​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 April 2025

சித்தன் அருள் - 1830 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு ( April 2024 ) - பகுதி 7



(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6 )

குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தையை , அதாவது நல்லதையே சொல்லி வளர்க்கின்றீர்கள். இப்படித்தான் உண்ண வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும் என்று. அதேபோல்தான் அப்பனே, என் அருகில் வந்துவிட்டால்,  நீங்கள் அனைவருமே குழந்தைகள் அப்பனே. முதலில் குழந்தைக்கு என்ன தேவையோ, அதை யான் ஊட்டுவேன் அப்பனே. பின்புதான் வாக்குகள் செப்புவேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் ) சொல்லுங்கள் ஐயா. 

அடியவர் :- ( எடுத்து விளக்கம் கொடுத்தார் அனைவருக்கும்) ஒரு குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது ஒரு தாய்க்குத் தெரியும். அது போல் நமக்கு என்ன உண்மையான தேவை என்று குருநாதருக்குத் தெரியும். நாம் பல தேவைகள், காரணங்கள் மனதில் வைத்திருக்கலாம். (தேவை) அது பெரியது, இது பெரியது என்று. ஆனால் உண்மையான தேவை எது என்று குருநாதருக்குத் தெரியும். அதைச் செய்து விட்டுத்தான், மீதி தேவைகளைப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் குருநாதர் சொன்ன விசயங்களைச் செய்து வந்தால் நிச்சயம் நாம் வாழ்க்கையில் கரையேறலாம்.

குருநாதர் :- அப்பனே !!!!! இல்லறம் என்றால் சண்டைகள் வரும். அப்பனே வேலை செய்தாலும் சண்டைகள் வரும். அப்பனே தொழில் செய்தாலும் வரும். அப்பனே அப்பொழுது எதைச்செய்தால், சண்டைகள் வளராது, சந்தோசமாக வாழலாம் அப்பனே???? இதை ஏற்கனவே செப்பிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்லுங்கள் கேட்கின்றேன். 

அடியவர் 4, அடியவர்கள் :- தர்மம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே அது வேறு இது வேறு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த chapter வேற, இந்த chapter வேற என்று சொல்லிவிட்டார் ஐயா. 

அடியவர் 4 :- நீங்களே சொல்லி விடுங்கள் சாமி.

குருநாதர் :- அப்பனே அனைத்தும் யான் சொன்னால் , அப்பொழுது உன் அறிவு எங்கப்பா போய் விட்டது?

அடியவர் 4 :- இல்லைங்க சாமி. நீங்கள் என்றால் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுவீர்கள். 

குருநாதர் :- அப்பனே முதலில் நீங்கள் சொல்லுங்கள்.

அடியவர் 5 :- கடமையைச் செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே தன் கடமையை ஒழுங்காகச் செய்தாலே பின் போதுமானதப்பா. அப்பனே யானே வந்து வாக்குகள் சொல்லுவேன். அப்பனே நீ எங்கிருந்தாலும் , நீ மறைந்திருந்தாலும் , உன் இல்லத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும் யான் ஓடோடி வந்து உந்தனுக்குச் சொல்வேனப்பா. ஆனால் உந்தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். சோம்பேறித்தனமாக இருக்கக்கூடாது. அப்பனே ஆனால் நீ சோம்பேறியப்பா. 

( பின் வரும் வாக்கு மிக மிக அதி மிக முக்கியமான வாக்கு. அதிகாலை ரகசியம்)

“அப்பனே 4 மணிக்கு எழு. அனைத்தும் யான் தருகின்றேன் உந்தனுக்கு.”

அடியவர் 4 :- சரிங்க சாமி. 

( தனி நபர் கேள்வி பதில் வாக்குகள் ஆரம்பமானது. அவற்றில் உள்ள முக்கிய பொது வாக்கினை மட்டும் இங்கு பகிர்கின்றோம்.) 

அடியவர் 6 :- ( உடல் நலம் குறித்த கேள்வி.)

குருநாதர் :- சில இயற்கையான உணவுகளை உட்கொள்ள நன்று. முருங்கை இலைகளையும் கூட, பின் கரிசலாங்கண்ணி என்னும் மூலிகைகளையும் கூட, பொன்னாங்கண்ணி என்னும் மூலிகையும் கூட, இன்னும் எண்ணெய்யைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. சரியாகவே புளிப்பு அகற்ற வேண்டும். பின் காரத்தையும் அகற்ற வேண்டும். பழ வகைகள் உட்கொள். அனைத்தும் தீரும் ( குணமாகும் ). நல்முறையாகும். இதைக் கடைப்பிடி. செயற்கை உணவை எடுத்துக் கொள்வதனால்தான் பிரச்சினையே. தாயே சொல்லிவிட்டேன். 

( தனி வாக்குகள் ) 

கலியுகத்தில் பிரச்சினை இல்லாமல் யாரும் இல்லை. 

( விதியை மாற்றும் தனி வாக்கு , விளக்கங்கள் , அடியவர் கண்ணீர் வேண்டுதல். சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு. ஜானகிராமன் அவர்கள் அழகாக எடுத்து உரைத்தார்கள். ஒரு கண்ணீர்க் கதையை கேட்டு தட்டச்சு செய்யவே  கஷ்டமாக ,  மன பாரமாக உள்ளது. சுவடி ஓதும் மைந்தன் இது போல் எத்தனை கண்ணீர்க் கதைகளை, கேள்விகளைக் கேட்க நேரிடும் என்று நினைத்தாலே. அப்பப்பா!!! கடும் பக்குவம் இருந்தால் மட்டுமே இவ் சுவடியை ஓத இயலும். இது போல் சூழ்நிலைகளைச் சமாளித்து ஆறுதல் சொல்ல இயலும். )

அடியவர் 7 :- (ஒரு தேர்வு குறித்த கேள்வி)

குருநாதர் :- கடின உழைப்பு , வெற்றி. எப்பொழுது எதனைத் தரவேண்டுமோ அப்பொழுது பெற்றுக்கொள். கடமையைச் செய்து கொண்டே இரு. பலனை எதிர் பார்க்காதே. நிச்சயம் யான் உதவிகள் செய்வேன். 

அடியவர் 8:- குருநாதா , பைரவர் ஒரு வாரம் முன்னர் இறந்து விட்டது…

குருநாதர் :- அம்மையே இறப்பு, பிறப்பு , வாழ்வது , பின் வீழ்வது இவை எல்லாம் இறைவனிடத்தில் இருந்து வருபவை. இதனால் உங்கள் அனைவருக்குமே சொல்கின்றேன். உங்கள் உயிர் கூட உங்களுக்குச் சொந்தம் இல்லை. இறைவன் எப்பொழுது எடுத்துக்கொள்வான் என்பதே தெரியாது. அதனால் நிச்சயம் தர்மத்தைக் கடைப் பிடியுங்கள். இறைவனுக்கு மட்டுமே பிறப்பதற்கும் பின் எடுப்பதற்கும் அவனுக்கே உரிமை உண்டு. உயிர்கள் அனைத்துமே இறைவனுக்குச் சொந்தம். 
அம்மையே கவலையை விடு. 

( தன் கேள்விகள் , வாக்குகள்.)

அடியவர் 9 :- ( தன் கேள்வி )

குருநாதர் :- உலகம் அழிவு நிலைக்குச் செல்கின்றது. யான் சொல்லியதை அப்படியே செய்து கொள். அதாவது தானங்கள் செய்யச்சொல். செய்து கொண்டே வாருங்கள். நிச்சயம் மாற்றம் அடையும். புண்ணியங்கள் சேரும் பொழுது, நிச்சயம் பாவங்கள் கரைந்து ஓடும். அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அனைவருக்கும் சொல் மகனே. 

அடியவர் :- ( விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்). 

அடியவர் :- நாம் அனைவரும் “அ” னாவில் வந்து நிற்கின்றோம். நாம் என்ன ( புண்ணியங்கள் ) செய்கின்றோம் என்று சொல்ல மாட்டேன் என்கின்றீர்கள். குருநாதர் நிறையச் சொல்லி உள்ளார்கள். குருநாதரிடம் உங்கள் மனதில் ( இன்னென்ன புண்ணியங்கள் செய்வேன் என்று ) வாக்குறுதி எடுத்துக்கொண்டு வாக்கைக் கேளுங்கள். நாம் புண்ணியம் செய்யாமல் அவர்களால் ஏதும் செய்ய முடியாது. நாம் செய்யும் புண்ணியத்தை வைத்துத் தான், குருநாதர் நமக்குத் தேவையான நல்லதைச் செய்ய முடியும். ஏன் என்றால் புண்ணியம் என்பது நல்ல கர்மா. (நம்மிடம் உள்ள) அந்த நல்ல சக்தியை வைத்துத்தான் அவருடைய காந்த ஆற்றலை வைத்து நமக்குக் கொடுத்து நம்முடைய பிரச்சினைகளைச் சரி செய்ய முடியும். புண்ணியம் ஏதுவும் நாம் செய்யாமல், எந்த தெய்வத்தைடைய பெயரைச் சொன்னாலும் ( ஓம் நமச்சிவாய, ஓம் சக்தி, நமோ நாராயணா, ஓம் லக்ஷ்மியே , ஓம் சரஹனபவ, ஓம் கணபதையே முதலிய பெயர்கள்) , பல பூசைகள் செய்தாலும், என்ன செய்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது/இயலாது. எட்டி நின்று வேடிக்கைதான் பார்ப்பார்கள். நம்மிடம் புண்ணிய பலங்கள் இருந்தால் மட்டுமே , அவர்கள் நம்முடைய குறைகளை நீக்குவார்கள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. OM AGATHEESAYA NAMO NAMAHA. GURUVE SARANAM SARANAM

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete