​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 June 2026

சித்தன் அருள் - 2228 - அன்புடன் அகத்தியர் - மௌன பிரபு வாசி முனிவர் ஜீவ சமாதி!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

குருநாதர் அகத்திய பெருமான் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சித்தர்கள் ஜீவசமாதி பயணங்களில்

தூத்துக்குடி மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பல ஜீவ சமாதிகள் உள்ளது குறிப்பாக மௌன குரு ரெட்டி சுவாமிகள் ஜீவசமாதி மற்றும் சுப்பாஞானியார் ஜீவசமாதி மில் குருநாதர் ஏற்கனவே வாக்குகள் உரைத்துள்ளார்.

அதன்படியே அருப்புக்கோட்டையில் அமைந்திருக்கும் வாசி யோக சித்தர் ஆலயத்தில் இந்த யாத்திரை சென்ற அடியவர்களுக்கு செல்லும் காரிலேயே சித்தர்களின் அனுபூதி அமைந்தது. 

இதனைக் குறித்து குருநாதரிடம் மௌன பிரபு வாசி முனிவர் ஜீவ சமாதியில் குருநாதர் இடம் கேட்ட பொழுது குருநாதர் வாக்குகளாகவே தந்து விட்டார்.

அவ் வாக்குகள் பின்வருமாறு!!

குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ மௌன பிரபு வாசிமுனிவர் ஜீவ சமாதி அருப்புக்கோட்டை.

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன் 

அப்பனே இப்பொழுது மௌனம் சித்தன் என்கின்றார்களே நல் முறைகளாக தன் பிள்ளைகள் எப்படி போவார்கள்?? என்று கூட பின் கூடவே வந்து விட்டான்!!

அவந்தனும் இங்கே அமர்ந்து கொண்டு தான் இருக்கின்றான் என்பேன். 

நல் முறைகளாக ஆசீர்வாதங்கள் 

அப்பனே இவந்தன் நல் முறைகளாக இப்பொழுதும் கூட நல் முறைகளாக இவன் தான் அழைத்து வந்து நல் முறைகளாக ஆசிகளும் தந்துவிட்டான் என்பேன். 

இவனது அனுமதி இல்லாமல் யாரும் இங்கே வர முடியாது என்பேன்!!

தகுதி ஏற்றார் போல் பின் யாருக்கு எவ் தகுதி இருக்கும் என்பதை கூட உணர்ந்து தான் பின் ஞானிகளும் செய்வார்கள் என்பேன். 

அத்தகுதி நீங்கள் அனைவரும் படைத்திருக்கின்றீர்கள். 

அதனால்தான் இப்பொழுது கூட இங்கு வந்து ஆசிர்வாதங்களாக பெற்று செல்கின்றீர்கள் என்பது உறுதி 

உறுதி அப்பனே இவன் அருள் இருந்தால் அப்பனே இவ்வுலகத்தில் அனைத்து திறமைகளும் சாதிக்கலாம் என்பேன். 

சிறப்பு வாய்ந்த மனிதன். 

மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாறியவன் இவன். 

அதனால் சற்று உற்றுப் பார்த்தால் இழந்தும் நல் முறைகளாகவே உறங்கி க் கொண்டிருக்கின்றான் என்று நினைத்தீர்களா????

உறங்கவே இல்லை. 

பின் மனிதர்களை எவ்வாறு?? பின் நல் முறைகளாக பயன்படுத்தி மக்களை திருத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!


ஆனாலும் அதிவிரைவிலே அனைத்தும் செய்வான்.

இவ்வாலயம் இன்னும் சிறப்பு பெறும் அனைவரும் இதன் சிறப்பை பற்றி அறிவார்கள் என்பேன். 

வருவார்கள் என்பேன். 

ஆனாலும் புத்தி இல்லாத மனிதன் இன்னும் எதனை எதனையோ நினைத்து ஓடிக்கொண்டே இருக்கின்றான். 

ஒரு பிரயோஜனமும் இல்லை. 


ஆனாலும் இவந்தன் தேர்ந்தெடுத்து நல் முறைகளாக.. பின் கஷ்டங்கள் இருப்பவர்களுக்கு. இவந்தனே அனைத்தும் செய்வான் என்பேன் 


நல் முறைகளாக மனதை சில மனிதர்களுக்கு மாற்றி நல்முறைகளாகவே இவன் பெரும் ஞானி என்பேன். 

இவந்தனும் பின் சுற்றித் திரிவான் என்பேன்.. நல்லோர்களை வாழ வைப்பான் என்பேன்.. இவனுக்கு அவ் அனுக்கிரகம் உண்டு என்பேன்.

இவந்தன் ஓடோடி வந்து உதவிடுவான் என்பேன். 
நிச்சயம் இவந்தனக்கு தெரியும்

அப்பனே மனதார மனதார இன்று கூட இவன் தான் இங்கு அழைத்தான் என்பேன். 

அப்பனே எதற்காக?(அழைத்தார்) ஏன்? என்ற கேள்விகள்...

அப்பனே அனைவரும் ஒரு விதத்தில் அப்பனே மக்களை வாழவைத்து உள்ளீர்கள் என்பேன். 

அதனால்தானப்பா!!

இவந்தனுக்கு பிடித்து விட்டால் அனைத்துமே செய்வான்.. என்பேன். 
அனைவருக்கும் அனைத்துமே செய்வான் பொறுத்திருங்கள்.

ஆனாலும் எதிர்கொள்வதற்கு சில கஷ்டங்கள்..

கஷ்டங்கள் நேர்ந்துவிட்டது.

ஆனாலும் இவனே தீர்ப்பான். 

நல் அருள்கள் நல் அருள்கள் பொங்கி வழியுதப்பா. 

நல் முறைகளாக இப்பொழுது கூட பின் முகத்தில் கையை வைத்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்கின்றான் இவந்தன்.

அப்பனே இவந்தனக்கு அனைத்து வித்தைகளும் தெரியும் என்பேன்.

இவந்தனை பணிந்தால் அப்பனே நல்லோர்களுக்கும் அனைத்து வித்தைகளையும் தெரியாமல்!!...... தெரியும் அளவிற்கு சொல்லிக் கொடுத்து விடுவான் என்பேன். 


தகுதிகள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே 

குறைகள் இல்லை அனைவருக்கும் ஆசிர்வாதங்கள்...

யான் நல் முறைகளாகவே இப்பொழுது கூட கொடுத்து அனுப்புகின்றேன் அப்பனே.. நல் முறைகளாக இவந்தனுடைய ஆசிகளும் துணையிருக்க... அப்பனே நல்முறையாக புண்ணியம் செய்து அப்பனே நல் முறைகளாகவே...

கடையில் (கடைநாளில் ) இவந்தனை இங்கே பார்க்கலாம் என்பேன் ஒவ்வொருவரும். 

நல் முறைகளாக இன்னும் இத்தலத்தைப் பற்றி அப்பனே இன்னும் எழும்.. என்பேன். 

இவையன்றி கூற பொறுத்திருங்கள்.. அனைத்தும் விவரிக்கின்றேன்.. மறு வாக்கும் இங்கு வந்து...


(வணக்கம் அய்யா அவர்களே. இந்த வாக்கு இரவில் பயணத்தின் போது குருநாதர் வாசியோக சித்தரின் ஜீவ சமாதியில் உரைத்தது 

குருநாதர் தன் வாக்குகளில் கூறியபடி மௌனம் சாமிகள் அடியவர்களுடன் வாகனத்தில் கூடவே பயணித்து வந்ததை அடியவர்களுக்கு பரிமளம் மூலம் தெரியப்படுத்தினார் குருநாதர் தனது வாக்குகளில் மௌனம் சித்தரே உடன் வந்தார் என்பதையும் வாக்குகளில் கூறினார்.

காரில் ஏறும் பொழுது பஞ்சாமிர்த வாசனை தல யாத்திரை செய்த பொழுது அடியவர்களுக்கு காரின் உள்ளே வீசிக்கொண்டே இருந்தது  தெய்வீக அனுபவமாக பஞ்சாமிர்தம் திருநீறு சந்தனம் வாசனை திரவியங்கள் பரிமளம் வீசிக்கொண்டே இருந்தது குருநாதர் இதைப்பற்றி மௌனம் சாமிகள் உடன் வந்தார் என்பதை அறிந்து மிகவும் பக்தி பரவசமுற்றனர்)

அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ மௌனபிரபு வாசி முனிவர் ஜீவசமாதி நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில், ஜோதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

ஸ்ரீ மௌன பிரபு வாசி முனிவர் சாமிகள் 
மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரம் குருபூஜை.

ஜோதிபுரம் 
நான்கு வழி சாலை இரயில்வே மேம்பாலம் அருகில் 
அருப்புக்கோட்டை 
தொடர்புக்கு:
9443680517,
9443396893,
9952622801.

Sri Vasi Munivar
G486+HMX, Vasantham Nagar, Aruppukkottai, Tamil Nadu 626101
https://maps.app.goo.gl/sSjScBzTriCSbx2n8

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete