21/3/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த அங்கோர்வாட் ஆலய வாக்கு பாகம் 2
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அறிந்தும் கூட இன்னும் அப்பனே திருத்தலங்களைப் பற்றி சரியாகவே மனிதர்களுக்கு தெரியவில்லையப்பா!!!
இதனால் அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் செப்புவேன் அப்பனே.
தன்னை தான் அறிதல் அப்பனே.. ஞானம் என்பேன் அப்பனே.
தன்னைத்தான் பின் அறியாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே கெடுதல்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா.
அவை மட்டும் இல்லாமல் அப்பனே திருத்தலத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே அத்திருத்தலத்தை அறிந்து அப்பனே நிச்சயம் சென்றால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவை தன் நிச்சயம் அப்பனே பின் அதாவது பின் குறைவே என்பேன் அப்பனே...
இதனால்தான் அப்பனே சில திருத்தலங்களை பற்றி செப்பி அப்பனே மனிதனை பக்குவப்படுத்தி அப்பனே... அங்கே இறைவனையும் காணலாம் என்பேன் அப்பனே.
அப்பொழுதெல்லாம் நிச்சயம் திருத்தலத்தை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு அப்பனே பக்தியை காட்டினார்கள் என்பேன் அப்பனே.
அப்பொழுது இறைவன் நேரடியாக தரிசனம் பின் கிடைத்தது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே... இத்திருத்தலத்தைப் பற்றி சொல்லப் போகின்றேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும்.. கிரகங்களின் சேர்க்கையும் கூட அப்பனே அறிந்தும் பின் எதை என்று புரிய.
(இந்த இடத்தில்)
அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் இவைதன் அப்பனே இங்கு ஒரு பெரிய மலை இருந்ததப்பா..
(தற்போதுஆலயம் இருக்கும் இடத்தில் முன்பு)
அப்பனே இவ் மலையில் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பின் விஷ்ணுவானவன் வந்து வந்து அப்பனே தங்குவானப்பா!
அப்பனே இவ் மலை நிச்சயம் தன்னில் கூட விஷ்ணுவுக்கு பின் பலமாக பிடித்ததப்பா!!! அறிந்தும்!
இதனால் அப்படி நிச்சயம் தன்னில் கூட அழகாகவே இங்கு உறங்கி உறங்கிச் செல்வானப்பா அறிந்தும் அறிந்தும் கூட!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட விஷ்ணு இங்கு இருக்கின்ற பொழுது அப்பனே தேவாதி தேவர்களும் கூட அப்பனே அதாவது இந்திரன்!! கூட சந்திரன்!! கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் இங்கு வருவார்களப்பா.
பின் அதாவது நாராயணனை அப்பனே கண்டு காண்பதற்கு.!!
அப்பனே இப்படியே அறிந்தும் எதை என்று கூட.
இதனால் அப்பனே நாராயணன் இங்கு பின் அழகாகவே அறிந்தும் பின் இங்கேயே தங்கி விடுவானப்பா!!
இதனால் பின் இந்திரனும் அப்பனே நிச்சயம் தேவாதி தேவர்களும் கூட வந்து நிச்சயம்... பின் நாராயணனே!!!! நீ இங்கு இப்படியே தங்கி விட்டால்.... நிச்சயம் என்ன ஆவது?? எப்படி? ஆவது??? என்று!!
நீங்கள் தான் பின் காக்கின்ற தெய்வம் அல்லவா!!!.... என்றெல்லாம்!!
பின் நாராயணனும்... பின் தேவனே!!!! அறிந்தும் இதை என்று அறிய.... கலியுகத்தில் இப்படித்தான் பின் நடக்கப் போகின்றது!!
மனிதன் பின் உண்மையை தெரிந்து கொள்ளாமல் வாழ போகின்றான்.
இதனால் நிச்சயம் பின் அதனால் எவ்வாறு காத்தல்? என்பவை எல்லாம் இங்கு தான் வந்து யான் யோசித்துக் கொண்டே இருக்கின்றேன்.
ஏனென்றால் மனிதன் கலியுகத்தில் நிச்சயம் எதை... அதாவது உண்மையை செப்பினாலும்... அதை பொய் என்று சொல்வான்.
அதாவது பின் பொய்யை தான் நம்புவான். பின் அதாவது கலியுகத்தில் உண்மையைச் சொன்னால்... இவன் பைத்தியக்காரன் பின் இவை எல்லாம்.. பொய் என்று சொல்வான்... பொய்யை உண்மையாகுவான். பின் உண்மையை பொய் ஆக்குவான்.. கலியுகத்தில்.
இதுதான்!! என்று!!
பின்!!!
தேவர்களும் கூட பின் நிச்சயம்... நாராயணனே... இறைவா!!! இப்படியா? நடக்கப் போகின்றது!! கலியுகத்தில் என்று!!!
நாராயணன்!!! இதனால்தான் யான் அமர்ந்து விட்டேன் இங்கு.. இவ் மலையில்!!
இதனால் நிச்சயம் மனிதன் என்னென்ன ஏது என்று அறிய பின் அறிந்த போதிலும் அதற்கு தகுந்தார் போல் நடக்க மாட்டான் ! நிச்சயம் தன்னில் கூட! என்றெல்லாம்.
இதனால் போக போக நிச்சயம் தன்னில் கூட விஷ்ணுவும் வருத்தப்பட்டான் நிச்சயம்... அறிந்தும் ஏன்? இவ்வாறெல்லாம் நிச்சயம் என்றெல்லாம்.
ஆனாலும் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு.. நிச்சயம் தன்னில் எதை என்று புரிய என்றெல்லாம்.
நிச்சயம் மீண்டும் பின் அறிந்தும் கூட இங்கு வந்து பின் அப்பொழுதெல்லாம்... ஒன்றாகவே சரிசமமாகவே... இருந்தது பின் அறிந்தும் கூட.(இந்து பௌத்தம்)
ஆனாலும் காலப்போக்கில் அவை இவை என்றெல்லாம் பின் பிரித்துக் கொண்டார்கள். இதையும்!!
இதுவும் கூட மனிதன் செயலே!!!
ஆனாலும் இதுவும் கூட ஒரு அழிவிற்கு காரணமே!!! இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் இங்கும் இன்னும் அதாவது அறிந்தும்.... லங்கா (ஸ்ரீலங்கா) விற்கும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் பல பல மலைகள் மீது ஏறி ஏறி நிச்சயம் தன்னில் கூட பின் உட்கார்ந்து உட்கார்ந்து!!! விஷ்ணு!!
அவ்விடத்திற்கெல்லாம் நிச்சயம் சென்று விட்டால்... மனிதன் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் சாதிக்கலாம் என்பேன்.
நிச்சயம் அனைத்தும் சாதித்து நிச்சயம் ஜீவசமாதியுடன் நிச்சயம் அறிந்தும் கூட... அறிந்தும் எவை என்று அறிய... நிச்சயம் பின் இவ்வாறு... எவ்வாறு நடக்கின்றது என்பதையும் கூட.. கணிக்கலாம் என்பேன்.
இதே போலத்தான் பல ஞானியர்கள் நிச்சயம் தன்னில் கூட பல பிறவிகளில் பிறந்து பிறந்து அங்கங்கே அலைந்து திரிந்து கடைசி தன்னில் ஞானங்கள் பெற்று அவ் ஞானத்தின் மூலம் நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட பல மனிதர்களுக்கு உபதேசம் செய்தனர்..
இன்றளவும் பின் அது நிச்சயம் பின் தேங்கி!!! அதுமட்டுமில்லாமல் நிச்சயம் பின் மனிதனின் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கின்றது!!
இதனால்தான் நிச்சயம் பின் அதாவது முதலில் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் சிறிய சிறிய துகள்கள் நிச்சயம் தலையில் இருக்கும்... அதாவது மூளைகளில் கூட.
நிச்சயம் தன்னில் கூட அவை தன் இயங்க வைப்பதற்கு சில திருத்தலங்கள் இருக்கின்றது.
அதனால்தான் அங்கு செல்க!!!!.... இங்கு செல்க!!!... என்றெல்லாம்!!
அங்கெல்லாம் சென்றிட்டால் அத்துகள்கள்.... அழகாகவே நிச்சயம் பின் அசைந்து அசைந்து நிச்சயம் பின் அதாவது சக்திகள் ஏற்பட்டு... அதுவும் செயல்படும்.
இவ்வாறு செயல்படுகின்ற பொழுது வெற்றிகள் மனிதனுக்கு கிடைக்கும்.
ஆனாலும் நிச்சயம் அவை செயல்படாமல் நிச்சயம் இருப்பதற்கு காரணங்கள்.. இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட... பின் மாந்திரீகமே.... இப்பொழுது கூட.
இதை தன் சரியாகவே அறிந்தும் எதை என்று புரிய... இவ்வாறு(மாந்திரீகம்) பயன்படுத்தினால் அவ் துகள்கள் அப்படியே இருக்கும் என்பேன் நிச்சயம் தன்னில் கூட.
அசையாது!!
இதனால் சில காலங்கள் பின் அதாவது வெற்றிகள் அதாவது மாந்திரீகத்தின் வழியே மீண்டும் பின் அவ்வாறு பின் அசையாமல் அப்படியே நிற்கின்ற பொழுது நிச்சயம் ஒரு பிரயோஜனமும் இல்லை.. கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கும். இருந்து கொண்டே இருக்கும் நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் ஒவ்வொரு விதமாக இத்தனை ஆண்டுகளில் பின் அதனை தன் பின் நிச்சயம் இத்தனை பின் மாற்றலாம் என்பதெல்லாம்..
(குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மாந்திரீகம் செல்லுபடியாகும்)
ஆனாலும் இவை தன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே (மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டு) அப்படியே இருக்கும் பொழுது... இவை தன் காலங்கள் கடந்து போய் விடுகின்றது!! இதனால் மாற்ற முடிவதே இல்லை!
அது நிச்சயம் அப்படியே பின் அதாவது பின் அத் துகள்கள் நிச்சயம் பின் சக்திகள் இழந்து போகின்ற பொழுது நிச்சயம் எங்கு சென்றாலும்... அப்பனே பின் நிச்சயம் ஒன்றும் நடக்கப்போவதே இல்லை என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே உன்னிடத்திலே சக்திகள் இருக்கின்றது!! அப்பனே பின் அதை முதலில் எழுப்பு!! என்பேன் அப்பனே.
அதை எழுப்பிட்டால் அப்பனே நிச்சயம் பல உண்மைகள் தெரியவரும் என்பேன் அப்பனே.
நிச்சயம் நீ நீடுழி பின் வாழலாம் என்பேன்.
அதனால் அப்பனே.... பின் அனைத்தும் பின் மனிதனிடத்தில் கொடுத்துத்தான் அனுப்புகின்றான் என்பதை எல்லாம் அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே விஷ்ணு பல வழிகளில் சென்று அப்பனே... ஆனாலும் இங்கு அறிந்தும் கூட இங்கு தான்... அடிக்கடி வருவானப்பா!! அழகாகவே அறிந்தும்.
இதனால் ஏன்? எப்படி ? என்று புரியாமலும் கூட நிச்சயம் தன்னில் இதை என்று உணர்ந்தும் கூட அப்பனே.
இதனால் அப்பனே பிரம்மனும் ஈசனும் அப்பனே இன்னும் பின் இங்கு வந்து உட்கார்ந்து அப்பனே... எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே சிந்தித்து... சிந்தித்து!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட பின் கிரகங்கள் சேர்க்கையும் கூட அறிந்தும் கூட...
இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது...
"""" சூரியவர்மன் !!!... அறிந்தும் கூட எதை என்று புரிய நாராயணன் மீது பற்று கொண்டவனப்பா!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய!!
அப்பனே ஆனாலும் ஒரே பிறவியில் நிச்சயம் இல்லை அப்பா... பல நூறு பின் அப்பனே பின் பிறவிகளில் பிறந்து அப்பனே பின்... நாராயணா!! நாராயணா!! என்று நினைத்து நினைத்து அப்பனே பின் யோசனை வந்தது!!! நிச்சயம் நாராயணனுக்கும் கூட. (பல பிறவிகளில் நாராயண பக்தி)
நிச்சயம் பின் நிச்சயம் ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய...அவ் ஆன்மாவை (சூரியவர்மனின்) பின் வரவழைத்து நிச்சயம் பின் நிச்சயம் அறிந்தும் கூட....
நாராயணன்!!!
சூரியனே!! என்று அழைத்திட்டு... நிச்சயம் பின்... பல வழிகளிலும் என்னை பற்றி புரிந்து கொண்டாயல்லவா!!!!!
நிச்சயம் உந்தனுக்கு ஒரு பிறவியை யான் கொடுக்கின்றேன்!!!
நிச்சயம் பின் கலியுகத்தில் மக்களை சிறிதளவாவது மாற்று!! என்று!!
அறிந்தும் எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட பின்....
சூரிய வர்மனும்!!!.... அதாவது இறைவா!!!... போதும்!!!!...யான் பல பிறவிகளை கடந்து கடந்து வந்தேன்.
நிச்சயம் தன்னில் அனைத்தும்.. அதாவது என் கண்களுக்கு நீயே புலப்பட்டாய்!!!.. போதும்!!.. இப்பொழுது கூட புலப்பட்டுக் கொண்டிருக்கின்றாயே அதுவே போதும்!!
நிச்சயம் உடம்பைப் பெற்று விட்டால் எவ்வாறு கடினம்!!!.... என்பதை எல்லாம் நிச்சயம் அறிவேன்.
அதனால் நிச்சயம் தன்னில் கூட!!! போதும்!! என்று!!
அதாவது நிச்சயம் அறிந்தும் கூட பின் நாராயணனும் சொன்னான்!!!
நிச்சயம் உந்தனுக்கு அறிந்தும் எதை என்று புரிய..... எத்தனை ஆண்டுகள் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமோ!???!... நிச்சயம் அத்தனை ஆண்டுகள் அவ்வாறு வாழ்ந்திட்டு... பின் நிச்சயம் நீயே... போதும் என்று சொன்னால்தான்... நிச்சயம் என்னிடத்தில் வருவாய்...
அப்படி ஒரு பிறவியை உந்தனுக்கு கொடுக்கின்றேன்!!.. நீ பிறவியை எடு!! செல் என்று!!
சூர்யா வர்மனும்!!!...
இறைவா!!!.... நிச்சயம் ஆனாலும்...!!!
(சூரிய வர்மன் மனதிற்குள்)
மறைமுகமாக நிச்சயம் அதாவது... ஓராண்டு வாழ்வோம்... பின் நிச்சயம் அதாவது.... நாராயணன் பிறவியை (அதாவது பிறவியின் விதியை)... நம்மிடத்திலே கொடுத்து விட்டான் அல்லவா!!!
பின் நிச்சயம் ஏதோ ஒரு சில ஆண்டுகள்... அதாவது இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் இன்னும் தெரியும் வரை 10 ஆண்டுகள்... வாழ்ந்துட்டு பிறவியை முடித்துக் கொண்டு பின் மீண்டும்... நாராயணனிடத்தில் போதும் என்று... அதாவது பிறவி போதும் நாராயணனே!!!! என்று நாராயணனிடத்தில் சொல்லிவிட்டால்....நம்தனை அழகாக எடுத்துக் கொள்ள போகின்றான்.. என்று!!!
அதனால் சரி என்று சொல்லிவிடுவோம் என்று மனதில். நினைத்துக் கொண்டான்.
ஆனால் இதுவும் நாராயணன் ஏற்பாடே!!
சரி நாராயணரே!!!... யான் அப்படியே செய்கின்றேன்.. பின் அதாவது நீயும் ஒரு பிறவியை கொடுத்து விட்டாய்... நிச்சயம் உன்னிடத்திலே... எப்பொழுது யான் உடம்பை விட்டு வரலாமோ... அப்போது வந்து விடலாம் என்று.
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு அரசனுக்கு பின் நிச்சயம்... பின் அதாவது ஒரு மகனாக பிறந்து... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது... பின் பிறந்த உடனே ஒளி தெரிந்தது... கண்களில் நிச்சயம் தன்னில் கூட.
பின் நெற்றியில்... சூரியன் தெரிந்தது!!!!
அதனால் பின் நிச்சயம் சூரியனே... என்று பின் அறிந்தும் அழைத்தார்கள்... அவன் நாமமும் கூட. (சூரிய வர்மன் திருநாமம்)
இதனால் போகப் போக நிச்சயம் தன்னில் கூட... பல கலைகளையும் கற்றான்... நிச்சயம் பின் அறிந்தும்.
இதனால் சிறந்து விளங்கினான் பின்.. பல வழிகளிலும் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் பல வெற்றிகளை கண்டான். அங்கும் இங்கும். நிச்சயம் நாராயணன் அருளால்.. அனைத்தும் வென்றான்.
அறிந்தும் இன்னும் பல பல அதாவது பல திருத்தலங்களுக்கு சென்று... அழிந்து கொண்டிருக்கும் மக்களை நிச்சயம் மீட்க மக்களை காக்க பின் நீண்டு... நிச்சயம் தன்னில் கூட.
இதனால் பல பல வழிகளிலும் கூட பின் (எதிரிகள்) கெடுதல்கள்... நடத்திக் கொண்டிருக்க நிச்சயம் தன்னில் கூட அவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் சென்று சென்று சென்று !!.
இதனால் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது... நிச்சயம் மீண்டும் இவ்வாறு தான் சில வழிகளிலும் கூட திருத்தப் பார்த்தான் நிச்சயம் மக்களை!!... ஆனாலும் திருந்திய பாடில்லை.
ஆனாலும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும்...இவ் மலைக்கு அறிந்தும் கூட... வந்து நிச்சயம்... அறிந்தும்!!!
நாராயணரே!!!.... எந்தனுக்கு போதும் பிறவிகள்!!!
வேண்டாம். மனிதன் திருந்த போவதில்லை!!!.... அழியட்டும்!!!! அழிந்து போகட்டும் என்று!!.. நிச்சயம் தன்னில் கூட!
பின் நிச்சயம் பின் அதாவது.... நாராயணனும்!!!
சூரியனே!!!!.... அறிந்தும் கூட!!.. நிச்சயம் நீ அவ்வாறெல்லாம் சொல்லாதே!!!
உன்னாலே முடியவில்லை என்றால்?? பின் யாரால் முடியும்???
நீ!! பல பிறவிகளை கண்டு நிச்சயம் அனைத்தும் தெரிந்து!!!... பல இதிகாசங்களையும் கற்று.. பல மந்திரங்களையும் கூட தந்திரங்களையும் கூட தெரிந்து வைத்துக் கொண்டு நிச்சயம்!!...
பின் ஏன் உன்னை அனுப்பினேன்???.. இதற்காகவா??? இவ்வாறாகவா????.
நீ இவ்வாறெல்லாம் சொல்லக்கூடாது நிச்சயம் அறிந்தும் கூட.
எதை என்று புரிய அறிந்தும் உண்மைதனை கூட!!!
சூரியனும்!!....(சூரிய வர்மன்)
நிச்சயம் பின் மனிதனை நிச்சயம் திருத்த முடியாது ஏனென்றால்.. பின் அடித்து திருத்தினாலும் நிச்சயம் பின் அறிந்தும் பின் அதாவது பாவமாக இருக்கின்றான் என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது என்னை உன்னிடத்தில் அழைத்துக் கொள்... பின் யான் உன்னிடத்திலேயே இருந்து கொள்கின்றேன்.என்று!
நிச்சயம் தன்னில் கூட !
நாராயணனும்... பின் சூரியனே நிச்சயம் ஏதாவது கேள்... என்று நாராயணன் கூட.
பின் நிச்சயம்... சூரியவர்மனும்.... பின் யான் என்ன கேட்க வேண்டும்???... நாராயணனே!!!!
அறிந்தும் அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் நீ.... அனைத்தும்.. அதாவது யான் எதை நிச்சயம் பின் கேட்டாலும்... நீ தரத்தான் போகின்றாய்!!!
பின் அதனை வைத்துக் கொண்டு... யான் என்ன செய்வது???... என்றெல்லாம்!!!
நாராயணனும் பின் நிச்சயம் ஏதாவது கேள் என்று!!!... நிச்சயம் தன்னில் கூட!
சூரியவர்மன்.
அதாவது... இப்பொழுது ஒன்றைக் கேட்கின்றேன்.... நிச்சயம் தன்னில் கூட...
அதாவது நாராயணரே!!.. இப்பொழுது நீர் அமர்ந்திருக்கின்றாயே!!!இவ் மலையை... நிச்சயம் தன்னில் கூட... மலையில் நிச்சயம் உந்தனுக்கு அதாவது பின் யாரும்... ஏற்படுத்தாதவாறு நிச்சயம்... யான் ஒரு திருத்தலத்தை அமைக்க வேண்டும்.. அதற்கு நீ சந்தர்ப்பத்தை கொடு என்று.
பின் வந்தது... கோபம் நாராயணனுக்கு கூட!!!
அடடா....இவ் மலை எந்தனுக்கு பிடித்தமானது... ஆனாலும் நீ இதையே கேட்கின்றாயே!??... நிச்சயம் அறிந்தும்!
சூரியவர்மன்.
நாராயணரே!! உன்னை தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... நாராயணா!!!... இது கூட எந்தனுக்கு பின் கொடுக்க மாட்டாயா?? என்ன!!!
நாராயணன்.
சரி மகனே!!!! உனக்காக யான் எடுத்துக் கொடுக்கின்றேன்... அதாவது உன் புகழ்... அறிந்தும் நிச்சயம் எதை என்று கூட இவ்வுலகம் அழியும் வரை... பின் அதாவது நிச்சயம் உன் புகழை பேசட்டும் என்று!... நாராயணன் கூட!! மலையை கொடுத்துவிட்டு இங்கிருந்து... நிச்சயம் தன்னில் கூட... ஏழுமலைக்கு (திருப்பதி திருமலை) அழகாகவே பின் சென்று விட்டான்!
அனைவரும் அறிந்தும் கூட அதாவது... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட தேவாதி தேவர்களும் இந்திரனும் கூட.... நிச்சயம் இவ்வாறு ஒரு பக்தனுக்கு... நிச்சயம் தனக்கு பிடித்த மலையை நாராயணன் கொடுத்து விட்டாரே என்று நிச்சயம் பின்...
அப்பனே பின் இதனால் அறிந்தும் கூட... இதனால் அறிந்தும் கூட சொல்கின்றேன் அப்பனே...
இறைவனைப் பற்றிக் கொண்டால்.... இறைவன் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வானப்பா!!!... அனைத்தும் செய்ய தயாராகவே இருக்கின்றான் என்பேன் அப்பனே!
ஆனால் உண்மையான பக்திகள் இல்லையப்பா.
அப்பனே ஏதோ அப்பனே... இறைவன் அப்பனே பின்... அதாவது நிச்சயம்(சயனம்) இறந்து கிடக்கின்றான் என்று நிச்சயம் எதை எதையோ நிச்சயம் செய்து கொண்டிருப்பது.
ஆனாலும் அப்பனே இறைவன் வலம் வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!
நிச்சயம் இறைவனுக்கு ஒன்றும் தேவையில்லை என்பேன் அப்பனே... சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.
இறைவன் தான் உங்களுக்கு பிச்சை இடவேண்டும் என்பேன் அப்பனே.
ஆனால் இறைவனுக்கு அப்பனே நீங்கள்... பின் அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்று அப்பனே... உங்களுக்கு உங்கள் வினையை அப்பனே.. உங்களுக்குள்ளே அப்பனே நீங்களே பின் சம்பாதித்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!
என்ன பயன் இதற்கு??? எவை என்று அறிய!!!
இதனால் அப்பனே நிச்சயம் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும்...
அய்யய்யோ!!!!! இவ் மலையை நிச்சயம் தன்னில் கூட கேட்டுவிட்டோமே!!!... ஆனால் எப்படி பின் எதை என்று அறிய அறிய... எப்படி பின் வடிவமைப்பது?? என்று சூரிய வர்மனும் நிச்சயம் மீண்டும்... பின் அதாவது செல்வோம்... அதாவது நாராயணனிடமே!!!
நாராயணன் சென்று விட்டானே என்று மீண்டும் பின்... இங்கிருந்து புறப்பட்டான் நிச்சயம் தன்னில் கூட. பின் திருமலைக்கு.
(காம்போஜ நாட்டிலிருந்து அதாவது கம்போடியாவிலிருந்து நாராயணனை காண திருமலை திருப்பதிக்கு சூரியவர்மன் பயணம்)
அதாவது ஏழுமலையான் இடத்தில்... ஏழுமலையைத் தாண்டி இதனால்... பின் மீண்டும் ஆனாலும்... சூரியவர்மன் வருவதை கண்டு நாராயணன் நிச்சயம் தன்னில் கூட
என் மகன் வருகின்றான் என்று எண்ணி நிச்சயம் தன்னில் கூட வரட்டும் பின் என்று!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சூரியவர்மன் வந்து
நாராயணரே!!... பின் அதாவது பக்தனுக்கு நிச்சயம் அறிந்தும் கூட.. மலையை கொடுத்து விட்டாயே... நிச்சயம் தன்னில் யாருக்கும் பின்... உங்களுக்கு இது பிடித்தார் போல் இருந்தது!!
ஆனால் எந்தனக்கு கொடுத்து விட்டாய்!! அதனால் நிச்சயம் தன்னில் கூட... யான் பின் அதாவது எத்தனை ஆண்டுகள் என்று இன்னும் பின் ஆண்டுகளை நீட்டிக்கொண்டே நீட்டுத்து பல ஆண்டுகள் வாழ வேண்டும் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்... நிச்சயம் யான் வாழப் போகின்றேன் என்றெல்லாம்.. நிச்சயம்.
ஆனால் நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அதாவது பின்.... எப்படி?? பின் அதாவது... திருத்தலத்தை வடிவமைக்க வேண்டும் என்பது எந்தனுக்கு தெரியவில்லை!!... இதனால் நீ தான் வடிவமைத்து தர வேண்டும் என்பதையெல்லாம்... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நாராயணனும் இப்படி செய்!!! அப்படி செய் என்றெல்லாம்!!!.. பின் நிச்சயம் அதாவது எவை என்று அறிய... அதாவது ஒரு நூறு நாட்கள் அறிந்தும் கூட நாராயணன் சொல்லிக்கொண்டே சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் பின் இவ்வாறு பக்க பலமாக அறிந்தும் கூட... எந்தனுக்கு அறிந்தும் கூட பின்... யாரையாவது எந்தனுக்கு துணையாக விட்டுவிடு !! என்று சூரியவர்மன் நாராயணனிடம்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட அதாவது... நாராயணன்
மாமுனியே!!!.... என்று எதை என்று அறிய அறிய என்னையும் கூட (குருநாதர் அகத்தியர் பெருமானை)... பின் நாராயணன் அழைத்தான்!
பின் அகத்திய மாமுனிவரே!!!.. என்று!!
நிச்சயம் இவந்தனக்கு அருள் புரியட்டும்... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட... இவர்கள் அதாவது... இவந்தனுக்கு (எப்படி திருத்தலத்தை அமைப்பது என்று) சொல்லிவிட்டேன்!!! இடை இடையே இவன் (சூரியவர்மன்) மறந்து விடுவான்!
இதனால் மாமுனிவரே!! நீங்கள் இவன் அருகிலே இருந்து நிச்சயம் தன்னில் கூட பல பல... பின் சேவகர்களையும் அனுப்புகின்றேன்..யான் நிச்சயம் தன்னில் கூட..
அழகாக இவன் விருப்பப்படி அனைத்தும் நிறைவேறட்டும்!! அதற்கு நிச்சயம் துணை புரியுங்கள் என்று.. நாராயணன் என்னிடத்தில் நிச்சயம்!
அப்பப்பா!!!.. அறிந்தும் கூட சரி!!!
நிச்சயம் பின் யானும் நாராயணன் சொல்லிவிட்டானே என்று!!
இதனால் தான் அப்பனே என் பக்தர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு பின் தேவையானதை எல்லாம் பின் நிச்சயம் யான் பெற்றுத் தர முடியுமப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் கேட்டு அப்பனே!!
ஆனாலும் நீங்கள் அப்பனே... சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
அப்படி நடந்து கொண்டால் தர்மத்தோடு அப்பனே பின் வாழ்ந்து வந்தால் தான் அப்பனே...யாங்கள் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே.
அப்பனே எதை என்று புரிய அதனால் அப்பனே நிச்சயம் என்னென்ன... அப்பனே பின் உங்களுக்கு தகுந்தார் போல்... உங்களுக்கு என்ன அப்பனே.. உங்களுக்கு கொடுத்தால் நீங்கள் என்ன எப்பொழுது செய்வீர்கள் என்பவையெல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே சுயநலத்தோடு அப்பனே நம் தனக்கு வேலை வேண்டும் திருமணம் வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கேட்டுக் கொண்டிருந்தால் என்ன பயன்?? என்பேன் அப்பனே!!
அப்பனே உந்தனுக்கு வேலைகள் வேண்டுமென்றால் அப்படி நிச்சயம் பல வழிகளில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல... ஜீவராசிகளுக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே.
பின் திருமணம் வேண்டுமென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் இயலாத பின் கன்னிப் பெண்களுக்கெல்லாம் நிச்சயம் அதாவது அப்பனே... முடிந்த அளவு வேலைகள் (திருமணத்திற்கு உதவிகள்) அப்பனே செய்து அப்பனே தாலி பாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!
இதனால் சிறப்பான மனைவியும் கூட இறைவன் அமைத்துக் கொடுப்பானப்பா.
அறிந்தும் கூட!!
குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... குழந்தை பாக்கியத்தை பெற்றும் நலமாக நீடூழி வாழ வேண்டும் என்றால் அப்பனே.... பின் உயிர்ப் பலி இடக்கூடாது என்பேன் அப்பனே.
அப்படி இட்டு விட்டால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட உங்கள் குழந்தைகள் அப்பனே நிச்சயம் அப்பனே.. வாழ்வில் கல்வி கற்கலாம்... அப்பனே ஆனாலும் பின்... 20 வயதிற்கு மேல் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது அதற்குள்ளே... பல நோய்கள் அப்பனே ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் அப்பனே தவறான எண்ணங்கள் தோன்றி... அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் அவர்கள் கீழ் நோக்கி சென்று கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!
நீங்கள் அப்பனே பின் என்ன செய்கின்றீர்களோ... அதை தன் நிச்சயம் அப்பனே... குழந்தைகள் செய்யும் அப்பனே செப்பிவிட்டேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் பக்குவப்படுங்கள் அப்பனே... தெரியாமல் செய்து விடாதீர்கள் அப்பனே... ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
மீண்டும் அப்பனே சூரியவர்மன்... இங்கு வந்தானப்பா!!! (கம்போடியாவிற்கு) அறிந்தும் கூட இதனால் அப்பனே சரியாகவே.
(தற்போது அங்கோர் வாட் ஆலயம் இருக்கும் இடம் சூரியவர்மன் காலத்தில் நாராயணனுக்கு பிடித்த மலை . அந்த மலையை குருநாதர் சொற்படி கேட்டு நாராயணன் அனுப்பி வைத்த வேலையாட்களை வைத்து வெட்டி செதுக்கி குடைந்து உருவாக்கப்பட்டது தான் தற்போது இருக்கும் கோயில்)
அப்பனே இவ் பெரிய மலையை கூட!!!
(செதுக்குவதற்கு)
அப்பனே சேவகர்களையும் கூட அப்பனே நாராயணன் அனுப்பினானப்பா.
இதனால் அப்பனே நன்மைகளாகவே அப்பனே கேட்டு கேட்டு அப்பனே பின் இங்கிருந்து எதை என்று... அறிய அறிய இங்கிருந்து சிறிது தூரத்தில் அப்பனே நிச்சயம்... தன்னில் கூட அப்பனே தங்க மலை அப்பனே.. அப்பனே உண்டு... வைர மலையும் உண்டு என்பேன் அப்பனே.
அங்கிருந்து எடுத்து வந்து எடுத்து வந்து அப்பனே இதை சரியாகவே அறிந்தும் கூட பின் அதாவது பின்....... சூர்ய வர்மன்
"" என் நாராயணனுக்கு வைரம் பிடிக்கும் என்பதற்கிணங்க!!!... அப்பனே நிச்சயம் சிறிது சிறிதாக இவ் மலையை வெட்டி எடுத்து வெட்டி எடுத்து... வெட்டி இடித்து அப்பனே... பின் அறிந்தும் கூட.
யானும் அப்பனே அருகிலே இருந்து... இப்படி செய்!!! அப்படி செய் என்பதையெல்லாம்... அப்பனே நிச்சயம்... சூரியனுக்கு (வர்மனுக்கு ) சொல்லிச் சொல்லி!!!!
அப்பனே நன் முறைகளாகவே அப்பனே.
ஆனாலும் அழகாகவே வடிவமைத்தான் அப்பனே.
அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் இதன் அடியிலும் கூட அப்பனே பின் எப்பொழுதும் எங்கு பின் எதை என்று அறிய அறிய... அப்பனே ஆனாலும்.. இவை ஒரு நாள் மறையும் என்பது சூரிய வர்மனுக்கு தெரியுமப்பா.
அப்பனே ஆனாலும்... அப்பனே பின் இடையிலே அதாவது பூமிக்கு அடியிலே அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட... என் நாராயணனுக்கு பிடித்தவாறு... என்று அப்பனே பின் அறிந்தும் கூட... அதாவது வைரத்தை கீழே இட்டு விட்டால் நிச்சயம் பின் இங்கு வருவோர்கள் நிச்சயம் சில கர்மங்களை அழித்து... புண்ணியங்கள் பெறுவார்கள் என்பதற்கிணங்க.... இதை மிதித்தாலே!!!(ஆலயத்திற்குள் கால் வைத்தாலே) போதும் என்பதற்கிணங்க. தங்கமும் கூட அப்பனே இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட... அப்பனே பல வழிகள் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு... நிச்சயம் சரி பாதியாக அப்பனே... எங்கெங்கு எவை என்று அமைக்க வேண்டும்? என்று எண்ணி!!!
இங்கு வந்தாலே சில பாவங்கள் போகும் என்பதற்கிணங்க அப்பனே அறிந்தும் அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே மனதில் எழுதி எழுதி (நினைத்து நினைத்து) அப்பனே நிச்சயம் அப்பனே அப்படியே வடிவமைத்தானப்பா!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே இதைச் சார்ந்து பிரமிடுகளையும் கூட!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பல சேவகர்களையும் கூட நிச்சயம் பின்... அதாவது மீண்டும் பின் நாராயணன் இடத்தில் சென்று நிச்சயம் இவை எப்பொழுதும் சக்தி நிச்சயம் இங்கு எவை என்று அறிய அறிய... எப்போதாவது இதை மனிதன் அழித்து விடுவான்...... இதனால் நிச்சயம் தன்னில் கூட அழியாதவாறு எப்பொழுதும் சக்திகள் இருக்க வேண்டும் என்பதற்கிணங்க!!!
நிச்சயம் நாராயணன் கூட உடனடியாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் எதை என்று புரிய... நாராயணன் பக்தியாக இருந்தவர்களை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அங்கே..(ஆலயத்திற்கு அடியில்). கீழே இருங்கள் நிச்சயம்... இங்கு வருபவர்கள் எல்லாம் அவர்களின் பாதம் பட்டால்... அவர்களின் கர்மா தொலையட்டும் என்பதற்கிணங்க...
நிச்சயம் (நாராயணன் பக்தர்கள்) அவர்களுடைய ஆன்மாக்களும் இங்கே நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது பின் சூரிய வர்மனுக்கு ஏற்ற நிச்சயம் தன்னில் கூட.
இதுதான் பக்தி என்பது!!!
தன் பக்தனுக்காக இறைவன் அனைத்தும் செய்வான்.
ஆனால் இப்பொழுது அவ் பக்தி இல்லையே!! உண்மை பக்தி இல்லையே கலியுகத்தில்.
பின் எப்படிச் செய்வான் இறைவன்????
தெரிந்து கொள்ளுங்கள்!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிந்தும் கூட இங்கு சக்திகள் பலமாகவே... இருக்கின்றது இன்னும் கூட.
யார் ஒருவர் இங்கு வருகின்றார்களோ!! இங்கு வந்து கால் மிதிக்கின்றார்களோ!!
அவர்களுக்குப் பின் வாழ்க்கையில் பின் அனைத்தும் மாறும் என்பேன்... ஆயுள் நீட்டிக்கும் என்பேன்..
சில பின் அறிந்தும் எதை என்று கூட... அவ்வாறு சக்திகள் இங்கு இருப்பதால் நிச்சயம் தன்னில் கூட உடம்பில் உள்ள பின் தீய வினைகளும் அகன்று நிச்சயம் பின் நல் சக்திகள் நிச்சயம் பின் கிடைக்கப்பெற்று நிச்சயம் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
நிச்சயம் இதனால் தான் ஆனாலும் பல விஷயங்கள் தெரியாமல் போனது.
ஆனாலும் இவை தன் கூட.. அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்கிணங்க சூரிய வர்மனே... நிச்சயம் நாராயணன் இடத்தில் வரம் கேட்டு விட்டான்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் இப்பொழுது... என் பக்தர்களுக்காக யான்.. உரைத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஏனென்றால் நிச்சயம் யானும் இங்கு சம்பந்தப்பட்டு!!!! (உள்ளேன்)
இதனால் அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட இதனால் தான் பக்தர்களுக்கு உண்மையான பக்தனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வான்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ் மலையாக இருந்ததை நிச்சயம் பின்... என்னென்ன செய்ய வேண்டுமோ?!? சக்திகளை ஊட்ட வேண்டுமோ!? அவையெல்லாம்... பிரமிடுகளாக அமைத்து இன்னும் அறிந்தும் கூட நாற் சக்கரமாக...(சதுரம். சதுரமாக வடிவமைத்து) இட்டு நிச்சயம்... அனைத்தும் செய்துவிட்டு... பின் (வைர) கற்களும் பின் எதை என்று அறிய அறிய தங்கம் ஆபரணங்களும் நிச்சயம் எதை என்று அறிந்தும் கூட ஒவ்வொரு... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... பின் மீண்டும் பின் அதாவது இவ்வாறு சரியாகவே அவ் மலையை கரைத்து நிச்சயம் தன்னில் கூட!!
மீண்டும் நாராயணனிடத்தில் சென்று!!
நிச்சயம் நாராயணனே!!!
எந்தனுக்கு ஒரு வரம் வேண்டும் என்று!!!
நிச்சயம் தன்னில் அறிந்தும்... எதை என்று புரிந்தும் கூட.
எவை என்று நிச்சயம் இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் நோய்கள் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் பின் அறிந்தும் அறிந்தும் இதனால் நிச்சயம் பின் அவை எல்லாம் வரக்கூடாது.
அதுமட்டுமில்லாமல் உடம்பில் உள்ள அனைத்தும் பின் அதாவது பின் சரியாக துகள்களும் இருக்கின்றதல்லவா.
அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் மனிதனுக்கு புலப்பட்டு நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும்.
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட... எந்தனுக்கு எப்படி ஆயுள் இருக்கின்றதோ... அதேபோல் ஆயுளை நீட்டிக்க வேண்டும்.
பின் எவை என்று கூட அவரவர் விருப்பப்படியே!!!... போதும் இறைவா!! என்று சொல்வதற்குள் நிச்சயம் அறிந்தும் கூட!!!! (ஆயுள் போதும் என்ற வரைக்கும்)
இதனால் அப்பனே... இன்றளவும் பல மனிதர்கள்... அப்பனே பின் எங்கு இருந்தாலும்.. இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே.... உடம்பில் உள்ள துகள்கள் அசைக்கப்பட்டு... அவர்கள் பின் புது புது கண்டுபிடிப்புகள்.. கண்டுபிடிக்கப்பட்டு அப்பனே... வெற்றியாளராக திகழ்கின்றார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே மறைந்து!!
(பல இதுபோன்ற சக்தி வாய்ந்த திருத்தலங்கள்)
அப்பனே... இன்னும் கிடக்கின்றது என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் சென்றிட்டு வாருங்கள் அப்பனே!!
அப்படி நிச்சயம் தன்னில் கூட... பக்தனாக இருந்தால் நிச்சயம் அப்பனே.. பின் நாராயணனே... அழைத்து வருவான் என்பேன் அப்பனே.
எதை என்று புரிய அப்பனே!!
எந்தனுக்கு காசுகள் இல்லையே!!!??? யான் வர முடியவில்லையே என்றால் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதை என்று கூட!!!
"""""உழையுங்கள் அப்பனே!!!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
"""""""யான் கொடுக்கின்றேன் அப்பனே !!!!!!
அப்படி இல்லாமல் அப்பனே நிச்சயம் நீ எதை எதையோ செய்து கொண்டிருந்தால்...???????????????
அப்பனே இப்படித்தானப்பா!!!.... எனை நம்பி.......
அகத்தியன் செய்வான்!!
அகத்தியன் செய்வான்!!.... என்று அமைதியாக அப்பனே.. பின் கைபேசியை (cellphone) நோண்டிக்கொண்டு... அப்பனே பின் இருக்கின்றான்ப்பா!!!
பின் அவை இவை என்றெல்லாம்.. அப்பனே பின் என்ன செய்திகள் வருகின்றது?? என்பது அப்பனே!!!
இவர்களுக்கெல்லாம் என்ன ? கொடுத்து?... என்ன ? இலாபம்????????????????
அப்பனே அறிந்தும் அறிந்தும்... எதை என்று புரிய!!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தேடு!! தேடு!!! அப்பனே இறைவனை!!!
அப்பனே உயிர் உள்ளவரை தேடிக்கொண்டே இரு!!... என்பேன் அப்பனே!!
அப்பனே நிச்சயம் என்னென்ன உங்களுக்கு தேவை என்று.... இதனால் அப்பனே இன்னும் அப்பனே...
பல ஆண்டுகள் அப்பனே அதாவது அப்பனே சூரியவர்மன் அப்பனே நிச்சயம் பின் அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு 500 ஆண்டுகள் வாழ்ந்தானப்பா!!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய... இதனால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே... அவந்தனுக்கு அப்பனே பின் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட (அரச வாரிசு) பிள்ளைகளை.. கொடு என்பதற்கிணங்க!!!!
நிச்சயம் பிள்ளைகளும் அப்பனே அப்படியே அவன் பெற்றுக்கொள்ளவில்லை அப்பனே.... அப்படியே வந்தவர்கள் தான் என்பேன் அப்பனே... அனுப்பியது தான் என்பேன் அப்பனே நிச்சயம் எதை என்று கூட சூரிய பகவான் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே இன்னும் ரகசியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே இத் தலத்திலே என்பேன் அப்பனே!!!
இதனால்தான் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே இங்கு வந்தவர்கள் பின் நிச்சயம் கெட்டதில்லை என்பேன் அப்பனே.
நிச்சயம் இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே அறிவுகள் அதாவது அப்பனே ஒவ்வொரு இடத்திலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சக்திகள் விழுமப்பா!!!
ஏன்? பின் இவ்விடம்!!.. நாராயணனுக்கு பிடித்தது என்பேன் அப்பனே!!
நிச்சயம் சற்று யோசித்துப் பாருங்கள் அப்பனே... அனைத்தையும் யான் சொல்லிக் கொண்டிருந்தாலே!!!... எதை என்று புரிய இதனால் அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே
இதனால் அப்பனே பின் இங்கு வருவோருக்கெல்லாம்... துகள்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறந்து கிடக்கும் என்பேன்... அதை நிச்சயம்... இங்கு சூரியனின் அப்பனே அப்பனே சக்தி விழுகின்ற பொழுது... அப்பனே பின் சரியாகவே அதுவும் கூட பிழைத்துக் கொள்ளும் என்பேன் அப்பனே.
(அங்கோவார்ட் விஷ்ணு ஆலயத்தில் அனுதினமும் சூரிய உதய தரிசனம் சூரிய அஸ்தமன தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.... நமது உடம்பில் துகள்கள் சரியாக செயல்படாமல் அதாவது இறந்து கிடக்கும் நிலையில் இந்த ஆலயத்திற்கு சென்று சூரிய தரிசனம் செய்யும் பொழுது சூரிய சக்தி சரியாக இந்த இடத்தில் கிடைக்க பெற்று உடம்பில் உள்ள துகள்கள் உயிர் பெற்று மீண்டும் செயல்பட தொடங்கும்)
இதனால் அப்பனே சில நோய்கள் போகுமப்பா.. அப்பனே நிச்சயம் """"இருதய துடிப்பு!!! அப்பனே நிச்சயம்... அப்பனே பின் இன்னும் பின் நின்றாலும்..
(இதயத்துடிப்பு வேகம் குறைந்தாலும்)
அது தன் இளமையாகவே அப்பனே ஆடிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
(இருதயம் இருதய துடிப்பு பிறந்ததிலிருந்து துடித்துக் கொண்டிருக்கும் இருதயம் வயது ஆக ஆக தளர்வடையும்.
ஆனால் இங்கு ஆலயத்திற்கு வந்து சூரிய தரிசனத்தை பெற்றால் இதயம் இளமையாகி புதிதாக துடிக்க தொடங்கும்.)
நிச்சயமாக அப்பனே பின்... அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... இங்கு பல அரசர்கள் பின்... வெற்றிகரமாக வெற்றியாளராக ஆட்சி புரிந்து வந்தார்கள் என்பேன் அப்பனே.
தோல்வி என்பதே இல்லை!!.. அறிந்தும் கூட!!
இதனால்தான் அப்பனே...
நிச்சயம் சில திருத்தலங்கள் இருக்கின்றதப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட... இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே... எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
இதை கண்டுகொண்டு (அறிந்துகொண்டு)
அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட கரிகால் சோழனும் இங்கு வந்து அப்பனே ராஜ ராஜ சோழனும் இங்கு வந்து அப்பனே...... நிச்சயம் தன்னில் கூட!!!
அவர்களுக்கு தெரியுமப்பா எங்கெல்லாம்... அப்பனே சக்திகள் இருக்கின்றது.. என்பதை என்பேன் அப்பனே!!!
அவர்களெல்லாம் அப்பனே பின் நிச்சயம் கடலில் அப்பனே.. எதை என்று கூட கடலிலே அப்பனே நிச்சயம் பல மணி நேரங்கள் நீந்தியும் கூட பின் எதை என்று அறிய அப்பனே பின் இங்கு வந்து அவ் சக்திகள் விழுகின்ற இடங்களில் தவங்கள் செய்து.... இன்னும் தமக்கு சக்திகளை பெருக்கிக் கொண்டு... அப்பனே பின் அவர்களும் வாழ்ந்தார்கள்... உலக மக்களுக்காக பாடும்பட்டார்கள் என்பேன் அப்பனே.
இப்பொழுது அப்படியா?? என்பேன் அப்பனே... (சக்திகள் இருக்கும் ஆலயங்களுக்கு மனிதர்கள் செல்வதில்லை)
நிச்சயம் அப்பனே அப்படி பயன்படுத்துவதே இல்லை பக்திகளை என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இதனால் தான் அப்பனே இவ் ஆலயம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய... இன்னும் இன்னும் சக்திகள் அப்பனே... அறிந்தும் கூட.
இங்கு வந்து உட்கார்ந்தாலே பின் போதுமானதப்பா!!
அப்பனே நிச்சயம் பல கோடி அப்பனே ஆன்மாக்கள் இங்கு இருக்கின்றது என்பேன் அப்பனே ஒவ்வொரு தூணிலும் கூட!!!
அப்பனே நிச்சயம் அவ்வாறு இருக்கும் பொழுது அவ் ஆன்மாகள் இங்கு வருகின்ற பொழுது நிச்சயம் உராய்ந்து செல்கின்ற பொழுது அப்பனே பின் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் அப்பா... அது மட்டும் இல்லாமல் சில நோய்களும் மறையும் அப்பா.
அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் ஆயுளும்... நீட்டிக்கப்படுமப்பா!!
இதனால் அப்பனே வெற்றிகளும் வருமப்பா!!!!
நீங்கள் கேட்கின்றீர்களே!!!.... பணங்களும் வருமப்பா!! தானாகவே!!.. சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் கூட!!
எதை என்று புரிய இதனால் பின் சூரிய வர்மன்... அப்பனே பின்... கேட்டுக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!
நாராயணா!!!... அறிந்தும் கூட இங்கு வருவோருக்கெல்லாம் பின் அறிந்தும் கூட பின் தேடி தேடி வருவோருக்கெல்லாம் நிச்சயம் பின் அதாவது நீ... அறிந்தும் கூட அனைத்தும் கேட்பவர்களுக்கெல்லாம் என்று..
ஆனாலும் அதற்கு பின் அறிந்தும் கூட எதை என்று கூட மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... வரங்கள்!!!
இன்னும் இன்னும் சொல்கின்றேன் ரகசியங்களை பற்றி இன்னும்... பின் எதை என்று புரிய இதனால் தான் இத்திருத்தலத்தை அழகாகவே பின் மலை வடிவமாக இருந்ததே அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின்... எங்கள் அருளால் பின் அறிந்தும் எதை என்று கூட பின் சூரியவர்மன் நிச்சயம் அழகாகவே... அறிந்தும் எதை என்றும் புரிய புரிய இன்னும் இன்னும்.. பின் அறிய எதை என்று அறிந்தும் அப்படியே பின் மலையையே... திருத்தலம் ஆக்கினான். நிச்சயம் தன்னில் கூட.
இதனால் இங்கு இன்னும் சக்திகள் இன்னும் அறிந்தும் கூட.. பின் இன்னும் இன்னும் ரகசியங்கள் செப்புகின்றேன்... நிச்சயம் தன்னில் கூட...
இப்பொழுது எம்முடைய ஆசிகள் ஆசிகளப்பா!!!
அங்கோர்வாட் விஷ்ணு ஆலய வாக்கு நிறைவுற்றது.
உலகின் மிகப்பெரிய பழமையான இந்து விஷ்ணு ஆலயம் அங்கோர் வாட் ஆலயத்தை கம்போடியா அரசாங்கம் தனது தேசிய கொடியில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
OM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
குருநாதரின் அருளால் ஒரு பதிவு.
ReplyDeleteவில்லி எங்கே ? வெற்றி அங்கே.
http://fireprem.blogspot.com/2025/04/blog-post.html?m=1
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDelete