அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - நிறைவு பகுதி 9
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 25.03.2026 அன்று நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த வாக்கு.
நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :- 29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :- ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
குருநாதர் :- அப்பனே இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே பின் ஒரு கல்லைப் பற்றி பேசினேன் அப்பனே.
(அன்பு குருநாதர் உரைத்த சுராக்கல் ரகசியங்கள் சித்தன் அருள் எண்: 2046 இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 - கேட்கும் வரத்தை அப்படியே தரும் கல் - இந்தக் இறைவன் கல்லோ அல்லது இதன் சிறிய துகளோ ஒருவருக்குக் கிடைத்துவிட்டால், அவர் என்ன கேட்டாலும் அது அப்படியே கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது)
குருநாதர் :- ஏன் இங்கு வரவேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் புத்தன் ஏன் வரவேண்டும் நபிகள் நாயகம் ஏன் வரவேண்டும் அப்பனே? இயேசுநாதன் ஏன் வரவேண்டும் என்பேன் அப்பனே? தெரியும் எவை என்று கூற பின் இப்படி புரிகின்றதா அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, என்ன பண்ணாங்க? எல்லாரும் இங்க வந்தாங்க.
===========================
# அன்பு குருநாதர் இறைவன், உலக நன்மைக்காக, உலகத்தின் இதயத்தில் செய்ய உள்ள கலியுகத்தின் அருள் ரகசியங்கள்.
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இத்தேசம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அது இத்தனை அப்பனே பின் சிறப்பு வாய்ந்த அப்பனே பின் எதை என்று கூற பின் எதை என்று அறிய, இதை பிடித்துவிட்டால் அப்பனே பின் எதை என்று அறிய, அப்பனே பின் அனைத்தும் எதை என்று அறிய , அப்பனே ஒரே நாள் எவை என்று கூற, பின் அப்பனே அதாவது பின் ஒரே பின் பெயரில் அப்பனே பின் வந்துவிடும் என்பேன் அப்பனே இத்தேசமே.
இதனால் அவன் சொல்லுவதுதான் சட்டம் என்று ஆகிவிடும் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை தன் அப்பனே பின் அழிக்காமல் இருக்கவே அப்பனே பின் எழுப்புகின்றேன் மீண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இத் தேசத்தில் தேடி எவை என்று கூற பின் தேடி தேடி வந்தவர்கள் எல்லாம் கூட எழுப்பப் போகின்றேன் அப்பனே.
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
இதற்காகவா அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் மனிதனுக்கு அப்பன் நிச்சயம் தன்னில் கூட யாங்கள் அப்பனே பின் எவை என்று கூட சொல்ல தேவையில்லை அப்பா. பின் எழுப்ப எவை என்று கூற, அப்பனே இத்தேசத்தை காக்கட்டும் என்பேன் அப்பனே.
இத்தேசத்தை காத்துவிட்டால் அப்பனே பின் அனைத்தும் அப்பனே நல்லவர்களாக அப்பனே பின் எவை என்று கூட நல்ல முறையாக பின் வாழ்ந்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் இறைவனையும் காணலாம். அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் அப்பனே பின் எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் வந்து எது சொன்னாலும் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கின்றார் வந்து.
அடியவர் :- எழுப்ப போறாரு ஆன்மாக்களை. ( ஜீவ சமாதியில் உள்ள ஞானிகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஆன்மாக்கள் ஏன் இந்த இந்த தேசத்தை காக்கணும்னா, அடுத்து என்ன ஆகணும் வந்து?.
அடியவர் 1 :- அவங்களே பார்த்துக் கொள்வாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஜீவ சமாதியில் உள்ள ஞானிகள் எழுப்பி விட்டால்) இவங்களே பார்த்துக் கொள்வாங்க. அதனாலதான் எல்லாரும் இங்க தேடி வந்துகிறாங்க. சுராக்கல்லை பத்தியும் சொல்லிட்டாரு. அடுத்து என்ன பண்ண? ஒரு நீர் நிலையும் இருக்குது வந்து.. அங்க வந்து.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே இறப்பவன் எதை என்று இறப்பவன் மீண்டும் அப்பனே பின் உயிர் பிழைக்க செய்தல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு பல சித்தர்களும் எவை என்று தேடி வந்தார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஞானிகள்) எல்லாரும் இங்க வந்ததுக்கு காரணம் என்ன?
அடியவர் 1 :- திருப்பி உயிர் பெறுவது
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் எங்கோ நதி அது இருக்குது. அங்க குளிச்சோம்னா….
அடியவர் :- அந்த நதி எங்க இருக்குன்னு சொல்லல. ஆனா எந்த பகுதியில இருக்குன்னு தெரிந்து கொள்ளலாமா?.
குருநாதர் :- அப்பனே இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. மனிதன் பொய்யானவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இதை அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டால், பின் அனைவரும் இழுத்துக்கொண்டு, அப்பனே அதற்கும் அப்பனே காசுகள் வாங்கிக்கொண்டு, அப்பனே பின் கர்மாவை ஏற்றுக்கொண்டு அப்பனே பின் அவர்களுக்கும் கர்மாக்களை ஏற்றிக்கொண்டு எதை என்று கூற அப்பனே ஆனாலும் அப்பனே இருக்கின்றது அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் அப்பனே அதற்கும் மந்திரம் தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே. இதனால்தான் அப்பனே ராவணன் ஒன்று முட்டாள் இல்லையப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதற்கும் மந்திரம் ஒரு மந்திரம் இருக்குது வந்து.
அடியவர் :- ஓஹோ….
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த இது குளிச்சு வந்தா வந்து…
குருநாதர் :- அப்பனே பின் மந்திரத்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட அப்பனே மந்திரங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் அப்பனே கணித்து வைத்திருந்தான் என்பேன் அப்பனே ராவணனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பின் நிறைய விஷயங்கள் கணித்து வச்சிருக்காருங்க அவர். ஜாதகம்…… மருத்துவம்……. அப்புறம்…...
அடியவர் :- இப்ப சுவாமி நம்ம ( தம்பலகாமம் குளம் ) இந்த தண்ணி கொண்டு போய் என்ன செய்யணும்?
குருநாதர் :- அப்பனே ஏன் எதற்காக அப்பன் நீரை கொண்டு போகின்றீர்கள் அப்பன் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- உட்கொள்ளவா?
குருநாதர் :- இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில்.
குருநாதர் :- அது பின் பக்கத்திலே இருந்தாலே போதுமானதப்பா எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் நிச்சயம் சில தீங்குகள் வராது என்பேன் அப்பனே. வளராது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணி வந்து குளிக்கிறதுக்கு இல்லை. குடிக்கிறதுக்கு இல்லை.
அடியவர் :- வீட்ல இருந்தாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- வீட்ல இருந்தாலே
அடியவர் 1 :- நல்லது.
அடியவர் :- நல்லது.
சுவடி ஓதும் மைந்தன் :- சில தீய சக்திகள் சில இதெல்லாம் வராதுப்பா என்றார்.
குருநாதர் :- (இராமாயண காவியத்தில்) அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு நீருக்காக போரா !!!! அப்பனே !!!! நிச்சயம் தன்னில் கூட…..
குருநாதர் :- இக்கலியுகத்தில் இப்படித்தான் நடக்கப்போகின்றது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பார்த்துக் கொண்டே இருங்கள்.
அடியவர் :- நீருக்காக சண்டை வரப்போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- நீருக்காக நீருக்கு பஞ்சம் வரப்போகுதுன்றாரு வந்து ஒரு நீருக்காகவே வந்து என்னது வந்து ஒரு போரு…. ஆனா கடைசில, என்ன பண்ணும் நீருக்கே……..
அடியவர் :- பஞ்சம் வரப்போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- பஞ்சம் வரப்போகின்றது.
குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் ஞானிகளை தட்டி எழுப்பிக்கொண்டே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே.
குருநாதர் :- அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏன் இதற்கு எவை என்று கூற அதிக அளவு (இலங்கை) இங்கு வருகின்றேன் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே ஞானிகள் அப்பன் நிச்சயம் தன்னில் கூட பின் எழுப்பி, எழுப்பி அப்பனே அங்கு குளித்தால் அப்பனே, அவர்களும் உயிர் பெற்று விடுவார்கள் என்பேன் அப்பனே .அவ்வளவுதான் என்பேன் அப்பனே. சுலபம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?
அடியவர் 1 :- (அகத்தியர்) அப்பா இங்க வந்துட்டு இருக்காரு இதுக்குத்தான்.
===========================
# குருநாதர் அருளால், உலகம் இதுவரை அறியாத இராவணேஸ்வரர் ஜோதிட ரகசியங்கள்….விரைவில் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
===========================
குருநாதர் :- அப்பனே இத்தேசத்தை காக்க வந்தவர்கள், எப்படி அப்பா தீயவர்களாக சித்திரிக்கப்பட்டார்கள் அப்பனே?
குருநாதர் :- ஏனென்றால் மனிதர்களே காரணம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவனவன் அப்பனே பின் அதாவது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அப்பனே அவை நடக்கும் இவை நடக்கும். அப்பனே அத் திருத்தலம் , இத்திருத்தலம் எதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாகவே அப்பனே பணத்தை சம்பாதிக்கவே, அனைத்தும் பொய்யாக்கிவிட்டான் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும்.
அடியவர் 1 :- பணமாக்கிட்டாங்க.
குருநாதர் :- அப்பனே ராவணனுடைய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம், அதாவது பின் கிரகங்கள் பற்றி அப்பனே நிச்சயம், மாற்று வழியாக எழுதி இருக்கின்றான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவை செப்பப் போகின்றேன் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவை செப்பினால் மனிதன் என்னென்ன செய்வான்?.
குருநாதர் :- பின் எப்பொழுது எந்த வயதில் என்ன கண்டங்கள்?
குருநாதர் :- பின் யார் யார் பின் உறவுமுறை எது என்று கூற?
குருநாதர் :- ஏன் பின் உந்தனுக்கு சோதனை வந்தது?
குருநாதர் :- என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே பின் அறிந்து கொள்ளலாம் நீங்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- நிச்சயம் ஒருவன் வந்து விட்டால், பின் அவனுடைய பின் எவை என்று கூற கிரகங்களை பார்த்தே அவனை அப்படியே முழு மனதாக, அப்பனே இப்பொழுதெல்லாம் படம் எடுக்கின்றார்களே அப்பனே, அப்படியே எடுத்து விடலாம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- நிச்சயம் அதையும் வெளி காட்டுவேன் என்பேன் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய. அப்பனே பொய் என்று சொல்வோன் என் அருகில் பின் வரட்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அவனைப் பற்றி, அப்பனே நிச்சயம் படம் எடுத்து, இப்படித்தான் உன் வாழ்க்கை என்று சொல்லிவிடுகின்றேன் என்பேன் அப்பனே.
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே சித்தர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் அது வருங்காலத்தில் உங்களுக்கு யான் தெரிவிக்கின்றேன் அழகாக. தெரிவித்தால் மட்டுமே, அப்பனே இவ் உலகத்தை காக்க முடியும். இல்லையென்றால் முடியாதப்பா… முடியாது.
அடியவர் 1 :- ரொம்ப நன்றி அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு ஸ்கேன் பண்றது.
அடியவர் 1 :- ஸ்கேன் பண்ற மெத்தட் சொல்லிக் கொடுக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்கேன் யார் பண்ணுது?
அடியவர் 1 :- சித்தர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வந்து ஸ்கேன். அப்ப வந்து என்ன பண்றாங்கன்னா, அந்த ராவணன் என்ன பண்ணிருக்காரு வந்து?.
அடியவர் 1 :- ராவணன் கண்டுபிடிச்சு வச்சிருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ராவணன்?.
அடியவர் 1 :- கிரகங்களை அப்படின்னு சொல்லி.
சுவடி ஓதும் மைந்தன் :- கிரகங்களை எப்படி கண்டுபிடிச்சு வச்சுக்கிறாரு வந்து அவர் கண்டுபிடிச்சது வேறு …
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அவர் கண்டுபிடித்து நான் உங்களுக்கு சொல்லிட்டேன்னா, நீங்க… ஏன் இப்ப கஷ்டம் வருதுன்னு ஒருத்தர் வராங்க இல்ல
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கஷ்டம் ஏன் வருதுன்னு அவருக்கு சொல்லிடலாமே
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா…இதை தான் நீ செய்திருக்கின்றாய். ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லிட்டு நீங்க திட்டலாம். அய்யா அப்படி சொல்றாரு. வந்து டேய் நீ இது பண்ணடா நீ வந்து…. நீ அனுபவிச்சே ஆகணும்டா
அடியவர் 1:- இதாலதான் நீ பண்ணிருக்க.
===========================
# ஏன் ஸ்ரீராமர் இட்ட ராமர் பாலம் உடைந்து விட்டது?
===========================
குருநாதர் :- பின் இதற்கும் ஏன் எதை என்று சரியாக தீர்வு காண்பதற்கும் சில இடங்கள் இங்குதான் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் ராவணனுடைய (ராமனுடைய) பின் அதாவது ஜாதகம் பார்த்தால் மிக மிகப் பெரியது. அதை தீர்த்துக்கொள்ள இங்குதான் வழிமுறைகள் இருக்கின்றது நிச்சயம் தன்னில் கூட.
அதனால்தான் என்னவோ நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, பின் அதாவது மனிதன் கஷ்டங்கள் பட்டு, பின் நிச்சயம் தன்னில் வரட்டும், என்றெல்லாம் நிச்சயம், பின் ராமரிட்ட பின் பாலமும் பின் உடைந்து விட்டது.
அடியவர் :- (ஸ்ரீ ராமர்) பாலம்.
அடியவர் 1 :- (ஸ்ரீ ராமர்) பாலம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான்.
அடியவர் :- இங்க வர்றதுக்காகத்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- வர்றதுக்காகத்தான் வந்து… அது கூட அந்த (ஸ்ரீ ராமர்) பாலம் கூட என்னவோ உடைஞ்சது.
அடியவர் :- வராமல் இருக்கிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- வராமல் இருக்கிறதுதான் வந்து…..
அடியவர் 1 :- உடைச்சிட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா?
அடியவர் :- நல்லா புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நல்ல சந்தேகம் இருந்தால் கேள்வி கேளுங்க.
அடியவர் :- இன்ட்ரஸ்டா இருக்கு. அப்புறம் சந்தேகம் கேட்போம் பிறகு.
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ராவணன், பின் ராவணன் பின் வாழ்ந்த அப்பனே காலம் அப்பனே பொற்காலம். அனைவருமே நல்லோர்கள். அனைவருமே தர்மத்தை தான் பிடித்தார்கள். அப்பனே அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய.
குருநாதர் :- அப்பனே (சுரா) கல்லைப் பற்றி கூறினேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்படி எப்படி அப்பா?
குருநாதர் :- ஏனென்றால் அது இறைவனின் ஆட்சி.
குருநாதர் :- எப்படி இறைவனின் ஆட்சியில் தீயவை நடக்க நேரிடும்? அப்பனே நீங்களே ( சிந்தியுங்கள்).
குருநாதர் :- இதனால்தான் அப்பனே மனிதன் இன்னும் முட்டாளாகவே இருந்தால் அப்பனே மனிதனே உலகத்தை அழித்து விடுவான் என்பேன் அப்பனே.
அடியவர் 1:- ஐயா நல்லது மட்டும்தான் நடந்திருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பொற்காலத்துலதான் எல்லாமே வெளிய வந்தாங்க ஐயா… ஞானிகள் வந்து… அதுலதான் தர்மங்கள் நல்ல எல்லாமே வந்து எல்லாமே நிலைநாட்டுது அதுலதான். பல இதிகாசங்கள்… பல ஜாதகங்கள் எல்லாமே வந்து…..
அடியவர் :- ரொம்ப சத்திய யுகமா இருக்கு.
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே இதனால்தான் அப்பனே பின் ராவணன் எதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால் காக்க வரும் யாருமில்லை இதனால்தான் அப்பன் நிச்சயம் தன்னில் கூட எது என்று கூற அப்பனே பின் நிச்சயம் எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் இராவணன் என்ன பண்ணாரு? வழியவே விடல. எங்க வரதுக்கு?
அடியவர் 1 :- ஸ்ரீ ராமன் இங்க வர.
சுவடி ஓதும் மைந்தன் :- ம்…….
குருநாதர் :- அப்பனே பின் அதாவது ஈஸ்வரனும் கூட சொன்னான் என்பேன் அப்பனே. நிச்சயம் விடுவதில்லை. ஏனென்றால் நீ ஆட்டம் கண்டு எதை என்று கூற பின் அதாவது அமைதியாகி விடுவாய் ஈசனே. யான் விடப்போவதில்லை நிச்சயம் தன்னில் கூட. பின் என் மக்களையும் என் தேசத்தையும் யான் காப்பேன். அவ்வளவுதான் உன் வேலையை பார், என்று சொல்லிவிட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனாரையும்.
அடியவர் 1 :- விடல.
சுவடி ஓதும் மைந்தன் :- சொன்னாரு. யப்பா, நீ பாருப்பான்னு சொல்லிட்டு. என்ன பண்ணிட்டாரு? உன் வேலையை பாரு. நீ நநாளைக்கு நீ அமைதி ஆகிவிடுவாய்.
அடியவர் 1 :- உன் வேலையை வேலையை நீ பாருப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- உன் வேலையை வேலையை நீ பாரு. நான் பார்த்துக்கிறேன்
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் மீண்டும் பின் கண்ணீருடனே பின்
தாயே !!!!!
தந்தையே !!!!!
அனைத்தும் நீயே !!!!!
ஈசனாரே !!!!! நிச்சயம் நீதான் வரம் கொடுத்தாய்.
குருநாதர் :- அவ்வரத்தை எப்பொழுதாவது யான் தவறாக பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் பயன்படுத்தி விடுவேனா என்ன தந்தையே ???!!!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- திரும்ப அழுதுகிறார் வந்து யாரு.
அடியவர் :- ராவணேஸ்வரன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ராவணேஸ்வரன். ஏன்பா நீ என்னை.. இது… இதெல்லாம்ப்பா… இது மாதிரி எல்லாம் பண்ற? நீ தானே எனக்கு வரம் கொடுத்த. அந்த வரத்தை நான் தவறா பயன்படுத்துறேன் என்று நீ நினைக்கிறாயா? உன் மேல நான் எவ்வளவு பாசம் வச்சு இருக்கிறேன். நீ அப்படி நினைக்கிறாயா என்று அழுகின்றார் வந்து
===========================
# ஒரு நீருக்காக நடந்த சண்டை , இப்போது தோஷமாக மாறி……..
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதற்காகத்தான் அப்பனே ராமனுக்கும் கூட எதை என்று அறிய அப்பன் நிச்சயம் தன்னில் விடவே இல்லை
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் ராவணன் வந்து.
அடியவர் :- வரவிடல.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு நீருக்காகவே.
அடியவர் :- வரவிடல.
சுவடி ஓதும் மைந்தன் :- சண்டை
குருநாதர் :- அப்பனே அதனால்தான் அத் தோஷம் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, வருங்காலத்தில் வரப்போகின்றது என்பேன் அப்பனே. ஒரு நீருக்காக அப்பனே சண்டை எவை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் தவறாக சித்தரித்து விட்டார்கள் மனிதன் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது ஒரு நீருக்காக சண்டைய, தவறான சித்தரித்து விட்டார்கள் மனிதன். அதனால அந்த தோஷம் தான்…. இப்ப வந்து…. நீருக்கு என்ன? நீர் பற்றாக்குறை வரப்போறது வந்து.
அடியவர் :- வரப்போகுது.
===========================
# அவசியம் பலமுறை சிந்தியுங்கள் …….
===========================
குருநாதர் :- அப்பனே சிந்தியுங்கள் அப்பனே நீங்களே. இறைவன் ஒரு அப்பனே இறைவன் அப்பனே பலவற்றையும் கூட அப்பனே நிச்சயம் காலத்தில் அப்பனே பின் நிச்சயம் இறைவனே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஆட்சியும், தர்மத்தை நிலைநாட்ட, அப்பனே அனைவரையும் ஏற்படுத்தினான்.
எப்படி அப்பா தீங்கு நடக்கும் சொல்லுங்கள் நீங்களே ???
நீங்களே???
குருநாதர் :- இதுதான் மனிதனின் முட்டாள் எவ்வாறு அதாவது அப்பனே பின் மனிதன் பின் எவ்வாறு பின் யோசிக்கின்றான் என்றால் அழியும்வற்றைத்தான் யோசிக்கின்றான் என்பேன் அப்பனே. அதனால்தான் கலியுகம் அழியுகம் என்பதெல்லாம் நான் தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷன் யோசிக்கிறது எல்லாம் என்னவாம்?
அடியவர் :- அழிவை பெற்றுக்கொள்ளும்.
குருநாதர் :- அப்பனே எதை என்று அறிய ராவணன் எவை என்று கூற பின் நல் மனதாகத்தான் யோசித்தான். ராமன் அடுத்தடுத்த பிறப்பு எடுக்க வேண்டுமே எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அறிய.
குருநாதர் :- இதனால்தான் அப்பனே, இது தவறா ?????????
குருநாதர் :- இராவணன் பின் யோசித்தது ?????????
சுவடி ஓதும் மைந்தன் :- ராமன் பிறவி எடுத்தே ஆகணும். அப்பதான் இந்த நாட்டை காப்பாத்த முடியும். தர்மத்தை நிலைநாட்ட முடியும். அப்ப ராவணன் நினைச்சது தவறாப்பா?.
அடியவர் :- இல்லை.
அடியவர் 1:- அது ஏன் ராமனுக்கு தெரியல?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அப்பனே பின் ராமனுக்கும் தெரியும் அப்பா. ஏன் எதற்காக அப்பனே பின் அவனும் எது என்று அப்பனே பின் நிச்சயம் நல்லோர்கள் பின் எழுப்புவதற்காகவே அப்பனே பின் எவை என்று கூற, அவ் நீரை தேடித்தான் வந்தானப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. நிச்சயம் ஏது என்று அறிய, அப்பனே பின் நீங்க யாரு ஏது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் என்ன பண்ணாரு.
அடியவர் 1:- அவரும் தெரிஞ்சுதான் வந்திருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அவரும் தெரிஞ்சுதான் வந்திருக்காரு வந்து.
அடியவர் 1:- நல்லோர்கள் எழுப்புறதுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லோர்கள் எழுப்புறதுக்காக என்ன பண்ணனும்? இங்கு இருந்தாதான் ஐயா?.
அடியவர் :- முடியும்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் எங்கேயோ இருந்தவன் (ஸ்ரீராமர்) ஏன் அப்பா இங்கு வரவேண்டும்? அப்பனே நிச்சயம் தன்னில் கூட?
குருநாதர் :- எதை என்று அறிய அப்பனே பின் ஏன் சீதை இங்கு வரவேண்டும்?
குருநாதர் :- சொல் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ?
குருநாதர் :- இவையெல்லாம் இறைவன் நடத்திய நாடகம் என்பேன் அப்பனே. இறைவன் எப்படி எல்லாம் நாடகம் நடத்திக் கொள்ளலாம் என்பேன் அப்பனே நிச்சயம். ஆனால் நீங்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்கள் நம்ம யோசிக்க கூடாது.
அடியவர் 1:- ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் எப்படி வேண்டுமானாலும் நாடகம் நடத்துவாரு. ஏன் நடத்துவாரு? மக்களை காப்பாற்ற. அதனால எப்படி பண்ணுவாரு… ஏது பண்ணுவார். ஆனால்.
அடியவர் 1:- நாங்க மனிதர்கள் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க மனிதர்கள் அவ்வளவுதான் நீங்க யோசிக்கிறது.
அடியவர் 1:- வேலை இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- வேலை இல்லை என்று சொல்கின்றார் வந்து.
===========================
# ஆஞ்சநேயர் கொண்டு வந்த சஞ்சீவி மலை உள்ள இடத்தின் அதி ரகசியங்கள்…
===========================
அடியவர் :- ஒரு சந்தேகம் இருக்கு. இப்ப லட்சுமணனை எழுப்புறதுக்கு சஞ்சீவி மலை கொண்டு வந்ததா சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ம்
அடியவர் :- ஆஞ்சநேயர்..
சுவடி ஓதும் மைந்தன் :- ம்
அடியவர் :- அப்படின்னா ஆஞ்சநேயர் கொண்டு வந்த அந்த சஞ்சீவி மலை, அது இதுக்குள்ள உள்ள… தண்ணியா தான் இருக்குமா. ( அந்த சஞ்சீவி மலை இங்குதான் உள்ளதா? )
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று புரிய அப்பனே
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பா.
அடியவர் :- சஞ்சீவி மலை இங்கதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் இருக்குது எல்லாமே.
(இவ்விடத்தில் அனைவரிடமும் அமைதி நிலவியது… உலகில் முதல் முறையாக சஞ்சீவி மலை ரகசியத்தின் ஆழம் புரிந்ததால் ….. )
………( அமைதி ) ………..
குருநாதர் :- அப்பனே உண்மை நிலை தெரியவில்லை. அதனால்தான் அப்பனே உலகம் பின் அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உண்மை நிலை யாருக்குமே தெரியலை. ஐய புரியுதுங்களா ஐயா வந்து.
===========================
# உலக நாடுகளை விட… எல்லா விஷயமும் இலங்கையில தான்…
===========================
அடியவர் :- ஐயா அப்ப அப்ப உண்மைக்கு பார்த்தா.. இலங்கையில தான் இந்தியாவை விட… உலக நாடுகளை விட… எல்லா விஷயமும் இலங்கையில தான் இருக்கு.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிறிய அப்பனே அதாவது ஒரு பழமொழி உண்டு என்பேன் அப்பனே. அதை நீ சொல்ல வேண்டும் இப்பொழுது அப்பனே.
அடியவர் :- கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்
குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே (இலங்கை) இங்கு அப்பனே தீயவர்கள் அதிக நாள் நிற்பதே இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. சொல்லிவிட்டேன் அப்பனே.
குருநாதர் :- பின் எவ்வளவு ஏமாற்றினாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற எவ்வளவு பொருள் சம்பாதித்தாலும் அப்பனே கடைசியில் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னை இறைவனை வைத்து அப்பனே நிச்சயம் தன்னில் அவன் அழிந்து விடுவான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் இங்க வந்து பக்தர்கள் யாரும்.
அடியவர் 1:- பொய் பேச முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- பொய் பேச முடியாது. அப்படி பேசினா என்ன பண்ணுவாங்க? சீக்கிரம்….
அடியவர் 1 :- அழிஞ்சிடுவாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- கீழே வந்துருவாங்க. என்டா என் தேசத்துல என்னடா பேசுறதுன்னு சொல்லிட்டு ராவணன் என்ன பண்ணிடுவாரு? ஓகேங்களா.
அடியவர் 1 :- அப்பா, ராவணன் இடத்தை பார்க்க இயலுமா அப்பா எங்களுக்கு?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் புரிந்து கொண்டு தெளிந்து கொள்ளுங்கள் முதலிலே என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் கையை வைக்க வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- எதை என்று புரிய அப்பனே அதாவது முதலிலே அப்பனே நிச்சயம் யான் மின்சாரத்தை தொடுகின்றேன் என்றால் அப்பனே பின் எவ்வாறு நியாயம் என்பேன் அப்பனே?
குருநாதர் :- நிச்சயம் அப்பனே பின் எங்கிருந்து பாய்கின்றது?
குருநாதர் :- எங்கிருந்து வருகின்றது? பின் எப்பொழுது? ஏது என்று அது அப்பனே பின் நிச்சயம் நிறுத்த வேண்டும் என்பதை எல்லாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே, மின்சாரத்தை தொட்டால், அப்பனே ஒன்றும் ஆகாது என்பேன் அப்பனே. இப்பொழுது தொட்டுவிட்டால் அப்பனே நீங்கள் பைத்தியமாகி விடுவீர்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- மிசாரத்தை தொடு என்றால் நீ டக்குனு வந்து உடனே தொட்டுவிடுவாயா என்று கேட்கின்றார் வந்து… அப்ப ஐயா புரியுதா? அதனாலதான் எங்கெங்கெல்லாம் ஏது பண்ணனும். எதுக்காக பண்ணதெல்லாம் என்று தெரிந்து தொட்டுனேன்னா நான் உங்களை வந்து ஒரு விஷயத்துக்காக எடுத்துட்டு போறேன்பா தெரியும்பான்றாரு வந்து…
அடியவர் :- அதே மாதிரி அப்ப இந்த மலைக்கு மேல, ஒரு பெரிய சமாதி இருக்கு. அது யாருடைய சமாதி?.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே இவை எல்லாம் என்பேன் அப்பனே எப்பொழுது எதை சொல்ல வேண்டும் அதாவது அப்பனே பின் அதாவது அப்பனே பின் இடம் பொருள் ஏவல் ஒன்று இருக்கின்றது அல்லவா அப்பனே? உனக்கு தெரியாதாப்பா.
அடியவர் :- அது அம்மாவுடைய சமாதின்னு சொன்னாங்க. அதனால அதை இங்க இருந்து கேட்டேன்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவற்றுக்கும் அப்பனே நிச்சயம் மறு அப்பனே பின் எவை என்று கூற பின் எவை என்று ஒரு மறு வாக்கும் வரும் என்பேன் அப்பனே. இங்கேயே சொல்கின்றேன் அப்பனே போதுமா? ஆனால் இப்பொழுது அக் கால நிலை அப்பனே இல்லையப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நேரத்துல.
அடியவர் 1 :- இதுலயே வச்சு சொல்றேன்னு இருக்கேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கேயே தான் வச்சு, திருப்பி மறு வாக்கும் வரும் இங்க. ஆனா இப்ப?
அடியவர் :- வேணாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேண்டாம் என்று சொல்கின்றார்
குருநாதர் :- அப்பனே இதனால் அப்பனே யார் இங்கு நல்லோர்? யார் தீயோர்? அப்பனே நிச்சயம் நீங்களே சொல்லுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப யார் இங்கு நல்லவர்கள்னு சொல்றது யார்?
அடியவர் :- தீயவர்கள் யாருமே இல்லை. எல்லாம் நல்லவங்க.
===========================
# ஸ்ரீ ராமர் அவதாரம் - அது ஈசனாரின் நாடகமே…..
===========================
குருநாதர் :- அப்பனே இதனால அப்பனே நிச்சயம் தன்னில், அப்பனே அவ் யுகத்தில் அப்பனே நிச்சயம் அனைவருமே நன்றாகத்தான் வாழ்ந்தார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஏனென்றால் சிலவற்றை அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்லதற்காகத்தான் அப்பனே மீண்டும் பின் ராமன் பிறக்க வேண்டும். பிறக்க வேண்டும் என்பதற்கு இணங்கவே, அப்பனே இவை தன், அதாவது எவை என்று புரிய அப்பனே, இறைவனின் நாடகம் எவை என்று கூட. பல பல ஈசனின் நாடகம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- கடைசியில் அனைவருமே சிவபக்தர்கள் தான் என்பேன் அப்பனே. பின் சீதையும் கூட. ராமனும் கூட. அப்பனே எவை என்று கூற அப்பனே சொல்லுங்கள், நீங்களே அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே யாரு.
அடியவர் 1 :- ஒன்னுதான் ஈசனோட பக்தி.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் வந்து வணங்குனாங்க?
அடியவர் :- சிவனுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் எல்லாமே?.
அடியவர் 1 :- ஈசனோட பக்தி (அடியவர்கள்)
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இருந்தால்தான் அப்பனே, நிச்சயம் இவ்வாறாக தர்மங்கள் அப்பனே நிச்சயம் காக்கப்படுவது எது என்று புரிய அப்பனே.
குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் இக்கலியுகத்திலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எது என்று கூற பின் ராவணனே அப்பனே இன்னும் கூட அப்பனே பின் தர்மத்தை நிலைநாட்ட தான் போகின்றான் என்பேன் அப்பனே. தெரியும் அவனுக்கு.
குருநாதர் :- அப்பனே அவன் எத்தனை உடம்பு மறைத்து வைத்திருக்கின்றான் என்று உங்களுக்கு தெரியுமாப்பா???. இங்கே கூட உடம்பை மறைத்து வைத்திருக்கின்றான். அவ்வளவுதான்.
அடியவர் :- அப்பா.
அடியவர் 1 :- ஆமா அப்பா முன்பு சொன்னீங்களே அப்பா..
===========================
# இராவணேஸ்வரர் தனது பூத உடம்புகளை இலங்கையிலும், கடலடியிலும் மறைத்து வைத்துள்ள அதிக பிரம்மிக்க வைக்கும் ரகசியங்களை குருநாதர் அகத்தியப் பெருமான் பல வாக்குகளில் உரைத்துள்ளார்.
சித்தன் அருள் - 1655 (திருக்கோணேஸ்வரம் வாக்கு)
சித்தன் அருள் - 2050 (இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2)
சித்தன் அருள் - 2055 (கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2)
சித்தன் அருள் - 2123 (இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 8)
இராவணேஸ்வரர் ஈசனை நோக்கி மாபெரும் தவம் இருந்து, சுயமாகத் தன் உயிரை மாய்த்து, பல பிறவிகளை அடுத்தடுத்து எடுக்கும் வரத்தைப் பெற்றிருந்தார். அவ்வாறு இலங்கை தேசத்தைக் கட்டமைத்து உலகைக் காப்பதற்காக, ஒவ்வொரு பிறவியிலும் தன் உயிரை நீத்தபோது, அந்தப் பூத உடல்களை அழிக்காமல் இலங்கை முழுவதும், அங்கங்கு, பல இடங்களில் புதைத்து வைத்துள்ளார்.
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- எங்கெல்லாம் உடம்பை மறைச்சு வச்சுக்கிறாங்கன்றாரு வந்து. இங்கேயும் ஒரு உடம்பை வந்து மறைச்சு வச்சுக்கிறாருப்பா .
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பனே நிச்சயம், அதற்கு அவனுடைய அப்பனே பின் நிச்சயம் அருகில் சென்றாலே, அப்பனே பின் அவனுடைய சக்திகள் உங்களை தாக்குகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் எது என்பதை அப்பனே பின் எவை என்று புரிய நீங்கள் அப்பனே பின் சோர்வாகி விடுவீர்கள் என்பேன். அதனால் சக்திகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. தொட்டு விடலாம் என்பேன் அப்பனே. சுலபமாக.
அடியவர் 1 :- சரி ரொம்ப நன்றி அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து, சக்திக்கு ஏற்றதா நம்ம தொடணும்.இல்லைன்னா ?
அடியவர் 1 :- அடிச்சு விட்டுடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லைன்னா என்ன ஆகும்? வந்து ரிவர்ஸ்ல போயிடும். அதனால வந்து நான் சக்தியை ஏத்துறேன். அப்புறம் நீங்க தொடுங்க.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு எவை என்று புரிய அப்பனே பின் அத்தனை அப்பனே பின் தேவர்களும் கூட ஏன் இங்கு தேடி வந்தார்கள் சொல்லுங்கள் என்பேன் அப்பனே.
===========================
# முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் ரகசியங்கள் இராவணேஸ்வரர் , ஸ்ரீ ராமரை தடுத்ததால், இவ் அவதாரத்தில் தெரிய வந்தது.
===========================
குருநாதர் :- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் இவ் அவதாரத்தினால்தான் அப்பனே, முன்னோர்களுக்கு அப்பனே தர்ப்பணம் செய்யும், பின் எவை என்று கூற, பின் எதை என்று அறிய, அப்பனே பின் வந்தது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த அவதாரம் எடுத்தது மூலமாதான்…. முன்னோர்களுக்கு வந்து… முதல்ல வந்து.
அடியவர் 1 :- தெரியப்படுத்துனாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க எல்லாம் தர்ப்பணம் நல்லா….
அடியவர் 1 :- தர்ப்பணம் பண்ற ஒரு விஷயத்தை…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?.
அடியவர் :- நல்லா புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- அது வந்ததுனாலதான்.
அடியவர் 1 :- வெளியில வந்துச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- வெளியே வந்தது.
குருநாதர் :- அப்பனே ராவணன் தடுத்தினால்தான் அப்பனே இவையெல்லாம் வந்தது எது என்று புரிய அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் ராவணன் தடுத்தார் பாருங்க வந்து.. ஸ்ரீ ராமர் அவர் தேடி வந்தார் அங்கிருந்து வந்து… ஏன் இங்க தான் இருக்குது வந்து… எழுப்புவதற்கு… வந்து இங்கதான்… ஒரு நீர் நிலை இது இருக்குது வந்து… அதனாலதான் வந்து..
===========================
# ஆஞ்சநேயர் - இறைவன் அவதாரம்.
===========================
குருநாதர் :- இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் இறைவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் எவை என்று கூற, பின் தர்மத்தை நிலைநாட்ட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற , அவதாரம் தன் அடியோருக்காக எடுத்தான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் வேடிக்கை பார்ப்பதற்காக கைகட்டி என்பேன் அப்பனே. வேலையாட்களாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்ன பண்ணாரு?
அடியவர் 1 :- அவதாரம் எடுத்து வந்திருக்காரு
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்ன பண்ணாரு?
அடியவர் :- கைகட்டி வேலை..
சுவடி ஓதும் மைந்தன் :- கைகட்டி மனிதனுக்காக வேலை… ஐயா புரியுதுங்களா? இந்த அனுமான் அவதாரம் எடுத்தாலும்… ஐயா இது ஐயா உங்களுக்கு புரியுதா? இப்ப அனுமான் என்ன சொன்னாரு (ஸ்ரீராமர் , சீதையிடம் ) வந்து?…
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் சொன்னாரு இல்ல…
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் ஈசன் அவரே வந்து வேடிக்கை பார்க்கிறதுக்காக (அனுமான் வேடத்தில்) … அவரே விளையாடிட்டு… என்னதான் நடக்குதுன்னு இங்க இங்க… ரெண்டு பேரு… (ஸ்ரீராமர் , சீதையிடம்) ரெண்டு பேரு… இது பண்ணா… இப்படி நடக்கும்னு சொல்லிட்டு… கைகட்டி….
குருநாதர் :- அப்பனே இறைவனின் விளையாட்டு அப்பனே யாராலும் புரிந்து கொள்ள முடியாதப்பா. நிச்சயம் அதனால்தான் அப்பனே மனிதனின் வாழ்க்கையை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற.
அதனால் இறைவன் விளையாட்டு சரியாக புரிந்து கொண்டவன், அப்பனே மோட்சப் பிறவி அடைவான் என்பேன் அப்பனே.
இக்கலியுகத்தில் அனைத்தும் பெறுவான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
ஏன் பக்தர்கள் பின் நிச்சயம் தன்னில் எதையும் பெறுவதில்லை?
கஷ்டங்கள் ஏன் வந்து கொண்டே இருக்கின்றது?
அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அப்பனே என்றால் ஒன்றும் தெரியாமல் அப்பனே.
அடியவர் 1 :- (இறைவனை பற்றிய உண்மைகள்) ஒன்றும் தெரியாததால்…
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற, பின் ராவணன் அப்பனே நிச்சயம் பின் எவை என்று கூற மந்திரத்தையும் கூட பின் இன்னும் உங்களுக்கு உபசரிக்கின்றேன் அப்பனே. பின் அடுத்தடுத்த வாக்கில் என்பேன் அப்பனே. இன்னும் பொற்று பொறுத்திருந்தால் அப்பனே. அதனால் அப்பனே பின் எவை என்று அறிய.
குருநாதர் :- அப்பனே நீங்களும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பேன் அப்பனே. அவையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
குருநாதர் :- ஏன் எதற்கு எவை என்று இங்கு சொல்கின்றேன் என்றால் அப்பனே இதுவும் அப்பனே பின் ஒரு வித்தியாச முறையே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இங்க வச்சு, நான் இப்ப சொல்லிட்டு இருக்கின்றேன்?
அடியவர் :- வித்தியாசமா
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வித்தியாசமான முறையில் சொல்கின்றார்.
===========================
# மனிதனின் கர்மங்களை அடியோடு வேரறுக்கும் இலங்கையில் உள்ள பல ரகசிய நீர் நிலைகள்….. உதாரணமாக திருக்கேதீஸ்வரத்தில் உள்ள பாலாவி தீர்த்தம் (சித்தன் அருள் எண்: 2096, 2097)
===========================
குருநாதர் :- அப்பனே நல்விதமாக அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே இத்தேசத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில நீர் நிலைகள் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே.
குருநாதர் :- அதனால்தான் அப்பனே மனிதன் அப்பனே கர்மத்தை தொலைக்க, அப்பனே அதாவது பாவத்தை அப்பனே சுலபமாக செய்து விடுகின்றான் என்பேன் மனிதன் அப்பனே கலியுகத்தில்.
குருநாதர் :- ஆனால் அப்பாவத்தை அப்பனே போக்க கடுமையாக முயற்சிகள் எடுத்துத்தான் அப்பனே நிச்சயம் போக்க வேண்டும் என்பது அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய.
குருநாதர் :- இங்கு பல நீர் நிலைகள் உள்ளது என்பேன் அப்பனே. வந்தால்தான் தொலையும் என்பேன் அப்பனே.
===========================
# நீங்கள் செய்யும் பரிகாரம் உங்கள் கர்மாவை குறைக்குமா?
===========================
குருநாதர் :- இல்லை என்றால் பரிகாரமா எதை என்று அறிய அப்பனே.
குருநாதர் :- ஏனென்றால் பரிகாரம் கூட எதற்கு என்றால் அப்பனே நிச்சயம் பின் இரு வருடங்கள், மூவ் வருடங்கள் கஷ்டங்கள் இருக்கின்றது என்றால், அப்பனே இதை செய்து கொண்டே வந்தாலே அப்பனே மனது பக்குவப்படும் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஆனால் (கர்மாவை) அனுபவிக்கவே நேரிடும் என்பேன் அப்பனே.
அடியவர் 1:- கர்மம் குறையாது.
அடியவர் :- கர்மம் குறையாது.
சுவடி ஓதும் மைந்தன் :- குறையாது.
அடியவர் :- தாங்குற மனது வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த தாங்குற மனது… பரிகாரம் நீங்க செய்து கொண்டே வந்தால் என்ன ஆகும்?
அடியவர் :- தாங்குறதுக்கு ஒரு சக்தி வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி வந்துரும்.
குருநாதர் :- அப்பனே அதன் மூலம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிதாப்படுகின்றீர்களே என்று, பின் உங்கள் முன்னோர்கள் உங்களை அழைப்பார்கள் அங்கங்கு. அவ்வளவுதான் தீர்த்துக்கொள்ளலாம் விதியினை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அது மாதிரி என்ன பண்ணுவாங்க உங்கள் முன்னோர்கள்? பரவாயில்லை இவங்க நம்ம சந்ததி , நம்ம கடை பிடிச்சதெல்லாம், அப்படியே கடை பிடிக்கிறாங்கன்னு… முன்னோர்கள் என்ன பண்ணுவாங்க வந்து?
அடியவர் 1:- இங்க வா. குளி. அப்படின்னு சொல்லி….
சுவடி ஓதும் மைந்தன் :- குளி… வந்து அதுன்னு சொல்லிட்டு… எடுத்துட்டு வருவாங்கப்பா என்றாரு.
குருநாதர் :- அப்பனே உண்மையாக இருந்தால், அப்பனே அப்பொழுது இவையெல்லாம் செய்து கொண்டே வந்தால், அப்பனே பின் உண்மை நிலை தெரியும். பின் உண்மையானவனாக வாழ்ந்து வருவான். அப்பொழுது யாங்களும் சுலபமாக வழிகாட்ட முடியும் அப்பா. புரிகின்றதா?.
அடியவர் :- புரியுது .
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றீங்க இதை வந்து?
அடியவர் 1:- இப்படி இடங்கள்ல வந்து குளிக்கும் போதுதான் கர்மா குறையும்.
===========================
# நாம் இதுவரை படித்த இராமாயணம் அனைத்தும் தவறாக சித்தரிக்க பட்டுள்ளது.
===========================
# இதுவே கலியுகத்தின் பிரச்சனைக்கு ஆதி மூல காரணம்.
===========================
# அடியவர்கள் நன்கு சிந்திக்க வேண்டிய மிக முக்கிய வாக்கு
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பின் இதனால்தான் அப்பனே பின் அதாவது ராவணனைப் பற்றியும் கூட எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட , ராமனைப் பற்றியும் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சீதையைப் பற்றி கூட, தவறாக சித்தரித்ததால் தான் அப்பனே நிச்சயம் உலகம் அப்பனே, பின் அதாவது கலியுகம் அப்பனே இப்படி நடந்து கொண்டிருக்கிறது. அநியாயங்கள் அக்கிரமங்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே.
அடியவர் :- பொய்யா இருக்கு.
அடியவர் 1:- கம்பன் எழுதியது, சரியாத்தான் எழுதி இருக்காரா?.
(கம்பராமாயணத்தை தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர். அவர் எழுதியது கம்பராமாயணம் அதுவும் சரியா ? அல்லது தவறா?)
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய, அப்பனே எவை என்று அறிய, அப்பனே பின் எது என்று புரிய, அப்பனே பின் யான் சொன்னேனே அப்பனே.
குருநாதர் :- இன்னும் புரியவில்லையா ???????
அடியவர் 1:- அப்புறம் அதுக்கப்புறம் தான் மாத்தி இருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எங்கேயோ மாத்தி இருக்காங்க, அதை சொல்ல மாட்டேன்றாரு.
குருநாதர் :- அப்பனே ஏனப்பா இவ்வேலை அப்பனே. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. உண்மையை தெரிந்து கொண்டால் சக்திகள் அதிகம். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் தேவையில்லைப்பா நம்மளுக்கு.
அடியவர் 1:- யார் மாற்றினார்கள் என்று சொல்ல மாட்டேங்குறீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- தேவையில்லை.
குருநாதர் :- கலியுகம் என்பது அப்பனே மனிதன் ஆட்சிதான் நடக்கும் என்பது விதி. அப்பனே மனிதன் ஆட்சி செய்கின்ற பொழுது எப்படி இருக்கும் நீயே கூறு அப்பா?
குருநாதர் :- அப்பனே இறைவனையே எதிர்த்து நின்று வாழ்வானப்பா மனிதன் என்பேன் அப்பனே. ஆனால் ஒரு நாள் தட்டி விடுவான் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தின் யாருடைய ஆட்சி நடக்கும்?
அடியவர் :- மனுஷன் ஆட்சி.
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷன் ஆட்சிதான் நடக்குமாம். அப்ப இறைவன் என்ன பண்ணுவாரு வந்து?
அடியவர் :- தட்டி விட்டுருவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை மனிதர்கள் என்ன சொல்லுவாங்க? வந்து பொய்ன்னு தான் சொல்லுவாங்களாம். வந்து அது பொய், இது பொய் எண்டு சொல்லிட்டு…. அப்ப ஒரு நாள் என்ன பண்ணுவாரு இறைவன்?
அடியவர் :- தட்டி விட்டுருவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- தட்டி விட்டுருவாரு.
அடியவர் 1:- எப்பதான் அப்பா எல்லாம் மாறும்?
குருநாதர் :- அப்பனே ஒவ்வொன்றாக, அனைத்தும் சொல்லிக்கொண்டே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் நான் வந்து சொல்றேன் என்று சொல்கின்றார் வந்து. எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன்றாரு… இத்தனை இருக்குதுங்க ஐயா. ( ஆச்சரியத்துடன் )
அடியவர் 1:- மர்மங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மர்மங்கள்.
===========================
# இனிமேல் நமக்கு தாகம் தணிக்க , சுத்த நீர் கிடைக்குமா ?
===========================
குருநாதர் :- அப்பனே எதற்கு எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.
ஒரு நீர் அப்பனே, பின் நீருக்காக அப்பனே இவ்வளவு போர்கள் அப்பனே.
அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில், அதனால்தான் அப்பனே இவ் ஏன் எதற்கு பின் இப்பொழுது பின் இதை எடுத்து வந்தேன் என்றால், அப்பனே பின் நிச்சயம் உண்மைகளை தெரிந்தால்தான் அப்பனே.
இதனால் நீருக்கே பற்றாக்குறை வரப்போகின்றது அப்பனே.
நீர் இருக்கும் பின் அதிகமாக. ஆனாலும் அப்பனே நிச்சயம் அதில் விஷத்தன்மை கலந்துவிடும்.
அதுவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பின் உடம்பிற்கு சென்றால் நோயாக மாறிவிடும். அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
அடியவர் :- நீர் விஷமா இருக்கு.
அடியவர் 1:- கெமிக்கல்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீருக்காக ஒரு போரே வந்ததுப்பா. அதுவும் இராமாயணத்தை தவறா மனுஷன் சித்தரித்தினால்தான், அந்த நீர் என்ன ஆகுது வந்து இப்ப?
அடியவர் :- அசுத்தம் ஆயிடுச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- அசுத்தம் ஆயிடுச்சு. அது என்ன ஆகும் மனுஷன் உட்கொண்டா?
அடியவர் 1:- நஞ்சு ஆயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நஞ்சு ஆயிடும். அதை இப்போது, உண்மை தெரிஞ்சுக்கினா என்ன ஆகும் வந்து?
அடியவர் 1:- கெமிக்கல்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது உண்மை தெரிஞ்சுக்கிட்டா… ஓ!!! இதான்டான்னு சொன்னா என்ன ஆகும்? நல்ல தண்ணியாவது கிடைக்கும்ன்றாருங்க ஐயா. வேற ஒன்னும் இல்லை. இது உண்மைன்னு தெரிஞ்சுக்கிட்டா… நல்ல தண்ணியாவது கிடைக்கும்ப்பா உங்களுக்கு, எங்காவது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? .
அடியவர் :- புரியுது புரியுது.
===========================
# இறைவனின் காவியத்தை தவறாக சித்தரித்ததால்….
===========================
குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே பல மனிதர்கள் இங்கு இருக்கின்றார்கள். அப்பனே உண்மையானவர்கள் அப்பனே. நல்லது சொல்லப்போனால் போனால், அவர்களுக்கு கெட்டது பின் ஆகிவிடுகின்றது என்பேன் அப்பனே.
அடியவர் :- ம்….
குருநாதர் :- ஆனாலும் அச்சாபம் அப்பனே நிச்சயம் தன்னில் நல்லோர் சாபம் அனைவரையும் தாக்கும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா?
அடியவர் :- புரியுது.
குருநாதர் :- அப்பனே இன்னும் எடுத்துரைக்கப் போகின்றேன் போதுமா இப்பொழுது உங்களுக்கு அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நான் எடுத்துரைக்கப் போகின்றேன். இப்பொழுது போதுமா? தெளிவு பெற்றீங்களா? ன்னு கேக்குறாரு.
அடியவர் 1:- ரொம்ப நன்றி அய்யா.
===========================
# அன்பு கருணைகடல் அளித்த நல் வாய்ப்பு….
===========================
குருநாதர் :- அப்பனே இன்னும் சந்தேகம் கேளுங்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம்ன்றாரு.
அடியவர் 1:- அப்பா , இந்த நாட்டுல ஒரு பெண் தான் ஆள வேண்டும் என்று சொல்லுகிறீங்களாப்பா?
குருநாதர் :- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. மூலாதாரத்திலிருந்து வரவேண்டும் முதலில் இருந்து வரவேண்டும் என்பேன் அப்பனே. கடைசி கேள்வியை கேட்கின்றாய் நீ.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் தெரியுமா? இதெல்லாம் நேற்று நமக்கு தெரியுமா இதெல்லாம்?
அடியவர் 1:- தெரியாது
சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் சொல்லுவாருங்க ஐயா வந்து எல்லாத்தையும் சொல்லுவேன்
குருநாதர் :- அப்பனே யாங்கள் அதை பார்த்துக் கொள்வோம் கவலைவிடு.
அடியவர் :- அப்பா , தனிப்பட்ட கேள்வி எதுவும் கேட்கலாமா?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் இப்பொழுது வேண்டாம் அப்பனே. இன்னும் சில இடங்கள் இருக்கின்றது. அங்கு கேளுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- இப்பொழுது எம் ஆசிகள் !
ஆசிகள் !!
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 25.03.2026 அன்று நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த ஆதி இராமாயண காவிய வாக்குகள் நிறைவு அடைந்தது.)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment