அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 1
நாள் :- பங்குனி உத்திரம் 31/3/2026 , செவ்வாய்க்கிழமை
இடம் :- வேலோடு மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
குருநாதர் :- அப்பனே, அன்பாகவே அப்பனே, பின் அழைத்தாலே அப்பனே, சந்தோஷமே முருகனுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அன்பாக.. முருகா என்று சொன்னாவே, அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
குருநாதர் :- அப்பனே, நலங்கள். அப்பனே, அனைத்து சித்தர்களும் கூட அப்பனே இங்கு, அப்பனே, தவம் ஏற்றியுள்ளோம். அப்பனே, எதை அன்று அறிய , அப்பனே, ஏன், எதற்காக, பல அப்பனே, இப்ப தேவர்களும் அப்பனே இங்கு வந்து, அப்பனே, பல வழியிலும் கூட முருகனை துதித்து பல வெற்றிகள் பெற்றனர் என்பதை அப்பனே, ஏன், எதற்கு என்றெல்லாம் செப்புகின்றேன் இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா, நாம அப்படியே படிச்சுட்டு போட்டுமா?
அடியவர் 1 :- அர்த்தம் சொல்லுங்க, ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- பல சித்தர்களும் வந்து, பல ஞானிகளும் வந்து இங்க தவம் செஞ்சிருக்காங்க வந்து. ஏன் செஞ்சிருக்காங்க? நான் அடுத்து சொல்லப்போறேன். தேவர்களும் இங்க வந்திருக்காங்க. ஏன்னு நான் சொல்லப்போறேன் என்று இப்ப அகத்திய முனிவர் சொல்றாரு.
குருநாதர் :- அப்பனே, எவை, ஏது என்று அறிய, அப்பனே, முருகன் சிறு விளையாட்டாக, அதாவது சிறுபிள்ளைத்தனமாக ஏதோ செய்து விடுவான் அப்பனே. ஆனால் கடைசியில், அப்பனே, அதுவும் பெரும் வினையாக போகும் அப்பா ஈசனுக்கு. இதுவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, முருகர் வந்து விளையாட்டுக்காக எதையோ செஞ்சுடுவாராம், ஆனா அதுவே என்ன ஆகும்?
அடியவர் 1 :- பெரிய பிரச்சனையா வந்து நிற்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அதே பெரிய பிரச்சனையாக நிற்கும், ஆனா அந்த பிரச்சனை என்ன ஆகும்? மக்களுக்கு நன்மை செய்ய மாதிரி தான் இருக்கும்ன் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, இதனால் பின் அறிந்தும் உண்மைதனை, ஏன், எதற்கு என்று கைலாய மலை தன்னில் கூட, பின் சிவன், பார்வதி, பின் அறிந்தும் கூட அனைவரும், பின் அதாவது முனிவர்களும் தேவர்களும் எண்ணற்ற, பின் அனைவரும், பின் இறை பால் பக்தி இருப்பவர்கள் எல்லாம் வரச் சொல் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, கைலாய மலையில ஈசனும் பார்வதி தேவியும் என்ன சொல்றாங்க? கைலாயத்துக்கு எல்லோரையும் அழைக்கிறாங்க. யாரெல்லாம் நல்ல பக்தியில இருக்கிறாங்களோ எல்லாரும் வர வை. எல்லா ஞானிகளும், எல்லாம் முனிவர்களும், எல்லாரும், சித்தர்களும் வரவேண்டும் என்று சொல்கின்றார்.
===========================
# முருகப் பெருமானின் வேல் திருவிளையாடல் ஆரம்பம்…
===========================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறாக அனைவரும் வந்தனர். ஆனாலும் முருகன் பின் உறங்கிக் கொண்டிருந்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்துட்டாங்க வந்து ஆனால் முருகன் என்ன பண்ணாரு?
அடியவர் 1 :- தூங்கிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- தூங்கிட்டு இருக்காரு வந்து..
குருநாதர் :- எதை எவை என்று அறிய ஆனால் பின் எதை என்று புரியாமல் கூட ஆனால் விழித்துப் பார்த்தான் எதை என்று கூற அனைவரும் வந்தனர். ஆனால் முருகனுக்கு பின் கோபம் பின் அதிக அளவு வந்துவிட்டது. அனைவரும் அழைத்தார் தந்தை. ஆனால் நிச்சயம் அதாவது தாய் தந்தையும் என்னை அழைக்கவில்லையே என்னை எழுப்பவில்லையே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகருக்கு விளையாட்டுத்தனமாக என்ன பண்ணிட்டாரு? தூங்கிட்டாரு. அதுக்கு என்ன சொல்றாரு வந்து?
அடியவர் 1 :- என்னை கூப்பிடல.
சுவடி ஓதும் மைந்தன் :- என்னை கூப்பிடவே இல்லையே. எல்லாரும் கூப்பிட்டாரு எங்க அம்மாவும் அப்பாவும்..
அடியவர் :- அம்மாவும் அப்பாவும் எல்லோரையும் கூப்பிட்டாங்க. ஆனா என்னை கூப்பிடலைன்னு அவருக்கு …
சுவடி ஓதும் மைந்தன் :- என்னை கூப்பிடலையேன்னு சொல்லிட்டு..
அடியவர் 1 :- கோவம் வந்துச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- கோவம் வந்துச்சு.
குருநாதர் :- அறிந்தும் அனைவரும் மத்தியில், பின் தாயே தந்தையே நில்லும். அனைவரும் அழைத்திருக்கின்றாய். பின் அதாவது இங்கே ஒருவன் இருப்பதை மறந்துவிட்டாயா நீங்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சொல்லுங்க ஐயா
அடியவர் :- அதாவது முருகன் கேக்குறாரு எல்லாத்தையும் கூப்பிட்டீங்களே. நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துட்டீங்களே, பின்னே சிவன் கிட்டயும் சக்தி கிட்டயும் அவர் போயிட்டு கேக்குறாரு அவர்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேக்குறாரு வந்து
குருநாதர் :- எவை என்று புரிய அப்பொழுது யான் பிள்ளை இல்லையா? எதை என்று புரிய அதாவது எவை என்று அனைவரும் நீங்கள் தான் சொன்னீர்களே. அழகான பிள்ளையே!!!!!!! உலகத்தை காக்க வந்தவனே!!!!!! என்றெல்லாம் நீங்கள் தான் என் கொஞ்சி கொஞ்சி எனை வளர்த்தீர்களே. இப்பொழுது மறந்துவிட்டீர்களா? என்று எண்ணி.
அடியவர் :- முருகன் கேட்டாரு. நான் அழகான பிள்ளை. இந்த உலகத்தை காப்பாத்த வந்திருக்கேன், எல்லாம் சொன்னீங்களே. இப்படி சொல்லிட்டு நீங்க என்னை கூப்பிடாம விட்டீங்களேன்னு கேக்குறார்.
குருநாதர் :- எது ஏது என்று அறிய ஆனாலும் அனைவருக்கும் நீங்கள் கட்டளையிட போகின்றீர்கள் என்பதை எல்லாம் யான் அறிந்திருக்கின்றேன். ஆனாலும் என்னையும் பின் எழுப்பி, நிச்சயம் பின் எவை என்று அமர்த்தி வைத்திருக்கலாமே நீங்கள்? என்று கோபமுடன் பின் பேசினான்.
அடியவர் :- யார் யாருக்கு என்னென்ன கட்டளை கொடுக்க போறீங்கன்னு எல்லாம் எனக்கு தெரியும். அப்படி இருந்தும் என்ன வந்து நீங்க எழுப்பாமல், அவங்களுக்கு கட்டளை கொடுக்க போறீங்களே…. அப்படிங்கிற ஒரு கோபத்தில் அவர் கேக்குறாரு.
குருநாதர் :- அனைவரும் சித்தர்களும் எதை என்று கூட ஞானியர்களும் பின் பல பின் தேவர்களும் எதை என்று புரிய, நிச்சயம் முருகனே பின் அனைத்தும் நீதான். ஏதோ தவறு நடந்துவிட்டது என்று பின் உறக்க கத்தினார்கள் அனைவரும் சேர்ந்து.
அடியவர் :- பாக்குறாங்க தேவர்கள் சித்தர்கள் எல்லாம். இது ரொம்ப பிரச்சனை ஆயிப்போகுதுன்னு சொல்லி, எல்லாரும் போயிட்டு, முருகன் கிட்ட என்ன சொல்றாங்க? முருகா எல்லாமே நீதான் இங்க. நீ இல்லாம எதுவுமே இல்லை அப்படின்னு முருகன் கிட்ட சரணடைகிறாங்க.
குருநாதர் :- எது என்று அறிய நிச்சயம் தாயும் தந்தையும் இப்படியும் நினைத்திருப்பார்கள் அல்லவா? குழந்தை உறங்கட்டும் என்று? என்று பின் சித்தர்கள் அனைவரும் பின் ஒன்று கூடி.
அடியவர் :- அவங்க என்ன சொல்றாங்கன்னா நீ சின்ன குழந்தை. நீங்க தூங்கி இருப்பாங்கன்னு நினைச்சு, அவங்க உங்களை எழுப்பாம விட்டுட்டாங்க. இதை பெருசு படுத்த வேணாம்னு முருகன்ட்ட சொல்லி பாக்குறாங்க.
குருநாதர் :- எது என்று புரிய அறிய யான் சிறுபிள்ளையா ????? நிச்சயம் பின் அறிந்தும் கூட.
பின் அப்படி இல்லை. நீங்கள் தான் அனைத்திலும் வல்லவன் என் குழந்தை என்றெல்லாம் எதை என்று, அதாவது பின் நீங்களே சொன்னீர்கள் என்று சித்தர்களை பார்த்து, எவை என்று யான் எது என்று புரிய
அடியவர் :- முருகன் சொல்றாரு. நான் வந்து சின்னவன் இல்ல. எனக்கு எல்லாம் தெரியும். ஆனா எல்லாம் தெரிஞ்சிருந்தும், நீங்க இந்த நேரத்துல இந்த மாதிரி சொல்றது, என்னால ஏத்துக்க முடியாது அப்படிங்கிறாரு.
குருநாதர் :- எது என்று புரிய அனைவரும் என்னை ஏமாற்றுகின்றீர்கள் என்று பட்டத்தை கட்டிவிட்டான் முருகனே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் சேர்ந்து?
அடியவர் :- என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லிட்டார் அவர்.
குருநாதர் :- எதை எவை என்று புரிய, யான் இனிமேல் கைலாயத்தில் தங்கப்போவதில்லை என்று நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- இனிமேல் நான் கைலாயத்தில் இருக்க போவதில்லை. அப்படின்னு முருகன் சொல்லிட்டார்.
குருநாதர் :- எவை என்று புரிய எந்தனக்கு பிடித்தார் போல் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய, எங்கு பின் சமநிலை இருக்கின்றதோ அங்கு சென்று விடுகின்றேன் யான். தாயும் வேண்டாம். தந்தையும் வேண்டாம். யாரும் வேண்டாம் என்று.
அடியவர் :- அவர் என்ன செய்றாரு? எனக்கு தாய் வேணாம். தந்தையும் வேணாம். நான் எங்க அமைதியா இருக்கோ, அந்த இடத்துக்கு போயிருவேன் அப்படிங்கிறாரு.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவரின் அறிவுரை, சமாதானம்.
===========================
குருநாதர் :- எதை என்று அறிய எப்பொழுது ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அறிந்தும் கூட பின் யானும் கூட பின் அதாவது பின் எதை என்று கூற, இப்படி எல்லாம் பேசக்கூடாது சிறுவயதாக இருந்து என்று
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரும் சொல்றாரு. இப்படி எல்லாம் பேசக்கூடாதுப்பா. அகத்தியர் அவர்கிட்ட சொல்றாரு. என்ன சொல்றாரு?
அடியவர் 1 :- சின்ன பிள்ளை
சுவடி ஓதும் மைந்தன் :- நீ சின்ன பிள்ளை. இப்படி எல்லாம் தந்தை கிட்ட பேசக்கூடாது அப்படினு சொல்லிட்டு என்ன பண்றாரு?
அடியவர் :- சமாதானப்படுத்துறார்
சுவடி ஓதும் மைந்தன் :- சமாதானப்படுத்துனார்
குருநாதர் :- எதை எவை என்று புரிய இருப்பினும் பின் தாய் தந்தையர் ஒரு வார்த்தை பேசுகின்றார்களா என்ன? என்று.
அடியவர் :- இவ்வளவு நடந்தும், அம்மா அப்பா எதுவும் இன்னும் பேசல தானே அப்படிங்கிறாரு அவர்.
===========================
# ஆதி ஈசன் , அன்னை பார்வதி தேவியின் திருவிளையாடல்.
===========================
குருநாதர் :- ஏன் எதற்கு எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் இத்தேசம் (இலங்கை) அழியப்போகின்றது என்பதை எல்லாம் பின் முன்கூட்டியே ஈசன் பார்வதிக்கும் தெரியும். இவையெல்லாம் ஒரு திருவிளையாடலே என்பதை நிச்சயம் தன்னில் கூட,பின் ஈசன் பார்வதிக்கும்.
அடியவர் :- அதாவது தேசம் அழியப்போவது. இதெல்லாம் ஒரு திருவிளையாடல் செஞ்சு முருகனை ஏதோ ஒரு காரியத்துக்கு அனுப்புறதுக்காக செய்யப்பட்ட ஒரு திருவிளையாடல் இதெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆம்….
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய பின் யானும் உணர்ந்தேன். இவை நிச்சயம் அதாவது ஈசன் பின் எப்படியாவது திருவிளையாடல் நடத்துவான்.
அடியவர் :- இது எல்லாமே இறைவனுடைய திருவிளையாடல் அப்படிங்கறத அவர் புரிஞ்சுக்கிறார்
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரும் புரிஞ்சுக்கிறார் வந்து.
குருநாதர் :- ஆனாலும் ஏன் எதற்கு எவை என்று புரிய அதேபோலத்தான் கலியுகத்தில் ஈசனை நம்பி நம்பி ஒருவருக்கெல்லாம் நிச்சயம் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து பார்க்கின்றான். ஆனால் கடைசியில் நிச்சயம் பின் எதை என்று புரிய எவை என்று அறியாமல் நிச்சயம் பின்னோக்கி சென்று விடுகின்றான். இதனால்தான் வினைகள் பல சேர்கின்றது மனிதனுக்கு.
அடியவர் :- அதாவது ஈசன் நோக்கி வரும்போது மக்களுக்கு கஷ்டம் வருது. ஆனா அந்த கஷ்டத்தை விட்டு நம்ம வெளிய வரணும்னு சொன்னா, ஈசனை நம்ம கெட்டியாக புடிச்சுக்கணும். அப்படி பிடிக்காததுனாலதான் என்ன செய்றாரு? ஈசனும் விலகி போயிடுறாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாருன்னா, ஈசன் கொஞ்சம் சோதிப்பார். மனுஷனை சோதிப்பார். அப்ப சோதித்த பிறகு அதை கொஞ்சம் நம்ம என்ன பண்ணிடுவோம்? என்னடா இவ்வளவு கஷ்டம் வருதுன்னு என்ன பண்ணிருவோம்? நம்ம வந்து பக்தியில இருந்து?
அடியவர் 1 :- விலகிடுவோம்
சுவடி ஓதும் மைந்தன் :- விலகிடுவோம். பின்னோக்கி சென்று விடுவோம்ன்றாரு வந்து.
குருநாதர் :- ஆனாலும் இதைத்தன் அறிவித்து எவை என்று புரிய ஆனாலும் கந்தனும் எதை என்று கூட புறப்படுகின்றேன் தாயே தந்தையே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கைலாய மலைத்திலிருந்து என்ன பண்றாரு முருகர்? நான் கிளம்புறேன்.
குருநாதர் :- எது என்று அறிய, எனக்கு ஒரு தேசம் இருக்கின்றது. அங்கு செல்வேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு ஒரு தேசம் இருக்கின்றது அங்கு நான் வந்து செல்லப்போறேன்னு சொல்லிட்டு கிளம்புறார்
குருநாதர் :- எது என்று அறிய அனைவரும் தவிக்கின்றார்கள். ஆனாலும் நிச்சயம் பின் யார் பேச்சையும் பின் அதாவது முருகன் கேட்கவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்றாரு?
அடியவர் 1 :- நான் போய்தான் ஆவேன்
சுவடி ஓதும் மைந்தன் :- நான் போய்தான் ஆவேன்
சுவடி ஓதும் மைந்தன் :- நான் யார் பேச்சையும்
அடியவர் 1 :- கேட்க மாட்டேன்
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்க மாட்டேன்
குருநாதர் :- எதை அறிவித்து எதை என்று அறிய பின் அப்பொழுது போகனும் வந்து எதை என்று அறிய, நிச்சயம் பின் அவ்வாரெல்லாம் பேசக்கூடாது. பின் குழந்தாயே எதை என்று புரிய என்னுள் எவை என்று அறிய பின் உன்னைத்தானே எண்ணி இருக்கின்றேன் யான்? நிச்சயம் என் பிள்ளையாகவே எண்ணி இருக்கின்றேனே!!!!!! இப்படி எல்லாம் பேசுதல் சரியா என்றெல்லாம்.
குருநாதர் :- அவர் கேக்குறாரு என் பிள்ளையாவே இருக்கியே. இப்படி எல்லாம் பேசுனது சரியா அப்படின்னு போகர் சொல்லி அவர் கேட்காம சொல்றாரு அவர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா
குருநாதர் :- எதை என்று புரிய இவ்வாறாகவே பல வழியில் கூட பல பலவற்றை கூட கடந்து. ஆனாலும் எதை என்று அறிய அதாவது பின் முருகன் பின் அதாவது புறப்படுகின்றேன் என்று மயில் மீது ஏறி.
அடியவர் :- முருகன் என்ன செய்கிறார்? யாரோட பேச்சையும் கேட்காம மயில் மேல ஏறி புறப்பட்டுட்டாரு.
குருநாதர் :- எது என்று புரிய ஆனாலும் பின் ஒருமுறை யோசித்தான் முருகன். பார்ப்போம். பின் அனைவரும் நம் அருகே, அதாவது நிச்சயம் பின் வருகின்றார்களா என்று.
அடியவர் :- முருகன் யோசிக்கிறார். சரி பார்ப்போம். இவ்வளவு செஞ்சும் இங்க என் வீட்டுக்கு வராங்களா. பின்னு பார்ப்போம். அப்படின்னு அவர் டெஸ்ட் பண்ணி பார்க்கிறதுக்காக இதை செய்றாரு.
குருநாதர் :- எதை என்று புரிய ஆனாலும் பின் அனைவரும் தடுத்து நிறுத்தினர் ஆனாலும் பின் முருகன் என் மீது பாசம் இருந்தால் நிச்சயம் அனைவரும் என்னோடு வாருங்கள். நிச்சயம் தாய் தந்தையர் இங்கே இருக்கட்டும் என்று. என்னை எழுப்பவில்லை அல்லவா?
அடியவர் :- அவர் சொல்றாரு நீங்க எல்லாரையும் சமாதானப்படுத்துறீங்க. உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா நான் போற இடத்துக்கு எல்லாரும் வாங்க. நம்ம அம்மா அப்பாவை மட்டும் இங்க இருக்கட்டும் அப்படிங்கிறாரு.
குருநாதர் :- அப்பொழுது எதை என்று கூற பின் தாய் தந்தையர் இருக்கும் இடம்தான் கைலாயமா? நிச்சயம் யாமும் கைலாயத்தை அமைப்போம் என்று விளையாட்டுத்தனமாகவே இவையெல்லாம்
அடியவர் :- அவர் சொல்றாரு, ஏன் எங்க அம்மா அப்பா இருக்கிற இடம் மட்டும்தான் கைலாயமா? நானும் கைலாயம் அமைப்பேன். அப்படின்னு விளையாட்டுத்தனமா முருகன் சொல்றாரு. அவர் சொல்றாரு
குருநாதர் :- எதை என்று அறிய ஆனாலும் ஈசன் பார்வதியும் அமைதியாகவே இருந்தனர். ஏதும் பேசவில்லை. ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறெல்லாம் பின் செய்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இத்தேசத்தை காக்க முடியும் என்பதை எல்லாம் ஈசனுக்கும் பார்வதிக்கும் பின் நன்றாகவே தெரியும்.
அடியவர் :- இதெல்லாம் ஈசனும் பார்வதியும் தெரிஞ்சு தான் செய்றாங்க. ஏன்னா இந்த தேசத்தை காப்பாத்தணும்னா, முருகன் இப்படி வெளியே வந்து, ஒரு இடத்தை அமைக்கணுங்கிறதுதான் விதியா இருக்குது.
( அன்பு குருநாதர் வாக்கு உரைக்கும் இவ்விடத்தில், இவ் நேரத்தில் ஆலய மணி ஒலித்தது….)
குருநாதர் :- எவ்வாறாக எதை என்று புரிய இவ்வாறாகவே பின் மயில் மீது எது என்று அறிய, அழகாகவே எவை எதை என்று புரிய. பின் நேரடியாகவே பின் வாருங்கள் அனைவரும். செல்வோம் ஓரிடத்திற்கு என்று.
அடியவர் :- முருகன் என்ன செய்கிறார்? மயில்ல ஏறி எல்லாத்தையும் கூப்பிட்டுக்கிட்டு, வாங்க…. நான் எல்லாம் ஒரு இடத்துக்கு நான் செல்வோம். அப்படின்னு சொல்லி எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு இடத்துக்கு வராரு அவர்.
குருநாதர் :- மகனே எதை என்று புரிய அப்பொழுதுதான் பின் பேசுகின்றார் பின் ஈசனாரும் !!!!!.
மகனே !!!!!! எதை என்று புரிய எதை எவை என்று எவை என்று அறிவிக்க. இதனால் என்ன பயன்? ஏது என்று அறிய? பின் எங்கு செல்லப் போகின்றாய் எங்களை விட்டு?.
அடியவர் :- அப்ப ஈசன் கேக்குறாரு. நாங்க எது சொல்லியும் கேட்காம எங்களை விட்டுட்டு நீங்க எந்த இடத்துல போய் இருக்க போறீங்கன்னு கேக்குறாரு.
குருநாதர் :- எதை என்று புரிய என்னையும் கூட, நீங்கள் தான் இப்படி உலகத்தை காக்க வந்தவன் என்றெல்லாம் பின் ஊட்டி ஊட்டி எதை என்று புரிய. ஆனால் எழுப்பவில்லையே அனைவரும். பின் ஏது என்று புரிய பின் அனைவரும் பின் அழைத்து பின் வந்துவிட்டு என்னை ஏன் எழப்பவில்லை தந்தையே.
அடியவர் :- அவருக்கு திரும்ப திரும்ப கேக்குறாரு. எல்லாரையும் வர சொல்லிட்டு, என்னை மட்டும் ஏன் எழுப்பாம விட்டீங்க. இதுக்கு என்ன காரணம்? சொல்லுங்க? ன்னு கேக்குறாரு முருகன்.
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் பின் அதாவது உன் விருப்பம் போலே செய் மகனே. அறிந்தும் ஏது என்று புரியாமல் இருந்தாலும் பின் அனைவரும் இப்படி பின் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால், யானும் பின் உன் அன்னையும் இங்கு இருப்பதா? எங்களுக்கு பின் யார் துணை? என்று.
அடியவர் :- நீ வந்து எல்லாத்தையும் கூட்டிட்டு போயிட்டீங்கன்னா முருகா, நானும் அன்னையும் மட்டுமா இருக்கிறது? எங்களுக்கு யார் துணை? என்று ஈசன் கேக்குறாரு முருகன் கிட்ட.
குருநாதர் :- எவை எது என்று புரிய இதோ இருக்கின்றானே எவை என்று கூற. பின் அதாவது பின் எல்லா எல்லாவற்றையும் கூட சமாளிப்பது வல்லவனே பிள்ளையோன் எதை என்று கூற. பின் அவன் இருக்கின்றானே. அவனே உங்களுக்கு பிள்ளை என்று.
அடியவர் :- அவர் பிள்ளையாரை சொல்றாரு. பிள்ளையார் தான் எல்லாத்தையும் சமாளிப்பாரே. அவரே இருக்கட்டும். நான் வந்து எல்லாரையும் கூட்டிட்டு போறேன்றாரு.
குருநாதர் :- பின் அவனை மட்டும் எழுப்பி பின் தாயவள் மடியில் பின் உறங்க செய்துவிட்டாள். அப்பொழுது என் மீது என் மீது பாசம் இல்லையா உங்களுக்கு? ஏன் எழுப்பவில்லை?
அடியவர் :- அவர் கேக்குறாரு. பிள்ளையாரை மட்டும் நீங்க மடியில போட்டு தூங்க வச்சிருக்கீங்க. ஆனா என்னை எழுப்பல. பிள்ளையாரை மட்டும் எழுப்பிட்டீங்க. அப்ப என் மேல பாசம் இல்லையான்னு கேக்குறாரு.
குருநாதர் :- எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் ஏன் எதற்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே சரி. என்னதான் உன் முடிவு? என்று. பின் ஆனாலும் பின் மகனே இவ்வாறு சென்று விடாதே. இங்கு பின் உலகம் அழியப்போகின்றது பின் கலியுகத்தில் எதை என்று புரிய மனிதன் புரிந்து கொள்ளாத தன்மைகள் எல்லாம் கிடைத்து, பாவத்தை ஈர்த்துக்கொள்ள போகின்றான் அதனால்தான் அனைவரையும் யாங்கள் அழைத்தோம் என்றெல்லாம் பார்வதி தேவியும் கூட.
அடியவர் :- பார்வதி தேவியும் சொல்றாங்க கலியுகத்துல இந்த உலகத்திலிருந்து நிறைய அழிவுகள் வரப்போகுது. அதனால மக்களை காக்குறதுக்காக இவங்க எல்லாம் கூப்பிட்டு நாங்க சில விஷயங்கள் சொல்லிட்டு இருந்தோம். அதனால நீங்களும் இப்ப நம்மள விட்டு போக வேணாம்னு, அந்த அம்மா சொல்றாங்க. முருகன் கிட்ட.
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் தத்துவம் அறிந்து கூட இதனால் அனைவருக்கும் எவை என்று ஒரு வேலை இருக்கின்றது. அறிந்தும் பின் அனைத்தும் கொடுக்கப் போகின்றேன் என்றெல்லாம் பின் ஈசனாரும்.
அடியவர் :- ஈசன் சொல்றாரு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை இருக்குது. அவங்களுக்கு என்னென்ன வேலையோ, அந்த வேலைகளை அவங்களுக்கு நான் கொடுக்க போறேன். அப்படிங்கிறாரு.
குருநாதர் :- அதனால் நிச்சயம் மீண்டும் அறிந்தும் பின் எதை என்று முருகனும் கூட, அதாவது பின் நீங்கள் அனைவரும் அதாவது தாய் தந்தை பக்கமா? என் பக்கமா? என்று.
அடியவர் :- அவர் கேக்குறாரு நீங்க என்ன தாய் தந்தை பக்கமா என் பக்கமான்னு சித்தர்களை பார்த்து அவர் கேக்குறாரு.
குருநாதர் :- அப்பப்பா இவையெல்லாம் நல்லதற்காகத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு திருவிளையாடல் தான் இவையும் கூட.
அடியவர் :- அவர் சொல்றாரு இதெல்லாம் ஒரு திருவிளையாடல் தான். இதெல்லாம் நல்லதுக்காக தாங்க சொல்றாரு அவர்.
குருநாதர் :- ஏன் எதற்கு எவ்வாறாக இதனால் பின் அனைவரும் பின் தேவர்களும் எதை என்று புரிய பின் முனிவர்களும் அதாவது ரிஷிகளும் சித்தர்களும் அனைவரும் அமைதியாகி போய் அமைதியாகி போயினர்
அடியவர் :- இதை கேட்ட பிறகு அவங்களுக்கு வந்து தெளிவு வந்து அவங்க அமைதி ஆயிட்டாங்க
குருநாதர் :- எதை என்று கூற அனைவரும் கூட இப்படி தலை பின் ஆட்போதா அப்படி பின் தலை ஆட்டுவதா என்றெல்லாம். அனைவரும் பின் அப்படியே நின்றோம்.
அடியவர் :- இது ஒண்ணுமே சொல்ல முடியாம பேசாம எல்லா சித்தர்களும் நின்றதுல அகத்தியர் சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் அமைதியா நின்னாங்க. இப்படி தலை சாய்க்கிறதா? அப்படி தலை சாய்க்கிறதா? அதனால என்ன பண்ணாங்க? வந்து எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க.
===========================
# அன்னை பார்வதி தேவி அளித்த மகிமை புகழ் வேல்.
===========================
குருநாதர் :- எதை எவை என்று உணர இதனால் பின் அதாவது பின் எதை என்று அறியாமல் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட சரி மகனே எதை என்று அறிய. இதோடு எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பாசத்தோடு பின் அதாவது ஏதாவது ஒன்றை நான் தருகின்றேன். இவ் வேலையாவது எடுத்துச் செல் என்று நிச்சயம். பின் வேண்டாம் வேண்டாம் என்று பின் கந்தனும் கூட.
அடியவர் :- அம்மா சொல்றாங்க. இந்த வேலை, சரி கொண்டு போ அப்படின்னு பாசமா கொடுக்குறாங்க. அதையும் வேணாங்கிறாரு முருகன்.
குருநாதர் :- எதை எவை என்று புரிய ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் இவையெல்லாம் அறிந்தும் கூட இதனால் பின் விளையாட்டுகளில் திறன் பெற்றவனே முருகன். எதை என்று கூற விளையாட்டுகளிலே பல பாவங்களை போக்குபவன் பின் முருகனே.
அடியவர் :- முருகன் தான் எல்லா விளையாட்டுகளிலும் கட்டளை செஞ்சவர். எல்லா திருவிளையாடலையும் செஞ்சு பாவத்தை போக்குறதுலயும் முருகன் தான் சிறந்தவர்.
குருநாதர் :- (அன்னை பார்வதி தேவி வாக்கு) எதை எவை என்று அறிய எதை என்று புரிய இதனால் நிச்சயம் பின் தாயவளும் கூட, பின் குழந்தாய் அழகாக நீ உறங்கிக் கொண்டிருந்தாய். அதனால்தான் நான் எழுப்பவில்லை என்று நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- (முருகப்பெருமான் வாக்கு) அதாவது யான் குழந்தை என்று எப்படி சொல்கின்றாய் தாயே நீ ? பின் யான் வளர்ந்தவன் என்று.
அடியவர் :- அம்மா அவங்க சொல்றாங்க குழந்தையா நீ தூங்கிட்டு இருந்ததுனால, நான் உன்னை எழுப்பல அப்படின்னு சொல்றதுக்கு… முருகன் சொல்றாரு. நான் சின்ன பையன் என்று எப்படி நீங்க சொல்ல முடியும்? னு அம்மாவோட அவர் வாதிடுறாரு.
===========================
# முருகப்பெருமான் கோபத்தில், கைலாயத்திலிருந்து வீசி எறிந்த வேல் விழுந்த இடம் - வேலொடு மலை முருகன் ஆலயம்.
===========================
குருநாதர் :- எதை எவை என்று அறிய பின் அதாவது மீண்டும் பின் அதாவது தாயும் பின் தந்தையும் இணைந்து இதோ வேல் ஒன்றை வைத்துக்கொள் என்று. ஆனாலும் பின் வேலை பின் வேகமாக வீசுகின்றான். பின் கையாயத்திலிருந்து பின் மடமடவென்று அது நிச்சயம் பின் பறந்து நோக்கி அப்படியே வந்து கொண்டே இருக்கின்றது.
அடியவர் :- அவர் வேலை கொடுக்க, அவர் வேலை என்ன செய்றாரு? கையாயத்திலிருந்து அந்த வேலை வீசுறாராம். அந்த வேல் அங்கிருந்து அங்கிருந்து பறந்து வந்து கொண்டே இருக்காம்.
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் இப்படி பின் பல திருவிளையாடல்கள். ஆனால் கடைசியில் எதை என்று புரிய நிச்சயம் சத்தம் பல் மடங்கு கேட்டு இங்கே அதாவது விழுந்தது அவ்வேல்.
அடியவர் :- “முருகா” !!!!!! !!!!!! !!!!!! !!!!!! !!!!!! !!!!!!
( அங்குள்ள அடியவர்கள் அனைவரும்…மாபெரும் இறை திருவிளையாடல் ரகசியம் உணர்ந்து….பக்தி பரவசம் அங்கு…...)
அடியவர் :- அந்த வேல் விழுந்த இடம்தான் இதுன்னு சொல்றாரு ஐயா.
( அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் தொடரும்….. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment