அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"தண்டிப்பதோ, தண்டனை தருவதோ, பிற உயிர்களை துன்புறுத்துவதோ, எமக்கோ, இறைவனுக்கோ வேலையல்ல. எல்லோருக்கும் நன்மை புரிவதுதான் எமது வேலையப்பா. ஒரு குழந்தை கோபித்தால், உடனே தாயும் தந்தையும் குழந்தை மீது கோபம் கொள்வார்களா? எம்மையும், இறையையும் ஒரு மனிதன் ஏன் இகழ்கிறான். தான் நினைத்தது நடக்கவில்லை, தன் ஆசை நிறைவேறவில்லை, என்ற வேதனையில்தானே ஏசுகிறான்? நிறைவேற்றி தந்தால் என்ன நடக்கும்? என்று இறைக்குத் தெரியும். ஒன்றை தந்தால்தான், இறைவன் அருளுகிறான் என்று மனிதன் தவறாகவே நினைக்கிறான். பல சமயங்களில் இறைவன், தராமலேயே ஒரு மனிதனை காப்பாற்றுகிறான். எனவே, "ஒன்றை தந்தால் என்னவாகும்? தராவிட்டால் என்னவாகும்? என்பது இறைக்குத்தான் தெரியும், என்பதால் இறைவன் இத்தகைய ஏச்சு, பேச்சுக்களை எல்லாம் பொருட்படுத்துவதேயில்லை."
No comments:
Post a Comment