அன்புடன் அகத்திய மாமுனிவரின் அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 4
நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :- 03.04.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :- வேலோடு மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில்.
குருநாதர் :- "அப்பனே, நல்விதமாக ஆசிகளோடு... அப்பனே, இவ்வாறாக... அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... அப்பனே, பின்... அதாவது எதை என்று புரிய... அப்பனே, அதாவது கண்ணகி யோசித்தாள் அப்பா... எப்படி... ஏது என்று அறிய... அதாவது மனிதர்கள் பின் ஏது என்று அறிய... இப்படிப்பட்டவர்களா எதை என்று புரிய... என்றெல்லாம்... இதனால் ஏது என்று அறிய..."
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப... திருப்பியும் வந்து என்ன பண்ணாங்க அங்க? யானை வந்தது... அப்ப என்ன பண்ணாங்க?
அடியவர் :- கண்ணகி அம்மா யோசிக்கிறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- யோசிக்கிறாங்க வந்து. என்னடா மனிதர்கள் அங்க இப்படி பண்ணாங்கன்னு சொல்லிட்டு கண்ணகி அம்மா திருப்பியும் நல்லா ரொம்ப யோசிக்கிறாங்க.
குருநாதர் :- "அறிந்தும்... ஆனாலும் இவ் யானையும் எதை என்று புரிய... ஆனாலும் அழகாக நிச்சயம் பின் ... இவள்தான் ஏது என்று அறிய... அதாவது அறிந்து விட்டது பின் அவ் யானையே... இதனால் நிச்சயம் தன்னில் கூட ஒரு பெரும்... பின் சத்தம்... ஏது என்று அறிய... அதாவது அனைத்து... பின் யானைகளும் வந்து... வந்து... பின் ஒன்று சேர்ந்து விட்டது..."
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப... அந்த அம்மா என்ன நினைக்கிறாங்கன்னு இந்த யானைக்கு தெரிஞ்சு போச்சு. ஒருவேளை என்ன சொல்லுவாங்க வந்து, யாரும் இல்லையேன்னு சொல்லிட்டு நினைச்சிருக்கலாம். அப்ப என்ன ஆச்சுன்னா எல்லா யானைகளும் வந்து…
அடியவர் :- வந்துருச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- கூட்டமா வந்து சேர்ந்துச்சு.
குருநாதர் :- "அறிந்தும்... ஏது என்று புரிய... இவ்வாறாகவே... அறிந்தும் பல வழியில் கூட... ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய... இவ்வாறாகவே... எதை எதை என்று புரியும் அளவிற்கும் கூட இன்னும் கூட பின் வருத்தங்கள். ஆனாலும் அழகாக நிச்சயம் பின் மகிழ்ந்தாள், ஏது என்று அறிய.
குருநாதர் :- அனைத்தும் ஏது என்று புரிய, பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் வணங்கியது... பின் ... அதாவது எதை என்று புரிய... நிச்சயம் பின் ... அதாவது கண்ணகியை..."
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப... எல்லா யானைகளும் இங்க வந்துருச்சாம் வந்து. எல்லா... ஒரு யானை வந்தது ஃபர்ஸ்ட்... அது அந்த அம்மாக்கு...
அடியவர் :- வணங்கிருச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அம்மாக்கு வந்து என்னடான்னு சொல்லிட்டு நினைப்பு வேற மாதிரி அதான் எப்படி சொல்றதுன்னா வந்து ஐயா அது வந்து மனசு வந்து சஞ்சலம் ஏற்பட்டுச்சு. என்னடா இது வந்து இப்படி யாருமே இப்படி எல்லாம் மனுஷன் இருக்காங்கன்னு சொல்லிட்டு அப்ப இந்த யானை புரிந்து கொண்டது நல்லா கத்தியது. கூச்சலிட்டது. எல்லா யானைகளும்...
அடியவர் :- வந்துருச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- வந்துருச்சு வந்து. அனைத்து யானைகளும் அந்த அம்மாவை மண்டியிட்டது. மண்டியிட்டதுன்னா என்னது?
அடியவர் :- கும்பிடுச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- வணங்கிச்சு. ஆமா வணங்கிச்சு.
குருநாதர் :- "அறிந்தும் இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தோடு பின் இணைந்து பின்னி பிணைந்து வாழ வேண்டும். இப்படி வாழ்ந்தால் நிச்சயம் அனைத்து ஜீவராசிகளும் உம்மை நிச்சயம் தன்னில் கூட போற்றும்...
குருநாதர் :- அவ்வாறு போற்றுகின்ற பொழுது, நீங்கள் மென்மேலும் உயர்வீர்களாக...
குருநாதர் :- இதனால் நிச்சயம் பின் உயர்வதும் தாழ்வதும் தான் தான் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றது சொல்லிவிட்டேன் இங்கே.
சுவடி ஓதும் மைந்தன் :- உயர்வதோ தாழ்வதோ அவங்க அவங்க எண்ணங்கள் பொறுத்து தான். அதனால உயர்ந்த எண்ணங்கள் இருந்தா வாயில்ல ஜீவராசிகள் உங்களுக்கு என்ன பண்ணுமாம்?
அடியவர் :- வணங்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- வணங்கும் உங்களை.
குருநாதர் :- அதனால்தான் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொரு பின் அதாவது இறைவனுக்கும், பின் வாயில்லா ஜீவராசிகளே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய. அதாவது நிச்சயம் தன்னில் உருவங்களாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான், என்ன பண்ணிருக்காரு ஒவ்வொரு இறைவனுக்கும் வாயில்ல ஜீவராசிகள் தான்,
அடியவர் :- வாகனம்
சுவடி ஓதும் மைந்தன் :- வாகனமா வச்சிருக்காரு அங்க வந்து.
குருநாதர் :- அப்பனே, இதை புரிந்து கொண்டால் கூட நன்று என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை புரிந்து கொண்டால் கூட நன்று என்பேன்.
குருநாதர் :- அப்பனே, இவை கொன்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதிக அளவு முற்றிக் கொண்டே வருகின்றது என்று அர்த்தம் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதையெல்லாம்…. இப்ப வாகனங்கள். முருகனுக்கு என்ன வாகனம்?
அடியவர் :- மயில்.
சுவடி ஓதும் மைந்தன் :- மயில். சேவல்.
அடியவர் :- ஆடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆடு. அப்புறம் வந்து ஈசனுக்கு என்ன வந்து முக்கியமான ஒரு...
அடியவர் :- பசு.
சுவடி ஓதும் மைந்தன் :- பசு.
அடியவர் :- பசு இல்ல. காளை.
சுவடி ஓதும் மைந்தன் :- காளை. ஆமா. அப்ப நிறைய தெய்வங்களுக்கு ஒவ்வொரு வாயில ஜீவன். அது எப்ப வந்து அதிகமா மனிதன் கொன்றாங்களோ, அப்ப என்ன ஆகுது வந்து?
அடியவர் :- தர்மம் இல்லாம போச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மம் இல்லாத போச்சு. கலியுகம் முற்றிக் கொண்டே போகும்ன்றார் வந்து.
குருநாதர் :- இவ்வாறாக முற்றுகின்ற பொழுது பின் மனிதனுக்கு பின் வருத்தங்கள் பலமாகும். எண்ணம் ஏது செய்வது என்று பின் தெரியாமல் போகும். இதனால் ஏது என்று அறிய. அதனால்தான் சித்தர்கள் இன்னும் தலைகீழாக பின் தர்மம் போனால் மனிதனால் வாழ முடியாது. அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு யாங்கள் செப்ப வந்தோம். இன்னும் பல மூலிகள் இருக்கின்றது. அவையெல்லாம் மனிதனுக்கு சரியாக நாங்கள் கொடுத்து அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே அதை பயன்படுத்தினாலே வெற்றி கொள்ளலாம். அப்பனே பின் நீடோடி வாழலாம் நோய் இல்லாமல்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சொல்லுங்க ஐயா எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா.
அடியவர் :- அதாவது இந்த பூமியில நிறைய மூலிகைகள் இருக்காம். அப்ப இவன் ஒருவன் இந்த அசைவு உணவுகளை தவிர்த்து வர்றதா சொல்றாரு. இந்த கொலை செய்யாம இவன் ஒருவன் தர்மத்துக்குள்ள வரணும்னு சொன்னா உணவுக்காகத்தான் நிறைய அதை கொல்றாங்க. அதை தவிர்த்து இவன் இந்த பக்கம் வரான்னா அவனுக்குத்தான் இந்த மூலிகைகள் எல்லாம் வேலை செய்யும்ன்றாரு.
குருநாதர் :- அப்பனே நல்விதமாக அப்பனே பின் கொன்று குவித்து அப்பனே உட்கொண்டு எவ்வளவு பின் ஜெபங்கள் செய்தாலும் அப்பனே மந்திரங்கள் ஓதினாலும் அப்பனே இறைவனிடத்தில் சென்றாலும் அப்பனே ஒன்றும் பயனளிக்காதப்பா. அழிவுகள் தான் மிச்சம்.
அடியவர் :- எவ்வளவுதான் நம்ம ஜெபங்கள் மந்திரங்கள் செஞ்சாலும் இந்த அசைவு உணவை கொன்னு இந்த மிருகங்களை கொன்னு அசைவு உணவுல சாப்பிட்டு செய்யற எந்த மந்திரங்களும் பலன் பலிக்காது.
===========================
# 48 நாள் மண்டல பூசை ரகசியம்
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படிப்பட்ட எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து தெய்வங்களுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு மண்டலம் அப்பனே நிச்சயம் பூஜைகள் அப்பனை பின் பரிபூரணமாக அனைத்தும் விட்டு, அப்பனை பின் இறைவனுக்காகவே மனதில் எண்ணி எண்ணி, துதித்துக் கொண்டே வந்தால் அவ் இறைவனே அனைத்தும் மாற்றி விடுவான் என்பேன் அப்பனே.
அடியவர் :- அதுக்காகத்தான் ஒரு மண்டலம் வர்றதிலிருந்து இதை செஞ்சுட்டு வாங்கன்னு சொல்றாங்க. அப்ப ஒரு மண்டலம் வந்து செஞ்சுட்டு வரும் பொழுது, இறைவனாலே நம்மளுக்கு அதை உணர்த்தி நம்ம இதிலிருந்து விடுபடுத்துவோம். அதுக்காகத்தான் ஒரு மண்டலம் இருக்க சொல்றாரு.
குருநாதர் :- மீண்டும் பின் கண்ணகிக்கு கவலை ஏற்பட்டது, நிச்சயம் தன்னில் கூட. அதாவது எதை என்று புரிய அதாவது மீண்டும் நிச்சயம் திரும்பச் செல்வோமா என்று.
அடியவர் :- கண்ணகிக்கு கவலை வந்துருச்சு. என்ன திரும்பி போயிருவோமா தனியா இருக்கோமே அப்படின்னு அவங்க ஒரு கவலை வந்து திரும்பி போயிருவோமான்னு ஒரு எண்ணமும் வந்துச்சாம்.
குருநாதர் :- எதை எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மீண்டும் எவை என்று அறிய ஆனாலும் பின் சென்றது, பின் மீண்டும் எவை என்று புரிய பின் ராமேஸ்வரத்தின், வழியாக மதுரை சென்று அறிந்தும்.
அடியவர் :- அதுக்கு பிறகு திரும்ப ராமேஸ்வர வழியா என்ன செய்றாங்க?
அடியவர் 1 :- மதுரைக்கு
அடியவர் :- மதுரைக்கு போறாங்க
குருநாதர் :- அறிந்தும் அப்படியே எதை என்று அறிய அறிய பல நிச்சயம் தன்னில் பக்கத்தில் உள்ள பின் ஊர்களுக்கெல்லாம் பின் செல்கின்றாள் பின் எதை என்று புரிய.
அடியவர் :- அதுமட்டுமல்ல மதுரையிலிருந்து என்ன செய்றாங்க? பக்கத்தில் இருக்கிற எல்லா ஊர்களுக்கும் செல்றாங்க.
===========================
# யானைகளின் பாசம், அன்பு, கருணை
===========================
# பின் வரும் வாக்கை நன்கு உங்கள் மனதில் கற்பனை செய்து படிக்கவும்…எப்படி எல்லாம் யானைகள் கண்ணகி அன்னைக்காக ஏங்கி தவித்தது என்று…
===========================
குருநாதர் :- மீண்டும் எதை என்று அறிய ஆனாலும் எதை புரிந்து ஆனாலும் இங்கே (இலங்கையில்) யானைகள் பின் அப்படியே பின் நிச்சயம் நின்றுவிட்டது
அடியவர் :- யானைகள் என்ன செஞ்சுச்சாம்?. இங்கே (இலங்கையில்) வரவை பார்த்துட்டு அப்படியே நின்றுச்சாம். நின்னுகிட்டு இருக்காங்க
குருநாதர் :- மீண்டும் எதை என்று அறிய பின் அவ்வாறாக மீண்டும் பின் அதாவது எப்படியோ பின் மீண்டும் பின் யானைகள் ஞாபகம் வந்துவிட்டது எதை என்று புரிய.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் மீண்டும் பின் ஏன் எதற்கு என்று இவ்வளவு இப்படியே பின் பைத்தியக்காரர் போல் திரிந்து ஏது என்பதை மீண்டும் அறிந்தும் கூட அங்கும் இங்கும் எதை என்று கூற, மீண்டும் பின் வந்தடைந்தால் இங்கு.
குருநாதர் :- யானைகள் அப்படியே அழகாக பின் கண்ணகி வருவாள் என்று ஏங்கி நின்றது சொந்தக்காரர்கள் போல்.
அடியவர் :- இந்த யானைகள் எல்லாம் நின்றுருச்சாம். கண்ணகி அம்மா எப்ப வருவா வருவான்னு.
அடியவர் :- கண்ணகி அம்மாவும் போயிட்டு எல்லாரும் பைத்தியக்காரர் மாதிரி திரிஞ்சு கடைசில பார்த்தாங்களாம். அப்பதான் நினைவு வந்துச்சாம். யானைகள் நினைவு வந்து என்ன செஞ்சாங்களாம்?
அடியவர் 1 :- இங்க வராங்க.
அடியவர் :- இங்க வராங்க. இங்க வந்து பார்த்தா, யானைகள் அப்படியே நிக்குதாம்…
சுவடி ஓதும் மைந்தன் :- கண்ணகி அம்மா திரும்பி வர்ற வரைக்கும்…
அடியவர் :- இவங்க வரவை பார்த்து…
===========================
# “மாறு இலாத மாக் கருணை வெள்ளமே”
# திருவாசகம் - திருச்சதகம் (ஆனந்தாதீதம்)
===========================
# பொருள்: இறைவனுடைய கருணை, நிலைபேறுடையது (மாறுபாடு இல்லாதது) மற்றும் அளவுக்கடந்தது (மா கருணை வெள்ளம்).
===========================
குருநாதர் :- அதேபோலத்தான் அப்பனே அதாவது இறைவன் உங்களை புவி தன்னிற்கு அனுப்பி விடுகின்றான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்களா ?????
அதாவது நிச்சயம் தன்னில் கூட, அதாவது யான் திருத்தலங்களை இங்கு சொல்கின்றேன்.
பின் அங்கங்கு இறைவன் பின் திருத்தலத்தில் நிற்கின்றான்.
மீண்டும் பின் வருவானா என்றெல்லாம் காத்துக் கொண்டிருப்பான் நிச்சயம் தன்னில் கூட.
“““““அவ்வளவு பாசம் மிகுந்தவன் இறைவன். கருணை படைத்தவன் இறைவன்.”””””
அடியவர் :- இறைவனும் அப்படித்தானாம். எங்களை இந்த பூமிக்கு அனுப்பிட்டு அவர் பார்த்துட்டு இருப்பாராம். வருவானா என்கிட்ட??? வருவானா அப்படின்னு திருத்தளங்கள்ல இருந்து பார்த்துட்டு இருப்பாராம். அதான் திருத்தலங்களுக்கு போக சொல்லுவாங்க. அவ்வளவு அன்பும் கருணையும் வச்சிருக்காரு இறைவன்.
குருநாதர் :- ஆனாலும் பலர் வருவதில்லை. அதனால் நிச்சயம் தன்னில் கூட ஏதோ சோகத்தை ஏற்படுத்தி, வரவழைத்துக் கொள்கின்றான் நிச்சயம். சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்.
அடியவர் :- யாரும் வர்றதில்லை அதனாலதான் என்ன? மக்களுக்கு சோகத்தை கொடுத்து, சோகத்தை கொடுத்தத்தானே கடவுளை தேடி வருவாங்க. சோகத்தை கொடுத்து வர வைக்கிறாராம். அவரை பார்க்கிறதுக்கு…
குருநாதர் :- இதனால்தான் பல அழிவுகள் நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுதுதான் நிச்சயம் பின் இறைவனை உணர்வான் மனிதன்.
அடியவர் :- இதனால்தான் உலகத்துல பெரிய அழிவுகள் வரும். இந்த அழிவுகள் எல்லாம் வந்த பிறகுதான், மனிதனுக்கு ஞானம் பிறக்கும். ஓ!!!!! இறைவன் ஒருத்தன் இருக்கான்னு அப்படின்னு சொல்லி…
குருநாதர் :- எதை என்று மீண்டும் எவை என்று புரிய சில அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது அதனால்தான் பின் ஞானிகளில் யான் எழுப்பி இத் தேசத்தை நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் மக்களுக்கு தெரியாது. ஏது என்று புரிய அதனால்தான் அனைவரையும் எழுப்ப நிச்சயம் தன்னில் கூட அவர்கள் காத்துக் கொள்வார்கள்.
அடியவர் :- அதாவது இந்த தேசத்துல இன்னும் அழிவுகள் இருக்குதாம். இந்த அழிவுகள்ல இருந்து காப்பாத்துறதுக்காகத்தான் சித்தர்கள் என்ன செஞ்சாங்களாம் எல்லா ஞானிகளையும் எழுப்பிக்கிட்டு இருக்காங்களாம். இந்த ஞானிகள் எல்லாம் எழுந்துட்டாங்கன்னு சொன்னா இங்க வரப்போற அழிவுகள்ல இருந்து காப்பாத்திடுறோம். ஆனா இது மனிதனுக்கு இன்னும் தெரியாமல் தான் இருக்குதாம்.
===========================
# கருணை கடலே அகத்தீசா, நின் தாள் போற்றி போற்றி போற்றி !!!
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் கருணையால், பெண்கள் பாதுகாப்பிற்காக கலியுகத்தில் - மீண்டும் கண்ணகி அன்னை வருகை. (3/4/2026)....
===========================
# கலியுகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக எழுந்தருளிய கண்ணகி அன்னையே, நின் தாள் போற்றி போற்றி போற்றி !!!
===========================
குருநாதர் :- இதனால்தான் ஏது என்று புரிய, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட கண்ணகி ஏது என்று புரிய பின் அனைத்தும் உணர்ந்தவள். அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட, பெண்கள் பாதுகாப்பிற்காக நிச்சயம் தன்னில் கூட அவளையும் பின் எழுப்பினேன்.
அடியவர் :- இது எல்லாமே தெரிஞ்சவங்க தானே கண்ணகி அம்மா. அதனால்தான் கண்ணகி அம்மாவையும் எழுப்புறாராம். ஏன்னா பெண்களுக்கு பாதுகாப்பு வந்து, கண்ணகி அன்னையால தான் கொடுக்க முடியும்னு சொல்லிதான் கண்ணகி அம்மாவையும், எழுப்புறாராம் அப்பா.
குருநாதர் :- எதை என்று புரிய இன்னும் ஏது என்று அறிய பல ஞானிகள் இருக்கின்றார் பல்வேறு பின் வேதத்திலும் கூட அவர்கள் எல்லோரும் யான் எழுப்புவேன்.
அடியவர் :- இது மட்டும் இல்லையாம் பல ஞானிகள் இருக்காங்களாம் அவங்க எல்லாத்தையும் அகத்தியர் அப்பா எழுப்புவேன்னு சொல்றாரு
குருநாதர் :- எதை என்று புரிய இவ்வாறாக ஆற்றல்கள் அதிகரித்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதன் வருங்காலத்தில் தன்னைத்தானே உணர்வான் புரிந்து கொள்வான். வெற்றிகள் காண்பான் மற்றவர்களையும் திருத்துவான்.
அடியவர் :- இப்படியே மனிதனுக்கு வந்து ஆற்றல்கள் கூடிருச்சுன்னு சொன்னா மனிதன் திருந்திருவான். திருந்தி, தன்னையும் ஆற்றல் மிகுந்தவனா மாற்றி, மற்றவர்களையும் மாற்றி விடுவான்.
குருநாதர் :- எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அழகாக எவை என்று கூற யானை பின் பேசாமல் நிச்சயம் உட்கார்ந்தது. ஆனாலும் பின் கண்ணகிக்கு பின் ஏன் உட்காருகிறது என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் தெரிந்தது. இதனால் நிச்சயம் பின் அதாவது ஏறி அமர்ந்தாள் யானையின் மீதே.
அடியவர் :- கண்ணகி வந்து பேசாம உட்கார்ந்துருவோம்னு தான் நினைச்சாங்க.. அப்பதான் யோசிச்சாங்க ஏன் நான் பேசாம இருக்கணும் சரி அப்படின்னு என்ன செய்றாங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இல்ல.. பேசாமல் வந்து யானை இருந்தது.
அடியவர் :- சரி
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து உணர்ந்துகிட்டாங்க. ஏன் பேசலன்னு சொல்லிட்டு யானை
அடியவர் :- ஓ… அப்ப என்ன பண்ணா? ஓ…. நம்ம ஏறி உட்காருவோம் அதுவும் உட்கார்ந்துச்சு. ஏறுறதுக்கு கண்ணகி அம்மாவும் உணர்ந்து விட்டாங்க.
அடியவர் :- நம்ம ஏத்திட்டு போறதுதான் இது. வந்து நம்ம உட்காரணம். ஏத்திட்டு போறதுதான் வந்திருக்கு. அப்படி சொல்லி… அது வந்து யானை மேல ஏறிட்டாங்க .
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா
குருநாதர் :- அப்பனே இவ்வாறாக நலங்களாகவே, பின் எதை என்று புரிய இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூற பின் அழகாக இவ்மலையில் ஏறி எதை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் பின் இங்கேயே விட்டுவிட்டது. கண்ணீரோடு நிச்சயம் தன்னில் கூட
அடியவர் :- கண்ணகி அம்மாவை தன் மேல ஏத்திட்டு வந்து, இந்த வேலொடு மலையில இறக்கிவிட்டுட்டு, கண்ணீரை சிந்திட்டு போயிட்டு இருக்கு. பாருங்க… இந்த மலையில தான் இறக்கிவிட்டு போயிருக்காங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா
குருநாதர் :- எது என்று புரிய கண்ணகியும் நிச்சயம் பின் அதாவது பைத்தியர் போல் இருந்தாள்.
அடியவர் :- அப்படியும் கண்ணகி வந்து பைத்தியம் முடிச்ச மாதிரிதான் இருந்தாங்களாம்
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மகிமை புகழ், கற்புக்கரசி, அன்னை கண்ணகி தேவி காவிய வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment