சொன்னதுதான். இறைவன் நமக்கு எல்லாமே கொடுத்து அனுப்பிச்சிருக்கிறார். இந்த உடலை, அவர் உடலை படைச்சு கொடுத்திருக்கிறார். அறிவை கொடுத்திருக்கிறார். உடலை கொடுத்திருக்கிறார். அறிவை கொடுத்திருக்கிறார். இந்த அறிவை பயன்படுத்தணும். இந்த அறிவை வந்து பிறர் பேச்சை கேட்காம, இந்த அறிவை நாம சரியான முறையில பயன்படுத்தினாலே நம்மள சுத்தி இருக்கக்கூடிய பிரச்சனை இருந்து வெளிவந்தரலாம். அதுக்கு வழியும் சொல்லிட்டாரு குருநாதர். நீங்க யார்கிட்டயும் போய் எங்கேயும் கையேந்த வேண்டாம். இந்த அறிவை பயன்படுத்தி குருநாதருடைய வார்த்தை ஒன்னுக்கு நாலு தடவை, அஞ்சு தடவை, பத்து தடவை கேளுங்க. என்ன சொல்ல வராருன்றத புரிஞ்சுக்கோங்க. உங்க பிரச்சனை எல்லாம் தீக்குறதுக்கு நான் இருக்கிறேன். நான் சொல்றத நீங்க கேளுங்கன்றாரு. அவர் என்ன சொல்றாரு? பிறருக்காக நீங்க உங்களுடைய நேரத்தை ஒதுக்குங்க. மந்திர ஜெபம் செய்யுங்க. பூஜை செய்யுங்க. முடிஞ்சவங்க அன்னதானம் செய்யுங்க. முடிஞ்சவங்க நீர் தானம் செய்யுங்க. முடியலன்னா வீட்ல உட்கார்ந்து விளக்கேத்தி, உலக நன்மைக்காங பிரார்த்தனை பண்ணுங்க. நீங்க இப்படி செய்யச் செய்ய உங்களுடைய வினைகளை நான் நீக்குகின்றேன், நீங்க என்கிட்ட எதுவுமே கேட்க வேண்டாம் ( என்று சொல்கின்றார் குருநாதர் )
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இவ் அம்மை பின் கேட்டுக் கொண்டிருக்கின்றாளே, நிச்சயம் இவள் கேட்காமலே சில விஷயங்களை யான் மாற்றி தந்து கொண்டே தான் இருக்கின்றேன்.
நிச்சயம் தன்னில் கூட இவர்கள் முன்னோர்கள் ஆன்மா, அடங்காது கட்டுக்கடங்காது இருந்து, நிச்சயம் பின் இவன் அதாவது இவள் தன் பிள்ளையின் உடம்பில் நுழைந்து, நிச்சயம் கொல்லப் பார்த்தது. ஆனாலும் அதை சரி செய்து செய்து கொண்டே இருக்கின்றேன். ஆனால் இவள் தனக்கோ!?!? ஏன் எப்படி எதை எவ்வளவு நடக்கின்றது என்பது தெரியாமல், எதை என்று அறிய எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் நிச்சயம் (சரி)ஆகாது.
ஆனாலும் சித்தர்களுக்கு புரியும். பின் அதேபோலத்தான் அனைவருக்குமே பின் ஏன்? எவ்வாறு? நடக்கின்றது என்பதை எல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரியாது.
ஏனென்றால் இறைவனின் பின் கேள்விகள் பின்? கேட்பவன் யார் என்றால், நிச்சயம் தன்னில் கூட நம்பிக்கையே இல்லாதவன் தான் கேட்பான்.
சுவடி ஒதும் மைந்தன் :- ( தனிப்பட்ட பல விளக்கங்கள் அளித்தார்கள். சிக்கலான ஒரு நிலை அதனை எடுத்துரைத்தார்கள். முன்னோர்களுடைய ஆன்மா உடம்புல இருக்கும்போது, அதனால சில பிரச்சனைகள். செய் வினை இல்லை. முன்னோர் ஆன்மா வந்து நுழைஞ்சுகிட்டு, அது ஆக்ரோசமா இருக்குதுன்னு சொல்லி இருக்காரு.
முன்னோர்கள் அவங்களுடைய ஆசையை தீர்த்துக்கிறதுக்காக இன்னொரு ஆன்மா வந்து புகுந்துகிச்சு. அதனால உங்க பேச்சை எல்லாம் கேட்க மாட்டார். ஆனா உங்களுக்கு தெரியாது. ஏதாவது பரிகாரம் இருக்குமா??, ஏது இருக்குமான்னு சொல்லிட்டு, அது அதெல்லாம் நிவர்த்தி பண்ண முடியாது. அகத்தியர் மட்டும் தான் நிவர்த்தி பண்ண முடியும். நான் கொஞ்சம் கொஞ்சம் மாத்தி கொடுக்கிறேன்னு சொல்றாரு.)
குருநாதர் :- தாயே, அறிந்தும் கூட, இதனால் பிறருக்காக நிச்சயம் வேண்டிக்கொள். நிச்சயம் தன்னில் கூட!!!
பின் உன் குழந்தையை யான் கவனித்துக் கொள்கின்றேன்.
குருநாதர் :- தாயே, அறிந்தும் கூட, அவ் ஆன்மாவானது இறைவனிடம் முறையிட்டு, நிச்சயம் தன்னில் கூட அவைதன் கூட உங்கள் முன்னோர்களே.
(முன்னோரின் ஆத்மா)
நிச்சயம் ஏன்? அதாவது விதியும் பின் முடியவில்லையே. ஏன் என்னை அழைத்துக் கொண்டாய்? இதனால் யான் பல வெற்றிகளை கண்டிருக்கின்றேனே என்றெல்லாம் இறைவன் பின் சண்டையிட்டு, நிச்சயம் தன்னில் கூட சில ஆண்டுகள் எனக்கு இருக்கிறது. யான் பூலோகத்தில் சென்று என் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று.
உன் முன்னோர்களே அவ் ஆன்மா. அவனிடத்தில் இறங்கி, நிச்சயம் தன்னில் கூட ஒரு பெரியவன் போல் நடப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது அவருக்கு வயசுக்கு ஏற்ப நடக்க மாட்டாரு. சின்ன வயசா பெரிய ஆள் ஒரு 40 50 வயசு மாதிரி நடப்பாரு.
அடியவர் :- பசி, பசி, பசின்னு அடுத்தபடியா சாப்பிட்டுக்கிட்டே இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அது ஒரு முன்னோரோட ஆன்மாங்க ஐயா. அது வந்து ஃபுட் அதிகமா சாப்பிடுறது. புரியுதுங்க கேட்டீங்களா? இப்ப புரிஞ்சுதுங்களா? அப்ப முன்னோர் உடம்பு ஒரு ஆக்ரோசமா இருக்குது. அது வந்து அதை வந்து யாராலும் சரி பண்ண முடியாதுன்றாரு. அகத்தியர் வந்து யாராலும் மனிதனால எல்லாம் சரிபண்ண முடியாது. நானே வந்து கூட இருந்து அதை சரி பண்ணிடுறேன். நீங்க மத்தவங்களுக்காக வேண்டி பண்ணா போதும்ன்றாரு.
குருநாதர் :- தாயே் எது என்று புரிய அடித்தாலும் என்ன சொன்னாலும் அவ் ஆன்மா கேட்காது சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க அடிச்சாலும் சரி, கும்பிட்டாலும் சரி, கால்ல விழுந்தாலும் சரி. உங்களுக்கு சரியா? ஈக்குவலா சண்டை போடுவார். அதுதான் அந்த ஆன்மா வந்து உங்களுக்கு முன்னோர்கள் யாரோ வந்து யாரோ. அது வந்து உங்கள் மகனை ஆட்டுவிக்கின்றது.
(விதி முடியாமல் சென்று விட்ட அந்த ஆத்மா)
அது உங்களுக்கு கொஞ்சம் சில ஆண்டுகள் வந்து அது முற்றுப்பெறல. அந்த ஆன்மா அதனால போயிடுச்சு. அதனால திரும்பி வந்துருச்சு. இறைவன் கிட்ட சண்டை போட்டு, அதனால கோவமா இருக்குறதுனால நீங்க எதையும் அதான் உங்களுக்கு ஈக்குவலா வயசுதான். அது கூட உங்களுக்கு அந்த ஆன்மா உங்களுக்கு அதனால அமைதியா இருந்தீங்கன்னா, அது வந்து நானே இது பண்ணி விட்டுற மாதிரி வேற எதுவும் பண்ண முடியாதுன்றார். உங்களுக்கு சரிங்களா?
குருநாதர் :- அறிந்து புரிந்து கூட இதனால் எதை என்று புரிய, யாரும் எவரிடத்திலும் எதை என்று புரியாது. தாயே, நிச்சயம் தன்னில்கூட பின் சென்றாலும் இதற்கு எவை என்று புரிய பரிகாரங்கள் இல்லை. ஆனாலும் காசை பின் பிடுங்க நிச்சயம் தன்னில் கூட ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒன்றும் நடக்காது.
அடியவர் :- எந்த காலம் வரை?
குருநாதர் :- தாய நிச்சயம் பொருத்தாகத்தான் வேண்டும்.
தாயே கவலை விடு. போக போக புரிய வைக்கின்றேன். நல்வழிப்படுத்துகின்றேன். பின் பெரியோர்கள் அதாவது தீய பழக்கங்கள் எப்படி இருக்கிறதோ, அப்படியெல்லாம் மனம் போகும். ஆனாலும் யான் தடுத்து நிறுத்திக் கொண்டே தான் இருக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒருத்தருக்கு வந்து இந்த உலகத்துல என்ன பழக்கம், தீய பழக்கம் எல்லாம் என்னென்ன பழக்கம் இருக்கு. எல்லாத்தையும் அவர் வந்து ஏதோ இருக்குது. வந்து இல்ல, அதனால வந்து எல்லாமே அந்த மனம் அதை நாடி போகுமாம். இந்த வயசுலயே.
அடியவர் :- இப்போதைக்கு அந்த நான்வெஜ் சாப்பிடுறது …
சுவடி ஒதும் மைந்தன் :- குடி, அதெல்லாம் வந்து அந்த தீய பழக்கங்கள் எல்லாம் இருக்குல்ல, அதை நாடி போகும். ஏன்னா, அதுவும் வந்து அந்த ஆன்மாவுடன் இறைவன் கிட்ட கேட்டு வந்துருச்சு. அதனால வந்து வேற வழி இல்லை. அதனால நான் வந்து காப்பாத்தணும்னு சொல்லி இருக்காருமா. கவலைப்படாதீங்க.
அடியவர் :- குடும்பத்திலேயே ஒற்றுமை இல்லை.
குருநாதர் :- அறிந்தும் தாயே, அனைத்திற்கும் அவ் ஆன்மாவை தான் என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் அந்த ஆன்மாதான் காரணம். அந்த ஆன்மா வந்து, முற்றுப்பெறாத திருப்பி வந்திருக்கு. அந்த ஆன்மா வந்து திருப்பி வந்து முற்றுப்பெறுகிற, அகத்தியர் தான் உதவி செய்வார் என்றார். நீங்க அமைதியா இருங்க. ஓகேங்களா?
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தாயே. மூன்று அமாவாசை திதிகள், நிச்சயம் ராமேஸ்வரம் சென்று வருக. பின்பு யான் உரைப்பேன்.
————————————————
(அடியவர்கள் கவனத்திற்கு :- இதுபோல் எத்தனை??? குடும்பங்களில் குழப்பங்களோ? ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் முன்னோர்களே மிக மிக முக்கிய காரணம். எனவே அனைத்து அடியவர்களும் அடிக்கடி ராமேஸ்வரம் சென்று , முதலில் தனுஷ்கோடி செல்ல வேண்டும். அதன் பின்னர்தான் ஆதி ஈசனார் ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். இது குருநாதர் உரைத்த மிகச்சிறந்த முன்னோர் வழிபாட்டு நல்வழி ஆகும். )
————————————————-
சுவடி ஓதும் மைந்தன் :- மூன்று அமாவாசை எப்ப வேணாலும் நீங்க செலக்ட் பண்ணிக்கலாம். கண்டிப்பா ராமேஸ்வரம் போயிட்டு, மூன்று அமாவாசைகளுக்கு நீங்க ராமேஸ்வரம் போகனும் அம்மா.
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் திருத்துவதற்கு குடும்பத்தில் ஆள் இல்லை. ஏனென்றால் குடும்பத்தில் இவன்தான் பெரியவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க குடும்பத்துல யாரு பேச்சும் அவர் கேட்க மாட்டார். ஏன்னா உங்க குடும்பத்திலேயே அவர் தான் மூத்தவர். கேட்பாரா?
அடியவர் :- கேட்க மாட்டார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உங்க குடும்பத்திலேயே அவரும் மூத்தவர். அந்த ஆன்மா இருக்கிறதுனால யார் பேச்சும் கேட்க மாட்டார். கொஞ்ச நாள் பொறுத்திருங்க.
குருநாதர் :- தாயே!!! பல வழியிலும் கூட பின் குமறல்கள் யான் பார்த்திருக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அழுவுறது மனவருத்தம். ஏன்டா, இது மாதிரி இறைவன் எல்லாம் வணங்கணும் தானே? வணங்கணும் உடனே அகத்தியரே உங்களை ஏன் வணங்க வேண்டும், என்று சொல்லி இருக்கீங்க. சொல்லி இருக்கீங்களா?
அடியவர் :- (குருநாதருடன்) சண்டை போட்டு இருக்கோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் சொல்றாரு. அதெல்லாம் கேட்டுட்டு இருந்துக்கிறார். உங்க வீட்ல இருந்து கேட்டுட்டு இருக்கறதுனால, நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன்மா. அதனால நீங்க கவலைப்படாதேன்னு சொல்லி இருக்கார். ஓகேங்களா? அதுதான் கவலைப்படாதீங்கமா? கவலைப்படாதீங்க.
குருநாதர் :- நிச்சயம் கவலை இல்லை. இதனால்தான் பின் மனிதனுக்கு விதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரிவதில்லை. அவையெல்லாம் சொல்லிவிட்டால் நீங்கள் பயந்து ஓடி விடுவீர்கள்.
அதனால் அவ் விதியை எப்படி வெல்வது??? என்பது நிச்சயம் யான் சொல்லிக் கொடுக்கின்றேன் உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் சில விஷயங்கள் நிச்சயம் யான் அதாவது சித்தர்கள் பின் சொல்வதை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும். அவ்வாறு நிச்சயம் கேட்டால் மட்டுமே விதியை வெல்லலாம்.
இல்லையென்றால் விதியின் பாதை தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சில விஷயங்கள் சித்தர்கள் சொல்றதை கேட்டீங்கன்னா விதியை வெல்லலாம். அப்படி இல்லையென்றால் விதியின் பாதை சந்திக்க வேண்டியதுதான்.
குருநாதர் :- நிச்சயம் கலியுகத்தில் மனிதன் நிச்சயம் வாழ முடியாத காலம்.
“””””””அதனால்தான் உங்களுக்காகத்தான் யாங்கள் இறங்கி வந்து பின் நிச்சயம் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.”””””””
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கலியுகத்தில் மனிதனால வாழ முடியாத காலம். அதனால்தான் உங்களுக்காக நாங்க இறங்கி வந்து செஞ்சுட்டு இருக்கிறோம்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில்கூட உங்களிடம் உங்களிடம் கேட்பது, நிச்சயம் அன்பு மட்டுமே யாங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வந்து எதுக்கும் ஆசைப்படல. உங்களிடம் கேட்பது எல்லாம் அன்பு மட்டும்தான்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ் அன்பு எங்களிடம் செலுத்திவிட்டால், நிச்சயம் அவ் அன்பு எதை என்று சொன்னதெல்லாம் பின் கேட்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அவ் அன்பு எங்களிடம் செலுத்திட்டீங்கன்னா, இறைவன் பால் செலுத்திட்டீங்கன்னா, அந்த அன்பு கட்டுப்பட்டு இறைவன் சொல்றதெல்லாம் கேட்டிடும்.
குருநாதர் :- இதனால் நிச்சயம் அதாவது பக்கத்தில் இருப்பவர்களும் கூட, பின் இறைவனை வணங்காதவர்கள் கூட நிச்சயம் நீங்கள் வணங்கி விடுத்து, வணங்கி வணங்கி எதை என்று அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட பின் வணங்கிய அறிந்தும் கூட அவ்வாறு செய்து விடுவீர்கள். அவ்வாறு பின் நிச்சயம் தகுதியும் கூட யான் உங்களுக்கு கொடுத்துடுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சில கர்மாக்களால உங்களால வந்து மற்றவங்க சொன்னாலும் புரியாது. அப்ப அந்த அன்பு காமிச்சிட்டீங்கன்னா, உங்களுக்கு எல்லாத்தையும் நான் இது பண்ணிடுவேன். ஐயா, புரியுதுங்களா இதை பத்தி ?
அதனால நீங்க மத்தவங்களுக்கு , நாலு பேருக்கு நீங்க சொல்லலாம். இப்படி இருந்தா லைஃப் மாறும்னு சொல்லிட்டு, நீங்களே சொல்லலாம்.
குருநாதர் :- அறிந்தும் இதுவும் புண்ணியம் தானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா, இப்படி இருக்காத, இப்படி வாழணும்னு சொல்லி பாருங்க. அதுவும் ஒரு புண்ணியம் தானப்பான்றார.
குருநாதர் :- நிச்சயம் எது என்று தெரியலையே. பின் கேட்காவிடிலும் நிச்சயம் தன்னில் கூட பின் சொல்வது நம் கடமையாக இருக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்டாலும் சரி, கேட்காவிடிலும் சரி. ஆனால் அது நமக்கு புண்ணியம்.
குருநாதர் :- அவனிடத்திலிருந்து புண்ணியம் நம் தனக்கு சிறிது பின் நிச்சயம் எடுத்து அறிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி வந்து அந்த நீங்க சொல்றீங்க பார்த்தீங்களா, அவன் கையில கொஞ்சம் புண்ணியம் இருக்கு. பார்த்தீங்களா, கொஞ்சம் நம்ம கையில வந்துரும்.
குருநாதர் :- அறிந்தும் ஆனால் மீதி பின் எவை என்று கேட்டால், கேட்காமலும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் அடிபட்டால், நிச்சயம் யாரோ ஒருவர் சொன்னவனே என்றெல்லாம் நிச்சயம் புரியும். அப்பொழுது
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அப்படி சொன்னாலும் ஒரு சில பேர் திருந்துருவாங்க. சொல்லாவிட்டாலும் அடிபட்டு அப்புறம் என்ன என்று யோசிப்பாராம். ஐயோ, அவர் சொல்லிட்டு போனாரே. நம்ம செஞ்சிருக்கலாமே என்று.
குருநாதர் :- நிச்சயம் அவ்வாறு அங்கே நினைக்கின்றானே. அதுவும் உங்களுக்கு புண்ணியம் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அங்க நினைக்கிறான் பாரு. அட, அப்பவே சொன்னாங்களேடா. ஒரு அம்மா வந்து, ஒரு அப்பா இவர் சொன்னாரேடா. நம்ம கேட்காம விட்டுமேன்னு அவங்க நினைக்கிறாங்க பாருங்க. அது ஒரு புண்ணியம்.
குருநாதர் :- நிச்சயம் மனிதன், அதாவது இங்கு பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றான். பணம் இருந்தால்தான் வாழ முடியும் என்று நினைக்கின்றான். நிச்சயமாக இல்லை. புண்ணியம் இருந்தால் மட்டுமே பின் வாழ முடியும். கலியுகத்தில் மட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் மனிதன் என்ன பண்றாங்க?. பணம் இருந்தால்தான் வாழ முடியும். பணம் இருந்தால் மட்டும்தான் வாழ முடியும்னு (மனிதன் நினைப்பான் என்று) சொல்கின்றார். அப்படி எல்லாம் கிடையாது. புண்ணியம் இருந்தால் மட்டுமே வாழ முடியும்.
குருநாதர் :-
“””””நிச்சயம் பணத்தினால் நிச்சயம் எதையும் காப்பாற்ற முடியாது.””””
நிச்சயம் ஆனாலும் பின் அதைத்தான் கலியுகத்தில் சேகரித்துக் கொண்டே இருப்பான்.
வேண்டும், வேண்டும் என்று எவ்வாறெல்லாம் பின் அதிகமாக பின் வருகின்றது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பான். நிச்சயம் தன்னில் கூட ஆனால் உண்மைப் பொருளை மறந்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் பணம் சேரணும், சேரணும், சேரணும்னு தான் எதிர்பார்த்துட்டு இருக்கிறார்களாம். ஓகேங்களா? ஆனால் புண்ணியம் சேர்க்க மறந்து விடுகிறார்கள்.
குருநாதர் :- நிச்சயம் இதனால் பக்குவப்பட்டவர்களுக்கே எங்களுடைய வாக்குகள் கிடைத்து, எப்படி பக்குவப்பட வேண்டும் என்பதை எல்லாம். அதனால் நேற்றைய பொழுதில், பல உரைகளில் கூட தெரிவித்து விட்டேன். நிச்சயம் துன்பம் ஒன்று இருந்தால்தான் எங்களை நெருங்க முடியும் என்று சொல்லிவிட்டேன். இதனால் துன்பம் போக்குங்கள் என்று நிச்சயம் நீங்கள் சொல்லக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- துன்பம் ஒன்று இருந்தால் மட்டும்தான் பக்குவப்பட முடியும். எங்களை நெருங்க முடியும் என்றார் சித்தர்கள்.
குருநாதர் :- நிச்சயம் எங்கள் வழியில், அதாவது சொல்லி வைத்து விடுகின்றேன்.
“”””””எங்கள் வழி துன்ப வழி.””””””
அத் துன்ப வழியில் பின் நிச்சயம் வந்தால், பின் நிச்சயம் அவ்வழியில் நிச்சயம் என்ன?? இருக்கிறது என்பதை யாங்கள் அறிந்து உங்களுக்கு நன்மைகள் செய்வோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இது புரியுதுங்களா? சித்தர்கள் வழி என்பது துன்ப வழிதான். அதுதான் வழியாம். ஐயா, துன்பம் தான் வழி. ஆனா அந்த வழியில வந்து, நீங்க போகும் பொழுது, உங்களுக்கு சித்தர் தெரிஞ்சுரும். உங்களை எப்படி காப்பாத்துறது என்று தெரியும்.
குருநாதர் :-
“”””அப்பனே, கலியுகத்தில் இன்பம் மட்டும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்லிவிட்டேன். “”””””
அப்பனே, புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் எதை என்று புரிய. அப்பனே, இங்கு அப்பனே, புண்ணியத்திற்கும் இடமில்லை. அப்பனே, பாவத்திற்கும் இடமில்லை.
கலியுகத்தில், அப்பனே, மனிதன் பல வருத்தங்கள் பட வேண்டும் என்பது கலியுகத்தின் கட்டாயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கொஞ்சம் explain பன்னுங்க ஐயா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
ஐயா, இப்ப இறைவன் வந்து இந்த கொடுத்த உடலை வந்து நமக்கு என்னன்னா, அந்த பிறவி வந்து நம்ம நினைச்சுட்டு இருக்கிறோம். இந்த பூமியில வந்து பிறந்தா வந்து சந்தோஷம் நிறைய இருக்கு. துன்பங்களும் இருக்கு. பட் ஆனா சந்தோஷங்கள் நிறைய இருக்குன்னு நினைச்சுட்டு இருக்கிறோம். கிடையாது, இந்த பிறவியே வந்து துன்பமான பிறவிதான். ஏன்னா ஒவ்வொரு வேலையும் சாப்பிடணும், ஒவ்வொரு வேலை தண்ணி குடிக்கணும். அந்த ஒவ்வொரு வேலை சாப்பிடுறதுக்கும், தண்ணி குடிக்கிறதுக்கும் போராடுறோம். வீட்ல யாரோ ஒருத்தவங்க போராடுறாங்க. அந்த உணவுக்காக போராடுறாங்க. போராட்டமான வாழ்க்கை அங்க ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் என்ன பண்றோம்? அடுத்த வளர்றோம். வளர்றப்ப கல்வி நல்ல கல்வி கிடைக்கிறதுல ஏகப்பட்ட போராட்டம் இருக்கு. அதுல போராட்டம். அப்புறம் அந்த சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் சரியா அமையனும். நமக்கு இன்னும் புரியணும். அதுக்கப்புறம் நம்மள சுத்தி நிறைய competition இருக்கும்.
போராடி படிக்கணும்.
மார்க் வாங்கணும்.
படிச்சாதான் கல்லூரி போக முடியும். So இது ஒரு போராட்டம். படிக்கிற மாணவர்களுக்கு அடுத்து படிப்பு முடிஞ்சு, அடுத்து என்ன? திருமணம் ஆகணும். சரியான வாழ்க்கை துணை அமையனும். வாழ்க்கைத துணை சரியில்லைன்னா, வாழ்க்கை நரகமா போயிடும். அதன் மூலம், திருமணம் மூலமா துன்பம். அதுக்கப்புறம் குழந்தை வேணும்னு சொல்றோம். குழந்தையை கொடுக்குறாங்க. குழந்தைகள் மூலமா துன்பம். அது படிக்கணும், அது கல்யாணம் பண்ணி வைக்கணும். வாழ்க்கை இப்படியே இன்பம் என்று சொல்லிட்டு….
குருநாதர் :- அப்பனே, மனிதன் மட்டும்தான் சாகாமலே செத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா, இதற்கு என்ன அர்த்தம்?
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
அதான் அதாவது குருநாதர் முன்னாடி சொன்னது போல, ஒவ்வொரு இரவும், நாம இறந்து இறந்து பிறக்கிறோம். ஒவ்வொரு இரவும் அதேபோல, ஒவ்வொரு துன்பமும் வந்து பார்த்தீங்கன்னா, நம்ம வந்து இறக்குறதுக்கு சமம்.
குருநாதர் :- அப்பனே, இதனால் அப்பனே, ஒவ்வொரு நாளும், அப்பனே, நிச்சயம் தண்ணில் கூட, அப்பனே, அதாவது கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் மனிதன், அப்பனே, அறிந்தும் கூட, அப்பனே, கஷ்டங்கள் தான் பட வேண்டும். இன்பம் இருக்கக்கூடாது என்பது கலியுக தீர்ப்பப்பா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
கஷ்டம் தாங்க? உண்மையிலேயே அதான் குருநாதர் சொல்றது. இது முழுக்க முழுக்க உண்மை. நம்ம வாழ்க்கையில் இன்பம் கிடையாது. ஒவ்வொரு நாளும் மரண போராட்டம் தான். காலையில எந்திரிச்சதுல இருந்து, தூங்கப் போற வரைக்கும் - நம்ம பார்க்கிற இடம், பேசுற ஆளுங்க, சந்திக்கிற ஆளுங்க, எதுக்கு? இவங்க என்ன நினைக்கிறாங்க? நம்ம நல்லது நினைக்கிறோம்னா, கெட்டது நினைக்கிறோம்னு தெரியாது. சாப்பிடுறதுக்கு நம்ம கஷ்டப்படணும்.
ஒரு வாகனத்தில போனா, திருப்பி நிச்சயமா வீட்டுக்கு வருவோமான்னு தெரியாது. வேலை பார்க்கிற இடத்துல நம்முடைய பாஸ் என்ன சொல்லுதுன்னா, என்ன பண்ண போறோம்னு தெரியாது நமக்கு. so ஒவ்வொரு நாளும் அவமானம், துன்பம், கஷ்டம். இதுதான் வாழ்க்கை.
குருநாதர் :-
அப்பனே, அறிந்தும் கூட இவ்வாறு எழுதப்பட்டுவிட்டது அப்பனே. இதனால் உங்களை நினைத்து, யாங்கள் கவலைப்பட்டு இருக்கின்றோம். எப்படித்தான் வாழப்போகின்றார்கள் என்று ?????
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- பாருங்க. அதாவது நம்ம வந்து , நம்ம மாயைக்குள்ள துன்பப்பட்டுக்கிட்டு இவங்க வாழ்க்கை இன்பம்னு நினைச்சுக்கிட்டு சந்தோஷத்துல இருக்கிறோம். ஆனா ஆனா இவன் வந்து மாயையில இருக்கிறான்னு, அவங்க நம்மள பார்த்து கஷ்டப்படுறாங்க. அதான் குருநாதர் சொல்றாரு.
குருநாதர் :- இவர்களை எப்படி மீட்டெடுப்பது என்று. இதனால்தான் நிச்சயம் என் பக்தர்களை கூட்டி, நிச்சயம் தாயே, நீ கேட்டாயே. நிச்சயம் (எங்கள் வாக்குகள்) பரவும் உலகத்திற்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க கேட்டீங்க இல்ல. அது நிச்சயமா? சில சில மக்களுக்கு (அடியவர்களுக்கு) அருளை கொடுத்து, நிச்சயம் (சித்தர்கள் வாக்குகள்) பரவும்.
குருநாதர் :- நிச்சயம் இவை செய்தால் இன்பம் கிட்டும். அவை செய்தால் இன்பம் கிட்டும் என்பதை எல்லாம் நிச்சயம் கலியுகத்தில் நடக்காது தாயே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அது செஞ்சா நன்மை கிட்டும். இதை செஞ்சு நன்மை கிட்டும்னா, கலியுகத்தில் நடக்காது.
குருநாதர்:- நிச்சயம் போராட்டமே வாழ்க்கை கலியுகத்தில் தாயே!!! தெரிந்து கொள்ளுங்கள்.
ஏன் தாயே, இறைவனாலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஏனென்றால் நிச்சயம் பின் இவ்வாறு பின், அதாவது படைத்து விட்டோமே. மீண்டும் எப்படி பின் நல்வழியில் காண்பிப்பது என்று? ஆனால் கலியின் கட்டாயம் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இறைவனாலும் அடடா, இப்படி பஇறக்க வச்சுட்டோமேடா? என்னடா இவங்க பண்ணுவாங்க? ஐயா, புரியுதுங்களா? கொஞ்சம் explain பண்ணுங்க. ஐயா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :- நம்ம செஞ்ச வினையின் பலனாக நமக்கு பிறவி கிடைச்சு, ஒவ்வொரு துன்பத்தை அனுபவிச்சிட்டு இருக்கிறோம். ஒவ்வொரு செயல்களின் மூலமாக, படிப்பின் மூலமாகவோ, வேலையின் மூலமாகவோ, திருமணத்தின் மூலமாகவோ, குழந்தைகள் மூலமாகவோ, தாய் தகப்பன் மூலமாகவோ. சரிங்களா? இந்த மாதிரி வந்து நிறைய வந்து ஒவ்வொரு நாளும் வந்து பிறர் மூலமா துன்பத்தை நாம அனுபவிக்கிறோம். இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம். அப்படிங்கறது வந்து நம்ம புரியாம இருக்கிறோம். அது வந்து புரிஞ்சுக்கோங்க. சரிங்களா? ஏன்னா நாம வந்து ஒரு பிரச்சனையை வந்து மறந்துட்டோம்னா, அந்த பிரச்சனை சால்வ் ஆயிரும்னு நினைச்சுக்கிறோம். அந்த பிரச்சனை பிரச்சனை அப்படியே தான் இருக்கு. சால்வ் ஆகுறது கிடையாது. நம்ம என்ன பண்றோம்? அதை மறந்து அடுத்த பிரச்சனைக்கு போயிடுறோம். அந்த பிரச்சனை அப்படியே தான் இருக்கு.
இதெல்லாம் பார்த்து அவங்க துன்பப்பட்டுட்டு இருக்காங்க. சித்தர்கள் நமக்காக வருந்துறாங்க. ஒரு மனுஷன் இவ்வளவு துன்பத்துல இருக்கானே. துன்பத்துல இருந்தாலும், அவன் வந்து மாயையில இருக்கிறானே. இவனை மீட்டெடுக்கணும். எப்படி மீட்டெடுக்கணும்? அது இறைவன் நினைச்சா கூட மாத்த முடியாது. ஏன்னா நாம செஞ்ச வினையை நாம தான் அனுபவிக்கணும். அது இறைவனுடைய தீர்ப்பு. அது ஒன்னும் பண்ண முடியாது. ஆனால் விதிவிலக்கு வைக்கிறாங்க. விதின்னு ஒன்னு இருந்தாலே, விதிவிலக்குன்னு ஒன்னு இருக்கும்.
அந்த விதிவிலக்கு என்னன்னா, பிறருக்காக நாம பிரார்த்தனை செய்கிறப்போ, பிறருக்காக வருத்தப்படுறப்போ, நாம பிறருக்காக தான, தர்மங்கள் செய்கிறப்போ, அந்த விதிவிலக்காஎ, இறைவன் உள்ள வந்து, சித்தர்கள் உள்ள வந்து, நம்ம விதியை மாற்றி அமைக்கிறாங்க. அதுதான் குருநாதர் சொல்றார்.
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் உங்களுக்கு பின் ஏது, அதாவது நீங்கள் அவை நடக்க வேண்டும், இவை நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவை கொடுத்துவிட்டால், அதனால் தீமை ஏற்படும் என்று இறைவனுக்கு தெரியும். அதனால்தான் தள்ளித் தள்ளி வைத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் நீங்களோ, எதனுக்கு அதிவிரைவிலே நடக்க வேண்டும் என்று. அதனால்தான் மனிதன் பின் மூட நம்பிக்கையிலேயே ஒளிந்திருக்கின்றான். அவ் மூட நம்பிக்கையிலிருந்து வெளிக்கொண்டு வந்துவிட்டால், நிச்சயம் உங்களையே நீங்கள் வெல்லலாம்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை இருக்கும். எனக்கு குழந்தை இல்லைன்னு சொல்லுவீங்க. ஆனா அந்த குழந்தை பிறந்தால் என்னென்ன உங்களை துன்பப்படுத்த போகுதுன்னு நமக்கு தெரியாது. அந்த குழந்தைங்க மூலமா சில வினைகளை அனுபவிக்கணும் அப்படிங்கறது விதி. நாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு உடல்நிலை சரியில்லாம போகும். உடல் ஊனமுற்று பிறக்கலாம். மூளை மனவளர்ச்சி சரியில்லாம பிறக்கலாம். நம்ம நினைச்சுட்டு இருப்போம், எல்லாம் நல்லா இருக்கும் அப்படின்னு. ஆனா கர்ம வினை சரியா இல்ல அப்படின்னா, குறையுள்ள ஒரு குழந்தை பிறந்தா, எவ்வளவு துன்ப வாழ்க்கை பாருங்க. மரண வேதனை, தினமும் தினமும் மரண வேதனை. ஆனா என்ன பண்றோம்? குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி எனக்கு குழந்தை வேணும், குழந்தை வேணும், குழந்தை வேணும்னு குதிக்கிறோம். ஆனா குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் இந்த குழந்தை ஏன் பிறந்தது, ஏன் பிறந்தது, ஏன் பிறந்து வருத்தப்படுறோம்? இதே போல தான் திருமணம் பண்றதுக்கு குதிக்கிறோம். சரியான மனைவி அமையல, கணவன் அமையலன்னா வாழ்க்கை நரகமா போயிடும். அப்போ ஏன் கல்யாணம் ஆச்சு, கல்யாணம் ஆச்சு? கல்யாணம் பண்ணனும்?. இது இறைவனுக்கு தெரியும். (இறைவன்) ஒரு வகையில தள்ளி போறாரு. அப்படின்னா, டேய், உனக்கு குழந்தை மூலமா துன்பம் வரப்போகுது. மனைவி மூலமா துன்பம் வரப்போகுது. கணவன் மூலமா துன்பம் வரப்போகுது.
அதனால நான் அதை கொஞ்சம் தள்ளி போடுறேன். அந்த வினையை நீ வருத்தப்படுறதுனால கொஞ்சம் அப்படியே நான் வினையை சரி பண்ணி, நான் அப்படியே விதியின் போக்குல போய், உனக்கு மாத்தி கொஞ்சம் லேட்டா பண்ணி கொடுத்துறேன்னு சொல்றாரு. ஆனா அப்பயும் நாம பொறுக்காம குருநாதர்ட்ட வந்து எனக்கு சீக்கிரம் நடக்கணும், சீக்கிரம் நடக்கணும். அவங்க நம்ம கேக்குறத கொடுக்குறது தான். அவங்க இருக்கிறாங்க. கேக்குறத கொடுக்கிறாங்க.
குருநாதர் :- அறிந்து கூட இப்பொழுது உனை பார்த்து கேள்வி கேட்கின்றேன் அப்பனே. அதாவது உன் பிள்ளை வந்து எங்களுக்கு திருமணம் செய்து செய்து வை என்று கேட்கின்றான். நீ செய்து வைத்து விடுவாயா என்ன?
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
ஐயா, அவங்க விதி அப்படின்னு எல்லாம் பார்க்க முடியாது. பண்ணி வைக்கணும். அவருடைய விருப்பம் என்னவோ அதுதான்.
குருநாதர் :- அப்பனே, என்ன சொல்வாய் அப்பனே அவனிடத்தில்?
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
உனக்கு திருமணத்தில் விருப்பம் இருந்தா நான் செஞ்சு வைக்கிறேன். விருப்பம் இல்லைன்னா நீ எப்ப பண்றியோ அப்ப பண்ணிக்கோ.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் இவ்வயது தேவையா? (சிறிய வயதுடைய குழந்தை)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
இந்த வயது இல்ல. திருமண வயதுக்கு தான் நான் சொல்றேன். இந்த வயதுக்கு நான் செஞ்சு வைக்க மாட்டேன். திருமணம் அந்த பக்குவம் வரும். அந்த புரிதல் பக்குவம் வரப்போ நம்ம திருமணம் செஞ்சு.
குருநாதர் :- அப்பனே, இதே போலத்தான் அப்பனே. திருமணம் என்னிடம் வந்து கேட்கிறார்கள். அப்பனே இறைவனிடத்தில் கேட்கிறார்கள். அப்பனே ஆனால் அவ்வயது, அத்தகுதி இருந்தால் தானே அப்பா யாங்கள் செய்ய முடியும்? பின் அனைவருக்கும் எழுத்துரை.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
நிச்சயமா. இப்ப நான் சொன்னேன் பாருங்க. அதாவது நமக்கு தெரியும், நமக்கு தெரிஞ்சது என்ன? அவனுக்கு பக்குவம் வரல. திருமணம் இது 20, 21 வயதுன்னு சொல்றோம். நாமோ அப்ப வந்து ஒரு வேலைக்கு போகணும்னு சொல்றோம். வேலைக்கு போயிடுவாரு, கை நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லுவாரு. வெளியில இந்த விஷயங்களை தான் பார்க்கிறோம். ஆனா அவன் மனசளவுல ஒரு பெண்ணையோ, ஒரு ஆணையோ அவங்க ஏத்துக்கிறதுக்கு சகிச்சுக்கொண்டு, அவங்களால துன்பம் வர்றப்போ ரெண்டு பேரும் ஒத்துப்போகக்கூடிய மனநிலை இருக்குதா? அவங்களுக்கு அந்த பொருத்தம் இருக்கா? விட்டுக்கொடுத்து போற தன்மை இருக்கா? பொறுமை இருக்கா? சகிப்புத்தன்மை இருக்கா? அப்படிங்கறது நமக்கு தெரியாது.
அவங்களுக்குத்தான் தெரியும். அப்போ அவங்களுக்கு தெரிஞ்சதுனாலதான், டேய், உனக்கு பண்ணா அத்துன்டு போயிடும்டா. ஆறு மாசம் ஒரு வாரம் இருக்குல்ல, போடுடா. தள்ளி போடுறேன். வெயிட் பண்ணு, வெயிட் பண்ணு, வெயிட் பண்ணு.
குருநாதர் :-
அப்பனே, இதே போலத்தான் வேலை என்று கேட்கிறார்கள். அப்பனே இறைவனை வேலை வேண்டும் என்று. ஆனாலும், அப்பனே, பின் அவனுக்கு அறிவே இல்லை அப்பா.
அப்படி பின் வேலை கொடுத்தாலும், அவன் செய்வானா என்று.
அப்பனே இல்லை. இதனால் அப்பனே, சில பக்குவங்கள் கொடுத்து தான் யாங்களும் தர முடியும். அதே போலத்தான் அப்பனே அனைத்தும் என்பேன் அப்பனே.
இறைவன் தாமதமாகி கொண்டே சென்றால் அப்பனே பின் ஒரு அர்த்தம் உண்டு அப்பா. ஆனால் அதற்குள்ளே அப்பனே இவ்வுலகம், அதாவது எதிர்மறையான உலகமாக, அதாவது, அப்பனே, மாந்திரீகத்தில் ( யந்திரம், மந்திரம், தந்திரம், குறுக்கு வழி, cheating others for personal gain/fruad ) நுழைந்து விடுகின்றான் அப்பா. இங்குதான் துன்பம் ஆரம்பிக்கின்றது அப்பா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
நம்ம குருநாதர் வழியில வர்றதுனால தெரியுது, நமக்கு வினைன்னு தெரியாம, அறியாம நிறைய பேர் இருப்பாங்க. திருமணம் ஆகுது. 35 வயசு ஆனா 40 வயது ஆனா, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னா வெயிட் பண்ணனும். நடக்கிறப்ப, நிச்சயமா நடக்கும். அது ஜாதக கட்டத்தை பார்த்தா, திருமணம் பொருத்தம் இருக்கு. ஆனா தாமதம்ன்றது தெரியும். ராகு கேது தொடர்பு இருக்கிறப்ப, திருமணம் தாமதம் ஆகுது. இரண்டாம் இடத்து தொடர்பு இருக்கிறப்போ, தாமதம் தெரியும். ஆனா தெரிஞ்சுட்டா என்ன பண்ணுவோம்? சீக்கிரம் திருமணம் முடிஞ்சு, பரிகாரம் பண்ணனும்னு சொல்லிட்டு, யாருமே பார்ப்போம். ஜோசியக்காரன், மந்திரக்காரன், ஏதாவது ஒரு வழியில போய், அதை சீக்கிரம் நடத்தி பண்றப்போ, அந்த வினையா வந்து என்ன ஆகுதுன்னா, விட்டுட்டு போயிராங்க. அந்த வினை, அந்த தாமதத்தினால, ஒரு வினை வந்து சரியாக போயிருக்கும். ஆனா அதை சீக்கிரம் நடக்குதுன்னு சொல்லிட்டு, நம்ம என்ன பண்றோம்? அந்த வினையை கழிக்காம, அப்படியே விட்டுறோம். அப்படின்றப்போ, அது வேற ரூபத்துல வந்து தாக்கும். அது அவங்களுக்கு (இறைவன்/சித்தர்கள்) தெரியும். அதுதான் அவங்க தாமதப்படுத்துறாங்க.
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் நீங்கள் அனைவருமே இயந்திரங்கள். உங்களால் இயக்க முடியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் அனைவருமே ஒரு வாகனம் மாதிரிதான். வாகனத்தை யார் இயக்கணும்? நீங்களே இயக்குறீங்களா? அதுக்கு ஒருத்தர் வேணும். டிரைவர் வேணும். யார் டிரைவர்? இறைவன் தான் டிரைவர், அவர் இயக்குனால் மட்டும்தான் உண்டு.
குருநாதர்:- இதை புரிந்து கொள்ளாமல், மனிதன் நிச்சயம் என்னால் முடியும். அவை செய்கின்றேன், இவை செய்கின்றேன் என்று. நிச்சயம் முடியாது அப்பா. அதனால் மனிதன் சொல்லலாம், நான் அதை செய்றேன், இதை செய்றேன், அங்க பண்றேன், இங்க பண்றேன்னு சொல்லிட்டு, ஆனால் முடியாது.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்கள் உடம்பே அப்பனே உங்களுக்கு சொந்தமில்லை. அப்பனே உடம்பில் உள்ள அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது. என்பேன் அப்பனே.
ஆனால் யாராவது தவறு செய்து கொண்டே இருந்தால் அப்பனே, ஒரு ஒரு கம்பியாகப் பிடுங்கிடுவான் என்பேன் அப்பனே. (கம்பி=நரம்பு) இவ்வுலகத்தோருக்கு அனைவருக்குமே பொருந்தும்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
அதாவது, நம்ம உடம்பு வந்து நரம்பு மண்டலங்கள் இயக்கப்படுறது நமக்கு நல்லா தெரியும். மூளையில இருந்து அந்த நெர்வ் செல் உடம்புல இருக்கக்கூடிய அனைத்து பாகங்களுக்கும் போகுது. இது நமக்கு தெரியாது. அந்த ஒவ்வொரு பாகமும் எப்ப எப்படி இயங்கணும்ன்றது எல்லாம் ப்ரோக்ராம் பண்ணி வச்சிருக்காரு ஆண்டவன். So நம்ம டிரைவர் கிடையாது. இறைவன் தான் டிரைவர். நம்ம ஆன்மாதான் அந்த டிரைவர். சரிங்களா? அந்த டிரைவர் ப்ரோக்ராம் பண்ணிட்டு போகணும். காலையில தூங்கி எந்திரிச்சதுக்கு அப்புறம், அன்னைக்கு செயல்கள் வந்து, இவன் காலால, கையால, வாயால, மனசால, பேச்சால, உடலால இந்த நல்லதை செய்யணும், இந்த தீயதை செய்யணும். அப்படின்றது வந்து ப்ரோக்ராம் பண்ணி வச்சாச்சு. ஆனா அதை செய்யறப்போ, அவன் வந்து ஒரு விஷயத்தை திருப்பி, திருப்பி தீமை செய்யறப்போ, ஒருத்தன் யாராவது திருப்பி, அடுத்தவன் வந்து அடிச்சுக்கிட்டே இருக்கிறான். கையால காலால மிதிச்சுக்கிட்டே இருக்கிறான்னா, (இறைவன்) கால்ல ஒரு நரம்பை புடுங்கிடுவார். மூளையில இருந்து கால்ல ஒரு பக்கம் நரம்பை புடுங்கிடுவார். முடிஞ்சுச்சு. அதுக்கப்புறம் அவன் காலை தூங்க முடியாது. திருமணம் மதிக்காம பேசுறவனுக்கு பேச்சை திக்குவாய் பண்ணி விட்டுருவார். இதுதான் சொல்றாரு. எல்லாம் அவங்க கண்ட்ரோல்ல இருக்கு. சரிங்களா? அந்தந்த வயரை பிடுங்கிவிடுவார். அந்த வயரை போடுங்கன்னா, அந்த பாட்டு வேலை செய்யும். அதான் குருநாதர் சொல்றாரு.
குருநாதர் :-
“””””””அப்பனே, அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக, அப்பனே நீங்கள் வேண்டிக்கொண்டால், அப்பனே நிச்சயம் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது அப்பா. அப்படி தடுத்தாலும், அவனே கீழே இறங்கி போய்க்கொண்டே இருப்பான்.””””””
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
அதான் நம்ம குருநாதர் சொன்னதுதான். நீங்க பிறருக்காக நீங்க உன் வாழ்க்கை அர்ப்பணிக்கிறப்போ, அவங்களுக்காக நீங்க வந்து உதவி செய்யறப்போ. சரிங்களா? இந்த (தீய) எண்ணங்கள் எல்லாம் உங்களை விட்டு போகும். இதனால வந்து என்ன ஒரு வேல்யூன்னு கேட்டீங்கன்னா, பிறருக்காக நம்ம வாழ ஆரம்பிக்கிறப்போ, நாம நமக்கு அப்படின்ற ஒரு சிந்தனை வந்து நம்மள விட்டு அகணும். அந்த சிந்தனையை அகன்றாலே, பிறருக்கு நம்ம வாழ ஆரம்பிக்கிறப்போ, வேற எந்த சிந்தனையும் வராது. வராதப்ப என்ன ஆகும்னா, நீங்க வந்து அடுத்தடுத்து நல்ல செயல் செய்யறப்போ, சித்தர்கள் எல்லாம் உங்களை சுத்தி வந்துறாங்க. ஒரு தர்மம் செய்யறப்போ, தர்மம் வந்து நம்மள சக்கரம் போல சுத்தி பாதுகாக்க ஆரம்பிச்சுரும். நம்மள சுத்தி எந்தவித தீவினைகளும் அண்டாது. யாராவது உங்களுக்கு துன்ப வேலைக்கு நேர்ந்தாலும், அவனுக்கு பதிலுக்கு பல மடங்கு நேரும். இந்த மாந்திரீகம் எதுவுமே வேலை செய்யாது. அதான் குருநாதர்.
அடியவர் :- நம்மள விட ஏழை பக்கம், நிறைய பேர் இருப்பாங்க. அவங்களுக்காக நம்ம வேண்டிக்கும் போது, அந்த வேண்டுதல் வந்து தெய்வத்துக்கிட்ட சீக்கிரமா போய் சேரும். இங்க டைரக்டா நம்மளுக்காக வேண்டுறதை விட, மத்தவங்களுக்காக நம்ம வேண்டும்போது, தெய்வம் வந்து அவங்களுக்கு சீக்கிரமா சேரும். நம்மளுடைய கர்ம வினை தான் அதுதான் கழியும்.
அதுதான், அதுதான், அதுதான் சொல்லி இருக்காரு. ஆமா, எப்பவுமே உங்களுக்கு ஃபர்ஸ்ட் பாவத்தை கழிக்கணும்னா, மற்றவர்கள் நல்லா இருக்க வேணும். அதுதான் சொல்றாரு. நம்ம கெட்டாலும் கெட்டுட்டோமே. பரவால்லப்பா, நீ படைச்ச நான் கெட்டாலையும் கெட்டுறோம்பா. மத்தவனாவது நல்லா வைப்பா. அது மாதிரி சொல்ல, அது மாதிரி வந்து வேண்டிக்கோங்க. தயவு செய்து வந்து ஏன்னா, இது நான் இப்ப இது சொல்றது பார்த்தா, நேத்து இன்னைக்கு சொல்றது பார்த்தா,
சுவடி ஓதும் மைந்தனின் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவித்த உண்மையை அனைவருக்கும் எடுத்து கூற ஆரம்பித்தார் !!
(எவ்வளவு எண்ணங்கள் உயர்வாக இருந்தால் வாழ்க்கையில் இறைவனே நேரடியாக உதவுவார் என்ற உண்மை)
நான் என்ன பத்தியே சொல்றேன்.!!
இது புரியும். எல்லாமே படிச்சேன். முதுகலை பட்டப் படிப்பு!!! வேலை இல்லை, ஒன்னும் இல்லை, எதுவுமே இல்லை. எங்களுக்கு எதுவும் இல்ல. அம்மா, நான் (இருவர் மட்டும்) வீட்ல இருக்கிறோம். நிறைய கோயிலுக்கு எல்லாம் போயிட்டே இருக்கிறோம். அப்ப லைஃப் அவ்வளவுதான். நெனச்சேன்
அப்ப அம்மாவும் சொல்றாங்க, ஏன்டா, இவ்வளவு படிச்ச. உங்க அப்பா இருக்கிற சொத்தை எல்லாம் எல்லாம் விட்டுட்டு, புண்ணியம் பண்ணிட்டு, (நமக்கு) ஒண்ணுமே இல்லாம ஆச்சு.
என்னடா?? நீயும் இப்படி இப்படி சாமி கோயில் ன்னு இறைவனே நினைச்சுக்கிட்டு இருக்கின்றாய்
இறைவன் நம்மள இப்படி (கஷ்டப்படுத்துகின்றார்) என்று எங்க அம்மா அழுகுறாங்க.
அம்மா நீங்க அழுகாதீங்கமா? அகத்தியர் இருக்காரு, இறைவன் இருக்காரு. கண்டிப்பா ஏதோ ஒரு ரூபத்துல வந்து நம்மள (நன்மைகளை செய்து) கூட்டிட்டு போவாருமா. நீங்க அழுகாதீங்கமான்னு சொல்றேன்.
இருந்தாலும் அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு.
இல்லடா, நான் இறைவன் எனக்கு சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டேன்
உங்க அப்பாவும் இறைவனுக்காகவே வாழ்ந்துட்டு போனாரு. எல்லோருக்கும் நம்பி வந்த எல்லோருக்கும் எல்லாமே பண்ணாரு, எல்லாமே வித்துட்டாரு, எல்லாமே பண்ணிட்டாரு.
இப்ப நம்ம கையில் எதுவும் இல்லை
ஆனா உன்னை யாருடா கவனிப்பாங்க?
இப்படி எல்லாம் எங்க அம்மா கேள்வி கேட்டாங்க.
தினமும், நைட்ல எங்க அம்மா ஒரு மணிக்கு எழுந்து அழுதுட்டு இருப்பாங்க.
அப்ப (நான்) என்னமா, அம்மா (ஏன் அம்மா இரவில் எழுந்து உட்கார்ந்து அழுகின்றீர்கள் என்று) ஒரு நாளைக்கு (நான் இதை) கவனிச்சுட்டேன். ஏன்மா அழுதுவிட்டு இருக்கீங்க இப்படி ராத்திரி ஒரு மணிக்கு ன்னு சொன்னேன்.
ஏன்டா, உங்க அப்பா பாக்குறதுக்கு எத்தனை பேர் வந்தாங்கடா, எத்தனை பேருக்கு (உன் அப்பா) நல்லது செஞ்சாங்கடா. ஆனா உன்னை கவனிக்கிறதுக்கு (யாரும் இல்லையே) நீ எப்படிடா பிழைப்பாய்? எல்லாமே ஏமாத்தும் உலகம்டா.
நம்ம சொந்த பந்தம் எல்லாம் விட்டு போச்சு. யாருமே இல்லடா. நீ எப்படிடா பொழைப்பேன்னு சொல்லிட்டு எங்க அம்மா.
அம்மா, அழுகாதீங்கம்மா. ஏதோ வேலைக்கு போறேன், ஏதோ பண்றேன். கவலைப்படாதீங்கம்மா. இறைவன் இருக்கிறார்.
இல்லடா. ஊர் எல்லாம் சொல்றாங்க. (இவன்) அப்பாதான் எல்லாருக்கும் புண்ணியம் பண்ணி எல்லாம் இழந்துட்டாரு. (மகன்) இவன் கோயில் கோயிலா போயிட்டு இருக்கிறான். இவன் பைத்தியம் தான் ஆகப்போறான்னு சொல்றாங்கடா எல்லாரும்.
அம்மா அது மாதிரி எல்லாம் கவலைப்படாதீங்கமா. கண்டிப்பா இறைவன் வந்து நல்லது பண்ணுவாருன்னு அம்மாவுக்கு நான் தைரியம் சொன்னேன்.
அப்புறம் ஒரு நாள் நான் கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் எங்க அம்மா ஓ என்று அழுவுறாங்க.
ஏன்டா, இது மாதிரி பண்ற? எல்லாருமே ஏளனமாக பேசுறாங்கடா. வேணாம்டா, உங்க அப்பா செய்த புண்ணியமே ஒன்னும் அது காக்கலடா நம்மள. யாரையும் காக்கலடா. வேணாம்டா. அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க.
அம்மா, இருங்கம்மா. கவலப்படாதீங்க அம்மா அப்படின்னு அம்மா கிட்ட சொல்லிட்டு நான் கோயிலுக்கு கிளம்பிட்டேன்
(எனக்கும்) அழுகை வருது. என்னடா,??? இது??.
அம்மா கூட இப்படி சொல்றாங்களேன்னு நினைச்சுகிட்டு கோயிலுக்கு போனேன் !!
பஸ்ல ஏறி நெனச்சுக்கிட்டே அழுதுகிட்டே
நேரா திருவானைக்காவல் கோயிலுக்கு போனேன்
அங்கே போய் கடவுளிடம்
நான் ஒண்ணுமே வேண்டல.
என் கண்ணுல அழுகை!!!
எங்க அம்மா அழுததே. அதே மாதிரி கடவுள் முன்னாடி அழுவேன்
எதையும் வேண்டிக்கல
என் கண்ணுல தண்ணி (தாரை தாரையாக கண்ணீர்) வருது.
என்ன வேண்டிக்கிறதுன்னு தெரியல.
எனக்கு என்ன வேண்டிக்கிறதுன்னே தெரியல!!!
. (இறைவன்) அவர்கிட்ட நான் என்ன கேட்டேன்.???
இனிமேல் எதுவுமே ஒண்ணுமே இல்ல. நான் என்ன கேட்க போறேன்னு சொல்லிட்டு அப்புறம் ஒரே ஒன்னு தான் வேண்டிக்கிட்டேன்.
“””””அப்பா, படைச்சா இனிமேல் என்ன மாதிரி யாரையும் படைக்காதப்பா.
தயவுசெய்து!!!
(அதாவது சுவடி ஒரு மைந்தன் சிறுவயதில் இருந்து வறுமையில் வாடி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாலும் பாதை மாறவில்லை இறைவனையே பிடித்துக் கொண்டு சென்றார் அவருடைய தந்தை திரு ராமராஜா அவர்களும் இறைபக்தி கொண்டு நாடிவரும் அடியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தன்னுடைய சொத்து பத்துக்களை எல்லாம் விற்று அவர்களுக்காக சேவை செய்து விண்ணுலகம் சென்று விட்டார் அதன் பிறகு... உடன் பிறந்த சொந்தங்களும் கைவிட சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவும் அவரது தாயும் மாத்திரம்.. வீட்டில் வாழ்ந்து கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்! ஒரு கட்டத்தில் தாய் அவர்கள் வெறுத்து விட்டார்கள் இப்படி இறைவா இறைவா இறைவா என்று உன் தந்தையும் இப்படியே இருந்து சென்று விட்டார் நீயும் இப்படியே இருக்கின்றாயே இறைவன் நம்மை திரும்பி கூட பார்க்கவில்லையே இந்த பொல்லாத உலகத்தில் எப்படி நீ வாழ போகிறாய் என்று ஒரு தாயின் மனதில் இருந்து மனம் விரும்பி அந்த அழுகை வெளிப்பட்டது இதையெல்லாம் நினைத்துக் கொண்டே எந்த கஷ்டம் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாதை மாறாமல் நேர்மையாக உழைத்து தான தர்மங்கள் செய்து கொண்டு தன்னுடைய கஷ்டத்தை பிறருக்கும் வெளிப்படுத்தாமல் ஆலயம் ஆலயமாக சென்று இறைவன் இறைவன் என்று அவருடைய பயணம் இருந்தது அப்படியே ஒரு கட்டத்தில் தாய் அழுவதை கண்டு மனதிற்குள்ளே ஒரு மாறாத சோகம் ஏற்பட்டு திருவானைக்காவல் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் அப்பா போதும் நீ கொடுத்த கஷ்டங்கள் போதும் இந்த உலகத்தில் அனைவரும் எப்படி எப்படியோ இருக்கின்றார்கள் என்னை போன்ற பிறப்பு என்னை போன்ற பிறவியை இனிமேலும் நீ படைத்து விடாதே தயவு செய்து என்னுடைய பிறப்பும் பிறவியும் மட்டுமே கடைசியாக இருக்கட்டும் இதுபோன்று யாருக்கும் பிறவியை தந்து விடாதே படைத்து விடாதே என்று இந்த ஒன்றை மட்டும் வேண்டிக் கொண்டு வந்துவிட்டார் )
தயவு செய்து”””” என் கண்ணுல தண்ணி அப்படியே வழியுது.
“””””படைச்சா என்ன மாதிரி தயவு செய்து இனிமேல் படைக்காதப்பா.”””””
அடுத்த பிறப்பிலாவது“””” நல்லா இருக்கிற இருக்குற ஆளா படைச்சிருப்பா.
கஷ்டமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் பிறப்பாக படைச்சிருப்பா!!!
என்ன மாதிரி எல்லாம் இனிமேல் படைக்காதப்பா. இதுதான் வேண்டிக்கிறேன். “””””
(உயர் எண்ணங்களால் இறைவனால் ஜீவநாடியை பெற்ற நம் அன்பு சுவடி ஓதும் மைந்தன் )
அடுத்து பாதி மாறுது பாருங்க வாழ்க்கை. (ஜீவ நாடி கிடைத்தது)
ஆமா, இதெல்லாம் உண்மை.
—————————————————
(சுவடி போதும் மைந்தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மட்டும் தான் இது. அவருக்கு பெற்ற இறை அனுபவங்கள் அவருக்கு கிடைத்த வழிகாட்டுதல்கள் வாழ்க்கையை நினைத்து கங்கையில் நீராடிய பொழுது அவர் அழுத கண்ணீர் ஈசனை சென்றடைந்த நிகழ்வு இதை ஈசனே வாக்கில் நேரடியாக உரைத்த அனுபவங்கள் எல்லாம் சிறிது சிறிதாக வெளிவரும்... ஏனென்றால் இங்கு கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது நேர்மையாக உண்மையான பக்தியை காட்டினால் இறைவனே நம்மை தேடி வருவார் என்பதற்கு உதாரணம் திரு ஜானகிராமன் ஐயா சுவடி ஓதும்மைந்தன்!!!
கடும் சோதனைகள் கடும் கஷ்டங்கள் வந்தாலும் இறைபக்தியை கடைசி வரை கை விடவில்லை...இதனால் இறைவனே தேடி வந்து ஆட்கொள்ளப்பட்ட அனுபவத்தின் ஒரு உதாரணம் இது இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
இப்படி இவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நேர்மையாக இருந்து இறைவனே கதி என்று பிடித்துக் கொண்டதால் தான் ஜீவனாடியின் மூலம் அனைத்து தெய்வங்களும் வரும் வரம் பாக்கியம் இறைவனை தேடி வந்து அருளிய சத்தியம் நாம் அனைவரும் அறிந்ததே.. இது நம்முடைய பாதை எப்படி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சரியான உதாரணமாக இந்த சத்சங்கத்தில் அனைவருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார்)
————————————————-
அதனால கஷ்டம் வருது. கஷ்டம் வருதுன்னா நொந்து போகக்கூடாது வாழ்க்கையில. அதை சொன்னாரு பாருங்க. அகத்தியர் என்ன சொன்னாரு. கஷ்டத்தை கஷ்டத்தால் எதிர்கொள்ளனும் என்று. இன்பமா எதிர்கொள்ளனும். இருக்கணும். உங்களுக்கு வந்து தரவில்லை எனரறால் என்ன? இன்னைக்கு என்ன சொன்னாரு பாருங்க. தரவில்லை என்றால் என்ன? அதுக்கு வந்து நீங்க செலக்டட் பீப்பிள் (selected people ) இல்ல. ஐயா, உங்களுக்கு திருமணம் ஆகலையா? அதுக்கு நீங்க தகுதியான ஆளு இல்ல. இப்ப வேலைக்கே போறோம். இன்டர்வியூ வைக்கிறாங்க. நீ போடான்னு சொல்லிடுறாங்க.
மனிதனே அது மாதிரி சொல்றான். ஏன் (என்றால்) நீங்க அதுக்கு தகுந்த ஆள் இல்லை. அவன் சொல்றது கேட்டாதான் (வேலை). இப்ப கம்ப்யூட்டர்ல இது பண்ணுமா? அது பண்ணுமா? ( என்று முதலாளி) சொன்னால், நீங்க அது பண்ணீங்கன்னா தான், அவர் உன்னை செலக்ட் பண்ணுவார்.
(அலுவலகத்தில்) மனிதன் சொல்றதே நீங்க கேக்குறீங்கன்னா இறைவன் சொல்றது கேட்கணும்மா.
(அப்படிக் கேட்காமல் இருப்பது) இதுதான் மனிதனோட முட்டாள்தனம்ன்றது. அதனாலதான் சொல்றாரு. அப்ப உங்களுக்கு கல்யாணம் கேக்குறீங்கன்னா , நீங்க அதுக்கு தகுதி இல்லை. அந்த தகுதியை வளர்த்துக்கணும்.
ஏன் கல்யாணம் ஆகலன்னு சொல்லி நம்ம யோசிக்கணும். அதே மாதிரி கஷ்டம் கஷ்டம்னு சொல்றீங்க. ஏன் கஷ்டம் வருது? ஐயா, சொல்லுங்க. ஐயா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்துரைக்கும் அடியவர் :-
அதான் குருநாதர் ஐயா சொல்றாரு. எதுக்காக காரணம் யோசிக்கணும். நம்ம வெளியில இருந்து பார்க்கிறோம். அவர் திருமணத்துக்கு சரி, ஒரு வேலை கிடைக்க. அவருக்கு எல்லா தகுதியும் இருக்கு. படிச்சு முடிச்சிருக்கிறாரு. நல்லா சம்பாதிக்கிறாரு. சரிங்களா? நல்ல குடும்பத்துல இருக்கிறாரு. இவருக்கு ஏன் திருமணம் அமையல? திருமணம் செஞ்சு வைக்கணும். அவர் நினைக்கிறார் எனக்கு திருமணம் ஏன் ஆகல? நான் சீக்கிரம் திருமணம் செய்யணும்னு நினைக்கிறான். ஆனா நமக்கு தெரியாத காரணம் ஏதோ ஒன்னு பின்னாடி இருக்கு. திருமணமோ வேலையோ.
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளாக வாழ வேண்டும். பின் யார் அவ்வாறாக வாழ்கின்றார்கள்?
அவ் குறிக்கோளோடு வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அனைத்தும் செய்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே ஒரு எய்மோட வாழனும். எய்ம்னா தெரியுங்களா? உங்களுக்கு லட்சியத்தோட வாழனும். லட்சியத்தோட யார் வாழ்றாங்களோ, அவங்களுக்கு மட்டும்தான் இறைவன் கொடுப்பாரு. லட்சியம் இல்லாத மனிதனுக்கு ஒன்னும் கொடுக்க மாட்டார்.
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட உங்கள் தேவைகளை அழகாக யானே பூர்த்தி செய்வேன். கவலை விடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க யார் யாரெல்லாம் இங்க வந்திருக்கீங்களோ, உங்கள் கவலைகளை தானாகவே குருநாதரே சரி பண்ணுன்னு சொல்லி இருக்காங்க. அம்மா,
___________________
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்காநகரம் மீனாட்சி தாயார் ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
—————————————-
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு , மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள் .....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDelete