அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
இடைவிடாத பிரார்த்தனைகள், நல் அறங்கள் நலம் சேர்க்கும். இகவாழ்வில் எதிர்ப்படும் இன்ப துன்பங்கள் யாவும், அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து, பாவங்கள் செய்யாமலும், செய்த பாவத்தை எண்ணி வருந்தி, திருந்தியும், அதோடு இறை வணங்கியும், புரிந்தும் வாழ, நலமாகும். திவ்யமான பரம்பொருளை உணர்ந்து, திருவடி பற்றும் வளர, துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும், நிரந்தர சாந்தி கிட்டாது. தளர்வோ, விரக்தியோ, வேதனையோ, எதிர் மறை எண்ணங்களோ, ஒரு பொழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் கொண்டு எதனையும் எதிர்கொள். பதட்டமின்றி செயல்படுத்துதலும் நலம் சேர்க்கும். சேர்க்கின்ற புண்ணியமே கடை வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமோ என்றென்றும் இடராகும். சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்து விடும் என்பதால், சிந்திக்க வேண்டும். பாவ எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா, அகுதொப்ப மாந்தர்களுடன் உறவும் கூடாது. குறித்திடுவோம். எத்தனை துன்பத்திலும், எத்தனை சிக்கலிலும் கருத்தில் கொள்ளவேண்டும். "இதனால் பாவம் செய்தேன்" என்றியம்பக்கூடாது. பற்றற்று வாழ, அதற்கான முயற்சியை தொடர, நலம்.
No comments:
Post a Comment