​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 21 April 2026

சித்தன் அருள் - 2185 - அன்புடன் அகத்தியர் - அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 1




அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 1

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி, அன்னை கண்ணகி தேவியின்  காவியம்……

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  03.04.2026 (வெள்ளிக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A

யூடூப்பில் லிங்க் கையேடு :- 
https://www.youtube.com/watch?v=E7EbrPbO3Mc

===========================
# சுவடி ஓதும் மைந்தன் உரைத்த முன்னுரையின் சுருக்கம் :- 
===========================
# சக்திகளை அதிகரித்து வெற்றி அடைய வைக்கும் ரகசியங்கள். 
===========================
ஒவ்வொரு மனிதனுக்கும் முதுகுக்குப் பின்னால் மூலாதாரம் என்ற சக்கரம் போன்ற ஒரு ஆன்மீக ஆற்றல் (Energy) உள்ளது. இந்த ஆற்றலைச் செயல்படுத்துவதற்கு இறைவனிடமிருந்து பெறப்படும் மின்சாரம் போன்ற சக்தி தேவைப்படுகிறது.

இறைவன் ஒவ்வொரு குழந்தையையும் 100% முழுமையான ஆற்றலுடன்தான் (Battery) இந்த உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் மனிதர்கள் வளரும் போது, தேவையற்ற எண்ணங்களாலும் மாயைகளாலும் இந்த ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடுவதால் வாழ்க்கையில் துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் சாதிக்க, இந்த பேட்டரியின் அளவை எப்போதுமே குறைந்தபட்சம் 70% க்கு மேல் குறையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நமது ஆற்றலை அதிகரிப்பதற்கான முக்கிய வழிகள்:

மந்திரங்கள் மற்றும் திருமுறைகள்: திருவாசகம், கந்த சஷ்டி கவசம் போன்ற இறைப் பாடல்களைப் பாடுவதாலும், மந்திரங்களை உச்சரிப்பதாலும் பேட்டரியின் பவர் (ஆற்றல்) கூடிக்கொண்டே இருக்கும்.

இறை வழிபாடு: மனக்குழப்பங்கள் தீர சந்திர பகவானையும், நோய்கள் நீங்க சூரிய பகவானையும் வழிபட வேண்டும். சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்று அவரை வெல்ல எட்டாம் திருமுறையான திருவாசகத்தைப் பாடலாம். முருகப்பெருமான் மற்றும் கண்ணகியின் வரலாற்றைக் கேட்பதும் நமக்குப் பெரிய ஆற்றலைத் தரும்.

புண்ணிய காரியங்கள்: கோயில்களைச் சுத்தப்படுத்துதல், தொண்டு செய்தல் மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற நற்செயல்கள் நமது எனர்ஜியை பலமடங்கு அதிகரிக்கும்.

கலியுகத்தில் மனிதர்கள் வேலைப்பளுவால் கஷ்டப்படுவதால், சித்தர்கள் ஆற்றலைப் பெற மிக எளிய வழிகளை உருவாக்கியுள்ளனர். 

அகத்திய மாமுனிவர்  போன்ற மாபெரும் ஞானிகளின் பெயர்களையும்,  வாக்குகளையும் கேட்பது மட்டுமே நமது எனர்ஜி அளவை (Energy level) தானாகவே அதிகரிக்கச் செய்யும். இதற்காகவே பல சித்தர்கள் மறைமுகமாக கூட்டுப் பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

இங்கு கண்ணகி அன்னையை குறித்த வாக்குகளை உரைக்க உள்ளார்கள்.

கண்ணகி அன்னை தனது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில், தனக்கு யாருமே ஆதரவாக இல்லையே என்ற நிலையில் தஞ்சம் தேடி ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்படி திக்கற்ற கடினமான சூழ்நிலையில் இருந்த கண்ணகி அன்னைக்கு முருகப்பெருமான் உதவியாக இருந்தார்.

இந்த உலகத்தில் கண்ணகியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது; இதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த அளப்பரிய ஆற்றல்தான் (Energy). ஒரு சூரியனுக்கு எவ்வாறு அளவிட முடியாத வெளிச்சமும் சக்தியும் இருக்கிறதோ, அதே போன்ற மிகப்பெரிய ஆன்மீக ஆற்றலை கண்ணகி அன்னை கொண்டிருந்தார்.

கண்ணகி அன்னையின் வரலாற்றைப் படிப்பதும், அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும் நமது ஆன்மீக ஆற்றலை (Energy) பலமடங்கு அதிகரிக்கும். 

ஜீவநாடி மற்றும் மனிதனின் விதி:- 

'ஜீவநாடி' என்பது இறைவன் நமது விதியை முன்கூட்டியே பதிவு செய்து அனுப்பிய ஒரு மெமரி கார்டு (Memory Card) போன்றதாகும். ஜீவநாடியைக் கேட்பதற்கே மனிதர்களுக்குப் புண்ணியமும் தகுதியும் இருக்க வேண்டும். இதில் உள்ள விதியைச் சாதாரணமாக நாமாக மாற்ற முடியாது. ஆனால், உண்மையான பக்தியுடனும் நல்ல எண்ணங்களுடனும் இறைவனை முழுமையாக வழிபட்டால், இறைவன் அந்தப் பதிவை அழித்துவிட்டு விதியை நன்மையாக மாற்றி எழுதுவார்.

இறைவன் மனிதனுக்குத் தேவையான அனைத்து திறமைகளையும் வழங்கியுள்ளார். நல்ல எண்ணங்களை வளர்த்து, சித்தர்கள் மற்றும் ஞானிகள் கூறும் மந்திரங்களை இடைவிடாமல் உச்சரிப்பதன் மூலம் நமது ஆன்மீக பேட்டரியை (Battery) குறையாமல் பாதுகாத்து, வாழ்க்கையில் நினைத்ததை எல்லாம் சாதித்து மாபெரும் வெற்றிகளை அடையலாம்.

சுவடி ஓதும் மைந்தன் :- (அய்யா,  இப்போ ஜீவநாடி படிக்கிறேன். )

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில். 

குருநாதர் :-  பின் அதாவது கலியுகத்தில், பின் அதாவது அனைத்தும் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது. இதனால் தலை நிமிர்த்த வேண்டும். பின் நிச்சயம் தன்னில் கூட, அவையும் கூட யாரால் முடியும் என்றால், மக்களாலே முடியும். 

குருநாதர் :- அதனால்தான் உண்மைகளை யாங்கள் சொல்ல வந்தோம் இங்கு . 

சுவடி ஓதும் மைந்தன்:- அய்யா  கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்றீங்களா? 

அடியவர் :- அதாவது அகத்திய மகரிஷி தான் வந்திருக்காரு. என்ன சொல்றாருன்னா, உயர்வு யாருக்கு முடியும்னு சொன்னா, மக்களால மட்டும்தான் முடியும். அதனாலதான் மக்களுக்கு இது எப்படி நம்ம உயர்றது, அப்படிங்கிற வழியை வழிமுறையை சொல்ல வந்திருக்காரு. 

===========================
#  நீங்கள் நிச்சயம் நினைத்தது  நடக்கும் ரகசியங்கள்…
===========================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட, பின் மக்களுக்கு எது என்று புரிய, பின் நன்கு புரியும்படியாக, பின் சொல்லிவிட்டாலும், சில ஆற்றல்களை யாங்கள் தந்து விட்டாலும், நிச்சயம் பின் அதை பயன்படுத்தி நீங்களும் முன்னேறுவீர்கள். மற்றவர்களும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வீர்கள். 

அடியவர் :- அப்பா என்ன சொல்றாருன்னு சொன்னா, மக்கள் கிட்ட நம்ம இந்த உண்மையை சொல்லிட்டா, எப்படி ஆற்றல் பெறுகிறது, அப்படின்னு இந்த விஷயத்தை சொன்னா, நீங்களும் அதை பயன்படுத்தி நாலு பேத்துக்கு சொல்லி, அவங்களும் அதை பயன்படுத்துவாங்க. அதனாலதான் இப்படி வந்து சொல்ல போறேன், அப்படின்னு சொல்றாரு. அப்பா.

குருநாதர் :-  பின் உங்களுக்கும் புண்ணியமாகும். நீங்கள் நிச்சயம் நினைத்ததும்  நடக்கும். 

குருநாதர் :- பின் அதேபோல் மற்றவர்களும், நீங்கள் அதாவது மற்றவர்களுக்கும், நீங்கள் சொல்லிக் கொடுத்தால், அதுவும் கூட அவர்களும் தெரிந்து, அவர்கள் பின் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். 

குருநாதர் :-  இதனால் புண்ணியம் பின் மேலோங்கும். நிச்சயம் இவ்வுலகம் பின் சமநிலை பெறும். 

அடியவர் :- அதாவது இந்த விஷயத்தை வந்து நீங்க செஞ்சாலும் புண்ணியம். அதே மாதிரி மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவங்க செஞ்சாலும் புண்ணியம். ஆகவே இதை மக்கள் செய்யும் பொழுது, இந்த புண்ணிய பலன் கூடி, இப்ப சமநிலை இல்லாமல் இருக்கிற இந்த பூலோகம் வந்து சமநிலை பெறும்னு சொல்றாரு. 

===========================
# எப்போது உங்களுக்கு வெற்றிகள் கிட்டும் ?
===========================

குருநாதர் :-  நலங்களாகவே இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது மூட நம்பிக்கையிலே ஒளிந்திருக்கின்றான் மனிதன். அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் இவ் மூட  நம்பிக்கையில்  பின் ஒளிந்திருப்பதால், நிச்சயம் தர்மம் என்னவென்றே, பின் தெரியாமல் போகும் மனிதனுக்கு 

அடியவர் :- மக்கள் வந்து இன்னைக்கு நிறைய மூடநம்பிக்கையில தான் இருக்குறாங்க. மூடநம்பிக்கையில இருக்கிறதுனால, அவங்களுக்கு எது தர்மம், அப்படிங்கறதே மறந்து போச்சு. 

குருநாதர் :-  அப்பனே, பின் இவ் மூடநம்பிக்கையும் மனிதன் தான் கற்றுக் கொடுத்தான். மக்கள் முன்னேறக்கூடாது என்று 

அடியவர் :- இந்த மூடநம்பிக்கை யார் சொல்லிக் கொடுத்தான்னா, மக்கள் தான் சொல்லிக் கொடுக்கிறாங்க. ஏன்னா, மத்தவன் முன்னேறக்கூடாதுங்கிறதுக்காக, இந்த மூடநம்பிக்கைகளை மக்கள் கிட்ட பரப்பிட்டாங்க. மக்களே பரப்பிட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன்:- ம்…. 

குருநாதர் :-  அப்பனே, இதனால் நிச்சயம் தன்னிலே கூட வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் பின் மாற்றங்களை ஏற்படுத்த யாங்கள் சொல்வோம். அதன்படி, அப்பனே, நடந்து கொண்டாலே போதுமானது அப்பா. வெற்றிகள் நிச்சயம். 

அடியவர் :- இனிவரும் எதிர்காலங்கள்ல என்ன செய்யணும், அப்படிங்கறத சித்தர்களே சொல்லுவாங்களாம். அதை அதன்படி நடந்தீங்கன்னா, உங்க வாழ்க்கையில என்னைக்குமே வெற்றிதான். வெற்றி நிச்சயம்னு சொல்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, இதனால் கலியுகத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவன் மனிதரிடத்தில் ஒப்படைத்து விட்டான். பின் ஆட்சி செய்து பாருங்கள் என்று. 

அடியவர் :- கலியுகத்தில் வந்து இறைவன் வந்து மனிதன் கிட்டயே கொடுத்துட்டாராம். இந்த அப்பா, நீ ஆட்சி செஞ்சு பாருன்னு சொல்லி. அதனாலதான் மக்களுடைய ஆட்சிதான் இப்ப நடந்து கொண்டிருக்கிறது. 

குருநாதர் :-  அப்பனே, ஆனால் சரியாக இல்லையப்பா. கலியுகத்தில், அப்பனே பின் மக்கள் ஆட்சி இதனால்தான். அப்பனே, நிச்சயம் இறைவன் பொறுத்து பார்ப்பான் என்பேன் அப்பனே. அனைத்தையும் பின் அழித்து விடுவான் என்பேன் அப்பனே. 

அடியவர் :- இப்ப இந்த கலியுகத்தில் வந்து மக்கள் ஆட்சி சரியே இல்லை. இந்த மக்கள் ஆட்சி சரியில்லாட்டி, இறைவன் என்ன செய்வாராம்? பொறுத்து பொறுத்து பார்த்துட்டு அழிச்சிருவார். 

குருநாதர் :-  அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏன் எதற்கு என்று பிறந்து விட்டீர்கள் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  இதனால், அப்பனே, பின் தெரிந்து கொண்டு, அப்பனே, உங்களை நீங்கள் வென்று, அப்பனே, மற்றவர்களும் வென்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நீண்டோடி வாழுங்கள் அப்பனே, துன்பம் இல்லாமல்.

அடியவர் :- இது என்னனே தெரியாமல் மக்கள் பிறந்துட்டாங்களாம். அதனால, இனியாவது இதை தெரிஞ்சு, இதன்படி நடந்து, மக்கள் வந்து நல்வழி வாழுங்கன்னு சொல்றாரு. 

===========================
# பொது நலத்தோடு நீங்கள் மனதில் நினைத்ததை, வேலொடு மலையில் எப்படி சாதித்துக் கொள்ளலாம் ?
===========================

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான் பல வகையான சித்தர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு, அப்பனே, எப்படி எப்படி என்று வந்து, அப்பனே, ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இங்கு அமர்ந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல பல ரகசியங்கள், அப்பனே.. 

குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், இங்கு ஆற்றல் அதிகம் அப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இங்கு செய்வது பெரும் உத்தமம் அப்பா.

அடியவர் :- அதாவது மக்களுக்கு வந்து ஆற்றல் உள்ள இடங்கள்ல தான் உட்கார்ந்து, அவங்களுடைய பிரார்த்தனைகளை செய்யணும்னு சொல்றாரு. இந்த இடத்துல வந்து அப்படி ஒரு ஆற்றல் இருக்காம். இந்த இடத்துல வந்து உட்கார்ந்தாலே போதும்னு சொல்றாரு. ஆகவே, இந்த இடத்துல வந்து உட்கார்ந்து, இப்ப நீங்க எல்லாம் இப்படி கேட்கிறதே, உங்களுக்கு ஆற்றலை கூட்டும்ங்கிறாரு. 

குருநாதர் :-  அப்பனே, இன்னும் எதை என்று அறிய , அப்பனே, பின் இங்கு வந்து வந்து பல அரசர்கள் வெற்றி கொண்டனர் என்பேன்  அப்பனே. ஆனால் காலப்போக்கில் அது மறைந்துவிட்டது என்பேன் அப்பனே.

அடியவர் :-  அந்த காலத்துல வந்து அரசர்கள் எல்லாம் வெற்றி வெற்றி பெற்றது இங்கதான் வருவாங்க. இங்க வந்து வழிபட்டு போனா வெற்றி பெற்றுருவாங்க. ஆனா அது வந்து மறைக்கப்பட்டுருச்சாம். 

குருநாதர் :-  அப்பனே, இங்குள்ள மூலிகைகள், அப்பனே, பின் எடுக்க வருவார்கள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், அப்பனே, அனைவரும் அமைத்து (அழைத்து), ரகசியமாக வாக்குகளை எதை என்று கூற பின் இவ்வாறுத்தான் நாட்டை இயக்க வேண்டும் என்றால், வேண்டும் என்று இங்கு பேசுவார்கள். அப்படியே அது நடந்துவிடும் என்பேன்  அப்பனே. 

அடியவர் :- இங்க வந்து ரகசிய மூலிகள் இருக்கு. அதை எடுக்க வருவாங்களாம். அது இல்லாம இங்க வந்து மறைமுகமா வந்து பேசிட்டு போவாங்களாம். இங்க வந்து என்ன பேசி வாக்கு கேட்டு போறாங்களோ, அதன்படியே நடந்துருமாம். அதனாலதான் இங்க வந்து வாக்கு கேட்டு அவங்க பல வெற்றிகளை பெற்றிருக்காங்க. 

===========================
# முருகப்பெருமானின் ஐந்து நாகங்கள்….
===========================

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும் சாதாரணமாக முருகன் இங்கு விடமாட்டான் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  பல பல உயிருள்ள வாகனங்கள் எல்லாம் வைத்திருக்கின்றான் என்பேன்  அப்பனே. தீய எண்ணத்தோடு வருபவர்களை பின் மிதித்துக் கொன்று விடும் என்பேன்  அப்பனே, சொல்லிவிட்டேன். 

அடியவர் :- இங்க வந்து சாதாரணமா எல்லாருமே வர இயலாதாம். இந்த வேலொடு  மலைக்கு நீங்க எல்லாம் வந்திருக்கீங்கன்னு சொன்னா, முருகன்ட்ட அருள் இருக்கிறதுனாலதான் வர்றீங்களாம். யாராச்சும் தீய எண்ணங்களோட வந்தா, அவர் சொல்றாரு, நாடியில, முருகப்பெருமான்  உயிருள்ள வாகனங்கள் வச்சிருக்காராம். அந்த வாகனங்களை அனுப்பி மிதிச்சு கொன்னுடுவார். அப்படின்னா இங்க வந்து, காட்டு விலங்குகள் நடமாடுது. யாரும் தீய எண்ணத்தோட வந்தா, அவங்களை வெட்டி அடிச்சிருவேன்னு சொல்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, காலங்கள் காலங்களாக, அப்பனே, மறைமுகமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஐந்து, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நாகங்களும் கூட, அப்பனே, முருகன் அருளால் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பேன்  அப்பனே. 

அடியவர் :- இங்க வந்து காலம் காலமாக நாகங்கள் கூட இங்க முருகன் அருளால, இந்த வனத்தை சுத்தி காவல்  காத்து, இந்த வனத்தை பாதுகாத்துட்டு வருதாம். 

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, பின் அவை தன் பார்த்தாலே, அப்பனே, அப்படி மூச்சை விட்டாலே, அப்பனே, பின் எவை என்று அறிய , அப்பனே, பின் ஆற்றல் அதிகமாகும் என்பேன்  அப்பனே. 

அடியவர் :- அந்த நாகங்களை நம்மள பார்த்தாலோ, அந்த நாகங்களிடம் இருந்து வரும்  மூச்சு சுவாசம் நம்ம மேல பட்டாலோ,  நம்மளுக்கு ஆற்றல் கூடுமாம். 

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும் சாதாரணமாக, அப்பனே, நிச்சயம் விடுவதில்லை என்பேன்  அப்பனே.  பின் நாகங்கள் ஐந்து வகையில் உள்ள நாகங்கள் என்பேன்  அப்பனே, மூச்சை. 

அடியவர் :- அதாவது இங்க இருக்கிற நாகங்களோட மூச்சை, அவ்வளவு சாதாரணமா நம்மளுக்கு பார்த்துக்க இயலாதாம். ஐந்து நாகங்கள் இருக்கும். அதுல மூச்சு வந்து லேஸ்ல படாதாம். 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் முருகன், அப்பனே பின் விடு என்றால், அப்பனே நிச்சயம் பின் அழகாக விடும். அது சுற்றியுள்ள, அப்பனே பின் 100, அப்பனே பின் மைல் எவை என்று கூட தொலைவில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட போகின்ற பொழுது, அனைத்தும் மாறும் என்பேன்  அப்பனே. 

அடியவர் :- அதாவது முருகன் சொன்னா மட்டும்தான் அது என்ன செய்யுமாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  பெருசா விடும், 

அடியவர் :- பெருசா விடுமாம். 100 மைல் தூரத்துக்கு அது விடக்கூடிய சக்தி இருக்குமாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  சக்தி இருக்குது வந்து.. 

அடியவர் :- ஆனா என்ன செய்யுமாம்? அது முருகன்ட்ட உத்தரவுக்காக பார்த்துக்கிட்டு இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன்:- சும்மா விடும், ஏதோ விடும். ஆனால் முருகன் வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டாருன்னா, விடு எல்லாம் நலமா இருக்கட்டும்னு சொல்லிட்டு…. இங்க விட்டாருன்னா 100 km சுற்றத்தில் .. ஐயா 100 மைல்னா எத்தனை கிலோமீட்டர்? 

அடியவர் 1 :-  சுமார் 150 km, 

சுவடி ஓதும் மைந்தன்:- 150 km எடுத்து போகுமாம். போகும்ன்றாரு வந்து.. 

குருநாதர் :-  ஆனாலும் பின் உங்கள் எண்ணங்கள் பொருத்தியே உள்ளது . அதுவும் கூட 

அடியவர் :-  இது எல்லாம் உங்க எண்ணங்கள் தான் காரணம். எண்ணங்கள் நல்லா இருந்தா அந்த ஆற்றல் நம்மளுக்கு கிடைக்கும். எண்ணங்கள் பிழையா இருந்தா ஆற்றல் கிடைக்காது. 

குருநாதர் :-  எது என்று புரிய ஆனாலும் ஒன்றும் தெரியாமலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, பின் முருகன் ஏது என்று அறிய. இதனால் நலமாகவே இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அவை தெரிந்து கொள்ள. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பல அரசர்கள் பின் மறைமுகமாக இங்கு வந்து தியானங்கள் செய்து செய்து வெற்றி கொண்டனர். 

===========================
# பல அரசர்கள், ஞானிகள்  கையாண்ட வேலொடு மலை ரகசியங்கள்…..
===========================


அடியவர் :-  இந்த ரகசியம் தெரிஞ்சதுனாலதான் அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்கள் என்ன செஞ்சாங்களாம்?  இங்க வந்து மறைமுகமா வந்து தியானம் இருந்து அந்த ஆற்றலை பெற்று, போயிட்டு அவங்க என்ன செஞ்சாங்களாம்? வெற்றி கொண்டு வெற்றி கொண்டு அரசாட்சி செஞ்சாங்க. 

குருநாதர் :-  ஆனாலும் காலப்போக்கில் நிச்சயம் தன்னில் கூட அவர்கள் யாரிடம் சொல்லவில்லை. இதனால் அதன் ரகசியம் மறைக்கப்பட்டது. 

அடியவர் :-  ஆனா அவங்க இந்த ரகசியத்தை வெளியில யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டாங்களாம். அதனாலதான் காலப்போக்குல இந்த ரகசியமும் யாருக்குமே தெரியாம போயிடுது. 

குருநாதர் :-  அறிந்தும்  கூட மறைமுகமாக எது என்று கூற தனியாக நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் வாழுகின்ற போது, ராமனும் இங்கு மறைந்து வாழ்ந்தான். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஓ …. ராமனும்… 

சுவடி ஓதும் மைந்தன்:- ராமனும் இங்க சில நேரத்துல வந்து.. வந்து.. ஃபர்ஸ்ட்ல வந்தார் இல்ல? மறைந்து யாருக்கும் தெரியாம இங்க வந்து பூஜை பண்ணி இருக்கார். 

அடியவர் :-  ராமரும் கூட இங்க வந்து மறைமுகமா இருந்து பூஜை பண்ண இடமாம். அவ்வளவு புனிதமான இடம். 

குருநாதர் :-  அறிந்து கூட இராவணனும் சீதாவும் எதை என்று புரிய.

அடியவர் :- இராவணனும் வந்திருக்காரு. சீதையும் வந்திருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே இங்க வந்திருக்காரு. 

குருநாதர் :-  எவை என்று புரிய இன்னும் இன்னும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைத்து பின் அதாவது நிச்சயம் பின் துறவிகளும் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஆற்றலை பெருக்கிக் கொண்டனர். 

அடியவர் :-  அவங்க மட்டும் இல்ல பல துறவிகள் எல்லாருமே இங்க வந்து, தவம் செஞ்சு, ஆற்றலை பெருக்கிட்டு தான் போயிருக்காங்க. 

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய இதனால் பின் புத்தனும் எவை என்று அறிய பின் பல ஆற்றல்களை பெருக்கிக் கொண்டான். இங்கு வந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து. 

அடியவர் :-  புத்தர் கூட இங்க வந்து ஆற்றலை பெருக்கிட்டு போனவர் தானாம். 

குருநாதர் :-  இதனால் நல்விதமாக நிச்சயம் பின், அதாவது பின் இயேசுவும் நிச்சயம் பின், நபிகள் நாயகமும்,  இன்னும் பல பல துறவிமார்களும் கூட. 

அடியவர் :- அதாவது இயேசு, நபிகள் நாயகம் அப்படிங்கிற எல்லா துறவிகளும், எல்லா சித்தர்களும், என்ன செஞ்சிருக்காங்க?  இந்த மலைக்கு வராம இல்லைங்க… எல்லாம் இங்க.. 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாம் வந்திருக்காங்க. 

குருநாதர் :-  ஏனென்றால் உங்களுக்கு ஒன்றை யான் சொல்கின்றேன். நிச்சயம் நீங்கள் பின் பக்தியாக இருந்தால், இங்கு ஆற்றல் இருக்கின்றது என்பது நிச்சயம் உங்களுக்கே தெரிந்துவிடும். பின் நிச்சயம் அதை நோக்கி வருவீர்கள்  நீங்களே… 

அடியவர் :- இங்க ஆற்றல் இருக்கா இல்லையான்னு உங்ககிட்ட பக்தி இருந்தா தெரியும்ங்கிறாரு. உங்கள் உண்மையான பக்தியோடு நீங்க இங்க வந்தீங்கன்னா 

சுவடி ஓதும் மைந்தன்:- ம்….

அடியவர் :- நிச்சயமா உங்க பிரார்த்தனை நிறைவேறி… 

சுவடி ஓதும் மைந்தன்:- ம்….

அடியவர் :- இங்க ஆற்றல் இருக்குன்னு அப்படின்னு திரும்ப திரும்ப… 

சுவடி ஓதும் மைந்தன்:-  நீங்க உலகத்தில் (எங்கு, எந்த மூலையில்  இருந்தாலும்)  இருந்தாலும் சரி…. அங்க வந்து நீங்க உண்மையான பக்தி இருந்துச்சுன்னா ஓ ரைட்ரா…. எங்கேயோ ஒரு மலை இருக்குதுடா. அங்க போனா நமக்கு வந்து, பெரிய ஆற்றல் கிடைக்க போகுதுன்னு சொல்லிட்டு? 

அடியவர் :- வருவாங்க இங்க… 

சுவடி ஓதும் மைந்தன்:-  வருவாங்க இங்க தேடி. அப்ப உங்களுக்கெல்லாம் சுலபமா கிடைச்சிருக்குது ஒன்று. 

குருநாதர் :-  அப்பனே அனைத்து யுகத்திலும் கூட இறைவனை காண்பது கடினம்தான். பல ஹோமங்களும் பல வழிகளிலும் கூட எதை என்று கூட தேடி அலைய வேண்டும். ஆனால் கலியுகத்தில் சுலபமாக இறைவனை காண பின் வழிகள் யாங்கள் சொல்வோம். 

அடியவர் :-  அதாவது இறைவனை வந்து எந்த காலத்திலுமே தேடி கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்கிறாரு. கலியுகத்துல ரொம்பவும் கஷ்டம். ஆனாலும் அகத்தியர் வந்து எளிதான வழிகளை சொல்றேன். நீங்க இதை பின்பற்றினீங்கன்னா, இறைவனை நீங்க கண்டுக்கலாம் அப்படிங்கிறாரு. 

சுவடி ஓதும் மைந்தன்:-   ஆமா கண்டுக்கலாம். அதாவது ரொம்ப ஐயா ரொம்ப யுகத்துல வந்து இறைவனை காண்றது வந்து ரொம்ப கடினம். கஷ்டப்பட்டு தேடி வந்தது அப்படின்னா எங்க இருக்குதா இறைவனை தேடணும். ஆனா கலியுகத்துல உங்களுக்கு சுலபமான வழி எல்லாம் நாங்க சொல்லிக் கொடுக்கிறோம்பா. 

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே பின் மனிதன் அப்பனே பின் பின்பற்றுவானா என்று அப்பனே எவை என்று சொல்ல. ஏனென்றால் அப்பனே எதை என்று கூறப்பின் அறிந்தும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனால் மனிதன் பின்பற்றுவானா என்பது? 

அடியவர் 2 :- சந்தேகம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  சந்தேகம் தான். 

குருநாதர் :-  ஏனென்றால் பின் நிச்சயம் பின் அதாவது பின் மனிதர்கள் மனிதர்களை மாயைச் சொல்லி அதாவது மாயை கற்பித்து விட்டார்கள். அதிலிருந்து விடுபடுவது கடினம் தானாப்பா. 

அடியவர் :- மனிதர்களுக்கு மாயையை கற்பித்து சொல்லிக் கொடுத்துட்டானாம். எல்லாம் மாயையிலே தான் இருக்கிறான். அதனால அதைவிட்டு வந்து… 

சுவடி ஓதும் மைந்தன்:-  அதுதான் உண்மைன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாங்க. மனுஷனுக்கு மாயையை சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. 

குருநாதர் :-  ஏனென்றால் மனிதன் மனிதன் பின் எதை என்று அறிய கெடுப்பது தான் பார்ப்பான் கலியுகத்தில். முன்னேற்ற எவை என்று புரிய பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்லப் போவதில்லை. இதுதான் மனிதனுடைய தாழ்வான புத்தி. 

( இவ் வேளையில், சத்திய வாக்கு உரைக்கப்படும் போது ,  அங்கு ஆலய பூசை  மணி ஒலித்தது ) 

குருநாதர் :-  அதனால்தான் உலகம் அழிந்து கொண்டிருக்கின்றது. 

அடியவர் :- அதாவது மனிதன் வந்து எப்பவுமே நல்வழியில் போறது இல்லைங்க. இந்த மாயை வழியில போறதுனால தான், மனிதனுக்கு எதுவுமே புரியாம, இந்த உலகமும் என்ன செய்றான் அழிஞ்சு கொண்டு போயிட்டு இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆமா.
 
===========================
# ரம்பையின் பிறப்புதான், பின் கண்ணகி தேவி. 
===========================


குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் எவை என்று புரிய நல்விதமாகவே அறிந்தும் கூட எது என்று புரிய இதனால் எதை எதை  என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட ரம்பை பற்றி இப்பொழுது யான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன்:- ரம்பை அவங்க யாருக்கெல்லாம் தெரியுங்களா? கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா?

அடியவர் :- ரம்பையும் தேவலோகத்துல,  தேவேந்திரனுடைய நடன சபையில் இருந்த, நடனம் மங்கை ரம்பை அவங்களுடைய கதை. ஏதோ இந்த மாதிரி சம்பந்தப்பட்டிருக்கு. அது நாடியில வரும்… 

குருநாதர் :-  ரம்பையின் நிச்சயம் தன்னில் பிறப்புதான், பின் கண்ணகி. 

அடியவர் :- ஓ ரம்பை தான் கண்ணகியா பிறப்பெடுத்து வராங்க. 

சுவடி ஓதும் மைந்தன்:-  பிறப்பெடுத்து வராங்க ஐயா. புரியுதுங்களா ஐயா. டவுட் இருந்தா கேட்கலாம். 

அடியவர் :- புரியுது புரியுது புரியுது. 

சுவடி ஓதும் மைந்தன்:- ஓகேங்களா. ஒரு ஜென்மத்து மேல தேவலோகத்தில் இருக்கிறவங்க ரம்பை வந்து கண்ணகியா பிறந்து பூமிக்கு வராங்க. 

===========================
#  ஆலய விபரங்கள் ……
===========================


#வேலோடு #மலை #முருகன் #ஆலயம் - #மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுக்குப்பொத்தானை  எனும் கிராமத்தில் அமைந்துள்ள வேலோடு மலை எனும் பாறைக்குன்றில் அமைந்துள்ள ஆலயமே வேலோடுமலை முருகன் ஆலயம் ஆகும்

#ஆலயத்தின் #அமைவிடம்:
மட்டக்களப்பின் சித்தாண்டிக் கிராமத்திலிருந்து இடப்பெயர்ச்சித் தூரம் 7 கிலோமீற்றர் அல்லது செல்தடத் தூரம் 10 கிலோமீற்றரில் இந்த ஆலயம் அமைந்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மலைகள், குன்றுகள் மற்றும் பாறைக்குன்றுகள் எனப் பாறைகளுடன் கூடிய தரைத்தோற்றமும் பரந்து காணப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மலைக்குன்றுகளில் முக்கியமான நான்கு ஆலயங்கள் அமைந்து காணப்படுகின்றன. 

#தாந்தாமலை #முருகன்ஆலயம் , #குடும்பிமலை #குமரன் #ஆலயம் , #குசலானமலை #குமரன் #ஆலயம் மற்றும் இந்த #வேலோடு #மலை #முருகன் ஆலயம் ஆகிய நான்கும் அவையாகும்.

அந்தவகையில் சித்தாண்டி. இலுக்குப்பொத்தானை கிராமத்தில் சுமார் 150அடி உயரத்தில் வேலோடு மலை முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்திற்கு  அடைவதற்கு சித்தாண்டி அல்லது மாவடிவேம்பு அல்லது வந்தாறுமூலை ஆகிய கிராமங்களூடாக வருகை தருவது இலகுவானதாகும். பொதுவாக இக்கிராமங்களிலிருந்து பாதைவழியான செல்தடத் தூரமானது 10 கிலோமீற்றர்கள் வரையில் காணப்படுகின்றது.   இக்கிராமங்களிலிருந்து முதலில் #சந்தணமடு ஆற்றுப் பிரதேசத்தை அடையவேண்டும்.

அங்கிருந்து  வேரம் திடல் சந்தியை அடையவேண்டும். அச்சந்தியிலிருந்து, இடப்பக்கமாக இலுக்குப்பொத்தானை எனும் கிரமத்தை நோக்கி செல்ல வேண்டும். இலுக்குப்பொத்தானை யில் பாடசாலை அமைந்துள்ள இடத்திற்கு சற்றுமுன்னால் வலப்பக்கமாக  குளத்திற்கு செல்வதற்கான  பாதை வரும். அப்பாதை வழியே சென்று குளக்கட்டிற்கு இடையில் இருந்து இடது பக்கமாக திரும்பிசென்று யானைவேலியின் நுழைவு எல்லையை அடைய வேண்டும். அங்கிருந்து சுமார் 500 மீற்றர்கள் காட்டுப் பாதைவழியே செல்கின்றபோது #வேலோடு #மலை முருகன் ஆலயம் காட்சியளிக்கும்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் தொடரும் …..) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் .....தொடரும்!

No comments:

Post a Comment