அன்புடன் அகத்திய மாமுனிவர் 20.03.2026 அன்று ஓதிமலையில் உரைத்த வாக்கு - பகுதி 2
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
உலகாளும் ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும், பணிந்து பரப்புகின்றேனே, அகத்தியன்.
===========================
# ஓதிமலை வாக்கு - பகுதி 2……
===========================
குருநாதர் :- அப்பனே அதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. முருகனின் அன்பு அனைவருக்குமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே இன்னும் அப்பனே பின் பலிதம் எவை என்று கூற அப்பனே அதிகமாகும் என்பேன் அப்பனே வருங்காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- வருங்காலத்தில் அப்பனே உங்களுக்கு ஒரு வேலையை வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. அதை சரியாக நீங்கள் செய்து விடுவீர்கள் என்பேன் அப்பனே. ஆசிகள் லோபாமுத்திரையோடு அப்பனே கவலைகள் வேண்டாம். இன்னும் வாக்குகள் இருக்கின்றது. இன்னும் ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றது. ஏன் எதற்காக அப்பனே ஒவ்வொன்றையும் யான் எடுத்துரைக்கின்றேன்.
குருநாதர் :- எப்பொழுது ஏது பின் எதை என்று அறிய, அப்பனே பின் அப்பொழுது அப்பொழுது கால சூழ்நிலைகளை அறிந்து அப்பனே வாக்குகள் செப்பினால்தான், அப்பனே நிச்சயம், அப்பனே பின் அவை அப்படியே அப்பனே நிச்சயம் உங்களுக்கும் பலிக்கும்.
குருநாதர் :- அப்பனே அப்படியே நீங்கள் நீடோடி வாழலாம். அப்பனே பின் யோகங்கள் கிடைக்கும் என்பேன் அப்பனே. பின் அதாவது நிச்சயம் அதனால்தான் அப்பனே பின் மனிதர்களுக்கு அப்பனே நிச்சயம் மனிதனுக்கு தெரியாதப்பா உடனடியாக அனைத்தும் நடந்திட வேண்டும் என்று அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் விதியில் என்ன எழுதப்பட்டிருக்கு என்பதெல்லாம் யாங்கள் தான் அறிவோம் என்போம் அப்பனே அதனால் நிச்சயம் பின் எவை என்று அறிவு உங்களுக்கு எந்தவாறு எழுதப்பட்டிருப்பது என்றால் அப்பனே யாங்கள் அறிந்திருக்கின்றோம் அப்பனே.
குருநாதர் :- நிச்சயம் பின் வருங்காலத்தில் சொல்லுவோம் அப்பனே. ஏனென்றால் அதற்கும் அப்பனே பின் பிரம்மாவிடத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்து கூட பின் அவனிடத்தில் முறையிட்டு அப்பனே பின் சொல்லலாமா என்றெல்லாம்.
குருநாதர் :- ஆனாலும் நீங்கள் எவை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பிரம்மன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற முருகனே பிரம்மத்தை வென்றவன் தான். அதனால் உங்கள் விதியை யான் சுலபமாக சொல்லிவிடுவேன் கவலைகள் வேண்டாம். கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பேராசைகள்… ஆனாலும் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. அனைத்தும் முருகன் தருவான் தருவான் என்பேன் அப்பனே. சோதனை இதுதான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட நெருப்பை நெருங்க நெருங்க சோதனை என்பது எவை என்று அறிய. ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் நெருப்பை நெருங்கிவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிட்டது கவலைகள் வேண்டாம். ஆசிகள். ஆசிகள்.
அடியவர் :- (முருகப்பெருமான்) அவருடைய பொற்பாதத்தை பரம்பரை பரம்பரையாக கழுவும் பாக்கியம் கிடைச்சா போதும் அய்யா.
குருநாதர் :- எது என்று கூறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்தான் அப்பனே மீண்டும் அப்பனே பின் தூங்கிக் கொண்டிருந்தாயா என்ன அப்பனே?
குருநாதர் :- பின் அவனாலே… அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட… அவன் அருளாலே பின் எவை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூ.ட
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் ஈர்ப்பு விசை. அப்பனே ஈர்ப்பு விசை பற்றி வருங்காலத்தில் எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே. அனைத்தும் அப்பனே, அதாவது மனிதன் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அழகாக யாங்கள் படைத்தோம். ஆனால் அவன் என்னென்ன வேலையோ பின் செய்து வருகின்றான்.
குருநாதர் :- ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் அதற்கு மேலே அறிவில் வழியாக வருங்காலத்தில் உரைப்பேன் என்பேன் அப்பனே. உங்களை நீங்கள் வெல்லலாம் என்பேன் அப்பனே. ஆசிகள். ஆசிகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட, தர்மம் பின் சுலபமாக அப்பனே வெற்றி பெற முடியாது எவை என்று கலியுகத்தில் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் தர்மம் எவை என்று கூற பின் அதிவேகமாக பலமெடுத்து…. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றேன் என்பேன் அப்பனே. வெற்றி கிட்டும் கவலை வேண்டாம் என்பேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்துங்க ஐயா ஏதாவது கேக்குறீங்களா?
அடியவர் :- ஏதாவது அக்கா கேக்குறீங்களா
அடியவர் 1 :- ( குழந்தை படிப்பு குறித்து கேள்வி )
குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட நன்றாக எவை என்று நீயே எவை என்று கூற பின் அடித்து படிக்கச் சொல் எவை என்று புரிய.
===========================
# இறைவன் அனைத்து அடிப்படையும் மனிதனுக்கு கொடுத்து அனுப்புகிறார்.
===========================
குருநாதர் :- தாயே இவையெல்லாம் நிச்சயம் தன்னில், கொடுத்து எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவன் சரியாகத்தான் கொடுத்து அனுப்புகின்றான் எவை என்று புரிய.
குருநாதர் :- பின் அதாவது ஒருவனுக்கு என்ன அடிப்படை தேவையோ? அதை சரியாகத்தான் கொடுத்து நிச்சயம் தான். ஆனால் இங்கு வந்துதான் பிரச்சனையே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு மனிதருக்கு அடிப்படைக்கு என்ன தேவை? படிப்பு ஒன்னு தேவை. அப்புறம் கல்யாணம் தேவை. பிள்ளை அதெல்லாம் அடிப்படை. அதெல்லாம் கொடுத்துதான் அனுப்புவாராரு. அது வந்து நம்ம என்ன பண்ணனும்? முயற்சி பண்ணி ( வெற்றி அடையனும்.)
குருநாதர் :- நிச்சயம் தங்கள் அதில் முயற்சி, எவை என்று கூற, வெற்றி. ஆனாலும் அதை தன் பின் மற்றவர்கள் பின் எவை என்று புரிய பின் ஆனாலும் பயன்படுத்துவது இல்லை. மனது எங்கேயே போய்விடுகின்றது. எப்படி நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் தாயே நீயே கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- ( அது சரியா பயன்படுத்தனும். கல்வின்னா கல்வியில சரியா, அந்த நேரத்துல கல்வியை படிக்கணும். அந்த நேரத்துல படிச்சோம்னா, உயர்ந்திருக்கலாம்.)
===========================
# ஒரு மனிதனால் வாழ்வில் ஏன் முன்னேற முடியவில்லை ?
===========================
குருநாதர் :- தாயே, இறைவன் அனைவருக்கும் சமமாகத்தான் நிச்சயம் அறிவை படைத்திருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட. ஒருவன் பின் முன்னேறுகின்றான். இன்னொருவன் ஏன் முன்னேறுவதில்லை சொல்?
அடியவர் :- ஒருத்தன் முன்னேறுகிறான். இன்னொருத்தன் ஏன் முன்னேறாம இருக்கிறாங்க?
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு எல்லாருக்குமே சமமாதான் படைக்கிறார். ஏன் முன்னேறாம இருக்கிறாங்க ? உங்களதான் கேக்குறாரு.
அடியவர் 2 :- படிப்பு… படிப்பு
குருநாதர் :- எதை எவை என்று புரிய மனதை நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம், பின் அதாவது எவை என்று கூற, பின் அதாவது வெள்ளை தாள், எவை என்று போன்றே வைக்க வேண்டும். அவ்வளவுதான். அதில் அழுக்கு படிந்து விட்டால் முடிந்துவிட்டது வாழ்க்கை.
சுவடி ஓதும் மைந்தன் :- வெள்ளை தாள் மாதிரி மனசு வச்சுக்கணுமாம்
அடியவர் 2 :- சரிங்க
சுவடி ஓதும் மைந்தன் :- அதுல எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி வச்சுக்கிட்டா , வாழ்க்கை எங்கேயோ முன்னேறி போயிடலாம். வேற ஏதாவது அந்த வெள்ளைத்தாள்ல அழுக்காச்சுன்னா……..
குருநாதர் :- தாயே எவை என்று கூற, பின் எதற்கு எவை என்று இவை பற்றி கூட யான் நிச்சயம் ஒரு நாள் சொல்வேன் அனைவரிடத்திலும்.
குருநாதர் :- சிவப்பு ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது சிவப்பு மஞ்சள் இன்னும் பல பல பின் வித்தியாசமான நிச்சயம் தன்னில் பின் அவர்களுக்கு வந்தால் நிச்சயம் அவ்வினை தீர்ப்பது கடினம்.
குருநாதர் :- ஆனால் உங்களுக்கும் வரும் சொல்கின்றேன் எவை என்று புரிய. ஆனாலும் அப்பனே உனக்கு மஞ்சளில் உள்ளது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன்.
அடியவர் :- எனக்கா ஐயா
சுவடி ஓதும் மைந்தன் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒவ்வொருத்தருக்கும் மனது ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அந்த நிறம் நல்ல நிறமாக இருந்தால், வாழ்க்கையில உடனே வெற்றி பெற்றிருக்கலாம் என்பதையும் சொல்றாங்க. இவரோட மனசு என்னனா—மஞ்சளா இருக்குது, மஞ்சள் மங்களகரமா இருக்கு என்பதையும் சொல்றாங்க )
குருநாதர் :- அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் நிச்சயம் குருவானவன் அனைத்தும் உனக்கு செய்வான் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் மஞ்சள் கலர்ல இருக்குது? .
அடியவர் :- குரு
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, குரு என்ன பண்ணுவாரு? அனைத்தும் செய்வார். ஓகேங்களா ஐயா. உங்க மனசு , ஒவ்வொரு ஒருத்தரும் ஒரு ஒரு கலர் இருக்கும்.
குருநாதர் :- இன்னும் பின் சொல்லவில்லையே என்று நினைத்து விடாதீர்கள். இவனுக்கு ஏன் பின் சொல்கின்றேன் என்றால் இவனுக்கும் எவை என்று கூற மற்றவருக்கு பின் எவை என்று கூற ஒரு வாக்கை தரக்கூடியவன் இவன். அதனால்தான் சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவருக்கு ஏன் சொல்றேன்னா உங்களுக்கெல்லாம் சொல்லலன்னு நினைச்சுக்காதீங்க இவர் மத்தவங்களுக்காக அந்த குரு இருக்கிறதுனால வந்து உள்ள அந்த மஞ்சள் இருக்கிறதுனால இவர் சொல்லுவாராம் வாக்கு புரியுதுங்களா
ஒரு அடியவர் :- ( ராமேஸ்வரம் காசி தண்ணீர் எடுத்து வந்து, அது போல நம்மளால - ஓதிமலை கும்பாபிஷேகம் அன்று-அங்க வர கூட்டத்துக்கு கொடுக்க முடியாது. அதனால வேற ஒரு - நல் வழி வேண்டுகின்றோம் )
குருநாதர் :- அப்பனே பின் நிச்சயம் மஞ்சள் நிறத்தோனே, அப்பனே நிச்சயம் எதை என்று கூட, பின் ஊட்டி விடலாமா காவேரி நீரை?
அடியவர் :- தாராளமாக செய்யலாம்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் விடும் அவ்வளவுதான்.
அடியவர் :- லோபாமுத்திராவும் , (காவேரி ) அன்னையும்.
ஒரு அடியவர் :- ஓகே
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிட்டாரு
ஒரு அடியவர் :- நாங்க இரண்டு ரெண்டு பேர்தான் ( புனித நீர் ) தண்ணிர் எடுக்க போறோம். ஃபுல்லா கொண்டு வரல…
சுவடி ஓதும் மைந்தன் :- ரைட் அப்ப..
அடியவர் :- தாமிரபரணி தீர்த்தத்தையும் காவேரி தீர்த்தத்தையும் கலந்துக்கலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- கலந்துக்கலாம்
ஒரு அடியவர் :- சந்தோஷம்
குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் எங்களுடைய ஆசிகள். கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. சிறப்பாக அப்பனே பின் யாங்களே நடத்தி விடுவோம். கவலைகள் இல்லை. வேடிக்கை மட்டும் பாருங்கள் அப்பனே. ஆனாலும் யாருக்கு அடி நிச்சயம் தன்னில் கூட, பலமாக நிச்சயம் தன்னில் கூட, சரியாக பின் விளையாடிக் கொண்டிருப்பான். கோபத்தை எழுப்பினால் அழித்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் என்ன பண்ணுவாராம்? ஜாலியா விளையாண்டு இருப்பாரு… யாராவது ஏதாவது பண்ணாங்கன்னா ….
குருநாதர் :- அப்பனே மீண்டும் அப்பனே முடியட்டும். மீண்டும் வாக்குகள் யான் வந்து செப்புவேன் போதுமா? சந்தோஷமா? நிச்சயம் எவை என்று கூற பின் எதை என்று கூற. பின் ஆனாலும் (சுவடி ஓதும் மைந்தன்) இவன் வரமாட்டான் என்று நீ நினைத்து விடாதே. நிச்சயம் அனுப்புவேன்.
அடியவர் :- (இவ் வாக்கை கேட்டவுடன் …ஒரே சந்தோசம் …பலத்த சிரிப்புகள் )
அடியவர் :- முருகா !!!!!! நினைச்சேன்…(சுவடி ஓதும் மைந்தன் - மீண்டும் சுவடி படிக்க ) இவர எப்படி பிடிக்கிறது? குருநாதா !!!!!!!!
( சில தனி வாக்குகள் )
===========================
# பிள்ளைகள் வாழ்வில் முன்னேற , எந்தவித தீய பழக்கங்களுக்கும் ஆளாகாமல் நன்கு ஒழுக்கத்துடன் வளர
===========================
அம்மை அடியவர் :- ( தனது மகள் குறித்து கேட்டபோது )
குருநாதர் :- எது என்று புரிய தாயே நிச்சயம் தன்னில் இப்பொழுதே இப்படித்தான் நிச்சயம். பின் எவை என்று புரிய பின் இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு பெண் குழந்தை என்று, நிச்சயம் பின் சொல்லி எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் அதாவது கந்த சஷ்டியினை நிச்சயம் தன்னில் அனுதினமும் ஓதிக்கொண்டே வரச்சொல். பின்பு உரைப்பேன். ஆசிகள். ஆசிகள்.
===========================
# சித்தன் அருள் - 1923 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 9
குருநாதர் :- நிச்சயம் சில சில தரித்திரங்கள் நீங்க , பின் கந்த சஷ்டியினை ஓதிக் கொண்டே வாருங்கள். நிச்சயம் குழந்தைகளுக்கு திறமைகள் வளர கந்த சஷ்டியினை ஓதிக்கொண்டே வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஏற்கனவே பல உரைகளில் உரைத்திருக்கின்றேன்.
https://siththanarul.blogspot.com/2025/08/1923-22-23-june-2025-9.html
===========================
குருநாதர் :- தாயே எவை என்று கூற பின் அனைத்தும் எவை என்று புரிய நிச்சயம், இன்றைய காலம் எவை என்று கூற பின் அதாவது பின் கலியுகத்தில் எவ்வளவு ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு பின் அதாவது பின் அதாவது எவை என்று தர்மம் தலை கீழாகத்தான் போக வேண்டும் என்பதெல்லாம் விதி.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம். நிச்சயம் எது என்று புரிய. பின் அதாவது மனிதன் இவ்வாறு தான் பின் வளர்ந்திட வேண்டும் என்பது ஒரு நியாயம் இருக்கின்றது. அதை நிச்சயம் கற்றுக் கொடுத்து கற்றுக் கொடுத்து நிச்சயம் பின் சொல்லி வந்தாலே போதும். நிச்சயம் பின் வெற்றி பெறுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மத்தை கடைபிடி. தர்மத்தை இப்படித்தான் வாழனும். இப்படி இருந்தாதான் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று, உங்களை, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க சொல்றாரு.
===========================
# எத்தனை அடிகள், எத்தனை பட்டாலும், தர்மத்தின் வழியில் செல்பவனுக்கு நிச்சயம் தோல்வி வராது.
===========================
குருநாதர் :- நிச்சயம் எவ்வளவு பின் தடைகள் தாமதங்கள் எவை என்று அறிய, நிச்சயம் தர்மம் எவை என்று நிச்சயம் தன்னில் கூட, எத்தனை அடிகள் எத்தனை பட்டாலும் தர்மத்தின் வழியே செல்பவனுக்கு நிச்சயம் தோல்வி வராது
சுவடி ஓதும் மைந்தன் :- எவ்வளவு அடிபட்டாலும், எவ்வளவு வாழ்க்கை நொந்தாலும், என்ன பண்ணாலும், தலை அடி அடிச்சாலும், என்ன அடிச்சாலும் பரவாயில்லை. தர்மத்தில் போய்க்கொண்டே இருந்தால் , ஒரு நாள் ஜெயிக்கலாம்.
குருநாதர் :- எது என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று ஆனாலும் இப்பொழுதெல்லாம் நிச்சயம் அதர்மம் தான் தலை நோக்கி நிற்கும் வேண்டும் என்பது நிச்சயம் விதி.
குருநாதர் :- ஆனாலும் பின் அதி வேகமாகவே நிச்சயம் எவ்வாறு பின் தலை நிற்கிறதே, அவ்வாறாவே தலை குனியும் அவ்வளவுதான்.
குருநாதர் :- அப்பா நிச்சயம் தன்னில் கூட கட்சிகள் பற்றி கேட்டு விடாதே.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
===========================
# அன்னை சரஸ்வதி தேவியின் அருள் உண்டாக , குழந்தைகள் கல்வியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
===========================
( சில தனி வாக்குகள் )
குருநாதர் :- தாயே எதன் மீது அதிக பக்தி அளவு எவை என்று அறிய பின் அதிகமாக இருக்கின்றதோ அதில் வெற்றி பெறுவான் ஒருவன். அவ்வளவுதான் நிச்சயம் பின் பக்தி இல்லை என்றால் நிச்சயம் எவ்வாறு என்பதை கூட பின் எங்கேயோ படித்துவிட்டு எவர் எங்கேயோ ஞாபகம் வைத்துவிட்டு எவ்வாறு நியாயம்?
குருநாதர் :- தாயே வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட இன்னும் அதாவது பின் எவ்வாறெல்லாம் பின் உயர்ந்தவர்கள் என்றால், நிச்சயம் தன்னில், இப்பொழுதெல்லாம் கல்வி எவை என்று ஒரு பின் ஆடம்பர சக்கரமாகவே ஆகிவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- கல்வி எல்லாம் என்ஜாய்மெண்ட்டுக்காகவே போறாங்கன்றது இப்ப எல்லாம். அப்ப என்ன ஆகும்?
குருநாதர் :- நிச்சயம் அதில் தன் பின் சந்தோஷமாக இருந்தால் சரஸ்வதி தேவி நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, நிச்சயம் முன்னேற விடமாட்டாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- கல்வியில வந்து சந்தோஷமா இருந்துட்டா…. கல்வியில என்ன பண்ணுவாங்க? சரஸ்வதி தேவியே க்ளோஸ் பண்ணிடுவாங்க ஆட்டத்தை. முடிஞ்சு போச்சு..
மற்றொரு அடியவர் :- குருவே நான் எதுக்காக பிறந்திருக்கிறேன் குருவே?
குருநாதர் :- அப்பனே பிறந்ததே அப்பனே நிச்சயம் தன்னில் கூட உன்னை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பிறந்ததே ஒரு வீண். அப்பனே வாழ்க்கை கொடுத்ததே நிச்சயம் பின் முருகன்.
குருநாதர் :- அப்பனே ( —------------- விதி ரகசியங்கள் —----------------) என்று எழுதிவிட்டான் என்பேன் அப்பனே. ஆனாலும் முருகன் தான் அதை மாற்றி அமைத்தான் என்பேன் அப்பனே.
( தனி வாக்குகள் , பல சிரிப்புகள் )
குருநாதர் :- பின் எவை என்று அறிய நிச்சயம் பின் அதாவது அபிஷேகங்கள் ஆகட்டும் மீண்டும் உரைக்கின்றேன்
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கும்பாபிஷேகம் நடக்கட்டும். மீண்டும் உரைக்கின்றேன்.
குருநாதர் :- எது என்று புரிய அப்பனே நிச்சயம் அனைவருக்கும் எங்களுடைய ஆசிகள் அப்பனே நிச்சயம் பின்…
குருநாதர் :- அதாவது பின் வாய் திறந்தானே அவன் எவை அமைதியாகிவிட்டான். ஏழு.
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட முருகன் அழகாக பின் உன்னிடத்தில் தான் விளையாடுகின்றான் என்பேன் அப்பனே அதனால்தான் விளையாட்டாக சொன்னேன் அப்பனே நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம்
குருநாதர் :- உனக்கு என்ன தர வேண்டுமோ முருகன் தருவான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. ஏனென்றால் முருகனே விளையாடும்போது, யாரும் விளையாடக்கூடாதாப்பா சொல்லு நீயே.
===========================
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆகிவரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”
― திருமூலர்
===========================
ஒரு அடியவர் :- முருகனையோ சிவனையோ ஓடி ஓடி பார்க்கணும்னு ஆசையா இருக்கு …
குருநாதர் :- எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அமைதி காத்திரு. அனைத்தும் எவை என்று அப்பனே விவரமாக குறிப்பிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அப்பனே மனிதன் எவ்வாறு என்றெல்லாம் அப்பனே ஆசைப்படுகின்றான். ஆனாலும் ஏன் அப்பனே பின் ஆசைகள் தடைப்படுகின்றது? ஏன் எதற்காக ?என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் ஆசை ஆசை நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனின் எவை என்று கூட மூலனின் கூற்றுப்படி எவ்வாறு என்பதெல்லாம் நிச்சயம் பின் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஏன் எதற்காக நிச்சயம் இறைவனை தேடுகின்றோம் எவை என்று அறிய பின் ஒருவனுக்கு எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
===========================
# இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்?
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறைவனே அப்பனே மீண்டும் வருகின்றேன். இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- சரியா போச்சு.. மீண்டும் வந்து கேள்வி கேட்கிறார்.. இறைவனை ஏன்பா வணங்குறீங்க இப்ப?
மற்றொரு அடியவர் :- நல்லது நடக்கணும் தானங்க ஐயா அப்பனே நல்லா இருக்கும்…
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அப்பனே இறைவன் அதாவது நிச்சயம் கொடுத்து விடுவானா என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- நீ கேட்டா, கொடுத்து விடுவாரா இறைவன்?
மற்றொரு அடியவர் :- இறைவன் கிட்ட போனாதான் மனசு நல்லா இருக்கும்.
குருநாதர் :- அப்பனே எது என்று கூட அப்படி இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் என்னென்னவோ சுகம். ஒவ்வொருவரும் அப்பனே ஒவ்வொரு சுகம் என்பேன் அப்பனே. ஒருவனுக்கு பெண். அப்பனே ஒவ்வொருவனுக்கு பணம். அப்பனே ஒவ்வொருவனுக்கு பொருள். ஒருவனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூட இதில் சொல்ல அப்பனே
அடியவர் 3 :- ( ……………..)
குருநாதர் :- அப்பனே நிச்சயம் மனிதன் என்றாலே பிரச்சனைதான் அப்பா நிச்சயம் தன்னில் கூட. மனிதனுக்கு மறுபேர் பிரச்சனை. போதுமா??????
குருநாதர் :- விட்டுவிடு கவலையை அப்பனே நிச்சயம் பிரச்சனை எவை என்று. ஒன்று கூடுவார்கள் நாளை அப்பனே. நீதான் ஆனாலும் அப்பனே எவ்வாறு எல்லாம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? இன்னைக்கு அடிசிப்பாங்க. நாளைக்கு வந்து பேசி சேர்ந்துக்குவாங்கன்னு சொல்லிட்டாரு. விடுப்பா.
===========================
# இறைவன் அவன் அருளாலே அவன்தான் வணங்கி.
# அவ்வளவுதான் வாழ்க்கை.
===========================
குருநாதர் :- அப்பனே இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட இறைவன் ஏது என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே அதாவது இறைவன் நினைத்தாலே உண்டு என்பேன் அப்பனே.
குருநாதர் :- மீண்டும் சொல்கின்றேன் அப்பனே இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே பலமுறையும் சொல்லிவிட்டேன் அப்பனே அவனால் பின் அவன் அருளாலே அவன்தான் வணங்கி அவ்வளவுதான் வாழ்க்கை.
===========================
# எல்லோராலும் புண்ணியங்கள், தான தர்மங்கள் செய்ய முடியுமா ?
===========================
அடியவர் 4 :- ஐயா நானும் தான தர்மங்கள் அதிகமா செய்யணும். அதுக்கு வாக்கு ….
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதற்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே பின் இறைவனை எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே பின் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வேலை வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனாலதான் அப்பனே நிச்சயம் தர்மங்கள் அப்பனே பின் எவை எதுன்னு கூட அனைவராலும் செய்ய முடியாது என்பேன் அப்பனே
குருநாதர் :- பின் இறைவன் யாரை தேர்ந்தெடுக்கின்றானோ அவனை மட்டும்தான் நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை எவை என்று கூற.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீதி எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் செய்வான் அப்பனே. நானும் செய்கின்றேன் யானும் செய்கின்றேன் என்று.
குருநாதர் :- ஆனால் கடைசியில் அப்பனே கர்மா ஏற்பட்டு, அப்பனே பின் எவை என்று உடைந்து விழுந்து விடுவான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஏன் எதற்கு நிச்சயம் பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அதனால் அப்பனே இறைவன் யாரெல்லாம் எதற்கு சந்தர்ப்பத்தை, அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே கொடுத்து, ஏது என்று அறிய, பின் மனம் போல் அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே ஒவ்வொருவனுக்கும் ஒரு வேலை.
குருநாதர் :- அப்பனே அதனால் நிச்சயம் தன்னில் அவ்வேலை சரியாக அப்பனே. ஆனாலும் அவ்வேலையை தெரிந்து கொள்ள அப்பனே, இன்னும் அப்பனே கால சமயங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே பொறுத்திரு.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் தர்மம் செய்ய …அந்த சான்ஸ் கொடுக்க மாட்டாராம். அப்படி தர்மம் வந்து பண்ணா கூட கீழ விழுந்துருவாங்களாம். அப்புறம் வந்து என்ன சொல்லுவாங்க? நானும் தர்மம் பண்ணேன்னு சொல்லிட்டு…. என்னடா இது மாதிரி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு….ஏன்னா இறைவனை குறை கூடுவாங்கப்பா என்று சொல்றார்.
===========================
# யார் இறைவன் காலடியில் எப்போதும் இருப்பார்கள் ?
===========================
குருநாதர் :- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, முருகன் யாரை விரும்புகின்றானோ, அவனை ஏற்ப எவை என்று அறிய நிச்சயம் அதனால் உங்களை விரும்பி இருக்கின்றான் அப்பனே. அதனால்தான் முருகன் காலடியிலே இருக்கின்றீர்கள். அதனால் பின் எவை வந்தாலும் முருகன் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உங்கள் வீட்டுப் பிள்ளை அவ்வளவுதான் பின் எவை என்று புரிய.
அடியவர் 4:- முருகார் வருவாரா கும்பாபிஷேகத்துக்கு ?
குருநாதர் :- எது என்று புரிய அப்பனே அதாவது பின் முருகனே குருநாதம் விட்டுவிடு கவலையை
அடியவர் 4:- ( ………………….. )
குருநாதர் :- எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட முருகன் அப்பனே அதாவது சொன்னேனே அப்பனே. பின் தூங்கிக்கொண்டு இருந்தாயா என்ன அப்பனே நிச்சயம் தன்னில் கூட? முருகன் பின் உங்கள் வீட்டு பிள்ளை. அவன் பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. கவலை விடுங்கள். உங்கள் வேலையை பாருங்கள் என்பேன் அப்பனே. ஆசிகள் அப்பனே. மீண்டும் அப்பனே பின் அதாவது சந்தோஷமாக முருகன் இருக்கின்றான். மீண்டும் வந்து அப்பனே விவரிப்பேன். அதேபோல அப்பனே ஆசிகள். இன்னும் ஆசிகள் ஆசிகள் போதும் அப்பா. ஆசிகள் ஆசிகள்.
(...............)
அடியவர் :- ஐயா நாடி படிக்கிற ஜானகிராமன் ஐயாவுக்கு ஒரு கல்யாணத்தை சீக்கிரமா பண்ணி வைங்க…
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீ நினைத்தால் அனைத்தும் நடக்கும் விட்டுவிடு. கவலையை.
அடியவர் 6 :- சாமி எனக்கும்?
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே பின் அதாவது எப்படி ஏது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒருவள், எவை என்று கூற இருவள் அப்பனே இன்னும் எத்தனை, அப்பனே எதை என்று புரிய.
அப்பனே இதனால் அப்பனே பின் இதற்கு என்ன பொருள் எதை என்று அப்பனே? இதனால் அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே பின் அதாவது மற்றவர் பின் இற்றவர், எப்படி பட்டவர் எது என்று அப்பனே பின் இதை உணர்ந்தால் அப்பனே வெற்றி உனக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கே தெரியல இது.
அடியவர் :- மறுபடியும் நாடி ரெக்கார்டு கேட்டாதான் புரியும்…
அடியவர் 6 :- எனக்கு பொன்னான வாய்ப்பு…
குருநாதர் :- எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நல்விதமாக அப்பனே பின் ஆசிகள் அப்பனே எதை என்று, அப்பனே.
===========================
# முதலில் இந்த உலகத்தில் வாழ வேண்டிய தகுதியானவை?
# அனைவருக்கும் மிக முக்கிய பொது வாக்கு…..
===========================
குருநாதர் :- அதாவது முதலில் அப்பனே பின் அதாவது வாழ வேண்டிய அப்பனே உலகத்தில் தகுதியானவை, முன்னோர்களின் ஆசிகளும் கூட…….. அப்பனே பின் எவை என்று குலதெய்வத்தின் அன்பும் கூட……… இப்பொழுதுதான் அப்பனே முன்னோர்களின் ஆசிகள் பெறுகின்றாய் அப்பனே. பொறுத்திரு அப்பனே.
அடியவர் :- முதல் மாதிரி பத்தி சத்திய பூஜை எல்லாம் பண்ண முடியும் இல்லைங்க இப்ப பூஜையே மறந்து போச்சுங்க…
குருநாதர் :- எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீ மறந்தாலும் அப்பனே பின் முருகன் உன்னை மறைக்கவில்லை என்பேன் அப்பனே. அதேபோல்தான் அனைவருக்குமே அப்பனே வாழ்க்கை உண்டு அப்பனே. முருகன் தேர்ந்தெடுத்து என்ன செய்ய வேண்டுமோ, அதை கொடுப்பான் என்பேன் அப்பனே. நீங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் சிறைச்சாலையில் இருக்கின்றீர்கள். அது மட்டும் கவனமாக இருக்க வேண்டும் அப்பனே நிச்சயம். அச்சிறைச்சாலையில் வெளியே விடுவது அப்பனே பின் முருகனுடைய வேலை. வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே.
அடியவர் :- அவருக்கு கைலதான் இருக்குது
குருநாதர் :- அப்பனே ஆசிகள் நன்றாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே பின் எவை என்று முருகன் அழகாக விளையாடுவான். அப்பனே யாங்கள் இருக்கின்றோம் அப்பனே பாதுகாப்புக்காக ஆசிகள் ஆசிகள் நிச்சயம்
நமசிவாய ஐயா
அடியவர் 7 :- ( உடல்நிலை குறித்து கேள்விகள் )
குருநாதர் :- அம்மையே பின் கவலைகள் இல்லை. கவலைகள் இல்லை. ஆசிகள். பின் நிச்சயம் அதாவது ஆசிகள் இல்லாமல் நிச்சயம் இங்கு வந்துவிட்டால், என்ன நிச்சயம் அனைத்தும் யாங்கள் அறிவோம். கவலைகள் விடு.
( ………………………….. )
குருநாதர் :- எது என்று புரிய கவலை விடு கவலை விடு தாயே ஒன்றை குறிப்பிடுகின்றேன் எது என்று கூற. பின் அதிகமாக பின் உடம்பு எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது விதியில் தன்னில் கூட எவ்வாறு உள்ளது என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம்.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் ஒன்று பின் அதிகமாக சென்றுவிட்டால் நிச்சயம் தன்னில் கூட மருத்துவமனைக்குத்தான் நிச்சயம் தன்னில் யாங்கள் அங்கு காப்பாற்றி விடுவோம் நிச்சயம்.
குருநாதர் :- ஏனென்றால் பின் அதாவது இயற்கை என்பது பின் ஒருவருடமோ இருவருடமோ மூவருடமோ இல்லை இதை நிச்சயம் தன்னில் பல வருடங்கள் உபயோகிக்க வேண்டும். அப்பொழுதுதான் நிச்சயம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மாதமோ இரு மாதமோ எடுத்துக்கொண்டு பின் எவ்வாறு என்பதை எல்லாம்.
குருநாதர் :- இதனால் நிச்சயம் கவலை விடுங்கள் அதாவது நிச்சயம் யாருக்கு என்ன வந்தாலும், யான் மருத்துவனாக நிச்சயம் வந்து காப்பேன். ஆசிகள்.
( அன்புடன் அகத்திய மாமுனிவர் 20.03.2026 அன்று ஓதிமலையில் உரைத்த வாக்கு நிறைவு அடைந்தது.)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment