அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 3
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மாபெரும் சிவ பக்தர், மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர் காவியம்……
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மகிமை புகழ், இராமாயண காவியம்…….
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 25.03.2026 அன்று நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த வாக்கு.
நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :- 29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :- ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
===========================
அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 3
===========================
குருநாதர் :- ஆனாலும் புரிந்து கொண்டான். பின் ஈசனாரே நிச்சயம் தன்னில் கூட உனை காணவே வந்தேன். இதனால் நிச்சயம் பாதுகாப்பிற்காக… இக்குழந்தையின் பாதுகாப்பிற்காக, அனைத்தும் விட்டு பின் எதை என்று புரிய, பின் கயிலாயத்திலே பேசிக்கொள்வோம் என்று பத்திரமாக அனைத்தும் நிச்சயம் அக்குழந்தைக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த குழந்தையை பாதுகாப்பாக, இனிமேல் எடுக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப என்ன செய்தார்? அந்த குழந்தையை பாதுகாப்பிற்காக எல்லாத்தையும் இது பண்ணிட்டார். வந்து…
அடியவர் :- சேப்டி பண்ணிட்டார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.. சேப்டி பண்ணிட்டார். எல்லாம் சேப்டி பண்ணிட்டு….. இனிமேல் குழந்தையை எடுக்க முடியாது. இது ஈசனோட வேலைதான். நேரா கைலாயத்துக்கு போயிடுவோம். கைலாயத்துக்கு பேசினா அங்கிருந்து ஈசன் கொடுத்தாருன்னா எடுத்துட்டு வந்துருவோம்னு சொல்லிட்டு என்ன பண்ணாரு? ….ஆமா..
குருநாதர் :- அப்பொழுது கண்களாலே அவனுக்கு தெரியும் என்ன நடக்கின்றது என்று. இப்பொழுதுதான் பதிவு வேறுவாகி போய்விட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் கண்ணுதான் கேமரா. அப்ப எல்லாம் கண்களாலே பார்த்தாருன்னா அங்க என்ன நடக்குதுன்னு தெரியுமாம். இப்பதான் அது வேற மாதிரி… கேமரா மாதிரி ஆயிடுச்சுப்பா. அப்ப எல்லாம் அவர் பெரிய அந்த கண்ணுல பார்ப்பாராம். அங்க என்ன நடக்குதுன்னு என்று…
குருநாதர் :- எது என்று அறிய இங்கிருந்து நேராக ஓரிடத்தில்
சுவடி ஓதும் மைந்தன் :- அது எந்த இடம் என்றால்…, திருகோணமலை இங்கிருந்து பார்த்தோம்னா கைலாயம் செல்லும் ஒரு இடத்துல தான், இந்தியாவில் தான் , அந்த நிலம் இருக்கு. அங்கு குழந்தையை இறக்கி வைத்துவிட்டு, கைலாயம் சென்றார் ஈசனை காண….
குருநாதர் :- நேரடியாக ஈசனை நோக்கி, ஈசனை பார்த்துட்டு நிச்சயம் பின் அழுதுகொண்டே பின் ஈசனை பார்த்தாலே அழுகையும் வரும் அவனுக்கு.
குருநாதர் :- பாசத்தையும் கொடுத்துட்டு இவ்வாறு செய்வது நியாயமா? நிச்சயம் அக்குழந்தையை பின் அதாவது அழகான குழந்தையை, ஆற்றலான குழந்தையை நிச்சயம் அதாவது உன் அருளால் தான் எனக்கு கிடைத்தது. பின் நான் புரிந்து கொண்டேன். தூக்க முடியவில்லையே. அப்பொழுதே நான் புரிந்து கொண்டேன்.
குருநாதர் :- எது என்று புரிய. பின் அருளாசிகள் கொடு. நிச்சயம் தன்னில் கூட அதை தூக்குவதற்கு வளர்ப்பதற்கு….
குருநாதர் :- எது என்று புரிய, பின் நிச்சயம் பின் அதாவது பின் அது நிலத்தின் சொந்தக்காரன் பின் வந்தான். பின் அழகாக தூக்கிவிட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த நிலத்தின் சொந்தக்காரர் அழகா தூக்கிட்டார்.
குருநாதர் :- பின் அவனும் அந்நாட்டின் அரசன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் அந்த நாட்டின் அரசன்.
குருநாதர் :- பின் ஆனாலும் பார்த்துட்டான். ஈசனாரே பின் என் பலம் இவ்வளவு. பின் எவை என்று அதாவது குறைவா? அவன் பலம் அதிகமா? எவ்வாறு நியாயம் என்று? பின் ஈசனிடமே சண்டையிட்டான்.
(என்னை விட அவ் அரசன் பலமானவனா என்று ஈசனாரிடம் சண்டைகள்)
குருநாதர் :- அறிந்தும் இப்படியா !!!!! என்று.
குருநாதர் :- ஈசனாரும் வாயை திறக்கின்றார். நீதான் பலசாலி என்று
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனார் என்ன சொல்கின்றார்? அப்பா, நீ தானப்பா பலசாலி என்று.
குருநாதர் :- ஆனாலும் என்னால் முடியவில்லையே.
குருநாதர் :- நிச்சயம் பின் அவனே அழகாக தூக்கிவிட்டானே என்று.
குருநாதர் :- ஆனாலும் அறிந்து கூட அதனால் உனக்கு ஒரு வேலை வைத்திருக்கின்றேன். அதனால் பின் அவ் அரசனிடமே அக்குழந்தை வாழட்டும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வந்து அந்த குழந்தை அவ்வளவுதான். உனக்கு ஒரு வேலை வச்சிருக்கிறேன். அந்த வேலையை முடித்தால் தன்னால் அந்த குழந்தை உனக்கு ஐயா மறுபடியும் வரும்.
குருநாதர் :- எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அழகாக பாசத்தை காட்டினான். நிச்சயம் தன்னில் கூட அவ் வேலை என்ன வேலை என்று சொல். உடனடியாக முடித்துவிட்டு அக்குழந்தையை யானை எடுத்துக் கொள்கின்றேன் என்று.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய. ஆனாலும் இப்பொழுது இல்லை. ஆனாலும் பின் நீ மறைமுகமாக அக்குழந்தையை வளர்ப்பதை பார். சிறிது காலம். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வேலை என்ன வேலை? அந்த குழந்தை எப்படி வளருது? அதை மட்டும் நீ பார்த்தால் போதும். அய்யா புரியுதுங்களா? அந்த குழந்தை எப்படி வளருதுன்றத நீ பாரு. மீதி எல்லாம் உன் மேல வந்து அப்புறம் வந்து பார்த்துக்கலாம்ன்றாரு.
குருநாதர் :- எதை ஏன் இவ்வாறாக? பின் அதற்காக யானே வளர்கக்கூடாதா?
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி சொல்லிவிட்டாயே !!!! இதுதான் வேலையா? அதுக்கு நானே வளர்த்துட்டு போறேன். அய்யா புரியுதுங்களா?
அடியவர்கள் :- புரியுது
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் பார்க்கின்றேன். பின் ஈசனாரே அறிந்தும் எதை என்று புரிய. ஆனாலும் ஒன்று. பின் அவள் தன் வருத்தப்படக்கூடாதே நிச்சயம் தன்னில் கூட. அதாவது பின் எவை என்று புரிய வயது எட்டும் வரை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு 18, 19 வயசு வரைக்கும் ஒன்னும் கஷ்டப்படக்கூடாது. கஷ்டப்படாம நான் பார்க்கணும் என் கண்கள். அவ்வளவுதான். ஏதாவது கஷ்டம் கொடுத்துட்டேன்னா என்ன ஆகும்? ஐயா புரியுதுங்களா?
அடியவர் :- நான் தூக்கிருவேன்ட்டாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆம் … ரைட். நான் தூக்கிருவேன்ட்டாரு. கஷ்டம் ஏதும் கொடுத்தாய் என்றால் ? நான் தூக்கிடுவேன்ட்டாரு.
குருநாதர் :- எவை என்று புரிய, அப்படியே ஆகட்டும் என்று திடீரென்று வார்த்தை விட்டுவிட்டான் ஈசன்.
===========================
(ஆதி ஈசன், இராவணேஸ்வரருக்கு அளித்த இவ்வாக்கு, மகிமை புகழ் இராமாயண காவியத்தின் ஒரு முக்கிய திருப்பம் உண்டாக்கியது விதி வசத்தால்…..இதனை பின்வரும் பகுதிகளில் காண்போம்……)
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- சரி, அப்படியே ஆகட்டும்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ பாரு. அந்த குழந்தை எப்படி வளர்ந்தது மட்டும் நீ பாரு.
( இவ்விடத்தில் தான் அடியவர்களுக்கு இவ் மகிமை புகழ் காவிய கதை எப்படி நடந்தது என்று ஓரளவு யூகிக்க முடிந்தது………)
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா அப்ப இதுல இருந்து என்ன தெரியுது? சீதை அம்மாவுக்கு 18 வயசு வரைக்கும்….. அதுக்கு மேலதாங்க இராவணேஸ்வரனே வராரு.
அடியவர் :- ஆமா…
அடியவர்கள்:- கஷ்டம் வந்த உடனே இலங்கைக்கு தூக்கிட்டு வராரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இருந்து தான் அவருடைய, இராவணேஸ்வரர் அவருடைய செய்யலே தெரியுது. அதுக்கு முன்னாடி ஏதாவது நமக்கு தெரியுதா ராமாயணத்துல ஐயா? சீதா அம்மா 18 வயசு, 20 வயசு பின்னாலதான் இராவணேஸ்வரனே வராரு. அய்யா புரியுதுங்களா?
அடியவர்கள் :- புரியுது, புரியுது, நல்லா புரியுது.
குருநாதர் :- இதை அறிவித்து இதுதான் எவை என்று அறிய உனக்கு ஒரு வேலை எது என்று புரிய. நான் உனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறேன். நீ அமைதியா இருக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அமைதியா பேசாம இருந்து, மறைமுகமா அந்த குழந்தையை பார்த்து வரணும். அவ்வளவுதான்.
அடியவர் :- அதுதான் வேலை.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் வேலை. அப்ப இராவணேஸ்வரர் இவரும் ஈசன் கிட்ட இப்ப முறையிட்டு இருக்காரு. எனக்கெல்லாம் இந்த குழந்தை , இந்த பொண்ணு கஷ்டப்படுறதை நான் பார்க்கக்கூடாது. …என்று சொல்லிவிட்டு
குருநாதர் :- ஈசனாரே இவை ஒரு வேலையா? உலகத்தையே காக்க உனக்கும் அதேபோல் எனக்கும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் கொடுத்திருக்கின்றாய். மக்களை காப்பாற்ற, நாடையும் காப்பாற்ற. ஆனாலும் எதை என்று புரிய? இப்படி செய்துவிட்டாயே !!!! என்னை அமர்த்திவிட்டாயே !!!!!. பின் நிச்சயம் மக்களுக்கு சேவை செய்யாமல் என் உடம்பு பின் தாங்காது என்று.
குருநாதர் :- நிச்சயம் பின் இராவணனே !!!!! அறிந்தும் எதை என்று புரிய. அதாவது (ஈசன்) யான் இருக்கும் வரை நீ இருப்பாய். ஆனாலும் பின் ஏது என்று அறிய. இது இடைவெளி தான். எப்படி எல்லாம் பாசத்தால் அழிகின்றாய் என்று பார். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன் நான் இருக்கும் வரை இராவணேஸ்வரா நீ இருப்பாய். எப்படி எல்லாம் பாசம் வைத்தால் , எப்படி எல்லாம் அழுவாங்கன்னு நீ பார்க்கணும். அதுதான்…. நீ பாசத்தை உயர்ந்தா நினைச்சுட்டு, அம்மா மேல வச்சிட்டு இருக்குற…. இந்த உலகத்துல பாசம் வச்சாங்கன்னா எப்படி எல்லாம் அழியுறாங்கன்னு நீ பார்க்கணும். அவ்வளவுதான். ஏன்னா நீ நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யும்போது, யார் மேல பாசம் வைக்கக்கூடாது இல்லயா? அவங்க அம்மா ஒன்னு சொல்லிட்டு போய்விட்டார்கள். யார் அம்மா?
அடியவர் :- இராவணனுடைய அம்மா…
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணனுடைய அம்மா. எல்லார் மேல பாசம் வைக்கணும்னு சொல்லிட்டு. ஆனா ஈசன் என்ன சொல்றாரு? கடைசில பாசம் வச்சா….
அடியவர் :- என்ன நடக்கும்னு பாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன நடக்கும்னு நீ பாரு. போதும். ஏன்னா ஈசன் நான் இருக்கும் வரை நீ இருப்ப. எல்லாருக்கும் நன்மை தொண்டு தான் செய்வாய். மக்களுக்கு தொண்டு செய்வாய். இது வந்து இடைவெளி உனக்கு…. வந்து பாசம் வைத்தால் என்ன ஆகும்? அன்பு வைத்தால் என்ன ஆகும்? என்பது மட்டும் நீ பார்க்கணும். அதுதான் உனக்கு வேலை.
குருநாதர் :- இது ஒரு வேலையா? எதை என்று புரிய,,
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனாரே இது நியாயமா? ஆனா இதோட வலி அவருக்கு தெரியல. அவருக்கு இன்னும் அடுத்து என்ன நடக்க போறது? என்று அவருக்கு தெரியல. இது ஒரு வேலையான்னு சொல்றாரு.
குருநாதர் :- இருப்பினும் அனைத்தும் யான் சொல்கின்றேன். என் பேச்சுத்தான் கேட்கின்றாய் அல்லவா? இதுவும் கேள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் கேட்கிற இல்ல? எல்லாம் செய்கிறாய் இல்லயா? என் மேல உண்மையாக இருந்தால், நீ இதை கேளு. சீதை அமமை வளர்வதை பார்த்துக் கொண்டே இரு.
குருநாதர் :- எதை என்று புரிய, இதனால் பின் அழகாக பின் அதாவது மன்னன் எடுத்து வந்து, நிச்சயம் இது பின் இறைவனுடைய குழந்தை என்று, பின் நிச்சயம் யாரை எதை என்று புரிய…. நிச்சயம் தன்னில் அழகாக பாலூட்டி சீராட்டி வளர்த்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப குழந்தையை , அந்நாட்டு மன்னன் என்ன செய்தார்? அதான் ஜனக மகாராஜா என்று நான் நினைக்கிறேன். அவர் பேர் சொல்லல இங்க. ஓகேங்களா ஐயா? மன்னன் பேர் எல்லாம் சொல்லல. அப்ப, ஒரு மன்னன் எடுத்துட்டு வந்து என்ன பண்ணாரு? இது இறைவன் கொடுத்த குழந்தை. நன்றாக வளர்க்கணும்னு சொல்லிட்டு….அந்த நாட்டின் மன்னன் அவர்.
குருநாதர் :- நிச்சயம் இப்பொழுதும் கூட அந்நிலமும் இருக்கின்றது. பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய….
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது அந்த நிலம் இருக்கின்றதாம். (சீதை அன்னை குழந்தையாக , அவ் மன்னனுக்கு ) கிடைச்ச நிலம் இருக்கின்றதாம். அய்யா புரியுதுங்களா?
===========================
# ஆதி ஈசனார் கட்டளையால் , பல வருடங்களாக , தனது அன்பு செல்ல குழந்தையை , பாசத்துடன், ஏக்கத்துடன் மறைந்திருந்து பார்த்து வந்த இராவணேஸ்வரர்…
===========================
குருநாதர் :- எதை என்று அறிய, இதனால் எப்பொழுதும் ஏது என்று புரிய. இதனால் நிச்சயம் அழகாக பின் அனைவரும் பின் எவை என்று கூற , குழந்தைக்கு பின் அதாவது நிச்சயம் பின் வருத்தப்படாமல் அனைத்தும் எவை என்று என்னென்ன பின் தர வேண்டுமோ அனைத்தும். ஆனாலும் மறைமுகமாக இராவணன் பார்த்துக் கொண்டே இருந்தான் அங்கே இருந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் அவர் என்ன செய்தார்? இந்தியாவுக்கு வந்துட்டாரு. இந்தியாவுக்கு வந்துட்டு……
அடியவர் :- மறைமுகமா பார்க்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- மறைமுகமாக தன் குழந்தை வளர்ந்து வருவதை பார்க்கிறார்.
குருநாதர் :- எதை என்று புரிய, மன்னனை பார்த்து ஆச்சரியப்பட்டான். அறிந்து கூட பின் யான் வளர்ந்திருந்தாலும் இப்படி எவ்வாறு என்று கூட. அனைத்து செல்வங்களையும், அனைத்து தோழர்களையும், தோழிகளையும் கொடுத்து, இவ்வாறு பின் அனைத்தும் உருவாக்கி வளர்க்கின்றானே என்று சந்தோஷப்படுகின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன பண்றாரு? இராவணன் மிகவும் சந்தோஷப்பட்டார். அடடா என்னடா இது?
அடியவர் :- நல்லா வளர்க்கிறாரே…..
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வளர்க்கிறார். அவருக்கு தோணுச்சு. அப்ப…
குருநாதர் :- நிச்சயம் மீண்டும் கைலாயத்துக்கு சென்று அழுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் கைலாயத்துக்கு சென்று ஓ என்று அழுதார்.
குருநாதர் :- ஈசனாரே உன்னை தவறாக எண்ணிக்கொண்டேன் என்று
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனே !!! உன்னை நான் தவறா நினைச்சிருக்கேன். ஏன்னா அவர் மன்னர் வந்து என்ன பண்றாரு?
அடியவர் :- (குழந்தையாக உள்ள அன்னை சீதையை) நல்லா வளர்க்கிறார் அவர்….
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வளர்க்கிறார். நல்லா என்ன பண்றாரு?
அடியவர் :- பராமரிக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- பராமரிக்கிறார் நல்லா. அய்யா அவர் ஜனகர். ஜனகர் யாரு?
அடியவர் :- அஜனகர் தான் சீதையோட அப்பா
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் … பேர் எல்லாம் சொல்ல மாட்டாரு. அந்த மன்னன் நல்லா வளர்க்கிறார் என்று திருப்பி வந்து ஈசனிடம் அழுகுறார். யாரு கிட்ட போயிட்டு?
அடியவர் :- ஈசன் கிட்ட.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனிடம் அழுகிறார். என் குழந்தையை அழகா பார்த்துக்கிறாங்கப்பான்றாரு.
குருநாதர் :- (ஈசனார்) இப்பொழுது தெரியாது மகனே. நிச்சயம் இன்னும் பார் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீ சந்தோஷப்படாதப்பா. இன்னும் இருக்குது நாடகம். நீ போய் பாருன்றாரு.
குருநாதர் :- போதும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் அறிந்து கூட எதை என்று புரிய, ஈசனாரே மீண்டும் பின் எப்படி வாழ்கின்றாள்? தன் மகள் என்றே….
சுவடி ஓதும் மைந்தன் :- என் மகள்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணேஸ்வரர்) அவரே நினைத்துக்கொள்கின்றார், என் மகள் என்று…
சுவடி ஓதும் மைந்தன் :- அது ஈசனோட குழந்தைதான். என் மகள் என் தாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது சொல்லிட்டு அவரே சொல்லுகிறார். வந்து நான் பார்க்கிறேன். சந்தோஷமா ன்னு சொல்லிட்டு
அடியவர் :- அவர் … ( குழந்தை சீதையை ) அவங்க அம்மான்னு நினைச்சுட்டு இருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, அவர் அவங்க அம்மான்னு நினைச்சுட்டு இருக்காரு. அவங்க அம்மா அதை சொல்லிட்டு போனாங்க இல்ல? எங்கிருந்து போனாங்களோ அங்கிருந்து கிடைத்தது குழந்தை கிடைச்சது இல்லையா?. அதனால குழந்தையை பொண்ணுன்னு . அவங்க தாயும் என்று நினைச்சுக்கினாரு…
அடியவர் :- (குருநாதர் இவ் வாக்கின்) ஆரம்பத்தில் சொன்னார் இல்லையா? எங்க அம்மாதான் வந்திருக்காங்கன்னு (இராவணேஸ்வரர்) சொன்னதாக….
சுவடி ஓதும் மைந்தன் :- ஆரம்பத்துல என் அம்மா….அப்படியே நினைச்சுக்கினாரு அவர் வந்து…..
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய, நிச்சயம் பின் ஆச்சரியங்கள். ஆனாலும் அனைத்து பட்டங்களும் ஏது என்று புரிய, நிச்சயம் எதை என்று அறிய. ஆனாலும் எதை என்று… இவ்வாறு என்று புரிய, பின் அருள்கள் கூட. இதனால் என்னென்ன ஏது என்று… பின் ஆனாலும் பருவம் அடைந்தாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் எல்லாம் கிடைச்சது. என்னென்ன தேவையோ எல்லாமே வந்து எல்லாம் கிடைச்சது. கிடைச்ச பிறகு…. அந்த வயசுக்கு வந்தாங்க அவங்க வந்து….
குருநாதர் :- எது என்று புரிய, ஆனாலும் பின் இதில் கூட எவை என்று அறிய, இவ்வுலகத்திற்கு போராடி வந்தவன் பின் ராமனே. அனைவருக்கும் தெரியும்.
===========================
# ஈசனார் கட்டளைப்படியே , அன்னை சீதா தேவிக்கும் , ஸ்ரீ ராம பிரானுக்கும் நல் இறை காதல் மலர்ந்தது….
===========================
குருநாதர் :- இவ் நாட்டை காப்பாற்றவே நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட. ஆனாலும் நிச்சயம் தன்னில் எது என்று கூட பின் வந்த பொழுது நிச்சயம் தன்னில் கூட….
குருநாதர் :- பின் அதாவது எவை என்று புரிய, பின் அதாவது இதுவும் ஏது என்று புரிய… நிச்சயம் பின் ஈசன்… ஈசன் கட்டளைப்படியே… இதனால் இருவருமே பின் காதல் கொண்டனர்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் ராமன் வந்தாரு. இதெல்லாம் லேசா சொல்றாரு. அய்யா புரியுதுங்களா வந்து? அப்ப அவங்க வந்து என்ன பண்றாங்க? மனசு விரும்பி… அவங்க வந்து…. என்ன பண்றாரு? இது மாதிரி வந்து….
===========================
# பாசமிகு தந்தையின் பரிதவிப்பும் , மகளின் நல் இறை காதலும்….
===========================
குருநாதர் :- ஆனாலும் எது என்று மீண்டும் ஈசனும் கூட எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் பின் எதை என்று இராவணனுக்கும் இது தெரிந்துவிட்டது. உடனடியாக கைலாயத்துக்கு சென்று எப்படி ஏது என்று அறிய, அதாவது எப்படி ஈசா!!!!!???? இன்னொருவன் ( ஸ்ரீ ராமர் ) எவை என்று அறிய, அதாவது என் பிள்ளை மீது பாசம் வைக்கின்றானே? எவ்வாறு நியாயம் என்று?
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவா ….. இவங்க இரண்டு பேரும் பாசம் வச்சிருக்காங்க. கடைசில என்ன ஆச்சு? இன்னொரு பையன் வந்திருக்கிறான் பாசம் வைக்கிறதுக்கு? இது எவ்வாறு நியாயம்?
அடியவர்கள் :- ( இவ் பேச போராட்டத்தை நினைத்தது அவ் நேரம் லயித்து , மெதுவாக சிரிப்புகள் )
குருநாதர் :- நிச்சயம் பின் அதாவது அனைவரும் எவை என்று அறிய, நிச்சயம் இருந்து பார். பின் மீண்டும் போய் எவை என்று அறிய, பாசமெல்லாம் பின் தெரியும் பின்னாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ பாசம் வைக்கிறேன், பாசம் வைக்கிறேன்னு சொல்ற..ஆனால் பின்னாடி என்ன தெரியும்? பாசம் வைக்கிறதுனா என்ன ஆகும்? அப்புறம்
அடியவர் :- துன்பம் தான்…
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு தெரியும்பா…. நீ போய் பாருங்கன்றாரு.
குருநாதர் :- ஈசனாரே, இத்தனை ஆண்டுகளா???? ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. என் சீடர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.. தேசத்தையும் கூட. அதனால் யான் கிளம்ப வேண்டும் என்று
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா… சீக்கிரம் உன் நாடகத்தை நடத்து. என் சிஷ்யர்கள் தான் அங்க பார்த்துட்டு இருக்காங்க, இந்த நாட்டை ( இலங்கையை). நான் கிளம்பனும். நான் எனது மகளை பார்த்துக்கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது…என்று சொல்கின்றார்….
குருநாதர் :- (ஈசனும்) பின் இராவணனே, நீதான் கேட்டாய் அல்லவா? அறிந்து கூட பின் எவை என்று புரிய…
சுவடி ஓதும் மைந்தன் :- நீதான் கேட்ட. நான் ஒன்னும் உனக்கு சொல்லவில்லை. நீதானே எல்லாம் கேட்டு வந்தாய் என்று கேட்கின்றார்
குருநாதர் :- ( இராவணனும்) சரி, சரி, சமாளிப்பதே உன் வேலை. ஈசனே.
சுவடி ஓதும் மைந்தன் :- சரி, சரி, போகட்டும். சமாளிப்பதே உன்னுடைய வேலை தானேப்பா? சரி, நான் இருக்கிறேன்னு சொல்றாரு.
குருநாதர் :- எவை என்று புரிய.. மீண்டும் எது என்று அறிய.. எவை என்று ஆனாலும் அறிந்தும் எது என்று புரிய… ஆனாலும் இன்னும் கூட… ஆனாலும் பின் ஈசன் நல்லது தான் செய்வான் என்று நினைத்துக் கொண்டான்.
===========================
# ஸ்ரீ ராமர் - அன்னை சீதா தேவி திருமண வைபவம் நெருங்கிவிட்டது….
===========================
குருநாதர் :- ஏது எவை என்று புரிய, ஆனாலும் திருமணம் ஏது என்று அறிய பின் முடிவுக்கு வந்துவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆச்சு? திருமண நேரம் எல்லாம் வந்துவிட்டது.
குருநாதர் :- (இராவனேஸ்வரர்) ஈசனாரே, எது என்று புரிய, அதாவது இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தேன். பின் என்னை வெளிக்காட்ட. அதனால் திருமணமும் நடக்கப்போகின்றது. நிச்சயம் தன்னில் எவை என்று புரிய…
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா, இப்பயாவது நான் என் குழந்தையை , என் மகள் சீதையை பார்க்கணும்பா? என் குழந்தையை திருமணம் வரைக்கும் வந்துட்டாப்பா. இப்பயாவது நான் பார்க்கணும் கண்களால் நல்லா
குருநாதர் :- (ஈசனார்) ஆனாலும் பின் யான் பொறுத்திருக்கும் வரை நிச்சயம் பொறுத்திரு. நீ வாயை திறக்கக்கூடாது என்று
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஈசன் என்ன சொன்னார்? நீ வெயிட் பண்ணு. நான் சொல்ற வரைக்கும் நீ வாயை திறக்கக் கூடாது, என்று சொல்லிட்டு கட்டி போட்டாரு. யாரை?
அடியவர் :- இராவணேஸ்வரரை ..
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரரை கட்டி போட்டாரு.
===========================
# ஸ்ரீ ராமர் - அன்னை சீதா தேவி திருமணம்.
===========================
குருநாதர் :- இதை அறிவித்து எவ்வாறு என்பதை எல்லாம் அறிந்து கூட இதனால் பின் திருமணமும் நன்றாக ஆயிற்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால் என்ன பண்ணாரு? திருமணமும் எல்லாம் ஏற்படாயிற்று. நல்ல காரியம் நடந்தது.
===========================
# வனவாசம் பிரச்சனை ஆரம்பம்……..
===========================
குருநாதர் :- ஆனாலும் இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகின்றது. பின் எப்படி? ஏது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் பிரச்சனை
அடியவர் :- ஆரம்பிக்கிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- பிரச்சனையே ஆரம்பிக்கின்றது.
குருநாதர் :- பின் முடிந்தவுடன் பின் பெரும் சண்டை. அவை யெல்லாம் நிச்சயம் தெரியும். இதனால் வனவாசம் போக வேண்டும் என்று ராமன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கல்யாணம் ….எல்லாம்… எல்லாரும் வந்து சந்தோஷமா இருந்தாங்க. ஆனால் ஸ்ரீ ராமன் என்ன பண்ணாரு? ஸ்ரீ ராமன் காட்டுக்கு வனவாசம் போகணும்னு முடிவு எடுத்துட்டாங்க எல்லாரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment