அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
பொதுவாக, தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள், கடைசி காலத்தில் பிதற்றுவதும், மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க, பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமகாலம் என்பது கடுமையாகத்தான் இருக்கும். அதே சமயம் நல்லா ஆன்மாக்களுக்கும், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பாவங்களையும் எடுத்துவிட இறைவன் விரும்பினால், அவர்களின் அந்திமக்காலமும் வேதனை தன்னை தரக்கூடியதாகத்தான் இருக்கும். இந்த இரண்டில் எது என்பதை, இறைவன்தான் தேர்ந்தெடுக்கிறார். எனவே, சுகமான மரணம் நிகழ்ந்து விட்டால், அவன் புண்ணிய ஆத்மா என்றும், மிக்க கொடூரமான மரணம் நடந்தால், அவன் பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எத்தனையோ சூட்ச்சுமக் கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, பகுக்கப்பட்டு, பெருக்கப்பட்டு, பிறகுதான், கழிக்கப்படுகிறது.
