23/3/25 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: மை சன் பத்ரேஸ்வரர் தொகுப்பு சிவன் கோயில்கள்... வியட்நாம்.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே இவ்வாறாக அப்பனே... இந்திரன் அப்பனே பல தேசங்களுக்கும் கூட அப்பனே சரி வழியாகவே அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அங்காங்கு அப்பனே... பரப்பி!!!! அறிந்தும் கூட!!
இதனால் அப்பனே பின் மீண்டும் மேல் லோகத்திற்கு சரியாகவே... சென்று அப்பனே ஆட்சி புரிந்து நல்விதமாகவே!!
அப்பனே மீண்டும் அறிந்தும் கூட இதனால்
அப்பப்பா... அறிந்தும் எதை என்று புரிந்தும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே
இவ்வாறாகவே அப்பனே பல பல அப்பனே மீண்டும் மீண்டும் அவன்.. அப்பனே பின் அதாவது..அப்பனே பின் அங்கிருந்து அதாவது..தாம் தான்...என்ன? ஏது?? தவறுகள்!!.... செய்தோம்!? என்பதையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் அப்பனே புவி தன்னில் பிறப்பெடுத்து.. அப்பனே பின் அரசனாகி மீண்டும் அப்பனே
பின் பல வழிகளிலும் கூட இறை பலத்தை.. பரப்பினான் என்பேன் அப்பனே!!!.. அப்படிப்பட்டவர்கள் தான் பல அரசர்கள் என்பேன் அப்பனே!!
இன்னும் அப்பனே பின் அவ் அரசர்கள் எல்லாம் யார் யார் என்று!!!
(நல்லாட்சி புரிந்த அரசர்கள் எல்லாம் முற்பிறவியில் யார் யார் என்பதை)
அதாவது அப்பனே இந்திரன்.எவ்? அரசனாகப் பிறந்தான்? அதாவது மனிதரிடத்தில் அப்பனே அதாவது பூலோகத்தில் அப்பனே பின்.. அறிந்தும் கூட வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே. விவரமாகவே அப்பனே.
அப்பொழுதுதான் உங்களுக்கு சரியாகவே பின் புரியுமப்பா!!!
அப்பனே ஏன் எதற்கு இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பலமாக அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு கிரகங்களுக்கு ஏற்பவே அப்பனே நிச்சயம் இந்திரன் சரியாகவே அப்பனே பின் அறிந்தும் கூட... பின் இவ்வாறாகவே!!!
அப்பனே இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... காலம் நிச்சயம் அறிந்தும் கூட பின்... எப்பொழுது? பின் சூரியன் இருக்கின்றான்??? அறிந்தும் எதை என்று புரிய அப்பனே!!!
சந்திரன் இன்னும் அப்பனே... பின் அறிந்தும் அறிந்தும்.. சில நட்சத்திரங்கள் அப்பனே... அதாவது புவி இருக்கும் வரை நிச்சயம் தன்னில் கூட!!!!
இதனால் அப்பனே!!! சில மாற்றங்களால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம்.. நீரும் கூட !! அதாவது கடல் நீரும் கூட... இவ் மலையை சூழ்ந்து அப்பனே.. அப்படியே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மூடிற்று என்பேன் அப்பனே!!!
அப்பனே பல ஆண்டுகள் நிச்சயம் அப்பனே நீர்.. அப்பனே இங்கு அதாவது.. கடல் அறிந்தும் கூட பின்...இவ் மலையும் கூட மூழ்கிட்டு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அப்படியே திருத்தலமும் மூழ்கிற்று !!! என்பேன் அப்பனே.
இவ்வாறாக பின் இதை தன் அப்பனே பின்... அவ்வாறாகவே அப்பனே பின் அறிந்தும் எதை என்று கூட மீண்டும் அப்பனே இவை தன் கூட.. மெது மெதுவாக அப்பனே மீண்டும் அப்பனே கடல் உள்ளிழுக்க... கடலானது பின் நோக்கி செல்ல அப்பனே இவை மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது அப்பனே!!
(கடல் நீர் பின்வாங்கி மீண்டும் ஆலயம் வெளிவந்தது!!!.... இதனைக் குறித்து சற்று விரிவாகவே புரிந்து கொள்ளலாம்... சபரிமலையில் அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1815ல் ராஜராஜ சோழன் கடல் பயணம் மேற்கொண்டபோது கடலுக்கு அடியே ஆலயத்தின் பிம்பத்தை கண்டு அதை மனதில் வைத்துக்கொண்டு தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கினான் என்பதை பற்றியும் புஷ்கர் ஆலயவாக்கில் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1778 விசுவாமித்திரர். குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது குறித்த வாக்குகள்... நினைவில் வரலாம்.
இறைவனுடைய கட்டளைப்படி ஒவ்வொரு கால சூழ்நிலைக்கு ஏற்ப கடல் நிலத்தை மூடி மூழ்கடிப்பதும் மூழ்கடித்த கடல் பின்வாங்கி நிலப்பகுதி நகரங்கள் தோன்றுவதும் இறைவன் ஆணைப்படி நடந்து வருகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதேபோன்றுதான் இந்த வியட்நாம் ஆலயம் தேவேந்திரனால் உருவாக்கப்பட்டு பின்பு கால மாற்றங்களால் கடலால் மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் கடல் பின் வாங்கிய பொழுது ஆலயத்தின் நிலையை கண்டு மீண்டும் பிறவி எடுத்து வந்து ஆலயத்தை புனரமைப்பு செய்து இருக்கின்றார் இந்திரன்.
இந்த நூற்றாண்டில் அதாவது 1950 ஆண்டுகளில் தனுஷ்கோடி கடலில் மூழ்கியதும் பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதும் நமக்கு சமீப காலங்களில் கண்டறிந்த கேட்டறிந்த விஷயங்கள்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி ஆலயத்தின் குளங்கள் கல்வெட்டுக்கள் இன்னும் பல விஷயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றது.
கதிர்காம வாக்கில் சித்தன் அருள் 1787 கதிரை மலை வாக்கில் சித்தன் அருள் 1788 முருகன் கடல் நீர் வந்து மூழ்கடிகாமல் இருப்பதற்கு காவலாக இருப்பதும்... செந்தூரில் கடல் அலைகள் முருகனிடம் வேண்டிக் கொண்டு இருப்பதும் நாம் வாக்குகளில் படித்து கடந்து வந்திருக்கின்றோம் அதையெல்லாம் இதோடு ஒப்பிட்டு சிந்திக்கும் பொழுது பல விஷயங்கள் புரிய வருகின்றன
இதனால் அப்பனே மண்ணும் அப்பனே பின் அறிந்தும் கூட பின் மூடிற்று!!! என்பேன் அப்பனே இத்திருத்தலங்கள் கூட அப்பனே!!!
இதனால் அப்பனே மீண்டும் அப்பனே.. அறிந்தும் எவை என்று அறிய மீண்டும் நிச்சயம் தன்னில் கூட பின்... மனித ரூபம் (பிறவி) எடுக்க வேண்டும் பின் இவ்வாறு எடுத்தால் தான் நிச்சயம் நாம் தனே!!! (ஆலயத்தை மீண்டும் புனரமைக்க) என்று நிச்சயம் இந்திரன் கூட!!
இதனால் அப்பனே பின் அதாவது இறைவனிடத்தில்... அதாவது பூலோகத்திற்கு செல்ல வேண்டும்.. நிச்சயம் பின் அறிந்தும் என்றெல்லாம்... நிச்சயம் தன்னில் கூட ஒரு.. இளவரசியின் பின் வயிற்றில் பின் அறிந்தும் பின் பிறந்து அவந்தனுக்கும் கூட எதை என்று அறிய.. அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சரியாகவே அவந்தன் கூட நிச்சயம் சரியாகவே பின் ஒளி பொருந்திய அப்பனே பின் அறிந்தும் கூட பின் வீர வைராக்கியத்துடன் நிச்சயம் பிறந்ததற்கேற்ப நிச்சயம் பின் வெற்றி கொண்டான் அதாவது ஜெயம் கொண்டான் நிச்சயம் தன்னில் கூட!!
ஜெயம் என்றே அப்பனே பெயரும் வைத்தனர் என்பேன் அப்பனே!!!
(தேவேந்திரனின் மனித பிறவி)
(ஜெய இந்திரவர்மன் வியட்நாம் சம்பா இன பேரரசர்.. வியட்நாமை ஆண்ட அரசர்களில் குறிப்பிடத்தக்கவர் இத் தகவல் வியட்நாம் வரலாற்றில் உள்ளது)
அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஆட்சி புரிந்து நலமாகவே பின் அறிந்தும் கூட
பின் அதாவது மீண்டும் சீரமைக்கின்றான் இத்திருத்தலத்தை அப்பனே!!!
அப்பனே ஆனாலும் அறிந்தும் கூட.. பல வழிகளில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரப்பினான் அப்பா அப்பனே பின் ஈசனை பற்றி எல்லாம் அப்பனே.
நிச்சயம் அப்பனே இவ்வாறாகத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் அதாவது அறிந்தும் கூட பின் அதாவது அவ் ஜெயன் அப்பனே
நல்விதமாக """""""திருவாசகத்தையும் கூட பரப்பினான் என்பேன் அப்பனே!!!!
""""" கோளாறு பதிகத்தையும் கூட பரப்பினான் என்பேன் அப்பனே!!!
எதை என்று புரிய அப்பனே இவையெல்லாம்.. அப்பனே நிச்சயம் அப்பனே.... இந்திரனும் சந்திரனும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பிறவிகள் எடுத்து அப்பனே பல அரசர்களாக ஆண்டு வந்து அப்பனே... மீண்டும் மீண்டும் அப்பனே இறைவனிடத்தில் சென்று... மீண்டும் பிறக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!
அவ் தத்துவம் யாருக்கு புரியுமப்பா????
யாருக்கும் புரியாதப்பா!!
அப்பனே இவ்வாறாகவே அரச வழியில் வந்தவர்கள் எல்லாம் இன்னும் அப்பனே.. எதை என்று அறிய அப்பனே பின் அப்பனே இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் அப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இதனால்தான் அப்பனே.. பின் அவ் தேசங்கள் அப்பனே சரியாகவே பின் அறிந்தும் எதை என்று புரிய... சரியான தண்டனைகளே... மேலோகத்தில் அப்பனே இந்திரன் என்னென்ன கொடுக்கின்றானோ.. அவையெல்லாம் அப்பனே கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே
வரும் காலத்தில் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய.. மீண்டும் அப்பனே எதை என்று புரிய... அப்பனே பின் சரியான வழியில் அப்பனே நடப்பதற்கு பல அரசர்களும் கூட நிச்சயம் பிறவிகள் எடுத்து.. நிச்சயம் மக்களை காக்கவே.. அப்பனே பின் மீண்டும் அப்பனே... அவரவர் அமைத்த திருத்தலங்களை கூட அவர்களே.. சரி செய்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!
அப்பனே இதனால் அப்பனே மக்கள் ஏன் எதை என்று புரிய அப்பனே... இதற்கு பின் நிச்சயம் தன்னில் கூட... அதனால்தான் அப்பனே முன்பே பின் சித்தர்கள் யாங்கள் வந்து அப்பனே பின் மனிதர்களை நல்வழிப்படுத்தி... அப்பனே அதனுள்ளே நீங்களும் கூட புண்ணியங்கள் பெருக்கிக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே இன்னும் நலமாக... அப்பனே... உங்களுக்கு வேண்டியதெல்லாம் அப்பனே நிச்சயம் தானாகவே வரும் என்பேன் அப்பனே.
அதனால்தான் கடமையைச் செய்யுங்கள் கடமையைச் செய்யுங்கள் என்பேன். அப்பனே.
கடமையை விட்டு இருந்தாலும் அப்பனே எதை ஏது என்று அறிய அறிய.. யார் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்தலத்தை... உருவாக்கினார்களோ !!! அப்பனே அவர்களே அப்பனே... இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே
தன் வினை தன்னைச் சுடும் என்று... உங்களுக்கு தெரியும் அல்லவா!!!
(அரசர்களால் உருவாக்கப்பட்ட பல பழமையான புராதனமான பவித்திரமான ஆலயங்களை அவர்களே பிறப்பெடுத்து வந்து புனரமைப்பு செய்வார்கள் இதற்கு இடையில் மனிதர்கள் தலையெடுத்து தலையிட்டு சீரமைப்பு செய்கின்றோம் என்ற பெயரில் நன்கொடைகள் இன்னும் பல காரியங்களில் ஈடுபடுவதால் வினை கண்டிப்பாக சுடும்!!
சில ஆலயங்கள் மிகப் பெரிய பழமையான ஆலயங்கள் எல்லாம் அதற்கான புனரமைப்பு பணிகள் தடைகள் ஏற்பட்டு மேலும் தொடர முடியாமல் இருப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றது)
அப்பனே இதனால் அப்பனே இந்திரன் சரியாகவே அப்பனே இந்திரனுக்கு பின் பல பாடங்களையும் கூட யான் சரியாகவே கற்பித்தேன்... நல்விதமாகவே அப்பனே.
அப்பனே இதனால் எதை என்று புரிய இதனால் தான் அப்பனே நிச்சயம் இத் திருத்தலங்கள் எப்படி அமைக்கப்பட்டது என்றால் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே பின் அதாவது கிரகங்கள் தன்னைத்தானே அப்பனே சுற்றுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் ஒரு ஒளியானது அப்பனே அறிந்தும் கூட.. அதாவது பின் எதை என்று அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்படி சிவப்பு நிறத்திலும் அப்பனே மஞ்சள் நிறத்திலும் அப்பனே நிச்சயம் அறிந்து... இன்னும் இன்னும் அப்பனே பின் அறிந்தும்... நீல நிறத்திலும் கூட....... அப்பனே ஒவ்வொரு கிரகத்திற்கு ஏற்ப அப்பனே நிறங்களாக பிரிந்து அப்பனே நிச்சயம் அவை பூமியில் வருமப்பா!!!
அதை சரியான நேரத்தில் அமைத்து அறிந்தும் கூட... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஒளி பொருந்தியவராக... அப்பனே பல அரசர்கள் ஏன்?... அங்கும் இங்கும் திரிந்தார்கள் என்றால் அப்பனே... நிச்சயம் அங்கங்கு.. அப்பனே. நிச்சயம் அவை தன்(ஒளி) படுகின்றது அவர்களுக்கு தெரியுமப்பா!!!
அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே ஆட்சி புரிந்தார்கள் என்பேன் அப்பனே... சில தோல்விகள் வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவர்களுக்கு புரியுமப்பா சரியாகவே!!
அதாவது எங்களை நாடி!! நாடி !!
(குருநாதரை பல அரசர்கள் நாடி நாடி ஒவ்வொன்றையும் கேட்டு அரசாட்சி புரிந்த நிகழ்வுகள் குருநாதருடைய வாக்குகளில்
சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - நெடார். பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!
விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன்.
இதையென்று அறிவதற்கு ""இவ்வுலகத்தை ஆள வேண்டும்,ஆள வேண்டும் பக்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டறிந்தான் சோழன்.
சித்தன் அருள் - 1120 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு - சென்னீஸ்வரர் ஆலயம்!
ராஜேந்திர சோழன் கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) வந்தான்.
இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.
காண்பித்தோம்!! இப்படி செய்தாலே ...நன்று!!! என்று!!!
சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்!
ஆனாலும் மகேந்திர வர்மனும் என்னுடைய பக்தனே என்று யான்!!!...கூறுவேன்
யான் இவ்வளவு பக்தனாக இருந்து.... நிச்சயம் சில மனிதர்களையாவது யான் காக்க வேண்டும் !!
காக்க வேண்டும் நிச்சயமாய் இதையென்று கூற..... ஆனாலும் இறைவன்கள் எதை என்று கூற இன்னும் உண்மையான பக்திகளும் நல்விதமாகவே மனிதர்கள் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால் நிச்சயம் பின் காக்க வேண்டும் நிச்சயம் மனிதர்களை!!!!!
அகத்திய முனிவரே!!!!!
ஏதாவது ஒரு வழியைச் சொல்லும்!!!!!!!
என்று கூட பின் மகேந்திரவர்மனோ என்னிடம்.!!!
சித்தன் அருள் - 1156 - அன்புடன் அகத்தியர் - நீலகண்டேஸ்வரர்/ சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில். இருகூர். ஒண்டிப்புதூர், கோயமுத்தூர்
கரிகாலசோழன்.... அகத்திய முனிவரா!!!!!! பின் அவர்தனை யான் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!
அவந்தன் அன்பு மிகப்பெரியது!!!! எந்தனுக்கு!!!....
அகத்தியன் எதை என்று கூறாமலே நிச்சயம் இவன் வந்த பொழுது பின் நிச்சயமாய் யான் முன் தோன்றினேன் கரிகால சோழன் முன்னே!!!!
பின் அவந்தனும் என்னை பின் அணைத்துக்கொண்டு எதையென்று கூற......
முனிவரே!!!!.... உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனாலும் நீ!!! எப்படி?? எதை என்று கூற எதனை நம்பி?? என்னிடத்தில் வந்தாய்?? என்று கூட.... எதையென்று கூட....
அன்பு என்றாலே எந்தனுக்கு உயிர்!!!!!!
இதையன்றி கூற இதனால் பின் இவ்வுலகத்தில் சாதிக்கக் கூடியது என்னவென்றால் அன்பின் மூலமே!!!! அதனால் நிச்சயம் ...
எதை வேண்டுமென்று சொல்!!!! என்று கூட....
பின் கரிகால் சோழனோ இதையன்றி.... நிச்சயமாய் வரும் காலங்களில் நிச்சயமாய் கலியுகத்தில் முனிவரே!!!! என்னென்ன நடக்கப் போகின்றது என்று கூட யான் அறிவேன்!!! ஈசன் ஞானத்தால்....
ஆனாலும் உந்தனுக்கே அனைத்தும் தெரியும் அதனால்...யான் மனதில் நினைத்ததை நீயே கூறு என்று கூட ...
நிச்சயம் நீ நீர் நிலைகளை ஏற்படுத்துவாய் பல மனிதர்களுக்கும் எதை எவற்றிலிருந்து வருவது என்று கூட நல்முறையாகவே நீ தாராளமாகவே ஏற்படுத்தலாம்!! உன்னை யாரும் அசைக்கவும் முடியாது!!
இன்னும் பல பல அரசர்கள்
குருநாதர் கூறிய முன் வாக்குகளில் அரசர்கள் இன்னும் ஏனைய அரசர்கள் பாண்டியன் சூர்யவர்மன் சத்ரபதி சிவாஜி இன்னும் எவ்வாறு எல்லாம் அகத்தியர் பெருமானை நாடி நாடி.. என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் ? என்பதை கேட்டு அறிந்து திருத்தலங்கள் அமைத்ததும் ஆட்சி புரிந்ததும் மக்களை காத்ததும்.. குருநாதரின் இவ் வாக்குகளை மீண்டும் படித்து அறிந்து கொள்ளலாம்)
அதனால் அப்பனே நிச்சயம் அவர்கள் அங்கு வந்து... அப்பனே மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் இளமையாகவே வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே பல ஆண்டுகள் ஒவ்வொரு அரசனும் அப்பனே வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே!!!
(நாம் படித்த வரலாற்றில் அரசர்களுடைய ஆயுட்காலம் என்பது வேறு... மனிதர்களால் உருவாக்கப்பட்டவை எழுதப்பட்டவை!!.. ஆனால் உண்மையில் நல்லாட்சி புரிந்த பக்திமான் அரசர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழ்ந்து அரசாட்சி செய்திருக்கின்றனர்.. அதில் குறிப்பாக குருநாதர் சூரியவர்மன் சுமார் 500 ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்திருக்கின்றான் என்று குருநாதர் வாக்கில் கூறும் பொழுது தான் நமக்கு புரிய வருகின்றது... இன்னும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் கரிகால் சோழன் சேரர்கள் பாண்டியர்கள்.. விஜயநகர பேரரசுகள் கிருஷ்ணதேவராயர் திருமலை நாயக்கர் சத்ரபதி சிவாஜி மகேந்திர வர்ம பல்லவன் . பாண்டியன் என இந்து தர்மத்தை காப்பாற்றவும் ஆலயங்களை பாதுகாத்தும் குறிப்பாக அந்நிய படையெடுப்புகளால் சேதம் அடைந்த ஆலயங்களை மீட்டு புனரமைப்பு செய்து பக்தியை நிலைநாட்டியும் வந்த வரலாறு நாம் அறிந்ததே!!!
மௌரிய பேரரசுகள் என சிறப்பாக பாரதத்தை ஆண்ட அரசர்களும் நீண்ட காலம் குருநாதர் வழிகாட்டுதல் படி வாழ்ந்து ஆட்சி செய்திருப்பார்கள்.. குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் அரசர்கள் பற்றி கூறும் பொழுது நமக்கு மேலும் தெரியவரும்... இப்படி எல்லாம் அரசர்கள் ஆயுளை நீடித்து வாழ்ந்தார்கள் அவர்கள் எந்த வழியை கடைப்பிடித்தார்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதையும்
வயது ஒரு விஷயமே அல்ல என்பதையும் குருநாதர் இதற்கு முன்பு கூறிய வாக்குகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம் குறிப்பாக கம்போடியா தேச வாக்குகளில் இருந்து பல உண்மைகள் நமக்கு புரியும்)
அப்பனே ஆனாலும் இன்றைய காலகட்டத்தில்.. பின் வயதாகி விட்டது வயதாகிவிட்டது.. என்று அப்பனே ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகின்றான் அப்பனே மனிதன் சோம்பேறியப்பா!!!
அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் சாதிக்கும் திறன் அப்பனே பின் இறைவன்... மனிதனிடத்தில் கொடுத்திருக்கின்றானப்பா!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் இவ்வளவு காலம் அதாவது இன்னும் 10 20 வயது 30 வயது பின் நாற்பது வயது ஆகிவிட்டால் நிச்சயம் அவ்வளவுதான் வாழ்க்கை என்று எண்ணிக் கொள்கின்றான்ப்பா மனிதன்.
ஆனாலும் இறைவன் நீயே இப்படி எண்ணிக்கொண்டு விட்டாய்!!!
அப்படியே ஆகட்டும்!! (உன் எண்ணப் படியே) என்று வரத்தை கொடுத்து விடுகின்றான்ப்பா!!
எவ்வாறப்பா???
அதனால் நீங்கள் என்ன?? நினைக்கின்றீர்களோ... அதேபோலத்தான் அப்பனே இறைவனும் செய்வான் என்பேன் அப்பனே.
இறைவன் கருணை மிகுந்தவன்... பார்த்தாயா???
ஆனாலும் அப்பனே பின் நாற்பது 50 வயதுகளில் நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால்.. அறிந்தும் கூட அப்பனே புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால்!!!!!!!!
அப்பனே நிச்சயம்... எங்கு ?? சென்று பின் அதாவது எங்கு மாற்ற வேண்டும்... என்பதை எல்லாம் அப்பனே இறைவன் தானாகவே மாற்றி விடுவான் என்பேன் அப்பனே!!
(குருநாதர் வாக்குகள் கிடைப்பதற்கு புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் அப்படி புண்ணியம் செய்தவர்களுக்கு குருநாதர் வாக்குகள் தரும் பொழுது தனிநபர் வாக்குகளிலும் பொது வாக்குகளிலும்!!!
இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் நீ இங்கு சென்று வழிபட்டு வா என்று!!! அங்கு சென்று வழிபட்டு வா!! திருவண்ணாமலை செல் !!திருப்பதி செல்!! காசிக்குச் செல்!! என போகச் சொல்லி அங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு குருநாதர் தரும் கருணை)
அப்பனே நிச்சயம் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய கடமையை செய்யுங்கள் தன் கடமையைச் செய்யுங்கள்.. என்று அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே.
கடமையைச் செய்யாமல் அப்பனே பின்.. இதைச் செய்தாலும் அப்பனே வீண்.. என்பேன் அப்பனே!!
ஒன்றும் அப்பனே பயனில்லை...!!!
அப்பனே பிறவி எடுத்ததற்கும் பயனில்லை!!!
அப்பனே இறைவனை வணங்கினாலும் பயனில்லை!!!
என்பேன் அப்பனே!!! எதை என்று கூட மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து வர வேண்டியது தான் என்பேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே ஒரே பிறவியில் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே கர்மத்தை அப்பனே பின் நீக்குபவன் இல்லை அப்பனே!!
(செய்த கர்மங்களை ஒரே பிறவியில் நீக்க முடியாது பல பிறவிகள் எடுத்து வந்து தான் தீர்க்க முடியும்)
நிச்சயம் பல பல பிறவிகள் என்பேன் அப்பனே!!
நிச்சயம் தன்னில் கூட இந்திரனுக்கு கூட பல பிறவிகள் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே... சில ஆன்மாக்களுக்கு அப்பனே பிறவிகள்.. பின் இறைவனே அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட கொடுத்திடுவான்... பின் பிறவிகளை.
இவ் ஆன்மாக்கள் எத்தனை எத்தனை.. இதனால் எத்தனை ஏன் அப்பனே பின் இவ் ஆன்மா நிச்சயம் தன்னில் கூட எதற்காக வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!
அவ்வாறு தெரிந்து கொண்டு வந்தால்தான் அப்பனே மோட்சம் என்பேன் அப்பனே.
அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து பின் அவ் ஆன்மாவும் கஷ்டங்கள் படும்... அதாவது உடம்பைப் பெற்று பின்...அவ் ஆன்மாவை சார்ந்துள்ள அனைவரும் கஷ்டப்பட்டு எவை என்று புரிய இதனால் அப்பனே... புரியாமல் வாழ்ந்திடாதீர்கள்!!! புரியாமல் வாழ்ந்திடாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் வாக்குகள் செப்பி செப்பி அப்பனே இதனால் தான் அப்பனே பின்... எதற்காக இவ் ஆன்மா வந்ததென்று?? தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் சாதிக்கும் என்பேன் அப்பனே அவ் ஆன்மா. பின் உடம்பைப் பெற்று அப்பனே தேர்ந்தெடுத்து எதை என்று புரிய!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக தெரியவில்லை என்றால் அப்பனே... அங்கும் இங்கும் சென்று அதை செய்கிறார்கள் இதை செய்கிறார்கள் என்று அப்பனே திரிந்து கொண்டே இருக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே.
கடமையைச் செய்!!
அப்பனே நிச்சயம் இறைவன் பின் இவ் உடம்பை எங்கெல்லாம் அதாவது அவ் ஆன்மா எதை என்று கூட பற்று எவை என்று அறிய எங்கெல்லாம் சென்றால் நிச்சயம் பின் அதாவது பின் இவ் ஊழ்வினை (கர்மவினை) பின் அழிந்துவிடும் என்பதற்கு... அப்பனே பின் அங்கெல்லாம் தானாகவே இறைவன் அழைத்து விடுவான் அவ் ஆன்மாவை அப்பனே!!
இப்படித்தான் அப்பனே.. அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே மனிதனுக்கு வயது ஒரு தடையே இல்லையப்பா!!!
அப்பனே மனிதனே சொல்கின்றான்... எந்தனுக்கு வயதாகிவிட்டது!! எந்தனுக்கு வயதாகிவிட்டது!! என்று!!!
இறைவன் சொன்னானா?? அப்பா?? அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே
இன்னும் பல மூலிகைகள் உண்டப்பா அவையெல்லாம் உட்கொண்டால் அப்பனே... என்றும் அப்பனே இளைஞனாகவே வாழலாம் என்பேன் அப்பனே.
ஆனாலும் அதனுள்ளே அப்பனே மனிதன்.. அப்பனே அதாவது.. 20 வயதுகளில் கூட.. அவனைப் பற்றி அவன் சிந்திப்பதே.. 30 வயதுகளில் கூட இன்னும் மோக நிலைகள்...கூட!!! 40 வயதுகளில் கூட அப்பனே எதை என்று கூற ஓடி ஓடி அப்பனே இறைவனையே மறந்து விடுகின்றான் என்பேன் அப்பனே.
20 வயதுகளில் அதனால் தான் அப்பனே """இளமையில் கல்!!!
எதை என்று கூட இறைவனை.. இளமையில் தேடு என்றெல்லாம் அப்பனே.. இளமையில் இறைவனை தேடி விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று கூட 40 வயதுகளில் நிச்சயம் அப்பனே இன்னும் இளைஞனாக ஆக்குவானப்பா இறைவன் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அனைத்தையும் முடித்துவிட்டு.. 40 வயதுகளில் எனக்கு.. 40 வயது ஆகிவிட்டது என்று அப்பனே.. இறைவனிடம் புலம்புகின்ற பொழுது பின் நிச்சயம்!!.....
இறைவன்
"""அடப்பாவி..!!!... அறிந்தும் இவ்வாறாக!!... அனைத்தும் யான் கொடுத்திட்டேனே!!!....
இப்படி எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே!!
"""யான் என்றும் இளைஞன்!!! என்று.. இறைவனிடத்தில்.. கூறுங்கள் அப்பனே... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட...
எவ் நோயும் உங்களை அப்பனே அண்டாதப்பா!! சொல்லிவிட்டேன்!!
அப்பனே நல் முறைகளாக இன்னும் விளக்கங்கள் பல உண்டு என்பேன் அப்பனே.. பல அரசர்கள் அப்பனே அறிந்தும் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட அப்பனே பிறந்து எவை என்று கூட பல வழிகளிலும் ஈசனை நோக்கி அப்பனே பின் தவமிருந்து அப்பனே அறிந்தும் கூட... அப்பனே பின் அதாவது அப்பனே பின்... ஈசன் புகழை பரப்பினார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே உயர்ந்து வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே.
அனைத்திற்கும் காரணம் ஒரே தெய்வம்!!!
எதை என்று புரிய அதை பல வழிகளிலும் கூட அப்பனே பின் பின்பற்றி அப்பனே!!
ஆனாலும் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அரசர்கள் அப்பனே பின் இவ்வுலகத்தில் அப்பனே.. எங்கெங்கெல்லாம் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட
பல வழிகளிலும் கூட நன்மைகள் இருக்க எவை என்று அறிய அறிய ஏற்பாடுகள் செய்து அப்பனே... அங்கு ஈசனை வரவழைத்தார்கள் என்பேன் அப்பனே..
இங்கே தங்கிவிடு ஈசா !! என்று!!
பின் அவ்வாறாக தவங்கள் செய்து செய்து.. ஈசன் அங்கே வந்து நிச்சயம் தங்கி இருந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. இதனால்தான் அப்பனே உலகம் அப்பனே அழியாமல் இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் அதாவது இவ் அழிவு நிலையிலிருந்து காக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனை சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம் திருத்த வேண்டும்.
அவ்வாறாக திருந்தவில்லை என்றால்!?!?!?!?!??!அப்பனே...
"""""" ஈசன் உருவாக்கியதை ஈசனே!!! அழித்துவிட்டு சென்று விடுவான்! என்பேன் அப்பனே!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே பின் செய்து கொண்டு தான் இருக்கின்றான்.
அப்பனே இதற்கு மாறாக.. நீங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் பின் இறைவன்... நினைப்பதை பின் சரியாகவே..!!!.....
அதற்கு மாறாக நீங்கள் நடந்து கொண்டால்..!?!?!?!?!?!
. அப்பனே அனைத்தும் பதிவாகி கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அவை ஒரு சமயத்தில் தாக்குகின்ற பொழுது... அப்பனே எழும்பவும் முடியாதப்பா!!
நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் வலது பக்கமும் இடது பக்கமும் தப்பிக்க இயலாதப்பா!!! அப்படியே நின்று விடுவான் என்பேன் அப்பனே!!! கர்மா உன்னை சூழ்ந்து கொள்ளும் என்பேன் அப்பனே!!
பின்பு இறைவனை வணங்கினாலும்.. இறைவனை அப்பனே அதாவது வாயால் தான் அப்பனே பின் அறிந்தும் கூட.. அதாவது துதிக்க வேண்டும்.. ஈசா!! ஈசா!! என்று!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
இதை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.. இன்னும் வாக்குகள் உரைக்கின்ற பொழுது செப்புகின்றேன் அப்பனே. நிச்சயம் அப்பனே.. அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது... அப்பனே அறிந்தும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பின் அதாவது ஒவ்வொரு கோளும் அப்பனே அறிந்தும் அதாவது... தன்னைத்தானே சுற்றுகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் பின் அதாவது நிறங்கள் வரும் என்பேன் அப்பனே.
அவ் நிறங்கள் இன்னும் எங்கெல்லாம் விழுகின்றது என்பதை எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அங்கங்கு சென்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே.. பின் இருதயத்தில் நிச்சயம் அப்பனே ஒரு வட்டம் இருக்குமப்பா!!!
அவ் நிறங்கள் அப்பனே இருதயத்தில் ஈர்க்குமப்பா!!!
அங்கு நிறங்களை ஈர்க்கும் பொழுது அப்பனே நீங்கள் சமமாகவே செயல்பட்டு அப்பனே வெற்றி அடைவீர்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் ஊனம் இல்லாத வாழ்வை வாழ்வீர்கள் என்பேன் அப்பனே!!
ஆசிகளப்பா !! ஆசிகள்!! கோடிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete