​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 19 August 2025

சித்தன் அருள் - 1921 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 5!







9/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 5

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவருக்குமே!!

அப்பனே ஏன்? எதற்கு? அப்பனே.. பின் தெளிவு பெற அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே

நிச்சயம் தன்னில் கூட ஒருவனாவது அப்பனே சரியான வழியில் அப்பனே சரியான பாதையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.... அதாவது வழியும்!!!... பாதையும் ஒன்றா???... என்றெல்லாம் அப்பனே சிந்திப்பது... எவை? 

அப்பனே.. பாதை அப்பனே வேறு!!! வழி என்பது  வேறு!!!

இவற்றிற்கு இருக்கும் வேறுபாடே.. மனிதனுக்கு பின் தெரியாமலும் அப்பனே பின் புரியாமலும் அப்பனே.... எதை யான் சொல்கின்றேன் இங்கு என்பதையெல்லாம் பின் புலப்படுவதற்கு முன்பே அப்பனே சில உண்மைகளை விவரிப்பேன். 

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக பின் அனைவரும் கூட பின் மோட்சத்திற்கான.. வழிகள் இறைவன் ஏற்படுத்துவான் ஏற்படுத்துவான் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 
அப்பனே. 

அதாவது மோட்ச கதி அடைவதற்கு அப்பனே அவ்வளவு சுலபமான வழிகள்... அப்பனே இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!

இதனால்தான் நம்பிக் கொண்டே இருக்கின்றான்  இன்னும் கூட மனிதன் அப்பனே. பின் அதாவது இறைவனை நம்பினால் நிச்சயம் தன்னில் கூட மோட்ச கதி கிடைக்கும் என்பது..

இன்னும் எதை என்று புரிய புரிய இன்னும் நிச்சயம் தன்னில் கூட பின் ஆன்மா வெளியேற்றம் என்பவை எல்லாம்.. அப்பனே 

ஆனாலும் நிச்சயம் அப்பனே எதை உணர்ந்து எவை அறிந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்தும் அப்பனே... தேவர்கள் ஆயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமலும் கூட வாழ்ந்தாலும் அப்பனே இறைவனை புரிந்து தான் !!!!

அப்பனே பின் அதாவது பல... அப்பனே ஒரு பிறப்பில் அப்பனே எவரும் இறைவனை கண்டதில்லை என்பேன் அப்பனே. 

பல பிறப்புகளை பிறந்து பிறந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு தான்.. உண்மை இறைநிலையை அப்பனே அறிய முடிகின்றது. 

அப்படி அறிந்தவர்களுக்கு மட்டுமே யாங்கள் பின் வாக்குகள் செப்பி அப்பனே!!!


 பின் அறிந்தவர்களால் மட்டுமே அப்பனே... எங்கள் வாக்குகளை அப்பனே புரிந்து கொள்ள முடியும் என்பேன். அப்பனே. 

அப்படி இல்லையென்றால் அப்பனே ஏனோ!?? தானோ!?? என்று விட்டுவிட்டு.. அப்பனே அவன் வேலையை அவன் பார்த்துக் கொண்டே இருப்பான் அப்பனே! 

ஆனாலும் அப்பனே மீண்டும்.. வரவேண்டியது எங்களிடத்தில் தான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

ஆனால் அப்பொழுது பின் அதாவது அப்பனே... எதை என்று புரிய அனைத்தும்.. எவை என்று புரியாமலும் இழந்திட்டு வருவான் அப்பனே மனிதன்.
அப்பனே மீண்டும் பிறவிகள் எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மோட்ச கதி அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்... உடம்பிற்குள்ளே அப்பனே பின் சக்திகள் இருக்கின்றது..

அப்பனே பின் அதாவது உடம்பு பின்  வலிமை பெற இன்னும் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே... அதாவது இயற்கையான உணவுகளை உட்கொள்ள.. என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே... நிச்சயம் அதாவது எதை என்று புரிய... அதாவது துகளை வலுப்பெற அப்பனே பின் என்னென்ன?? உபயோகிக்க வேண்டும்!!... எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

எவை என்று புரியாமலும் கூட அப்பனே.. எவை என்று தெரியாமலும் கூட இதனால் அப்பனே...அத் துகள் வலிமை பெற்றால் தான்... அப்பனே நிச்சயம்... அனைத்தும் சமமாக பின் அனைத்து.. பின் கிரகங்களையும் கூட நட்சத்திரங்களையும் கூட அப்பனே விலக்கிக் கொண்டு சென்று காந்தகத்தை அடைந்து விடும் என்பேன் அப்பனே.

அதாவது பின் நிச்சயம் இறைவனை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. 

அப்படி இல்லை என்றால் அப்பனே இங்கேயே கிரகங்களாலும் நட்சத்திரங்களாலும் தடுக்கப்பட்டு மீண்டும் அப்பனே அவை தன் அப்பனே பின் மனித உடம்பில்... ஏதோ வகையில் உன் நுழைந்து... அப்பனே மீண்டும் அவ் ஆன்மா பிறந்துவிடும் என்பேன் அப்பனே. 

அதாவது ஒரு துகள்!! சிறிய கண்ணுக்குத் தெரியாத துகள் எவ்வளவு? வேலைகள் செய்கின்றது??? என்பதை பார்த்துக் கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே!!

அதனால்தான் அப்பனே பாவம் ஆனாலும் சரி புண்ணியம் ஆனாலும் சரி... அப்பனே ஒவ்வொரு துகளும் சேகரித்துக் கொண்டே எதை என்று அறிய அறிய அப்பனே!!

நீ என்ன செய்கின்றாயோ??.. அதற்கு பின் அதாவது பின் எதிரொலிப்பாகவே கொடுத்துக் கொண்டே கொடுத்துக் கொண்டே!!

இதனால்தான் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே எதையும்.. அப்பனே பேசக்கூட தேவையில்லை என்பேன் அப்பனே.

நிச்சயம் அமைதியாக இருந்து கொண்டாலே அப்பனே..

இதனால்தான் ஞானி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தெரிந்து கொண்டு அமைதியாக போய்விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அமைதியாக போய்விட்டால் அப்பனே 
நிச்சயம் தன்னில்  கூட அத் துகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

சக்திகள் பின் அதிகமாகிவிடும் என்பேன் அப்பனே. 
சக்திகள் அதிகமாகிட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ் கிரகங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய.. பின் நட்சத்திரங்கள் அப்பனே எதைத் தடுத்தாலும்... பின் நேராகச் சென்று காந்தகத்தில் அதாவது இறைவனிடத்தில் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே. 
சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதேபோல் எதை என்று புரிய அப்பனே... அதேபோல் எதை என்று அறிய அறிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் இங்கு (எகிப்து பிரமிடு)
அதாவது யான் சொன்னேனே!!! அப்பனே !!!


எதை என்று அறிய அறிய இவ் மூலஸ்தானத்தில் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட.. பின் அனைத்து கிரகங்களும் கூட அப்பனே... சிறிது நேரம் அப்பனே எவை என்று புரியாமலும்... அறியாமல் இருந்தாலும் அப்பனே... அறிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இதனால் அப்பனே சுற்றிக் கொண்டே இருக்கும்பொழுது ஒரு பின் அதாவது பின் வட்டமான பாதையில் கூட அறிந்தும் கூட.. அப்பனே சில நிமிடங்கள் அப்பனே பின்... ஒவ்வொன்றாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு சக்தி வெடிக்கும் என்பேன் அப்பனே... 

இவ்வாறு வெடிக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... மீண்டும் அப்பனே அறிந்தும்... அதாவது ஒரு துகள் அப்பனே... மேல் நோக்கி சென்று அப்பனே பாவமா??? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே ஆராய்ந்து... மீண்டும் அப்பனே அதாவது காந்தகத்தில் பின் ஒட்டிக் கொள்ளாமல் மீண்டும் அப்பனே வந்துவிடும்.. மீண்டும் அப்பனே.

( ஆன்மாக்கள் இறைவன் என்ற காந்தகத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் அதற்கு முருகன் என்ன செய்வார்???

நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே குருநாதர் அகத்தியர் பெருமான் 

14/11/2023 ல் 
சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1501 பதிவில் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் மேலும் புரிந்து கொள்ள முடியும்)

அவை மட்டும் இல்லாமல்... இறைவன் அப்பனே உடனடியாக எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அத் துகள் எவ்வாறு? என்பதையும் கூட எவ்வாறு என்று நினைத்து பாவமா?? புண்ணியமா??? என்றெல்லாம் அப்பனே மீண்டும் உடனடியாகவே அனுப்பி விடுவான் என்பேன் அப்பனே எதை என்று புரிய புரிய.

இதனால் தான் அப்பனே நிச்சயம்...உயிரோட்டமாகவே மனிதன் மீண்டும் மீண்டும் இதில் தன் (பிரமிடு உள்ளே) அப்பனே இட்டால்... நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும் உயிர் பெறுதல் நிச்சயம்...சாத்தியம் ஆகும் என்பேன் அப்பனே !!
ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அதை நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது அப்பனே எதை என்று புரிய 

எத்தனை??? அறிஞர்கள்??? எத்தனை மருத்துவர்கள்?? எத்தனை எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் அல்லவா!!!!!

அப்பனே நிச்சயம் அவர்களால் செய்ய முடியாதது அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இங்கிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எதை என்று அறிய அறிய..

என்ன செய்ய வேண்டும்?? என்பவை எல்லாம் அப்பனே... இருந்தாலே அப்பனே மீண்டும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!

இதுதான் அப்பனே எதை என்று புரிய... முதல் சித்துக்கள் என்பேன் அப்பனே 
(அஷ்டமா சித்துக்களில் முதல் சித்து)

இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!

அப்பனே இதை கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மாண்டு போயிட்டனர் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் இறைவனை பற்றியும் கூட சித்தனை பற்றியும் கூட... அப்பனே ஆராய்ச்சி செய்பவர்கள்... அப்பனே எப்பொழுதும்.. கற்றுக்கொள்ள முடியாதப்பா. அப்பனே அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே நீங்கள் நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே  அப்படி இறைவனையும் கூட எங்கிருக்கின்றான்??? என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் துடி துடித்துக் கொண்டே இருக்கின்றான் காண்பதற்கு..

சித்தர்கள் எங்கு இருக்கின்றார்கள்??? என்றெல்லாம் அப்பனே துடிதுடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே !!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே 

""""மின்சாரம் எங்கெங்கோ... செல்கின்றதல்லவா!!!

அப்பனே அதை அப்பனே முதலில் பாருங்கள் என்பேன் அப்பனே..

பின் அப்பொழுது இறைவனை.. பின் நிச்சயம் மின்சாரத்தை பார்ப்பவன்.. இறைவனை.. அறிந்து கொள்ள எதை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட உணரத்தான் உங்களால் முடிகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட.

அப்பனே ஆனாலும் பார்க்கவும் முடியும் என்பேன் அப்பனே இறைவனை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறாக அப்பனே நீங்கள் பக்குவத்திற்கு வர வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறு பக்குவம் இல்லையென்றால் அப்பனே... இறைவனை அப்பனே பின் வணங்குவதும் வீண் என்பேன் அப்பனே. 

ஏனோ தானோ என்று வணங்கி விட்டு... அப்பனே பின் இறைவன் நிச்சயம் தன்னில் கூட... அவை செய்வான் இவை செய்வான் என்றெல்லாம்.. நினைத்து அப்பனே வீணாகி சோம்பேறியாகி இருந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே என்ன பயன்???

அவ் சோம்பேறியை தடுக்கவே... அப்பனே இறைவன் அப்பனே துன்பம் என்ற பாதையை அப்பனே வகுக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் நீ துன்பப்பட்டால்தான் சில விஷயங்கள் தெரியும் என்பேன் அப்பனே. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அவை இவை என்றெல்லாம் அப்பனே... இதனால் அப்பனே பல பல அரசர்களும் கூட இங்கு வந்து... எதை என்று அறிய அறிய அப்பனே பின்... சக்திகள் பெற்றுக்கொண்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்து பின் நட்சத்திரங்களையும் கூட ஒன்றிணைந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஒளியானது.. அப்பனே பின் அறிந்தும் கூட இங்கு.. விழுந்து அப்பனே மீண்டும்.. பிரதிபலித்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய அறிய மீண்டும் அப்பனே அதாவது அனைவரும்.... ஒன்று கூடுவார்களே அப்பனே!!! அங்கு விழுகின்றது என்பேன் அப்பனே!!!

அங்கும் அப்பனே ஈசனுடைய ஆலயம்!!!
அறிந்தும் கூட!!!

(குருநாதர் குறிப்பிடும் இவ்விடம் அடுத்த வாக்கில் அது எந்த இடம் என்பது அனைவருக்கும் புரியவரும் அதாவது பாகம் 6 ல் தெரியவரும்)

இதனால் அப்பனே... எங்கெங்கு?? அப்பனே சமமாக நிச்சயம் தன்னில் கூட... சக்திகள் விழுகின்றதோ??? அங்கெல்லாம்.. அப்பனே முந்தைய அதாவது... பண்டைய சமுதாயத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே.... அப்பொழுதே இறைவன் மூலம்... பின் சக்திகள் பெற்று... அதையும் கூட அப்பனே நிச்சயம்... தன்னில் கூட கண்டுணர்ந்து... அங்கெல்லாம் அப்பனே... பலமாக அப்பனே எதை என்று அறிய அறிய... இதேபோல் (பிரமிடுகள்) அமைத்தார்கள்.. என்பேன் அப்பனே!!

அதாவது நல்விதமாக அப்பனே மனிதன் கூடும் அளவிற்கு கூட என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால்தான் அப்பனே... போட்டி பொறாமையை நீக்குங்கள்... அனைவரும் ஒன்று சேருங்கள் அப்பனே... கூட்டு பிரார்த்தனையை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொருவரும் கூட அப்பனே.. பின் அதாவது ஒருவன் தனியாக செய்வான் அப்பனே !!! ஒருவன்... அதாவது யான் தவம் செய்ய வேண்டும்... யான் அப்பனே தியானம் செய்ய வேண்டும்... அப்பனே பின் யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.... இன்னும் வசி...(வாசியோகம்) என்றெல்லாம் எதையெதையோ செய்து கொண்டிருப்பான் அப்பனே! 

ஆனாலும் இவற்றை விட... அதிகமான சக்தி அப்பனே...

கூட்டு பிரார்த்தனையில் தான் உள்ளது என்பேன் அப்பனே. 

ஒரு ஆயிரம் பேர் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... எதை என்று இறங்கி வந்து அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறங்கி வருவான் இறைவன் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே பின் அதாவது... உயிரையும் கூட அப்பனே எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே மாற்றி அதாவது... உயிர் போகும் நிலையில் இருந்தாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே உங்களுடைய... அப்பனே சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதில் கூட. அப்பனே !!!

(பிரமிடு ரகசியங்கள் பாகம் 4 கூட்டு பிரார்த்தனையால் உயிர் பிரியக்கூடிய நிலைமையை கூட மாற்றி மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று குருநாதர் கூறியதை இங்கு நினைவு படுத்துகின்றார்)

உடம்பில் உள்ள பின் வரும் கதிர்வீச்சுக்கள் அது பின் அறிந்தும் கூட பின் அதாவது காந்தகத்துடன் இணையும் அளவிற்கு சக்தி படைத்தவை!!
அதாவது இறைவன் தான் காந்தகம் என்று சொல்லிவிட்டேன் அப்பனே. 

இவ்வாறாக அப்பனே 1000, 2000, அப்பனே இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப் பலங்கள்  அப்பனே இன்னும் சேர்கின்ற பொழுது அப்பனே அறிந்தும் கூட.

இவ்வாறாகத்தான் அப்பனே!!!.... நிச்சயம்... நால்வரும் கூட (சமயக்குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்) அப்பனே பல பாடல்கள் இயற்றினார்கள் என்பேன் அப்பனே! 

(பன்னிரு திருமுறைகள் தேவாரம் திருவாசகம்)

ஒவ்வொரு பாடலிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய பக்குவங்கள். 

இதனால் அப்பனே.. பல பேர்கள் அப்பனே பின் கூட்டு சேர்ந்து...(தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்) பாடுகின்ற பொழுது அப்பனே... விதியை கூட வென்றிடலாம் என்பேன் அப்பனே. நல்விதமாக. 

இதனால் அப்பனே... இதை இவை எவை என்று புரியாமலும்... அப்பனே அதாவது இவ் மூலாதாரமானது (பிரமிடு )அப்பனே... விதியை கூட வெல்லக்கூடியது என்பேன் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நோய் நொடி என்று அப்பனே பின்... அதாவது அறிந்தும் கூட அதனால் அப்பனே... இங்கு பின் தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் நோய் நொடிகள் கூட வராதப்பா. 

ஏன் ? எதற்கு? அப்பனே உடம்பு அப்பனே தேகம் அதாவது அறிந்து எதை என்று.. அப்பனே நிச்சயம்... இளமையாகவே நிச்சயம் கடை நாளும் அப்பனே இருக்குமப்பா. 

அப்பனே நிச்சயம் முன்பெல்லாம்.. பின் நிச்சயம் பின் அரசர்கள் எதை என்று புரிய அப்பனே அதாவது... அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கூட... அப்பனே ஒவ்வொரு இடைவெளி உண்டு. 

அதாவது சில மாதங்களே என்பேன் அப்பனே... அதாவது சில நாட்களே.. என்றும் கூறலாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சிலருக்கு 10 நாட்களில் சிலருக்கு 20,... சிலருக்கு 30... ஆனாலும் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவ் சக்திகள்.. இயக்க அப்பனே பலமாக அப்பனே இன்னும் இன்னும்... அப்பனே கிரகங்கள்... அப்பனே தொட்டிட்டு போகுமப்பா!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஒவ்வொரு அப்பனே பின் ரிஷியின் கூட நட்சத்திரங்கள் அறிந்தும் கூட சமமாகவே இங்கு விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட அப்பனே...இவை தன் அப்பனே புரிந்து கொள்ளுங்கள்...

ஏன்??? நட்சத்திரங்களாக பின்.. ஜொலிக்கின்றார்கள்..??? 
எதை என்று புரிய அப்பனே..

இன்னும் ஞானியர்கள் பலர் அப்பனே பின் அறிந்தும் கூட அனைவரும் அப்பனே ஆனாலும் அப்பனே இது அனைவருக்கும் தெரிந்ததப்பா... இவ் விஷயங்கள் அப்பனே!!

உண்மையான பக்தி உள்ளவன் அப்பனே ஞானம் பெற்றவனுக்கு அப்பனே நிச்சயம் எங்கு சக்திகள் உள்ளது??? என்பதெல்லாம் தெரியுமப்பா!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை மறைத்துவிட்டு அப்பனே பின்.... அங்கு சென்றால் நலமாகும் இங்கு சென்றால் நலமாகும்... இதைச் செய்தால் நலமாகும் என்பதை எல்லாம் அப்பனே..

ஆனாலும் ஒன்றும் நலமாகாதப்பா. 

ஏதோ??!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம் பின்... மழைக்கு அதாவது ஒதுங்கலாம்!!!... அல்லது அப்பனே பின் குடையும் பிடித்துக் கொள்ளலாம்...
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில்  கூட மழை நின்று விட்டால் அப்பனே... என்னவாகும்?? என்று!!

அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் பலமாக மழை பெய்தால் என்ன ஆகும்?? என்பதை எல்லாம் அப்பனே... பின் தீர அப்பனே யோசித்தால் புரிந்து அறிந்து... எதை என்று தெரிந்தும் கூட. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் பின் புண்ணியங்கள் அப்பனே எங்கு சேர்க்கப்படுகின்றது??
அப்பனே... எங்கு நீக்கப்படுகின்றது??? என்பதையெல்லாம் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா!!

இதனால் அப்பனே மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்.. பாவம் செய்யாதே!! புண்ணியம் செய்யாதே என்று!!

ஆனாலும் அப்பனே ஏன்? எதற்கு? சொல்கின்றான் என்று பின் தெரிகின்றதா??? என்ன!!! அப்பனே!!!

நிச்சயம் அப்பனே ஒவ்வொரு எதை என்று செயலுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அவ் துகள்கள் அப்பனே... நிச்சயம் பாவத்துகள்... மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே... புண்ணிய துகள்கள் அப்பனே நீங்கள்... எதை செய்கின்றீர்களோ அப்பனே அதை.. அப்படியே பின் எதிரொலிக்கும். 
அப்பனே அதாவது அறிந்தும் கூட. 

எவை? நிச்சயம் தன்னில் கூட... எவையெல்லாம் பாவக்கணக்கில் போகும்??? எவையெல்லாம் புண்ணிய கணக்கில் போகும்? என்பதையெல்லாம் அப்பனே தீர பின் நிச்சயம் யானே சொல்வேன் அப்பனே.

எங்கெங்கு??? வாக்குகள் செப்ப வேண்டும்??? என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அதனால் ஒரு பொக்கிஷமாகவே அப்பனே எதை என்று புரிய... இன்னும் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் பின் சென்று நிச்சயம் பின்.. அதாவது அறிந்தும் கூட எவை என்று புரிய நிச்சயம் உடம்பே... தேவையில்லை...

இன்னும் அறிந்தும் எதை என்று அறிய அறிய ஆன்மா மட்டும் போதும் என்று பின்... அதாவது கூட்டமாக அப்பனே எதை என்று புரிய இங்கு உள்ளதப்பா. 

இதனால் அப்பனே.. அங்கு செல்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அறிந்தும் கூட இறைவன்.. பலத்தை பெற்ற ஆன்மாக்கள் இன்னும் கூட... அப்பனே அங்கேயே ஒளிந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

(இதேபோன்று மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரர் ஜோதி லிங்கம் திருத்தலத்தில் நர்மதா நதியில் ஈசன் அருளால் தன்னுடைய உடல்களை துறந்து ஞானிகள் உள்ளே தவமிருந்து கொண்டிருப்பதை முருகன் வாக்கில் கூறிய பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது மேலும் புரியும் 

(Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275-அன்புடன் அகத்தியர் ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!

12/10/2022 ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.)

இதனால் அப்பனே நன் முறைகளாக பின்.. நல் மனதோடு செல்பவர்களுக்கெல்லாம்.அவ் ஆன்மா அனைத்து திறமைகளையும் கொடுத்து அப்பனே.. மாற்றங்கள் அதாவது அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம்... அப்பனே 

நீங்கள் சொல்கின்றீர்களே!!!!.. அப்பனே அறிந்தும் எவை என்று அறிய அறிய.... மற்றவர்களுக்கு பின் அதாவது ஏவல் செய்து விட்டார்கள்... நிச்சயம் அறிந்தும் கூட பின் ஏதோ செய்து விட்டார்கள்... எவை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இங்கெல்லாம்... (பிரமிடுக்குள்) அப்பனே பின் உள் நுழைந்தாலே அப்பனே பின் அடியோ அடி என அடித்து... அப்பனே எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட மீண்டும்... அப்பனே எவை என்று அறிய அறிய அவை (ஏவல் ) கிட்டவும்.. நெருங்காதப்பா!!!

(பில்லி சூனியம் மாந்த்ரீகம் ஏவல் பிரச்சினைகள்)

 அனைத்தும் ஒழிந்து தூரே போகுமப்பா!!!

அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம்... மனிதன் ஒன்று ஏற்படுத்தினால்... அப்பனே அதை தடுக்கும் சக்தி. அப்பனே நிச்சயம் தன்னில் இன்னொரு சக்திக்கும் உண்டு என்பதை நிச்சயம் உணர வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அதனால்தான் பொறாமை என்பதை அப்பனே பின் நிச்சயம் ஒரு... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் கோபம் என்பது கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே..

அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


ஒரு வாய் சொல்லானது கொல்லும் அளவுக்கு சமம் என்பேன் அப்பனே. 

அதாவது பொய் சொல்லுதல் அப்பனே பின்... கொல்லும் அளவிற்கு சமம் என்பேன் அப்பனே...

இவ்வாறெல்லாம் அப்பனே பின் பாவங்கள் செய்துவிட்டு அப்பனே இறைவனிடத்தில் அப்பனே பின் சென்றால் இறைவன் என்ன செய்வான் அப்பா???

குழந்தைகளே!!! நிச்சயம் கேட்டு அறிந்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் யாங்கள் உங்களை காத்திட தயாராகவே இருக்கின்றோம் என்போம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே அவ்வாறு காத்திட்டாலும் கரை சேர்த்தாலும்.. அப்பனே மீண்டும் அப்பனே.. பின்.யாங்கள் அங்கு தான் செல்வோம் என்று நீங்கள் தான் அப்பனே எதை என்று புரிய. 

இதனால் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே  நிச்சயம் எவை என்று புரிய.. அனைத்தும் அப்பனே அதாவது எங்களிடத்தில்... வரவேண்டும் என்றால்... கடும் அப்பனே பின் கஷ்டங்கள்... அதாவது பட்டு பட்டு.. எழுந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு கஷ்டங்கள் பட்டு எழுந்திருப்பவனுக்கே அனைத்தும் யாங்கள் கொடுப்போம் அப்பனே. 
அனைத்தும் பின்... எங்கள் அருள்களால் கொடுத்து அவனை அப்பனே பின் மக்களுக்கு சேவை புரிய வைப்போம் என்போம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீங்கள்... கேட்டாலும் யாங்கள் நிச்சயம் கொடுக்கப் போவதில்லை!!!

ஏன்? எதற்கு???... ஏனென்றால் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியுமப்பா!!!

ஆனாலும் எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும்... மனிதன் சொல்லிக் கொண்டே இருப்பான்...

யான் வணங்கினேன்... என் அன்னை!!!..... பின் அதாவது என் தந்தை அனைத்துமே... அகத்தியன்!! அதாவது ஈசன்!... முருகன்.. என்று...

அவையெல்லாம் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதப்பா!!!

அப்பனே பின் தெரிந்துதான் அதாவது பின் எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட தந்தை... என்று அடையாளம் காட்டினால்தானா?????? அப்பனே!!!???

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

இவ்வுலகம் விசித்திரமானது!!! பொய்யானது!!!
அப்பனே பின் பொய்யானவற்றிற்கே... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் அப்பனே தர்ம நிலையை காக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் அப்பனே மூலத்தில் (பிரமிடு ) அப்பனே... பல ஆன்மாக்கள் அப்பனே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே... எதை என்று புரிய!!

இன்னும் அப்பனே இங்கிருந்து வழிகள் அப்பனே எங்கெங்கு???
அப்பனே இருக்கின்றது பின் அதாவது அப்பனே பின் (பிரமிடு)அடியிலே இங்கிருந்து அப்பனே பின் அனைத்து உள்ளும் கூட அப்பனே கூடிட்டு அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின்... நேற்றைய பொழுதில் சென்று விட்டதே அறிந்தும் எதை என்று... நிச்சயம் தன்னில் கூட வழிபாடுகள்... அப்பனே அங்கே ஒரு அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்பனே இங்கிருந்து... அப்பனே பின் வழிகள்... அங்கிற்க்கும் (அங்கும்) செல்கின்றது என்பேன் அப்பனே... அங்கிருந்து (கீசா பிரமிடு வளாகம்) அப்பனே அப்படியே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கடைசி தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... தனுஷ்கோடியை அடைந்து அப்பனே பின்... இலங்கைக்கு சென்று.. அப்பனே எதை என்று கூட முடிகின்றதப்பா!!!

இதனால் அப்பனே இதன் உள்ளே.. அப்பனே நிச்சயம் பல திருத்தலங்கள் உள்ளது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து ஆரம்பித்து அப்பனே பின்... அப்பொழுதெல்லாம் இங்கு ஆரம்பித்து.. அப்பனே எதை என்று அறிய அறிய கடை.. கோடியில் அப்பனே பின் முடிப்பார்கள் என்பேன் அப்பனே.. நிச்சயம் பயணங்கள்..

அதாவது இதை 

 """* தீட்சை பயணங்கள்!!!!!

 என்பார்கள்... என்பேன் அப்பனே.

இவ் தீட்சை பயணத்தை தொடங்குபவனுக்கு அப்பனே பின்...

""" பிறப்பும் இல்லை!!! """இறப்பும் இல்லை!!!!

 என்பேன் அப்பனே!!!

காலப்போக்கில் அவை மறைந்து விட்டது என்பேன் அப்பனே...

மனிதனாலே இவை தெரிந்து கொள்ள.. அப்பனே இப்பொழுதும் அங்கங்கு... மறைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.... அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்பதெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் உண்மையான பக்தியில் மனிதன் இருந்தால்... அதை நிச்சயம் யாங்களே அழைத்துச் சென்று அப்பனே... பின் காட்டுவோம் அப்பனே... சக்திகளை பெற செய்து அப்பனே... நீங்களும் கூட மற்றவர்களுக்கு... அப்பனே சக்திகள் பின் உட் புகுத்தலாம் என்பேன் அப்பனே!!

அப்பனே ஒன்றையே சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே...

பின் சனீஸ்வரன் மாறினால்... அப்பனே நிச்சயம் பின் கெட்டதை செய்வான்!!.. இவனுக்கு நல்லதை செய்வான் என்று அப்பனே. 

பின் நிச்சயம் சனீஸ்வரன் எவனுக்கும்.. பின் நிச்சயம் கெட்டதை செய்வதில்லை... அப்பனே பின் நல்லதும் செய்வதில்லை என்பேன் அப்பனே...

நிச்சயம்... அவனவன் அப்பனே பின் செய்த... அப்பனே பாவத்திற்கு பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... எவை என்று அறிய அறிய புண்ணியத்திற்கு ஏற்ப.. நிச்சயம் நடந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே..

இக்கிரகங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறாக தொடுகின்ற பொழுது.. அப்பனே அக்கதிர்வீச்சுகள் பின் நிச்சயம்... அவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும்... சனீஸ்வரன் அப்பனே பின் வருகின்ற பொழுது...அக் கதிர்வீச்சில் அப்பனே அதிக புண்ணியங்கள் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அதிக அளவு நன்மைகளாக பின் பெற முடியும் என்பேன் அப்பனே. 

அவ் கதிர்வீச்சுகள் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது... பாவங்கள் அதிகமாக இருந்தால். பாவ கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் அப்பனே இவை தன் பின் அதாவது.பின் சனீஸ்வரன் கிரகம் அப்பனே... எதை என்று அறிய அறிய கீழே தொடுகின்ற பொழுது அதாவது சமமான அப்பனே பின்... உடம்பை பின் தொடுகின்ற பொழுது அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்கள் தான் ஏற்படுவது உறுதியப்பா. 

(கிரக தோஷங்கள் என்பது நம்மளுடைய பாவம் மற்றும் புண்ணியத்தால் தீர்மானிக்கப்படுகின்றது... புண்ணியங்கள் அதிகம் இருக்கின்றவர்களுக்கு சனி கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் படும்பொழுது நன்மைகள் ஏற்படுகின்றது....

பாவங்கள் அதிகமாக இருந்தால் கிரகத்தின் கதிர்வீச்சால் கஷ்டங்கள் ஏற்படுகின்றது 

இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும் 

இங்கு கிரகங்களின் பார்வை பலன் தோஷம் அனைத்தும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றது)

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்களே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரன்... எதை என்று கூற ஏழரை.. இன்னும் என்னவோ!??
(கண்டது சனி அஷ்டமத்து சனி என) 

பின் சனீஸ்வரன் கெட்டதை செய்வான் என்று!!

நிச்சயம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே 

ஏன்? எதற்கு ?பயப்பட வேண்டும்??? சனீஸ்வரனுக்கு அப்பனே!!!

ஆனால் அப்பனே நீங்கள் ஒழுங்காக இல்லை... அவ்வளவுதான் என்பேன் அப்பனே..

அதாவது யான் நிச்சயம் தன்னில் கூட... ஒழுங்கானவன்! யான் தவறே செய்யாதவன் என்று அப்பனே பின் நிச்சயம் நின்றால் அப்பனே நிச்சயம்.... சனீஸ்வரனா???... சரி என்னை தொடட்டும் பார்ப்போம் என்று!!!.. நீங்கள் சொல்லலாமே!!!!!!!! அப்பனே!!!

ஏன்? சொல்வதில்லை???? அப்பனே!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!.... அவை மட்டும் இல்லாமல் குரு (ஜாதகத்தில் குரு) இவ்விடத்தில் இருந்தால்?????....... அவ்விடத்தில் இருந்தால்?????? என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மாற்றி அமைத்து.. அப்பனே பின் எதை என்று புரியாமலும்...

இவற்றிற்கெல்லாம் இடைக்காடன் (இடைக்காட்டு சித்தர்) வந்து.. வாக்குகள் பலமாக அப்பனே பின்.. செப்புகின்ற பொழுது புரியுமப்பா !!

அப்பனே இன்னும் விளக்கத்தோடு.. கூறுகின்றேன்!!!

இப்பொழுது ஆசிகள்!! ஆசிகளப்பா!!.

முந்தைய காலத்தில் எகிப்து தேசம் மட்டுமல்லாமல் அனைத்து தேசங்களிலும் பிரமிடுகள் அமைக்கப்பட்டது பின்பற்றப்பட்டது காலப்போக்கில் மற்ற தேசங்களில் உள்ள பிரமிடுகள் அழிந்துவிட்டது இதில் தற்பொழுதும் அமெரிக்கா நைஜீரியா தென் ஆப்பிரிக்கா கம்போடியா இந்தோனேஷியா இந்த தேசங்களில் எல்லாம் பிரமிடுகள் என்றும் ஓரளவு பாதி சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றது.. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் சில குறிப்பிட்ட கோயில்கள் விமானங்கள் பிரமிடு வடிவத்தில் இருப்பதை காணலாம்..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திரட்டுவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!