வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
ஏதேனும் அபூர்வ தகவல் கிடைத்தால் அதை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லோரும் தெரிந்துகொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் பலரிடமும் பகிர்ந்து கொள்வது உண்டு. ஏனோ என்னால் அந்த மன நிலையை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் ருத்ராக்ஷம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்த போது மிகப் பெரிய ருத்ராக்ஷம் எங்கு இருக்கும்? என்ற கேள்வி என் மனதுள் எழுந்தது. சரி! வலைப்பூவை துழாவி பார்ப்போம் என்று நினைத்த போது கிடைத்த தகவலை கீழே தருகிறேன். உண்மையிலேயே ஒன்றரை அடி ருத்ராக்ஷம், அதுவும் "ஏக முகத்துடன்" ஒரு அகத்தியர் சீடரிடம் இருக்கிறது என்று அறிந்த பொழுது மனம் பூரித்து விட்டது.
தமிழக கேரளா மலை பிராந்தியத்தில் "கல்லார்" என்கிற இடத்தில் அகத்தியருக்கு ஒரு ஆஸ்ரமம் அமைத்து திரு தவயோகி தங்கரசன் சுவாமிகள் என்பவர், அந்த ஆஸ்ரமத்தில், ஒன்றரை அடி ஏக முக ருத்ரக்ஷத்தை வைத்து லிங்கமாக பாவித்து பூசை செய்து வருகிறார். அந்த ஒளி நாடாவை பாருங்கள்.
ஓம் அகத்தீசாய நமஹ!