அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் - பகுதி 2
நாள் :- பங்குனி உத்திரம் 31/3/2026 , செவ்வாய்க்கிழமை
இடம் :- வேலோடு மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த வேல் வந்து என்ன ஆச்சு? ஐயா நேரா வந்து கைலாயத்துல…… அப்ப ஐயா இங்க இருந்து பார்த்தா கைலாயம் நேர் டைரக்டா இருக்கும். நேருக்கு நேரா இருக்கும். அப்ப என்ன ஆகுது? அங்க வீசினாரு வேல்.
அடியவர் :- கைலாயத்துல இருந்து வீசின வேல் வந்து விழுந்த இடம்தான் இதுன்னு சொல்றாரு. இங்க இருந்து பார்த்தா கைலாயம் நேரா தெரியும்னு சொல்லி இருக்காங்க நாடியில…
சுவடி ஓதும் மைந்தன் :- நாடியில… இங்க இருந்து பார்த்தா நேரா கைலாயம் தெரியும் அப்ப நீங்க வந்து மேப்ல எல்லாம் பார்த்தீங்கன்னா தெரியும் ஐயா. ஓகேங்களா. அப்ப அங்கிருந்து நேரா வந்து கோவத்துல வீசி இருக்காரு வந்து. படிக்கிறேன் அய்யா திருப்பியும்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று மீண்டும் விளையாட்டாக முருகன் எதை என்று அறிய அதாவது நிச்சயம் இப்பொழுது சென்றுவிட்டது அல்லவா வேல்? பின் நீங்கள் அனைவரும் வந்திருக்கின்றீர்கள் அல்லவா? பின் நீங்கள் அனைவரும் சென்று தேடி எடுத்து வாருங்கள். அப்பொழுதுதான் நான் இங்கிருப்பேன் என்று.
அடியவர் :- முருகன் சொல்றாரு..
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா. அப்ப என்ன சொல்றாருன்னா.. வேல் எரிஞ்சிட்டு, வேல் இங்க வந்துருச்சு. அப்ப ஈசனும் பார்வதியும் எல்லாரும் வர சொல்லி இருந்தாங்க. தேவர்களும் முனிவர்களையும் பல வழி எல்லாரையும் அங்க வர சொல்லி இருந்தாங்க. அப்ப என்ன பண்ணாரு? முருகன் டக்குனு மாத்திட்டாரு. என்ன மாத்துனாருன்னா நான் வந்து இங்கே கைலாயத்துல இருக்கணும்னா, நீங்க அங்க அங்க வந்து அந்த வேலை எடுத்துட்டு வாங்க போயிட்டு. எல்லாரும் போயிட்டுன்னு சொல்லிட்டு… முனிவர்களும் தேவர்களும் சித்தர்களும் என்ன பண்ணாரு, முருகன் வந்து?
அடியவர் :- கட்டளை சொல்லிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- கட்டளையிட்டாரு. வேணா நீங்க எடுத்துட்டு வாங்க. எல்லாரும் போய் எடுத்துட்டு வாங்க. நான் வந்து அம்மா அப்பாவுக்கு பாசத்துக்காக நான் கைலாயத்துல இருந்துறேன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு?
அடியவர் :- அவங்கள அனுப்பிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்கள அனுப்பிட்டாரு
குருநாதர் :- ஏது என்று அறிய பின் அனைவரும் ஏது என்று புரிய. சரி பின் குழந்தை, பின் அதாவது ஈசனாரே எதை என்று கூற பின் தாயே தந்தையே பின் மன்னியுங்கள் அனைவரும் கூட. ஏதோ பின் முருகன் அதாவது (வேல் அதனை) இட்டு எதை என்று கூற, (முருகன்) இங்கே இருக்கட்டும். யாங்கள் தேடி எடுத்து வருகின்றோம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணிட்டாரு? எல்லா தேவர்களும் எல்லா முனிவர்களும் எல்லாரும் என்ன பண்ணிட்டாருன்னா, நாங்க வேல் எடுத்துட்டு வரோம். முருகர் இங்கேயே இருக்கட்டும் எங்க விழுதுன்னு சொல்லிட்டு எங்க இருந்து வராரு?
அடியவர் 1 :- கைலாயத்துல…
சுவடி ஓதும் மைந்தன் :- கைலாயத்துல இருந்து எல்லா தேவர்களும் எல்லா சித்தர்களும் எல்லா முனிவர்களும் , அங்கிருந்து என்ன பண்றாங்க?
அடியவர் 1 :- (வேலொடு மலை) இங்க வராங்க
குருநாதர் :- எதை என்று புரிய பின் தாயவளும் முருகனே இப்படி செய்துவிட்டாயே.. விளையாட்டுத்தனமாக?? நீங்கள் மட்டும் விளையாடியது என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணாரு? இப்படி செஞ்சுட்டியேப்பா. நாங்க ஒரு காரணத்துக்காக அழைச்சோம் .எல்லாரையும். ஆனா நீ என்ன பண்ண? எல்லாரையும் அங்க அழைச்சிட்ட. எல்லாரும் அங்க அனுப்பிவிட்டியே என்று சொல்லிட்டு…
குருநாதர் :- எதை எவை என்று புரிய மீண்டும் வரட்டும். ஏது என்று அறிய அப்பொழுதுதான் பின் எவை யான் உறங்குகின்றேன். அவர்கள் வேலோடு வரட்டும். அப்பொழுதுதான் நான் எழுவேன். அப்பொழுது எதை என்று கூற பின் இதனால் அவர்கள் எப்பொழுது வேல் கொண்டு வருகின்றார்களோ அப்பொழுதுதான் உங்களிடத்தில் நான் பேசுவேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகன் என்ன சொல்லிட்டாரு. ஏன்னா நான் தூங்க சொல்லிட்டீங்களே நான் போய் தூங்குறேன். நான் எப்பவுமே நீங்க எதுவுமே என்னிடம் பேசாதீங்க வந்து. அவங்க எல்லாம் எல்லாம் வேல் எடுத்துட்டு வரட்டும். அப்ப என்ன பண்ண வந்து? அப்பதான் நான் உங்களை பேசுவேன். வேல் எடுத்துட்டு வரட்டும் என்று சொல்லிட்டு
===========================
# வேல் அதனை ஆழத்தில் செலுத்தி, மீண்டும் ஒரு திருவிளையாடல்….
===========================
குருநாதர் :- எதை எவை என்று அறிய முருகன் விளையாடுவதில் கூட நிச்சயம் எதை என்று அறிய பின் அவனைப் போல் சிறந்த எவை என்று, அது போல் பின் நிச்சயம் தன்னில் கூட சிறுவயதிலிருந்தே பெரு ஆற்றல் இருந்தது.
குருநாதர் :- இதை பின் அதாவது பின் எவை என்று மீண்டும் ( வேலொடு மலையின்) அடியில் செலுத்தினான். அதாவது மறைமுகமாக தூங்கிக்கொண்டே எவை என்று கூற.
குருநாதர் :- ஆனாலும் பின் தாய்க்கும் தந்தைக்கும் பின் தெரியும். பின் என்ன விளையாட போகின்றானோ?? இவனிடத்தில் அனைத்து சக்திகளும் இருக்கின்றதே என்று. பின் ஈசனாருக்கும் பார்வதிக்கும் நன்றாக தெரியும் எதை என்று.
குருநாதர் :- அதேபோல் நிச்சயம் இவை தன் பின் இவர்கள் சென்றாலும் அது கிடைக்கக்கூடாது என்று இன்னும் அமுக்கிவிட்டான் எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த வேல் கிடைக்கக்கூடாது. இவங்க போனா கூட அந்த வேல் வந்து கிடைக்கக்கூடாதுன்னு என்று சொல்லிட்டு அவர் விளையாட்டு போலே. அவர் பெரிய ஆற்றல் படைச்சிருந்தார் குழந்தைன்னு அவருக்கு வந்து அப்ப அவங்க தாய் தந்தைக்கு ஈசனாருக்கும் தெரியும். பார்வதி தேவிக்கும். தெரியும் இவர் என்ன பண்ணாரு? மறைமுகமா தூங்குறேன்னு சொல்லிட்டு, அது வந்து கிடைக்கக்கூடாது இவர்களுக்கு. என்ன பண்ணிட்டாரு? இன்னும் ?
அடியவர் 1 :- புதைச்சிட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- ஆழமா புதைச்சிட்டாரு.
===========================
# இலங்கை முழுவதும் தேடினார்கள்…..
===========================
குருநாதர் :- பின் அறிந்தும் எதை என்று கூற பின் அனைவரும் வந்தார்கள் இங்கு. ஏது என்று புரிய ஆனாலும் இங்குதான் விழுந்தது இங்குதான் விழுந்தது அனைவரும் கூட தேடி தேடி. ஆனாலும் கிடைக்கவில்லையே எதை என்று புரிய.
குருநாதர் :- ஆனாலும் பல வகையிலும் தேடினார்கள் எங்கெங்கு ஏது என்று புரிய அப்பனே அதனால்தான் அப்பனே முருகன் விளையாட்டு பெரிய விளையாட்டப்பா எதை என்று கூற. எங்கெங்கு ஏது மலையிலும் கூட பின் அடுத்தடுத்து அப்பனே பின் அப்படியே தேடினார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க, அப்படியே எங்கெங்கெல்லாம் மலை இருக்குதோ அங்கெல்லாம் தேடினார்கள். எங்க விழுது.. எங்க விழுந்தது.. எங்கெங்கெல்லாம் விழுந்ததுன்னு… சொல்லிட்டு தேடுறாங்க. கேடுறாங்க வந்து.
குருநாதர் :- எது என்று அறிய எவை என்று புரிய இதனால் எண்ணற்ற ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் அப்பொழுதெல்லாம் அப்பனே இன்னும் நீண்டு காணப்பட்டது இத்தேசம். ஆனாலும் சிறு சிறுதாக அழிந்து அதாவது கடல் கடல் தண்ணில் கூட பின் மூழ்கி. ஆனாலும் எதை என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பொழுதெல்லாம் இன்னும் நீண்டுதான் இருந்தது. இன்னும் வந்து நீண்டு இருந்தது இந்த தேசம் எல்லாம் வந்து…. ஆனா போக போக என்ன ஆச்சு?
அடியவர் 1:- கடல்….
சுவடி ஓதும் மைந்தன் :- கடல்ல மூழ்கிடுச்சு
குருநாதர் :- எதை எவை என்று அறிய ஆனாலும் தேடினார்கள். அப்பப்பா எங்கெல்லாம் அப்பனே பின் இத்தேசத்தில் அப்பனே பின் எவை என்று புரிய அழிவுகள் பலமாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. முருகன் பின் இருக்கும் ஆலயங்கள் ஒவ்வொன்றும் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அனைத்து சித்தர்களும் ஞானிகளும் பின் முனிவர்களும் ரிஷிகளும் இருக்கும் இடமே. அதனால்தான் முருகன் இருக்கும் இடமெல்லாம் சக்திகளாக நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு அங்கெல்லாம் யாங்கள் தேடியது தான் வேலை.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? இந்த தேசத்துல எங்கெல்லாம்
அடியவர் :- வேல் வழிபாடு
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வழிபாடு (வடிவில்) இருக்கிறாரோ அங்கெல்லாம் வந்து
அடியவர் 1 :- சக்தி கூட…
சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி கூட. ஏன்னா சித்தர்களும் நாங்க எல்லாமே வந்து அது தேடி இருக்கிறோம் வேலை வந்துட்டு
குருநாதர் :- ஆனாலும் எதை என்று புரிய அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவையும் விளையாட்டு போலத்தான் தெரியும் உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு விளையாட்டு.
குருநாதர் :- ஏன் எதற்கு இவ்வாறாக எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அமுக்கினான் எதை என்று கூற யாருக்கும் தெரியக்கூடாது என்று. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் அனைவரும் பின் எதை என்று புரிய பின் ஒன்று சேர்ந்தனர் இங்கேயே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா இடத்திலும் தேடி கடைசில என்ன பண்ணிட்டாங்க? ஆனா வேல் இங்கதான் இருக்குது அடியில அப்ப என்ன பண்ணிட்டாங்கன்னா வந்து
அடியவர் 1 :- எல்லாம் ஒன்னா வந்துட்டாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒன்னா வந்துட்டாங்க. இங்கதான் இருக்குதுன்னு சொல்லிட்டு தெரிஞ்சு போச்சு.
===========================
# சித்தர்கள் செய்த மாபெரும் தவம்….
===========================
குருநாதர் :- எதை எவை என்று புரிய ஆனாலும் அனைவருக்கும் பின் தெரிந்தது. பின் வேல் அடியோடு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட
முருகனே மறைத்து வைத்திருக்கின்றான் அமுக்கி அமுக்கி என்று. ஆனாலும் பின் எவை என்று கூற அனைவரும் பின் தவங்கள் செய்யுங்கள். நிச்சயம் மேல் வரட்டும் என்று நிச்சயம் தன்னில் கூட.
நாமாக எடுத்தாலும் நிச்சயம் தன்னில் கூட ஏதோ மீண்டும் முருகன் விளையாடத்தான் போகின்றான்.
அதனால் தவத்தின் வழியே நிச்சயம் தன்னில் கூட மேல்நோக்கி வரட்டும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க ஐயா
அடியவர் 1 :- ஐயா முக்கியமான வார்த்தை சொல்லிட்டாங்க. இந்த வேல் இன்னும் இதுக்குள்ள தான் இருக்குதாம். அதனாலதான் எல்லா சித்தர்களும் வந்து இங்க தவம் செஞ்சுட்டு இருக்காங்களாம். தவ வலிமை கூட கூட அந்த வேலோட சக்தி கூடுமாம். அதனால வர்றவங்க எல்லாமே உட்கார்ந்து அவங்க தவ வலிமை கூட கூட… இந்த வேலோட சக்தி மேல வந்து கொண்டே இருக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- மேல வந்துகிட்டே இருக்குதாம்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாராம் சரி ஏதோ விளையாட்டு நம்ம எடுத்தா கூட வந்து முருகன் திரும்பவும் விளையாடுவார் வந்து. அப்புறம் என்ன நம்ம என்ன பண்றோம்? எல்லாம் தியானம் செய்வோம். தியானம் வந்து செஞ்சுட்டே இருந்தா, அந்த வேல் வந்து தானா மேல வரும். அப்ப வந்து என்ன பண்ணுவார் வந்து அவருக்கு அங்க தெரியும். நம்ம எடுத்துட்டு போனா திரும்பவும் ஒரு விளையாட்டு விளையாடுவார். முருகர் அப்படின்னு சொல்லிட்டு வந்து யாரை எல்லா சித்தர்களும் தேவர்களும் எல்லா விஷயங்களும் நினைக்கின்றார். புரியுதுங்களா ஐயா.
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் அறிந்தும் கூட எதை என்று அறியாமல் கூட மேல்நோக்கி வந்தது. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் புரிந்து கொண்டான் பின் முருகனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மேல்நோக்கி?
அடியவர் 1 :- வேல் வந்துருச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வந்துருச்சு அப்ப புரிந்து கொண்டார். தியானம் பண்ணி… என்ன பண்ணிட்டாங்க வந்து?
அடியவர் :- வேலோடு மலையில் மேலே வந்துருச்சு
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் மேலே வந்துருச்சு
குருநாதர் :- எவை என்று அறிய புறப்படுவோம் என்று பின் மயில் மீது எதை என்று அறிய எதை என்று அறிய மீண்டும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சரி நம்ம அங்கிருந்து என்ன பண்ணுவோம்?
அடியவர் 1 :- இங்க வருவோம்
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வருவோம்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு?
அடியவர் 1 :- இங்க வந்துட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்துட்டார். இங்க வந்து என்ன பண்ணாரு? இங்க வராருங்க ஐயா
அடியவர் 1 :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- மயில் மீது வராரு.
===========================
# நாகங்களாக மாறிய தேவதைகள்……
===========================
குருநாதர் :- எதை என்று கூற அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பல தேவதைகள் கூட, நிச்சயம் துணைக்கு வருகின்றார்கள் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அத்தேவதைகள் கூட இப்பொழுது எதை என்று கூற இங்கு நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் வாழ்ந்த, நிச்சயம் தன்னில் கூட பின் நாகங்களாக மாறி, நிச்சயம் வேலையும் காத்துக் கொண்டிருக்கின்றார். முருகனையும் காத்துக் கொண்டிருக்கின்றார் குழந்தை மீண்டும் ஏதாவது விளையாட்டு செய்துவிடுவானா என்று எண்ணி.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகர் அங்கிருந்து மயில் மேல வரும்பொழுது என்ன பண்ணாரு தேவதைகள் அவங்க வந்து சின்ன பையன் எல்லாம் வந்து அம்மாவா பாருங்க அப்ப வந்து தேவதைகள் எல்லாம் என்ன பண்றாங்க வந்து?
அடியவர் 2 :- கூட வராங்க
சுவடி ஓதும் மைந்தன் :- கூட வராங்க . அப்ப முருகர் வந்து இங்க வந்துட்டாரு வந்து. அந்த இப்ப வந்து அந்த தேவதைகள் எல்லாம் என்ன பண்றாங்க இங்க வந்து?
அடியவர் 3 :- கூட இருந்து பார்த்துக்கிறாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க நாகங்களா மாறிக்கிட்டாங்களாம். இன்னும் கூட நாகங்களா மாறிவிட்டு, அந்த தேவதைகள் இங்க இருக்கிறாங்க.
குருநாதர் :- எதை என்று அறிய முருகன் மீண்டும் பின் விளையாட்டாக ஏதாவது செய்துவிடுவானா என்று எண்ணி அங்கங்கு தவம் புரிந்து கொண்டிருக்கின்றார், பாம்பின் வடிவமாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகன் திரும்பியும் ஏதாவது விளையாட்டு செய்துவிடுவானா என்று எண்ணி, பாம்பு பாம்பு இருக்குல்ல, பாம்பு… அதுவா மாறி அந்த தேவதைகள், அங்கங்க.
அடியவர் 1 :- தவம் செஞ்சு
சுவடி ஓதும் மைந்தன் :- தவம் செஞ்சுட்டு இருக்காங்களாம் இன்னும் கூட.
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் பின் முருகனுக்கு கூட எவை என்று அழகாக அறிந்து கூட பின் அனைவரையும் அழைத்து பின் சந்தோஷமே. ஏது என்று புரிய அனைவரும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எப்படியோ நான் இங்கு வந்துவிட்டேன். எனக்கு இதுதான் நிச்சயம் நிம்மதி என்று முருகனும் கூற.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் என்ன பண்ணாரு? நீங்க வந்துட்டீங்க இங்க. எனக்கு இங்கதான் நிம்மதி. நிம்மதி எனக்கு. ரொம்ப புடிச்சிருக்குது. நான் இங்கதான் இருப்பேன். எனக்கு ரொம்ப புடிச்சிருக்குதுன்னு சொல்லிட்டு யார் சொல்றாரு?
அடியவர் 1 :- முருகன் சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் சொல்றாரு.
குருநாதர் :- எதை என்று புரிய நீங்களும் இங்கே இருங்கள். நாம் அனைவரும் சேர்ந்து விளையாடுவோம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா சித்தர்களும், நான் இங்க வந்துட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது. நீங்களும் இங்கேதான் இருக்கணும். அப்படின்னு சொல்லிட்டு வந்து முருகர் கேட்டுக்கொள்றார்.
குருநாதர் :- ஆனாலும் பின் அதாவது சித்தர்கள் எவை என்று புரிய ஞானிகள் ரிஷிகள் பின் அதாவது பின் அதாவது கயிலை தன்னில் கூட பின் எதை எவை என்று புரிய தாயும் தந்தையும் காத்திருப்பார்கள். இதனால் யாங்கள் அங்கு சென்று எதை என்று கூற.
குருநாதர் :- (முருகப்பெருமான் பதில்) ஆனாலும் நீங்கள் சென்றால் மீண்டும் ஒரு விளையாட்டை யான் விளையாடுவேன். அதற்கு தயாரா நீங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, எப்பா முருகா !!!!!! ஏதோ வந்தோம். நீ விளையாட்டு எல்லாம் ஏதேதோ பண்ணிட்ட.
அடியவர் :- திரும்ப நாங்க போகாட்டி கைலாயத்துல தனியா இருப்பாங்க நாங்க போகணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நாங்க போகணும். அதனால எங்களை என்னை விட்டுடுப்பான்னா…. திருப்பி என்ன சொல்றாரு முருகர்? நீங்க போனா திரும்பவும் நான் விளையாட்டு காட்டுறேன் சொல்லிட்டு என்ன பண்றாரு?
அடியவர் :- கூப்பிடுறாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் கூப்பிடுறாரு
===========================
# சித்தர்கள் எடுத்த மகத்தான முடிவு…
===========================
குருநாதர் :- எவை எது என்று புரிய அறிய இதை அறிய இதனால் பின் அதாவது அழகாக இங்கேயே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அறிந்தும் கூட.
குருநாதர் :- அதனால் எவ்வாறு என்பதை எல்லாம் அதனால் மீண்டும் பின் அனைவரும் சேர்ந்து அதாவது பின் முருகனே அறிந்தும் கூட நீயும் குழந்தாய்.
குருநாதர் :- அதனால் பின் எதை என்று கூட பார்த்துக் கொள்வதற்கு யாங்கள் ஏதோ ஒன்று எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எங்களை அதாவது பின் அறிந்தும் புரிந்தும் கூட ஏதோ ஒரு உயிரினாக மாற்றி பின் உன்னை காத்துக் கொண்டே இருக்கின்றோம்.
குருநாதர் :- அவற்றுக்காவது, ஏனென்றால் உங்க தந்தை பேச்சை கேட்டு நிச்சயம் யாங்கள் சேவை செய்ய வேண்டும். அது போல் உங்களுக்கும் ஏது என்று புரிய முருகா இங்கே இருந்து, ஏதோ ஒரு ரூபத்தில் யான் உங்களுக்கு சேவை செய்கின்றோம். அது போதுமா என்று நிச்சயம் தன்னில் கூட
அடியவர் :- அவங்க கேக்குறாங்க. நாங்க அப்பாவையும் போய் பார்க்கணும். இங்கேயும் இருக்கணும். அதனால ஏதாவது ஒரு ரூபத்துல இங்க சேவை செய்றோம். அதுக்கு எங்களுக்கு உத்தரவு தாங்க அப்படிங்கிறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு? நாங்க சில சில ஜீவராசிகளா இங்க இருந்து.. அதாவது சித்தர்கள் உடம்பு எங்க வேணாலும் வச்சிட்டு போக முடியும். ஐயா புரியுதுங்களா? அதனால வந்து..
===========================
# வேலொடு மலை மர்மங்கள்.
# பின் வரும் வாக்கை பலமுறை படியுங்கள்…
===========================
குருநாதர் :- எதை எவை என்று புரிய இதனால் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் முருகனும் கூட சரி எவை என்று புரிய. அதாவது நீங்கள் தான் அனைவருமே தெரிந்திருப்பீர்கள் அல்லவா? பின் கூடுவிட்டு கூடு. அதாவது எவை என்று வித்தைகள். அதாவது உயிர்கள் அனைத்தும் விட்டுவிட்டு பின் நிச்சயம் எவை எதை அதாவது கூண்டோடு எவை என்று அறிய நிச்சயம் பின் உடம்பை விட்டுவிட்டு நிச்சயம் எது என்று உயிரோடு எது என்று மீண்டும் ஏதோ உடம்பை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம்.
குருநாதர் :- இதனால் அறிந்தும் கூட எப்பொழுதும் பின் அறிந்தும் கூட இதனால் இப்படி நீங்கள் இருந்தால், வருவோருக்கெல்லாம் பின் மனதார என் மனதும் சந்தோஷம். அனைவருக்கும் அருளாசிகள் என்னென்ன வேண்டுமோ அவை தந்து விடுகின்றேன் என்று.
குருநாதர் :- நிச்சயம் பின் அதுபோலே ஆகட்டும் நிச்சயம் யாங்கள் பின் உடம்பை எது என்று அறிய. அதனால்தான் உடம்பு பல வகையான எது என்று கூற பின் ரிஷிகளும் சித்தர்களும் இங்கு வைத்து நிச்சயம் இன்னும் கூட அங்கங்கு தியானங்கள் பின் எவை என்று கூட செய்து கொண்டே இருக்கின்றோம் முருகனுக்காக.
குருநாதர் :- நிச்சயம் முருகன் என்ன ஆசைப்படுகின்றானோ அவையெல்லாம் நிச்சயம் வருவோருக்கெல்லாம் மனமகிழோடு ஏன் எதற்கு என்று அறிய நிச்சயம் பின் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு? சித்தர்கள் அங்கங்க என்ன பண்றாரு? இன்னும் நிறைய ஞானிகள் தியானம் செய்துகொண்டே இருக்காங்க. அப்ப முருகருக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தினே இருக்காங்க. அப்ப வருவோருக்கு, யாரெல்லாம் வராங்களோ, அவங்களுக்கு என்னென்ன தேவையோ, அதெல்லாம் வந்து கொடுத்து அனுப்பிச்சுட்டே இருக்கார்.
===========================
# உலகம் அறியாத இலங்கை தேசத்தின் சிறப்புகள்….
===========================
குருநாதர் :- எதை என்று அறிய அறிய தேசம் அவ்வளவு சிறந்தது. எவை என்று கூற பின் முருகன் அப்படியே சுற்றுவான் மயில் மீது அங்கங்கு ஏது என்று கூற ஏறி.
குருநாதர் :- இதனால் எவை என்று கூற பின் பலமாக பின் மகிழ்ச்சியுடனே பின் அங்கங்கு சென்றால் “அனைவருக்கும் உயர்வுகள் தான் எப்பொழுதும் கூட” நிச்சயம்.
குருநாதர் :- இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் கூட சிலர் இங்கே இருக்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப முருகர் வந்து அப்படியே சுத்துவாராம். இங்க மலை மேல ஏறுனா அப்படியே ஒரு ரவுண்டு வருவாராம். அப்ப எங்கெல்லாம் முருகர் கோயில் அங்க இங்க தேசத்துல இருக்குதோ, அங்கெல்லாம் யார் இருக்காரு? உண்மையாகவே
அடியவர் :- முருகன் இருக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் இருக்கிறார். இன்னும் அந்த தேவதைகள் பார்த்துட்டு காத்துட்டே இருக்குது. இன்னும் சித்தர்கள் தவம் செஞ்சுட்டு இருக்காங்க. அப்ப அந்த சித்தர்கள் , தேவதைகள் என்ன பண்ணுவாங்களாம்? வந்து என்ன தேவையோ அதை வந்து கொடுத்துக்கொண்டே இருக்காங்க. கொடுத்துருவாங்களாம் அப்ப சில பேருக்கு அது மாதிரி அனுபவப்பூர்வமா உணர்ந்து இருக்காங்களாம் இங்க உள்ள சிலர்.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா இப்ப கபிலத்தை கூட அங்க கூட அவ்வளவுதான் அவர் சுத்துற இடம்தான். அப்ப இன்னொரு இடம் கதிர்காமம் அதுவும் அவரோட இடம்தான். அப்ப இதுவும் அப்ப இப்படி வரும்பொழுது இங்க யாரெல்லாம் போறீங்களோ அவங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்துட்டு தான் இருக்கிறார்ப்பா. முருகன் சந்தோஷமா வந்து அப்படின்னு சொல்றார்.
குருநாதர் :- பின் ஏனென்றால் விளையாட்டு பிள்ளை. கேட்டவுடன் அனைத்தும் கொடுத்து விடுவான். அவ்வளவுதான் நீங்கள் எதை என்று கூட பெற்றுக் கொண்டால் ஆனால் சரியா தவறா என்று நீங்கள் யோசித்து செய்ய வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா வரங்களும் கொடுப்பாங்க ஐயா.
குருநாதர் :- அப்பனே பல பேருக்கு இவ்வாறாக கொடுத்திருக்கின்றான் அப்பனே முருகன். இங்கு இருப்பவர்களுக்கும் சில பேருக்கு கொடுத்திருக்கின்றான் அப்பனே. யான் மறைமுகமாக பெயரை சொல்லவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க இருக்கிறவங்களுக்கு தான் பல வரங்கள் கொடுத்துட்டார் முருகர் வந்து. ஆனால் பெயர் நான் இங்க சொல்ல விரும்பல என்றார் அகத்தியர் வந்து.
குருநாதர் :- அப்பனே இவ்வாறத்தான் அப்பனே இன்னும் அப்பனே ஏது என்ற அப்பனே இதை சுருக்கமாகத்தான் யான் சொன்னேன் அப்பனே. இன்னும் அப்பனே விளையாட்டு தலங்கள் இருக்கின்றது அப்பனே ஏன் எதற்காக முருகன் இங்கு வந்தான்? அப்பனே எதற்காக ஈசனும் பார்வதியும் அப்பனே பின் இவ்வாறாக அப்பனே திருவிளையாடல் நடத்தினார்கள்? என்பதை எல்லாம் இன்னும் அப்பனே வாக்கியத்தில் எடுத்துரைப்பேன்.
ஆசிகள் !
ஆசிகள் !!
அனைவருக்கும் கவலை இல்லை.
குருநாதர் :- அப்பனே பின் இவ்வாறாக அப்பனே முருகன் எதை என்று அறிய அப்ப நிச்சயம் தன்னில் கூட சொல்ல வந்தேனே அப்பொழுதே முருகன் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றான், அகத்தியன் என்ன சொல்லப் போகின்றான் என்று.
அதனால் அப்பனே பின் உங்களையும் பார்த்துவிட்டான் அப்பனே. அனைவருக்குமே ஆசிகள். என்னென்ன வேண்டுமோ இப்பொழுது பின் நீங்கள் அவனிடத்தில் சமர்ப்பித்து, அப்பனே பின் அழகாக ஆசிகள் பெற்றுக்கொண்டு அப்பனே அனைத்தும் நடக்கும்.
ஆசிகள் !
ஆசிகள் !!
எங்களுடைய ஆசிகளும் கூட சித்தர் பெருமக்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கெல்லாம் முருகன் இருக்கின்றானோ அங்கெல்லாம் யாங்கள் இருப்போம், ஆசிகளோடு.
ஆசிகள் !
ஆசிகள் !!
பெரும் ஆசிகள் !!!
அடியவர்கள் :- (முருகா அரோகரா !!!! அரோகரா !!!! அரோகரா !!!! )
அடியவர் :- கடைசியா என்ன சொன்னாங்க?
சுவடி ஓதும் மைந்தன் :- பெரும் ஆசிகள். பெரும் ஆசிகள்.
(பெரும் ஆசிகள் என்ற ஆசி வாக்கு மிகவும் அரிதாகும் அன்று அடியவர்கள் அறியவும். இவ் இடத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளுங்கள்.)
அடியவர் :- அந்த வார்த்தையை இப்பதான் முதல் முறையாக கேட்குறேன்
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கூட என்ன அகத்தியன் என்னதான் சொல்ல போறாருன்னு முருகன் கேட்டுட்டு இருக்காராம். அப்ப உங்களையெல்லாம் பார்த்துட்டு தான் இருக்காங்களாம். எல்லாரையும் முருகர் பார்த்துட்டு தான் இருக்கிறார். அப்ப தேவையான விருப்பங்கள் அவங்களிடத்தில் கேளுங்கள்ன்றாருமா. உங்களுக்கு தேவையான என்னென்ன விருப்பங்களோ அவங்க எல்லாம் நல்லா இப்ப பூஜை பண்ணுவாங்க. இல்ல நல்லா வேண்டிக்கிட்டு போங்க. எல்லாமே நல்லா நடக்கும்ன்றாரு அகத்தியப் பெருமான்.
அடியவர்கள் :- வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!! அரோகரா !!!! அரோகரா !!!!
( ஆலய பூசை ஆரம்பமானது)
( அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த , முருகப்பெருமானின் வேல் திருவிளையாடல் வாக்கு நிறைவு. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment