​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 9 February 2023

சித்தன் அருள் - 1289 - அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

""""""""எண்ணத்தில் என்னை வை!!!!!!!!

நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் முத்தான வாக்கு இது!!!!

இவ் வாக்கினை அப்படியே கடைப்பிடித்து அகத்திய பெருமானின் மனதில் இடம்பிடித்து அவரை தன் இல்லம் தேடி வர வைத்து தனக்குப் பிறந்த குழந்தையின் விதியையும் மாற்றி உயிரை காப்பாற்றி கொடுக்க வைத்த பக்தரின் பக்தி மிகுந்த அனுபவம் இது.

விழுப்புரத்தைச் சேர்ந்த தூத்துக்குடியில் வேலை பார்த்து வசித்து வரும் அகத்திய அடியவர் ஒருவர் அகத்தியரின் மேல் பேரன்பு கொண்டு பக்தியை செலுத்தி குருநாதருடைய வாக்குகளை சமூக வலைத்தளங்கள் மூலம் அனுதினமும் தினம் அகத்தியர் வாக்கு என்று அகத்திய பக்தர்களுக்கு குருநாதருடைய வாக்குகளை பரப்பி சேவை செய்து வருகின்றார். அகத்தியரின் காலடியே எனது வாழ்க்கை என வாழ்ந்த வரும் அவர் திருமணம் கூட எந்தனுக்கு வேண்டாம் அவருடைய திருவடிகளே போதும் என வாழ்ந்து வருபவர்!!!! தூத்துக்குடியில் வேலை பார்த்துக் கொண்டே பாபநாசம் கல்யாண தீர்த்தம் திருச்செந்தூர் என எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் குருநாதர் வாக்குகளில் கூறும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று தாமிரபரணியில் நீராடி தொழுது வணங்கி அகத்தியரின் வாக்குகளை பல்வேறு குழுக்களுக்கு அனுப்பி வாக்குகளை பரப்பி வருகின்றார்.

அப்படி தினம் அகத்தியர் வாக்கு குழுவில் திருச்சி லால்குடியை சேர்ந்த ஒரு அன்பர் இணைகின்றார்!!! இணைந்து அனுதினமும் குருநாதருடைய வாக்குகளை படித்து!! படித்து !! படித்து குருநாதர் மேல் பெரும் பக்தியை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்!!! அதற்கு முன் குருநாதர் அகத்தியரை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது!!!! அனுதினமும் வாக்குகளாகவும் சித்தன் அருள் வலைத்தளத்தில் பதிவுகளாகவும் படித்து படித்து மிகுந்த பக்தியை குருநாதர் மேல் காட்ட ஆரம்பித்து குருநாதருடைய ஆலயங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கெல்லாம் சென்று தரிசனம் செய்து வருவார்.குறிப்பாக கோடகநல்லூர் ஆலய தரிசனம் இவர் பாதையையே மாற்றியது என சொல்லலாம். இப்படியே நல்முறையாக தூத்துக்குடி அடியவரும் இவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர்.

இவர் வசிப்பது திருச்சிராப்பள்ளி லால்குடியில்!!! அவர் சொந்தமாக ஒரு தேநீர் கடையை நடத்தி வருகின்றார்.இவர் ஒரு எம். பி. ஏ. பட்டதாரி... மெத்த படித்திருந்தாலும் சொந்த தொழில் செய்து குருநாதர் வாக்கின் படி அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயல்பட்டு வருபவர். 

அவர் நடத்தும் தேநீர் கடையில் காலையிலிருந்து இரவு வரை வேலை இருக்கும் இரவு வீட்டிற்கு வந்து விட்டு குளித்துவிட்டு குருநாதரை வணங்கி தினமும் குருநாதர் வாக்கில் என்ன கூறியிருக்கின்றார் என்பதை படித்து விட்டு தான் உறங்கச் செல்வார்!!!!

மனைவி ஒரு பெண் குழந்தை என வாழ்ந்து வந்த அவருக்கு.... ஒரு மார்கழி ஆயில்ய நட்சத்திர திருநாளில் குருநாதரை தரிசனம் செய்ய வேண்டும் அருகில் ஏதாவது குருநாதருடைய ஆலயம் இருக்கின்றதா என்று தேடி விசாரித்து பார்த்ததில் திருவையாறில் அகத்தியர் ஆலயம் இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டு அங்கு குருபூசை தின விழா அன்று சென்று நல்முறையாக தரிசனம் செய்து பிரசாதமாக ஒரு ஆப்பிள் பழத்தையும் பெற்றுக் கொண்டு மிகுந்த மன திருப்தியோடு வீடு திரும்பினார் வீடு திரும்பி மிகவும் சந்தோஷத்துடன் அனைவரும் பிரசாதமாய் அதை உண்டு மகிழ்ந்து பின்பு அடிக்கடி திருவையாறு அகத்தியர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வந்து கொண்டிருந்தார். 

அப்படி இருக்கையில் திருவையாறில் கடந்த வருடம் நடந்த குருநாதர் பெருமான் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி அடியவரும் வர!!   லால்குடியைச் சேர்ந்த இவரும் திருவையாறு அகத்தியர் ஆலய கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு அவரையும் சந்தித்து குருநாதருடைய வாக்குகளை பற்றி.  பேச ஆரம்பித்து!!!! """

என்னுடைய வாழ்க்கையவே மாற்றி அமைத்து விட்டார் குருநாதர்!!!

தன்னுடைய வாக்கில் என்னென்ன கூறுகின்றாரோ அதை அப்படியே என்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றேன் ஜீவ காருண்ய முறையையும் சுத்த சன்மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டு குருநாதர் உரைத்தபடியே வாழ்ந்து வருகின்றேன் என்று குருநாதரை பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த கும்பாபிஷேக விழாவில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் கலந்து கொள்ள அவரிடமும் அறிமுகமாகி நல்ல முறையில் பேசி ஆலய விழாவில் கலந்து கொண்டு அடியவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது!!!

அன்னை லோப முத்ரா தேவியிடனும் குருநாதரிடமும் .... ஒரு கோரிக்கையாக மீண்டும் ஒரு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் என்று மனைவியுடன் சேர்ந்து மனம் உருக பிரார்த்தித்து  தரிசனமும் செய்துவிட்டு வீடு திரும்பினார்.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வந்த பின் அடுத்த ஒன்றரை மாதங்களில் அடியவரின் மனைவி கருவுறுகின்றார். மிக்க மகிழ்ச்சி அடைந்த அடியார் மாதாந்திர பரிசோதனைகளுக்காக மருத்துவமனை செல்ல மருத்துவ மனையில் மருத்துவர்கள் அடியவரின் மனைவியை பரிசோதித்து விட்டு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் இருக்கின்றன இது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறி விட அடியவருக்கோ மிகுந்த மனக்கலக்கம்.

அகத்தியப்பா!!!! நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை உங்கள் தரிசனம் கண்ட பிறகு உங்கள் அருளால் உதித்த கருவாக இதை நான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன். இக்குழந்தை வளர்ந்து உங்களை வணங்கி உங்கள் பேரையும் புகழையும் பார் முழுவதும் பரப்பி சமுதாயத்திற்கு நல்ல சேவைகள் செய்யும் குணம் உள்ள குழந்தையாய் வளர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றேன்.

நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று குருநாதரை வணங்கி வணங்கி வந்த அவர் ஒரு நாள் அப்படியே  குருநாதரை நினைத்து மெய்யுருகி   எனக்கு அகத்தியரை விட்டால் கதி வேறொன்றுமில்லை அவர்தான் காப்பாற்ற வேண்டும் அவரை சரணடைவதை தவிர வேறு ஒன்றும் இதற்கு வழி இல்லை என்று நினைத்து குருநாதரையே சென்று பார்த்து சரணடைவோம் என்று இரவு முழுதும் நினைத்துக் கொண்டு எழுந்தவர் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு குருநாதரை காணச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் லால்குடியில் இருந்து திருவையாறு அகத்தியர் ஆலயம் வரை கிட்டத்தட்ட 37 கிலோமீட்டர் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!!!

அதிகாலை நேரம் ஆதலால் வெறும் காலால் நடப்பதற்கு சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை ஆனால் சூரியன் உதித்த பின் மெது மெதுவாக மெது மெதுவாக வெயில் சூடு ஏற ஏற வெறும் கால்களில் தார் சாலையில் நடக்க நடக்க அனல் அடிப்பதை கால்களால் பொறுக்க முடியவில்லை!!!

அகத்தியா !!!அகத்தியா!! அகத்தியா !!அகத்தியா!! என்று குருநாதர் பெயரையே உச்சரித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்!!!

வெயில் ஏற ஏற தாகம் களைப்பு வியர்வை என ஒன்று சேர்ந்து தாக்க...... அதனைப் பற்றி கவலைப்படாமல் நீரை மட்டுமே அருந்தி கொண்டு மீண்டும்  அகத்தியா அகத்தியப்பா என்று கூறிக்கொண்டே மிகுந்த களைப்பு இருந்தபோதிலும் மேலும் நடக்கத் தொடங்கினார்.

பத்து மணி பதினோரு மணி அளவில் சூரியன் மேலும் வெப்பத்தை வெளியிட இவரும் அகத்தியன் மீது கொண்ட பற்றினால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு மேலும் நடந்து நடந்து சரியாக  ஒரு மணி  அளவில் திருவையாறு அகத்தியர் ஆலயத்திற்கு வெறும் கால்களால் நடந்து வந்து குருநாதர் முன்பு சரணடைந்து கரைந்து உருகி வணங்கத் தொடங்கி விட்டார்!!!!

அப்பனே!!!அகத்தியா என் தாயும் நீ என் தந்தையும் நீ 

எனக்கு எல்லாம் ஆனவன் நீ!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் அகத்தியப்பா!!!!

நீதான் தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும்!!!!

என மனம் உருகி பிரார்த்தித்துக் கொண்டே மயங்கி சாய்ந்து விட்டார்!!!

அங்கேயே சிறிது நேரம் மயக்கமுற்று பின்பு மயக்கம் தெளிந்து எழுந்தவர் மீண்டும் வணங்கி என்னுடைய பாரத்தை எல்லாம் அகத்தியன் காலடியிலேயே விட்டு  விட்டேன் இனி என் தந்தை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்!!!

இவர் ஆலயத்திற்கு சென்ற பொழுது உச்சிப்பொழுது ஆகியதால் ஆலயத்திலும் யாரும் இல்லை இவர் மட்டும் தனியாக பிரார்த்தனைகள் செய்து விட்டு வந்து விட்டார்!!!!

அதன் பிறகு அனுதினமும் குருநாதரை வணங்குவது மனைவியை நன்கு கவனிப்பது என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே தூத்துக்குடி அடியவர் மூலம் ஒருமுறை திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் குருநாதருடைய வாக்குகள் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது!!!!

அப்பனே!!!!!! என் மீது இவ்வளவு நம்பிக்கை அப்பனே!!!!  என் மீது பக்தி கொண்டு இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றாயே இவையன்றி கூற யான் வந்தேன்ப்பா உன் இல்லத்திற்கு!!!!!! என் மீது நீ காட்டிய அன்பிற்கு யான் வந்தேனப்பா உன்னையும் பார்த்தேனப்பா நல்லாசிகள் தந்தேனப்பா!!!! இவ்வுறவு இப்பிறவியில் மட்டும் வந்ததில்லை என்பேன் அப்பனே முற்பிறவிலும் உண்டு அதனைப் பற்றியும் அடுத்த முறை எடுத்துக் கூறுவேன் அப்பனே நல்லாசிகள் நல்லாசிகள் என்று வாக்குகள் தந்திருந்தார்!!!

அடியவரும் குருநாதருடைய வாக்குகள் கிடைத்த மகிழ்ச்சியில் அவருடைய பணியை செய்து கொண்டே வந்து கொண்டிருந்தார். குருநாதர் தனது வாக்கில் உரைத்தபடி அனுதினமும் ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவளிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதிகாலையில் தேநீர் கடையை திறந்தவுடன் பாலை காய்ச்சி அதை குளிர வைத்து பைரவர்களுக்கு ஒரு கோப்பையில் பால் மற்றும் உணவுகளை வைத்து விடுவார்!! தேநீர் கடையில்  இயலாதவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் யாராவது வந்தாலும் அவர்களுக்கு உணவையும் பாலையும் அகத்தியர் பெயரை உச்சரித்து காசுகள் வாங்காமல் தர்மமாக செய்து வருகின்றார். கடையின் பெயரும் நற்பவி என்று வைத்துள்ளார். தினமும் காலை கடையை திறந்து முதல் தேநீரை குருநாதர் புகைப்படம் முன்பு வைத்து பிராத்தனை செய்தே அன்றைய வியாபாரத்தை தொடங்குவார். 

இதை அனுதினமும் இன்றளவும் இதை செய்து கொண்டே வருகின்றார்.

அடியவரின் மனைவிக்கும் மகப்பேறு காலம் நெருங்கி விட்டது!!!! மருத்துவமனையிலும் சேர்த்து  பிரசவத்திற்காக காத்திருந்தனர்!!!!

பிரசவ நாளும் வந்தது!!!!! அடியவரும் அவரது மனைவியும் குருநாதர் பிரார்த்தித்துக் கொண்டிருக்க மருத்துவர்களின் மிகுந்த போராட்டத்திற்கிடையே அழகாக ஒரு பெண் குழந்தையை ஈன்றார் அவருடைய மனைவி!!!

ஆனால் குழந்தை பிறந்தவுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கின்றது நுரையீரலில் பிரச்சனை என்று மருத்துவர்கள் NICU வார்டில் குழந்தையை அனுமதித்து அவசர அவசரமாக சிகிச்சியை செய்ய தொடங்கினர்!!! 

இதனை கண்ட அடியவரும். அதிர்ச்சியாகி மனம் உடைந்து அகத்தியப்பா என்னப்பா இது சோதனை உங்களையே நம்பிக் கொண்டிருந்தேனே!!!! குழந்தை நல்லபடியாக வரவேண்டும் இது உங்கள் குழந்தை அப்பா என்று குருநாதர் புகைப்படத்தை பிடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டு ஊன் உறக்கம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இடைவிடாது பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்.

ஏற்கனவே இந்த அடியவருக்கு ஜானகிராமன் ஐயாவுடன் பயணிக்கும் ஒரு அடியவர் பழக்கம் இருந்தது அவரிடம் போனில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை எடுத்துக் கூற அந்த அடியவரும் திரு ஜானகிராமன் அய்யாவிடம் பேசி குருநாதரிடம் கேட்கலாம் என்று கேட்ட பொழுது!!!!

நல்விதமாக என்னையே நம்பிக் கொண்டிருக்கின்றான் இவந்தன்!!!! நல்விதமாக எதை என்று அறிய அறிய யானே அங்கு செல்கின்றேன் பொறுத்திரு எவை எவை என்று அறிய!!!! அப்பனே யானும் நேற்றைய பொழுதிலும் அங்கேயேதான் இருந்தேன் என்பேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய சென்று கொண்டே தான் இருக்கின்றேன் இதற்கு ஒரு முடிவு எதை என்று அறியாமலே அக்குழந்தைக்கு எதை என்று அறியாமலே.................... ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து யான் இருக்கின்றேன் அப்பனே!!!!

என்று குருநாதர் சுருக்கமாக வாக்குகள் தந்து முடித்துவிட்டார்.

அந்த அடியவரும் அந்த நபருக்கு போனில் தொடர்பு கொண்டு குருநாதர் உரைத்ததை அப்படியே எடுத்துக் கூறி நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது!!!

குருநாதர் அங்கேயே தான் இருக்கின்றார் ஆதலால் நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறி விட!!!!.......... சிறிது மன தைரியம் அடைந்து அடியவரும் தாயின் அருகிலும் என்ஐசியு வார்டிலும் மாறி மாறி சென்று கொண்டே வந்து குருநாதருடைய நாமத்தை தாயின் காதிலும் குழந்தையின் காதிலும் ஓதி ஓதி அவருடைய புகைப்படத்தை தலையின் அருகே வைத்து இடைவிடாது பிரார்த்தனைகளை செய்து கொண்டே இருந்தார்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் போராட்டமாகவே இருந்தது!!!

மூன்றாவது நாள் நடந்தது தான் அற்புதம் அதிசயம்!!!!

நுரையீரல் பிரச்சனையால் குழந்தைக்கு வந்த பேராபத்து சூரியனைக் கண்ட பனிபோல விலகியது.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும் ஒரு சந்தேகமாகவே இருந்த மருத்துவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். படிப்படியாக நுரையீரல் செயற்கையாக கொடுக்கப்பட்ட இயங்கும் முறையில் இருந்து இயற்கையாக தானாக இயங்கத் தொடங்கி கிட்டதட்ட மூன்றாவது நாள் முடிவில் முழுமையாக சீரடைந்து குணமடைந்து விட்டது. மருத்துவர்களும் டிஸ்சார்ஜ் செய்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர்.

தாயும் சேயும் நலமாக வீடு திரும்பியவுடன் அந்த அடியவர் திரு ஜானகிராமன் அய்யாவுடன் பயணிக்கும் அடியவர்களிடம் தொடர்பு கொண்டு குருநாதன் என் குழந்தையை காப்பாற்றி விட்டார் தற்பொழுது தாயும் சேயும் நலம் என ஆனந்த கண்ணீரோடு நன்றி நவில!!!!!!....... குருநாதரின் கருணையை எண்ணி அனைவரும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சரி இதனை பற்றியும் குருநாதரிடம் மீண்டும் கேட்டு விடலாம் என்று எண்ணி குருநாதரிடம் கேட்க!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அவந்தன் என் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளான் என்பேன் அப்பனே!!!!

யானே தான் அங்கு சென்று வந்தேன் என்பேன் அப்பனே!!!

இவந்தனுக்கு ஆனால் குறைகள் எதையென்று அறிய அறிய ஆனாலும் அதனையும் யான் மாற்றித்தருவேன் பொறுத்திருந்தால்!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய எதனை எதனை என்று அறிய அறிய பின் யான் அங்கேயே வந்து விட்டேன் அப்பனே இதிலிருந்து நீ புரிந்து கொண்டாயா என்ன!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நல்விதமாகவே அப்பனே எதை எதை என்று அறிய அறிய எவரையும் நம்பி விடாதே என்று சொல் அவனிடம் அப்பனே!!!

யான் இருக்கின்றேன் அப்பனே.... எதை எதை என்று அறிய அறிய அவனிடத்தில் சென்று யான் தேனீரும் அருந்தினேன் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் என்னை நம்பியவர்களை யான் எப்பொழுதும் கைவிட்டதில்லை என்பேன் அப்பனே

ஆனால் மனிதன் மனிதனை நம்பினால் தான் அப்பனே இங்கு பிரச்சனை ஆரம்பம் என்பேன் அப்பனே!! 

அதனால் எதை  என்று அறிய அறிய யானே வருவேன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட!!!!

அக்குழந்தைக்கு நல்விதமாகவே மூன்று முறை காதில் ஓதுவேன் என்பேன் அப்பனே நலன்கள் நலன்கள் ஆசிகள்!!!!!!

என்று நல்லாசிகள் தந்தார்!!!!! இவ்வாக்கினை கேட்ட அனைவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்து கண்ணீர் மல்க பிரசவத்தின் போதும் உடன் இருந்து குழந்தைக்கு மிகுந்த பிரச்சினைகள் இருந்த பொழுதும் உடன் இருந்து காப்பாற்றி தந்து நாங்கள் கொண்ட நம்பிக்கையை மெய்யாக்கி எங்களுக்கு ஆசீர்வதித்த தெய்வமே!!!! உங்களுக்கு கோடான கோடி நன்றி என்று மனம் உருகிப் போய்விட்டனர்!!!!!!

தற்போது அந்த குழந்தைக்கும் """" நற்பவி""" என பெயரிட்டு குழந்தையும் குருநாதர் அகத்தியர் அருளால் நலமுடன் வளர்ந்து வருகின்றது!!!!! 

அகத்தியன் வாக்கு எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஒன்றை விட்டு விட்டால் நிச்சயம் அது நடக்காமல் எப்பொழுதும் கூட செல்லாது என்பேன்!!!!

"""""அகத்தியன் ஒரு """""சொல் !!!!!!    விட்டு விட்டால்!!!!!!!!! அச் சொல் ஜெயிக்குமே!!!! தவிர தோல்வி அடையாது!!!!!!

தோல்வி என்றால் தோல்வி என்று சொல்லிவிடுவேன்!!!!

வெற்றி !!! என்றால் வெற்றி!!! இதுதான் நிச்சயம்!!!!........

இவ்வாக்கு குருநாதருடைய பொன்னான வாக்கு மீண்டும் ஒருமுறை யுகம் யுகங்களாக தொடர்ந்து வந்தாலும் இந்த சூழ்நிலையிலும் இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது!!!!!!

என்னை நம்பியோரை அகத்தியன் கைவிட்டதாய் சரித்திரம் இல்லை!!!!!!!!

என்ற வாக்கு  யுகம் யுகங்களாக!!!! இந்த பிரபஞ்சத்தில் எத்தனை மாற்றங்கள் அடைந்தாலும் குருநாதர் அகத்திய பெருமானுடைய இவ்வாக்கு என்றும் மாறாது!!!!! மாறாது !!! மாறாது!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!