​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 5 April 2026

சித்தன் அருள் - 2177 - அன்புடன் அகத்தியர் - ஆதி இராமாயண காவியம் - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 2

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,  மாபெரும் சிவ பக்தர்,  மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர்  காவியம்……

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,   மகிமை புகழ், இராமாயண காவியம்…….

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6

===========================
#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 
===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 


===========================
அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 2
===========================

(அடியவர்கள் சிவ புராணம் பாராயணம் செய்து முடித்த பின்னர், மீண்டும் கருணைக்கடல் குருநாதர் வாக்குகள் உரைத்தார்கள்) 


அடியவர் :- ஜீவநாடி மூலமா நம்மளுக்கு… முக்கியமா இராவணேஸ்வரர் ரகசியத்தை நம்மளுக்கு சொல்லிட்டு இருக்காரு. ஆகவே இதை கேக்குறதுக்கும் நம்ம ஒரு புண்ணியம் பண்ணிருக்கணும். உங்களுடைய இந்த பொன்னான நேரத்தை நீங்க எல்லாரும் பயன்படுத்துங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சொன்ன மாதிரி, ஜீவநாடி கேட்பதற்கும் ஒரு புண்ணியம் வேணும். புண்ணியம் இல்லைன்னா கேட்க முடியாது. அது ஏதோ ஒன்னு, ஏதோ படிக்கிறாங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். இதை கேட்டாவே நம்மளுக்கு ,  ஏதோ ஒரு ஜென்மத்துல ஒரு ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதுவும் அவரிடத்திலிருந்து. யாரு? ( இவ் ஆலயத்தில் ) ஈசனார் ,  அம்பாளும் இருகாங்க. அவங்க இடத்துல இருந்து நம்ம கேட்கின்றோம் என்றால்  பெரும் புண்ணியம். படிக்கிறேன், எல்லாரும் கேளுங்க. 

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக அழுது புலம்பினான். எங்கே, ஏது என்று அறிய. 

அதாவது, ஈசனாரே என்னிடத்திலே விளையாடுகின்றீரா நீங்கள்? பின் ஏன், எதற்கு? இவ்வாறு பின் தாயும் கொடுத்துவிட்டு, பின் அதாவது பாசத்தையும் பின் கொடுத்துவிட்டு, கடைசியில் பார்த்தால் நிச்சயம் ஏதுமில்லாமலே. 

இதனால் மனம் வருந்தி, மனம் வருந்தி, பல இடங்களில் போய் , பின் பைத்தியம் போல் சுற்றினான் பின் ராவணேஸ்வரனே. 

இதனால் பின் அவன்தன் பின் தாயின் மீது அளவு கடந்த பக்தியால் என்னென்ன பின் நடந்தது என்பது எல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் இங்கிருந்தே செப்புவேன். 

===========================
#  ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தின் இராவணேஸ்வரர் ரகசியங்கள்….
===========================

குருநாதர் :-  ஏனென்றால் வாழ்க்கை பயணம் அவனுக்கு இங்கிருந்தே தொடங்கியது. இன்னும் கூட இவ் லங்காவை பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றான். இன்னும் சொல்வேன் நீண்ட வாக்கினை கூட.


அடியவர் :-  அகத்தியர் அய்யா  என்ன சொல்ராங்க என்றால் ,  ராவணேஸ்வரன் அம்மா இறந்த பிறகு……

சுவடி ஓதும் மைந்தன் :- (ராவணேஸ்வரன் அம்மா இறக்கவில்லை. கயிலாயம் போயிட்டாங்க... )

அடியவர் :-  அம்மா போன பிறகு.

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா அதெல்லாம் சொல்ல இன்னும். அதெல்லாம் வந்து சொல்லல.

அடியவர் :-  கைலாசத்துக்கு போன பிறகு.

சுவடி ஓதும் மைந்தன் :- கைலாசத்துக்கு போனாங்க. நான் சிவன் கிட்ட  போறேன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்.

அடியவர் :-  அதாவது அந்த அம்மா கைலாசத்துக்கு போன பிறகு அம்மா போயிட்டாங்களேன்னு…. அந்த வேதனையில பித்து பிடிச்சவர் மாதிரி, பைத்தியம் பிடிச்ச மாதிரி…. எல்லா இடமும் திரிஞ்சிட்டு இருந்தாராம். அவர் வாழ்க்கை நிறைய ரகசியங்கள் இருக்குமாம். இந்த தலத்துல இருந்து தான்… அவருடைய வாழ்க்கை எல்லாமே ஆரம்பிச்சுச்சுசாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க இருந்து… லங்கால இருந்து தான்?

அடியவர் :-  அதாவது இலங்கையில் இருந்து, அதாவது இந்த திருகோணமலை, இந்த பகுதியில…இங்க இருந்து தான் எல்லாம் ஆரம்பிச்சுச்சாம். இன்னும் அதோட ரகசியம் எல்லாம் இந்த இடத்துல வந்தே.. இந்த திருகோணமலை, இந்த ஏரியாவுல வந்து நான் உரைக்கிறேன் அப்படிங்கிறாரு அகத்தியர்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( அதனால இராவணேஸ்வரர் அம்மா,  அப்படியே நான் ஈசன் கிட்ட போறேன்…என்று சொல்லிவிட்டு… கைலாசத்துக்குன்னு சொல்லிட்டு… அப்படியே போயிட்டாங்க இராவணேஸ்வரர்  அம்மா. ) 

===========================
#  அன்னை சீதா தேவியின் பிறப்பு ரகசியங்கள்…..
# அன்னை சீதா தேவி பிறந்த இடம் “திருகோணமலை, இலங்கை”
===========================

குருநாதர் :- இதனால் சுற்றினான். ஆனாலும் பின் அழுகுரல்  மீண்டும் கேட்டது. பின் கோணமலையே அறிந்தும் எதை என்று புரிய. இதனால் அறிந்தும் அங்கும் இங்கும் பின் உறங்கிறான். இதனால் அழகாக குழந்தையின் சத்தம் கேட்டது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால… அங்கும் இங்கும் அலையும் பொழுது திருகோணமலையில் ஒரு சத்தம் கேட்டது. யாரோட சத்தம்? ஒரு குழந்தையோட சத்தம் கேட்டது. 

குருநாதர் :- குழந்தையும், ஆனாலும் இதுவும் ஈசன் நடத்தும் லீலையே என்று அறியும், ஏது என்று அறிய. 

குருநாதர் :- ஆனாலும் இப்பாசத்தின் அடிமைப்பட்டு இருப்பதால், நிச்சயம் பின் ஈசன் நடத்தும் நாடகம் என்று இவனுக்கு புரியவில்லை. 

குருநாதர் :- ஆனாலும் பின் அறிவித்து எதை என்று அழகாக பின் ஒளி பின் முகத்தில் தோன்றியது. அழகான… பின் அழகாக குழந்தையை கண்டான்.  அவனுக்கு மீண்டும். ஆனாலும் பின் பெண் குழந்தை என்றவுடனே, பின் அழகாக, இன்னும் சந்தோஷங்கள். நிச்சயம் தன் அதாவது பின் எதை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உடனே அவருக்கு இன்னும் என்ன ஆச்சாம்? மகிழ்ச்சி ஆயிடுச்சு. பெரும் மகிழ்ச்சி ஆயிடுச்சு. ஆனால்  ஈசன்தான் நடத்தும் நாடகம் என்று அவருக்கு …

அடியவர் :- தெரியல. 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரியல. அந்த சந்தோஷத்துல வந்து அவர் மிதக்கிறார். ஒரு குழந்தை…அதான் பெண் குழந்தை தான் தெரிஞ்சு போச்சு. ஆனா சந்தோஷமா மிதக்குறார். அடடா கிடைச்சிச்சடா திருப்பியும் சொல்லி… கிடைச்சிச்சுன்னு சொல்லிட்டு… அந்த பெண் குழந்தை வந்து…. அது திருகோணமலையில வந்து அந்த பெண்ணை வந்து பாக்குறாரு. சின்ன குழந்தை நல்ல ஒளி வீசும். 

குருநாதர் :- நிச்சயம் அப்பொழுதே இது இறைவன் தான் எதை என்று அறிய ….பின் ஈசன் தான் கொடுத்திருப்பான். நிச்சயம் தன்னை கூட இவைதன் நம் குழந்தையே என்று. 

குருநாதர் :-  “““““““““அவள் தான் சீதை.””””””””” 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அதுதான் சீதை அன்னை. ஈசனே அங்க திருகோணமலையில வந்து விட்டுட்டு போயிடுறாரு. ஏன் ஈசன் அப்படி வச்சிட்டு போறாருன்னா,  இராவணேஸ்வரர் அம்மா கைலாயம் போய்ட்டாங்க. அதனால இராவணேஸ்வரர், இவர் பைத்தியமா சுத்திட்டு இருக்காரு. அம்மா மேல பைத்தியக்காரர் இருந்தாருன்னு சொல்லிட்டு.  அந்த குழந்தையின் தெய்வீக தன்மையை பார்த்து இவர் நினைக்கிறார்… நம்மளுக்கு ஈசன் குழந்தை கொடுத்திருக்கிறார். 

குருநாதர் :- இன்னும் இன்னும் அழகாகவே… பின் அதாவது பின் ஈசனே !!!!! ஈசனே !!!!!  என்று தாயே !!!!!  தாயே !!!!!  என்று நிச்சயம் பின் போற்றி. அதாவது என் தாய் தான் இவள். என் தாய் தான் இவள் என்றெல்லாம் நிச்சயம் அனைவருக்கும் பறைசாற்றினான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த குழந்தையை பார்த்து… என் குழந்தை… என் தாய் தான் இவ…. திருப்பியும் வந்துவிட்டாள் என்று சொல்லி , அவர் இன்னும் சந்தோஷப்படுறார்.  யாரு அந்த குழந்தை? அந்த குழந்தை தான் சீதா அன்னை. என் தாய் வந்துட்டா. என் தாய் வந்துட்டான்னு சொல்லிட்டு இன்னும் வந்து அவர் என்ன பண்ணிட்டாரு? நிறைய  சந்தோஷப்பட்டார்.  

குருநாதர் :- அறிந்தும் எதை எவை என்று புரிய, ஆனாலும் அறிந்தும் இதன் உண்மையை கூட. இதனால் பின் ஈசனாரே பின் நிச்சயம் தன்னில் கூட கூட பின் மனமகிழ்ச்சி. மனமகிழ்ச்சி. நிச்சயம் எதை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனை அப்படியே பார்த்து… ஈசனாரே மனமகிழ்ச்சி. எனக்கு பெரிய மனமகிழ்ச்சியை கொடுத்துவிட்டாய். என்று சொல்லி …. சந்தோஷப்பட்டார்.

குருநாதர் :- மீண்டும் பலத்த சத்தத்துடனே…. பின் அதிரும் வண்ணம் லங்காவே….

சுவடி ஓதும் மைந்தன் :- சந்தோஷத்தில் அவர் கத்திய கத்துக்கு… லங்காவே…….ஸ்ரீலங்காவே அதிரும் மாதிரி கத்துனார்….. ஈசனாரேன்னு என்று சொல்லி…… எங்கிருந்து? திருகோணமலையிலிருந்து…. 

குருநாதர் :-  ஆடலும் பாடலுமாக பின் கடலின் ஓசைகள் பின் கடலின் அலைகள் கூட அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் ஒரு உத்தமன்  போல் இவ்வுலகத்தில் இருந்தால் அனைத்தும் கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்னை  சீதா தேவி பிறந்த உடன் ….அவருக்கு அந்த குழந்தை கிடைச்ச உடனே…. அப்ப என்ன ஆனது? கடலும் ஆடுதாம். அந்த ஓசைகளே பாடல் மாதிரி இருந்துச்சாம்.

குருநாதர் :-  இதை எவை என்று புரிய பல.. அழகாக பின் நிச்சயம் தன்னில் கூட எடுத்து வந்தான் அரண்மனைக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( திருகோணமலை பக்கத்திலேயே அந்த அரண்மனை இருந்தது. அழகாக அந்த குழந்தையை தூக்கிட்டு வந்துட்டார்.)

குருநாதர் :- எதை என்று புரிய, ஆனாலும் இவைத்தன் உணர்ந்து. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கிரகங்களின் கூட வாழ்க்கை எதை என்று புரிய, அழகாக இராவணனுக்கே தெரியும். கிரகங்களைப் பற்றி சரியாகவே பார்த்தான். ஆனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- கிரகங்களை கணிப்பது வந்து… அவர் பெரிய ராஜா. தத்துவ ஞானி. கிரகங்களை கணிப்பது…. 

அடியவர் :-  இராவணேஸ்வரர். 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர். 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நேரத்துல தான் பிறந்திருக்காங்கன்னு என்று ஜாதகத்தை சரியாக , மிக துல்லியமாக கணித்துவிட்டார். 

குருநாதர் :- ஆனாலும் சில வயதிற்கு பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட சில ஆண்டுகள் போன பிறகு, இவளுக்கு பெரிய கஷ்டம் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று உணர்ந்திட்டான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒரு 20 வருஷம், 30 வருஷம் ஆனதுமே ஒரு பெரிய கஷ்டம் வரும். அந்த கஷ்டத்தை யாராலும் தாங்க முடியாது. தடுக்கவும் முடியாது என்று அவர் அந்த  நேரத்துல, சரியாக..  நேரம் பத்தி அவர் கணிச்சிட்டார். 

குருநாதர் :-  ஆனாலும் இதை நிச்சயம் ஈசன் தான் தடுக்க வேண்டும் என்று எண்ணி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து யாரால முடியும்?

அடியவர் :- ஈசனால் தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனால் மட்டும்தான்… இதை தடுக்க முடியும்.

குருநாதர் :-  எவை என்று அறிய, ஆனாலும் ஈசனாரே அழகான குழந்தையை கொடுத்தாய். பின் தாயை கொடுத்தாய். ஆனாலும் அப்படியே அறிந்தும் அனைத்தும் தலைகீழாக போய்விட்டதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அழகான குழந்தையும் கொடுத்து..அதாவது  அழகான என் பாச தாயையும் எனக்கு கொடுத்து,  கடைசில இப்படி ஒரு குறையை போய் இந்த குழந்தைக்கு ஏனப்பா கொடுத்தாய் ? என்று சொல்லிட்டு அவர் திருப்பியும் மனம் வருந்துறார். 

குருநாதர் :-  நிச்சயம் மீண்டும் அன்னையும்.. அறிந்தும் எதை என்று புரிய. அதாவது ஏதாவது பின் எவை என்று புரிய, பின் இருந்தால் கைலாயத்திற்கு வா என்று பின் விமானத்தின் மூலம். அதனால் குழந்தையை அழைத்திட்டு ஈசனிடம் செல்வோம் என்று முடிவு கட்டினான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனிடம் போய் வாதாடுவோம். நேரா கைலாயத்துக்கே போயிடுவோம். நான் என்ன தப்பு பண்ணேன்? இது மாதிரி ஒரு குழந்தையும் அழகாக தெய்வ சக்தியையும் கொடுத்துட்டு கடைசில என்ன ஆச்சு? ஒரு குறிப்பிட்ட காலத்துல ஆண்டுகளுக்கு போன பிறகு பெரிய கஷ்டம். யாராலும் தடுக்க முடியாது. முன்பு அவர் அன்னை உரைத்தது போல , கைலாயத்துக்கு போகலாம் என்று முடிவு எடுத்தார். ஈசன் இடமே மீண்டும் இந்த குழந்தையை கொடுத்துவிடலாம்  என்று அந்த விமானத்தின் மூலம் கைலாயம் அங்கே போறாரு. 

குருநாதர் :-  ஈசனும் விளையாடினான் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே எவை என்று புரிய. அதாவது விமானத்தில் பின் அதாவது செல்கின்ற பொழுது மழையும்… காற்றும்…. பலத்த இடி பின் மின்னலும் கூட…... 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வாறாக ஈசன் சோதிக்கிறார். ஏன் என்றால் கைலாயத்துக்கு போறதுக்கு அவ்வளவு சுலபம் இல்லை. அப்ப என்ன பண்றாரு? அவர் கிளம்புறாரு, இங்கிருந்து குழந்தையை கூட்டிட்டு 

அடியவர் :- ஈசனை பார்க்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனை பார்க்க கிளம்புறாரு. அப்ப ஈசன் என்ன செய்தார்? காற்று , இடி பலமா உண்டாகி , அதன் மூலம் ராவணேஸ்வரர் கைலாயம் வரக்கூடாதுன்னு  ஈசனார் பிளான் பண்றாரு. 

குருநாதர் :-  எதை எவை என்று புரிய, ஆனாலும் பின் விமானம் பின் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  விமானம் எல்லாம் முன்னோக்கி சொல்லும். அந்த விமானம் என்ன ஆச்சுன்னா…. அந்த காற்று, இடி  பலமாக வீசியதால் என்ன ஆச்சு? விமானம்  அது பின்னோக்கி போனது. பின்னாடி ரிவர்ஸ்ல போச்சு விமானம் .

குருநாதர் :-  அந்த விமானம் இருப்பினும் ஏது என்று அறிய. பின் எதை என்று அறிய. ஆனாலும் இவை என்று புரிய. ஆனாலும் பின் இன்னும் பின் தாக்கு பிடிக்க முடியவில்லை. இன்னும் அதாவது யோசித்தான். அதாவது ஈசனாரே பின் அதாவது உன் லீலை… உன் லீலை தெரியும். நீதான் அனைத்தும் இவையெல்லாம் ஆட்டிப் படைக்கின்றாய். அதனால் பின் கீழே நிறுத்தி நிச்சயம் தன்னில் கூட…. அதாவது நிறுத்துவேன். நீ எவ்வளவு கஷ்டங்கள் பின் வைத்தாலும்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனே ….நீதானப்பா இந்த ரிவர்ஸ்ல வேலை செய்றது. இது எல்லாம் எனக்கு தெரியும். அப்பொழுது எல்லாம் அப்படியே மனசுக்குள்ளேயே பேசுறப்ப புரிஞ்சுகிட்டு பேசுவார். தெரியும் நீ என்னை அங்க கைலாயம் வர விடமாட்டேன்னு. ஆனாலும் நான் விடமாட்டேன். கீழே நிக்க வச்சிட்டு இந்த மழையும் காற்றும் நின்ற  பிறகு,  நான் மீண்டும் கைலாயம் வரேன். 

குருநாதர் :-  எவை எதை என்று புரிய, ஏன் பின் லங்காவை பின் தேர்ந்தெடுத்தான் என்றால் இராவணன் இங்கிருந்து நேரடியாக பார்த்தால் கைலாயமே தெரியும். அதனால்தான் நிச்சயம் ஈசனுக்கும் பின் நமக்கும் எப்பொழுதுமே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று இராவணேஸ்வரன் இலங்கையை தேர்ந்தெடுத்தான். 

===========================
( திருகோணமலையில் இருந்து கைலாயம் நேரடியாக தெரியும். அதாவது கூகிள் மேப்பில் பார்த்தால் ஒரே நேர்க் கோடாக தெரியும். அதனாலே இராவணேஸ்வரர் இலங்கையை தேர்ந்தெடுத்தார். அடியவர்கள் இதனை கூகிள் மேப் மூலம் கண்டு உணர்க)
===========================

குருநாதர் :-  இவைதன் இப்பொழுதுதான் பின் பூதக் கண்ணாடி. பூதக் கண்களிலே… கண்ணோக்கி. 

குருநாதர் :-  கண்களிலே நோக்கி… கண்ணோக்கி கீழ் நோக்கி… பின் தூர நோக்கி… குழி … குவி வண்ணம்… 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா? டெலஸ்கோப். இத முதல்ல கண்டுபிடிச்சது யாரு? 

அடியவர் :- இராவணேஸ்வரன். 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரன் தான் இங்கிருந்தே பார்ப்பாராம். ஈசன் என்ன பண்ணிருப்பாருன்னு கைலாசத்துல நேரா ஒரு இடம் இருக்குதாம். இங்கிருந்து பார்த்தா 

அடியவர் :-  கைலாயம் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கைலாயம் தெரியுமா? டைரக்டா நேரா இங்கிருந்து பார்த்தாருன்னா நேரா இந்தியாவுல நேரா அப்ப வந்து என்ன இருக்கும்? 

அடியவர் :-  கைலாயம். 

சுவடி ஓதும் மைந்தன் :- கைலாயம். இங்கிருந்து ஒரு இடம் இருக்குதுங்க ஐயா. பூத கண்ணாடி உருவாக அவர்தான் மூல காரணமே. இங்கிருந்து பூத கண்ணாலே பார்ப்பாராம். ஈசன் என்ன பண்ணிருப்பாருன்னு அங்க போயிட்டு.  ஐயா புரியுதுங்களா? 

அடியவர் :-   புரியுது. 

குருநாதர் :- இவை அறிந்து இவ்வாறு பின் தத்துவ ஞானியை கடைசியில்  பின் எவை என்று புரிய. பின் ஆள் இல்லாமல் செய்து விட்டார்கள் மனிதர்கள். இதனால்தான் கலியுகம் ஏது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு பலசாலியை… கடைசில மனிதர்கள் மாற்றியும் , ஏசியும் பேசிட்டாங்கப்பா. அப்ப டெலஸ்கோப்… அதற்கு ஞானி யாரு? 

அடியவர் :-  இராவணேஸ்வரர் . 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் தான். 

குருநாதர் :-  இவை தன் அறிந்து அழகாக பின் விமானத்தை பின் இறக்கி வைத்தான். ஓரிடத்தில் பின் நிலத்தில். 
 
(இராவணேஸ்வரர் இந்தியாவில் யாரும் இல்லாத ஓரிடத்தில் விமானத்தை தரை இறக்கினார்.)  

குருநாதர் :-  ஆனாலும் எது என்று புரிய. அதுவும் கூட ஈசனுடைய பின் நிலமே. நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் யாருது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனுடைய நிலம். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட. மீண்டும் பின் அழகாக எவை என்று குழந்தையை நிச்சயம் தன்னில் கூட அவ்விடத்தில் வைத்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த இடத்துல, அந்த நிலத்துல வைக்கிறார். யாரு? 

அடியவர் :-  இராவணேஸ்வரர். 

சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் அந்த குழந்தையை, அந்த இடத்துல வைக்கிறார். 

குருநாதர் :-  மீண்டும் எது என்று அறிய அழகாக (காற்று , மழை , இடி , மின்னல் போன்ற) அனைத்தும் நின்றுவிட்டது. 

குருநாதர் :- சந்தோஷம் (அடைந்தான் இராவணேஸ்வரன்). மீண்டும் அழகாக பின் அதாவது அக்குழந்தையை தூக்கினான். தூக்க முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த நிலத்தில் (குழந்தை அன்னை சீதா தேவியை இறக்கி )  வச்சிட்டாரு. மீண்டும் இராவணேஸ்வரர்  தூக்குறார். ஆனால் அந்த குழந்தையை தூக்க முடியவில்லை. 

குருநாதர் :-  என்ன சோதனை? எது என்று புரிய. மீண்டும் அதாவது பின் தூக்கினான். அதாவது பின் நாட்கள் கடந்து கொண்டே… இரண்டு நாட்கள் ஆயிற்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- தூக்குறாங்க. தூக்குறாங்க. ஆனால் தூக்க முடியல.  நாட்கள் தான் கடந்து போயிருது. 

குருநாதர் :- மீண்டும் நிலத்துக்கு சொந்தக்காரன் வந்து விடுவானா? பார்த்து விடுவானா? என்றெல்லாம் மீண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நிலத்துக்கு சொந்தக்காரர் வந்துருவாரா? பார்த்து விடுவாரான்னு என்று மனதில் நினைத்து மீண்டும் மீண்டும் தூக்க , என்னென்னவோ செய்கின்றார். இராவணேஸ்வரரால முடியவில்லை. 

குருநாதர் :-  எதை எவை என்று புரிய, ஏன் எதற்கு இதை என்று அறியதெல்லாம். ஆனாலும் நிச்சயம் பின் ஈசனே குழந்தையை கொடுத்தாய். ஆனாலும் இப்பொழுது இப்படியா செய்வது?  என்ன நியாயம்?  பின் சோதிப்பதற்கு யான் தான் கிடைத்தேனா  என்ன? பின் ஏதோ சந்தோஷப்பட்டேன். ஆனாலும் இப்படி செய்துவிட்டாயே. 

குருநாதர் :-  ஆனாலும் எதை என்று புரிய. சத்தம் எவை என்று அறிய. ஆனாலும் மீண்டும் ஏது என்று அறிய. பின் குழந்தையும் கூட… பின் அழுது கொண்டே….. அழுது கொண்டே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப குழந்தை என்ன ஆச்சு? 

அடியவர் :- அழுது கொண்டே 

சுவடி ஓதும் மைந்தன் :-  குழந்தை  அழுது கொண்டே இருக்குது. ஓன்னு அழுதுட்டு இருக்குது. அவரும் வந்து  பார்க்கிறார். ஆனால் தூக்க முடியல. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுது பாருங்கள். நிச்சயம் தன்னில் கூட. இங்கு ஏன் எதற்கு சொன்னேன் என்றால்,  பின் இராவணனின் பலத்தை விட சீதை பலமே அதிகம். ராமன் அதாவது ராமனின் பலத்தை விட சீதையின் பலமே அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஏன் இங்க தூக்க முடியல? எதுக்காக தூக்க முடியல? இராவணனுடைய பலத்தை விட……? 

அடியவர் :- அன்னை சீதையின்  பலம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்னை சீதை பலம் தான்  அதிகம். அது மட்டும் இல்லாம ராமன் பலத்தை விட 

அடியவர் :- அன்னை சீதையின்  பலம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்னை சீதையினுடைய பலம்தான் அதிகம் என்று சொல்கின்றார். ஸ்ரீ ராமர்  அவங்களுடைய பலத்தை விட யாருக்கு  அதிகமா இருக்கு பலம் ?

அடியவர் :-  அன்னை சீதைக்கு தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அன்னை சீதைக்கு தான் பலம். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  ஆதி இராமாயண காவிய வாக்குகள் தொடரும் …..) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment