​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 1 April 2025

சித்தன் அருள் - 1824 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி!



21/11/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்.திருமலை திருப்பதி.

ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அப்பனே அருள்கள் பின் போகப்போக பலமாக கூடும் என்பேன் அப்பனே 

அனைத்தும் வெற்றி அடையும் என்பேன் அப்பனே 

குறைகள் இல்லை.. அப்பனே இன்னும் பின் வேங்கடவனின் தரிசனங்கள் பல பல!!!

அப்பனே இதனால் குற்றங்கள் இல்லை அப்பா 
அப்பனே மென்மேலும் உயர்வுகள் அப்பனே 

அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே எதை என்று தெரியாமலே அப்பனே அழிவுகள் தான் மிச்சம் 

ஆனாலும் அப்பனே நிச்சயம் இறைவனைப் பிடித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் சில சோதனைகள் செய்து செய்து அனைத்தும் கொடுப்பான் என்பதை எல்லாம் அப்பனே... யான் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இறைவனை அப்பனே நிச்சயம் அதாவது இறைவனை வணங்கினால் கஷ்டம் தான் என்று கலியுகத்தில் சொல்வார்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே அவையும் மீறி அப்பனே இறைவனை சரணடைந்து விட்டால் அப்பனே... வெற்றிகள் நிச்சயம் என்பேன் அப்பனே 

கலியுகத்தில் அப்பனே அனைத்தும் கூட அப்பனே பின் அதாவது புண்ணியங்கள் ஆனாலும் மெதுவாகத்தான்... பாவங்கள் ஆனாலும் மெதுவாகத்தான்...

ஏனைய வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பன பாவங்களை விட அப்பனே புண்ணியங்கள் மெதுவாகத்தான் செயல்பட ஆரம்பிக்கும் என்பதை கூட நிச்சயமாக!!

இதனால் அப்பனே நிச்சயம்
பின் அதாவது அப்பனே பின் நாராயணன் கொடுப்பதற்கு பின் தயாராகவே இருக்கின்றான். 

ஆனால் மனிதனை அதாவது மனிதன் பெற்றுக் கொள்ள அப்பனே எவ்வாறு தகுதி உடையவனாக....... தகுதி உடையவனுக்கே அப்பனே நாராயணன் அனைத்தும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அப்பனே 

இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!
அதாவது இப்பிறவியிலே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே... அழகாகவே வாழ்ந்து வருகின்றான் அப்பனே. 

அதாவது அப்பனே அறிந்தும் எதை என்று கூட அதாவது அப்பனே உண்பதற்கு கூட வழிகள் இல்லை அப்பனே...

அறிந்தும் கூட ஏழை குடிலில் பிறந்து அப்பனே வளர்ந்து அப்பறம் தாய் தந்தையை கூட இழந்து...!!

 அப்பனே இதனால் அப்பனே அதை தன் அதாவது அக்குழந்தையைக் கூட எவரும் கவனிக்கவில்லை.. கவனிக்கவில்லை அப்பனே 

இதேபோல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே எவரும் கூட அதாவது... இவந்தன் அனாதை!! நிச்சயம்.. இவந்தன் தாய் தந்தையர் பக்தி காட்டினார்கள் நாராயணன் மீது!!!

ஆனாலும் நிச்சயம் நாராயணன் என்ன செய்தான்????????... ஒன்றும் செய்யவில்லை!!! நிச்சயம் பின் அதாவது குழந்தையை கூட யாரும் பின் அதாவது பாலூட்டவும் வரவில்லை!!! சொந்த பந்தங்கள் கூட பின் நிச்சயம் வரவில்லை இவனை பாதுகாக்க!!!... இதுதான் பெருமானுடைய லீலைகள்.. என்று!!

நிச்சயம் பின் அதாவது இப்படி எல்லாம் அறிந்தும் பின் ஆனாலும் நாராயணனோ அங்கு ஓடோடி வந்து விட்டான்!!

நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறு அக்குழந்தையை யார் தூக்குகின்றார்கள்.. என்று பார்த்தான் நாராயணன்... நிச்சயம் அக்குழந்தையை தூக்குகின்றவர்களுக்கு நிச்சயம் பின் பரிசாக கூட லட்சங்களை கூட அதாவது
கோடிகளை கூட கொடுத்து விடலாம் என்று..

ஆனாலும் குழந்தை அழுது கொண்டே இருந்தது... அழுது கொண்டே நிச்சயம் பின்... அதனால் பின் அம்மா
அம்மா என்றெல்லாம் அழுது கொண்டே இருந்தது. 

ஆனாலும் நிச்சயம் பின் ஒருவள் (ஒரு பெண்) ஓடோடி வந்தாள்!!! நிச்சயம்! அவை என்று அறிய நிச்சயம்.... மற்றவர்களோ அவ் பெண்மணியை பார்த்து இப்பொழுது தான் உந்தனக்கு திருமணம் ஆகி இருக்கின்றது... நிச்சயம் நீ பின் இக் குழந்தையை தொட்டால்... நிச்சயம் உந்தனக்கும் குழந்தை பிறக்காது. என்று!!

பின் ஆனாலும் நிச்சயம் அவளும் திரும்பி ஓடிவிட்டாள். 

நிச்சயம் இப்பொழுது எல்லாம் இப்படித்தான் பின் செப்பி கொண்டு இருக்கின்றார்கள்... நிச்சயம் அவை இவை என்றெல்லாம்... பொய்கள் கூறி நிச்சயம் மனதை மாற்றி மக்களை நிச்சயம் யான் பெரியவன் என்றெல்லாம்... நிச்சயம் பின் கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும் கூட... அறியாமல் கூட நிச்சயம்... இருந்து இருந்து தெளிவுகள் பெறாமல் வாழ்ந்து வருகின்றார்கள்..

இதனால் நிச்சயம் பின் அக் குழந்தை நிச்சயம் பின்.. தவழ்ந்து தவழ்ந்து பின் சென்று அலைந்தது... பின் அம்மா அம்மா என்றெல்லாம் அழைத்து அழைத்து.... யாரும் பின் உதவிட முன் வரவில்லை..

நிச்சயம் ஆனாலும் பின் ஊரார் அனைவரும் ஒன்று கூடி... நிச்சயம் பின் வாருங்கள் என்று... அதாவது அப்பொழுதெல்லாம் பறை சாற்றுவார் நிச்சயம் அறிந்தும்!!! 

(பறை முரசு கொட்டி ஊர் ஊராகச் சென்று செய்தி அறிவித்தல்)

பின் ஊரார் அனைவரும் வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம் நிச்சயம்... அதேபோலவே நிச்சயம் பின் அறிந்தும் அனைவரையும் கூட வரவழைத்து..இக் குழந்தையை யார் வளர்க்கின்றார்கள்??? அதாவது உங்களில் யார் இக் குழந்தையை வளர்க்க போகின்றீர்கள்??? என்று கேட்க!!

நிச்சயம் ஒருவன் யான் ஏன் குழந்தையை வளர்க்க வேண்டும்????...

அக் குழந்தையின் தாய் தந்தையர் பெருமான் மீது பக்தி கொண்டவர்கள்... ஆனால் அதாவது வரட்டும் நாராயணனே... நிச்சயம் நாராயணனை குழந்தையை காக்கட்டும் பார்த்துக் கொள்ளட்டும் என்றெல்லாம்!!!

நிச்சயம் இன்னொருவன் சொன்னான்..

நாராயணன் எங்கு வரப்போகின்றான்??? அவந்தனுக்கு வேறு வேலைகள் இல்லையா??? என்று நிச்சயம் இன்னொருவன் சொன்னான்...

அப்பா இது கலியுகத்தில் நடந்ததை தான் யான் சொல்கின்றேன்.. அப்பப்பா அறிந்தும் கூட...

இன்னொருவன் சொன்னான்... நிச்சயம் பின் இறைவனே இல்லை... பின்பு ஏன் அறிந்தும் பின் எவை என்று அறிய அதனால்.. தான் நிச்சயம். இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இக்குழந்தையை காத்திருப்பான்.. காப்பாற்றிருப்பான் என்று.

அதாவது இறைவனை வணங்குபவன் முட்டாள் இன்னொருவன் சொன்னான்...

இறைவனை வணங்குபவன் பைத்தியக்காரன் அதனால் தான்... குழந்தையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்று. 

ஆனாலும் நாராயணன் நிச்சயம் பின் பார்த்துக் கொண்டே இருந்தான்... பின் பார்ப்போம் என்று!!

அப்பனே இது போலத்தான் அப்பனே நிச்சயம் இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!! நலமாகவே அப்பனே!!

நீங்கள் அறிந்தும் கூட அப்பனே இறைவன் உங்களுக்கு பின் அழகாகவே கொடுத்திருந்தும் அப்பனே.. பின் அதாவது உங்களுக்கு அறிவுகள் கொடுத்திருந்தும்... அதனை பயன்படுத்த இயலவில்லை. 

அதனால் தான் அப்பனே நிச்சயம் நோய்களை உருவாக்கி அப்பனே அதாவது இன்னும் கஷ்டங்களை உருவாக்கி அப்பனே... இல்லத்தில் பின் சண்டை சச்சரவுகள் அப்பனே அதாவது.. கணவன் அறிந்தும் கூட மனைவிமார் இடையே சண்டைகள். 

இதனால் அப்பனே குழந்தைகளின் கல்விகளும் அப்பனே பாதிக்கும்!! தகப்பனே திருமண தடைகளும் ஏற்படும் என்பதை கூட கலியுகத்தில் நிச்சயம் அப்பனே நடக்கும்!..

அப்பனே நடந்து கொண்டே வருகின்றது..

இதனால்தான் அப்பனே என் பக்தர்களை கூட நல் ஒழுக்கமாக ஏற்படுத்தி அப்பனே ஆனாலும்.. எதை என்று புரிய அப்பனே.... நிச்சயம் இல்லையப்பா!!

 என் பக்தர்களும் கூட அப்படித்தான் இருக்கின்றார்கள்... புறம் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே

நிச்சயம் காசுகளுக்காக அறிந்தும் கூட அப்பனே உண்மையாக இருங்கள் அப்பனே. 

இல்லையென்றால் நிச்சயம் என்னை வணங்க கூட தேவையில்லை... என்னை அழைக்க கூட தேவையில்லை அப்பனே..

அதாவது அறிந்தும் கூட...ஏனப்பா??? நிச்சயம் பின் உங்களால் மற்றவர்களுக்கு நிச்சயம் அப்பனே பின் உதவிகள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது...

""" எனக்கே இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் என்பேன் அப்பனே!!!

(உதவிகள் செய்வதற்கு என்னிடமே இல்லை இதில் எங்கிருந்து மற்றவருக்கு உதவிகள் செய்வது என்று)

அப்படித்தான் ஒருவன் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.. நிச்சயம் பின் எனக்கே ஒன்றும் இல்லை... நான் ஏன் உதவிகள் செய்ய வேண்டும் என்று!!!

அப்பனே இறைவன் அப்படி கூறிவிட்டால்...??????

அப்பனே நிச்சயம் யோசியுங்கள் அப்பனே..

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே என் பக்தர்கள் ஆயினும் நிச்சயம் அப்பனே தெளிவு பெறவில்லை என்பேன். அப்பனே. 

இன்னும் ஒருவருக்கொருவர் பகை சண்டைகள் அப்பனே நிச்சயம் பின் அவை இவை என்றெல்லாம் அப்பனே. 

இன்னும் அப்பனே பின் அதாவது பின் அதாவது ஆண்கள்தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால்...

 பெண்களும் இப்படித்தான் இருக்கின்றார்கள்!! போட்டி போட்டியாக அப்பனே போட்டி போட்டுக் கொண்டு!!

அறிந்தும் கூட அப்படி இப்படி... யான் பெரியவர் என்று... அப்பனே இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே. 

திருமலை சம்பவம் 

அப்பனே அக்குழந்தையை யாரும் கவனிக்கவில்லையப்பா!!

அப்பனே அறிந்தும் கூட இதுதான் அப்பனே ஆனாலும்... பெண்களும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட இதனால்... நாராயணன் நிச்சயம் அறிந்தும் கூட.. அவை என்று அறிய... நிச்சயம் தன்னை கூட....

நிச்சயம் ஓடோடி அறிந்தும் கூட... இதனால் நிச்சயம் எவை என்று அறிய 

ஓர் அழகாக அறிந்தும் கூட ஆனாலும் குழந்தையை கூட யாரும் கவனிக்கவில்லையே என்று நாராயணன் மனம் வருந்தினான். 

பின் தர்மம் ஏந்துபவன்  போல்... நாராயணன் நிச்சயம் வந்தான்... நிச்சயம் பின் அய்யோ.. அறிந்தும் கூட பின் நிச்சயம் பிச்சை கொடுங்கள் ஏதாவது பிச்சை கொடுங்கள் என்றெல்லாம். 

நிச்சயம் பின் இவன் வேறு.. அதாவது பிச்சையும் ஏந்தி வந்து விட்டான்.... இக்குழந்தைக்கே நிச்சயம் யார் எதை என்று அறியாமல் தவிக்கின்றோம்..

ஐயா கொடுங்கள் யாராவது பிச்சை கொடுங்கள் நிச்சயம் உணவு சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.. மிகவும் பசிக்கின்றது நிச்சயம் கொடுங்கள்.. தாருங்கள் என்று நிச்சயம்.. ஊரையே கேட்டான். 

யாருமே கொடுக்க முன் வரவில்லையப்பா!!!

அப்பனே கலியுகத்தில் இப்படித்தானப்பா மனசாட்சி இல்லாமல் இருப்பார்கள் என்பேன் அப்பனே...

அப்பனே அனைவரையும் யான் சொல்லவில்லை அப்பனே. 

நல்லோர்களும் இருக்கின்றார்கள் அப்பனே.. மறைமுகமாக மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 

ஆனாலும் பின் நல்லோர்கள்... அதாவது தீயோர்கள் அப்பனே பின் புறம் கூறி பின் நல்லோர்களையும் கெடுத்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே.

தண்டனைகள் உண்டு என்பேன் அப்பனே.

ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது நல் மனது இல்லாமல் அப்பனே நிச்சயம்... பின் எவை எதை என்று அறிய அறிய ராமாயணத்தை ஓதினாலும் பின் சிவபுராணத்தை ஓதினாலும் பல இதிகாசங்களை பல பல இன்னும் தேவாரம் ஓதினாலும் அப்பனே... ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!

அப்பனே இப்படி அதாவது இக்கலி யுகத்தில் இப்படித்தான் ஓதிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே சிலர் அப்பனே.

அதனால் ஒன்றும் பிரயோஜனமில்லை... இதனால் பின் நிச்சயம் ஆனாலும் தெரியாதது போல் நிச்சயம்.... யார் இந்த குழந்தை என்று நிச்சயம்... அறிந்தும் கூட நிச்சயம் எவை என்று அறிய அறிய பின்.... இவன் ஒரு அனாதை என்றெல்லாம்...

நிச்சயம் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று நாராயணன் கூட. 

நிச்சயம் பின் தூக்க நிச்சயம் நாராயணன் குழந்தை இடம் அருகில் செல்ல நிச்சயம் ஒருவன்...  காலில் அணிந்திருந்த காலனியை எடுத்து வீசினான் நாராயணன் மீது. 

நாராயணனுக்கு கோபம்!!

 ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பொறுத்துக் கொண்டான். 

இப்படித்தான் நிச்சயம் இறைவனை கூட ஏசுகின்றார்கள்! ஆனால் இறைவன் இருக்கின்றான். 

இறைவன் ஆட்டத்தை அதாவது ஆட்டத்தை காண்பித்தால்... யாரும் தாங்க முடியாது என்பதெல்லாம் மனிதனுக்கு தெரியாது. 

நிச்சயம் மனிதன் நிச்சயம் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் ஒன்றும் செய்ய மாட்டான் என்றெல்லாம் இருந்து நிச்சயம் சில தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு அவை வழியே சென்று கொண்டிருக்கின்றான்...அவை தன் நிச்சயம் அழிவு தான் ஏற்படுவது உறுதி. உறுதி!!.... சொல்லிவிட்டேன். 

ஆனாலும் என் பக்தர்களை யான் நிச்சயம் கைவிடப்போவதில்லை... நிச்சயம் சில சமயங்களில் கூட நிச்சயம் மனம் மாற்றங்கள் ஏற்படுகின்ற பொழுது... அதாவது கிரகங்கள் பின் அறிந்தும் கூட மாறிக்கொண்டே..

நிச்சயம் அவை தன் கூட பின் நிச்சயம் பின் மனமாற்றங்கள்... ஆனாலும் யான் விட்டு விடுவதில்லை..

இதனால் நிச்சயம் சரி அறிந்தும் கூட அக் குழந்தையை நிச்சயம் பின் அதாவது.. தூக்கிட்டு ஓடோடி சென்று விட்டான்..

ஆனாலும் அனைவரும் துரத்தினர்.. அதாவது நிச்சயம் ஆனாலும் நாராயணனுக்கு மறையவும் தெரியும் ஆனாலும் இவை கூட ஒரு லீலைதான்.. பின் அறிந்தும் கூட அதாவது... நாராயணன் லீலைகள் பின் பல பல..

இன்னும் அனைத்தும் என் பக்தர்களுக்கு சொல்வேன். 

நிச்சயம் புரிந்து கொண்டீர்களென்றால் நிச்சயம் உங்கள் வம்சமே பின் செழித்து வாழும் என்பேன்.

இதனால் அறிந்தும் கூட  ஓடோடி விட்டான் பின் நாராயணனே 

நிச்சயம் பின் அதாவது பின் ஓடோடி வந்து இவ் ஏழுமலையில் நிச்சயம் விட்டு விட்டான்... பார்ப்போம் யாரெல்லாம் பின் இக்குழந்தையை பின் நிச்சயம் பார்த்து பின் ஏதாவது தருகின்றார்களா என்று.. 

யாம் தருகின்றோம் என்று நிச்சயம் அழகாக பின் மூலஸ்தானத்திற்கு சென்று விட்டான்!!

நிச்சயம் பின் ஆனாலும் இங்கு சிலர் வந்தார்கள்.. நிச்சயம் அக்குழந்தைக்கு ஏதேதோ தந்தார்கள்.

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் சிறிது சிறிதாக பின்.. பெரியவன் (குழந்தை வளர்ந்தது) 

ஆனாலும் அதாவது அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய அவந்தனக்கு கூட அதாவது குழந்தைக்கு கூட... இனிமேலும் பின் பிச்சை ஏந்தக்கூடாது.. என்று நிச்சயம் அறிந்தும் கூட... யார் கொடுத்தாலும் வாங்க கூடாது என்ற புத்தியை நிச்சயம் நாராயணன் கொடுத்து விட்டான். 

இதனால் நிச்சயம் அதாவது நாராயணனை தரிசிப்பது நிச்சயம் எவை என்று அறிய அறிய.. அறிந்தும் கூட ஏதோ நிச்சயம் பிரசாதங்கள் பின் வாங்கி உட்கொள்வது... இதே போலத்தான். 

ஆனாலும் நாராயணன் கூட கவனிக்கவில்லை நிச்சயம் அறிந்தும் பின் அதாவது பசியெடுத்தால் பிரசாதம் வாங்குவதற்கு மீண்டும் நிற்பது... நாராயணனை தரிசிப்பது நிச்சயம்.. பிரசாதங்கள் வாங்குவது பின் உண்பது. 

இவையே செய்து கொண்டிருந்தான். 

நிச்சயம் அறிந்தும் இப்படியே நிச்சயம் அறிந்தும் அறிந்தும்.. பலங்கள் ஏற்பட்டது இன்னும் எவை என்றும் புரியாமல் கூட... நிச்சயம் அறிந்தும் கூட பல வகையிலும் கூட உயர்வுகள் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது.. பல வகையிலும் கூட உயர்வுகள் பெற்று விட்டான்... நிச்சயம் நாராயணன் அருளால். 

பின் அறிந்தும் அறிந்தும் கூட... பின் நேரில் நாராயணன் வந்து அறிந்தும் கூட ஒரு நாள் நிச்சயம்... அப்பனே யான் தான் இங்கு உன்னை அழைத்து வந்து விட்டேன் என்று. 

நிச்சயம் நாராயணனே... தெரியும் ஆனால் உன்னை வணங்கவும் இல்லை உன்னை நினைக்கவும் இல்லை... யான் பசி தான் ஆராய்ந்தேன் என்று. 

நிச்சயம் அப்பப்பா நீ எதையுமே நினைக்கவில்லை 

 போட்டி பொறாமைகள் நிச்சயம் கோபங்கள் யாரையும் பின் நீ கெடுக்கவில்லை நிச்சயம் பின் உணவிற்காக மட்டுமே!!! 

அப்பப்பா!!! இதே போல தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று என்றெல்லாம் யான் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

அதேபோலத்தான் நிச்சயம் இறைவனை வணங்க விட்டாலும் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பின் எதையும் எதிர்பார்க்காமல் தன் கடமையை செய்தால் இறைவன் உன்னிடத்தில் வருவான். 

இதனால் நிச்சயம் பின் நாராயணன் கூட உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூட!!

நிச்சயம் அவந்தன் எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை... உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று. 

நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் யானே ஏழையாகப் பிறந்தாலும் யாரும் அறிந்தும் கூட இப்பொழுது பின் என்னை உயர்ந்தவன் ஆக்கிவிட்டாய் பல மனிதர்களுக்கு நிச்சயம் சேவை செய்து வந்தேன். 
இன்னும் பின் அடுத்த பிறவி என்று.... நிச்சயம் பின் அறிந்தும் கூட கொடு... நிச்சயம் செய்கின்றேன் என்று உந்தனுக்கே என்று.

நிச்சயம் இப்பிறப்பிலும் கூட ஒரு பின் பெரிய அதிகாரியாக பிறந்து அதாவது அறிந்தும் கூட அரசு எவை என்று அறிய பின் நல்  விதமாகவே அனைத்தும் இயலாதவர்களுக்கெல்லாம் செய்து கொண்டு தான் இருக்கின்றான். 

அப்பனே... அவனைப் பற்றியும் கூட பின் விரிவாக பின் அவன் நாமத்தையும் கூட நிச்சயம் இப்பொழுது சொன்னாலும் புரியாதப்பா. 

நிச்சயம் பின்வரும் வாக்கியத்தில் யான் சொல்வேன்.. நலன்களாகவே. 

ஆசிகள் ஆசிகள் இன்னும் பின் பல பல உரைகளையும் உரைக்கின்றேன் நிச்சயம் பின் ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. GURUVE SARANAM SARANAM. OM AGATHEESAYA NAMO NAMAHA. HARI NARAYANA HARI NARAYANA

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete