​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 21 April 2026

சித்தன் அருள் - 2186 - அன்புடன் அகத்தியர் - அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 2



அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 2

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  03.04.2026 (வெள்ளிக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில். 

===========================
# தேவலோகத்தின் சட்ட திட்டங்கள் , சாபங்கள் 
===========================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட பெண்ணாக இருப்பவள் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் நிச்சயம் பின் தலை குனிந்து தான் இருக்க வேண்டும். பின் ஆனால் நிச்சயம் தலை நிமிர்ந்து விட்டாள். இதனால் நிச்சயம் பின் சாபம் ஏற்பட்டுவிட்டது. இதனால் பூமியில் பிறந்து நிச்சயம் தன்னில் கூட பின் ஒழுக்கமாக பின் எவை என்று கூற  இருந்தாலும் ஒன்றனுக்கு பின் இவை என்று அறிய நிச்சயம் தன்னில் ஒரு சாபம் வந்துவிட்டது. இதனால் நிச்சயம் பிறந்துவிட்டாள். பின் பின் கண்ணகியாக. 

அடியவர் :- அதாவது பின்ன இருந்தா தலை குனிஞ்சு இருக்கணும் அப்படின்னு ஒன்னு சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- தலை குனிஞ்சு தான் நடக்கணும். அப்படித்தான் இருக்கணும். தேவலோகத்துலன்னு ஒரு கட்டளை இருக்குது. ஆனால்? 

அடியவர் :-  அந்த கட்டளையை மீறி அவங்க என்ன பண்ணாங்க?. நீ போயிட்டு பூமியில ஒரு…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது தெரியாம தேவலோகத்துல அவங்க என்ன பண்ணிட்டாங்க?  தலை நிமிர்ந்துட்டாங்க. பாத்துட்டாங்க. அப்ப என்ன ஆச்சு?. சாபம் வந்துருச்சு. ஐயா? 

அடியவர் :-  சாபம் வந்து.. பூமியில பிறந்து… 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ பூமியில பிறந்து, நீ எப்படி ஒழுக்கமா இருந்தாலும், உனக்கு வந்து வாழ முடியாது. திருப்பி, அந்த பாவத்தை நீ போகிட்டு வா ( என்று இறைவன் கட்டளை ). 

அடியவர் :- ஆமா ஆமா. 

குருநாதர் :-  ஆனாலும் இதுவும் இறைவன் லீலையே. ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஏனென்றால் நல்லதை சொல்ல வேண்டும் அல்லவா  இறைவன்?  நிச்சயம் பின் அதாவது மனிதனை படைத்ததற்கு?  அதனால் அனைத்தும் இறைவன் ஆட்டங்களே என்று நினைக்க. 

அடியவர் :-  இது எல்லாமே இறைவனுடைய திருவிளையாடல்னு சொல்றாங்க. இறைவன் தெரிஞ்சுதான் இதையும் செய்றாரு. ஏதோ ஒரு விஷயத்தை மனித உலகத்துக்கு சொல்றதுக்காக ரம்பை மூலமா ஒரு விளையாட்டா…. ஒரு… விளையாடுறாரு. 

குருநாதர் :-  அறிந்து கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பிறந்துவிட்டாள் எதை என்று கூற பின் அழகாக எதை என்று புரிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் பின் அதாவது அனைத்தும் தெரியும். ஏன் எதற்காக இங்கு பிறந்தோம்?  அதனால் நிச்சயம் தன்னில் கூட தலை பின் நிமிர்க்க கூடாது என்பதை எல்லாம். 

அடியவர் :-  ரம்பை இங்கு  பிறந்தாலும்,  அவங்களுக்கு தெரிஞ்சிருச்சாம். ஏன் எதுக்கு பிறந்திருக்கோம்னு சொல்லி.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால நம்ம தலையை வந்து நிமிரக் கூடாது. 

அடியவர் :-  எப்படி அங்க தேவலோகத்தில் இருந்திருக்கணுமோ,  அதான் இங்க இருக்கோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இங்க இருக்கிறோம். 

அடியவர் :-  அப்படின்னு அந்த கண்ணகி வந்து,  இங்க வாழ்ந்திருக்காங்க. 

குருநாதர் :-  ஆனாலும் இறைவன் அப்பொழுதும் சோதனை கொடுத்தான். எதை என்று புரிய. 

அடியவர் :-   அப்பவும்  இறைவன் சும்மா விடலையாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

அடியவர் :-   கண்ணகிக்கு என்ன செய்றாங்க?  

சுவடி ஓதும் மைந்தன் :-  சோதனை கொடுக்கிறார். 

அடியவர் :-  சோதனை கொடுக்கிறார். 

குருநாதர் :-  அது சோதனை நீங்கள் அறிந்ததே.  ஆனாலும் அனைத்து அறிந்தது யான் சொல்லவில்லை. அறியாதது தான் யான் சொல்வேன். 

அடியவர் :-  அப்ப கண்ணகி அப்படி இருந்து கண்ணகிக்கு என்ன நடந்துச்சுன்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும். தெரிஞ்ச விஷயத்தை நான் சொல்லல. தெரியாத ரகசியத்தை தான் சொல்ல வந்திருக்கேன்னு சொல்றாரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய. ஆனாலும் நல்விதமாகவே எதை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட.  பின் ஆனாலும் பின் நிச்சயம் தேவலோகத்தில் நிச்சயம் பின் ரம்பைக்கு எவ்வளவு பின் சக்திகளோ, அதுவும் கூட இங்கு இருந்தது. அழகாக அனைத்தும். 

அடியவர் :- தேவலோகத்துல ரம்பை எவ்வளவு சக்தியோடு இருந்தாங்களோ, அதே சக்தியோட தான், கண்ணகியா இங்கேயும் இருந்திருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

குருநாதர் :-  எதை என்று புரிய இதனால் நல்விதமாக அறிந்தும் புரிந்தும் கூட இதனால், இப்படியே. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட. ஆனாலும் எப்படியோ ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் எவை என்று பல பல சுமைகள் ஏது என்று அறிய அனைத்தும் உங்களுக்கே தெரியும். ஆனாலும் (மதுரையை) எரித்தவுடன் என்ன ஆனால் என்பது யாருக்காவது தெரியுமா?. 

அடியவர் :- இதுவரைக்கும் அந்த வரலாறு தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா அது எரிச்ச பிறகு எரிச்ச பிறகு யாருக்காவது வரலாறு தெரியுமாங்க ஐயா. வரலாறு தெரியுமான்னு கேக்குறேன். யாருக்கும் தெரியாது. 

===========================
# "சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.

# நாம் அறிந்த அன்னை கண்ணகி தேவி  சிலப்பதிகாரம் காவியம் ஒரு குறும் பதிவு  - சிலப்பதிகாரத்தின் நாயகியான கற்புக்கரசி அன்னை கண்ணகி, பூம்புகாரில் வாழ்ந்த கோவலனின் மனைவி. அவர் கணவர்  மாதவி எனும் நாட்டியக் கலைஞருடன் வாழ்ந்து அனைத்துச் செல்வங்களையும் இழந்த பின், மீண்டும் கண்ணகியிடம் திரும்பினார். இருவரும் மதுரைக்குச் சென்று பிழைக்க எண்ணினர். அங்கு, அரசியின் சிலம்பைத் திருடியதாகப் பொய் குற்றம் சாட்டப்பட்டு, கோவலன் கொல்லப்பட்டார். நீதி கேட்டு மதுரை அரசனிடம் வாதிட்ட அன்னை கண்ணகி, தன் மற்றொரு கால் சிலம்பை உடைத்து, தனது கணவன் நிரபராதி என நிரூபித்து, கோபத்தில் மதுரையை எரித்தார்கள்.
===========================

குருநாதர் :-  அதன் பிறகுதான் அப்பா ஆற்றல் உள்ளது. ஆனால் மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை ஏது என்று எடுத்துச் செல்ல, அத்தோடு எவை என்று அறிய அப்பனை நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் அவ் ஆற்றலை சொன்னாலும் மனிதனுக்கு அப்பனே  பல வழிகளில் அப்பனை ஆற்றல் வந்துவிடும். அதனால் அதையும் மறைத்துவிட்டான் என்பேன் அப்பனே. ஆனால் தேவையில்லாததெல்லாம் எழுதிவிட்டான் அப்பனை. 

அடியவர் :- அதுக்கு பிறகு என்ன நடந்திருக்குன்னு சொன்னா, அதுக்கு பிறகுதான் ஆற்றலே என்னன்னு வெளிவந்திருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

அடியவர் :- ஆனா அந்த ஆற்றலை பற்றி சொல்லாம, தேவையில்லாம என்னென்னத்திலயோ எழுதி… 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

அடியவர் :- அந்த ஆற்றல் தெரியாமல் மறைச்சிட்டாங்களாம். ஏன்னா மனிதனுக்கு இந்த ஆற்றல் போயிடக்கூடாது. 

===========================
# மறைக்கப்பட்ட பல இதிகாசங்கள் , காவியங்கள் 
===========================

குருநாதர் :-  இதே போலத்தான் அப்பனே ராமாயணத்தில் பல மறைக்கப்பட்டன. கடைசியில் அப்பனே பின் ஒன்றும் தெரியாமலே. மகாபாரதத்தில் ஒன்றும் தெரியாமலே. இன்னும் பல அவதாரங்கள் ஒன்றும் தெரியாமலே கடைசியில் என்பேன் அப்பனே. மனிதன் முழித்துக் கொண்டிருக்கின்றான். அடுத்தடுத்து என்ன ஆகு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் என்ன இத்தோடு தான் முடிந்துவிட்டதா?  இன்னும் இருக்கின்றதா? என்று சந்தேகங்கள் கூட. 

அடியவர் :-  அதாவது இது மட்டுமல்ல ராமாயணமா இருக்கட்டும் மகாபாரதமா இருக்கட்டும் அது எல்லாமே உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டுருச்சாம். 

குருநாதர் :-  ஞானிகளின் எதை என்று அர்ப்பணிப்பின் நிச்சயம் வரலாறு யாருக்காவது தெரியுமா?  என்றால் நிச்சயம் பின் அதாவது பின் மனிதனுக்கு நிச்சயம் பாதி அளவு கூட தெரியாது. 

அடியவர் :-  ஒரு ஞானியுடைய வாழ்க்கை வரலாறு தெரியுமான்னு கேட்டா இல்ல பாதி கூட தெரியாதுங்கிறார். 

குருநாதர் :-  ஆனாலும் எதை என்று கூற  பின் அதாவது நூறில் 10% மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற முடியுமா என்ன?. அதனால் நூற்றில் ஒரு 10% தான் விட்டிருக்கின்றான் ஞானிகளின் வரலாற்றை. அது கூட தவறு தவறாக.

அடியவர் :- இருக்கிறதே. ஒரு 10 வீதம் தான் நம்மளுக்கு தெரியுமா. அதுவும் தவறு தவறா இருக்குன்னு அகத்தியர் சொல்றாரு. 

===========================
# தலைகீழாக போய் கொண்டிருக்கும் தர்மம்….
===========================

குருநாதர் :-  ஆனாலும் உண்மைதனை பின் தவறாக பின் எடுத்துக்கொண்டால் எப்படி பின் உங்களை பின் நிச்சயம் தன்னில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ முடியும், உங்களால்?  இறைபலங்களே பின் நிச்சயம் தன்னில் தவறாக பின் சித்தரிக்கப்பட்டு, நீங்கள் அதை தவறாக படித்தால் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்?. நீங்களே சொல்லுங்கள்?. 

அடியவர் :-  ஒரு தவறான விஷயத்தை உண்மைன்னு நம்பி, நாம இப்ப திரும்ப திரும்ப படிக்கிறதுனால நம்மளுக்கு எப்படி நல்லது நடக்கும்னு கேக்குறாரு. 

===========================
# பெண்களின் மகத்தான வலிமை. 
===========================

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் பின் எவை என்று அறிய பின் சொன்னேனே, பின் தேவலோகத்தின் பின் மங்கை நிச்சயம் பல ஆற்றல்களை பெருக்கி பெருக்கி எது என்று புரிய எவை என்று அறிந்து கூட அதனால் பூலோகத்தில் பிறந்து நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பெண்கள் நிச்சயம் தன்னில் கூட பின் கெடுவார்கள் என்பதற்கு இணங்கவே, இது பின் நிச்சயம், இவ் அவதாரம் என்பேன்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஒரு அவதாரம் தான்.

அடியவர் :-   கண்ணகி என்கிறது ஒரு அவதாரம்னு சொல்றாரு அவர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. ஏன்னா பல பலங்கள் கண்ணகி கையில இருக்குது.

அடியவர் :-   ஆமா 

சுவடி ஓதும் மைந்தன் :-   ரம்பை என்பது வந்து, பெரிய ஆற்றலை படைச்சிருக்காங்க. ஆனால் கலியுகத்துல பெண்கள் வந்து ரொம்ப வந்து கஷ்டப்படுவாங்க, என்பதற்கு இணங்கவே இந்த அவதாரம். கண்ணகியோட அவதாரம் என்று சொல்றார் வந்து… 

குருநாதர் :-  அறிந்து கூட இவ்வாறாக கடைசியில் எதை என்று புரிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஒரு பெண்ணானவள் நினைத்தால், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற பின், அனைத்தும் செய்ய முடியும் என்று நிரூபித்தவள் கண்ணகியே. 

அடியவர் :-  ஒரு பெண் நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம். இந்த கலியுகத்துல பெண்களுடைய ஆற்றல் என்ன அப்படின்னு சொல்லி காட்டுறதுக்காக, எடுக்கப்பட்ட அவதாரம் தான் கண்ணகி அவதாரம். 

சுவடி ஓதும் மைந்தன் :- கண்ணகி அவதாரம். அது ஒரு அவதாரம் தான் சொல்றாரு. 

===========================
# தாய்மார்களிடம் உள்ள, ஈடு இணை இல்லாத உலகத்தை வெல்லும் ரகசியங்கள். 
===========================

குருநாதர் :-  ஆனாலும் அறிந்து கூட எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட ஒரு பெண் சரி எவை என்று அறிய நிச்சயம் தன்னில், தலை குனிவோடு நிச்சயம் தன்னில் கூட, பின் யாரிடம் பேசாமல் நிச்சயம் தன்னில் இருந்தாலே நிச்சயம் இவ்வுலகத்தையே வெல்லலாம்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  …. என்று காட்டியவர்  தான்? 

அடியவர்கள் :- அன்னை கண்ணகி.

சுவடி ஓதும் மைந்தன் :-  அன்னை கண்ணகி. இந்த உலகத்துல பெண்ணானவள், 

அடியவர் :-  யாரிடமும் பேசாமல், தலை குனிந்து வாழ்ந்தாலே இந்த உலகத்தையே வெல்லலாம், அப்படிங்கறத செயல் மூலமா காட்டுனது கண்ணகி அம்மாதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  செயலை காட்டியது கண்ணகி அம்மாதான். 

குருநாதர் :-  இதனால் இப்படி இருந்தால் பெண்கள் நிச்சயம் கலியுகத்தில் வெற்றி கொள்ளலாம், நிச்சயம் தன்னில் கூட. ஆண்களுக்கு பின் சமமான நிச்சயம் தன்னில் கூட அந்தஸ்தையும் பெறலாம் என்று காட்டியவளே எதை என்று கூற கண்ணகி. 

( ஆலய மணி ஒலித்தது இவ்வேளையில்….) 

அடியவர் :-  அதாவது எப்படி ஆற்றல் பெற்று, ஆண்களுக்கும் நிகரான சக்தியோடு வாழலாம் அப்படிங்கறத இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுனவங்க  தான் கண்ணகி அம்மா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கண்ணகி அம்மா என்றார்.

குருநாதர் :-  இன்னும் ஞானிகள் பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் உரைத்திடுவேன் எவை என்று கூற. பெண் ஞானிகளும் இருக்கின்றார்கள். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பின் கலியுகத்தில் பெண்களின் பின் எவை என்று கூறப்பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் காப்பாற்றுவாள் என்பதற்கு இணங்க அவையும் மறைத்து விட்டனர் பின் பல, பின் மனிதர்களே. 

அடியவர் :- கலியுகத்துல வந்து நிறைய பெண் ஞானிகளும் இருந்தாங்களாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ம் 

 அடியவர் :- ஆனா அந்த பெண்கள் ஞானியா இருக்குங்கிறதை வெளியில சொல்லக்கூடாதுங்கிறதுக்காக 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் 

அடியவர் :- எல்லாத்தையும் மறைச்சிட்டாங்களாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மறைச்சிட்டாங்க. அதுவும் யான் வந்து சொல்லப்போறேன். 

===========================
# இவ்வுலகில் உள்ள அனைத்து தாய்மார்கள், அன்னையர்கள்  அனைவருக்கும் மகத்தான வாக்கு   !!!!!
===========================

குருநாதர் :-  அறிந்து எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, சரியாகவே பின் நல் எண்ணத்தோடு ஒரு பெண் பின் இருந்தால், நிச்சயம் பின் அவை சொல் பலித்துவிடும் என்பேன் அப்பனே. இதனால் நிச்சயம் தன்னில் கூட பெண்கள் அதிகமாக நிச்சயம் சாபத்தை யாரிடமும் விடக்கூடாது என்பேன்.  

அடியவர் :- இப்ப ஒரு பெண் வந்து, சரியா வாழ்ந்து இருந்தான்னு சொன்னா, அவங்க வார்த்தை வந்து பலிச்சிடும். அதனால பெண்கள் வந்து முடிஞ்ச அளவு சாபம் போட வேணாங்கிறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- சாபம் போட வேண்டாம். வீட்ல கூட வந்து திட்ட வேணாம். யாரும் திட்ட விடக்கூடாது. பிள்ளைகள் கூட திட்டக்கூடாதும்மா. கோவம் வந்து? சரிங்களா?. அது திட்டிட்டு போனா என்ன ஆகுமாம். வந்து அது சாபமா போயிடுமாம். அதனால? 

அடியவர் :- திட்டக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- திட்டக்கூடாது. 

குருநாதர் :-  எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது மதுரை தன்னிலே எதை என்று புரிய அனைவருக்குமே புரியும்   பின் எப்படி சாபமிட்டாள்  என்று. 

அடியவர் :- கண்ணகி என்ன சாபமிட்டாங்கன்னு எல்லாத்துக்கும் தெரியும்னு சொல்றாரு. அந்த மதுரையில…

குருநாதர் :-  எதை என்று அறிய பின் அது சாபமும் இன்னும் தொடர்கின்றதனாலே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சாபம் இன்னும்…. 

அடியவர் :- தொடருதாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  தொடர்றதுனாலதான் வந்து,  ரொம்ப இது ஆகுதுன்றாரு. 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இல்லத்தில் பின் நிச்சயம் தன்னில் கூட பெண்கள் நிச்சயம் பின் பிள்ளைகளை பின் அதாவது சாபமிட்டு நிச்சயம் திட்டக்கூடாது என்பேன்  நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அவ்வாறு நிச்சயம் தன்னில் நீங்கள் இட்டுவிட்டால் அது கடைநாளில் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதாவது தாக்கும். அதனால்தான் பின் நிச்சயம் யார் இங்கு வினையை கொடுக்கின்றீர்கள். நிச்சயம் தன்னில் கூட பிள்ளைகளுக்கு என்றால் நீங்களே!!!!! நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!!!!!. 

அடியவர் :- பாருங்க எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றாரு அப்பா. வீட்ல பெண்கள் வந்து எந்த காரணம் கொண்டும் பிள்ளைகளை ஏசவும் கூடாதாம். சாபம் போடுற மாதிரி ஏசக்கூடாதாம். அதை பேசிட்டா அதாவது சாபம் போடுற மாதிரி சொல்லிட்டா,  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா… 

அடியவர் :- அது அந்த நேரம் இல்லாட்டி, என்னைக்காச்சும் ஒரு நாளைக்கு அந்த பிள்ளைக்கு பாதிக்குமாம். அந்த நேரம் நீங்க தான் கவலைப்படணும். ஐயோ பிள்ளைக்கு என்ன ஆயிடுச்சுன்னு. அதனால கோபத்துல கூட நீங்க பிள்ளைகளை வீட்ல சாபம் போட வேணாம்னு சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   சாபம் போடக்கூடாது. பிள்ளைகள் நீங்க வந்து பெண்கள் வந்து அதிகமா கண்டிக்கலாம். ஏதோ சும்மா …அது ஒன்னு விட்டுருங்க. வந்து ஏதோ ஒன்னு பயம் டேய் இப்படி பண்ணாதடா தப்புடான்னு சொல்லலாம். 

===========================
(தாய்மார்கள் திட்டும்போது கூட கவனமாக திட்ட வேண்டும். பிள்ளைகள் ஏற்றம் பெறுவது போல திட்ட வேண்டும்.  அனைத்து தாய்மார்களுக்கும் தனது பிள்ளைகள் விஷயத்தில் சாபம் (வாக்கு)   பலிதம் உண்டு என்று உணர்க. )
===========================

அடியவர் :- ஆமா சாபம்  வேணான்னு சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் அப்ப சாபம்  யாரு அது கொடுக்கிறது உங்க பிள்ளைகளுக்கு? 

அடியவர் :- நீங்க தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க தான்.

அடியவர் 1 :-  உங்களோட வாய் திட்டுதான் பிள்ளைகளுக்கு பலிக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா?  

அடியவர் 1 :- உங்களோட வாய் திட்டுதான் பிள்ளைகளுக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிள்ளைகளுக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயமாக பலிச்சிடும். அது பாதிக்கும். 

===========================
# இறை சட்டம் :- மாதா , பிதா , குரு  அதன் பின்னர்  தெய்வம் காட்சி.
===========================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் குருவை மதிக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்,  கல்வி தன்னில் கூட. பின் பள்ளிச்சாலையில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் குரு எவை என்று கூற. அதாவது பெண் குருவும் இருக்கின்றாள். 

குருநாதர் :- பின் நிச்சயம் மீறி நடந்தால் அவர்கள் நிச்சயம் தன்னில் ஒரு நாள் சிக்கிக் கொள்வார்கள். எதை என்று அறிய. அதனால்தான் பின் கடைசியில் எவை என்று கூற பின் . எதை என்று அறிய. நிச்சயம் பின் அன்னை பின் எவை என்று அறிய. பின் அதாவது தந்தை பின் குரு என்று. இதனால் குரு பேச்சை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் என்ன பண்றாரு?  பள்ளியில் குருமார்களை மதிக்கணும். மதிக்காம ஏதாவது பெண் குருவானவள் சாபம் விட்டுட்டாங்கன்னா….. நீ  உருப்பட மாட்ட டா என்று சொன்னால்   என்ன ஆகும்? வந்து ஒரு நாள் அதுதான் கிடைக்கும்ன்றாரு. வந்து 

===========================
# மனித மூடன் -  மாதா ஆசி, பிதா ஆசி, குரு ஆசி  தேவையில்லை. 
# மனித மூடன் - தெய்வமே நேரடியாக  காட்சி கொடு. 
===========================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன். தாயிடமும் தந்தையிடமும் குருவிடமும் சாபத்தை வாங்கக்கூடாது சொல்லிவிட்டேன். அப்படி வாங்கினால் தெய்வம் என்று பின் கண்ணுக்குத் தெரியாது. 

அடியவர் :- தாய் தந்தை குரு மூணு பேர்ட்டையும் சாபமே வாங்கிறாங்கங்கிறாரு. வாங்கிட்டீங்கன்னா தெய்வம் கண்ணுக்கு தெரியாதுங்கிறாரு. 

குருநாதர் :-  ஆனால் இவர்களிலிருந்து சாபம் வாங்கிக்கொண்டு, தெய்வத்தை தேடுவான் மனித மூடன். 

அடியவர் :- என்ன சொல்றாரு பாருங்க. மனுஷன் வந்து மூடன்… முட்டாள்ங்கிறாரு. ஏன்னா வீட்ல இருக்க அப்பா, அம்மா, குரு… மூணு பேர்ட்டையும் சாபத்தை வாங்கிக்கிட்டு இறைவனை தேடுவான். போயிட்டு 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி 

அடியவர் :- எப்படி இறைவன் காட்சி கொடுப்பார்?

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி  இறைவன் காட்சி கொடுப்பார்?

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு (அன்னை தந்தை , குரு இவர்களை) மதிக்காதவர்களை நிச்சயம் தன்னில் மதிப்பாரார்களை நிச்சயம் இறைவனும் மதிக்க மாட்டான். கஷ்டத்திலேயே மிதக்கிக் கொண்டு. பின் ஏன் இந்த கஷ்டம் வருகின்றது என்பதை எல்லாம் மீண்டும் மனிதனை தேடி தேடி மனிதன் அதை பின் உபயோகித்து கொள்வான். இதனால் மீண்டும் தோல்வி அடைகின்றான் மனிதன். 

அடியவர் :-  இதனால்தான் மனுஷனுக்கு கஷ்டம் எதுன்னு என்னன்னு தெரியாம மேலும் மேலும் கஷ்டத்தோடயே மனுஷன் வாழ்ந்துகிட்டு இருந்து மனிதன் கஷ்டமாவே வாழ்றான்னு சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால… 

===========================
# தாயிடம், தந்தையிடம், குருவிடம் சாபம் வாங்கக்கூடாது. 
===========================

குருநாதர் :-  எது என்று புரிய பின் புரிகின்றதால் இப்பொழுது நிச்சயம் தன்னில்? மீண்டும் சொல்கின்றேன். தாயிடம் தந்தையிடம் குருவிடம் சாபம் வாங்கக்கூடாது. 

அடியவர் :-  திரும்பத் திரும்ப சொல்றாரு. 

அடியவர் :-  தாய் தந்தை குரு மூணு பேர்ட்டையும் சாபம் மட்டும் வாங்கிறாதீங்க. 

===========================
# இவ் வாக்கினை படிக்கும் அனைத்து அன்பு அடியவர்களே..உங்களுக்கான வாக்கு….. 
===========================

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் அவ்வாறு சாபம் வாங்கிவிட்டால் ஒரு நாள் உன்னை அது பின் கொன்று எவை என்று கூற, பின்  எத் திருத்தலத்தில் சென்றாலும் அச்சாபம் பின் நிச்சயம் விலக்க முடியாது. 

பின் 

“ “ “ “ “ “ “ “ “ தாயே !!!!! ” ” ” ” ” ” ” ” ”  

“ “ “ “ “ “ “ “ “  தந்தையே !!!!! ” ” ” ” ” ” ” ” ” 

அன்பாக உங்களுக்கு யான் எடுத்துரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

அடியவர் :-  பாருங்க எப்படி சொன்னாரு. தாயே தந்தையே அன்பா சொல்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

அடியவர் :-  ஏன் சாபம் வாங்கிக்காதீங்க. சாபம் வாங்கிட்டு எந்த கோயிலுக்கு போனாலும் சாப விமோசனமே இல்லை கிடைக்காது. 

குருநாதர் :-  இவை அதாவது நிச்சயம் குருவிடம் தந்தை தாயிடம் நிச்சயம் பெற்ற சாபம் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி. 

அடியவர் :-  அதாவது ஒரு குரு, தாய், தந்தையிடம் சாபம் வாங்கிட்டா… அதுக்கு பிராய்ச்சித்தமே இல்லை. நீங்க அனுபவிச்சே ஆகணும். அதான் விதிங்கிறாரு. 

குருநாதர் :-  ஏன் எதற்கு பின் ரம்பையே  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பின் தேவலோகத்தில். ஆனாலும் நிமிர்ந்து விட்டாள் நிச்சயம் தன்னில் கூட பின் இது ஒரு  குற்றமா ????? அதற்காகவே ஒரு பிறவி எடுத்து கஷ்டப்பட்டாள். 

அடியவர் :- சாதாரணமா தலை நிமிர்ந்ததுக்காகவே… 

சுவடி ஓதும் மைந்தன் :- குரு பேச்சை வந்து… குரு தேவலோகத்தில் வந்து நீ தலை நிமிரக்கூடாது பெண்கள்னு சொல்லிக்கிறாரு….. 

அடியவர் :-  அது கேட்கல 

சுவடி ஓதும் மைந்தன் :- கேட்கல… தெரியாம… இப்படி ஏதோ ஒன்னு… 

அடியவர் :-  தெரியாம செஞ்ச தப்புக்கே ரம்பைக்கு என்ன செய்ய… ஒரு பிறவியே எடுத்து… இங்க வந்து கஷ்டப்படு… அப்படின்னு சொல்லிட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கஷ்டம் 

அடியவர் :-  இங்க வந்து துன்பத்தை அனுபவி 

சுவடி ஓதும் மைந்தன் :- துன்பத்தை அனுபவிச்சேன்னு சொல்லிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுங்களா. கண்ணகி ஏன் தெரியுங்களா. எல்லாருக்கும்? கண்ணகியை பத்தி…. 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரியும். 

குருநாதர் :-  எது என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் அவளாள்  பின் நிச்சயம் அனைத்தும் சாதித்துக் கொள்ள முடியும். நிச்சயம் அவளுக்கும் பல மந்திரங்களும் கூட தந்திரங்களும் கூட தெரியும். ஆனாலும் இறைவன் இட்ட கட்டளை பின் எவை என்று அறிய பின் அனுபவித்தே தீர வேண்டும் என்பது. 

அடியவர் :- அவங்களுக்கு நிறைய மந்திரங்கள் நிறைய தந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சாலும் அவங்களால ஒன்னும் செய்ய முடியல. ஏன்???? 

அடியவர் :-  இறைவன் சொல்லிட்டார். நீ இதை அனுபவிச்சு தான் வரணும்னு சொல்லி. ஆனாலும் இறைவனுடைய பேச்சை மீற முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :- மீற முடியல. ம் 

===========================
# கண்ணகி அன்னையின் அதீத சக்தி…. 
===========================

குருநாதர் :-  எது என்று அறிய கடைசியில் நிச்சயம் தன்னில் எவையே வேண்டாம். மக்களே வேண்டாம் என்று தனியாக நிச்சயம் அனைத்தும் வெறுத்துவிட்டு , நிச்சயம் அழகாக பின் அதாவது எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கடலிலே நடந்தாள்.

அடியவர் :-  இதனால்தான் மக்களும் வேணாம். பிள்ளைகளும் வேணாம். ஒன்னும் வேணாம்னு, சொல்லி, கண்ணகி அம்மா என்ன செய்றாங்க?. அங்கிருந்து கடல்ல நடந்து வராங்களாம். கடல்ல நடந்து வராங்களாம் . 

குருநாதர் :-  எது என்று கூறப்பின் அதனால் பின் பெண்களுக்கு சக்தி அதிகம் என்பேன்  

அடியவர் :- அதான் சொல்றாரு. பெண்களுக்கு சக்தி அதிகமா. கடலிலே நடந்து வர அளவுக்கு வடந்த அளவுக்கு 

குருநாதர் :-  ஆனாலும் இவை மறைத்துவிட்டு விட்டார்கள். 

அடியவர் :- ஆனாலும் இந்த விஷயத்தை எல்லாம் என்னது.. 

===========================
# ஆழி  விட்ட வழி ……………..
===========================

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட எதற்காக வந்தாள் ? மீண்டும் மனம் நொந்து போய் நிச்சயம் தன்னில் கூட.  கடல் வழியாக எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, நடந்து வந்து, கடல் தன்னிலே பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது மீண்டும் சொல்லப்போனால் வழியும் விட்டது. நிச்சயம் உத்தமி வருகின்றாள் என்று. 

அடியவர் :- அவங்க கடல்ல வரும் பொழுது கடல் என்ன செஞ்சுதாம்? ஒரு மகா உத்தமி நடந்து வராள்னு சொல்லி,  கடலே வழிவிட்டுச்சாம். அவங்களுக்கு 

குருநாதர் :-  எது என்று கூற அதையும் பின் பொருட்படுத்தவில்லை. பின் ஏது எவை என்று கூற நமக்கு அதாவது நிச்சயம் தன்னில் கூட வழிவிடுகின்றதே என்று சாதாரணமாவே நினைத்தாள். 

அடியவர் :- ஆனா அவங்களுக்கு அது பெருசா தோணலையாம். கடலே வழிவிடுதுன்னா அது எவ்வளவு பெரிய விஷயம் !!!!!. 

சுவடி ஓதும் மைந்தன் :- ம்…. 

அடியவர் :-  ஆனா கண்ணகிக்கு அது கூட தோணலையாம். அது ஏதோ அவங்க நினைவுல வந்துகிட்டே இருக்காங்களாம். 

குருநாதர் :-  எவை என்று அறிய நிச்சயம் பின் உயிரற்ற பொருள்களுக்கும் நிச்சயம் தன்னில் கூட உண்மையாக, நேர்மையாக இருந்தால், உயிர் வந்துவிடும். 

அடியவர் :-  பாருங்க. உயிர் இல்லாத பொருளுக்கு கூட, ஒரு நேர்மையான ஒருத்தன்ட்ட கால் பட்ட உடனே, அந்த பொருளுக்கும் உயிர் வருதாம். 

குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவையால்தான் பல அரசர்கள் அன்று சாதித்துக் கொண்டார்கள். ஆனாலும் அது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. வந்த பின் வருபவர்களும் கூட எவை என்று அறிய. 

அடியவர் :- இதெல்லாம் அந்த காலத்து மன்னர்கள் தெரிஞ்சு சாதிச்சுக்கிட்டாங்களாம். ஆனாலும் அவங்க என்ன செஞ்சுட்டாங்க. இதெல்லாம் மறைமுகமா வச்சுட்டாங்க. இதெல்லாம் தெரியக்கூடாதுன்னு சொல்லி 

குருநாதர் :-  நிச்சயம். ஆனால் கலியுகத்தில் எடுத்து வரவேண்டிய பின் அவசியம் கட்டாயம் 

அடியவர் :- கலியுகத்தில் இதை எடுத்து வரவேண்டிய கட்டாயம் வந்துருச்சு. அதனாலதான் அப்பா வந்து எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காரு. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் கடலும் பின் வழிவிட்டது. அழகாக எது என்று புரிய மீண்டும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட சொல்கின்றேன். பின் அதாவது பின் உலகை பின் எது என்று கூற பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நிச்சயம் முருகனிடம் நிச்சயம் தன்னில் வேண்டிக்கொண்டு நிச்சயம் ஈசனிடம் வேண்டிக்கொண்டு நிச்சயம் தன்னில் அழகாக பின் சிவபுராணத்தை ஓதி வாருங்கள். ஒருமுறை. 

அடியவர் :- எல்லாரும் ஒருமுறை சிவபுராணத்தை படிச்சு 

 சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து என்ன பண்ணனும்?. எல்லா மக்கள் நல்லா இருக்கணும். எல்லாருக்காகவும் முருகனையும் ஈசனையும் நினைச்சு ஒருமுறை சிவபுராணம் எல்லாரும் சேர்ந்து படிங்கன்றார். சிவபுராணம் ஐயா படிங்க. 


( சிவபுராணம் பாராயணம் ஆரம்பம் …..)

தொல்லை இரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மறுவா நெறி அளிக்கும் வாதவூர் என் கோன்
திருவாசகம் என்னும் தேன்…….


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் தொடரும் …..) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment