ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு நமஸ்காரம்!
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!
அடியேனுக்கு கிடைத்த ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், கீழே தருகிறேன்.
ஒதிமலையை உங்களுக்கெல்லாம் "சித்தன் அருள்" வலைப்பூ வழி திரு.கார்த்திகேயன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். போகர் சித்தருக்கு சொந்தமான, அவர் பூசித்த ஓதியப்பர் கோவிலில் மே மாதம் ஒன்றாம் தியதி (01/05/2015) (சித்திரை மாதம் 18வது நாள்), வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடத்திட, ஓதியப்பர் அனுமதி கொடுத்துள்ளார். நாவாக்னி ஹோமம் நடத்தி கும்பாபிஷேகம் செய்வதாக தகவல்.
இந்த அரிய வாய்ப்பில் நீங்கள் அனைவரும் பங்கு பெற்று ஓதியப்பரின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்பொழுது கிடைக்கும் என்று தெளிவாக கூறுவது கடினம்தான்.
ஓம் சரவணபவாய நமஹ!