அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8
(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1830 - பகுதி 7 )
குருநாதர் :- அனைவருமே என்னிடத்தில் கேட்கின்றீர்கள் ( எனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் என்று. ஆனால் ) நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடத்தில் தெரிவிக்க வேண்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோரும் என்னிடம் கேட்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்கின்றார் ( நம் குருநாதர் ).
அழகாக விளக்கம் அளிக்கும் அடியவர்:- நீங்கள் என்ன புண்ணியம் செய்தீர்கள் என்று சொல்லிவிட்டுக் கேளுங்கள் (நம் குருநாதரிடம்). நமக்கே நன்கு தெரியும் நாம் ஏதும் (புண்ணியங்கள்) செய்யவில்லை என்று. நாம் அனைவரும் நமது பிரச்சினைகளை (தேவைகளை) மட்டும் சொல்லவருகின்றோம் (கேட்கின்றோம்). நாம் பிறருக்கு நல்லதைச் செய்யச் செய்ய , நமது பிரச்சினைகள் தானாகத் தீரும் என்று குருநாதர் காலையிலிருந்து சொல்கின்றார். நமக்குள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பிறருக்கு நான் உதவியாக இருப்பேன் என்று மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ, வாக்காலோ நான் பிறருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று. உடனே செயல்படுத்துங்கள். அதற்கு அப்புறம் வாக்கு கேளுங்கள். நம் குருநாதர் நம்மை வழிநடத்துவார்கள்.
குருநாதர் :- இன்று நிச்சயம் அனைவருக்குமே ஒரு பின் சிறப்பான ஒன்றைச் சொல்கின்றேன். அதைச் செய்தாலே (வெற்றியடையலாம்). அனைவரும் போய் அவரவர் இடத்தில் உட்காருங்கள்.
(அடியவர்கள் அனைவரும் கலியுக வரலாற்றில் மிக முக்கியமான வகுப்பைக் கேட்கத் தயாராக , சத்சங்க வகுப்பில் குருநாதர் சுவடியின் முன் அமைதியாக அமர்ந்தார்கள்.)
குருநாதர் :- அப்பனே யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்கள் இடத்தில் சொல்.
( இப்போது குருநாதர் சொல்லச் சொல்ல உடனே அடியவர்கள் அனைவரும் அப்படியே உரைத்தனர். இது பொது வாக்கு. அனைவருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய, நீங்கள் அனுதினமும் சொல்ல வேண்டிய வாக்கு. வாழுங்கள் அந்த மகத்தான வாக்கின் உள் செல்வோம்.)
குருநாதர் :- தர்மம் செய்வேன்.
அடியவர்கள் :- தர்மம் செய்வேன்.
குருநாதர் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
அடியவர்கள் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
குருநாதர் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
அடியவர்கள் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
குருநாதர் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
அடியவர்கள் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
குருநாதர் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
அடியவர்கள் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
குருநாதர் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
அடியவர்கள் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல், பிறரும் கூட வாழவேண்டும்.
அடியவர்கள் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
குருநாதர் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
குருநாதர் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
குருநாதர் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
அடியவர்கள் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
குருநாதர் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
அடியவர்கள் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
( இந்த உறுதிமொழியைப் பின் வரும் பதிவிலும் படித்து அறிந்து உடனே செயல் படுத்தவும். சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு!)
( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்து பொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள் உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும் குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறை பிரச்சினை என்று இறை அருளால் உங்களுக்கு வரவே வராது.
குருநாதர் அகத்திய மாமுனிவர் வாக்கு - தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி:-
1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
)
குருநாதர் : அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்று என்னிடத்தில் வந்து, பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில் என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே?
சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனே உயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன் புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று.
ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம் எடுத்துக்கூறி ( யான் செய்ய இயலும்?)
அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒரு அறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால் மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று.
அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!!
( வணக்கம் அடியவர்களே , நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் அவர்களை இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. அகத்திய மாமுனிவர் அருளிய இந்த மகிமை புகழ் உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்ற உத்தரவிடும் வண்ணம், அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும் வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம் அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன் உழையுங்கள். நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் அவர்களுக்கு நாம் செய்யும் புண்ணியச் சேவைகள் மூலம் பெருமை சேர்ப்போம்.)
குருநாதர் :- இதனால் புண்ணியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் அவ்வாறு வளர்த்துக்கொண்டால் நிச்சயம் அவ் புண்ணியங்களே, உங்களைக் காக்கும் சொல்லிவிட்டேன். அப்படியில்லை என்றால் நிச்சயம் தரித்திரம்தான்.
குறை குறை என்கின்றார்களே! எதற்குக் குறை வருகின்றது? நிச்சயம் அறிந்தும் கூட உங்களிடத்திலேயே குறை ( கெட்ட கர்மா ) இருக்கின்றது. அதனால்தான் குறையே வருகின்றது. அக்குறையை நீக்க , பின் ஒரே ஆயுதம் புண்ணியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா?
குருநாதர் :- அறிந்தும் கூட என்னால் ( புண்ணியங்கள்) செய்ய முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும், பின் அதிகாலையில் நிச்சயம் இறைவனை நினைத்து இறைவா எந்தனுக்கு ஏதாவது செய் என்று கேட்டுக்கொண்டே இருங்கள். கேட்டுக்கொண்டே இருங்கள். நிச்சயம் இறைவன் தருவான். ஆனாலும் எதையும் கேட்கக்கூடாது என்று யானே (முன்பு) சொன்னேனே , ஆனாலும் ஏனென்றால் சோம்பேறியானவனுக்கே இதை யான் சொல்வேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கம்)
குருநாதர் :- அப்பனே கலியுகத்தில் இறைவன் இல்லை என்றே சொல்வான் மனிதன். அப்பனே தன் பிரச்சினைகளுக்காக ஓடுவான் (பலரிடம்) என்பேன் அப்பனே. ஆனால் என்ன செய்தால் பிரச்சினை தீரும் என்பது தெரியாதப்பா. ( ஜோதிடம், பூசை, பரிகாரம்) அதனில் சிக்கிக்கொண்டு, பணங்களை பறித்து, மீண்டும் (உங்களை) பாவத்தில் நுழைப்பான் அப்பா. இது தேவையா? வேண்டாமப்பா. முதலில் பக்குவங்களைப் பெற வேண்டும். அப்பனே பக்குவங்கள் யாருக்கும் இல்லையப்பா.
அடியவர்கள் :- (அமைதி)
குருநாதர் :- பக்குவங்கள் பின் பெற்றால்தான் வாழ்க்கை. அவ் பக்குவங்கள் பெறவில்லை என்றால் வாழ்க்கையே வீணாகப் போய்விடுமப்பா !!!!!!!. சொல்லிவிட்டேன் அப்பனே. அகத்தியன் (உங்கள்) நன்மைக்காகத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. என்னை நம்ப வந்துவிட்டீர்கள் அப்பனே. நிச்சயம் அகத்தியனை நம்பி வந்துவிட்டால், அப்பனே நிச்சயம் பாதுகாத்து , உயர் இடத்தில் வைப்பான் அப்பனே. அத்தகுதி உங்களிடத்தில் இல்லை அப்பனே. பின் அத்தகுதி உங்களிடத்தில் இல்லை என்றால், யான் கொடுத்தும் பலனில்லை. சொல்லிவிட்டேன்.
அடியவர்கள் :- (அமைதி)
குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் இறைவன் அனைவருக்கும் செய்வதில்லை அப்பனே. அனைவருக்கும் பாவங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. இதனால் பக்குவங்கள் பெற்றுக் கொண்டு, அப்பனே நீர் மோர் தானம், அப்பனே நீர் தானமும், மோர் தானமும் இன்னும் பல பல வகைகளில் கூட தானங்கள் செய்து வாருங்கள் அப்பனே. நிச்சயம் (உங்களுக்கான தனி) வாக்குகள் பெற்றுக் கொள்ளலாம் அப்பனே.
அதாவது அப்பனே, இதைத்தன் எதற்காகச் சொல்கின்றேன் (என்றால்) அப்பனே, நீங்கள் பின் நிச்சயம் வாழ்வதற்கே என்பேன் அப்பனே. உங்களையே, அதாவது நீங்களே உங்களைப் பார்க்க முடியவில்லை. இதனால் பிறரை எப்படித்தான் பார்க்கப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அதனுள்ளே அப்பனே என் சகோதரன், என் சகோதரி, என் தாய் , என் தந்தை என்றெல்லாம் அப்பனே, முதலில் உன்னைப் பாருங்கள் என்பேன் அப்பனே. அவை எல்லாம் தனித்தனி ஆன்மாதானப்பா. அப்பனே சொல்லிவிட்டேன். எப்பொழுதாயினும் உன்னிடத்திலிருந்து பிரிந்து செல்லலாம் அவ் ஆன்மா. இதற்காகவா போராட்டங்கள். முட்டாள்களே !!!! அறிவில்லாதவர்களே !!!! அறிவில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதப்பா. நீ செய்யும் புண்ணியங்களால்தான் யான் கொடுக்க முடியும். சொல்லிவிட்டேன் அப்பனே. புண்ணியங்கள் இல்லையப்பா!!!! புண்ணியங்கள் இல்லையப்பா!!!! தான் மட்டும் வாழ வேண்டும். தனக்காக வாழ வேண்டும். தன் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்றால் அப்பனே அவன் பிணமப்பா!!!!.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தன் கடமைகளைச் செய்து கொண்டு) பிறருக்காக வாழ வேண்டும் என்று சொல்கின்றார். புரிகின்றதா ஐயா?
அடியவர்கள் :- (அமைதி)
குருநாதர் :- இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆன்மா தனித்தனியப்பா. அதாவது நம் பிள்ளை, அதாவது சொந்த பந்தங்கள் இருந்தாலும் அவ் ஆன்மா சென்றுவிடுமப்பா. அப்பொழுது எங்கப்பா சொந்தங்கள்? தாய் எங்கே? தந்தை எங்கே? அண்ணன் எங்கே? தங்கை எங்கே? அப்பனே கூறுங்கள்?
அடியவர்கள் :- (அமைதி)
குருநாதர் :- இதனால் அப்பனே சித்தன் வழியில் வருபவர்கள் முதலில் பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். தெரியாமல் சொன்னாலும் , வீணாகப் போய்விடுவீர்கள். பிரச்சினைகளுக்குக் காரணம் என்றால் அப்பனே தன் தன் ஆன்மா என்பேன் அப்பனே. தன்னை முதலில் அப்பனே நல்லொழுக்கத்தோடு மாசில்லா வாழ்க்கை எதை என்று அறிய அறிய மாசுகள் நீக்குங்கள் அப்பனே மனதிலிருந்து. அனைவருமே நமக்கு சொந்தங்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அப்பொழுது இறைவன் வருவானப்பா. கையைப் பிடித்து உன்னைத் தூக்கிச் செல்வானப்பா.
அவை விட்டுவிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று அறிய அறிய நீ சொல்லிக் கொடுத்ததைத்தான் (உன்) குழந்தைகள் செய்யுமப்பா. அதனால்தான் அப்பனே முதலிலேயே யாங்கள் அதாவது என்னைத் தேடி வருபவர்க்கெல்லாம் நல்லது செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதே போலத்தான் அப்பனே, உன் பிள்ளைக்கு நீ நல்லது செய்தால் நல்லதாகவே வளரும். அனைத்தும் செய்யும் அப்பனே. அப்படி இல்லையென்றால் நீ தான் அதற்குக் காரணம் கூட. உன் பிள்ளைக்கு நீ (புண்ணியங்கள்) நல்லது செய் என்றெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கவேயில்லை அப்பனே. அப்பொழுதே உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லையா ??? என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியப்பா நியாயம்?
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஆலய முகவரி :-
ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர், மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.
Google map:-
https://maps.google.com/?q=11.024868,76.916664
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
OM SRI GURUVE SARANAM SARANAM . OM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDeleteஐயா, ஓம் அகத்தீசாய நம அய்யா நான் தினமும் அந்த மந்திரத்தை சொல்கிறேன் ஐயா
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDelete