​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 4 April 2026

சித்தன் அருள் - 2176 - அன்புடன் அகத்தியர் - ஆதி இராமாயண காவியம் - பகுதி 1


அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 1 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,  மாபெரும் சிவ பக்தர்,  மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர்  காவியம்……

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,   மகிமை புகழ், இராமாயண காவியம்…….

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6

===========================
#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 

அப்பனே, அம்மையே, நல்லாசிகள். கவலைகள் வேண்டாம். 

ஏதோ தெரிந்தும் தெரியாமலோ வந்துவிட்டீர்கள். 

இதனால் நிச்சயம் ஈசனுடைய அருளும், பின் பார்வதி தேவியின் அருளும் நிச்சயம் உங்களை காக்கும் அழகாக. 

அவை மட்டுமில்லாமல், நிச்சயம் இன்னும் கூட ராவணேஸ்வரன் நிச்சயம் இவ்வுலகை காப்பாற்ற போராடிக் கொண்டே இருக்கின்றான். 

அதனால்தான் பின் அவன் தன் , பின் சிவபக்தியில் நிச்சயம் அனைவரும் இவ்வுலகத்தில் அனைத்தும் சிவபக்தியில் பின் கொண்டு வந்துவிட்டால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் அனைவருக்கும் அப்பொழுது அப்பொழுது கிட்டும், என்பதையெல்லாம் பரப்பினான் உலகத்திற்கெல்லாம். 

ஆனால் கடைசியில் இவனை பின் தீயோன் என்று பட்டம் சூட்டி அமர்த்திவிட்டனர். 

சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா? அப்ப என்ன சொல்றாருன்னா, ராவணேஸ்வரன் பத்தி சொல்றாரு முதல்ல. ராவணேஸ்வரன் என்பவர் சிவபக்தர். 

===========================
(இப்போது இவ்வாறு ராவணேஸ்வரர் மாபெரும் சிவபக்தர் என்று சுவடி ஓதும் மைந்தன் உரைத்தவுடன்  , அங்கு ஆலய மணி ஓசை சத்தமாக அனைவருக்கும் , அவ் ஊருக்கே கேட்கும் வண்ணம் பலமாக ஓங்கி ஒலித்தது அன்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.  ஓம் மாபெரும் சிவ பக்தர் இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி) 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் ……மணி அடிக்கிறார் பாருங்க BELL. அப்ப பெரிய சிவபக்தர். அவர் என்ன நினைச்சாருன்னா, உலகத்தை எல்லாம் பார்த்தாரு. பார்த்துட்டு என்ன நினைச்சாரு, உலகத்தை எல்லாம் சிவபக்தியை கொண்டு போகணும்னு நினைச்சாரு. எல்லாத்தையும் உலகத்துக்கெல்லாம் சிவபக்தியை கொண்டு போகணும்னு நினைச்சாரு. ஆனால் முடியவில்லை அவரால. கடைசில என்ன ஆச்சு? தீய பட்டம் சூட்டி அவரை உட்கார்ந்து வச்சுட்டாங்க வந்து. 

குருநாதர் :- ஏன், எதற்காக, எவ்வாறெல்லாம் என்பவையெல்லாம் யான் சொல்லப் போகின்றேன். அறிந்து கூட. ஏனென்றால் இங்கு பின் அதாவது பின் நட்டவனும் அவனே நிச்சயம் தன்னில் கூட. இத்திருத்தலத்தில் கூட ஈசனை. 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த திருத்தலத்தில் நட்டவனும் என்றால் , நட்டவன்னா என்னங்க ஐயா?

அடியவர் 2 :- உருவாக்கினவர்.

சுவடி ஓதும் மைந்தன் :-  உருவாக்கியவரும் ராவணேஸ்வரன் தான். இந்த திருத்தலத்தை உருவாக்கியவர். இங்க பிரதிஷ்டை பண்ணவரும் யாரு?

அடியவர் 2 :- ராவணேஸ்வரர்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ராவணேஸ்வரர் தான். 

குருநாதர் :- அவனே உருவாக்கி, பின் இப்பொழுது கூட அவனே பார்த்துக் கொண்டிருக்கின்றான். நிச்சயம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றான் மறைமுகமாகவே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும்….. 

அடியவர்  :- வாழ்ந்துகிட்டு இருக்காரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கிறார். சிரஞ்சீவியாக வாழ்ந்துட்டு இருக்கிறாராம் வந்து…..

குருநாதர் :- ஈசனிடம் முறையிட்டு முறையிட்டு, பின் அறிந்தும் கூட பின் நீ அதாவது (ஈசன்) உன் பெயர் இருக்கும் வரை நிச்சயம், பின் அதாவது யானும் கூட உன் தொண்டுகள் செய்து கொள்ளவே வேண்டும். அதற்கு சக்தியை கொடு என்று, பின் அறிந்தும் கூட. 

குருநாதர் :- இதனால் பின் எப்பொழுது ஏது, என்பதையே பல பிறப்புகள் கடந்து கடந்து, பல பின் மனித உறுப்புகள் பெற்று, கடைசியில் பின் இவை வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி, கடைசியில் பின் அறிந்து கூட, பின் மறைமுகமாக, காற்றோடு காற்று கலந்து, திரிந்து கொண்டிருக்கின்றான் இன்றளவும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா படிக்கலாங்களா? புரியுதா?

அடியவர்  :-  சொல்லுங்க ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்ன சொல்றாருன்னா, பல பிறப்புக்கு… மனித உடம்பு… அதான் மனித உடம்பு பெற்று…. மனித உடம்பே எனக்கு வேணாம். அதனால ராவணேஸ்வரர்  அவர் என்ன சொல்றாருன்னா, ஈசன்  நீ இருக்கும் வரை நானும் உன் தொண்டுகள் சேவைகளும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கணும்னு சொல்லிட்டு…. ஈசன் கிட்ட ஒரு வரத்தை  வாங்குறாரு. அதேபோல….

அடியவர்  :-  உடம்பு இல்லாம.

சுவடி ஓதும் மைந்தன் :-  அதே மாதிரி போதும் அப்பா. உடம்பு பெற்று பெற்று நான் வந்து நல்லது செஞ்சேன். ஆனா என் பேரு இப்படி ஆயிட்டேன். அதனால உடம்பு மட்டும் எனக்கு தேவையில்லை. உன்னுடைய அருள் இருந்தா போதும். நான் வாழ்ந்துருவேன்னு சொல்லிட்டு ஒரு வரத்தை இது வாங்குறாரு. 

===========================
# தர்ம வழியில் செல்லும் அடியார்களுக்கு :- இராவணேஸ்வரர் அருளினால், இவ் அதர்ம கலியுக காலத்தில் , அடியவர்களுக்கு இராவணேஸ்வரர் துணை பலமாக இருக்கும். தர்மத்தின் வழியில், தடைகள் அனைத்தையும் அடித்து உடைத்து  நிச்சயம்  முன்னேறுவார்கள்.  
===========================

குருநாதர் :- ஆனாலும் எப்பொழுது ஏது என்று அறிய தர்மங்கள் தலைக்கீழாக போகின்றதோ, அப்பொழுது நிச்சயம் எப்படியோ பின் உடம்பு இல்லாவிடிலும்…… யார் மூலமும் உலகத்திற்கு நன்றாக செய்ய வேண்டும். என் துணை பின் அருளும் பலமாக இருக்கும். நிச்சயம் பின் முன்னேறுவார்கள். 

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது சீதையைப் பற்றியும் கூட சொல்லப் போகின்றேன். ஏனென்றால் ராவணனை மட்டுமே எடுத்துரைக்கும் பொழுது, நிச்சயம் சீதையும் இங்கு வரவேண்டும் அல்லவா? நிச்சயம் தன்னில் கூட. அதனைப் பற்றியும் எடுத்துரைக்கப் போகின்றேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லிருங்க.

அடியவர்  :-  ஐயா என்ன சொல்றாருன்னா, ராவணேஸ்வரர் வந்து மிகப்பெரிய சிவபக்தர். அவர்தான் உலகத்துல நீ சிவ வழிபாடு எல்லா இடத்திலும் கொண்டு போகணும்னு சொல்லி பாடுபட்டவரும் ராவணேஸ்வரர் தான். உலகத்துல நிறைய இடங்கள்ல சிவலிங்கங்கள் நிறுவி, கோயில்கள் அமைச்சதும் ராவணேஸ்வரர் தான். இப்ப இந்த திருத்தலம் கூட ராவணேஸ்வரரால தான் ஒரு காலத்துல அமைக்கப்பட்டது ன்னு சொல்றாரு. ஆனா அவரை வந்து என்ன தப்பா சித்தரிச்சிட்டாங்க. 

அவர் வந்து இந்த மனித உடல் எடுத்து எடுத்து வந்து, அவருக்கு எல்லாமே மக்கள் அவர் தப்பா சொன்னதுனால, அவர் சிவன் கிட்ட சொல்லிட்டாராம். 

எனக்கு இந்த மனித உடலே வேணாம். நான் காற்றோட காற்றா இருந்து,  மக்களுக்கு நான் சேவை  செஞ்சுக்கிறேன்னு சொல்லிட்டாராம். 

இலங்கையில்  கூட,  இப்ப கூட அவர் இராவணேஸ்வரர் காத்திருக்கிறார் இலங்கை மண்ணை கூட.  அவர் இப்ப நம்ம கண்ணுக்கு தெரியாட்டியும் நம்ம எல்லோரையும் காத்து நிற்கிறார் ராவணேஸ்வரர். 

ஆகவே ராவணேஸ்வரருடைய விஷயங்களை ஐயா சொல்லப்போறாரு ஜீவநாடி மூலமா. 

அதேபோல ராவணேஸ்வரரை பத்தி சொன்னா சீதையையும் பத்தி சொல்லணும். ஆகவே சீதையுடைய ரகசியத்தையும் இப்ப இந்த ஜீவநாடியில் சொல்லப்போறாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லப்போறாரு.

===========================
# அனைத்து பெண்களை போற்றிய இராவணேஸ்வரர் திருவடிகள் போற்றி !!!
===========================

குருநாதர் :-  அறிந்தும் ராவணேஸ்வரனுக்கு அறிந்தும் ராவணனுக்கு எவ் ஆசையும் இல்லை. பின் ஈசனுடமே பற்றுக் கொண்டான். பெரும் பற்றுக் கொண்டான். அனைத்தும். ஆனால் ஒன்று. பின் தாயிடம் மட்டும் மிகவும், மிகவும், மிகவும் அதிகளவு பாசம் கொண்டான். பெண்களை மதிக்க வேண்டும். பெண்களை போற்ற வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தாயின் மீது அளவு கடந்த பாசங்கள் அவனுக்கு. 

அடியவர்  :- அது ராவணேஸ்வரருக்கு வந்து எது மேலயும் பற்று இல்லை. அவருக்கு வந்து ஈசன் மேல தான் பற்று. அதே மாதிரி தாய் மேல ரொம்பவும் அன்பும் பாசமும் கொண்டவர். தாய்க்காக அவர் என்ன வேணாலும் செய்வார்.

சுவடி ஓதும் மைந்தன் :-   செய்வார்.

குருநாதர் :-  ஆனாலும் பின் தாய் அவள் அறிந்து கொண்டாள்  நிச்சயம் அதாவது ஈசன் தான் இவனுக்கு அனைத்தும். ஈசன் இது போதும். நம் அதாவது உலகை விட்டு செல்வோம் என்று. 

அழகாக ஒரு நாள் பின் அதாவது அமைதியாக உட்கார்ந்து இருந்தான், பின் ராவணனும் கூட. இதனால் தாய் அவனிடத்தில் வந்து ராவணனே உனக்கு அனைத்தும் ஈசன் தான். பின் தாய் தந்தை என்று. நிச்சயம் அதுவே போதும். அப்பாசத்தோடே வாழ்ந்துவிடு. யான் அதாவது இதுநாள் வரை என்னை அழகாக பார்த்துக் கொண்டிருந்தாய். இதனால் யான் நிச்சயம் ஈசனிடத்திற்கே செல்லுகிறேன் என்று. 

அடியவர்  :-  ராவணேஸ்வரர் தாய் அவருக்கும் தெரிஞ்சிருச்சு என்ன நடக்கபோகுது என்று. ராவணேஸ்வரருக்கு வந்து… ஈசன் மேல தான் பற்று இருக்கு. அதனால அவங்க அம்மா வந்து, இந்த உலகத்தை விட்டு போக வேண்டிய நாள் வந்துருச்சு. அப்ப சொன்னாங்களாம். ராவணேஸ்வரரா…. ஈசனே பற்றிக்கொள். உனக்கு எல்லாமே அந்த ஈசன் தான். அந்த ஈசனுடைய பாதுகாப்புன்னு சொல்லி, ராவணேஸ்வரருடைய அம்மா என்ன செய்றாங்க? உடலை விட்டு அவங்க உயிர் துறக்குறாங்க. 

குருநாதர் :-  அவனுடைய தாய் யார் என்பதும் கூட கடைசியில் சொல்கின்றேன். இப்பொழுது வேண்டாம். சில ரகசியங்கள் சொல்லிவிட்டுத்தான் பின் அதுவும் சொல்ல வேண்டும். 

இதனால் பின் நிச்சயம் ஓ !!!!!!! என்று அழுதான். 

பின் அதாவது புலம்பினான். தாயே இப்படி பின் பாசங்களை பின் காட்டிவிட்டு கடைசியில் ஈசனிடம் சொல்வதா? இது நியாயம் இல்லை என்று. 

ஆனாலும் நிச்சயம் பின் அவ்வாறு நிச்சயம் உன்னை வளர்த்தேன். அனைவரையும் யான் வளர்த்தேன். அனைவருக்கும் திறமை கொடுத்திட்டேன். 

இதனால் ஈசனுடன் போகப் போகின்றேன். இதனால் அமைதி மனதை சாந்தப்படுத்து. நீ எப்பொழுது வேண்டுமானாலும் ஈசனிடத்தில் வந்து என்னை காணலாம் என்று. 

அடியவர்  :-  அம்மா !!!!! என்று ராவணேஸ்வரர் அழுவுறாரு. என்னை விட்டுட்டு போயிட்டீங்களே அம்மா !!!!!. உங்களுக்காகத்தான் இவ்வளவு செஞ்சேன்னு அவர் அழுதுட்டு இருக்காரு. ஆனா, அதை அம்மா வந்து ஈசன் கிட்டயும் போயிருக்காங்கன்றது அவருக்கு தெரியும். தெரிஞ்சாலும் அவரால… துக்கத்தை தாங்க முடியாம அழுவுறாரு. மனசுல துக்கம் இருந்தாலும்…. நீங்க திரும்ப வரணும் அப்படின்னு சொல்லி அவர் கேட்டுக்கிறாரு. 

குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, ஆனாலும் எதற்கு ஏது என்று அறிய,  இதனால் எப்பொழுதாயினும் பின் எதை என்று புரிய. 

இதனால்தான் பின் எவை என்று கூட பின் அதாவது எப்பொழுது வேண்டுமானாலும் நீ வரலாம். உனக்கு ஒரு விமானத்தை கொடுத்து… ஏது அன்று அறிய,  எப்பொழுதும் என்னை பார்த்துக் கொள்ளலாம்.. ஈசனார் இடத்தில் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப ஒரு விமானத்தை வந்து கொடுத்துறாங்க. விமானம்னா அன்றைய காலகட்டத்தில் ஒரு விமானம். இப்ப ஏரோபிளேன். ஏரியோபிளேன் இருக்குல்ல அந்த மாதிரி வந்து கொடுக்குறாங்க. அது வந்து இந்தா நான் மேல போறேன். நீ எப்ப வேணாலும் என்னை காணலாம் வந்து. அந்த ஏரோபிளேன்ல…. விமானம். நீ எப்ப வேணாலும் காணலாம்னு. 

குருநாதர் :-  தாயே நிச்சயம் அறிந்து கூட. அதாவது யானும் உன் உன் கூடவே வந்து விடுகின்றேன். இதனால் யானும் ஈசனிடத்திலே இருக்கப் போகின்றேன் என்று. 

குருநாதர் :-  அப்படி இல்லை. உன் சேவைகள் இன்னும் தொடர வேண்டும் அல்லவா? அதனால்தான் மக்கள் சேவை. அதாவது நீ சேவை செய்து கொண்டிருக்கும் பொழுது எதை எதையோ எதிர்கொள்ளும். பின் நிச்சயம் தன்னை கூட அனைத்தும் எதிர்கொள்ள வேண்டும். 

குருநாதர் :-  பின் கால சூழ்நிலைகள் வருகின்றது. அவ பெயர் வரும். உன்னை தாழ்ந்து பேசுவார்கள். நிச்சயம் சண்டைகள் வரும். தாராளமாக உன்னை கொல்லவும் செய்வார்கள். ஆனாலும் அனைத்துக்கும் காரணம் இறைவனே என்று சொல்ல வேண்டும். மனம் விடக்கூடாது. சொல்லி சொல்லி பின் நிச்சயம் தன்னில் கூட பக்குவப்படுத்தினாள். 

குருநாதர் :-  இதனால் நீயும் பாசமுடன் இருக்கின்றாய் அல்லவா? என் மீது அதேபோல் இவ்வுலகத்தில் உள்ள அனைவரிடத்திலும் அனைத்து பெண்களிடத்திலும் பாசமாக இரு. உன் பெயர் நிச்சயம் பின் கடை நாள் வரையிலும் பின் பேசும். சென்று வருகின்றேன் மகனே என்று விடைபெற்றாள். 

அடியவர் :-  இந்த ராவணேஸ்வரருடைய அம்மா என்ன சொல்றாங்கன்னா, நீங்க எப்ப வேணாலும் என்னை பார்க்கிறதுக்கு…. ஒரு விமானம் முலம்… நீங்க எப்ப வேணாலும் வந்து பார்க்கலாம். ஆனா இனி வரும் காலங்கள் நீ கவனமா இருக்கணும். இங்க யுத்தங்கள் வரும். உன்னையும் கொலை செய்வாங்க. உன்னுடைய பேருக்கும் களங்கம் ஏற்படுத்துவார்கள். ஆகவே இனி வர்ற  காலம் ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்லிட்டு…. ஆசீர்வாதம் பண்ணிட்டு தான்…. அந்த அம்மா என்ன செய்றாங்க? ஈசன் கிட்ட போறாங்க. 

===========================
# இராவணேஸ்வரர் - தாய் பாசத்தின் உச்சம். அனைத்து பெண்களையும் தன் தாய் போல போற்றியுள்ளார்.  
===========================
# இப்படிப்பட்ட மகிமை புகழ் , ஆதி ஈசனாரின்  மஹா சிவ பக்தரை ,  இந்த கலியுகம் இப்போது எப்படி இராமாயண கதைகளில் எடுத்து சொல்கிறது என்று அடியவர்கள் அவசியம் சற்று சிந்தனை செய்க….  
===========================

குருநாதர் :-  ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய, அவ்வாறாக. அதனால் நிச்சயம் என் மீது பாசம் கொண்டாய் அல்லவா? அதே போலத்தான் நீ இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பெண்கள் மீதும்,  (தாய் போல) பாசம் கொள்ள வேண்டும். ஒரு குறையும் வராது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா மீது பாசம் ராவணனுக்கு. இராவணேஸ்வரர் அவங்க அம்மா சொல்றாங்க…. என்ன சொல்றாங்கன்னா…..இதே போல, என் மேல வந்து பாசம் வைத்திருந்த போல,  அதே மாதிரிதான் உலகத்தில் உள்ள எத்தனை பேர் இருக்கிறாங்களோ, அத்தனை பேர் மேலயும் நீ வந்து பாசம் வைக்கணும். அப்படி பாசம் வச்சா, உன்னோட பெயர் கெடாது. அப்ப சிவத்தொண்டு நீ செய்யலாம்னு சொல்லிட்டு… அந்த அம்மா சொல்லிட்டு போறாங்க.

குருநாதர் :-  அதேபோல பின் அதாவது நிச்சயம் தாய் பேச்சு கேட்க வேண்டும் என்று நிச்சயம் தந்தை கூட இருந்தாலும் பின் நிச்சயம் அழுது புலம்பினான். பின் ஒரு நாள் அதாவது அறிந்தும் கூட இவ்வாறாக தாய் இருந்தாலே… எத்தனை எத்தனை என்று.  ஆனாலும் இப்படியே பின் சென்று வருகின்றேன் மகனே. தேவைப்படும் பொழுது நீ இவ் விமானத்தின் மூலம் பின் என் அருகே வா. யான்  காத்துக் கொள்கின்றேன். பின் ஈசனும் அங்குதான் இருப்பான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- விமானத்தை கொடுத்துட்டு, நீ தேவைப்படும் பொழுது நான் ஈசன் கூட தான் இருப்பேன். நீ வந்து பார்த்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. 

குருநாதர் :-  எதை எவை போன்று கைலாயத்திலே நிச்சயம் தன்னில் கூட இருக்கப் போகின்றேன் என்றெல்லாம் நிச்சயம் அங்கேதான் எப்பொழுது வேண்டுமானாலும் நீ பார்த்துக் கொள்ளலாம். ஆனாலும் மக்களுக்கு பின் சேவை செய்து கொண்டே இருந்தாலே போதும். அதுதான் எனக்கு பின் மிகுந்த, பின் அதாவது என்னிடத்தில் பின் பாசம் காட்டியதற்கு அதுதான் நன்றி. 

அடியவர் :- ராவணேஸ்வரருடைய அம்மா என்ன சொல்றாங்க, நீ என் மேல எவ்வளவு பாசத்தை காட்டுறியோ அதே மாதிரி எல்லாருக்கும் பாசத்தை காட்டணும் அப்படின்னு ஒரு வார்த்தையும் கொடுத்துட்டு….. நீ எப்ப வேணாலும் என்னை வந்து பார்க்கலாம். நீ இங்க இருந்து துன்பப்பட தேவையில்லை. நான் வந்து கைலாசத்துல தான் இருப்பேன். கைலாசத்துல இருந்து சிவனோட தான் நான் இருப்பேன். நீ எப்ப வேணாலும் என்னை வந்து பார்க்கலாம். அப்படின்னு அவங்க ஒரு வார்த்தையும் கொடுத்துட்டு போறாங்க. 

குருநாதர் :-  இதனால் பின் பல ஆண்டுகள் மன உளைச்சல் ஏற்பட்டது, நிச்சயம் தன்னில் கூட.  ஆனாலும் இது எவை என்று ஈசனும் பார்த்துக் கொண்டே இருந்தான். எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் பெண்ணவள் அறிந்தும் கூட அதாவது பின் அவள் தாயை நினைத்து நினைத்து ஆனாலும் வேதனை வேதனையுடனே பின் அன்பும் மீண்டும் வருந்திக் கொண்டான்.

குருநாதர் :-  இதைத்தன் அறிவித்து என் நிலையில் எது என்று புரிய இவ்வாறாக நிச்சயம் மனம் பெரிதும் வருத்தப்பட்டான். அதாவது பின் தாயும் சென்றுவிட்டாள்.  நமக்கு ஈசன் தான் துணை. ஆனாலும் பின் பெண்களுக்கு இன்னும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இன்னும் கூட பெண்களிடத்தில் பாசம் காட்டி. 

குருநாதர் :-  ஆனால் கலியுகத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பதை எல்லாம் பின் நன்றாக உணர்ந்தது என்றால் ராவணனே. 

குருநாதர் :-  ஆனாலும் எப்படி காப்பாற்றுவது? ஆனாலும் யாரும் பார்த்துக் கொள்ள ஆடில்லையே… ஈசனே!!!!! என்று ஈசனை மீண்டும் பின் ஏது என்று அறிய திட்டிட்டான் ராவணனை. 

குருநாதர் :-  இவ்வாறாக ஏது என்று புரிய அனைத்தும் உந்தனக்காகவே செய்தேன். ஆனால் என் தந்தையும் எடுத்து என் எவை என்று அறிய பின் என் தந்தையும் உனையாகவே நினைத்தேன். ஆனால் இப்படி நிச்சயம் பின் என் தாயின் மனதை நீ மாற்றி இருக்கலாம் அல்லவா? அதையும் எது என்று புரிய இதனால் மனம் வருந்தி மனம் வருந்தி எங்கும் எதையும் செய்யாமல் அப்படியே அவன் அரண்மனையில் மூழ்கி கிடந்தான். 

அடியவர் :- தன்னுடைய தாய் இறந்த பிறகு ராவணன் வந்து ரொம்பவும் வேதனைப்பட்டார். இனி தாய் இங்க ஈசன் மட்டும்தான் இருக்காருன்னு சொல்லி ஈசன் கிட்ட அவருடைய கவலையெல்லாம் சொல்லி புலம்பினார். எல்லா பெண்களையும் ஒரே மாதிரி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார். அதே மாதிரி வர்ற காலங்கள்ல பெண்களுக்கு சமத்துவம் கொடுத்து, எப்படி பெண்களை போற்றணும் அப்படின்னு எல்லாம் போற்றணும்னு நினைச்சாரு. ஆனா கலியுகத்தில் நடக்க போறதா அவருக்கு தெரிஞ்சிருச்சு. கலியுகத்துல வந்து இதைவிட ரொம்ப நிலைமை மோசமாகும்ங்கிறதே அவர் ஞானத்துக்கு கீழ பார்த்துட்டாரு. அதனால ரொம்பவும் சோகமா ரொம்பவும் கவலையோட என்ன செஞ்சுட்டாரு ராவணேஸ்வரர்?  எங்கேயும் போகாம அரண்மனையிலேயே இருக்க விரும்பிட்டாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  பூஜை பண்ணிட்டு படிக்கலாங்களா?

அடியவர் :-  சரிங்க அய்யா. பூஜை முடிச்சு படிக்கலாம்.

( ஆலய பூஜை ஆரம்பமானது…… )

சுவடி ஓதும் மைந்தன் :-   ராவணனை பற்றி தான் இங்க இருக்கு.. வராரு. சீதா அன்னை  பற்றியும்  சொல்லுவாரு.

( அப்போது அங்கு ஆலய மணி ஓங்கி ஒலித்தது ….) 

சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி ராவணன் பத்தினே சொன்னாலே மணி டக் டக்குன்னு அடிக்குது. 

அடியவர் :-  ராவணன் சொன்னாலே (ஆலய மணி) அடிக்குது……

( ஆலய பூசை முடிந்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது ….) 

குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் நலமாகவே, மீண்டும் நல்முறையாகவே, பின் அனைவரும் நன்றாக, பின் இருக்க, பின் இறைவனிடத்தில் மன்றாடி, நிச்சயம் தன்னில் கூட, பின் சிவபுராணம் ஓதுக.

அடியவர் :-  அம்மா சிவபுராணம் படிங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி சிவபுராணம் படிக்கணும். அப்பதான் திருப்பி சொல்லுவார், வந்து. நல்லா ஈசனாரிடம் முறையிட்டு,  எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, திருப்பி ஒரு முறை பாடுங்க சிவபுராணத்தை.

( அனைவரின் நலன் வேண்டி , அடியவர்கள் மாணிக்கவாச பெருமான் அருளிய  சிவபுராணம் பாராயணம் செய்ய ஆரம்பித்தார்கள்…) 

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

( சிவ புராணம் பாராயணம் செய்து முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் உரைத்தார்கள்) 

( அன்னை சீதா தேவியின் மாபெரும் ரகசியங்கள், பகுதி 2 - ல் தொடரும்…)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment