​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 10 April 2026

சித்தன் அருள் - 2183 - அன்புடன் அகத்தியர் - ஆதி இராமாயண காவியம் - பகுதி 8



அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 8

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 

அப்பனே, நலன்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, இராவணனும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, எது என்று அறிய என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் மக்கள் நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, பின் அதாவது சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட சீதை பற்றியும் கூட, அதாவது நிச்சயம் ராமனைப் பற்றியும் கூட சேர்த்து உரைத்துக் கொண்டே வந்தால் எப்படி நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே. 

அதனால்தான் அப்பனே, இராமனின் காவியம் கூட இப்பொழுது நான் சொல்லப் போகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன அகத்தியர்  சொல்றாருன்னா, ஒரே மாதிரி… இராவணனை மட்டும்,  அவரும் இராவணனே சொல்றாரு. என்னை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தீங்கன்னா, ஏன்னா என்னை (பொய்யாக) சித்தரிச்சாங்க வந்து இப்படித்தான் சொல்லிட்டு….அதனால வந்து சந்தேகம் வந்துரும் மக்களுக்கு வந்து.

அடியவர் :- ஏற்றுக்கொள்ள மாட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து சீதையை எடுத்துட்டு வாங்க, ராமனும் எடுத்துட்டு வந்தீங்கன்னா கரெக்டா, அது உண்மை நடந்தது என்னன்னு சொல்லிட்டு தெரியும். 

குருநாதர் :- உண்மையை நிச்சயம் தன்னில் எது என்று புரிந்தால் மட்டுமே மனிதன் பின் உண்மையை யோசிப்பான். இதனால்தான் பின் தெய்வங்களின் பின் எவ்வாறு என்பதைக் கூட லீலைகள் மனிதனுக்கு தெரிவதில்லை. அதனால்தான் எப்பொழுது பின் அதாவது (இராமாயண காவியத்தை) பொய்யாக்கினானோ, அப்பொழுதே மனிதன் பொய்யை பேசிக்கொண்டே, ஏமாற்றிக் கொண்டே சுற்றிக் கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்ப இது வந்து சில விஷயங்கள் எல்லாம் இறைவனோட இராமாயண காவியத்தை  வந்து பொய்யாக்கினாங்களோ, அப்ப என்ன ஆச்சு மனிதர்கள் வந்து?.

அடியவர் :-  (மனிதர்கள்) பொய் ஆயிட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- பொய் ஆயிட்டாங்க வந்து. அப்ப பொய் சொல்லி தான் சுத்திட்டு இருப்பாங்க வந்து.

குருநாதர் :- எதை எவை என்று பொறுத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அனைத்தும் விட்டுக்கொடுத்துப் போவன் நிச்சயம் தன்னில் கூட இராவணேஸ்வரனே எதை என்று புரிய. 

இதனால் பின் ராமனும் பின் வல்லமை படைத்தவன். இவ்வுலகத்தை காக்க வந்தவன். அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கூட பின் அவ்வளவு சக்திகள் பின் இராவணனுக்கும் எதை என்று கூட பின் ராமனுக்கும். பின் நிச்சயம் சீதைக்கும் கூட. 

இதனால் பின் ஏன் எதற்கு இத்தேசத்தை பின் வந்தடைந்தார்கள் என்பவையெல்லாம் ஏற்கனவே உரைத்திட்டேன். 

===========================
#  ஸ்ரீ ராமரின் ரகசியங்கள் ….
===========================

குருநாதர் :-  மீண்டும் நிச்சயம் தன்னில் கூட எதற்காகவும் ஏது என்று புரிய நிச்சயம் பின் ராமனின் வரலாற்றை கூட எடுத்துரைக்கப் போகின்றேன். 

குருநாதர் :- ஏனென்றால் பின் ராமன் பின் அனைத்தும் கூட அதாவது தர்மத்தை நிலைநாட்ட வந்தவன். பின் அனைவருக்கும் ஏது என்று அறிய பின் அனைத்தும் நல்லதே செய்ய வந்தவன். ஆனாலும் ஏன் இப்படி நடந்துவிட்டது தர்மத்தை காத்தவனுக்கு ஏன் இவ்வளவு பின் சோதனைகள் என்பதை எல்லாம் இப்பொழுது தெளிவுபடுத்துகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ராமரும்?

அடியவர் :- நல்லவர்தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லவர்தான். தர்மத்தை காக்க வந்தவர்தான். ஏன் இந்த?

அடியவர் :- சோகம்.

சுவடி ஓதும் மைந்தன் :- சோகம். ஏன் இந்த… இது கஷ்டங்கள்னு சொல்லிட்டு வந்து… இப்ப நான் சொல்லப்போறேன்றாரு. 

குருநாதர் :- எதை எவை என்று புரிய இராவணனுக்கு எதை என்று அறிய. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பிறவிகளை நிச்சயம் தன்னில் கூட முடித்துக் கொள்ளும் அளவிற்கு இங்கு தீர்த்தங்கள் உருவாக்கினான் பின் அதாவது இராவணனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் வந்து ஏன் பலம் பெற்றவர்னா……. இங்க சில தீர்த்தங்கள் எல்லாம் இருக்குதாம். அந்த தீர்த்தங்கள்ல குளிச்சாவே,  பிறவி இல்லாமல் போயிடும்ன்றாரு. 

குருநாதர் :- அறிந்தும் அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட எது என்று புரிய அதாவது பின். 

ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றோம் எதை என்று அறிய?. 

தெரியாத ஆன்மாக்களுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட?. 

ஆனாலும் நிச்சயம் பின் ஒரு நீர் நிலையை இங்கு உருவாக்கினான். அங்கு நிச்சயம் பின் (முன்னோர்கள்) அவரவர் பெயரைச் சொல்லி நிச்சயம் தன்னில் எதை என்று கூட அறிந்து கூட பின் அதாவது அழைத்தால் அவர்கள் நிச்சயம் உடம்போடு வந்து விடுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அடுத்து இராவணன் என்ன பண்ணிருக்காரு?

அடியவர் :-  இறந்து போன ஆத்மாக்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- இறந்து போன ஆத்மாக்களுக்கும் தட்டி எழுப்புவதற்கு….ஒரு இது…. வந்து இங்க இருக்குது வந்து. ஐயா புரியுதுங்களா?

அடியவர் :-  இங்க இருக்கா ஐயா ?  (தம்பலகாமம் குளம்) இதுவா ஐயா ? வேற எதுவும் இருக்குதா ஐயா ?

சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல இல்ல. (ரகசியம்) அதை சொல்ல மாட்டார் இங்க. 

குருநாதர் :- எது என்று புரிய அப்பனே இன்னும் ரகசியமாகத்தான் அப்பனே. இதையும் அப்பனே பின் மனிதன் எது என்று அப்பனே பின் தவறான வழியில் அப்பனே. அதனால்தான் சில ரகசியங்கள் மறைக்க வேண்டியதாக உள்ளது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் (நீர் நிலை) இதையும் வந்து என்ன பண்ணிட்டு வரார்?  மறைக்க வேண்டும். அப்ப என்ன பண்ணாராம்? அந்த நீர் நிலை அதுல நினைச்சா…..போதும் … சில எல்லாம் இருக்குதாம் வந்து.

அடியவர் :-   (முன்னோர்கள்) உடம்போடே வந்துருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படியே உடம்போடே வந்துருவாங்களாம் வந்து.

அடியவர் :-   இறந்து போனாங்க எல்லாம் .

===========================
#  ஸ்ரீ ராமபிரான் - கேது பகவானுடைய அவதாரம். 
===========================

குருநாதர் :- எதை என்று புரிய இராமனின்  பின் நிச்சயம் தன்னில் முன்னோர்களுக்கு முன்னோர்கள் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் ராமன் அவதாரம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கேது பகவானுடைய அவதாரம்.

சுவடி ஓதும் மைந்தன் :- ராமனுடைய அவதாரம், கேது பகவானோட அவதாரம்.  கேது என்பவர் யாரு?

அடியவர் :-  ஞானக்காரர்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- ஞானக்காரர்கள். 

குருநாதர் :- அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் அதாவது ராமனின் (முன்னோர்கள்)  நிச்சயம் தன்னில் கூட நல்லோர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  பின் அதாவது பின் நிச்சயம் தன்னில் எவை என்று அறிய பின் புண்ணிய நதியை  பின் அதாவது தெரிந்து கொண்டான் நிச்சயம் தன்னில் கூட. இங்குதான் இருக்கின்றது என்று. இதனால் படையெடுத்தான் ராமனும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முன்னோர்கள் எல்லாம் தட்டி எழுப்பணும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா இது வந்து? 

சுவடி ஓதும் மைந்தன் :- முன்னோர்கள் எல்லாம் தட்டி எழுப்பணும். அப்ப இலங்கை இங்க வந்து, முன்னோர்கள்  பெயரைச் சொல்லி வேண்டினால் என்ன ஆகும்?  

அடியவர் :-  உயிரோட வந்துருவாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  வந்துருவாங்க. 

===========================
#  இராமேஸ்வரம் , தனுஷ்கோடி, இலங்கை — முன்னோர்களை ஆன்மாவை  உடம்போடு  மீண்டும் வர வைக்கும் ரகசியங்கள்
===========================

குருநாதர் :- அதனால் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

அதனால்தான் தனுஷ்கோடியிலிருந்து, அப்பனே ராமேஸ்வரத்திலிருந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதன் வழியே அப்பனே (இலங்கை) இங்கு எதை என்று கூற பின் இதன் வழியே, இன்னும் கூட, அப்பனே (முறையான ரகசிய மந்திரம் மூலம் தர்ப்பணம்) கொடுத்தால், பின் நிச்சயம் மனிதன் எவை என்று, அப்பனே பின் அதாவது, பின் ஆன்மா அப்பனே, உயிரோடு வந்துவிடும் என்பேன் அப்பனே. அவ்வளவு சக்திகள் இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ராமேஸ்வரத்தில் தொடங்கி…..

அடியவர் :- தனுஷ்கோடி.

சுவடி ஓதும் மைந்தன் :-  தனுஷ்கோடி. 

குருநாதர் :- பின் அங்கிருந்து அழைத்துக் கொண்டே வந்தால் நிச்சயம் பின் எதை என்று புரிய பின் இங்கும் எவை என்று கூற பின் இன்னும் அது மறைமுகமாகவே மனிதனுக்கு தெரியாமலே எவை என்று புரிய பின் எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் அப்படியே மனுஷனுக்கு…..

அடியவர் :-  தெரியாம வச்சிருக்காங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்படி இல்ல அய்யா.  அங்கிருந்து இங்க வந்து ஏன் வந்து… 

ஐயா இது என்ன சொல்றாருன்னா,  ஏன் வந்து ராமேஸ்வரத்திலிருந்து அதிகமா முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்குறாங்க? இங்க வரணும் என்றதுக்காக.

சுவடி ஓதும் மைந்தன் :-   இங்க வரணும்னு. அங்கிருந்து தொடங்கி…. அங்க தொடங்குனாங்கன்னா…… (முன்னோர்கள்) அவங்களுக்கு கேட்கும். ராமேஸ்வரத்திலிருந்து கேட்கும்.  

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்படியே இங்க வந்து…. இங்க பக்கத்துல எதோ இருக்குது. பின்னாடி இன்னும் இந்த கடல்ல தான்…. அது ஏதோ எங்கயோ இருக்குது வந்து.

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த இடத்துல,  அவங்கள கூப்பிட்டோம்னா அவங்க என்ன ஆகுமாம் வந்து?

அடியவர் :-  உயிரோட வந்துருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-   உயிரோட வந்துருவாங்க.

அடியவர் :-  எவ்வளவு பெரிய ரகசியம் அய்யா சொல்லி இருக்காங்க இங்க !!!!!.

குருநாதர் :- அப்பனே இராவணனின்   பரம்பரை இருந்தவர்கள் கூட இதை செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் அவனை சாகடித்து விட்டார்கள். அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எவை என்று ஒரு 200 பின் ஆண்டுகளுக்கு முன்பே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த இராவணேஸ்வரர் பரம்பரையில ஒருத்தருக்கு இந்த விஷயம் எல்லாம்  தெரிஞ்சுச்சு. இங்க வந்து…. இதை வந்து…. உயிர்ப்பிக்கலாம்னு தெரிஞ்சுச்சு.  200 ஆண்டுகளுக்கு முன்பே தெரிஞ்சுச்சாம். ஆனால் அவரை  என்ன பண்ணிட்டாங்களாம்?.

அடியவர் :- கொன்னுட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- கொன்னுட்டாங்க வந்து. 

குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய, இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.  பின் அனைவருக்கும் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று தன்னிடம் இருக்கும் நிச்சயம் தன்னில் எத்தனையோ.  பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவன் ஏது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

===========================
#  கேது பகவான் ரகசியங்கள்
===========================

குருநாதர் :- இதனால் அப்பனே பின் அதாவது பின் கேது என்பவனே பின் ஆன்மாக்களின் பின் எவை என்று அறிய எதை என்று புரிய. பின் அதாவது பின் உணர்வதற்கும் ஏது என்று அறிய பிணைப்புகளே  கேது என்பவன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேது என்பவர் என்ன தெரியுங்களா?.

அடியவர் :-  ஆன்மாக்களை இணைக்கிறது.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆன்மாக்களை வந்து… 

அடியவர் 1 :-  இணைக்கிறது.

சுவடி ஓதும் மைந்தன் :-  இணைக்கிறது ஆன்மாக்களின் பிணைப்பு. கேது என்பவர் வந்து ஃபுல்லா வந்து ஆன்மாக்கள் தான்.

அடியவர் :-  ஆன்மாவோட இது ஒரு அம்சம்தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆன்மாக்களோட இதுதான் வந்து. 

===========================
#  ஸ்ரீ ராம அவதாரம்  = கேது பகவான் அவதாரம் 
===========================

குருநாதர் :- அதனால்தான் அப்பனே பின் (ராம) அவதாரம் எதை என்று அறிய, அப்பனே கேது அவதாரம் என்பதையும் கூட அப்பனே யான் இங்கு சொல்வேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, ராம அவதாரம் என்பது வந்து என்ன?

அடியவர் :-  கேதுவோட அவதாரம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கேதுவோட அவதாரம்.

அடியவர் 1 :- அவதாரம் தான்.

அடியவர் :-  ரெண்டும் ஒன்றுதான் மாதிரி சொல்றாங்க.

அடியவர் 1 :-  இப்ப ஒரு சந்தேகம் கேட்கலாமா. இப்ப ராம அவதாரம் தசாவதாரம் விஷ்ணுவோட அவதாரம்னு சொல்றாங்க. அப்ப எப்படி ராம அவதாரம் அது கேதுவோட அவதாரம்னு சொல்றாங்க?. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் கேது என்பவன் யார் அப்பனே?  நிச்சயம் தன்னில் எதை என்று புரிய?  அப்பனே எவை என்று அறிய. அவனும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று நீயே நினைத்துக்கொள் அப்பனே.

அடியவர் 1 :- விஷ்ணுவோட அவதாரம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (கேது பகவான்) அவரும் இறைவன்தான்.

அடியவர்  :- ஐயா அதுக்கு உருவம் இல்லைன்னு சொல்லி இருந்தாரு. கீரிமலையில் சொன்னாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  ம்… 

அடியவர்  :- கேது எல்லாம் ஒன்றுதான் ( இரண்டும் ஒன்றே).


குருநாதர் :- அப்பனே இதை நீ சிந்தித்தாயா  என்ன அப்பனே?  எத்தனை பிறவிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட கேதுவானவன் அப்பனே பின் காட்டவே,  அப்பனே நிச்சயம் தன்னில் உலகத்திற்கு அப்பனே பின் ராமன் அப்பனே நிச்சயம்,  ராமன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே.  பின் இதைத்தான் யான் சொன்னேன் அப்பனே 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப  இது என்ன சொல்றாருன்னா…. கேது என்று ஒன்னு இருக்குது.  இதை காட்டவே ( ஸ்ரீ ராம அவதாரம்)....  மக்கள் மீண்டும் நல்வாழ்வை வாழலாம்,  இதெல்லாம் வந்து… கொடுத்தா.. இதெல்லாம் வந்து இது பண்ணலாம்… வந்து மீண்டும் வந்து எழுப்பலாம் உயிர். மனிதன் வந்து போனதை திருப்பியும் உயிர் எழுப்பலாம். கேது பகவானை முன்னிறுத்துவதற்காகவே (இவ் ஸ்ரீ ராம அவதாரம்)…… ஐயா புரியுதுங்களா?.

அடியவர்  :- புரியுது அய்யா.

குருநாதர் :- அப்பனே ஏனென்றால் இன்னும் நீ சொன்னாய் அல்லவா அப்பனே இன்னும் அவதாரங்கள் எடுக்க வேண்டும் எதை என்று புரிய. 

குருநாதர் :- அப்பனே பின் இத்துடன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் அங்கு வந்து குளித்துவிட்டால் அனைத்தும் எவை என்று கூற அப்பனே பின் முடிந்துவிடும் அப்பனே.  

குருநாதர் :- பின் எவ்வாறு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட காப்பது உலகத்தை நீயே சொல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட?  

குருநாதர் :- ஏனென்றால் இன்னும் அவதாரங்கள் எடுக்க வேண்டும் அல்லவா? .

அடியவர்  :-  அங்க குளித்துவிட்டால் , பிறவி முடிஞ்சிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அங்க குளித்துவிட்டால் , (பிறவி) எக்ஸிட் ஆயிடுச்சுன்னா….

அடியவர்  1 :-  திருப்பி வர இயலாது.

குருநாதர் :- அதனால்தான் அப்பனே இராவணன் மிக நல்லவன் எது என்று அறிய. 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் பின் ராமனும் பிறவி எடுக்க வேண்டும். தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்கு இணங்க,  (இராவணன்) இங்கு விடவில்லையப்பா. அவ் நிச்சயம் தன்னில் கூட நீர் நிலையில் குளிக்க அப்பனே (இராவணன்) அனுமதிக்கவே இல்லையப்பா. இதனால்தான் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே.


அடியவர்   :- ஸ்ரீ ராமர் குளிச்சிருந்தா அதோட ஒரு பிறவியும் முடிஞ்சிருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :- முடிஞ்சிருக்கும்.  அப்ப மீண்டும் அவதாரம் எடுக்க முடியாது. அப்ப, என்ன பண்ணாரு? இதை முடிஞ்சிட்டா இவர் பிறவி முடிந்து போய்விடும்  அவ்வளவுதான்…. வந்து இதோட அவதாரமும் முடிந்துவிடும்.  ஐயா புரியுதுங்களா ஐயா?  

அடியவர்   :-  புரியது 

அடியவர்  1:- புரியது 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப வந்து திருப்பி வந்து.. என்ன பண்ண மாட்டாங்க வந்து?.

அடியவர்  1:-  பிறவி இல்லை.

சுவடி ஓதும் மைந்தன் :-  பிறவி இல்லை.

அடியவர்  1:-  நல்லது செய்ய முடியாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நல்லது செய்ய முடியாது. அப்ப என்ன பண்ணாங்க?.

அடியவர்  1:-  தடுத்துட்டாரு. வரக்கூடாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  வரக்கூடாதுன்னு சொல்லிட்டு தடுக்குறதுக்காகத்தான் இந்த வந்து… 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ஐயா சந்தேகம் கேளுங்க ஐயா டக்குனு. எனக்கும் ஒரு சில நேரத்துல சந்தேகம் வந்திருது.  இப்ப ஓகே.

அடியவர்  :- சந்தேகம்  கேட்டேன். அவர் சொல்லிட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இப்ப (இராவணேஸ்வரர்) என்ன பண்ணாருன்னா…. வந்து ஸ்ரீ ராமன் அவரை  விடவில்லை இவர் (இராவணேஸ்வரர்) வந்து.  ஆனா இவர் குளிச்சா… அது வந்து.

அடியவர்  1 :-  (ஸ்ரீ ராமர்) குளிக்கிறதுக்காக வேற ட்ரை பண்றங்க.  ஆனா இவர் (இராவணேஸ்வரர்) தடுத்துட்டாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  ம் 

===========================
# முன்னோர்களுடன் பேசும் ரகசியம். 
===========================

குருநாதர் :- அப்பனே இதையும் இப்படியே நினைத்துக் கொள்ளலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அப்பனே எவை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட இங்கு நிச்சயம் பின் குளித்தால் முன்னோர்களிடமும் பேசிக்கொண்டே இருக்கலாம் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க வந்து குளிச்சா முன்னோர்கள் கிட்ட பேசலாம். நம்மளுக்கு (தொடர்பு) கனெக்ட் ஆயிட்டு வருமா. 

அடியவர்  :- இதுலயா?  

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுல… இதுல.. இதுல..   ( தம்பலகாமம் குளம் )

அடியவர்  :- இதுலயா? 

அடியவர்  1 :- இந்த இடத்துலயா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த இடத்துல…  ( தம்பலகாமம் குளம் )

===========================
Tambalagam Bay - கூகிள் மேப் லிங்க் 
https://maps.app.goo.gl/LP67ikM3fgkVTi9C7
===========================

குருநாதர் :- இதனால்தான் எவை என்று கூற, இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.  ராவணன் எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட பின் தன் அன்னையிடம் பின் நிச்சயம் பேச இதை உருவாக்கினான் அப்பனே எதை என்று புரிய.

( அடியவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் ) 

அடியவர்  :- அவர் அன்னையுடன்  பேச….. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அவங்களுடைய அம்மா (கைலாயத்தில்) அப்படியே இருக்குறாங்க… அப்ப.

அடியவர்  1:-  (இங்க வந்து) பேசிட்டு இருக்காங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப இங்க வந்து குளிச்சிட்டு போனா,  கனெக்டிவிட்டி ஆயிடும் வந்து. அப்படியே கனெக்டிவிட்டி ஆயிடும்ன்றாரு வந்து. பேசலாம்ன்றாரு வந்து.  அய்யா புரியுதுங்களா?.

அடியவர்  1:-  இன்னைக்கும் வரைக்கும் ….

குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ராவணனுக்கு தெரியும் எதை என்று அறிய அப்பனே பின் ராமனைப் பற்றி. ஆனால் நிச்சயம் தன்னில் கூட ராமனுக்கும் தெரியும் ராவணனைப் பற்றி.

அடியவர்  :-  ஒருத்தருக்கும் தெரிஞ்சிருக்கு.

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே தெரிஞ்சுதான் இருக்குது. 

குருநாதர் :- இதனால்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட கூட்டத்தை கூட்டினான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட. எதை என்று அறிய அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் இத்தோடு நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் பின் நிறைவடைய வேண்டும் என்பதற்கு இணங்க நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய ராமனும்.  

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ராவணன் கூட எதை என்று அறிய மீண்டும் பின் இவ் தர்மத்தை எவ்வாறெல்லாம் நிச்சயம் தன் தலை நிற்க பின் நிச்சயம் தன்னில் கூட பின் ராவணன் இங்கு எவை என்று அறிய பின் அனுமதிக்கவே இல்லை ராமனை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா இது எப்படின்னு?

அடியவர்  :- புரியுது. நல்லா புரியுது .

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஸ்ரீ ராமர் அவர் உள்ள வந்துட்டாருன்னா அடுத்து வந்து,  இன்னும் ராவணனுக்கு தெரியுது,  இன்னும் என்னென்ன நடக்குது என்று.

அடியவர்  :-  தர்மத்தில் நிலைநாட்ட யாரும் இல்லாம போயிருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- யாரும் இல்லாம போயிடுவாங்க.

அடியவர்  1 :- நீங்க வாழணும்.

சுவடி ஓதும் மைந்தன் :- வாழணும்.

அடியவர்  1 :- (அதனால இங்க உள்ள) வரக்கூடாது.

குருநாதர் :- அப்பனே ராவணனுக்கு அப்பனே எப்பொழுதும் கெடுக்கும் எண்ணமும் இல்லை அப்ப நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  பின் ராமனுக்கும் அதேபோலத்தான் 

சுவடி ஓதும் மைந்தன் :- ராமனுக்கும்  யாரையும் கெடுக்கும் எண்ணமும் இல்லை.  ராவணனுக்கும்?

அடியவர்  1 :- கெடுக்கும்  எண்ணமும்  இல்லை.

சுவடி ஓதும் மைந்தன் :- கெடுக்கும் எண்ணமும் இல்லை 

===========================
(இராவணேஸ்வரர் , ஸ்ரீ ராமரை இலங்கை உள்ளே வராமல் தடுத்து விட்டார். ஏன் என்றால் தர்மத்தை நிலை நாட்ட பிறப்புகள் மீண்டும் எடுக்க வேண்டும் என்று.)
===========================

குருநாதர் :- ஆனாலும் அப்பனே தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் அல்லவா அப்பனே நிச்சயம் தன்னில் கூட? 

குருநாதர் :- அதனால்தான் அப்பன் நிச்சயம் தன்னில் அடுத்தடுத்து அப்பன் நிச்சயம் அவதாரம் எடுக்க வேண்டும்,  என்பதற்கு இணங்கவே அப்பனே பின் ராவணன்  எவ்வாறு என்பது கூட. 

குருநாதர் :- ஒவ்வொரு அவதாரத்திலும் இதுபோல் அப்பனே சிறப்பு உண்டு. 

குருநாதர் :- ஆனாலும் மறைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே பின் இரு அப்பனே நிச்சயம் தன்னில் அவதாரத்தினுடைய சிறப்புகள் தான் தெரிகின்றது மனிதனுக்கு.  ஆனாலும் அதிலும் பல பொய்கள் அப்பா.

அடியவர்  1 :-  ஸ்ரீ  கிருஷ்ணனுக்கும்,  ஸ்ரீ ராமருக்கும்… அது ரெண்டு தான் மனுஷனுக்கு தெரியுதாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப.

அடியவர்  1 :- அதுலயும் பொய்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அது ரெண்டு அவதாரம் பத்திதான் எப்படி என்று தெரியுது. ஆனா மத்த அவதாரங்கள் என்ன ஆச்சு?.

அடியவர்  1 :-  ராமாயணம் மகாபாரதம்
 
சுவடி ஓதும் மைந்தன் :-  தெரியாம போச்சு. எதுக்கு தெரியாம போச்சுன்றாரு வந்து. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் அதையும் தெரிவிப்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அப்பனே எப்படி எப்படி, ஏது என்று எல்லாம், எதை  என்று அறிய அப்பனே அதெல்லாம் தெரிந்து கொண்டால், மனிதன் தன்னை ஆளலாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா என்ன ஆகும் ?

அடியவர்  1 :-  நம்மளை நாமளே ஆளலாம்.

குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனே நடத்திய லீலைகள் என்பேன் அப்பனே. இதில் யார் நல்லவர் பின் கெட்டவர் என்பது எப்படி அப்பா மனிதன் தீர்மானிக்கலாம்? நீங்களே சொல்லுங்கள் என்பேன் அப்பனே?. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் மக்களை காப்பாத்த… யாரு இதெல்லாம் வந்து…..?

அடியவர்  1 :-  இதெல்லாம் ஒரு திருவிளையாடல் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ஒரு திருவிளையாடல். அப்ப யார் இங்கு நல்லவர்?  யார் கெட்டவர்? யார் தீர்மானிப்பது ? என்று கேட்கின்றார்.

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, இதனால்தான் அப்பனே நிச்சயம் ஏன் எதற்கு எவை என்று புரிய அப்பனே அதனால் அப்பனே பின் ராமனும் எதை என்று அறிய அப்பனே.  இதனால்தான் அப்பனே பின் ஏழில் வந்து நின்று விட்டது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  இதனால் அப்பனே எவை என்று அறிய அதாவது முன்னோரின் பிணைப்பு அப்பனே பின் நிச்சயம் அவை பின் அதாவது கேது பகவான் விட்டுவிட்டால்,  அப்பனே அடுத்து பின் மனிதன்தான் அப்பனே பின் மன்னன் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப கேது பகவான் தான் எல்லாரையும் வந்து...

அடியவர்  1 :- கண்ட்ரோல் பண்றாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா எனக்கு தெரிஞ்சு… கேதுவும் ராமருக்கும் வந்து இணைப்பு இருக்குதுன்னா… ஒருவேளை ஏழாவது அவதாரமா?  ஏழாவது அவதாரம்னு நினைக்கிறேன். ஆமா, ராம அவதாரம். ஓகேங்களா.

அடியவர்   :- ஆமா ஏழாவது ராமர் … எட்டாவது பரசுராமர்… ஒன்பதாவது.

சுவடி ஓதும் மைந்தன் :-  எட்டாவது வந்து மகாபாரதம்.

அடியவர்  1 :-  கிருஷ்ணர்.

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது ராமன் காலத்தில் அப்பனே நிச்சயம் இராவணன் காலத்தில் அனைவருமே நல்லோர்கள் தான் என்பேன் அப்பனே.  

இறைவனே ஆட்சி செய்தான் என்பேன் அப்பனே.  

இங்கு எப்படி அப்பா தீயோர்கள் ஆக முடியும்  அப்பனே? சொல்லிவிடுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

யோசிங்கள்…… இதையெல்லாம் யோசித்தால் மனிதன் உண்மையாகி விடுவான் என்பேன் அப்பனே.

அடியவர்   :-  அதாவது…..

சுவடி ஓதும் மைந்தன் :-  ராமனுடைய காலமும்.

அடியவர்   1 :-  நல்லாட்சி.

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லாட்சி இல்லையா? ராமர் இருக்கிற போதுதான் யார் ஆட்சி நடத்துனாங்க?  ராவணனும் நடத்துனார் ஆட்சி. இவரும் நடத்துறாரு.

அடியவர்   :-  இவரும் நடத்துறார் ராமரும் நடத்துறார்..

அடியவர்  1  :-  நல்லாட்சிதான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த யுகம் எல்லாருமே வந்து நல்லவங்கதான். அப்ப எப்படி கெட்டது நடக்குறதுக்கு வந்து சான்ஸ் இருக்குது?.

அடியவர்   :-  சரி ஏழாவது அவதாரம் ராம அவதாரம். எட்டாவது பலராமர்.

அடியவர்   :-  சரியா. ஆமா ஒன்பதாவது கிருஷ்ணர் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் அப்ப அதுக்கும் காரணம் இங்க இருக்கு. ஏழாவது வந்து கேது வந்து நிலநாட்ட.  கேது வந்து முன்னோர்கள்…

ஒருத்தர் முன்னோர்கள் ஆன்மாக்கள் மகிழ்ந்தால் மட்டும்தான் ஒருத்தர் வந்து உயர்வடைய முடியும் வாழ்க்கையில. இதை நிரூபிக்க மட்டும்தான் இந்த நீர் நிலைகளும், இந்த போரும், இதெல்லாம் வந்ததே.  இறந்தவர்கள் வந்து சாந்தி அடையனும்.  இதை வந்து ஒருத்தருக்கு தெரிஞ்சா மட்டும்தான் வந்து இதை வந்து கரெக்டா இருந்தா மட்டும்தான் ஐயா?.

அடியவர்   :- புரியுது ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா வாழ முடியும். அதற்காக சொல்றதுக்காகத்தான் இத்தனை ஆட்டங்கள் .

அடியவர்   :- திருவிளையாடல்.

===========================
# ஸ்ரீ ராமர் அவதாரத்தின் மூலம்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிய வந்தது. 
===========================
# சித்தன் அருள் - 1566 குருநாதர் உரைத்த  வாக்கில் ஒரு மகத்தான ரகசியத்தை உரைத்துள்ளார்கள். ஸ்ரீ ராம அவதாரம் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் அப்போதிருந்து,  இன்றளவும் ஸ்ரீ ராமரும், அன்னை சீதா தேவியும் ஸ்ரீ ராம ஜென்ம புண்ணிய பூமி அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் மறைமுகமாக முன்னோர்களுக்கு (தர்ப்பணம்) கொடுக்கின்றார்கள் என்று உரைத்துள்ளார்கள். 

பின் வரும் வாக்கில் படித்து அவசியம் மறக்காமல் உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தவறாமல் கொடுங்கள்.

சித்தன் அருள் - 1566 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/03/1566.html
===========================
# மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், பஞ்சவடி கோதாவரி நதிக்கரையிலும் ஸ்ரீ ராமரும் அன்னை சீதா தேவியும் வந்து தங்கள் முன்னோர்களுக்கு அன்னம் இட்டுத் தர்ப்பணம் செய்கிறார்கள். இது குறித்த வாக்கு:- 

சித்தன் அருள் - 1193 - அன்புடன் அகத்தியர் - கபாலேஷ்வரர்!
https://siththanarul.blogspot.com/2022/10/1193.html

நேற்றைய பொழுதில் கூட அழகாகவே ராமன் அங்கே வந்து எவை என்று கூற முன்னோர்களுக்கு கூட எவை என்று அழகாகவே பின் எதை என்று அறியாமலே அன்னத்தை இட்டான்!!! என்பதைக் கூட!!! இதனால் எதை எவை கண் இமைக்கும் நேரத்தில் ராமனும் உங்களை பார்த்திட்டு நலமாக!!!!
===========================
இறைவனே அவதாரம் எடுத்தாலும் கர்ம வினைகளைக் களைவதற்கும், முன்னோர்களை முக்தியடையச் செய்வதற்கும் இத்தகைய புண்ணிய நதிகளில் தர்ப்பணம் செய்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறார் என்பது குருநாதர் வாக்குகளின் மூலம் தெளிவாகிறது
===========================

குருநாதர் :- அப்பனே உண்மை நிலைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் முன்னோர்களுக்கு அப்பனே பின் அதாவது தர்ப்பணத்தை கொடுக்க வேண்டும் என்பதே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் அவதாரத்தில் தான் அப்பனே பின் தெரிந்தது என்பேன் அப்பனே எவை என்று புரிய.

குருநாதர் :- அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் ராவணன் அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது ஏன் எதற்கு சிறப்பாக சொல்கின்றேன் என்றால்,  அப்பனே பின் அதாவது பின் உயிரோடு எவை என்று அறிய  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒரு பின் உயிர் நிச்சயம் இறந்து விட்டாலும் அதை எழுப்புதல் சக்தி ராவணனுக்கு இருந்தது என்பேன் அப்பனே.

===========================
# உலகிலேயே தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடம் - இலங்கை. 
===========================

அடியவர்   :- அப்ப சாமி,  இந்தியாவில் தர்ப்பணம் கொடுக்கிறதை விட  இலங்கையில் தர்ப்பணம் கொடுக்கிறது தான் பெஸ்ட். சிறப்பு.

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதற்காகத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் இவ் தேசம் என்பேன் அப்பனே. ஆனாலும் எட்டி என்று புரிய அப்பனே அப்படி ஏது என்று அறிய அப்பனே. உண்மை. 

சுவடி ஓதும் மைந்தன் :- இங்கு தர்ப்பணம் கொடுத்தால்.

அடியவர்   :-  உடனடியாக….

சுவடி ஓதும் மைந்தன் :- உடனடியாக வந்து மாறும்.

அடியவர்   :-  கீழ் நாங்க ராமேஸ்வரம் போறோம்.

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் மனிதனுக்கு உண்மை நிலைகள் தெரிய வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தெரியவில்லை என்றால் அப்பனே நிச்சயம் பொய் சொல்லி அனைவரும் ஏமாற்றி அப்பனே, கடைசியில் அப்பனே அனைத்தும் பொய் என்று சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அதனால்தான் அப்பன் நிச்சயம் தன்னில் கூட உங்களை எப்படி இயக்க வேண்டும் அப்பனே அதாவது உங்களுக்குள் என்னென்ன நோய்கள் எவை என்று புரிய எப்படி வரும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக அப்பனே பின் நிச்சயம் ராவணன் அப்பனே இதுதான் அவனுடைய வேலையே என்பேன் அப்பனே. 

குருநாதர் :- மனிதனுக்கு அப்பன் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு எவை என்று புரிய அடுத்த பின் தர்மம் அதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இத்தோடு பின் முடிவடைந்து விடுகின்றது என்றெல்லாம். ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றான் என்பேன் அப்பனே.  

குருநாதர் :- ஆனாலும் அவையெல்லாம் பொய் என்று அழித்துவிட்டார்கள் என்பேன் அப்பனே சுவடிகள் எங்கெங்கோ அப்பனே சிலர் கொளுத்தி விட்டார்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில கடலிலும் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பேன் அப்பனே. சிலவற்றை நிச்சயம் தன்னில் கூட ஏதோ நிற்கின்றது என்பேன் அப்பனே. அவையும் வருங்காலத்திலே நான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ராவணனுக்கு தெரிஞ்சு போச்சு. இந்த ஸ்ரீ ராம  அவதாரத்தோட கதை முடிவடைகிறது.

அடியவர்  1 :- கஷ்ட காலம்தான்.

சுவடி ஓதும் மைந்தன் :- இதோட வந்து முடிகிறது என்று தெரிஞ்சு போச்சு.ராவணனுக்கு தெரியுது. அடுத்து யாரு தர்மத்தை நிலைநாட்ட வருவா அங்க வந்து?.

அடியவர்  1 :-  யாருமில்லை.

சுவடி ஓதும் மைந்தன் :- யாருமில்லை. அப்ப என்ன பண்றாரு?  ராமனுக்கு வந்து சண்டை இழுத்தே ஆகணும். வேற வழி இல்லை. போர். ஐயா புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ஏதாவது சந்தேகம் இருந்தா டக்குனு கேளுங்க.

அடியவர்  1 :-  சரி அய்யா.

===========================
# இராவணேஸ்வரர் , ஸ்ரீ ராமர் , அன்னை சீதா தேவி - அனைவருமே ஈசனார் பக்தர்கள். 
===========================

குருநாதர் :- அப்பனே ஈசனைப் பற்றியும் யான் சொன்னேன் அப்பனே நிச்சயம் தன்னில். ஏன் ஈசன் அப்பனே பின் இவ்வாறெல்லாம் வரத்தை ஏது என்று அறிய அப்பனே கடைசியில்….. அப்பனே அனைவரும் அப்பனே பின் ஈசன் பக்தர்களே தான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் கடைசில என்ன பண்ணாங்க ஐயா? ஈசனை தான் வணங்குனாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? 

===========================
# ஏன் ராமேஸ்வரம் உருவானது ? 
===========================

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் பின் இவையெல்லாம் பின் நடத்தும் நாடகக்காரன் யார் என்றால் ஈசன். கடைசியில் ராமனுக்கு எவை என்று கூற பின் கடைசியில் பின் நிச்சயம் தன்னில் ராமேஸ்வரத்தில் அழகாக வைத்தான் அப்பனே. புரிகின்றதா?.

அடியவர்  1 :- ராமேஸ்வரத்துல.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதெல்லாம் நடத்தும் நாடகக்காரன் யாருன்னா?  ஈஸ்வரன். ஐயா புரியுதுங்களா?.

அடியவர்  1 :- புரியுது புரியுது.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கடைசில என்ன பண்ணாரு?.

அடியவர்  1 :- ராமேஸ்வரத்துல.

சுவடி ஓதும் மைந்தன் :- ராமேஸ்வரத்துல.

அடியவர்  1 :- ஈசனுக்கு மணலிங்கம் வச்சு வணங்கி .

===========================
# எப்போது ராமேஸ்வரம் செல்ல முடியும்? 
===========================

குருநாதர் :- நிச்சயம் இது எவ்வாறு புரியுது என்றால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் பின் நாடக மேடையே.  இதில் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக ஏது என்று அறிய அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பல கஷ்டங்கள் பட்டு பின்புதான் நிச்சயம் பின் ராமேஸ்வரனையே வந்து அடைவான் மனிதன். இது நிச்சயம் சத்தியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ராமேஸ்வரத்தில்… ஏன்னா யார் வருவாங்க ஐயா?.

அடியவர்  1 :-  கஷ்டப்பட்டு……...

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு , அடிபட்டு ,  நொந்து போய் ,  நூடுல்ஸ் ஆகி தான்,  கடைசில வந்து தான்  ராமேஸ்வரம் இங்க வருவாங்க. இதுதான் உண்மை. 

===========================
# ஸ்ரீ ராமபிரான் இலங்கை வந்ததன் ஆதி இராமாயண ரகசியம்.
===========================

குருநாதர் :- அப்பனே அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்  ஏன் ராமன் எது என்று அறிய பின் அதாவது பின் இவ் தேசத்தில் அவனுடைய தேசத்தில் அனைவருமே பின் அவ் யுகத்தில் பின் நல்லோர்கள் நிச்சயம் மாண்டு விட்டார்கள். மீண்டும் எது என்று கூற , எழுப்பத்தான் இங்கு வந்தான் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிறப்பு ஒன்று இருந்தால், இறப்பு ஒன்று இருக்கிறது.  அது என்ன பண்ணாரு கடைசில?.

அடியவர்  1 :- திருப்பி கொண்டு வரணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (முன்னோர்களை) திருப்பி கொண்டு வரணும்னு சொல்லிட்டு தான் என்ன பண்ணாரு வந்து இங்க வந்தாரு.

அடியவர்  1 :- இங்க வந்தாரு.

சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்தார் 

===========================
# ஸ்ரீ ராமபிரான் - ராமேஸ்வரம் மணல் லிங்கம் ரகசியங்கள்
===========================

குருநாதர் :- ஆனால் கடைசியில் பார்த்தால் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.

அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட பின் மனதில் பின் மனதில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு (முன்னோர்களின்) பெயராக பின் நினைத்து நிச்சயம் தன்னில் கூட ஏது என்று அறிய. 

நிச்சயம் தன் (முன்னோர்களின்) பெயர் தெரியாவிடிலும் நிச்சயம் எதை என்று நினைக்க,  அனைத்தும் பின் ஈசன் எவை என்று அறிய.  பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் கற்றுக்கொண்டான் எதனிடத்தில் என்றும் அதையும் பின் ரகசியமாக வைத்திருக்கின்றான்.  

அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் அதாவது மண்ணால் பின் (முன்னோர்கள்) ஒவ்வொருவரையும் பிடித்து பிடித்து பிடித்து பின் வைத்து வைத்து நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.

அடியவர்  1 :-  மணலிங்கம் பிடிச்சு.

சுவடி ஓதும் மைந்தன் :-  லிங்கம் ஏன் வழிபட்டாரு? பல ஆண்டுகளா அது புடிச்சாரு. ஒவ்வொரு ஒரு நிமிஷம் இல்ல. ரெண்டு நிமிஷம் இல்ல. அதெல்லாம் வந்து.

அடியவர்  1 :- பல ஆண்டா புடிச்சு புடிச்சு.

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகளாக மணல் லிங்கம்  புடிச்சு, புடிச்சு, புடிச்சு, புடிச்சு என்ன பண்ணாரு வந்து, அதை வச்சிட்டாரு.

அடியவர்  1 :-  அதான் இங்க இருக்கு ராமேஸ்வரத்துல.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா.

அடியவர்  1 :-   ராமேஸ்வரத்துல.

===========================
# பின் வரும் வாக்கை , பல  முறை மீண்டும் , மீண்டும் படித்தால் மட்டுமே ராமேஸ்வரம் - ஸ்ரீ ராமபிரானின் மாபெரும் மணல் லிங்கங்கள் ரகசியங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும். இதன் மூலம் உங்களுக்கு புரிந்த ரகசியங்களை அழகாக கமெண்ட் செய்யுங்கள். அனைவருக்கும் பயன்படும். 
===========================

குருநாதர் :- வருவோருக்கெல்லாம்  நிச்சயம் தன்னில் கூட நீங்கள் நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை நிலைநாட்ட நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று கூற. 

குருநாதர் :-  அதாவது பின் இறந்தவர்கள் கூட எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் நீங்கள் பின் அதாவது உங்களிடத்தில் எடுத்துக்கொண்டு, இங்கே வைத்துக் கொள்ளுங்கள். 

குருநாதர் :-  நல்லோர்கள் எல்லாம் நிச்சயம் அவர்களுக்கு எவை என்று கூற, ஆசிகள் வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, சொந்த பந்தங்களுக்கு பின் எவை என்று புரிய பின் ஆசிகள் தந்து கொண்டே இருங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  இதனால் எவை என்று புரிய, அதாவது சிறு பின் ஆன்மா எதை என்று கூற பின் ஒரு சிறு அணு அவ்வளவுதான் நிச்சயம் தன்னில் கூட.  அது வளர்ந்து வளர்ந்து. எதை அவ் அணு பின் வளர்வதற்கு உடம்பு தேவைப்படுகின்றது. ஆனால் உடம்பு இறைவன் கொடுக்கின்றான் அவ்வளவுதான். 

குருநாதர் :- இது யார் எது என்று புரிய பின் அணு எதற்கு சொந்தம் பின் உடம்பு எதற்கு சொந்தம் அப்பனே இன்னும் அப்பனே எவை என்று கூற  அதனால்தான் அப்பனே பின் ஒன்றாவது வகுப்பு, இரண்டாவது வகுப்பு, மூன்றாவது வகுப்பு பின் நிச்சயம் தன்னில் தேர்ச்சி பெற வேண்டும். 

குருநாதர் :- அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் இன்னும் மேன்மையான கல்விகளில், பின் என்ன பயிற்சிக்கு அப்பனே பின் சொல்கின்றேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-    அதனால்தான்…

அடியவர்  1 :-  ஆன்மா வளர்றதுக்கு தான் உடம்பு.

சுவடி ஓதும் மைந்தன் :-    ஆமா.

அடியவர்  1 :-  உடம்பை கொடுக்கிறது ஈசன்.

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால  இன்னும் என்ன பண்றாங்க? ஐயா புரியுதுங்களா?.

அடியவர்   :-  புரியுது.  ஆன்மா வளர்க்காம,  உடம்பை வளர்க்கணும்.

குருநாதர் :- அப்பனே அதனால்தான் அப்பனே எது என்று அப்பனே பின் மூன்று பேரையும் கொண்டு வந்தால்தான்,  அப்பனே நிச்சயம் தன்னிலே உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப மூன்று பேரும். ஐயா சீதா அம்மாவும்  கொண்டு வரணும்.

அடியவர்   :-  ராமனையும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஸ்ரீ ராமரையும் கொண்டு வரணும்.

அடியவர்   :-  ராமனையும் கொண்டு வரணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணன் ஏன் கொண்டு வரணும்னா… இதுல ஒருத்தர் நம்ம வெளிகாட்டினா கூட வந்து.

அடியவர்   :-  பிரச்சனை.

சுவடி ஓதும் மைந்தன் :-  பிரச்சனை தான் ஆகன்றார் வந்து.

குருநாதர் :- அப்பனே ஏனென்றால் மனிதன் புத்தி கெட்டவன் என்பேன் அப்பனே நிச்சயம் இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே. பின் புத்தி பின் கெட்டவனுக்கு எதைச் சொன்னாலும் உண்மை சொன்னாலும் பொய் என்று சொல்லுவான் அப்பனே.  

குருநாதர் :-  ஆனால் நீ பொய் சொல்லிப்பார் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய ஏற்றுக்கொள்வான்.  இதுதான் கலியுகம் என்பேன் அப்பனே அதனால்தான் ராவணனுக்கு தெரிந்துவிட்டது தர்மத்தை நிலைநாட்ட யார் இருக்கின்றார்கள்?  இறைவன் நிச்சயம் அவதரிக்க வேண்டும் என்பதே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படியும் சொல்றாருங்க ஐயா அப்ப தர்மத்தை நிலைநாட்டது ஆள் இல்லை அப்ப என்ன பண்ணனும் அடுத்தடுத்த அவதாரம் இறைவன் எடுக்கணும்.

அடியவர்   :-   இருந்தே ஆகணும்.

சுவடி ஓதும் மைந்தன் :- இருந்தே ஆகணும்.

அடியவர்   :-  கட்டாயம்.

அடியவர்   :-   அய்யா, பத்தாவது அவதாரம்… கல்கி அவதாரம்… இலங்கையிலிருந்து தான் வரப்போகுது?. 

குருநாதர் :- அப்பனே ரகசியம் இன்னும் அப்பனே இன்னும் அப்பனே இன்னும் அப்பனே. இதிலே அப்பனே பல விஷயங்கள் உள்ளது என்பேன் அப்பனே.  இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் யான் பின் கடைசியில் அதை செப்புவேன் என்பேன் அப்பனே. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment