​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 26 April 2025

சித்தன் அருள் - 1846 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை போகர் வாக்கு!






8/4/2025 அன்று போகர் சித்தர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.கதிரைமலை வள்ளி முருகன் மலை . ஸ்ரீலங்கா.

""குழந்தையாய் வாழுகின்ற முருகா!!!!

உம்மை தொழுகின்றேனே!!!

தொழுகின்றேனே!!!

பின் வாக்குகள் ஈகின்றேனே!!!

நின்றாடும் தணிகை மலையில்!!!!

நின்றாடும் தணிகை மலை முருகா!!!!

அறிந்தும் ஒன்றொன்றும் பின் பின வரும் வரும் என்று நினைத்தேனே!!! முருகா!!

உம்மை நிச்சயம் பின் தன்னை.. முருகா!!!

உன் தாள் பணிந்தோர்கள் நிச்சயம் தன்னில் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தருவார்கள் முருகா!!!

உன்னை நம்பியே வாழ்கின்றார் முருகா!!!

அதுவோடு நினைத்து நிச்சயம் தன்னில் பின் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து நிறைவேற்று முருகா!!!

நிறைவேற்று முருகா!!

அதை தன் அவர்களின் கர்மத்தை போக்கு முருகா!!!

அவை தன் கர்மத்தை போக்கு முருகா!!!

வரும் வரும் காலங்கள் சோதனைகள் மனிதனுக்கு!!!

அவை நீக்க வருவாயே முருகா!!!!

அவை நீக்க வருவாயே முருகா!!!

தண்டோடு அணிந்து பின் அணைத்துக் கொள்ளும் முருகா 

தண்டோடு மனிதனை அணைத்துக் கொள்ளும் முருகா!!!

என்றென்றும் என் மனதில் வாழும் முருகா!!

என்றென்றும் என் மனதில் வாழுமே முருகா!!!

எப்பேர்பட்ட பின் நிச்சயம் வியாதிகள் ஆயினும்!!...

அதை நீக்க ஓடோடி வா முருகா!!!!

ஏன்??? இந்த அவலத்தை கொடுத்தாயே? முருகா!!!

ஏன்? இந்த அவலத்தை கொடுத்தாயே? முருகா!!

யான் கூட மருந்துகளை மனிதனுக்கு கொடுக்கையில் அதை ஏனோ?? தடுத்தாயே!! முருகா!!!

அதை ஏனோ? தடுத்தாயே!! முருகா!!

நிச்சயம் தன்னில் உன் பிள்ளைகளை நிச்சயம் தன்னில் கொன்று குவிக்க மாட்டார்கள் மனிதர்கள் யான் இங்கிருந்து சத்தியம் செய்கின்றேனே முருகா!!

யான் இங்கிருந்து சத்தியம் செய்கின்றேனே முருகா!!!

எனை வந்து ஆட்கொண்டு நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் ஒன்று இங்கு அழைத்தாயே முருகா!!

எனை இங்கு அழைத்தாயே முருகா!!!

என் வேலை செய் என்று கூறினாயே முருகா!!!

என் வேலை செய் என்று கூறினாயே!!

ஔஷதங்களை மனிதனுக்கு கற்பிக்க நிச்சயமாய் கூறினாயே!!

மீண்டும் அவை தன் ஏன்? இந்த அவல நிலை.. மனிதனுக்கு வருகின்ற நேரத்தில் அதை ஏனோ?? தடுத்தாயே முருகா!!

அதை ஏனோ தடுத்தாயே முருகா!!

வரங்கள் தந்து மனிதனுக்கு உயர்கின்ற நேரத்தில் நோய்களோடு வளரும் தன்மை கொடுத்திட்ட முருகா!!

நோய்களை வளர்த்திட்ட முருகா!!!

அதை நீ நிச்சயம் தன்னில் மீண்டும்  சாபத்தை மனிதனுக்கு போக்குவாயே முருகா 

மனிதரிடத்தில் குறைகள் எல்லாம் நீக்கியே முருகா!!!

யான் தனே ஔசதங்கள் கொடுக்கின்றேனே முருகா!!!

அதற்கு அதன்படி நீதான் உத்தரவு கொடு முருகா!!!

அதற்கு தகுந்தார் போல மனிதனையும் கூட சித்தர்கள் யாங்கள் வழி நடத்துகின்றோமே முருகா!!!

அன்பாலே அணைக்கின்ற முருகா!! எங்களை அன்பாலே அணைக்கின்ற முருகா! 

வெற்றி வேலுடன் அனைத்தையும் பின் சாதிப்பாயே!!!!

இப்போது அமைதியான நிலையில் ஏன் இந்த கோலத்தில்?

அமைதியான ஏன் இந்த கோலத்தில்??

அறிந்தும் அறியாமலும் செய்த பின் பிழைகளை நிச்சயம்... வருக வருக அதை தன் குறைகளாக இல்லாமல் அதை போக்கிட வருவாய் முருகா!!!

மனிதன் மீது நீயே கோபம் கொண்டாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? முருகா!!

இன்னும் தன்னில் மனிதனை யாங்கள் உருவாக்கி இன்னும் தன்னில் மனிதர்களை யாங்கள் பின் உருவாக்கி அவர்களின் மூலம் நிச்சயம் தன்னில்... உன் உயிர்களைக் கூட கொல்லக்கூடாது என்று பின்!!! கொல்லக்கூடாது என்று ஆணை விதிப்போமே முருகா!!!!

உன் கவலை என்ன ஏது என்று தெரிந்து கொண்டேன் முருகா!! 

உன் கவலை ஏது என்று தெரிந்து கொண்டேனே முருகா!!!

மக்களை காப்போடு காப்போடு அணைத்துக் கொள்ள வா முருகா!!

மக்களை பின் அறிந்தும் கூட கொத்து கொத்தாக இறக்கின்றார்களே முருகா!!!!

நிச்சயம் தன்னில் பின் அவை தன் மனிதனுக்கு புத்திகள் கொடுத்து அவை தன் புத்திகள் கொடுத்து அவை தன் உயிர் இல்லாததாக செய்கின்றானே மனிதன்!!

(மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த புத்தியை தவறான வழியில் பயன்படுத்தி தன் இஷ்டத்திற்கு ஜீவராசிகளை தன்னுடைய ருசிக்காக ஜீவராசிகளை எல்லாம் கொன்று குவித்து தின்பதை)

அதை தடுத்து நிறுத்துவோம் வரும் காலத்தில் 

அதை தடுத்து நிறுத்துவோம் வரும் காலத்தில்!!

அதனுள்ளே முருகா மனிதனை காப்பாற்று முருகா!!!

உனையே நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னும் கஷ்டங்கள் வருகின்றதே முருகா!! 

அவ் அவலத்தை நீக்கு முருகா!!!

அவ் அவலத்தை நீக்கு முருகா!!!

அறிந்தும் பின் அறியாத வகையிலும் கூட மனிதன் நின்று பின் உன்னை தொழுகின்ற நேரத்தில் 

அன்போடு மனிதனை அணைத்துக்கொள் முருகா!!!

அன்போடு மனிதனை அணைத்து கொண்டு முருகா!!.. அனைத்தும் செய்வாயே முருகா!!

அணைத்து செய்வாயே முருகா!!!

தர்மம் புவிதன்னில் அறிந்தும் தலைகீழாக செல்கின்றதே!!

அதை காக்க பின் ஓடோடி வாவே முருகா!!

தர்மம் தலைகீழாக ஆகின்ற பொழுது மனிதனை மனிதனே கெடுப்பானே!!!

உண்மைகள் இல்லையே!!

போட்டி பொறாமைகளோடு வாழ்ந்திருப்பானே!!

அனைத்து ஜீவராசிகளையும் கொன்று தின்று அவனும் மடிவானே!!

அப்படியெல்லாம் நடக்கின்றது கலியுகத்தில்!!!

அனைத்தும் குழந்தாய் நீயே அறிவாய் முருகா!!

அனைத்தும் நீயே அறிவாய் முருகா!!

குருவே வா வா வா வா! 

இறைவா வா வா வா வா!!

குருவே வா வா வா வா 

சூரியனே! வா வா வா வா 

நவகிரகங்களே வா வா வா வா 

பிரம்மனே வா வா வா வா 

உனை தனை இத்தனை சித்தர்கள் அழைக்கின்றார்கள் 

உனை தன் சித்தர்கள் அழைக்கின்றார்கள் 

நிச்சயம் தன்னில் மனிதர்களின் குறைகளை போக்கி போக்கி பின் அருள்கள் தர வா வா முருகா!!!

அன்போடு நினைக்கின்ற மனிதர்களுக்கு!!

அன்போடு நினைக்கின்ற மனிதனுக்கு!!!

அனைத்தும் கொடுத்து பின் காத்தருள்வாய்!!

அதர்மத்தை அறிந்தும் கூட பின் அடியோடு அழித்திட பின் அறிந்தும் கூட தர்மத்தை நிலை நாட்ட ஓடோடி வா முருகா!!

உன் மக்களை காப்பாற்ற வா வா முருகா!!!

அறிந்தும் நீ தன்!!

 பின் பிறந்து.. பிறப்பெடுத்து!!

 மக்களே பின் அழிவில் பின் ஆழ்ந்து கொண்டிருக்கின்றார்களே முருகா 

அவர்களுக்கு புத்திகளை கொடுத்திட வா வா முருகா முருகா!!

அவர்களுக்கு புத்தியை கொடுத்திட வா வா முருகா!! முருகா!!

நல்லோர்கள் பின் தீயோர்கள்.. என்று பாகு பாடு பார்க்காமல் அனைவரையும் முதலில் காப்பாற்ற முருகா!!!

முதலில் காப்பாற்று முருகா!!

நிச்சயம் இவ் பரதேசியின் குரலை பின் கேட்பாயே!!!! கேட்பாயே!!!

அதை அறிந்து பின் மக்களுக்கு சேவைகளை ஆக்க ஓடோடி வா வே முருகா!

அவையறிந்து நிச்சயம் தன்னில் இனி மேலும் மனிதனை பின் தவறுகள் செய்தாலும் 

அவர்களுக்கு தண்டனைகள் நிச்சயம் தன்னில் உடனடியாக கிடைக்கின்ற படி ஏற்படுத்துவோம் முருகா!!

சித்தர்கள் யாங்கள் ஏற்படுத்துவோமே முருகா !!!

பொய்யான பக்திகள் பொய்யான அன்புகள் 

உன்னிடத்தில் செலுத்துகின்றார்கள். இதை யான் அறிவேனே!! யான் அறிவேனே!!!

அவர்களுக்கும் யானே தண்டனைகள் கொடுக்கின்றேனே 

இன்னும் ஒன்றும் தெரியாத மனிதர்கள் கோடி கோடி அலைகின்றார்களே முருகா!!! அவர்களை காப்பாற்று நிச்சயம் தன்னில்!!

அவர்களை அணைத்துக் கொண்டு அனைத்தும் கொடுத்திட்டு நிச்சயம் தன்னில் அவர்களின் மூலம் உலகத்தை காப்பாற்ற அவர்களுக்கும் ஆசிகள் கொடுக்க வா வா!!

அவர்களுக்கு ஆசி கொடுத்திடு!!

பின்பு அனைத்தும் மாற்றிட மனிதனுக்கு மனிதன் சக்திகள் கொடுத்து பின் மனிதன் மனிதனை திருத்திட அருள் ஆசிகள் தந்திட வா வா முருகா!!!

வா வா முருகா!!

ஈசன் குழந்தையே முருகா!! பின் 

பராசக்தியின் குழந்தையே முருகா!!

எங்கள் குழந்தையே முருகா!!

எங்கள் குழந்தையே முருகா!!

அதாவது சித்தர்களின் குழந்தையே முருகா!!

பின் நீதானே அனைத்தும் பின் காலமாய் விழுகின்ற காலனை.. பின் காக்க காக்க!!

அறிந்தும்.. காலனே மிஞ்சிய நேரத்தில் யான் தான் தலைவன் என்று பின் கூறிக்கொண்டு மக்களை அடியோடு பின் அழிக்கின்றானே முருகா!!!

பின் காலனை அடியோடு அழித்திட வா வா முருகா!!

காலனை அழித்திட பின் வா வா முருகா!!


மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லையே!!

இறைவன் யார் என்று பின் புரிந்து கொள்ளவில்லையே! 

அதை பின் புரிந்தும் அறிந்தும் கூட சக்திகள் கொடுத்திட பின் அறிந்தும் புத்திகளோடு வாழ்ந்து  பின் அனைத்தும் பின் அறிந்து பின் வாழ்ந்திட்டு பின் மோட்சத்தை கொடுக்கின்ற பின் மோட்சத்தை அளிக்கின்ற தெய்வமே தெய்வமே கலியுக வரதனே நிச்சயம் பிரம்மாவே வா வா!!

முருகா பிரம்மனே வா வா 

முத்துக்குமரனே பிரம்மனே வா வா 

பிரம்மரிஷியே வா வா 

ஈசன் ரிஷியே வா வா 

விஷ்ணு ரிஷியனே வா வா 

சித்தர்கள் ரிஷியனே வா வா!!

மலைகளின் ரிஷியனே வா வா 

காடுகளின் ரிஷியனே

வா வா 

அனைத்தையும் மாற்றிடும் வல்லமை படைத்த முருகா 

தந்தை  தன் நிச்சயம் தன்னில் அனைத்து சக்திகளையும் உந்தனுக்கு வழங்கிட்டானே!! வழங்கிட்டானே!!

அதை நீயும் ஏன் பயன்படுத்தவில்லை?? முருகா!!!

உன் மனது கூட என்னவென்று யானே தான் ஆராய்ந்தேன்!!

உன் மனதிற்கு தகுந்தாற்போல் மக்களை யான் நிச்சயம் தன்னில்.. சித்தர்கள் யாங்கள் மாற்றுவோமே முருகா!!

உன் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் மனிதனை மாற்றுவோம் முருகா 

மனிதனை மாற்றுவோம் முருகா 

பின் அறிந்தும் கூட அவர்கள் செய்யும் தவறினை நிச்சயம் பொறுத்தருளி அறிந்தும் கூட காப்பாற்ற ஓடோடி வா வா!!

காப்பாற்ற ஓடோடி வா வா!!

கலியுக வரதனே கண்கண்டனே கண்டத்தில் வாழும் பின் அறிந்தவனே 

உலகத்தில் தன் அறிந்தும் கூட பின் திரிபவனே!!

மயில் மீது அழகாக பின் குடித்தனம் நடத்துபவனே!!

வா வா!! வெற்றி வேலோடு வா வா!!!

வா வா வா வெற்றி வேலோடு வா வா!!

உனை தன் பின் அறிந்தேனே!!! கந்தனே! கதிர்வேலவனே!!

கதிர் காமத்தோனே வா வா வா வா!!!

இங்கு வந்து அழகாக அமர்ந்திட்டாயே!!!

சந்தோசமாக நிச்சயம் தன்னில்.. மக்களை பின் காப்பாற்ற ஓடோடி வா வா!!!!

பின் நிச்சயம் தன்னில் தவறுகள் செய்ய மாட்டார்கள்!! மனிதர்கள் நிச்சயம் தன்னில்!!!

உன்னிடத்தில் வருவோருக்கெல்லாம்..யாங்கள் தன் மனதை மாற்றி நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.. பின் இப்படி வாழ்ந்திட்டால்தான் இறைவன் ஆசிகள் கிடைக்க பெறும் என்பதை யாங்களே மனதை மாற்றுகின்றோம்!!

யாங்களே மனதை மாற்றுகின்றோம்!!

ஓடோடி வந்து பின் அருள் தருவாய் முருகா! 

உன் பின் படைப்பில் அனைத்தும் உன் ஜீவராசிகளே!! எங்களுக்கு தெரியும் முருகா!!

பின் அறிந்தும் கூட உன் பிள்ளைகளை கொன்று குவித்து வருகின்றார்களே என்று தானே உன் நினைப்பு!!!! என்றுதானே உன் நினைப்பு!!!

அதனால்தான் கோபம் கொண்டு பின் அறிந்தும் கூட பின் நோய்களாக பின் மாற்றுகின்ற தலைவா!!

அதனால்தான் பின் அறிந்து கொண்டு மக்கள்.. திருந்த மாட்டார்கள் அதற்கு பின்.. பதிலாக நோய்கள் தருகின்ற முருகா!!!

இனிமேலும் நிச்சயம் தன்னில்.. பின் கட்டளை இடுவோமே முருகா 

மனிதனை நிச்சயம் தன்னில் பின் உன்  பக்தன் ஒருவனை உயர்த்திட்டு பின் அவன் மூலம் கட்டளை இடுவோமே முருகா 

அவன் மூலம் கட்டளை இடுவோம் முருகா!!

(முருக பக்தன் ஒருவரை அரசு சார்ந்த இடத்தில் பதவிகள் கொடுத்து அரசாங்க ஆணையாக உயிர்களை கொல்வது உயிர்ப்பலி இடுவது அனைத்தையும் கட்டளை இட்டு நிறுத்த வைக்கப் போகின்றார்கள் சித்தர்கள்)

குறைகள் கொள்ள வேண்டாம் முருகா 

குறைகள் கொள்ள வேண்டாமே முருகா 

உன் குறைகளை தீர்க்க யாங்கள் இருக்கின்றோமே முருகா!!!

கலியுகத்தில் பின் இன்னும் அழிவுகள் ஏற்படுகின்றதே!!!

அதை தன் நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாயே முருகா!!!

நிச்சயம் தன்னில் காலனை அழித்திட வா வா முருகா 

அறிந்தும் கூட கிரகங்களை கூட கட்டுப்படுத்தினாயே முருகா 

கிரகங்களை கூட கட்டுப்படுத்தினாயே முருகா!!!

அனைத்தும் சேர்ந்த முருகா!!

அனைத்தும் சேர்ந்த முருகா பின் அருளோடு வள்ளி தெய்வானையோடு பின் வா வா முருகா!!

வள்ளி தெய்வானையோடு வா  வா முருகா!!!

மக்களுக்கு அருள் பொழிய வருக வருகவே வா வா முருகா!!!

அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் பின் கொடுத்திடாது பின் உன் ஜீவராசிகளை கொல்ல மாட்டார்கள் வரும் காலத்திலே!!

அதை பின் நிச்சயம் தன்னில் மனிதன் தெரிந்து கொண்டாலே

போதும் முருகா!!

ஏன் இந்த. வியாதிகள் வருகின்றது? என்று முருகா! 

யான் அறிவேனே முருகா!!!!

யான் அறிவேனே முருகா!!!

அதை தன் நிச்சயம் பின் உன் பிள்ளைகளை அதாவது ஜீவராசிகளை கொல்வோர்களுக்கு நிச்சயம் தன்னில் வியாதிகள் கொடுக்கின்றாயே முருகா!!!

அதற்கு கூட பின் யார் ஒருவன் துணை நிற்கின்றானோ!? அவனுக்கும் சேர்த்து கொடுக்கின்றாயே முருகா!!!

அவனிடத்தில் பேசினாலும் பின் பேசியதற்கு தண்டனைகள் கொடுக்கின்றாய் முருகா!!

இன்னும் கூட நல்லோர்கள் இருக்கின்றார்கள் முருகா!!!

அவர்களை முன்னேற்று! அவர்கள்

பெரும் பதவிகள் வகித்து இவையெல்லாம் போக்கிட வா வா முருகா 

இதையெல்லாம் போக்கிட வா வா முருகா!!

பின் அவர்களை உயர் பதவிகளில் வைத்து பின் பெரிய பெரிய கட்டளைகள் இட்டால் நிச்சயம் தன்னில் திருந்துவானே மனிதன் முருகா!!!

நிச்சயம் தன்னில் திருந்துவானே முருகா! 

அதேபோல பின் உன் கட்டளையை!!. தன் பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் பின் வாழ்வார்களே!! குடை போல பிடித்திட்ட மக்களை அன்போடு அணைக்கின்ற பின் தெய்வமே! தெய்வமே!

உள்ளே அமைதியாக நிற்கின்றாயே!!!

என் மனதில் உள்ளே அமைதியாக நிற்கின்றாயே!!

யான் உள்ளே தான் பின் உந்தனுக்கு பின் திருத்தலத்தை அமைத்தேனே!!! அதில் கூட நீ இருந்தும்!!!

 உன் அருள் இல்லையென்றால் எத்தனை எத்தனை மருந்துகள் கொடுத்தாலும் பின் நிச்சயம் தன்னில் பின் சரிப்படாது  என்று நிச்சயம் தன்னில் உணர்த்திக் கொண்டிருக்கின்றாயே!!!

(முருகன் அருள் இல்லாமல் எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் நோய்கள் தீராது... இங்கு நோய்களை தந்தவரே முருகன் தான் அவருடைய பிள்ளைகளான உயிரினங்களை கொன்று குவிப்பதால் முருகனுக்கு வந்த கோபத்தால் நோயை கொடுத்துக் கொண்டிருக்கின்றார் முருகன். அப்படி நோயை குணப்படுத்துவதற்கு எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் முருகனுடைய அருள் இல்லாமல் நோய் சரியாகாது குணமாகாது)

ஏன் இந்த அவலம்?? முருகா!!!

ஏன் இந்த அவலம்?? முருகா!!

மக்களை பின் அணைத்திட வா வா முருகா!!!

மக்களை அணைத்திட

வா வா முருகா!!

சித்தர்களின் செல்லக் குழந்தையே!!

பாசக் குழந்தையே!!

அன்பு குழந்தையே!!

ஓடோடி வா வா முருகா! 

ஓடோடி வா வா முருகா! 

குழந்தையாகவே இருக்கின்றாயே குழந்தையாகவே இருக்கின்றாயே 

உன் குழந்தைகளை யாங்கள் காப்போமே 

உன் குழந்தைகளை யாங்கள் காப்போமே 

பின் மனிதர்களை காக்க நீ ஓடோடி வா வா முருகா மனிதனை நீ காக்க ஓடோடி வா வே முருகா!!

என் நெஞ்சில் அழகாக பின் குடி கொண்டிருக்கும் முருகா!!

என் நெஞ்சில் திருத்தலத்தை அமைத்து பின் அதில் கூட வள்ளி தெய்வானையோடு குடி கொண்டிருக்கும் முருகா!! குடி கொண்டிருக்கும் முருகா!!

சித்தர்கள் யாங்கள் அனைவரும் உந்தனுக்கு துணை இருப்போமே!!

கலியுக வரதனே!!

பிரம்மனே !!

விஷ்ணுவே!!

 ஈசனே!!

இவை மூன்றும் இணைந்த பின் குழந்தையே!!!

இவை மூன்றும் இணைந்த குழந்தையே! 

பின் தவத்தாலே கிடைத்தவனே!!!

தவத்தாலே கிடைத்தவனே!!

அனைத்தும் அறிகின்ற முருகா!!

அனைத்து கலைகளிலும் வல்லவனாக நின்ற முருகா 

அறிந்தும் அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட இங்கிருந்து எனை பழனிக்கு அழைத்தாயே!! யான் அமைதியாக இருந்திருப்பேனே!! நீதானே அழைத்தாயே முருகா!!! நீதானே அழைத்தாயே முருகா!!

பழனி தன்னில் இருந்து மக்களுக்கு சேவையாற்று!! என்று சொன்னாயே முருகா 

அதை நீயும் மறந்து விட்டாயே முருகா!!

அதை நீயும் மறந்து விட்டாயே முருகா!!

அதனால் தானே அறிந்தும் கூட வரவில்லையோ!? முருகா 

ஏன்? என் மீது கோபம்  முருகா!!

ஏன்? என் மீது கோபம் ஏன்? முருகா!!

உன் கட்டளைப்படி இப்பொழுது கூட வாழ்ந்து வருகின்றேனே!!

உன் கட்டளைப்படி பின் வாழ்ந்து வருகின்றேனே!!

பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட...அவ் தேசம் கூட நிச்சயம் அழியப் போகின்றதே!!!

அதைக் காக்க பின் நீ அங்கு சென்று பின் காத்திட!! காத்திட!! காத்திட!! போ முருகா!!!

உன் கட்டளையை ஏற்று பின் பழனி தன்னில் இருக்கின்றேனே முருகா!!

உன் கட்டளையை ஏற்று பின் பழனி தன்னில் இருக்கின்றேன் முருகா!!

பின் அறிந்தும் கூட பின் அவ் தேசத்தை காக்க போராடுவாய் முருகா 

போரிடுவாயே முருகா!!

அறிந்தும் கூட உன் ஜீவராசிகள் நிச்சயம் தன்னில் பின் கட்டுப்படுத்துகின்றேன் முருகா 

உன் அன்பான ஜீவராசிகளை எல்லாம் அங்கு கட்டுப்படுத்துகின்றேன் முருகா!!!

அங்கு சென்று பின் மக்களை.. காப்பாற்று முருகா!!!

அங்கு மக்களை சென்று காப்பாற்று முருகா!!!

போரும் வருகின்றது முருகா !!

போரும் வருகின்றது முருகா!!

அதை நீயே தடுத்தாக வேண்டுமே குமரா!!!

குமரா! குமரா! அன்புவேல் குமரா!!

பாசவேல் குமரா!!

முத்துவேலே குமரா!!

 பின் ராஜ்யத்தை காத்திட வா வா முருகா 

உன் ராஜ்யத்தை காத்திட வா வா 

அன்போடு ஒளிந்திருக்கும் முருகா 

என் மனதில் அன்போடு ஒளிந்திருக்கும் முருகா!!

அறிந்தும் கூட படையோடு பின் அனுப்பு முருகா!! அங்கு!!

நிச்சயம் தன்னில் அங்கு படையோடு அனுப்பு முருகா!!

முருகா முருகா முருகா முருகா பின் குழந்தை முருகா!!

நிச்சயம் தன்னில் என் வேண்டுதலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு நிச்சயம் செய்வான் சத்தியம் செய்வான் நிச்சயம் தெரியும் முருகா முருகா 

கோபத்தோடே இருந்தாலும் பாசத்தோடு அனைவரின் பின் மனதை மாற்றி பின் என் முருகன் செய்வானே!!!!! செய்வானே!!!!!

என் முருகன் செய்வானே!! செய்வானே!!

எனக்கு சந்தோசங்களே!! கந்தா!!

எனக்கு சந்தோசங்களே கண்ணா!! கந்தா!!

அன்போடு அன்போடு பின் துதித்தேனே!!!

என் மனதில் திருத்தலத்தை பின் கட்டினேனே.. அங்கு அன்போடு அன்போடு துதித்தேனே!!!

அன்போடு அன்போடு துதித்தேனே!!!

அன்போடு அன்போடு துதித்தேனே!!!

மக்களுக்கு அருளாசிகள் அருளாசிகள் 

ஆசிகள் ஆசிகள்!!!

 இன்னும் சித்தர்களின் ஆசிகள் ஆசிகள்..

 மத்தியில் (இதற்கிடையில் )இன்னும் பின் அறிந்தும் கூட அறிந்தும் கூட பின் யாங்கள் மக்களின் மனதை மாற்றி பின் புத்தியுள்ளவனாக மாற்றுவோம் நிச்சயம் தன்னில் கூட. 

பராசக்தியே பின் அருள்வாய் முருகா அருள்வாய் அருள்வாய் 

பராசக்தியே அருள்வாய் அருள்வாய் 

மனிதனுக்கு இங்கிருந்தே கோடிகள் கோடிகள் ஆசிகள் கொடுக்கின்றேனே!! கொடுக்கின்றேனே!! 

அதை வைத்து நல் மனதாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் கற்றுக் கொள்ளுங்கள் 

என் குழந்தை அனைத்துமே கொடுப்பானே!! கொடுப்பானே !!

சத்தியமாய் என் குழந்தை அனைத்தும் கொடுப்பானே!! கொடுப்பானே!! 

ஆசிகள்!!!

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அதாவது 17/1/2025 அன்று குருநாதர் கதிரை மலையில்.. வள்ளி தேவி திருவிளையாடல் படலம்... முருகன் வள்ளி ஈசன் குருநாதர் அகத்தியர் பெருமான் இடையே நடந்த சம்பவங்கள் வாக்கில் உரைத்து இருக்கின்றார்.

இதுவரை மனிதர்கள் வள்ளி திருமணம் குறித்தும் முருகன் வள்ளி தேவி குறித்தும் நாடகங்களாக கதைகளாக சொல்லி கேட்டு அதை நம்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் குருநாதர் கூறிய வாக்கில் எந்த அளவு உண்மைகள் எப்படி எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்..

கதிரை மலை வாக்கு சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1788 ..இவ் வாக்கினை படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ளலாம்.

ஆலயம் அமைவிடம்.. கதிரை மலை கதிர்காம சிகரம்  மொனராகலை மாவட்டம்.ஊவா மாகாணம்.ஸ்ரீலங்கா.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. முருகா சரணம் 🙏 அகத்தியர் போலவே அவர்தன் சீடர் போகருக்கும் மக்கள் மீது மிகுந்த கருணை 🙏 போகனே போற்றி போற்றி

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete