"சித்த மார்க்கத்தில் எளிய மருத்துவம்" என்கிற தலைப்பில், "கண்டமாலை" என்கிற "கான்சர்" குணமாக இறை அருள் வேண்டும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, பல அடியவர்கள், நோய் குணமாக இறை அருளை தேடி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தூய்மையான சரணாகதியும், மனம் நெகிழ்ந்த பக்தியும் போதும் என்பதே உண்மை ஆயினும், அடியேன் ஒருவரது விஷயத்தில் தெரிவித்து, அவர்களும் தொடர்ந்து ஒரு ஸ்லோகத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) நம்பிக்கையுடன் ஜெபித்து வெற்றி பெற்றதையே, இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
நாராயணீயம் என்று ஒரு மிகப்பெரிய ஸ்லோகத் தொகுப்பு உண்டு. குருவாயூரில் உறையும் கிருஷ்ணரை ஆராதனை செய்து இயற்றப்பட்டது. இது 100 தசகங்களை (அத்தியாயங்களை) கொண்டது. இதில், 8வது தசகத்தில், 13வது சுலோகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அதை கீழே தருகிறேன்.
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி
அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ!
உச்சரிப்பு சரியாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், கீழே உள்ள வீடியோவை பாருங்கள், மனப்பாடம் பண்ணிக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை ஒரு நாள் 48 முறை, என்று 48 நாட்கள் ஆத்மார்த்தமாக ஜெபித்தபின் எந்த வியாதியாயினும், "உள்ளது" என்று எழுதித்தந்த மருத்துவர் கையாலேயே, இனி "இல்லை" என்று எழுத வைக்க முடியும். அப்படி மிக சக்தி வாய்ந்த மந்திரம். இதை இறை நம்பிக்கையுடன், எந்த வியாதியால் பீடிக்கப்பட்டவரும், ஜெபித்து வர, நிச்சயம், சீக்கிரமாக குணமடைய முடியும்.
ஸ்ரீ காஞ்சி பெரியவர் அவர்களே, இந்த ஸ்லோகத்தை, பலருக்கும், அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற, தனிப்பட்ட முறையில் உபதேசித்துள்ளார் என்பதிலிருந்து, இந்த ஸ்லோகத்தின் அருமையை உணர்ந்து, அனைவருக்கும் தெரிவியுங்கள், பகிருங்கள்.
ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமக!
சித்தன் அருள்..................... தொடரும்!

