​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 April 2025

சித்தன் அருள் - 1831 - அன்புடன் அகத்தியர் - நந்தியெம்பெருமான் வாக்கு!






28/3/2025  அன்று நந்தியெம்பெருமான் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: 10 மலை முருகன் கோயில். கோலாலம்பூர் மலேசியா. 

உலகையெல்லாம் வழிநடத்தும் ஈசா போற்றி!!!!

தேவியே போற்றி !!!

மனதில் நிறுத்தி உரைக்கின்றேன் நந்தியனே!!!

அல்லல் போம் !!

அல்லல் போம் முருகா!

முருகா முருகா!!

அல்லல் போல் வல்வினை வந்து சேரும் முருகா!!!

என் உளம்தன்னில் இருப்பதால் அதனாலே!!!!

அன்பு என்று ஒன்றுதான் மனிதனிடத்தில் இல்லையே!!

அன்பொன்றை புகுத்தி பின் அனைத்தையும் செய்வாய்!!!!

அருளோடு அருளோடு வா வா!! முருகா!!!

இன்பம்தனை மக்களுக்கு கொடுப்பாய் வா வா முருகா!!!

முருகா ! முருகா!முருகா!

மனதில் இருக்கும் தீய அழுக்குகளை குடி கொண்டிருக்கும் அனைத்தையும் விலக்கு மனிதரிடத்தில்...!!!


 மனிதனிடத்தில் விலக்கும்போதெல்லாம்...... மனிதனை பின் புண்ணியமாக புகுத்து முருகா!!!!


முருகா! முருகா! எனையாளும் முருகா! 

அன்போடு ஒன்று சேர் முருகா!!!

பின் இன்பமதை மக்களுக்கு கூட்டிக் கொடுப்பாய் முருகா!!

துன்பமதை ஒழித்து அனைத்தும்.. அருள்வாய் முருகா!!



என்றென்றும் வாழும் முருகா!!

உலகத்தில் என்றென்றும் வாழும் முருகா!!!


பாவம்தனை அடியோடு அழித்திடும் முருகா!!

இன்பமதை புகுத்திடும்!! முருகா!!


முருகா !முருகா ! குமரா! முருகா! முத்துவேல் முருகா! முருகா! 


பத்துமலை முருகா!!

 முருகா!!


குழந்தையாய் நின்ற குமரனே வா! வா ! முருகா!!

எனையாளும் ஈஸ்வரனே வா வா!!

பின் மக்களை காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


எனைதனையும் அணைத்திடும் குழந்தாய் முருகா! எப்பொழுதும் குழந்தையாய் இருக்கும் முருகா!!



பின் ஓடோடி வருகின்றனர் உன்னை பார்க்க கோடி கோடியாய் மக்கள் தன் குறை தீர்க்கு!!! என்கின்றனர். 

நிச்சயம் தன் அக்குறைகள் தீர்க்க 

 வா வா முருகா!!

 அக்குறைகளை நீக்க வா முருகா!!!


அன்போடு அமர்ந்து விட்ட வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட முருகா 

என் உள்ளமதில் அன்பாக அமர்ந்திட்ட முருகா!!!



பல நோய்கள் ஆட்கொண்டிருக்கும் மனிதரிடத்தில்... காப்பாற்ற ஓடோடி வா முருகா!!

அனைத்தும் அகற்றுவாய் முருகா!!


உனை நம்பினோர் உனை நம்பினோர்களுக்கு

பல மாற்றங்களை உருவாக்கு!! முருகா!!

குழந்தை வடிவாய் வா வா !! வா வா!!

முத்துக்குமரனாய் வா வா  வா வா!!

வேலவனாய் வா வா!! வா வா !!

ஈசனாய் வா வா !!         வா வா!!

பார்வதியாய் வா வா!! வா வா !!

கணபதியாய் வா வா!! வா வா !!!

அனைத்து சித்தர்களும் உன்னை அழைத்துக் கொண்டிருக்கும் கலியுக வரதனே வா வா !!

நோய்களை போக்குவாய் வா! வா!



பின் உன் மேல் அன்பு கொண்டு வணங்கினோரை எல்லாம்.. நிச்சயம் தன்னில் கைவிடாதே முருகா!!!


உனை வளர்த்ததற்கு தர்மம் செய்ய யான் காத்திருக்கின்றேன் முருகா!!!


முருகா முருகா!! முத்துவேல் முருகா!!

அடிபணிந்து கேட்கின்றேன் முருகா!!

அடிபணிந்து கேட்கின்றேன் முருகா!!!


வறுமையில் வாடிடும் நிச்சயம் தன்னில் மனிதனை காக்க ஓடோடி வா  வா!!

உலகம் மறைந்து நின்ற போதிலும் நிச்சயம் தன்னில் சிரிக்கின்ற முருகா!!! முருகா!!!

மனிதன் குறைகளை நீக்க வா வா முருகா!!

பாவம் தன்னை நீக்கி பின் புண்ணியத்தை அருளிடும் முருகா!!

புண்ணியத்தை அருளிடும் முருகா!!

பின் புண்ணியத்தை அருள் கூர்ந்து ஈந்து பல மக்களை காப்பாற்ற வா வா!!


முருகா முருகா முத்துவேல் முருகா!!!

அருணாச்சலனே முருகா!!!

அன்பானவனே முருகா!!

நிச்சயம் குழந்தாய் வா வா!!!


அன்போடு அழைக்கின்றேனே வா வா முருகா!!!

அடிபணிந்து தொழுதேனே வா வா!!


என் செல்ல குழந்தையே!!!

 வா வா !!  வா வா!!

செல்ல குழந்தை உனை வளர்த்ததற்கு பின் வா வா !!


பின் மக்கள் இன்னும் தீய புத்திகளில் நின்று நின்று.. இன்னும் அவர்கள் மடிந்து மடிந்து போகையில் அவர்களை... காப்பாற்ற வா!! வா!! முருகா!!

பின் முருகா முருகா!!! பாசத்தோடு கேட்கின்றேனே முருகா !!!!


நல்லோரும் தீயோரும் உலகத்தில் பிறந்து!!!......


 

நிச்சயம் தன்னில் 

தீயோர்க்கும் அருளிட 

வா வா முருகா!!

தீயோர் மனதில் புகுந்து அவர்களையும் கூட புண்ணியம் செய்ய வைத்து தர்மம் ஓங்கிட இவ்வுலகத்தில்.. வா வா !!!


தர்மம் தலை குனிந்து போகின்றதே!!! முருகா!!

அதை நிலை நாட்ட ஓடோடி வா வா வா வா !!!

அதை நிலை நாட்ட ஓடோடி வா வா முருகா !!


அன்போடு ஆதரவோடு பண்போடு கேட்கின்றேன் கால்களிலும் அடிபணிந்து கேட்கின்றேன் மக்களை காப்பாற்ற ஓடோடி வா முருகா!!


பின் மக்களைக் காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


மனிதனுக்கு கலியுகத்தில் நோய்கள் எல்லாம் அண்டிக் கொண்டிருக்கையில் அதை நீக்க ஓடோடி வா முருகா!!!


அன்போடு அன்புதனை சேர்த்திட்டு பின்.. அனைத்தையும் ஆட்டிடும் விதியினை மாற்றிடும் கலியுகத்தில் தகுதிகள் பெற்ற பின் குமரனே வா வா!!

வா வா அருளோடு வா வா!!

பின் மயில் மீது வா வா

வா வா!!

பின் சேவலோடு வா வா வா வா!!

செல்லக்குழந்தையே 

யானையோடு வா வா !!

செல்லக்குழந்தையே யானையோடு வா வா!!!

முத்து முக மலர்ச்சியோடு நிச்சயம் தன்னில்  பின் அறிந்தும் காளையோடு வா வா !!

அறிந்து தன் தந்தையோடு காளையோடு வா வா முருகா!!


வா வா முருகா குமரனே!! பாலகனே நிச்சயம் தன் பின் விதியினை மாற்ற ஓடோடி வா வா!!! 


பின் பல கோடி நிச்சயம் தன்னில் மலைகள் மீது பின் அறிந்தும் தன்னில் கூட... மூலிகைகளைக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட பல மக்கள் பின் உன் பக்தர்கள் ஆயினும் நோயோடு உனை காண ஓடோடி வருகின்றார்கள் முருகா! 

ஓடோடி நோய்களோடு வருகின்றார்கள் முருகா! 

அதை நீக்க நிச்சயம் தன்னில்  உனை நாடி 

உனை நாடி....!!


என் முருகன் நீக்குவான் என்று உன் மேலே நம்பிக்கை வைத்து தானே!!!


உன் மேலே நம்பிக்கை வைத்து தானே!!!....


பின் ஓடோடி வருகின்றார்கள் மனிதர்கள் கூட!!.... நிச்சயம் தன்னில் அவர்களுக்கும் தர்மத்தை பற்றி... மனதை மாற்றி தர்மத்தை பற்றி போதித்து... நிச்சயம் தன்னில்... அனைத்து குறைகளையும் மாற்ற ஓடோடி வா வா முருகா!!


ஓடோடி வா முருகா 

பார்வதி தேவியின் குழந்தை வடிவாய் வா வா 

பின் தந்தையின் பின் அருணாச்சலனை நினைத்து பின் அறிந்தும் கூட உன்னை வளர்த்ததற்கு பின் பல மக்களைக் கூட அறிந்தும் கூட காப்பாற்ற ஓடோடி ஓடோடி வா வா!!!


பின் இத்தருணத்தில் தான்... இக்கலியுகத்தில் பின் ஆண் பெண் சண்டைகள் திருமணத்தில் கூட பின்... போதனைகள் கூட தோல்விகள் கூட

நிச்சயம் தன்னில் அவ் தர்மத்தை நிலை நாட்ட ஓடோடி வா வா!!

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இப்படி என்று கூட... அவர்களுக்கும் பின் நோய்கள் வருகையில் 

நிச்சயம் பிள்ளைகளை காப்பாற்ற காப்பாற்ற ஓடோடி வா முருகா 

ஓடோடி வா முருகா!!!


ஆடலோடும் பாடலோடும் 

உனை தனை பின் அறிந்தும் கூட எவை என்று புரிந்து கொள்ளும் நிலைமைக்கு.. எண்ணி உன்னை வளர்த்தேனே வளர்த்தேனே.. அன்போடு!!

 உனை என் பின் முதுகில் சுமந்தேனே சுமந்தேனே முருகா! 

அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று 

அனைத்து மலைகளுக்கும் அறிந்தும் கூட தலையில் பின் ஏற்றிக்கொண்டேனே முருகா!!!

அதற்காக ஓடோடி வா வா முருகா!!

மக்கள் மேலே கோபம் கொள்ளாதே முருகா!!!

மக்கள் மீது கோபம் கொள்ளாதே முருகா!!!



மக்கள் தன் சிறு குழந்தையாக ஒன்றும் தெரியாதவராக இருந்து கொண்டு சில தரித்திரங்கள் செய்கின்றான்....அவன் தன் பின் தெரியாமல் செய்தாலும் காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!


அனைத்து பாடங்களையும் உந்தனுக்கு கற்பித்தேனே முருகா !!!

அனைத்து பாடங்களையும் உந்தனுக்கு கற்பித்தேனே முருகா !!!



நிச்சயம் தன்னில் எனை காக்க ஓடோடி வா முருகா!!!!.... இங்கு தன்னில் எனை காக்க ஓடோடி வா முருகா!!!


பல மக்களின் குறைகள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் ஆக்கி யானே... ஏற்றுக் கொண்டேனே முருகா!!

யானே ஏற்றுக் கொண்டேனே முருகா!!

அதைப் பிடுங்க வா வா முருகா!!

எனது குறைகளும் தீர்ப்பாய் முருகா!!

எனை நம்பியோர் கூட நற்செயல்களால் நினைத்து நிச்சயம் தன்னில் அனைத்து கர்மாக்களையும் யான் எடுத்தேனே... நிச்சயம் உனை வளர்த்ததற்காக வா வா!!!


இப்படி அழைத்தால் தான் நீ வருவாய் என தெரிந்தும் கூட!!

 செல்லக் குழந்தையே வா வா!!

செல்லக் குழந்தையே வா வா!!

அறிந்தும் கூட மக்களை காப்பாற்ற வா வா 

ஓடோடி வா வா!! முருகா !!!

 

மக்கள் பொய்களை சொல்லியும் கூட பொறாமை குணத்தோடு இருந்தாலும் கூட 

 தர்மம் தலைகீழாக இருந்தாலும் கூட 

அதைக் காக்க ஓடோடி வா முருகா முருகா 


அனைத்து திறமைகளையும் வைத்துக்கொண்டு அமைதியாக நிற்கின்றாயே முருகா !!!

அனைத்து திறமைகளும் வைத்துக் கொண்டு அமைதியாகவே நிற்கின்றாயே முருகா !!!



நிச்சயம் தன்னில்  மனிதனை யான் திருத்துவேன். சித்தர்களும் திருத்துவார்கள்.. 


வரம் அருளிட  வா வா முருகா!!

வரம் அருளிட வா வா முருகா!!

முத்துக்குமரனே செல்ல பிள்ளையே பத்து மலையோனே!!

அறுபடையோனே!!

ஏழுமலையோனே!!

பின் எட்டு மலையோனே!!

பன் (பல) கோடி மலையோனே வா வா! 

பன் கோடி மலையோனே வா வா! 


அறிந்தும் ஒன்றும் அறிவில்லாததை செய்கின்றானே மனிதன்!!!.... பின் அதைக் காக்க ஓடோடி வா முருகா!!!



என்னிடத்தில்!!

 நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பல வெற்றிகளை மனிதனுக்கு கொடுக்க தயாராக நின்ற போதிலும் நிச்சயம் தன்னில் நீ கூட எனை தடுத்தாயே முருகா!!


பின் அவ்வாறு நினைக்காமல் இருந்தாலும் கலியுகத்தில் தர்மம்தனை நிச்சயம் தன்னில் சித்தர்களே மாற்றுவார்களே முருகா 

நீயும் கூட வா வா வே முருகா!!!


நீயும் கூட வா வா வே முருகா!!


செல்லக் குழந்தையே குமாரனே வேலவனே முத்துக்குமரனே அடிபணிந்து தொழுதேனே!!!

அடிபணிந்து தொழுதேனே 


வா வா சிங்காரவேலா!!

அழகான வேலா!, வேலா!!

பின் வேலோடு வந்த அனைத்து குறைகளையும் தீர்ப்பாய் தீர்ப்பாய்!!

மனிதரிடத்தில் இருக்கும் அனைத்து தரித்திரங்களையும் போக்குவாய் போக்குவாய்!!!


போக்கிய பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட... அனைத்து திறமைகளையும் கொடுத்து பூலோகத்தை காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!

பூலோகத்தை காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!


அனைத்து சித்தர்களும் உனை நம்பி அறிந்தும் 

கூட எதை என்று முருகா மலைமீது அமர்ந்த குமரா!! மலை மீது அமர்ந்த குமரா!!

இப்பொழுதும் கூட மனமில்லையே முருகா 

செல்லக் குழந்தையாய் உன்னை செல்லம் ஊட்டி பின் அன்பாக அணைத்துக் கொண்டு நிச்சயம் தன்னில் உன்னை ஊட்டினேனே முருகா !!


மறந்து விட்டாயா?? முருகா??

 மறந்து விட்டாயே!!! முருகா!!!!

ஓடோடி வா முருகா!!


பின் எத்தனை மனிதன் மீது கோபங்கள் இருந்தாலும் நிச்சயம் தன்னில்  அதை மாற்றிட ஓடோடி வா முருகா!!


வந்து கொண்டே இருக்கின்றது கடல் தன்னும் கூட!!... கடல் நீரும் நிச்சயம் தன்னில் நிலத்திலும் ஓடும்போது... அவை தனை தடுத்து நிறுத்திட வா வா முருகா முருகா 

அவை தனை தடுத்திட வா வா முருகா!!


மழைகளாலும் நிச்சயம் தன்னில் அழிவுகள் ஏற்படுகின்ற பொழுது 

அதை தடுத்திட வா வா முருகா!! அதை தடுத்திட வா வா முருகா!!


இத் தேசத்தில் மக்களிடையே மக்களிடையே சண்டைகள் வருகின்றதே அதை காத்திட ஓடோடி வா முருகா 

அதைக் காத்திட வா வா முருகா!!

நிச்சயம் தன்னில் கூட 

ஆண் பெண் கூட திருமணங்கள் முடிந்தாலும் அவை தன் கூட தோல்வியில் முடிந்திட... கலியுகத்தில் அதை காக்க ஓடோடி வா முருகா!!!

அதைக் காக்க ஓடோடி வா முருகா. முருகா!!


கலியுகத்தில் இன்னும் நோய்கள் பரவுகின்ற நேரத்தில் உண்மையான அறிந்தும் கூட பின் ஔஷதங்கள் இல்லையே முருகா!!

அதை தன் பாவத்தாலே வந்தடைந்து அதற்குள்ளே... பாவத்தை மனிதன் இடத்தில் மனிதனிடத்தில் இருக்கும் பாவத்தை போக்கிட வா வா முருகா!!

முத்துக்குமரனே!

 செல்ல குழந்தையே!

ஓடோடி வா முருகா!!


ஓடோடி வா முருகா மக்களுக்கு இன்னும் இதைப்பற்றி பக்தியின் தன்மையை பற்றி புரியவில்லையே முருகா!!!


அதை தான் பின் அவந்தனக்கு தெரியவில்லையே முருகா!!


நிச்சயம் தன்னில் உன் புண்ணியத்தை செலவாக்கி பின் அவர்களுக்கு நல் புத்தியும் கொடுத்திடு முருகா!!! நல் புத்தியும் கொடுத்திடு முருகா!!


ஈரேழு உலகத்தையும் காக்கும் முருகா!!

ஈரேழு உலகத்தை காக்கும் முருகா!!

இன்னும் தன்னில் கிரகங்களின் பின் தவறான பெயர்ச்சிகளால்

இன்னும் கூட கிரகங்கள் பின் அறிந்தும் கூட பின் அதை அதை (நோக்கி செல்லாமல் (தன் சரியான பாதையில் மைய புள்ளியில் செல்லாமல்) நிச்சயம் விலகி விலகி செல்கையில்

அதனை பின் சீர்படுத்த வா வா... அதை தன் சீர்படுத்த வா வா முருகா!!!


நிச்சயம் தன்னில் பின் மனிதனோடு மனிதனாக இக்கலி யுகத்தில் விதியின் பாதை மனிதன் நோய்களோடு தான் வாழ வேண்டும் என்று பிரம்மாவின் தீர்ப்பை மாற்றி விட ஓடோடி வா வே முருகா!!!

ஓடோடி வா வே!! முருகா!!


சித்தர்கள் அனைவரும் உந்தனுக்கு துணையாக நிற்கின்றோமே!

சீடர்களாக நிற்கின்றோமே!

வேலைக்காரர்களாக நிற்கின்றோமே முருகா!


முருகா முருகா கலியுகத்தில் பக்தி நிலைகள் பெருக.. மனிதரிடத்தில் இன்னும் அறிவுகள் கொடுத்திட வா வா முருகா!!!

இன்னும் அறிவுகள் கொடுத்திட வா வா முருகா!!!


முத்துக்குமரனே சிறப்பானவனே அன்பானவனே 

என் மார்பில் வளர்ந்தவனே வா வா 

உன்னை அடிபணிந்து கேட்கின்றேனே வா வா 

அடிபணிந்து கேட்கின்றேனே வா வா !!!


பிரபஞ்ச சக்தி இன்னும் கூட... மனிதனுக்கு பின் அவ் சக்திகளை கொடுத்து விட பின் அருளிட வா வா!!


இல்லை என்போர் இன்னும் அழிவை!!! 

பின்  அவ் அழியும் நேரத்தில் பின் கல் என்று சொல்லிவிடுவார்கள் முருகா!!! உன்னை கல் என்று சொல்லிவிடுவார்கள் முருகா!! மனிதன்!!


அதற்குள்ளே ஓடோடி வா!!! முருகா... கலியுகத்தில் மனிதனைக் காக்க ஓடோடி வா முருகா!!!

கலியுகத்தில் மனிதனைக் காக்க 

ஓடோடி வா முருகா!!


செல்லக் குழந்தையே உன்னை தனை ஊட்டி ஊட்டி பாசத்தோடு அன்போடு பின் அணைத்தேனே!!! அணைத்துக் கொண்டேனே!!

அதற்காகவாவது ஓடோடி வா முருகா!!!

அதற்காகவாவது ஓடோடி வா!!!



முருகா !! எங்கும் நிறைந்த முருகா!!!

எதிலும் நிறைந்த முருகா!!!

அனைத்திலும் நிறைந்த முருகா!!!

அன்போடு அழைக்கின்றேன் வா வா!!


மனிதன் எக்குறைகள் செய்திருந்தாலும்..அவனை மன்னித்து அருளிட வா வா முருகா முருகா!!!


இன்னும் தன்னில் கூட மனிதன் தவறுகள் செய்தாலும் யாங்களே அதிகளவு தண்டிப்போம்!!!

யாங்களே அதிகளவு தண்டிப்போம்!!


ஆனாலும் நிச்சயம் தன்னில் இன்னும் கூட பாவங்களை நீக்கிட ஓடோடி வா முருகா முருகா!!!


நிச்சயம் தன்னில் கலியுக வரதனே 

நிச்சயம் அனைத்து குறைகளும் நீக்கும் வல்லமை படைத்தவனே 

விதியினை மாற்றுபவனே 

மனிதனிடத்தில் குறைகளை மாற்றுபவனே 


அறிந்தும் பின் மீண்டும் பிரம்மா எழுதி இருக்கும் (தலையெழுத்து விதி) எழுத்துக்களை மாற்றிட அமைத்திட முடியும் என் குழந்தாய்!!! பிரம்மாவின் பின் அறிந்தும் கூட பின் எழுதிய எழுத்துக்கள் மாற்றிடும் முருகா!!


மாற்றிட நிச்சயம் தன்னில் வா வா!!!


மனிதனுக்கு புத்திகள் கொடுத்து அறிந்தும் கூட பிரம்மா பின் எழுதி வைத்திருக்கும் விதியை கூட மாற்றிட வா வா முருகா!!!

மாற்றிட வா வா முருகா!!


கலியுகத்தில் மனிதனால் ஒழுங்காக வாழ முடியாது முருகா!!

அதனை தன் பின் மாற்றிடு முருகா!!

அதனை தன் மாற்றிடு முருகா!!!


பிரம்மாவின் தீர்ப்புப்படி கலியுகத்தில் நிச்சயம் அநியாயம் பெருக வேண்டும் என்று எழுதி வைத்திருக்கின்றானே 

அதை மாற்ற ஓடோடி வா முருகா!!!


இன்னும் தன்னில் பின் குழந்தைகள் பிறப்பாயினும் நோய் நொடிகளோடு பிறப்பார்களே.. அதை மாற்ற ஓடோடி வா முருகா!! பின் அதை மாற்றிட ஓடோடி வா முருகா!!!


ஞானிகளும் ரிஷிகளும் குருமார்களும் உனை பணிந்து அவர்களைக் காக்க ஓடோடி வா முருகா!!!

உன் பக்தர்களை காக்க ஓடோடி வா!!!


மனிதனோடு மனிதனாக இருந்து கேட்கின்றேனே முருகா 

மனிதனோடு மனிதனாக இருந்து கேட்கின்றேனே முருகா !!!!


இப்பொழுதும் உந்தனுக்கு புரியவில்லையா???


எனைக் காக்க ஓடோடி வா முருகா!!!


யானும் மனிதனாக நின்று கேட்கின்றேனே !!!

எனை காக்க வா வா முருகா!!

எனை காக்க வா வா முருகா!!!


நிச்சயம் தன்னில் மனிதன் எவ்வாறு அழுக்குகள் மனதில் வைத்துக் கொண்டு உன்னை வணங்கினாலும் உன்னை நோக்கி வந்ததாலும்...அவ் அழுக்கினை நீக்கிட பின் அருள் கூர்ந்து பின் அருள் ஈந்து பின் பல குறைகளை தீர்த்திட வா வா முருகா !!!


பல குறைகளை தீர்த்திட வா வா முருகா!!

அழியும் நேரத்தில் வா வா முருகா !!!

காப்பாற்றிட வா வா முருகா 


உள்ளங்கையில் உனை வளர்த்தேனே வா வா முருகா !!!

முத்துக்குமரனே 

மயில் மீது அன்பாகவே வா வா !!

வள்ளி தெய்வானையோடு 

 வா வா வா வா!!

புலியின் மீது வா வா வா வா!!!

சிங்கத்தின் மீதும் வா வா வா வா!!!

ஆனை தன்னின் மீதும் ஏறி அமர்ந்திட்டு வா வா !!

மக்களின் குறைதீர்க்கும் முருகா !!

மக்களின் குறை தீர்த்தபின் உலகத்தை காப்பாற்ற வா வா!!


இன்னும் ஏனைய நோய்கள் பின் தாக்குகின்ற நேரத்தில் பின் மடிவானே!!.. மனிதன்!!

அந் நோயிலிருந்து காத்திட வா வா முருகா!!

அந்நோயிடம் காத்திட வா வா முருகா!!!


தீராத குறைகளோடு கலியுகத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே!!!!.....


என் முருகன் காப்பாற்றுவான்!!

காப்பாற்றுவான் என்று 

அவர்களுக்காவது இறங்கி.. வா வா!!!

அவர்களோடு ஒன்றாக இணைந்து.. அவர்களை மாற்றி மற்றவர்களை மாற்றிட வா வா!!


அவர்களை மாற்றி அவர்கள் அதனால் தான் பின் மற்றவர்களையும் கூட மாற்ற பின் ஓடோடி வா முருகா!!!


முருகா முருகா அன்பான முருகா... இவ்வளவு நேரம்  உனை பின் அடிபணிந்தே பத்துமலை குமரனே வருக வருக!!!



வருக வருக அருள் கூர்ந்து மனிதனுக்கு இன்னும் தன்னில் அப்படியே நிற்காதே முருகா!!!

இன்னும் தன்னும் அப்படியே நிற்காதே முருகா!!!


அவர்கள் எப்படி பின் அருள்கள் கேட்டாலும் கொடுத்திடு முருகா!!

அதனை தவறான வழியில் பின் பயன் படுத்துவோர்களை பின் யாங்கள் இருக்கின்றோமே 

தண்டனை கொடுக்க!!

யாங்கள் இருக்கின்றோமே தண்டனை கொடுக்க!!


அப்பனே முருகனே!! அம்மையே முருகா !!

நிச்சயம் தன்னில் ஓடோடி வா வா 

நிச்சயம் தன்னில் நல்லோர்கள் பின் அறிந்தும் கூட பின் ஏதும் இல்லாமல்...


அவர்களை காத்திட வா வா முருகா..!!!

. இத் தேசத்தில் மக்கள் அனைவரும்.. ஒன்றும் இல்லாதவர்கள் தான் 

அவர்களுக்கும் புத்தியை கொடுத்து பின் அறிவையும் கொடுத்து பின்.. அனைத்து ஜீவராசிகளும் வாழ்ந்திட... பின் காக்க ஓடோடி வா முருகா!!

காக்க ஓடோடி வா!! முருகா!!


காக்கை தன்னில் வா வா முருகா 

நிச்சயம் தன்னில் குதிரை மேலே அமர்ந்திட்ட முருகா!! 

நிச்சயம் தன்னில் 

எவ்? எவ்? வாகனத்தில் செல்ல நீ நினைத்தாயோ!!!.... அவ் அவ் வாகனத்தில் உனை யான் அழைத்து சென்றேனே முருகா!!!


அதே போல் நீயும் கூட... யான் பின் என் வேண்டுதலை ஏற்று... மக்களின் குறைகளை காப்பாற்ற வா வா !!

மக்களின் குறைகளை பின் காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


பின் வள்ளி தெய்வானையோடு அறிந்தும் கூட இன்னும் கூட பல மடங்கு சக்திகள் பெற்று வா வா முருகா !!!


வடிவேலனே வா வா வா வா!!!


குமாரனே வா வா வா வா!!


சிங்கத்தவனே வா வா வா வா!!!

ஆனையோனே வா வா வா வா!!!


செல்லக்குழந்தாய் வா வா வா வா!!!


பின் அன்போடு அன்போடு இப்பொழுது உனை அணைத்துக் கொள்கின்றேனே நிச்சயம் தன்னில் என் முருகன் பின் என் உள்ளத்தில் இருந்து பின் எழுகின்ற நேரத்தில் அனைத்து குறைகளும் போகுமே!!

மனிதனின் அனைத்து குறைகளும் போகுமே!!



ஆடடா!!!.... பாடடா!!! குழந்தாய் குழந்தாய்!!!


ஆடிக்கொண்டே பல நோய்களை தீர்ப்பாய்!!


பாடிக்கொண்டே பல பல தரித்தரங்களை நீக்குவாய்!!


குழந்தாய்!! குழந்தாய்!! முத்துக்குமரனே குழந்தாய்!!! வா வா வா வா முருகா!!


பழனி தன்னில் வாழும் முருகா!!

செந்தூரில் வாழும் முருகா!!

திருத்தணிகை தன்னில் வாழும் முருகா!!

விராலி மலையில் வாழும் முருகா!!!


அனைத்து மலைகளில் இருந்தும் இறங்கி வா!!

அனைத்து மலைகளிலிருந்தும் இறங்கி வா வா!!


ஓடோடி வருகின்றார்களே மக்கள் முருகா!!!


அவர்களுக்கு 

ஞானத்தை கொடுத்து நிச்சயம் தன்னில் பாவத்தை ஒழித்திட வா வா!!

மனிதன் பாவத்தை ஒழித்திட வா வா முருகா!!!


கலியுகத்தில் மனிதன் பிறந்தாலே... பாவம்.. அதிகமாகத்தான் பின் ஏற்று.. பிறக்கின்றானே முருகா!!!!


அதை உன்னாலே நீக்க முடியும் முருகா!!

அதை உன்னாலே நீக்க முடியுமே முருகா!!

ஓடோடி வா முருகா!!

பாவத்தை நீக்கு முருகா!!!

ஓடோடி வா!!! பாவத்தை நீக்கிட வா வா!!!

அன்போடும் பண்போடும் அணைத்தேனே!!

அன்போடும் பண்போடும் அணைத்தேனே!!

என் குழந்தாய் அன்போடு அழைக்கின்றேனே.. வா வா வா வா குழந்தாய் வா வா!!!

அருளாசிகள்!! அருளாசிகள்!!

உலகின் மிகப் பெரிய மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோவில்

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவிலாக உள்ளது. இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.இந்தக் குகைக்கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் உருவாகியுள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

. 42 ஜலான் 2, பத்து கேவ்ரேபாயிண்ட், 68100 பத்து மலை குகைகள், சிலாங்கூர்,  மலேசியா

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ஓம் நந்தி தேவர் துணை

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக நன்றி ஐயா

    ReplyDelete
  5. OM SARAVANA BAHVAYA NAMAHA. OM SIR AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete