​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 April 2025

சித்தன் அருள் - 1837 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - ( April 2024 ) - பகுதி 10!




அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 10

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1830 - பகுதி 7
8. சித்தன் அருள் - 1833 - பகுதி 8
9. சித்தன் அருள் - 1835 - பகுதி 9
)


குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே. திருமணம் என்றால் நிச்சயம், அதாவது தாய் தந்தையர் சேர்த்து வைத்த பொருளிலே வாழ்பவன் ஓர் நாள்லில்லை ஓர் நாள் அப்பனே நிச்சயம் தெருவோரம் வரவேண்டியதுதான் அப்பனே.  பிச்சை எடுக்க வேண்டியதுதான் அப்பனே. தன்னால் முயற்சி செய்து,  தான் இல்லம் அமைத்து , அப்பனே பெற்றோர்களுக்கு நன்மை செய்து , அப்பனே பின் தானே தொழிலை உருவாக்கி , செய்பவனே அப்பனே இவ்வுலகத்தில் உத்தமனப்பா. பின் பெண்ணை நம்பி வந்தாலும் காப்பாற்றுவானப்பா. எக்குறைகளும் வராதப்பா. மற்றவை எல்லாம் வீணப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா, அம்மா தயவில் வாழ்பவர் மனிதனே இல்லை என்று சொல்கின்றார். ஐயா தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். 

அடியவர்:- சரிங்க ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா சேர்த்து வைத்தது, அம்மா சேர்த்து வைத்தது எல்லாம் வாழ்க்கையே இல்லை. தன்னுடைய சுய முயற்சியால் வீடு கட்டி, சம்பாதித்து (வாழ்வில்) முன்னுக்கு வருபவர் யாரோ அவருக்குத்தான் எந்த ஒரு குறையும் வராது. சும்மா அப்பா அம்மா இடத்தில் உட்கார்ந்து வாழ்ந்தோம் என்றால் முடிந்துவிட்டது வாழ்க்கை என்று சொல்கின்றார். புரியுதுங்களா? அப்போ தன்னுடைய முயற்சி மூலம் முன்னேற வேண்டும். நீங்கள் (வாழ்வில்) முன்னேறி, அம்மா அப்பாவிக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்கள் முன்னேறி நான்கு காசுகள் எடுத்து வந்து கொடுக்க வேண்டும். இது உங்களுக்கு இல்லை. இது பொது (வாக்கு). எல்லோருக்கும் சொல்கின்றார். அதைக் கொடுத்து, அதன் பின்னர் வீடு நீங்களே அமைத்துக்கொண்டால் , அந்த முயற்சியில் வருபவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு குறையும் வராது. இதை மீறிச் சென்றால் சத்தியமாக (வாழ்வில்) குறை வரும். ஐயா புரிந்து கொண்டீர்களா ஐயா? அப்போது சிறு வயதிலிருந்தே (குழந்தைகளுக்கு) கற்றுக் கொடுங்கள். 

(குழந்தைகளைப் பார்த்து) அப்பா எங்களுக்கு உள்ள சொத்துக்களை வைத்து நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விடுவோம். ஒழுங்காகப் படி. முன்னுக்கு வா. நாங்கள் வீடு கட்டியதைப் போல் , அதே மாதிரி நீயும் (உன் சுய சம்பாத்தியத்தில்) வீடு கட்டு. நான் நன்கு வேலை, தொழில் செய்வது போல் நீயும் வேலை செய் என்று சொல்லிக் கொடுத்தால்தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அப்பா அம்மா சொத்துக்களில் பிள்ளைகள் வாழ்ந்தால் அடித்து எப்போதும் தெருவோரத்தில் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் !!!!. 
அம்மா இதல்லாம் உண்மையம்மா. அப்போ பிள்ளைகளுக்கு (பெற்றோர்கள்) என்ன கற்றுக் கொடுக்க வேண்டும்? அப்பா அம்மா சேர்த்த சொத்துக்களில் வாழக்கூடாது. 

(சுவடி ஓதும் மைந்தன் அங்கு உள்ள ஒரு அடியவரைப் பார்த்து அவருக்கு வாக்கு கேட்கப் போகின்றேன் என்ற கூறியவுடன், இப்போது நம் அன்பு குருநாதர் அங்கு உள்ள ஒரு அடியவரைக் காப்பாற்றிய வாக்கு ஒன்றை உரைத்தார்கள். இது போல் பலருக்கும் நடந்து கொண்டே உள்ளது. ஆனால் அதனை உணர்வதற்குப் புண்ணியங்கள் வேண்டும். பின் வரும் வாக்கை உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட , உங்களுக்குக் கருணைக்கடல் செய்த அற்புதங்கள் உங்களுக்கே புரியவரும்) 

குருநாதர் :- (ஒரு அடியவரைப் பார்த்து) அப்பனே பல தவறுகள். சிக்கிக்கொண்டிருப்பாய் அப்பனே ஒரு விசயத்தில் . ___ உன்னை அழைத்து ___ அடைத்திருப்பார்கள். தப்பித்துவிட்டேன் அப்பனே. (காப்பாற்றி விட்டேன் ) இனிமேலாவது ஒழுக்கமாக வாழக் கற்றுக் கொள். (தனி வாக்குகள்) 

அப்பனே ஒரு அடி எடுத்து வை. யான் பார்த்துக்கொள்கின்றேன். 

( மீண்டும் பொது வாக்கு ஆரம்பம்)

குருநாதர் :- ( குருநாதர் வாக்கை எடுத்து உரைத்த அடியவரைப் பார்த்து ) அப்பனே கேட்க வில்லையே நீ. அப்பனே உன் கடமையை மறந்து விட்டாய் நீயும் கூட. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ( மீண்டும் என்னென்ன புண்ணியங்கள் அடியவர்கள் செய்ய உள்ளார்கள் என்று கேட்க ஆரம்பித்தார்) அம்மா நீங்க என்ன புண்ணியம் செய்யப் போகின்றீர்கள்? 

அடியவர் :- அனுதினமும் பைரவருக்கு ஒரு வேளை உணவு , ஏதாவது ஒன்று (கொடுக்க உள்ளேன்). கண் பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் வாரத்தில் ஒருநாள் , என்னால் முடிந்த அளவு (செய்வேன்). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- சிறப்பு. அம்மா எல்லோரும் மனதில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, நீங்கள் சொல்வதையெல்லாம் குருநாதர் கேட்டுக்கொண்டே உள்ளார்கள். நீங்கள் என்னென்ன சொல்கின்றீர்களோ அப்படியே கேட்டுக் கொண்டே உள்ளார்கள். அதைத் தவற விட்டால் , பொறுப்பு கிடையாது ( நல்லதல்ல ). 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- (நம் குருநாதர்) அடுத்த முறை (நாடி) வாக்கு கேட்க வந்தால், போன முறை சொன்னவற்றைச் செய்யவில்லை என்று ஒரே வார்த்தையில் அடித்து விடுவார். உனக்கு வாக்கு கிடையாது என்று. 

குருநாதர் :- அப்பனே அனைவரும் என் முன்னே நின்று சொல்ல வை அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோரும் இங்கு (சுவடியின்) முன் வந்து நின்று சொல்லிவிட்டுப் போகச் சொல்கின்றார். நான் தர்மத்தைக் காப்பேன் என்று.


குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- ஒவ்வொருவராக (மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற, இவ்வுலகின் ஒரே ஒரு சுவடி - அதன் முன்) வாருங்கள். தர்மம் நிச்சயமாகச் செய்ய வேண்டும். ஆனால் நம் சுய கடமைகளை மறக்காமல் செய்ய வேண்டும். நம் வீட்டுக் கடமைகளைச் செய்து விட்டு, தாய் தந்தையரை மதிக்க வேண்டும் நிச்சயமாய். இது எல்லாம் செய்தால்தான் அதற்கப்புறம் மேற்கொண்டு புண்ணியங்கள் நமக்கு வரும். இதை மறந்து விட்டு , நாம் வெளியில் போய் அந்த தர்மம் செய்தேன், இந்த தர்மம் செய்தேன் என்றால் செல்லவே செல்லாது. வீட்டுக் கடமையைத் தவறாமல் செய்து , பெற்றோரை மதித்து,  ( இல்லத்தில் - தாய் , தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள் ) அதற்கப்புறம், இந்த மாதிரி அனைவருக்கும் (உதவி, நன்மைகள், புண்ணியங்கள்) செய்தால்தான் அடுத்து நிற்கமுடியும் ( வெற்றிகரமாக வாழ முடியும்). 
ஒவ்வொருவராக (மகிமை புகழ் சுவடியின் முன்னர்) வந்து சொல்லுங்கள். 

( நம் குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் சுவடியின் முன்பு வந்து நின்று ஒவ்வொரு அடியவர்களும் அவர்கள் செய்ய உள்ள தான, தர்மங்களை எடுத்து உரைக்க ஆரம்பித்தனர். அவர்கள் உரைத்தவுடன் நம் அன்புத் தந்தை, கருணைக்கடல் குருநாதர் வாக்குகளை அருளினார்கள்.) 

அடியவர் 1  :- ஊனமுற்றவர்களுக்குக் கல்வி, படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு நான் உதவி செய்கின்றேன். 

குருநாதர் :- ( அருமையான தனி வாக்குகளை அருளினார்கள் நம் கருணைக்கடல்.) 

(இங்கு ஒரு அடியவர் பின்னால் இருந்து செய்யப் போகும் புண்ணியங்களைப் பற்றி உரைக்க, உடனே நம் குருநாதர் கருணைக்கடல் அவ் அடி வருக்கு வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்கள் சொன்னவுடன் வாக்கு இங்க வருகின்றது. அந்த அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க, அதற்குத் தகுந்த மாதிரி இங்க வாக்கு வருகின்றது ஐயா. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- அப்படியா?

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ நீங்க என்ன சொல்கின்றீர்களோ அதற்குத் தகுந்த மாதிரி இங்க வாக்கு வருகின்றது. 

அடியவர் 2 :- மரக்கன்று வைக்கின்றேன். நிழல் தரும் புண்ணியம் செய்கின்றேன் ஐயா. அப்புறம் நீர் வந்து என்னை தானம் பன்னச் சொன்னாங்க. நான்  ரெகுலராவே நீர் எல்லா பறவைகளுக்கும் தானம் செய்கின்றேன் ஐயா. 

குருநாதர் :- ( அருமையான தனி வாக்கு இவ் அடியவருக்கு உரைத்தார்கள். இவ் அடியவர் தொடர்ந்து நீர் தானம் செய்து வருகின்றார். குருநாதர் ஏற்கெனவே உரைத்த வாக்கு “ நீர் தானம் பெரும் புண்ணியமப்பா”. அந்த தனிவாக்கில் உள்ள ஒரு முக்கிய வாக்கை இங்கு அனைவர் நலம் கருதிப் பொது வாக்காக இங்கு அடியவர்கள் பார்வைக்கு வெளியிடுகின்றோம்.) 

ஆனாலும் நிச்சயம் நல்லெண்ணத்தோடு, நல் முறைகளாக  ஜீவராசிகளுக்கு உதவி செய்து கொண்டே இரு. யானே விதியை மாற்றுகின்றேன். நன்றாக விரும்பியதை நிச்சயம் அடைந்து விடுவாய் எளிதில் கூ. நன்மைகளாகட்டும். ஆசிகள். 

——-
( வணக்கம் அடியவர்களே, ஜீவராசிகளுக்கு நீர் தானம், அன்ன தானங்கள் செய்வதை உடும்புப் பிடியாக இறுகப்பற்றுங்கள். மிகப் பெரும் புண்ணியம் உங்களுக்குக் கிட்டும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எந்த பலனும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு நீர் மற்றும் அன்ன தானங்களை வாயில்லா ஜீவராசிகளுக்கு அனுதினமும் செய்யச் சொல்லுங்கள் இப்போதே. கடுமையான விதியையே மாற்றும் வல்லமை கொண்டது வாயில்லா ஜீவராசிகளுக்கு நீங்கள் செய்யும் இவ் மகத்தான புண்ணியங்கள். இது குறித்த மற்றொரு மகத்தான மகிமை புகழ் வாக்கு. 

சித்தன் அருள் - 1125 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!

(மராட்டிய மாமன்னர் வீர சிவாஜி) அவ் சுய(சுயம்பு) லிங்கங்களையும் பின் பார்த்து இச் சுய நல்விதமான ஆஞ்சநேயனையும் பார்த்து வணங்கி விதவிதமான வெற்றிகளை கண்டு நவிழ்ந்து வந்தான்.

வீர சிவாஜி ஒரு புண்ணியம் செய்வித்தான். எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுது அவ்வரசன் (சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான். அப்படி மட்டுமில்லாமல் பல ஜீவராசிகளுக்கும் (நீர் மற்றும் அன்ன சேவை) உதவி செய்தான், உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ் ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன (நீர் தானம் , அன்ன தானம்). இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான் அவன்.

குருவே நமஸ்காரங்கள். ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???

அப்பனே! வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!! )
———

அடியவர் 3 :- ( ஒரே ஒரு வார்த்தையில் தான் செய்ய உள்ள புண்ணியங்களை,  பதிலாக உரைத்தார் கருணைக்கடல் முன்.) 

குருநாதர் :- அம்மையே ஓரே ஒரு வார்த்தையில் முடித்துவிட்டாய். யானும் ஒரே வார்த்தையில் முடித்து விட்டேன். நல்லதே செய்கின்றேன்.

( பின்வரும் வாக்கு ஒரு முக்கிய வாக்கு. யாரும் தயவு செய்து எந்த ஒரு வழியிலும் இறைவனிடம் பேரம் பேசாதீர்கள். காசு முடிந்து வைப்பது, தலை முடி இறக்குதல் இன்னும் பல வேண்டுதல்கள் வைத்து அது நடக்க வேண்டும் அதனால் நான் இது செய்கின்றேன் என்று எந்த நிலையிலும் இறைவனிடம் பேரம் பேச வேண்டாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்)


அடியவர் 5 :- நான் ( ஒரு அதி உச்ச உயர் கல்வி ) படித்துக்கொண்டுள்ளேன். வேலை கிடைத்தவுடன் ( புண்ணியங்கள் செய்ய ஆரம்பிக்கின்றேன் ஐயா). 

குருநாதர் :- அம்மையே செய்யத்தேவையே இல்லை. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :-  யாரும் டீல் (deal) எல்லாம் வைக்காதீர்கள் தயவு செய்து. இது கிடைத்தால் நான் செய்கின்றேன் என்று. நீங்க (முதலில்) செய்யுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க செய்யத் தேவையே இல்லை என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- இல்லை. இல்லை. அந்த வேலை கிடைத்தற்கு அப்புறம் ஒரு பெண் குழந்தைக்குக் கல்விக்கு (உதவி செய்கின்றேன்). 

குருநாதர் :- அப்படியெல்லாம் நிச்சயம் இறைவனிடம் பேரம் பேசுகின்றாயா என்ன? 

அடியவர் 5 :- பேரம் பேசவில்லை ஐயா. எனக்கு இப்ப கையில் காசு இருந்தால்... 

குருநாதர் :- அம்மையே , அப்பொழுது நீ அறிவாளியாக இருந்தால் இப்பொழுது நீ பட்டம் கேட்கின்றாய் அம்மையே. எவ்வாறு (இது நியாயம்?). பின் அறிவே இல்லையே அம்மையே. இறைவா நிச்சயம் என்னால் முடிந்தவரை நிச்சயம் யான் கொடுப்பேன். அனைத்து ஜீவராசிகளுக்கும் என்னால் முடிந்தவரை அதாவது தர்மத்தைப் பற்றி பிற மனிதர்களுக்கும் உரைப்பேன் என்று சொல்லவில்லையே? வாயில் வரவில்லையே? அம்மையே தகுதிக்கு ஏற்பத்தான்,  இதில்கூட அறிவுகளே இல்லை அம்மையே. நிச்சயம் யார் உந்தனுக்குக் கொடுக்கின்றார்களோ அவனைத்தான் யான் பிடிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (மிகவும் வருத்தத்துடன்) அம்மா அப்படியெல்லாம் கேட்கக் கூடாதம்மா. 

அடியவர் 5 :- என்னுடைய ஆசையைத்தான் நான்…

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :-  உங்க ஆசையில்லை. உங்களால் என்ன செய்ய முடியும்..

சுவடி ஓதும் மைந்தன் :- (உங்களால் என்ன முடியுமோ) அதைச் சொல்லிவிடுங்கள். 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- (நம் குருநாதர்) பிறருக்குப் புண்ணியத்தையாவது எடுத்துச் சொல்லுங்கள் என்று சொல்கின்றார். 

அடியவர் 5 :- அது செய்கின்றேன். கண்டிப்பாகச் செய்கின்றேன். அப்புறம் மரம் நடுகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது போலச் செய்யுங்கள். கண்டிப்பாகத் தருவார் என்று சொல்கின்றார். அம்மா நம்ம கொஞ்சம் அறிவுடன் ( கவனமாக) கேட்க வேண்டும். ஐயா நான் எல்லாம் செய்கின்றேன் நீங்க என்று சொல்லியிருந்தால்  (நன்றாக வாக்கு) முடிந்திருக்கும். சுற்றிக்கொண்டு வராதீர்கள். 

அடியவர் 5 :- கண்டிப்பாகச் சொல்வதெல்லாம் செய்கின்றேன் ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாகச் நல்லது நடக்கும். அவர் சொன்னதெல்லாம் செய்யுங்கள். கண்டிப்பாக செய்வார். நல்லது அம்மா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. GURUVE SARANAM SARANAM. JAI SRIRAM

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete