வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்று நம் குருநாதர் ஒரு உத்தரவை தன் சேய்களுக்காக அளித்ததாக கூறி, அடியேனின் நண்பர் ஒருவர், அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்" வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி செய்தி கொடுத்தார். நாம் அனைவரும் இதில் பங்கு பெறுவோம்.
நாளை குருபூர்ணிமா தினம். வந்த பாதையை, சற்று பின்நோக்கினால், போன வருட குருபூர்ணிமாவிலிருந்து (அன்று சந்திர கிரஹணம் இருந்தது) அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக்கொண்டு, இன்று உலகெங்கும் அனைத்து ஜீவன்களும் தவிக்கும் இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அப்படி தவித்த காலத்தில், தன் சேய்களை, எத்தனை தூரம் சென்று காப்பாற்ற வேண்டுமோ, அத்தனையும், நம் குருநாதர் அரணாக நின்று செய்துள்ளார். நாம் உணராத நிறைய தடைகளை உருவாக்கி வைத்திருந்தார்.
இனி அந்த தடைகளை விலக்கி, நம்மை, கூட இருந்து வழி நடத்த, அகத்தியப் பெருமான் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
நாளைய தினம் குருபூர்ணிமா பூசையை செய்து, முடிவில், அகத்தியர் அருளுடன், 16 முக தீபமேற்றி, மாலை நேரத்தில், சந்திரனுக்குகாக வெளியிடத்தில் வைத்திட வேண்டும். பூஜையில், மதுரை மீனாக்ஷியிடம், குருவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார். நம் பிரச்சினைகள் விலக கோரிக்கை (பொதுநல, தனிப்பட்ட) வைத்து, அவர் அருள் பெற்று நலமாக வாழ, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................... தொடரும்!

