​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 30 September 2016

சித்தன் அருள் - 454 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஆடுகளத்திலே விளையாடுவது மனிதர்கள்தான். நாங்கள் நடுவர்கள், தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் எங்கள் கடமையே தவிர "இப்படி ஆடு! அப்படி ஆடு!" என்று ஆட்டம் தொடங்கும் முன் வேண்டுமானால் சொல்லலாம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் யார் பக்கமும் பேசக்கூடாது. எனவே, வழிகாட்ட நாங்கள் என்றும் இருக்கிறோம். ஆனால் அந்த வழியில் செல்ல மனிதர்கள்தான் தயாராக இல்லை. உலகியல் பிரச்சனைகளை ஆன்மீகப் பிரச்சினைகளோடு இணைத்துக் குழப்புவதே மனிதனுக்கு இயல்பாகிவிட்டது.

5 comments:

  1. Om agatheesaya namah
    Vanakkam iyya,
    Naan agathiyarin arul vakku thavaraamal padithu varuginren.
    Pengal maadavilakkinpothu, yenna seiyyalaam, seiyyakkoodathu yenbathai iyyavidam kettu therinthu kolla aavalaaga ullen.
    Nanri.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Iyyavin badil kidaithathil mikka maghizhchi. Nanri nanri.
    Om agatheesaaya namah.

    ReplyDelete
    Replies
    1. 109. "இறைவன் அருளால் ஒவ்வொரு மனிதனையும் "புத்தியை தீட்டு, அறிவை தீட்டு, ஞானத்தை தீட்டு" என்றுதான் நாங்கள் கூறுவோம். சுத்தமாக இருக்கும் நிலையில் நாங்கள் புறசுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் கூட, இன்னவள் கூறியது போல் மாதாந்திர விலக்கு என்பது பெண்களுக்கு அதிக அளவு உடல் சோர்வை தரக்கூடியது. அந்த நிலையில் பெண்கள் ஓய்வாக இருப்பது அவசியம் என்பதால், ஓய்வாக இருக்க பணிக்கப்பட்டார்கள். இதை ஒதுக்கி வைப்பதாக எண்ணிவிடுதல் கூடாது. அதற்காக ஓய்வாக இருந்துகொண்டு மானசீகமாக இறைவனை வணங்கக் கூடாது என்பதில்லை. இகுதொப்ப, மனரீதியாக ஒரு மனிதன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாக பரிசுத்தமாக இருந்தால், அது புத்துணர்ச்சியைத் தரும் என்பதால், உடல், உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருப்பது, மிக, மிக அவசியமாகிறது. இன்னொன்றை மனிதன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் படைப்புகளில் எதையும் குறையாக நாங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும், உடல் நலம் கருதியும், உடல் சோர்வை கருதியும்தான் சிலவற்றை வகுத்து தந்திருக்கிறோம். இதைக் குற்றமாகவோ, தோஷமாகவோ பார்க்காமல், உடல் நலம் கருதி கூறப்பட்டது, என்று எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்."

      Delete