அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"சிவனேனு இரு" என்பதை "எதையும் செய்யாமல் இரு" என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல. ஒரு மனிதன் புறத்தோற்றத்திலே செயல்படாதது போல் தோன்றினாலும், அவன் ஆத்மா நன்றாக பலம்பெற்று, வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து, பிறகு சதா பத்மாசனத்திலே அமர்ந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, சதா சர்வகாலமும், அந்த இறையோடு தொடர்பில் இருக்கும்பொழுது, அந்த தவத்தின் பலன், ஒளி, ஆற்றல், அலைகள் எல்லாம், அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர்தான் "சிவனேனு இரு" என்பதின் பொருளாகும்.
No comments:
Post a Comment