​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 31 October 2025

சித்தன் அருள் - 1975 - அன்புடன் அகத்தியர் - மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனையின் விளக்கம்!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!

சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனையில்

சித்தன் அருள் பதிவு எண்

சித்தன் அருள் - 1960 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - 1

இடைக்காடர் சித்தர் மதுரையில் ஆலயத்தில் செய்ய வேண்டிய சில பரிகார காரியங்களை குறிப்பிட்டார் இதை பொதுவாக்கில் வெளியிட்ட பொழுது அடியவர்கள் சிலர் விளக்கம் கேட்டிருந்தனர் அதற்கான விளக்கம் இது. 

எவை என்று அறிய பின் இவ்வாறாகவே பின் அதாவது பிரம்மன் வந்திருக்கின்றான் என்று கணபதிக்கு தெரிய. கணபதியும் குழந்தை ரூபத்தில் ஓடி வந்தான். பின் எதை என்று அறிய பிரம்மனும் பார்த்து, இதுவும் ஒரு தலைவலிடா என்று. 

எது என்று புரிய. இதனால்தான் முதலில் வேண்டிக்கொள்ளுகின்ற பொழுது நின்றிருப்பானே, நின்றிருப்பானே. பிள்ளையோன் ( முதலில்  முக்குறுணி விநாயகர்,  விபூதி விநாயகர் - தரிசனம்.)

இவ்விடம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு வாசலில் உள்ளே செல்லும் பொழுது இடதுபுறத்தில் தூணில் கணபதி நின்ற கோலத்தில்  இருப்பார் .

1. வடக்கு கோபுரம் வாயிலாக உள்ளேன் நுழைந்தவுடன் வடக்கு ஆடி வீதி அதில் இடது புறமாக அரசமரம் வேப்ப மரத்திற்கு கீழாக ஒரு விநாயகர் நின்ற விநாயகர் இருக்கிறார்.

2. சொக்கநாதர் சன்னதி நுழையும் பொழுது இடது புறமாக அணுக்கை விநாயகர் நின்ற விநாயகராக இருக்கிறார்.

3. மீனாட்சி அம்மன் சன்னதி முன்புறம் பொற்றாமரை க் குளத்திற்கு வெளிப்பக்கமாக நின்ற விநாயகர் இருக்கிறார்.

விநாயகர் குரிய ஆறுபடை திருத்தலங்களில் நான்காம் படைவீடு மதுரையில் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் திருத்தலம் என்பது கூடுதல் தகவல்.

இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்து எதை புரிய, எதை என்று அறிய அழகாக மீனாட்சி அறிந்தும் எவை என்று அறிய பின் (சந்தனம் ) அரைத்து எதை என்று அவ்விபூதியை நிச்சயம் எதை என்று அறிய இல்லத்திலும் வைத்து பூஜைகள் செய்து அனுதினமும் பின் நீரும்,  அறிந்தும் இவை என்று பின் ருத்திராட்சம் நீரில் இட்டு அருந்தி வர சிறப்பாகும். சில சில நோய்களும் பின் இடத்தையும் மாற்றலாம். பொறுமையாக . இவைதன் அதிர்ஷ்டம் வாய்க்கும் .

இவ்விடம்.

மீனாட்சி அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் கொடி மரத்தருகே பொற்றாமரை குளம் அருகே மதுரையில் பிறந்த மூர்த்தி நாயனார் தனது கைகளையே சந்தனமாக தன்னுடைய திருகரங்களை அரைத்த சந்தனம் அரைக்கும் கல் இருக்கும் இடத்தில் 

மதுரையில் திருஞானசம்பந்தர் பாடி திருவருள் செய்த தேவாரப் பதிகம் 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

திருஞானசம்பந்தர்

இந்தப் பதிகத்தின் பலகை அமைந்திருக்கும் இடத்தில் திருநீற்றுக் கல் ஒன்று உள்ளது. இங்கிருந்து விபூதியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று வைத்து வழிபடலாம். இந்த விபூதியில் நேரில் கலந்து ருத்ராட்சமும் இட்டு ஊற வைத்து அருந்தி வர இடைக்காடர் சித்தர் கூறியிருக்கின்றார். முழு வாக்கும் மேற்கூறிய பதிவு எண்ணில் சென்று படிக்கவும்.

குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே மதுரை சத்சங்கத்தில் தெரிவித்தபடி வில்வம் ருத்ராட்சம் வேப்பிலை துளசி அருகம்புல் இவற்றை நீரில் இட்டு விபூதியையும் கலந்து அதிகாலையில் அருந்தி வரலாம்.

குருநாதர் அகத்தியர் பெருமான் சொன்னது மற்றும் இடைக்காடர் சொன்னதை அடியவர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம்!!


பிருகு மகரிஷி... தனது வாக்கில் 
சித்தன் அருள் 1948 ல்

அனைத்து சித்தர்களும் வெவ்வேறு கருத்துக்களாக வருகின்ற பொழுது அனைத்திலும் கடைசியில் பார்த்தால் ஒன்றே...

ஆனாலும் நீங்கள் தான் குழப்பிக் கொள்வீர்கள்.. பின் அங்கு அப்படி இங்கு இப்படி... எங்கு ஏது எவை என்று.. அறிய!!!

(அனைத்து சித்தர்களின் வாக்குகளும் ஒரே கருத்தை ஒரே உபதேசத்தை வலியுறுத்தும்)

குழப்பங்கள் அறிந்தும் புரிந்தும் அறிய... சரியான வழியிலே நிச்சயம் அகத்தியன் சொல்லியிருந்தாலும்.. அதைக் கூட தட்டிக் கழிக்கும்... பாவங்கள்!!

(குருநாதர் அகத்தியப் பெருமான் வழிமுறைகளை சொன்னாலும் அதை புரிந்து கொள்வதற்கும் செய்வதற்கும் தடுக்க பார்க்கும் மனிதருடைய பாவங்கள்)

அதாவது குருநாதர் அகத்திய பெருமாள் போகர் பெருமான் இடைக்காடர் பெருமான் என சித்தர்கள் அனைவரும் பல்வேறு பரிகாரங்களை சொன்னாலும் அவை அனைத்தும் மனித குலத்திற்கு நன்மைக்கு!!

அனைத்தும் ஒன்றுதான் நீரில் இட்டு அருந்தி வரும் இந்த வழிமுறை ஆயினும் சரி சரவண தீபம் கோலம் நவகிரக நவதானிய தீப கோலம் என சித்தர்கள் அனைவரும் உரைப்பது ஒன்றுதான் அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் அடியவர்கள் விபூதி தொட்டி விநாயகர் எனும் இடத்திலும் விபூதியை சேகரித்துக் கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 30 October 2025

சித்தன் அருள் - 1974 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - சிவபுராணம் ரகசியங்கள்/ ஜாதக ரகசியங்கள்.


 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - சிவபுராணம் ரகசியங்கள். ஜாதக ரகசியங்கள். 

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.

வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

ஆதி அருணாச்சலத்தை , ஆதி அருணாச்சலேஸ்வரியை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியனே.

அப்பனே நலன்களாக எத்தனை ஏன் எதற்கு அப்பனே, பின் சிவபுராணத்தை ஏன் ஓதுகின்றோம் என்று. இவைதன் கூட சிறிது சிறிதாக செப்பிக்கொண்டே. 

இவ்வாறாக  சிவபுராணத்தை ஓதுவதாலே, நிச்சயம் அறிந்தும் . அதாவது, பின் வாய்கள் எதை புரிய, எத்தனை முறை, பின் அதாவது. சுவாசங்கள், நிச்சயம். 


அவ்வாறாக, அதாவது, எத்தனை முறைகள் இவைகள் பாடுகின்ற பொழுது, நிச்சயம், பின் உதடுகள் தொட்டும், பின் தொடாத வாரும். அதுபோலவே, உள்ளுறுப்புகள், நிச்சயம், தன்னில் கூட சரியாகவே இயங்கும். 


“““““““““ இதைத்தன், அவை  மட்டுமில்லாமல், நிச்சயம், ஈசனே மலையிலே இருக்கின்றான்.   ”””””””


( திரு அண்ணாமலை மலையே ஆதி ஈசனார் )


“““““““““ அதாவது, நடந்தே, இவ்  சிவபுராணம் , பின் பாடி வந்தால், நிச்சயம், பல வகைகள் கூட, உள்ளுறுப்புகள் பலம் இழந்ததெல்லாம், நிச்சயம், பலம் பெற்று, பின் உண்ணுள்ளே, ஈசனை காணலாம்.   ”””””””


“““““““““ ஆனாலும், இதை, நிச்சயம், எவருக்கும் வாய்க்காது.  ”””””””


அதாவது, புண்ணியம் இருந்தால் மட்டுமே, சரியான நேரத்தில், அதிகாலையிலே, நிச்சயம், பல வகையான, பின் கதிர்வீச்சுக்கள், கிரகங்களின் கதிர்வீச்சுக்களும், நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்களும், பின் கீழே விழும். 


“““““““““ அந்நேரத்தில், நிச்சயம், சரியான அளவு, சரியான வழியிலே, இவ்  சிவபுராணத்தை ஓதி வந்தாலே, நிச்சயம், உண்ணுள்ளே, நிச்சயம், ஈசனை காணலாம் என்பதற்கு இணங்கவே, நிச்சயம், ஈசன் அழகாக, நிச்சயம், பாடிட்டு சென்றான் நிச்சயம். ”””””””


“““““““““ இதைத்தன், நிச்சயம், ஒவ்வொரு பதிகங்கள், இன்னும் பலம் மிக்க, இன்னும் நோய்களை, பின் அகற்றிக் கொள்ள, ஈசனை, தன் உள்ளத்திலே, எப்படி காண்பது என்றெல்லாம், மறைமுக பொருளாகவே, ஈசனே, மறைத்து வைத்திருக்கின்றான்.  ”””””””


இதனால், நிச்சயம், அறிந்தும்  அதாவது, சிவபுராணம், நிச்சயம், பாடிக்கொண்டே வந்தாலே, நிச்சயம், பெரும் கஷ்டம் வந்துவிடும், நிச்சயம் தன்னை கூட. 


ஏனென்றால், யான் முன்னதாகவே சொல்லிவிட்டேன்.


==================================================

(பின் வரும் நட்சத்திர பாதங்கள் விபரங்களை அறிய , நம் குருநாதர் அருளிய , இதற்கு முந்தய வாக்கினை படிக்கவும்.)

அந்த வாக்கின் மிக எளிய  சுருக்கம் உங்கள் பார்வைக்காக:- இறைவனை நேரடியாக காண வேண்டுமென்றால், முதலில் 99 நட்சத்திரங்களை கடக்க வேண்டும். நூறாவது நட்சத்திரம் தான் ஒருவரின் தனிப்பட்ட நட்சத்திரம், அதற்கு மேலே தான் இறைவன் இருக்கிறார். ஆனால் அந்த 99 நட்சத்திரங்களை கடக்க முடியாது என்பதே உண்மை. கடந்து விட்டால், இறைவனை நேரடியாக காண முடியும். இதைச் செய்ய இயலாததால், திருவாசகம், கந்தபுராணம் போன்ற புனித நூல்களை பாடுவதன் மூலம், இறைவனின் உண்மை அர்த்தம் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு வெளிப்படும்.

===================================================


ஏன், எதற்கு, எது என்று அறிய. அதாவது, பாதங்கள், அதாவது, பின் 99, நிச்சயம், தன்னை கூட, கடக்க வேண்டும். 


அதாவது, நூறை கடந்துவிட்டால், உங்களுடைய நட்சத்திரம்.


அதற்கு மேலே, இறைவன் என்று. அதாவது, நிச்சயம், நீங்கள், அதாவது, 60, 50, 50, நிச்சயம், இவை கடந்தாலே, நிச்சயம், பின் கஷ்டங்கள், பெரிதாக. அதாவது, சிவபுராணத்தை கூட, பாடிக்கொண்டு வந்தாலே, நிச்சயம், பாதி அளவை, நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்று, நிச்சயம், நினைத்துக் கொள்வீர்களாக. 


உண்மை, அறிந்தும்  ஆனாலும், அப்பொழுதே, நிச்சயம், மீண்டும், மாய வழியில், இழுத்து வந்துவிடும். அதாவது, கிரகங்கள். 


ஆனாலும், நிச்சயம், அக்கிரகங்களை கட்டுப்படுத்தி, மீண்டும், பின் பாதி அளவு, நிச்சயம், ஏறினால் மட்டுமே, நிச்சயம், ஈசனை காண முடியும். 


அதாவது, பின் உன்னுக்குள்ளே (உனக்குள்ளே), ஒரு சக்தி தெரியும். அச்சக்தியை, நிச்சயம், தக்க கை, தக்க வைத்துக் கொண்டால், வெற்றிகள் பலமாகும். 


அதாவது, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, என்றெல்லாம், நிச்சயம், இன்னும் எதை என்று புரிந்து கொள்ள, ஆள்கள் இல்லை. 


இவ்வாறெல்லாம், ஓர் ஒரு இடத்தில், நிச்சயம், ஒன்றாக, ஒரு மாதத்துக்குள், நிச்சயம், பின் ஒரு, பின் துளி அளவை கூட, நிச்சயம், ஓரிடத்தில், ஒளி, பலமாக, அனைத்தும், பின் ஒரே நேரத்தில் வந்து.


அவ் இடத்தில்தான், நிச்சயம், அங்கு தியானம் செய்தார்கள். 


அவ், பின் நாடுகளை பிரித்து, பிரித்து, அங்கே தவம் செய்தவர்கள், நிச்சயம், தன்னில் கூட, அங்கே, பின் அதாவது, வாசகத்தை பாடினவர்கள், நிச்சயம், பின் கெட்டதில்லை. 


இதனால்தான், பின் அறிந்தும் அதாவது, ஒவ்வொருவரும் கூட, நீங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். 


இவன் தன் தீயவன், இவன் ஏன் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றான் என்று. 


ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அதற்கும், பின் இன்னும், பின் வாக்குகள், தெரிவிக்கும் பொழுது , நிச்சயம், புரியும். 


அதாவது, ஒரு ஒரு இடத்திலும், ஒரு சக்தி. 


அச் சக்தி, அதாவது, நீங்கள் புண்ணியங்கள், பின் எழும்பி, எழுந்து, எழுந்து நின்று, பின் எழுத்தின் மூலமாகவே, நமச்சிவாயம், நிச்சயம், அறிந்தும் , எதை புரிந்து கொள்ள, நிச்சயம், அவ்வாறாகவே, அப்பனே , நன்முறையாகவே, விளக்குகின்ற பொழுது , நிச்சயம், மாற்றங்கள் பல உண்டு. 


இவ்வாறாகவே, ஞானங்கள் பெற, பெற, ஆனாலும், இன்றைய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் , ஈசனும், பின் பார்வதி தேவி, அழகாக, ஆசிர்வதித்து , அனைவரையும் கூட, நிச்சயம், பின் அவ்வாறு, ஆசீர்வதத்தினால், உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்லப்போகின்றேன். இதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம், நன்று. 


=======================================================

@@@@@               “ஜீவநாடி ரகசியங்கள்”                 @@@@@@

=======================================================


இன்னும், ஜீவநாடி , அறிந்து, புரிந்து, கிடைக்கவில்லையே என்றெல்லாம், ஏங்குபவர்கள் . ஆனாலும், யாங்கள் , பின் வைக்கும் பாடத்தில், நிச்சயம், தன்னில் கூட, சரியாக, மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு, மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, எங்களுடைய வாக்குகள் கிட்டி, உங்கள் வாழ்வு நலமாகும். 


அவ்வாறு, நிச்சயம், அறிந்தும் , புரிந்தும் , புரிந்தும், மதிப்பெண்கள், நிச்சயம், இனி எடுக்கவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை சென்று, மீண்டும், பின் மதிப்பெண்கள் அதிகப்படுத்துவோம். அப்படியே இல்லை என்றால், கடைசியில், உங்கள் பாடே என்று விட்டுவிடுவோம். 


இதனால், நிச்சயம், அறிந்து, புரிந்தும், இதனால்தான், முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 


அப்பொழுதுதான், அனைத்தும் தெரிந்து கொண்டால்தான், உங்கள் விதியினை, நீங்கள், நிச்சயம், தெரிந்து கொள்ளலாம். 


பின் விதியினை, யாங்கள் மட்டும்தான், உரைக்க முடியும். மற்றவர்கள் எல்லாம், நிச்சயம், அதாவது, இவ் சக்தி , எதை என்று கூட. இதனால், அறிந்து, புரிந்தும், எதை என்று அறிய. 


ஆனாலும், புண்ணியங்கள், செயல்பட வைக்க வேண்டும். நிச்சயம், பின் பாவங்கள், அறிந்தும், புரிந்தும், தற்பொழுது, தேங்கி நிற்கின்றது போல், நிச்சயம், அவைத்தான், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


புண்ணியங்கள், தேங்கி, அப்படியே நிற்கின்றது, உங்களிடத்தில். அதாவது, அத்தேங்கிய புண்ணியத்தை, முதலில், நிச்சயம், எடுத்து வாருங்கள். அப்பொழுது, உங்கள் புண்ணியமே, உங்களை பாதுகாக்கும். 


அத்தேங்கி உள்ளதை எல்லாம், எப்படி எல்லாம், பின் எழுப்புதல், என்பதை எல்லாம் தான், சித்தர்கள், யாங்கள் , இங்கு வந்து, செப்பிக்கொண்டிருக்கின்றோம். அப்புண்ணியத்தை, நீங்கள், நிச்சயம், எழுப்பிவிட்டால், உங்களை, நீங்கள் வெல்லலாம். 


நிச்சயம், பின் அறிந்தும், புரிந்தும், பின் உங்கள் நினைத்தபடியே, அனைத்தும் மாறலாம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை, உங்களிடத்திலே இருக்கின்றது. 


ஆனால், உங்களுக்கு இயக்க தெரியவில்லை. 


அதை எப்படி இயக்குவது என்பது, நிச்சயம், யாங்கள் சொல்லிக் கொடுத்துவிட்டால். அதாவது, ஒரு குழந்தைக்கு, தந்தையும் தாயும், நல்வழி காட்டிவிட்டால், நீங்கள் அதையே பிடித்துக்கொண்டு, முன்னேறி விடுவீர்கள். 


அதாவது, உங்களிடத்தில், புண்ணியங்கள், தேங்கி நிற்கின்றது. அப்புண்ணியங்கள் எப்படி செயல்பட வைப்பது என்று யான் சொல்லிவிட்டால், அப்புண்ணியத்தை வைத்து, நீங்கள் பிழைத்துக் கொண்டே போவீர்கள். 


அப்புண்ணியத்தை, பின் யாங்கள் சொல்லித் தராமல், நிச்சயம், எதை செப்பினாலும் , ஒன்றும் பிரயோஜனம் இல்லை, அப்பா. 


இல்லை, அம்மையே, சொல்லிவிட்டேன், 


அனைவருக்குமே. அதனால்தான், நிச்சயம், பின் அனைவருக்குமே, அப்புண்ணியத்தை, நிச்சயம், எப்படி செயல்பட வைப்பது என்பது எல்லாம், பின் வரும் வரும் காலத்தில், இன்னும், ஏனைய சித்தர்கள் எல்லாம், நிச்சயம், பின் எடுத்துரைக்கும் பொழுது, தானாகவே, அப்புண்ணியம், உங்களிடத்தில், செயல்பட்டுவிடும். 


இதனால், முன்னேற்றங்கள், மாற்றங்கள், என்றெல்லாம், அனைவருக்குமே கிட்டும். ஏனென்றால், கலியுகத்தில், பின் அழிந்து கொண்டு, அழிந்து கொண்டே செல்லும். 


அதனால், நிச்சயம், ஒவ்வொரு இடத்திலும், நிச்சயம், ஒவ்வொரு இடத்திலும், நிச்சயம், அனைத்தும் புண்ணியங்கள், தேங்கி நிற்கின்றது. 


அப்புண்ணியங்களை, உங்களை, நிச்சயம், பின் அறிந்து, இயக்கி வைத்துவிட்டால், மற்றவர்களுக்கு, நீங்கள் சொல்லிக் கொடுத்தால், அவர்களும், பின், அப்புண்ணியத்தை, எப்படி இயக்குவது என்று தெரிந்து கொண்டால், நிச்சயம், அனைவருமே, அவரவர் சந்தோஷமான வாழ்க்கையை, பின் வாழ்ந்து கொண்டு, கடைசியில், முக்தியும், மோட்சியும் அடையலாம் , இறைவனையும் காணலாம், 


பின் போதுமடா வாழ்க்கை என்றெல்லாம், உங்களுக்கே தெரிந்துவிடும். 


அவை, அதாவது, புண்ணியத்தை, எப்படி, நிச்சயம், இயக்காமல், பின், எதைச் சொன்னாலும், ஒன்றும் புரியாது, பின் ஆனாலும், பரிகாரம், எதை, எவை என்று கூட.


இப்பொழுதும், யான் சொல்லலாம், அதைச் செய்து, இதைச் செய்து என்று, ஆனாலும், நிச்சயம், புண்ணியத்தை, புண்ணியத்தை, இயக்கவில்லை என்றால், நீங்கள் எதைச் செய்தாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை. 


மீண்டும், கடைசியில் வந்து சொல்வீர்கள், இறைவன் இல்லை, பின் அங்கு சென்றேன், இங்கு சென்றேன், அதைச் செய்தார்கள், அவ் அபிஷேகத்தையும் செய்தேன், இறைவனுக்கு அன்னத்தை படைத்தேன், புண்ணியத்தை செய்தேன், அன்னதானத்தை படைத்தேன், பல ஏழைகளை படித்து வைத்தேன், இன்னும் என்ன, ஆனாலும் என்ன, பிரயோஜனம் ஒன்றும் இல்லை. 


இதனால், புண்ணியத்தை இயக்க வேண்டும். அப்புண்ணியத்தை இயக்கினால் மட்டுமே, நீங்கள் வாழ முடியும் இக்கலியுகத்தில். 


அப்புண்ணியத்தை இயக்க முடியவில்லை என்றால், நிச்சயம், கஷ்டங்களோடு வாழ்ந்து, வாழ்ந்து, மீண்டும். ஆனாலும், பின், புண்ணியத்தை ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும். 


மீண்டும், அப்புண்ணியத்தை, நீங்கள் இப்பொழுது அனுபவிக்க முடியாமல் சென்றால், மீண்டும், மீண்டும், பிறப்புகள் பிறந்து, பிறந்து, ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும். 


அதனால்தான், நிச்சயம், தன்னில் கூட, நீங்கள் இப்பொழுதே, நிச்சயம், அப்புண்ணியத்தை பெற்றுக்கொண்டால், அதாவது, இயக்கிக் கொண்டால், சில விஷயங்கள் உங்களுக்கே தெரிந்துவிடும். 


அப்பொழுது, சுலபமாக, உங்களை, நீங்களே காக்கலாம். பின், உங்களை, பின் சுற்றி உள்ளவரை கூட, நீங்களே காத்து, அருள் ஈந்து, நிச்சயம், மற்றவர்களும் வாழ, நிச்சயம், செய்யலாம. 


இதனால் நிச்சயம், தன்னில் கூட, அதனால், ஏனென்றால், இறைவன் கூட, எதை என்று கூடிய அமைதியாக இருக்கின்றான். கலியுகத்தில், மனிதனின், நிச்சயம், மனிதனிடத்தில், சக்திகள் கொடுத்திருக்கின்றான் இறைவன். ஆனால், அச் க்திகளை, பின் இயக்க தெரியாமல், எதை எதையோ செய்து, பின், அதாவது, உலகத்தை அழித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். 


அதாவது, அச் க்தியை, பின், உங்களிடத்தில், எப்படி இயக்குவது என்று, யாங்கள் தெரிவித்து விட்டால் போதும். 


பின், நிச்சயம், உங்களை, நீங்களே, வெல்லீர்களாக. வென்றுவிட்டு, மற்றவர்களிடம் வென்றுவிட்டு, நிச்சயம், தன்னில் கூட, உலகம், பின், சொர்க்கமாகும். 


நிச்சயம், அதாவது, இப்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றீர்கள். ஏனென்றால், நரகம், அதாவது, புண்ணியத்தை இயக்க தெரியாமல் இருந்தால் நரகம். 


அதாவது, இப்பொழுது நரகம் தான். அந்நரகத்தில் வாழ்வது என்பது மிக மிக கொடூரம் என்பேன். அதனால்தான், நிச்சயம், ஏதோ ஒரு முறையில், நிச்சயம், பின், நல்வழி காட்டிவிட்டால், நீங்கள் அனைவருமே, எம்முடைய, பின், அதாவது, குழந்தைகளே.


அக்குழந்தைகளுக்கு, பின், யாங்கள், நல்வழி காட்டிவிட்டால், அதை பிடித்துக் கொண்டால், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் சொல்கின்றேன், எங்களால் பிடித்துக் கொள்ள முடியாது என்று சொன்னாலும், நிச்சயம், யாங்கள் அடித்து, திருத்தி, நிச்சயம், வழி, நல்வழி காட்டி, நிச்சயம், புண்ணிய பாதைக்கு, பின் சென்று, என்றெல்லாம், நிச்சயம், பின், அடியோடு, பின், பலமாக கொடுத்துத்தான், நிச்சயம், பின், அவ்வாறு, பின்  சிலர் , தெரிந்து கொள்வார்கள், உடனடியாக.


சிலர் , பின், ஏதோ என்று, விட்டுவிடுவார்கள். ஆனால், அவர்களையும் யாங்கள் விட்டுவிட மாட்டோம். நிச்சயம், பின், அதாவது, தலையிலே குட்டி குட்டி, அவர்களையும் கூட, இப்படி செய் என்று, நிச்சயம், யாங்களே, பின், அதாவது, கஷ்டத்தை ஏற்படுத்தி, நல்வழிப்படுத்துவோம். 


இதனால், நிச்சயம், சித்தன் பாதை, நிச்சயம், தன்னில் கூட, பின், கருடமுரடான பாதை. 


“பின், கரடுமுரடான , நிச்சயம், தன்னில் கூட, வழியில் வந்தால், பாவங்கள் தீரும், புண்ணியங்கள் பெருகும்.”


நிச்சயம், ஐயோ, யான் கருடம் முரடான பாதையில், யான் யாங்கள் வரப்போவதில்லை என்றால், நிச்சயம், தன்னில் கூட, கரடுமுரடான  பாவங்கள் எல்லாம் உங்களை சூழ்ந்து நிற்கின்றது. நீங்கள் அனுபவித்து, அனுபவித்து, இதனால் என்ன பயன்? 


இதனால்தான் நல்ல புண்ணியத்தை பற்றி நாங்கள் சொல்லப் போகின்றோம். நிச்சயம், தன்னில் கூட, அறிந்து, அப்புண்ணியத்தை பயன்படுத்தி, பெற்றுக்கொள்ளுங்கள். 


=======================================================

@@@@@                  “ஜாதக ரகசியங்கள்”                 @@@@@@

=======================================================


இப்பொழுது ரகசியத்தை ஏனென்றால் , இவ்வுலகத்தில் கஷ்டங்கள் தான் அதிகம். 


அதனால், பின் மனிதன் கையிலே ஜாதகத்தை எடுத்து திரிவான். 


ஆனாலும், நிச்சயம், எவ்வாறு செய்யப் போகின்றது என்பது, நிச்சயம், இப்பொழுது ஒரு ரகசியத்தை கூறப்போகின்றேன். 


அதாவது, சூரியனும் சந்திரனும் சேர்ந்தால், அமாவாசை. அனைவரும், அதாவது, உங்களுக்கு தெரிந்ததே. 


அதாவது, சந்திரனை விட்டு, நிச்சயம், தன் சூரியன், பின், இரண்டாம் இடத்திற்கு போகும். நிச்சயம், எத்தனை மாதங்கள் என்று பார்த்தால், ஒரு மாதமே. 


அப்பொழுது, நிச்சயம், அறிந்தும் புரிந்தும், அதாவது, அவ்வொரு மாதம், நிச்சயம், இல்லத்திலே யாருக்காவது, நிச்சயம், நீங்கள் துன்பத்தை, அதாவது, மனைவிக்கோ, நிச்சயம், பிள்ளைகளுக்கோ, நிச்சயம், யாருக்காவது, பின், துன்பத்தை ஏற்படுத்தினால், நிச்சயம், பின், அடுத்து எதை என்று புரிய, பின், குடும்பத்தில் பலமாக பிரச்சனைகள் வரும். 


நிச்சயம், தன்னில் கூட, சண்டைகள் வரும். 

பணம் தங்காது.

நிம்மதி போய்விடும். சொல்லிவிட்டேன், எதை என்று புரிய. 


அதேபோல், நிச்சயம், இரண்டிலிருந்து, பின், மூன்றாம் இடத்திற்கு செல்லும். அறிந்து புரிந்தும், இவ்வாறாகவே, பின், மூன்றாம் இடம் என்ன, ஏது என்று புரிய, அனைவரையும் கூட, சகோதரனாக, சகோதரியாக பார்க்க வேண்டும். 


அவ்வாறு இல்லை என்றால், நிச்சயம், தன்னில் கூட, எது என்று புரிய, சொத்து பிரச்சனைகள், இன்னும் பண பிரச்சனைகள், நிச்சயம், பின், அதாவது, எது என்று புரிய, பின், நிச்சயம், பின், அறிந்து புரிந்தும், சூரியனே ஏற்படுத்தி விடுவான். 


இவ்வாறாகவே, நிச்சயம், சூரியன், அறிந்து புரிந்தும், ஒரு 25, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, 25 ஆண்டுகள் அல்லது 30, பின், ஆண்டுகள். 


அதாவது, நிச்சயம், பின், அதாவது, கடக்க, நிச்சயம், தன்னில் கூட, தன் கட்டங்களை கடக்க, ஒரு வருடமே, எதை என்று புரிய. 


ஆனாலும், அமைதியாக இருப்பான். 27 வரை, அவ்வாறாக, நிச்சயம், அதன் பின்னே, தன் ஆட்டத்தை காட்டுவான். நிச்சயம், சூரியன், 27 ஆண்டுகள், நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, அதை, நிச்சயம், சரியாகவே, புண்ணிய பாதைகளை செய்தால், சூரியன், நிச்சயம், அனைத்தும் கொடுப்பான். 


அப்படி இல்லை என்றால், நிச்சயம், அதாவது, பின், தன் மயங்குதல், இன்னும் எது என்று, காது கேளாமை , இன்னும் உடம்பில், சில பிரச்சனைகள், சூரியன், பின், அடுத்தடுத்து, பின், ஏற்படுத்திக் கொண்டே இருப்பான். 



இதே போலத்தான், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், அனைத்து கிரகங்களையும், பின், பார்க்க வேண்டும். 


அவ்வாறாக, நிச்சயம், ஒவ்வொரு வாக்கிலும், இதை நான் சொல்வேன். 


சரியாகவே, இதை பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம், நீங்களும் வெற்றியாகுவீர்கள். வெற்றியாகவே. 



=======================================================

@                                                                                                            @

@                  “ஜென்ம குரு  ஜாதக ரகசியங்கள்”                         @

@                                                                                                            @

=======================================================



அதேபோல், அனைவரும் சொல்வார்கள். பின், சந்திரனும், குருவும், ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஆனாலும், சந்திரனும், குருவும், ஓரிடத்தில் இருந்து கொண்டு, நிச்சயம், தன்னில் கூட, பின், யோசித்து, அறிந்தும், புரிந்தும் கூட, பின், பார்ப்போம், என்னென்ன செய்கிறார்கள் என்பதை எல்லாம், நிச்சயம், தன்னில், எதை என்று தெரிய.


அதாவது, சந்திரன், அதாவது, இல்லத்தில் இருந்து கொண்டு, முதலில், சூரியன், அதாவது, அனைவரும் ஜென்ம குரு என்று சொல்வார்கள் இக்கலியுகத்தில்.


அதேபோல், நிச்சயம், தன்னில் கூட, பின், பின், சந்திரன் என்ன கூறுவான், அறிந்து கூட, குருவானவனே, என் இல்லத்தில் இருக்கின்றீர்கள். அதாவது, அனைத்து இல்லத்திற்கு சென்று வா, எதை என்று புரிய, நிச்சயம், அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்று சரியாகவே, என் இல்லத்தில் அனைத்தும் உனக்கு கொடுக்கின்றேன். 


அனைவருக்கும் சரியாக, தண்டனை கொடு என்று சந்திரன் தெளிவாக கூறுவான். மனோகாரகன்.


இதனால், நிச்சயம், பின், அதாவது, ( உங்கள் ஜென்ம ராசியில் ) ஜென்மத்தில் இருக்கின்ற பொழுதே, அனைத்து இல்லங்களுக்கும் சென்று விடுவான். இரண்டாவது, இரண்டாவது இடம், மூன்றாவது, மறைமுகமாக.  


ஆனாலும், ஜாதகர்களுக்கு இது யாருக்கும் தெரிவதில்லை. 


மீண்டும், அனைவரும் சொல்வார்களே, (குரு) இரண்டாம் இடம் வந்துவிட்டது, குருபலம் இருக்கின்றது என்று. ஆனால், நிச்சயம், நீங்கள் அனைத்து வீடுகளை பற்றி கூட உங்களுக்கு தெரியும். நிச்சயம், அவ்வீடுகள், பின், எவ்வாறு நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை பார்த்துத்தான் இங்கு இரண்டு, அதாவது (குரு இரண்டாம்), இடம் வருவதின் தத்துவத்தை கூட, நிச்சயம், அதாவது, எடுத்துவிடுத்து. 


ஆனாலும், நிச்சயம், பின், சந்திரன் கூறுவான். குருவினிடத்தில், குருவானவனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். 


நீங்கள் இரண்டாம் இடத்தில் சென்றுவிட்டால், நிச்சயம், பின், அறிந்தும், புரிந்தும், அனைத்தும் கொடுத்து விடுவீர்கள் என்று. 


ஆனாலும், கணக்கை பார்த்தால், பின், எதை என்று புரிய, பாவங்கள் எத்தனையா, நிச்சயம் என்று. ஆனால், இதை அறியாத மூடர்கள், குருபலம் வந்துவிட்டது என்று. ஆனால், அங்கு நல்லது செய்வார்கள், திருமணம் செய்வார்கள். 


இன்னும் எதை எதை செய்வார்கள், வாழ்க்கை கெட்டுவிடும் அப்பா, 


அறிந்தும் புரிந்தும் கூட, இதை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள், அப்பனே. ஆனாலும், 12, 12, பின், எதை என்று புரிய, என்னென்ன, ஏது, எவை என்று புரிய, எத்தனை தவறுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்பதை எண்ணி, நிச்சயம், தன்னில் கூட வருந்தினால் மட்டுமே, அது திருத்தலங்களுக்கு செல்ல பாக்கியம் கிட்டும். பின், எப்படி செல்வது என்பதை எல்லாம், பின், நிச்சயம், வாக்குகள் செப்புவேன். 


இதனால், தெரியாமல் வாழ, நிச்சயம், தன்னில் கூட, தெரியாமல் வாழாதீர்கள். 


“““““  தெரியாமல் இறைவனை வணங்காதீர்கள். ”””””” 


“““““   தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.  ””””””


இதனால்தான், உங்களை மீண்டும் மீண்டும், நிச்சயம், தன்னில் கூட, என் பக்தர்கள், முதலிடத்தில் இருக்க வேண்டுமே தவிர, நிச்சயம், அதாவது, ( Last bench student ) கடைசி வகுப்பு , அதை பின் வாங்கக்கூடாது. சொல்லிவிட்டேன். 


இதனால்தான், என் பக்தர்களை ஒன்றிணைத்து, அனைத்தும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 


இன்னும், ராசிகளையும், நட்சத்திரங்களையும், இன்னும், என்னென்ன, பின் நடக்கின்றது என்பதை எல்லாம், உங்களுக்கு தெரிவிப்பேன். புதுமையான விஷயங்கள், ஏற்கனவே எழுதப்பட்டது, அவையெல்லாம் அழித்திட்டு , அவையெல்லாம் எங்கோ சென்றுவிட்டு, அதை பயன்படுத்திக் கொண்டு, யான்தான் செய்தேன் என்று, இப்பொழுதெல்லாம், நிச்சயம், யான்தான் தயாரித்தேன் என்றெல்லாம், பொய் கூறி வருகின்றார்கள். 


இதனால், என் பக்தர்கள், நிச்சயம், பின், நீங்கள் வாழுங்கள். பின், மற்றவர்கள் வாழ விடுங்கள். 


நிச்சயம், தன்னில் கூட, இதனால், பின், அறிந்தும் புரிந்தும் கூட, இதனால், என்னென்ன, ஏது, எவை என்று புரிய.


அப்பொழுது, எதை என்று புரிய. இதனால், நிச்சயம், மறைமுக சக்திகள் கூட, மனிதன், இவ்வாறு நடக்கவில்லையே என்று, நிச்சயம், ரகசியமான, அதாவது, எதிர்மறையானவருக்கு சென்று விடுகின்றான். 


இதில் தான் அடங்கியுள்ளது, வாழ்க்கை. 

வாழ்க்கையை, பின், நரகமாகி, பின், கொண்டிருக்கும் நேரத்தில், மீண்டும் அங்கு சென்று, மீண்டும் நரகத்தை சென்று, நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு அப்பா?.

இதனால், இன்னும் இன்னும் ஆட்டிப்படைத்து , எவ்வாறெல்லாம், கிரகங்கள் குறைத்தல் என்றெல்லாம், பின், இடையன் (இடைக்காடர் சித்தர்) வந்து சொல்வான். நிச்சயம், சிவபுராணத்தை ஓதுங்கள். 

(அன்புடன் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் உரைத்த சிவபுராணம் - ஜாதக ரகசியங்கள் வாக்கு நிறைவு)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1973 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு. - பகுதி 2

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.
வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

ஆதி முதல்வனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன். 

( பகுதி 2) 

அப்பனே, இதனால்தான், இன்னும் கலியுகத்தில், அப்பனே, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில். இவை யாவுமே சொல்லிவிட்டேன் அப்பனே.  மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.

அதாவது, அப்பனே, சந்திரன் கிரகமானது. அப்பனே, தன் நேர்கோட்டில் இருந்தால்தான் நல்லெண்ணங்கள் உதிக்கும் என்பேன்  அப்பனே.

நல்லவற்றை பேச முடியும் என்பேன் அப்பனே. 
நிச்சயம், நல்லவற்றையே, அப்பனே, பின் எண்ண முடியும் என்பேன்  அப்பனே.  
நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, புண்ணியத்தை சேர்த்து முடியும் என்பேன்  அப்பனே,
உண்மை எதுவும் புரியவில்லை என்றால், தெரிந்து கொள்ள முடியும் என்பேன்  அப்பனே.

ஆனால், பின், சந்திரன் கிரகமானது, தன் நேர்கோட்டிலிருந்து சற்று விலகி இருப்பதால் . அப்பனே, அனைவருமே பைத்தியக்காரர்கள் போல்தான் யோசிப்பார்கள் அப்பனே.

பின் இல்லத்தில் தாய் தந்தையரை அப்பனே, பேச்சை கேட்க மாட்டார்கள் அப்பனே. நிச்சயம், தன்னில் கூட, ஒருவர் ஒருவர், அப்பனே, கோபம் கொள்ளுதல்  அப்பனே.
பின், அதாவது, கணவன் மனைவி இடையே பிரச்சனைகள், சண்டைகள் அப்பனே.
இவையெல்லாம் தோன்றும் அப்பா.  

அதனால் அப்பனே, மீண்டும், சந்திரன் கிரகமானது, நேர்கோட்டில் உங்களால் எப்படி வரவழைக்க முடியும் என்பேன் அப்பனே?

ஆனால், மனிதனோ, நிச்சயம், அவ்வாறு, இவ்வாறு நடந்து கொண்டால், நிச்சயம், மனக்குழப்பங்கள் போகும் என்பதையெல்லாம். 

“”””” அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, எச்சரிக்கையாக இருங்கள். “””””

சந்திரன், அப்பனே, தன் நேர்கோட்டு பாதையில் சற்று விலகி நிற்பதால் அப்பனே, நிச்சயம், அப்பனே, மனிதன் ஏமாற்றுவான் அப்பா. 

“”””அப்பனே, நிச்சயம், நம்புவான். அப்பா, ஏமாற்றத்தை தான் நம்புவான். அப்பா,””””

ஆனாலும், நிச்சயம், சந்திரன், நேர்கோடாக , ஆனாலும், அப்பனே, தியானங்கள், நிச்சயம்….
அப்பனே, நல்மனதாக யோசித்தல்….
அப்பனே, பின், இறைவனை சரணாகதி அடைந்துவிட்டால் , அப்பனே, நீங்கள் ஏமாறவும் மாட்டீர்கள் அப்பனே.
நிச்சயம்  தன்னில் கூட, பாவத்தை சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள் என்பேன்  அப்பனே, 

அப்பனே பார்த்துவிட்டேன் அப்பனே, பின், பல கோடி மக்களை அப்பனே.
நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், பக்தி என்பது தெரியவில்லையப்பா. பக்தியானது சரியாக தெரிந்திருக்க வேண்டும் என்பேன்  அப்பனே.

அதாவது, மின்சார கம்பிகளில் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம், அப்பனே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன்  அப்பனே.

நிச்சயம், மின்சார கம்பியில் நடப்பது சாதாரணம் இல்லை என்பேன்  அப்பனே. அதேபோல, அப்பனே, பக்தியில் நடப்பது, அப்பனே, சாதாரணம் இல்லை என்பேன்  அப்பனே. 

சரியாக நடந்தால்தான். இல்லையென்றால், அனைத்தும் உடைந்து போயிடும் என்பேன்  அப்பனே, நிச்சயம், தூள் தூளாக. சொல்லிவிட்டேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- 
(பக்தி என்பது மின்சார கம்பியில் நடப்பதற்குச் சமமானது. அது மிகவும் நுண்மையான, ஆபத்தான பாதை. சரியான வழியில், சமநிலையுடன், பாதுகாப்பாக நடந்தால்தான் இறைவனை அடைய முடியும். தவறான முறையில் முயன்றால், அது ஆபத்தில் முடிவடையும். சிலருக்கு வழிகாட்டுதல், ஆதரவு தேவைப்படும். பக்தி என்பது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய ஆன்மிகப் பயணம் என்பதே அகத்திய மாமுனிவரின் உன்னதமான சாரம்.)
குருநாதர் :-

அப்பனே, இதனால்தான், அப்பனே, சித்தர்கள், நிச்சயம், நீங்கள் எல்லாம் பாவங்கள் எதை என்று புரிய. அதனால்தான், நிச்சயம், தன்னில் கூட, பின், உங்களை, நிச்சயம், வந்து சந்தித்து, அப்பனே, வாக்குகளாக, உண்மை நிலை தெரிந்து கொண்டால், நீங்கள் உங்களுக்கே மன்னர்கள் என்பேன்  அப்பனே.

நிச்சயம், அப்பனே, அப்படி தெரிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, பின், உங்களுக்கே, நீங்களே எமன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- 
(ஒருவர் உண்மை நிலையை உணர்ந்தால், அவர் ராஜா போல உயர்ந்த நிலையை அடைவார். இல்லையெனில், அவர் எமனாகவே மாறுவார் — அதாவது தானே தன்னை அழிக்கிறான். யாரும் ஒருவரை கெடுக்கவில்லை; அவர் தானே தன்னைக் கெடுக்கிறார். இறைவன் இதை அறிந்து, அதற்கேற்ப அனுபவங்களை அளிக்கிறார். உண்மை நிலையை அறிந்து வாழ்வதே வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம்.)

குருநாதர் :-

“””””” இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இறைவன், அப்பனே, உங்களை சரியாக, சரியான பாதையில் தான் எடுத்துச் செல்கின்றான் என்பேன்  அப்பனே. “””””””

“””””””” ஆனால், இடையே, அப்பனே, பின், அவ்வாறு, அவன், அப்படி வாழ்கின்றானே, இப்படி வாழ்கின்றானே என்ற எண்ணம், அப்பனே, மனதில் தோன்றி, அப்பனே, அப்பொழுதுதான் பாவம் ஆரம்பிக்கின்றது என்பேன்  அப்பனே. “””””””””

இதனால், அப்பனே, பின், தன் மனத்தாலே  அனைத்தும், பின், நிச்சயம், கெடுத்து, அப்பனே, தானும், பின், தன்னை விட்டு உள்ளவனும் கெடுக்கின்றான் என்பேன்  அப்பனே. இது அழிவு காலம் அப்பா, வருங்காலத்தில் அப்பனே.

நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எப்படி பரிகாரம் செய்தாலும், எப்படி, எப்படி, எதை செய்தாலும், அப்பனே, உலகம் அழிவு நிலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது என்பேன்  அப்பனே. உங்களால் தடுக்க முடியுமா என்றால், அப்பனே, நிச்சயம் முடியும். 

ஏனென்றால், உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே, உண்மையை உணர்ந்து கொண்டால், அப்பனே, நீங்கள், அப்பனே, நிச்சயம், இன்னும் பல பேருக்கு உண்மையை சொல்லலாம் என்பேன்  அப்பனே. பின், பிழைத்து விடுவார்கள் என்பேன்  அப்பனே.

“”””” இதனால் , பின், என்னுடைய பக்தர்கள், நிச்சயம், தன்னை கூட உண்மை நிலையை தெளிந்து , அப்பனே, மற்றவர்களை கூட தெளிந்து, அப்பனே, வைத்தால், உங்கள் விதியை யான் மாற்றுவேன் அப்பனே.  “”””””

விதியை யாராலும் மாற்ற முடியாது அப்பா.  அப்பனே, நிச்சயம், ஏற்கனவே பிரம்மன், இவ்வாறுதான் நீங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அழகாக எழுதி வைத்துவிட்டான்  அப்பா.  அதை மாற்றும் சக்தி, மனிதனுக்கு, இவ்வுலகத்தில், எவ்வளவு சக்திக்கும், நிச்சயம் இல்லை. அப்பா.

ஆனால், எங்களால் மாற்ற முடியும். ஆனாலும், நீங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, எங்களால் மாற்ற முடியும். அப்பா. சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- 
(விதி என்பது பிரம்மதேவரால் எழுதப்பட்ட ஒரு மாற்றமில்லா நெறி. அதை எந்த மனிதனாலும், எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. ஆனால் வாழ்க்கையின் உண்மை மாற்றம், நம் மனதின் தூய்மை மற்றும் நம் செயல்களின் நேர்மையில் இருக்கிறது. சித்தர்கள் கூறுவது போல, ஒருவர் நல்ல மனதோடு, உண்மையோடு வாழ்ந்தால், இறைவனின் அருளால் விதி கூட நிச்சயம் மாற்றப்படும். இறைவன் கேட்பது நம் உள்ளத்தின் உண்மை, நம் தவத்தின் தீவிரம். தவறு செய்தால், அதை உணர்ந்து திருந்தி, இறைவனை வணங்கி, அருள் நாடி வாழ்வதே நம் வழி. விதியை வெல்ல முடியாது, ஆனால் நம்மை உயர்த்தி, விதியை மாற்ற வைக்கும் மனதின் சக்தியை வளர்த்துக்கொள்ளலாம். இதுவே வாழ்க்கையின் உண்மை நம்பிக்கை.)

குருநாதர் :- 

அப்பனே இறைவன் கலியுகத்தில் நிச்சயம்  அமைதியாக இருக்கின்றான் என்பேன்  அப்பனே.   இதனால்தான் அப்பனே  இவ் கூட்டுப் பிரார்த்தனை அப்பனே.  

நிச்சயம்  ஒரு பிள்ளை தன் தந்தையிடம் கேட்டால், அதை வாங்கிக்கொடு என்றால், தந்தை, நிச்சயம்  அமைதியாக இருப்பான். 

“”””””அதாவது, அவனுக்கு பத்து பிள்ளைகள். அப்பனே  ஆனால், பத்து பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து, தந்தையே, வாங்கிக்கொடு , வாங்கிக்கொடு என்று ஒரு கையை பிடித்து, காலை பிடித்து, நிச்சயம், தன்னில் கூட, காலை, அதாவது, தலையை பிடித்து இழுத்தால், பின், தொல்லைகள், வாங்கிக் கொடுத்து விடுவோம் என்று, தந்தை, வாங்கிக் கொடுத்து விடுவான் அப்பா.””””””

அதே போல தான், அப்பனே  கூட்டு பிரார்த்தனை கூட, அனைவரும், அப்பனே  சேர்ந்து, நிச்சயம், யாருக்காவது,  கஷ்டம் வந்தாலும், இறைவா, இவர்களுக்கு, நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே  நீங்கள் வேண்டினால், அப்பனே  பின், என்னடா பிரச்சனை, இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லையே என்று இறைவன், அப்பனே  இப்படித்தான், அப்பா, வருவானப்பா. 

அதனால்தான் அப்பனே  உங்களை இதை நிச்சயம், தன்னில் கூட. 

மீண்டும் சொல்கின்றேன் அப்பனே  

தங்களுக்காக எண்ணிக்கொள்ளாதீர்கள் என்பேன்  அப்பனே.
 

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

“”””” நிச்சயம், மற்றவருக்காக, அப்பனே  வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே  நிச்சயம், அவ்வாறு, மற்றவருக்காக, வாழ கற்றுக் கொண்டால், அப்பனே  புண்ணியம் உன்னிடத்தில், சுலபமாக, ஏறிக்கொண்டே போகும் என்பேன்  அப்பனே. “””””” 

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

—----------------------------------------------------------------------------------------------------------------------------------

சுயநலமாக, சுயநலமாகவே, வாழ்ந்து வந்தால், தன்னிடத்திலிருந்து, புண்ணியம் எல்லாம் பிடுங்கி, இறைவன், அப்பனே  வைத்துக் கொள்வான் என்பேன்  அப்பனே.  இவந்தனக்கு  புண்ணியம், அதாவது, இருக்கின்றது. இதை பயன்படுத்த தெரியவில்லை. இன்னும் கஷ்டத்தை கொடுப்போம் என்று அப்பனே . 



 

அப்பனே, அது மட்டுமில்லாமல், அதனால்தான் அப்பனே, ஒழுக்கம் நிச்சயம், மிகச்சிறந்தது என்பேன்  அப்பனே, 

சிறுவயதிலிருந்து, ஒழுக்கத்தை  கற்பித்துவிட்டால், அப்பனே, அவன் ஒழுக்கமே, அவனை உயர்வான இடத்தில் அழைத்துச் செல்லும். 

இவையெல்லாம் பெரியோர்கள் அப்பனே, சொன்னதே.  இவையெல்லாம், சரியாக, அப்பனே, எடுத்தால், பின், அடுத்தடுத்து , வருவது, மிக கடினம், கடினமான காலங்கள் . அப்பா, 

அதனால், அப்பனே, உங்களை, நீங்கள் இயக்கி, அப்பனே, உங்களை, நீங்கள் பார்த்துக்கொண்டு, பார்த்துக் கொண்டால் மட்டுமே, அப்பனே.

நிச்சயம், உங்கள் பிள்ளைகள். அதாவது, ஒவ்வொரு தாயும், நிச்சயம், ஒவ்வொரு தந்தையும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்றான் அல்லவா? அப்பனே, இதற்கு, நிச்சயம், தன்னில் கூட, நல்லவற்றையே நிச்சயம் சொல்லித்தாருங்கள். வருங்காலத்தில், நிச்சயம், பின், நல்லது செய்தால் மட்டுமே, வருங்காலத்தில், பிழைக்க முடியும். அப்பா.

இல்லையென்றால் சிறுகாலத்தில், நன்மைகள் நடக்குமே தவிர, அவைகள், நிச்சயம், தன்னில் கூட, இறைவன் எப்பொழுது, நிச்சயம், பிடுங்குவான் என்பதே தெரியாது. அப்பா.

இதனால், அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. அப்பனே, நிச்சயம், உயிரும், உடம்பும், அப்பனே, நிச்சயம், உங்களுக்கு சொந்தமே இல்லை அப்பா. அதனால் அப்பனே, நீங்கள் எதையுமே, அப்பனே, இறைவனிடம் கேட்க தகுதியும் இல்லை அப்பா.

நிச்சயம், மனித பிறப்பு என்றால், நிச்சயம், பின், சாபத்தோடு பிறந்தவன் தான். 

அப்பனே, அந்த சாபத்தை எப்படி முதலில் எடுப்பது என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தெரியவில்லையே.பாவங்கள் மனிதர்களே.

அப்பனே, இவ் சாபத்தையே நீக்க முடியவில்லை. இறைவன் எப்படி அப்பா கண்ணுக்குத் தெரிவான்? 

அப்பனே, நிச்சயம் ஓடலாம். அப்பனே, நிச்சயம் இறைவனை நினைத்துக் கொள்ளலாம். அப்பனே, நிச்சயம் எதை செய்தாலும், அவ் சாபத்தை எப்படி நீக்குவது என்பது உங்களால், நிச்சயம் தெரிந்து கொள்ளவே முடியாது என்பேன்  அப்பனே, 

அப்பனே  நிச்சயம், நிச்சயம் அவ்  சாபத்தை பெற்றுக்கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன்  அப்பனே, 


இதனால் எப்படி நீக்க முடியும்? அப்பா, 

அப்பனே, இதனால், நிச்சயம் தன் பாவத்தை, பாவ கணக்கை நீங்களே எடுப்பீர்கள் என்பேன்  அப்பனே.  அதாவது சாதகத்தை. 

(கஷ்டம் வரும்போது ஜாதக கட்டத்தை எடுத்து , ஜோசியரிடம் செல்வது. ஜாதகம் என்பது நமது  பாவகணக்கு. அதனை பார்த்தாலும் , பிறரிடம் எடுத்துச்சென்று பரிகாரங்கள் கேட்டாலும் - பாவங்கள். அப் பாவத்தை நீங்கள் செய்யும் புண்ணியத்தால் மட்டுமே அடித்து நொறுக்க இயலும்).

அப்பனே, ஓடுவீர்கள் என்பேன்  அப்பனே, என்ன நடக்கிறது? ஏது , அதாவது சனி அவன் வந்துவிட்டான் , ராகு அவன் வந்துவிட்டான் , கேது அவன் வந்துவிட்டான் , அப்பனே, வரட்டும் என்பேன்  அப்பனே, நிச்சயம் எது என்று அறிய அறிய  நல்லதை, நிச்சயம் கலியுகத்தில் கொடுக்க போவதில்லை அப்பனே.

இன்னும் குருபலன் வந்துவிட்டது. பின் அனைத்தும் நல்லதாக நடக்கும், ஆனால் நிச்சயம் கொடுப்பதில்லை. ஏன் ?

அப்பனே, நிச்சயம் அறிந்தும், இறைவனுடைய அடியாட்கள் கிரகங்கள் அப்பா. 

நீங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சென்று கொண்டிருக்கும் பொழுதே, பின் ஒவ்வொரு கிரகம், நிச்சயம் தன்னில் கூட, அதாவது (கிரகங்கள் ) அவனவன் அங்கே நின்று, அடப்பாவி, இத்தனை தவறு செய்துவிட்டு, வெட்கம் இல்லையா என்று திட்டுவார்கள் அப்பா.  

சந்திரன்,சூரியன் , செவ்வாய் , புதன்  (கிரகங்கள்) நிச்சயம், நீ மறுபிறவி எடு, அங்கே பார்த்துக் கொள்வேன் என்றுதான் உன்னை அனுப்புவார்கள் அப்பா.  அப்படி கிரகங்கள் உங்களுக்கு எப்படி அப்பா  நல்லது செய்யும்?

நிச்சயம் பார்க்க முடியும். அதாவது, முதல்லயே சொல்லிவிட்டேனே, நாய் போல் திரிய வேண்டும். எதையும் எண்ணாமல்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- 
(இறைவனை காண விரும்பினால், ஆசைகள் இல்லாமல், எளிமையாக வாழ வேண்டும். நாய் போல வாழும் மனப்பான்மை வேண்டும் — அதாவது, எதையும் கேட்காமல், கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, தாழ்மையுடன், நம்பிக்கையுடன் இருப்பது. நாய் ஒரு சாப்பாடு கிடைத்தால் அதை எடுத்து சாப்பிட்டு அமைதியாக போய்விடும்; அதுபோல், மனிதனும் இறைவனிடம் எதையும் கோராமல், எதையும் எதிர்பார்க்காமல், முழுமையான ஒப்புதலுடன் வாழ வேண்டும். அந்த மனநிலையில்தான் இறைவனை உணர முடியும்.)
குருநாதர் :-

ஆனாலும், அப்பனே, திரிவதற்கு, அப்பனே, ஆள் இல்லையேப்பா. 

அப்பனே, நிச்சயம், ஒவ்வொருவருக்கும், அப்பனே, விதியை யான் சொல்வேன் பொறுத்திருந்தால்  என்பேன் அப்பனே.

(ஒவ்வொருவரின்  விதியும், எங்களால் சித்தர்களால் உரைக்க முடியும். பொறுத்திருக்க வேண்டும்.)

அப்பனே, நிச்சயம், துன்பத்தோடே  அப்பனே, மனிதன் கடந்து சென்று கொண்டே இருக்கின்றான் அப்பனே.  நிச்சயம், எங்களை அழைத்தும் துன்பங்களோடு, நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  அதனால்தான், அதை விலக்குவதற்கே  அப்பனே, அதை நீக்குவதற்கே , சித்தர்கள், ஐயோ, நிச்சயம், தன்னில் கூட, கலியுகத்தில், இறைவனை நம்பிக் கொண்டிருக்கின்றானே. உண்மை எது என்று தெரியவில்லையே என்று நிச்சயம், சித்தர்கள், உங்களுக்காக, எழும்பி வந்து, செப்பிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.

அப்பனே, பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. எத்தனை ஆட்கள் ஈசனை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் அண்ணாமலையில் என்பேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, துன்பத்தோடே  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே, 

அப்பனே, உண்மை நிலையில் தெரியவில்லையே அப்பனே

நிச்சயம், தன்னில் கூட அப்பனே, நிச்சயம், அந்த சாபத்தை நீக்க வேண்டும். 

“”””” அந்த சாபத்தை, எங்களால் மட்டுமே நீக்க முடியும் என்பேன்  அப்பனே. “””””

அதை வந்து, அதை வந்து, எங்களால் மட்டுமாய், நீக்க முடியும் என்றால், வந்து, 

அப்பனே, ஈசனை பாடி, துதித்தும், ஈசனை சந்தோஷமும் படுத்திக்கொண்டே. ஆனாலும் அப்பனே ஈசன் கூட, அமைதியாகத்தான் இருக்கின்றான். 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இருந்தால், அப்பனே, ஈசன் உங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தால், அப்பனே, அவ்வளவு தரித்திரங்கள் செய்திருக்கின்றான் மனிதன். அத்தனை ஆன்மாக்களும், இறைவா, நீ இறைவனா என்று, ஈசனை கேட்டுவிடும் . 
(மனிதன் துன்பப்படுத்திய அனைத்து உயிர்களும் — ஆடு, மாடு, கோழி, எறும்பு, பூச்சிகள் போன்ற ஆன்மாக்கள் — இறைவனிடம் நியாயம் கேட்கின்றன. அவன் பாவம் செய்திருக்கிறான், ஆனால் ஏன் அவனுக்கு நல்லது செய்கிறாய் என்று இறைவனிடம் சண்டையிடுகின்றன. இது கர்மத்தின் விளைவாக, ஒவ்வொரு உயிரின் வேதனையும் இறைவனிடம் உரிமையுடன் பேசி உங்களுக்கு அருள்கள் கிடைப்பதை தடுக்கும்)

ஏனென்றால் , நிச்சயம், தன்னில் கூட, உங்களுக்கே  ஒருவன் கெட்டதை செய்கின்றான். நிச்சயம் ஆனால் மற்றவர்கள் அவனுக்கு நல்லது செய்தால், உங்களுக்கு என்ன கோபம் வரும், நீங்களே தெரிவியுங்கள் ?

அப்பனே, நிச்சயம், ஒவ்வொன்றாக சொல்லுகின்ற பொழுது, சிலவற்றை யான் சொன்னேன். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், அது மட்டும் இல்லாமல், மற்ற சித்தர்களும் செப்புவார்கள். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், அப்பனே, நிச்சயம், சிறிது சிறிதாக பாவத்தை குறைத்து, புண்ணியங்கள்.
(உங்கள் புண்ணியங்கள் உங்களுக்கு கிடைக்கும்)

அப்பனே, அதாவது, அப்பனே, நிச்சயம், உங்கள் புண்ணியங்கள் எல்லாம், அப்பனே, தேங்கி கிடக்கின்றது என்பேன்  அப்பனே.

அதைத்தான், அப்பனே, நிச்சயம், இதை பல வாக்குகளிலும் எடுத்துரைத்து விட்டேன். அப்பனே. அதையெல்லாம், அப்பனே, நீங்கள், நிச்சயம், அனுபவிப்பதே இல்லை என்பேன்  அப்பனே. 

பாவத்தை மட்டும் அனுபவித்து, அப்பனே, புண்ணியங்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றிடுவீர்கள் என்பேன்  அப்பனே. ஆனாலும், இதற்கும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டும் என்பேன்  அப்பனே.

அதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இப்பிறப்பிலே, அப்பனே, அப்பனே  புண்ணியத்தை அனுபவியுங்கள் நீங்கள்.

அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, புண்ணியங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பேன்  அப்பனே.  அப்பொழுதுதான் எங்களாலும் உரைக்க முடியும். அப்பா. இதனால் இங்கு வந்திருப்பவர்களும் புண்ணிய சில பெற்றிருக்கின்றார்கள். அப்பா. அதனால்தான் அப்பனே, யாங்களும் வந்து வாக்குகள் சொல்ல முடியும் என்பேன்  அப்பனே.

இதனால் பாவங்கள், புண்ணியங்கள் அப்பனே, நிச்சயம், புண்ணியக்காரர்கள் வந்தாலும், பாவங்கள் அப்படியே நின்று விடும் என்பேன்  அப்பனே.

—------------------------------------------------------------------------------------------------------

(வாக்கு உரைக்க முடிவதற்கான தகுதி, அவர் பெற்ற புண்ணியத்தின் அடிப்படையில் அமைகிறது. இங்கு வந்திருப்பவர்கள் சிலர் புண்ணியம் பெற்றவர்கள் என்பதால், அவர்கள் பெற்ற புண்னனிய பலத்தினால் வாக்கு உரைக்க முடிகிறது. ஆனால், புண்ணிய ஆன்மாக்கள் இருந்தாலும், பாவங்கள் அப்படியே நின்று விடும். புண்ணியம் அதிகமாக இருந்தாலும், சில பாவங்கள் வராமல், நின்று விடும் வாய்ப்பு உள்ளது. இது பாவம்–புண்ணியம் என்ற இரு சக்திகளின் ஆழமான ஆன்மீக விளக்கமாகும். அவ் புண்ணிய ஆத்மாக்களால் பலமான வாக்குகள் அனைவர்க்கும் கிடைக்கின்றது என்பது அடியவர்கள் அறிய வேண்டும்)

—------------------------------------------------------------------------------------------------------

குருநாதர் :-
நிச்சயம், பின் மனிதர்களிடத்தில் அவ்  பாவம் இருந்தால், பின் நிச்சயம் வாக்குகள் செப்பாதே என்று பிரம்மனும் தடுப்பான். 

நிச்சயம், அதனாலதான் புண்ணியம் நிறைந்த பகுதியில் நாங்கள், நிச்சயம், தன்னில் 
கூட அனைவரையும் வரவேற்று இருக்கின்றோம். 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, புண்ணியம் இல்லாத பகுதியில் வாக்குகள் செப்பினால், அப்பனே, மனிதனுக்கு பாவங்கள் ஏறிக்கொண்டே போகும். 

அப்பனே, ஈசன், அப்பனே, இருப்பிடமாக இவ் அண்ணாமலை அப்பனே,  நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ் பாவமும், அப்பனே, சேராதப்பா. 

அதனால்தான், அனைவரும் வரவேற்று இருக்கின்றேன் அப்பனே.  (இங்கு  ஒரு ஒரு இடமும்) அப்பனே, நிச்சயம், புண்ணியங்கள், அப்பனே, நிறைந்து காணப்படும் அப்பனே. பாவங்கள் அண்டாதப்பா. ஆனால், மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன்  அப்பனே. 

நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இல்லத்திலிருந்தும், அப்பனே, எதையோ செய்து, பாவத்தை சம்பாதிக்கொண்டே இருக்கின்றான். 
அப்பனே பின் பாவம் மட்டும் வருமப்பா.


( மனிதன் புண்ணியம் இல்லாத இடத்தில் ஜோதிடம் , நாடி, அருள் வாக்கு  போன்ற வாக்கு உரைத்தால், அதனால் பாவங்கள் அதிகரிக்கலாம். ஆனால் அண்ணாமலை போன்ற தெய்வீக இடங்களில் வாக்கு உரைத்தால் பாவங்கள் சேராது. அங்கு புண்ணியம் நிறைந்திருக்கும், பாவங்கள் அண்டாது. அதனால் அனைவரும் அங்கு வரவேற்கப்படுகிறார்கள். மனிதனுக்கு இது தெரியாமல், இல்லத்தில் இருந்து பல செயல்கள் மூலம் பாவங்களைச் சம்பாதிக்கிறான். இறுதியில், அவர்களுக்கு பாவம் மட்டுமே சேரும். )

குருநாதர் :-

அப்பனே  சித்தர்கள் யாருக்கு மட்டுமே உணர்ந்தவர்கள் இதை.

அப்பனே, நிச்சயம், பல பேர் அப்பனே, இப்படி இருப்பவர்கள் எல்லாம் நோய் நொடிகள் வந்துவிடும்  அப்பா, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட பைத்தியம் போகும் நிலை. அப்பனே, இன்னும், அப்பனே, இழப்பு பலமாக வந்துவிடும் அப்பா.  அப்பனே, பின்பு இறைவனிடம் நிச்சயம் கேட்பான்,  நான் நல்லதுதான் சொன்னேன் என்று (எனக்கு ஏன் இந்த நிலை என்று இறைவனை கேள்வி கேட்பார்கள்) . 

(அருள் நிறைந்த புண்ணிய பூமியாக குருநாதர் தேர்ந்தெடுத்த இந்த இடத்தில், அனைவரையும் அழைத்து, தன்னுடைய வாக்குகளை பகிர்ந்து வருகிறார்)

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நீங்கள் மற்றவர்கள் சொல்லி சொல்லி, அப்பனே, உங்கள் மூளையும், அப்பனே, அதாவது, சலவை ஆகிவிட்டீர்கள் அப்பனே.

இதனால், பின் அறிவின் வழியாகவே (அறிவியல் பூர்வமாகவே), நான் எடுத்து எடுத்துரைக்க போகின்றேன். வருங்காலத்தில், அப்பொழுதுதான், சில விஷயங்கள், அப்பனே, நீங்களே குழப்பிக்கொள்வீர்கள். 

அப்பனே, முதலில் வருவது, அப்பனே, ராகுவும், கேதுவும், சனியுமே  அப்பனே. நிச்சயம், மனித உடம்பில், அப்பனே, முக்கிரகங்களின் கூட,  கதிர்வீச்சுகள், இக்கலியுகத்தில், அதிகம் இருக்கின்றதப்பா. அதை முதலில், பின் வெளியே எடுத்து, அதாவது, தூர வீச வேண்டும் என்பேன் அப்பனே. எப்படி வீசுவது உங்களுக்கு தெரியவில்லையே? அதையும் வருங்காலத்தில், யான் செப்புவேன்.

—---------------------------------------------------------------------------------------------------------------

(மனித உடம்பில் ராகு, கேது போன்ற கிரகங்களின் கதிர்வீச்சு அதிகமாகக் குவிகிறது. இந்த கதிர்வீச்சுகள் பூமியிலும் ஜீவராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் உணவுகள் மூலம் அதை உட்கொள்ளும்போது, அந்த கதிர்வீச்சுகள் நம்முள் அதிகமாக சேருகின்றன. இது நம்முடைய நெஞ்சைத் தொட்டு, ஒரு குறியீடாக இறைவனால் பதியப்படுகிறது. அந்த குறியீட்டை உடைத்து, தீய கதிர்வீச்சுகளை நீக்கி, நல்ல கதிர்வீச்சுகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குருநாதரால் மட்டுமே கூறப்பட முடியும்.)

—---------------------------------------------------------------------------------------------------------------


குருநாதர் :-
அப்பனே, அதனையும் யான் செப்புவேன். 
அப்பனே, பின் ராகு கதிர்வீச்சுக்கள் குறைய வேண்டும். 
அப்பனே, கேதுவின் கதிர்வீச்சுக்கள், அப்பனே, குறைய வேண்டும் என்பேன்  அப்பனே.
சனியின் பின் கதிர்வீச்சுக்கள், உடம்பில் இன்னும் குறைய வேண்டும் என்பேன்  அப்பனே.

இக்கலியுகத்தில், அதிகமாக, அப்பனே, உடம்பில் பதிந்துள்ளது என்பேன்  அப்பனே. அப்பொழுது, நிச்சயம், அப்பனே, எப்படியப்பா, நிச்சயம், தன்னில் கூட, இறைவன் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இறைவனின் கதிர்வீச்சுக்கள், இக்கதிர்வீச்சுக்கள், அதிகமாக இருந்தால், இறைவனுடைய கதிர்வீச்சுக்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நம் மீது, நம் மேல் விழாதப்பா. 

அப்பனே, எதை, ஏன், எதற்கு, இன்னும், சிவபுராணத்தை பற்றி, எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே.  

நிச்சயம், அப்பனே  பின், மீண்டும், ஓதி வாருங்கள் ஒருமுறை.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை முதல் வாக்கு நிறைவு) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1972 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - 1


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு. - பகுதி 1

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.
வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

ஆதி முதல்வனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே, மனிதர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் கலியுகத்தில் என்பதை எல்லாம் சித்தர்கள் சொல்லப் போகின்றார்கள் அப்பனே. 

கிளியோனே, மேடை ஏறச் சொல்.

(ஆதி  ஈசனாரின் ஓர் அம்மை அடியவர் தனது தோள்களில் எப்போதும் ஒரு கிளியினை ஏந்தி செல்பவர். இவ் அடியவரை குருநாதர், கருணைக்கடல் அங்கு மேடை ஏறச்சொன்னார்கள்.)

குருநாதர்:- அறிந்தும் புரிந்தும் மனிதனின் ஆசைகள் கலியுகத்தில் பேராசைகள், இப்பேராசைகள் மனிதனையே கொன்றுவிடும். 

ஆனாலும் ஒன்றும் தெரியாத நிச்சயம், இக்கிளியானது என்ன, ஏது, பாசத்திற்கே அடிமை. அதேபோல், இறைவனிடத்தில் நீங்கள் பாசத்திற்கு மட்டும் அடிமையானால், இறைவன் அனைத்தும் கொடுப்பான். 

“”””அப்படி மீறி, பின் எதைக் கேட்டாலும், நிச்சயம் அதைக் கொடுத்து, அதன் மூலம் கஷ்டங்களை ஏற்படுத்தி, திருந்தச் செய்வான். அதனால், நிச்சயம் தன்னில் கூட, இறைவனை, பின் இறைவனிடம் எதையும் கேட்டுவிடாதீர்கள்.”””

பின், நிச்சயம் கேட்டுவிட்டாலும், அப்படி கொடுத்துவிட்டாலும், அதனால் பெரும் தொல்லைகள். ஆனால், இப் பெண் (பெண் = அதாவது இவ் அம்மையின் மேல் அமர்ந்துள்ள  கிளி), நிச்சயம் தன்னில் கூட, பின் எதற்கு, ஏது, என்று அவள் மீது அமர்ந்திருக்கின்றாள் நிச்சயம்.

பின் ஆனாலும், எதையும் எதிர்பார்த்து இல்லை. நிச்சயம் பாசத்திற்காகவே. தாயே, ஈசனைப் பற்றி, பின் எடுத்துரை, பின்பு யான் எடுத்துரைக்கின்றேன்.


—---------------------------------------------------------------------------------------------------------------------


"கிளியோன்" என்ற அம்மை அடியவர் ஆதி ஈசனாரை அழகாக எடுத்துரைத்தார்கள். நீங்கள் அவசியம் கேட்கவேண்டிய பதிவு

https://www.youtube.com/watch?v=GALfYBtiU84&t=1h29m02s

இவ்வடியவர் பேசிய வாக்கின் சுருக்கம் :-


1. ஒற்றுமையும் சைவ வளர்ப்பும்: அடியார்கள் அனைவரும் ஒத்துமையுடன் இருக்க வேண்டும். கலியுகத்தில் பிரிவுகளினால் வரும் இழிவுகளைத் தவிர்த்து, சைவத்தை ஓங்கி வளர்க்க வேண்டும்.

2. அன்பு மற்றும் கோபம் தவிர்த்தல்: யாரையும் யார் மீதும் கோவப்படாதீர்கள். அறியாதவர்களுக்கு அன்பாகச் சைவத்தைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

3. உயிர்வதை தவிர்த்தல்: ஒரு உயிரைக் கொன்று தின்றால் பாவம் வந்து சேரும் என்ற உண்மையை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

4. சித்தர்கள் மற்றும் மூதாதையர் வழியைப் பின்பற்றுதல்: நம் மூதாதையர்கள் கடைபிடித்த அத்தனை வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். சித்தர்கள் வழிபாடு மிக அவசியம்.

5. திருவாசகப் பயிற்சி: திருவாசகத்தை அனைவரும் படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும். அதை மனதுக்குள் ஏற்றி, வாசிக்கும்போது கண்ணில் நீர் வர வேண்டும். வருங்காலக் குழந்தைகளுக்கு திருவாசகத்தைக் கற்பிக்க வேண்டியது நம்முடைய கடமை.

6. இறை வழிபாட்டின் முக்கியத்துவம்: குடும்ப வாழ்க்கையில் மூழ்கி, இறை வழிபாட்டை மறந்து போகக்கூடாது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிவத்தை வணங்கினால் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் வராது.

7. ருத்ராட்சம் அணிதல்: ருத்ராட்சம் அணிவதற்குத் தயக்கம் காட்டக்கூடாது; இது காலம் காலமாக நம் மூதாதையர்களால் பின்பற்றப்பட்டது.

8. தொண்டு செய்தல்: நாம் இந்த பூமிக்கு வந்ததன் நோக்கம் சுவாமிக்குத் தொண்டு செய்வதுதான். பழுதடைந்து கிடக்கும் சிவன் கோயில்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

9. அடியார்களை மதித்தல்: அடியார்களுக்குள் சிவம் இருப்பதால், அடியார்கள் வர நேர்ந்தால் அவர்களுடைய பாதங்களை வணங்க வேண்டும்.

10. அன்னதானம் மற்றும் தொண்டு: பசியோடு வருபவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். ஒரு பிடி அரிசியை அரைத்து வில்வ மரம் அல்லது வன்னி மரத்தடியில் வைத்தால், எறும்புகள் எடுத்துச் சென்று உண்பதால் அது ஆயிரம் பேருக்குச் சாப்பாடு கொடுத்ததற்குச் சமம். இறைவன் நம்மிடம் பணத்தையோ நகைகளையோ கேட்கவில்லை, வெறும் அன்பை மட்டுமே கேட்கிறார்

(இவ் அம்மை பேசி முடிந்தபின்பு மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பம் ஆனது)


—-------------------------------------------------------------------------------------------------------------------


குருநாதர் :- அப்பனே , அம்மையே , எதற்கு ஏன்  இறைவனை வணங்க வேண்டும் என்பதெல்லாம் புரியாது. 

அதாவது நாய் போல் சுற்ற வேண்டும். இறைவனை நாய் போல் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் அனைத்தும் கிட்டும். அதாவது எதையும் எதிர்பார்க்காமலே. அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவன் அனைத்து படைப்புகளும் பின் படைக்கின்றான். நிச்சயம் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் பின் முன் கணிக்கப்பட்டது. அவ்வாறுதான் நடக்கும். 

ஆனாலும் மனிதனோ , அதற்குள்ளே பேராசைகள்.  அவை இவை என்றெல்லாம் ஓடுகின்றான். ஆனாலும் நிச்சயம் நடக்கப்போவதில்லை. ஆனாலும் ஒன்றுமே நடக்கவில்லையே, இறைவனை தொழுதேனே என்றெல்லாம் மீண்டும். அதாவது கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாக வேண்டும் என்பது விதி. அதனால்தான் சித்தர்கள், யாங்கள் விடப்போவதில்லை. 

கலியுகத்தில் மனிதனுக்கு ஒப்படைத்துவிட்டான்  இறைவன். அதாவது உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று. 

ஆனால் மனிதன் என்னவோ, இக்கலியுகத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, நிச்சயம் பின் பாவத்தை சேர்த்துக்கொண்டு, மற்றவர்களையும் கூட பாவத்தில், அதாவது குதிக்க வைக்கின்றான். அதாவது இப்படியே விட்டுவிட்டால், மனிதனை மனிதனே கொன்று தின்னுவான். அவை மட்டுமில்லாமல் இன்னும் நிறையவே செய்து விடுவான். 

அதனால்தான் சித்தர்கள், யாங்கள் மீண்டும் ஈசனிடத்தில் நிச்சயம் கேட்டு, மக்கள் மக்களை எப்படியோ திருத்துவோம் என்று. ஆனாலும் ஈசனோ, நான் ஒப்படைத்துவிட்டேன் மனிதனிடத்தில். ஆனாலும் அவர்கள் திருந்துவார்களா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

“””” ஆனாலும் சித்தர்கள், யாங்கள் நிச்சயம் திருந்த ஒரு வாய்ப்பு கொடுப்போம். அப்படி இல்லை என்றால், நிச்சயம் அவரவர் வினைக்கு அவரே (பொறுப்பு). “””””

இதனால், அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். இதுதான் நரகம். நீங்கள் அனைவருமே சாபம் பெற்று வந்தவர்கள் தான். நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு மனிதர்கள் சாபம் பெற்று வந்தவர்கள் அப்பா. அப்பொழுது எப்படி நிம்மதியாக வாழ முடியும்? நீங்களே சொல்லுங்கள்?. 

ஏனென்றால் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனிடத்தில் சொல்லும் பொழுது, ரிஷிகளும், அதாவது குருமார்களும், இன்னும் பல கோடி சித்தர்களும் நிச்சயம். ஆனாலும் அவ்வாறு அவர்களை நீங்கள், அதாவது இவ்வான்மா தாண்டி சென்றுதான் இறைவன் பார்க்க வேண்டும். ஆனாலும் முடியவில்லையே. பாதியிலே நீங்கள் செய்த பாவங்கள், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட. 

சித்தர்கள், இப்படி செய்துட்டாயே ??  நியாயமா??  என்று நிச்சயம் கோபத்தோடு சாபம் விட, மீண்டும் அவ்வான்மா திருப்ப அனுப்பப்படுகின்றது. 

இதனால் ஒரு ஆன்மாவும் இறைவனிடத்தில் செல்ல முடியாது நிலை வந்தடைகின்றது. ஆனாலும் இன்றைய நிலை, காலம், எதை சூழ்நிலைக்கு ஏற்பவே. ஆனாலும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. 

—----------------------------------------------------------------------------------------------------------------------
(உலகம் அறியாத ஜாதக ரகசியங்கள். ஏன் உங்கள் ஜாதகம் யாருக்கும் வேலை செய்வதில்லை என்ற ரகசியம்.)
—----------------------------------------------------------------------------------------------------------------------

ஜாதகத்தை எடுப்போம் என்பது எல்லாம். ஆனாலும் பல பேர்களுக்கு ஜாதகத்தை பற்றி தெரியவில்லை. அதன் ரகசியத்தை தான் இப்பொழுது சொல்ல போகின்றோம். 

ஆனாலும் சித்தர்கள், அவையெல்லாம் அழகாக பின் எழுதி வைத்து விட்டார்கள். ஆனாலும் நிச்சயம் மனிதர்களோ, நிச்சயம் இவையெல்லாம் கலியுகத்தில் மனிதன் தெரிந்து கொண்டால் வாழ்ந்து விடுவான் என்று எண்ணி, அச்சுவடிகள் எல்லாம் ஆற்றில் பின் இட்டு, எங்கேயோ மறைத்து புதைத்து விட்டார்கள். ஆனாலும் சித்தர்கள், நிச்சயம் யாங்கள் விடப்போவதில்லை. 

அதாவது ஒருவனுக்கு நல்படியாகவே, நிச்சயம் கர்மத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும். (ஜாதகத்தை பார்த்து) தவறான வழி, நிச்சயம் நீங்கள் செப்பினாலும், அதற்கு பின் இறைவனிடத்தில் பதில் நீங்கள் நிச்சயமாக பின் அளித்து, அதாவது கையை தட்டி பதில் எடுத்துரைக்க வேண்டும். 

இதனால் இப்பொழுது நட்சத்திரங்களை பற்றி சொல்ல போகின்றேன். இதை கூர்ந்து கவனித்தால், நிச்சயம் உங்களுக்கே தெரியும் ஜாதகத்தை பற்றி. 

அதாவது நிச்சயம் நவகிரகங்கள், எதை அனைவருக்குமே புரியும். ஆனாலும் நவகிரகத்தின் சக்தியானது, நிச்சயம். அதாவது ஒவ்வொரு, அதாவது நட்சத்திரங்கள் பல பல பல. ஆனாலும் பின் 28 நட்சத்திரங்கள் (27 + அபிஜித் நட்சத்திரம் )  மட்டும், நிச்சயம் மனிதனுக்கு தெரியும். ஆனால் பன்மடங்கு இன்னும் இருக்கின்றது என்பது தெரியவே இல்லை மனிதனுக்கு. 

ஆனால் (அந்த  28 நட்சத்திரங்கள்) அதைப்பற்றித்தான், நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றான் மனிதன். ஆனால் அதைப்பற்றி கூட, ஆனாலும் 10% மேல் தான் இப்பொழுது உரைக்கின்றார்கள். ஆனாலும் அப் பத்து  சதவீதத்தை வைத்து, நிச்சயம் எதுவும் செய்ய முடியாது. 

இதனால்தான் தொந்தரவுகள். இன்னும் கலியுகத்தில், நிச்சயம் ஜாதகத்தை, நிச்சயம் பின் கையாலே எடுத்து எடுத்து சுற்ற வேண்டும். ஏனென்றால் அவ்வளவு கஷ்டங்கள், அப்பொழுதுதான் தெரியும். அதாவது ஜாதகத்தை கூட எடுத்துச் செல்லலாம், பின் எங்கேயாவது பார்க்கலாம் என்றெல்லாம், நிச்சயம் மனிதன். அதாவது இங்கு வந்தவர்கள் கூட, நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் தான். (ஜாதகத்தை) எடுத்து எடுத்து திரிந்தவர்கள் தான். மீண்டும் கண்டுபிடிக்கலாமா, என்ன ஏது என்றெல்லாம், நிச்சயம். ஆனாலும் அவ்வாறு இவ்வாறு, பின் இவ்வாறுத்தான் நடக்கும் என்றெல்லாம். 

ஆனாலும் அதையும் மறந்து விடுகிறார்கள். அதாவது இப்பொழுது சொல்கின்றேன், பின் ஒவ்வொரு கிரகம், நிச்சயம் அறிந்தும், அதாவது சூரியன் என்றால், நிச்சயம் அவ் ஒளியானது, பின் நூறு, அதாவது அறிந்தும் புரிந்தும், இப்படியும் வைத்துக்கொள்ளத்தான், வைத்துக்கொள்ளலாம். 99 நட்சத்திரங்களே கடந்தாக வேண்டும். 

அதாவது அனைவருமே மூன்று பாதங்கள் தான் சொல்கின்றார்கள். ஒவ்வொரு பாதத்தையும் கடக்க, மூன்று மாதங்கள் ஆகின்றது. சூரியன் ஒளியானது, அதாவது மூன்று மாதங்கள், நிச்சயம் அடுத்த மூன்று மாதங்கள், அடுத்த மூன்று மாதங்கள். இவ்வாறாக, நிச்சயம் 99 ஐ கடக்க வேண்டும். அதாவது 99, நிச்சயம் தன்னில் கூட பாதத்தை கடக்க வேண்டும். 

ஒவ்வொரு, அதாவது இதே போலத்தான், நிச்சயம் தன்னில் கூட. அதனுள்ளே சூரியனால், பின் ஒளியானது கடக்க போவதற்குள்ளே, நிச்சயம். அதாவது ஒரு 50 பாதங்கள் கடக்க போவதற்குள்ளே, நிச்சயம் அடுத்த கிரகம், அதன் நேர்கோட்டில் வந்துவிடும். நிச்சயம் அதையும் கூட, அப்பொழுது சூரியன் கூட கீழே கீழிறங்கி , அதாவது அப்படியே நின்று, அப்படியே நின்று, நிச்சயம் அவ், அதாவது ஒளியானதை, நிச்சயம் மற்றொரு கிரகம் மூடிக்கொள்ளும் வந்து, அப்பொழுது அவ் கிரகம், நிச்சயம் தன்னில் கூட ஒளி வீச்சானது, நிச்சயம். அவ்வாறு மூன்று மூன்று என்றெல்லாம் பிரிந்து பிரிந்து, மூன்று மாதங்கள். 

ஆனாலும் இங்கே உரைக்கின்றேன், அதாவது நிச்சயம் ஏன், எதற்காக நட்சத்திரம், நிச்சயம் தன்னுடைய நட்சத்திரத்தில் கூட பிறந்தவர்கள் எதை என்று புரிய, அன்றைய தினத்தில் அமைதியாக, அதாவது பின் அவ் ஒளியானது மூன்று மாதங்கள் ஆகும். 

நிச்சயம் தன்னில் கூட மூன்று மாதத்திலாவது, நிச்சயம் அதாவது எதை என்று புரிய, ஒரு மாதத்திலாவது, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் தன் பிறப்பு நட்சத்திரமான, பின் நிச்சயம் ஒவ்வொரு திருத்தலம்  பற்றி நான் எடுத்துரைக்கின்றேன். அவ் திருத்தலம்  நீங்கள் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதி கிட்டுமே தவிர. 

நிச்சயம் இவ் ஒளியானது மீண்டும் அவ் பின் 20 நட்சத்திரங்களை, அதாவது இதைத்தான் பொதுவாகத்தான், நிச்சயம் தன்னில் கூட. 

நிச்சயம் 20 பாதத்தை தொடுகின்ற பொழுது, மற்றொரு கிரகம் வந்து குறிக்கிடும். ஆனாலும் மீண்டும் முதலிலே வந்துவிடும். இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி நலமாகும்?  நீங்களே சொல்லுங்கள்?. 

அதாவது சரியாகவே நூற்றை, அதாவது 100 தான் இறைவன். அதாவது நீங்கள் நிச்சயம் தன்னில் கூட 20, 30 இவ்வாறு பாதங்களுக்கு பின் செல்கின்ற பொழுதே, அடுத்த கிரகம் நிச்சயம் வந்து அறிந்தும் கூட ஒளியானது, நிச்சயம் தன்னில் கூட தடுத்து நிறுத்தி, நிச்சயம் மற்றொரு ஒளியானது. இவ்வாறாகவே இருந்தால், நிச்சயம் பிறப்பு பின் வந்து கொண்டே தான் இருக்கும். கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். 

ஆனாலும் நீங்களோ (ஜாதகத்தை) எடுத்து எடுத்து, பின் எங்கு எதற்காக, பின் பரிகாரங்கள் தேடி தேடி, ஆனாலும் எதை என்று பொறுத்துக் கொள்ள. 

ஆனாலும் சிலருக்கு நல்ல நேரங்களாக சென்று கொண்டே இருக்கும். ஆனாலும் அதில் கூட தீமை நடக்கும். ஏனென்றால் இதுதான் பின் இயற்கை. அதுமட்டுமில்லாமல் சிலருக்கு அறிந்தும் புரிந்தும், அதாவது தீய நேரங்கள், அதாவது இதில் நல்ல நேரங்கள், தீய நேரங்கள். 

நான் எதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நிச்சயம் பின் உங்கள் மனதை, அதாவது.. 

************உங்கள் மனது நல்லெண்ணங்களாக நினைத்தால், எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட நல் நேரமே. *************

****** அதாவது தீயவை உங்கள் மனதை நினைத்தால், எப்பொழுதுமே தீய நேரங்கள் தான். ***** 

“”” இது நீங்களே பின் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நம் தனக்கு நடக்கப்போவது நல்ல நேரமா?,  தீய நேரமா?. “”””

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வாழ்க்கையின் ரகசியத்தையும் கூட இன்னும் இன்னும் பாதியாக எடுத்துக்கொண்டால், அதாவது நிச்சயம் பின் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பின் அதாவது 99, நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஒவ்வொரு அறிந்தும் புரிந்தும் கூட, நிச்சயம் இவ்வாறாகவே பின் எப்பொழுது உங்கள் மனது சரியாகவே, 


அதாவது திருவாசகத்தை ஏன் அமைத்தான் ஈசன் என்றால், நிச்சயம் தன்னில் கூட பின் ஒரே சமயத்தில் ஒரே நேர்கோட்டில், நிச்சயம் அடைய வேண்டும். அதாவது அறிந்தும் இதற்கு பக்தி அதிகமாக தேவைப்படுகின்றது. அவை மட்டுமில்லாமல் வாசகம் இன்னும் கந்தபுராணம் , நிச்சயம் இவையெல்லாம் சாதாரணம் இல்லை. பின் ஏதோ ஓதச் சொல்கின்றார்கள் என்றெல்லாம்.  நிச்சயம் ஆனாலும் அதையும் எடுக்க நேரமில்லை. 

ஆனாலும் இதை ஓதிக்கொண்டே வந்தால், நிச்சயம் தன்னில் கூட மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள் என்று சொல்லி, நிச்சயம் பின் 99 அறிந்தும் புரிந்தும் கூட பாதங்களை எளிதில் தொட்டுவிடலாம். 

நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் நூறாவது நிச்சயம் தன்னில் கூட தொட்டால் தான், நிச்சயம் அப்பொழுதுதான் அதுதான் இறைவன். ஆனாலும் யாருமே நிச்சயம் தன்னில் கூட தொடுவதில்லை. அதனால்தான் நிச்சயம் கஷ்டங்கள். அவ்வாறாக இப்பொழுது பின் எடுத்துக்காட்டாகவே கூறுகின்றேன். 

இதைத்தன் நிச்சயம், அவ்வாறாக இப்பொழுது நிச்சயம் சந்திரனை பார்ப்போம். அதாவது சந்திரனானவன் ஒளியானது, பின் அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட மூன்று, அதாவது பாதங்கள் எதை எவை என்று அறிய. 

அதாவது ஒரு பின் பாதத்தை கடக்க, நிச்சயம் மூன்று மாதங்களே. ஆனாலும், அதாவது மூன்று மாதங்களை கடக்க, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும், பின் நிச்சயம் எவ்வளவு நிச்சயம் மாதங்கள், நீங்களே சொல்லுங்கள்?. 

நிச்சயம் தன்னில் கூட இவ் சந்திரன் ஒன்பது, நிச்சயம் மாதத்தில் எப்படி ஜாதகத்தில் கடப்பான் என்பதை எல்லாம் சொல்கின்றேன். ஆனால் சரியாக சந்திரனன் கடக்கும் பொழுது, பின் ஒன்பது மாதங்கள், நிச்சயம் எதையும் பேசக்கூடாது. நிச்சயம் இவ் ஒன்பது மாதங்களில் வாயால் தான் பிரச்சனைகள், மனக்குழப்பங்கள், பைத்தியங்கள். 

அதனால், நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாக நீங்கள்  பேசிவிட்டால், நிச்சயம் தன்னில் கூட, பின் ஏதாவது, நிச்சயம் தன்னில் கூட, அதாவது சண்டைகள், நிச்சயம் மனக்குழப்பங்கள், பிரிவினைகள் வந்துவிடும். 

இதே போலத்தான், நிச்சயம் நீங்களே பின் எடுத்து எடுத்து, பின் ஒவ்வொரு கிரகத்திற்கும், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக எங்கு, பின் நிச்சயம் தன்னில் கூட, சந்திரனில் இருந்தோ, சூரியனில் இருந்தோ, நிச்சயம் பின் தொடர்வது போல், நிச்சயம் அவ்வாறு அமைத்துக் கொண்டால், எப்பொழுது உங்களுக்கு கண்டம் வரும் என்பதை எல்லாம், நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் ஒவ்வொரு ஒளியானது, மூன்று மாதங்கள், நிச்சயம் தன்னில் கூட, ஒரு பாதத்தை கடக்க, நிச்சயம் இவ்வாறாகவே, பின் 99 கடக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள், நீங்களே கூறுங்கள், பார்ப்போம் ?????

அடியவர்கள் :- ( 99 பாதங்கள். ஒவ்வொரு பாதத்திற்கும் 3 மாதங்கள். எனவே 99*3 = 297 மாதங்கள். அதாவது 297/12 = 24.75 வருடங்கள். அதாவது 25 வருடங்கள் ஆகும் அய்யா.)


குருநாதர் :- அப்பனே, அறிந்த ஒரு கூட்டு ஒருவனுக்கு பக்குவங்கள் அறியவே, இவ்வளவு ஆண்டுகள் ஆகியது என்று நம்பினேன். 

நிச்சயம், இவ் ஆண்டுகள் வீணாகவே கழிக்கின்றான் மனிதன். அப்பனே, இவ்வாறாக வீணாக கழித்து, பின் 20 வயது, ஐந்து வயதிற்கு மேல் தான் ( 25 வயதிற்கு மேல் தான்) , நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுதுதான் மீண்டும், பின் பிறக்கின்றான் மனிதன். நிச்சயம், இன்னும் பக்குவம் அடைய, எத்தனை ஆண்டுகள் கூட்டிக்கொள்ளுங்கள், நீங்களே?. 

சுவடி ஓதும் மைந்தன் : - ( இறைவனை தேடாமல் மனிதன் தனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகளை வீணாகக் கழிக்கிறான்; அடுத்த 25 ஆண்டுகளில் தான் இறைவனை பற்றி கொஞ்சம் புரிதல் வர ஆரம்பிக்கிறது. ஆனால் 50 வயதுக்கு பிறகே இறைவனை பற்றி வாழ்க்கையின் உண்மை அர்த்தம் முழுமையாக புரிகிறது. இந்த உண்மையை அகத்தியர் மட்டுமே சொல்லக்கூடியவர்; மற்ற யாராலும் இதைச் சொல்ல முடியாது. எனவே, 25 வயதிலேயே வாழ்க்கையை வீணடிக்காமல், இறை உணர்வோடு வாழ்வது முக்கியம்)

குருநாதர் :- அப்பனே, அடுத்து 25 ஆண்டுகள், இறைவனை பார்க்க போராடுகின்றான். அப்பனே. எப்படியப்பா 25 ஆண்டுகளில் இறைவன் தெரிவான்?.  நீங்களே எடுத்துரைக்க வேண்டும்?. 

சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப 50 வயசு வரைக்கும் வீண். அப்ப நான் வந்து 25 வயசு, 25 ஆண்டுகளிலே இறைவனை பார்க்கணும்னா, 50 வருஷம் வெயிட் பண்ணிட்டு, அப்ப 25 ஆண்டுகளிலேயே இறைவனை பார்க்கணும்னா, எப்படின்னு சொல்றாரு. புரியுதுங்களா? 

குருநாதர் :- நிச்சயம், அப்பனே, அப்பொழுது நிச்சயம் இறப்பின் காலமே வந்துவிடும் என்பேன்  அப்பனே, 

அப்பனே, முதல் 25 வயதிலே, இறைவனை பாடி துதித்து வந்தாலே, அப்பனே, மற்ற ஆண்டுகள் சுலபமாக செல்லும் அப்பா.  ஆனால் கலியுகத்தில் அது சாத்தியமில்லை. அப்பா.

அப்பனே, ஆனாலும் இதிலே வீணடிக்கின்றீர்களா? அப்பா, வாழ்க்கையை என்பேன்  அப்பனே. ஆனால் கலியுகத்தில் இப்படி இருந்தால், அப்பா, நிச்சயம், பின் வீணடித்து , வீணடித்து , வாழ்க்கை, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின்பு, அப்பனே, அறிந்து, 30 வயது ஆயிடும் என்பேன் அப்பனே. அப்பொழுது, நிச்சயம், இறைவனிடத்தில் ஓடுவான், ஓடுவான், ஓடிக்கொண்டே இருப்பான் அப்பனே.

இறைவன் என்ன செய்வான் அப்பனே?  நிச்சயம், அவ் 30 ஆண்டுகளில் நீ என்னென்ன செய்துள்ளாயோ, அடுத்து 20 ஆண்டுகளில் அதை கொடுப்பான் அப்பா.  அப்பனே, நீங்கள் எப்படி தாங்கிக் கொள்வது அதனை ? 

அப்பனே, மீண்டும் சொல்கின்றேன். 30 வயதில் அப்பனே, இறைவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான் அப்பா.  அதாவது (நட்சத்திர) பாதங்கள், அதாவது சொன்னேனே, நட்சத்திரம், இங்கு 50 எட்டி இருக்கும்  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.  அவ்வாறு அங்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான். 

அதுவும் திருந்தவில்லை என்றால் அப்பனே, மீண்டும் ஐந்து வயது, ஐந்து ஆண்டுகள் எகிறிவிடும் என்பேன்  அப்பனே.  மீண்டும் அதிலிருந்து 25 கணக்கு எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே.

இதே போலத்தான் அப்பனே, மீண்டும், பின், மீண்டும் 40, அப்பனே, ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான் என்பேன் அப்பனே.

அதிலும் திருந்தவில்லை என்றால் அப்பனே, அழகாக இறைவன் அப்பனே, நிச்சயம், மீண்டும், அப்பனே, அறிந்து கூட, மீண்டும், அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பனே ஆண்டுகளை அப்பனே.

இதனால் வாழ்வதும், வீழ்வதும் அப்பனே, உங்களிடத்திலே என்பேன் அப்பனே.
 
அதனால்தான் அப்பனே, உங்களை அழைத்து வந்து, அனைவருக்கும் வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.  ஏனென்றால்  அப்பனே, எங்களுக்கு ஒரு பிள்ளை விட்டுவிட்டு, மறுகுழந்தை நிச்சயம், பின் சந்தோஷப்படுகின்றதெல்லாம். அப்பனே எங்களுக்கு அனைவருமே குழந்தைகள் தான் என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே, பொய்யானவைகள் எல்லாம் பின்பற்றி, பொய்யானவைகள் எல்லாம் அப்பனே, பின் அறிந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எதை பின்பற்றுகின்றோம், அதையாகவே நீங்கள் மாறிவிடுகிறீர்கள் என்பேன் அப்பனே.

இவையெல்லாம் ஏற்கனவே பெரியோர்கள் அப்பனே, அழகாக உடைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.  நீங்கள் வீழ்வது எதற்காக? அப்பனே, பார்த்தால், நிச்சயம், அப்பனே, 

பின், வீழ்வதெல்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதனால்தான், வீழ்வது.

அப்பனே, ஏன் துன்பப்படுகின்றீர்கள்? அப்பனே, துன்பம் வருவதெல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அவ்வளவுதான் என்பேன்  அப்பனே, 

நிச்சயம், இறைவன் மிகப்பெரியவன். அப்பா, அப்பனே, அதாவது, ஒரு நட்சத்திரத்தையே, உங்களால் அடைய முடியவில்லையே. அப்பனே, அதற்கு மேலே, இறைவன் இருக்கின்றான். அப்பா, எப்படி நீங்கள் கூறுங்களேன்? அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:-  (அகத்தியர் கூறுவதாவது, இறைவனை நேரடியாக காண வேண்டுமென்றால், முதலில் 99 நட்சத்திரங்களை கடக்க வேண்டும். நூறாவது நட்சத்திரம் தான் ஒருவரின் தனிப்பட்ட நட்சத்திரம், அதற்கு மேலே தான் இறைவன் இருக்கிறார். ஆனால் அந்த 99 நட்சத்திரங்களை கடக்க முடியாது என்பதே உண்மை. கடந்து விட்டால், இறைவனை நேரடியாக காண முடியும். இதைச் செய்ய இயலாததால், திருவாசகம், கந்தபுராணம் போன்ற புனித நூல்களை பாடுவதன் மூலம், இறைவனின் உண்மை அர்த்தம் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு வெளிப்படும். இதை அகத்தியர் மட்டுமே விளக்க முடியும்.)

குருநாதர் :- அப்பனே, அம்மையே, இன்னும் தெரியாதனால்தான் துன்பங்கள். ஆனாலும், திருத்தலத்திற்கு , திருத்தலத்திற்கு ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டே.  ஆனாலும், நிச்சயம், பின் எப்படி ஏன் வணங்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியாமல் மனது அழுக்காக வைத்துக்கொண்டு, இறைவனை வணங்கினாலும், இன்னும் அழுக்கு தான் வந்து சேரும். அதேபோல், இறைவன், நிச்சயம், அறிந்து புரிந்தும், 

“”””” நல் மனதோடு வணங்கினால், நல்லவைகளை கொடுப்பான். “”””””

“”””” தீயவையோடு வணங்கினால், நிச்சயம், தீயவைத்தான் கொடுப்பான். “””””

நீங்களும் கேட்கலாம். அதாவது, நிச்சயம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், அதாவது, பாதங்கள் மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள் என்று சொன்னேனே. நிச்சயம், ஒவ்வொரு பாதத்திற்கு எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம், அவை 40 தாண்டும் பொழுது, நோய்கள் வந்துவிடும். அப்பொழுது, எத்தனை ஆண்டுகள், நீங்களே கூறுங்கள்?. 

அடியவர்கள் : - ( 40 * 3 = 120 . மாதங்கள். அதாவது 10 ஆண்டுகள் )

குருநாதர் :- ஆனாலும், இப்பொழுது அதன் தன்மையில் அவ் 40 பாதத்தை தொடுகின்ற பொழுது, நிச்சயம், உடம்பில் நோய் வந்துவிடும். ஆனாலும்  உங்களுக்கு தெரியாதே. ஆனாலும், நிச்சயம், இவ்வாறாகவே, இன்னும் பின் ஏற, ஏற, நோய் - ஆனாலும், அறிந்தும்  அதைப்பற்றி நிச்சயம்  தெரியாது. 

அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, ஒரு 18, 20 வயதுகளில் இயற்கையை உண்ணுங்கள் என்று, யாங்கள் எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கின்றோம். அது தெரியாமல், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின், 


இவ்வாறு 40 தொடுகின்ற பொழுதே, நோய்களை, உடம்பிற்கு வந்துவிடும். 

அதாவது இவ்வாறாக, நிச்சயம், 20 தன்னிலே பின் பலவகையான இயற்க்கை (உணவுகளை) எடுத்துக் கொண்டால், அந்நோயின் தாக்கம் குறைந்துவிடும். ஆனாலும், மனிதனுக்கு தெரிவதில்லை. 

அப்படியே, நிச்சயம், பின், வயதை கணக்கின்றான்  40, 45, 50 என்று. ஆனாலும், அது, நிச்சயம், தன்னில் கூட, வெளிவந்து விடுகின்றது அதற்குள்ளே, நோய். ஆனாலும், இத்தனை வருடங்களில், நிச்சயம், நோய் கொண்டே வாழ்ந்துள்ளான் மனிதன். 

எப்படி, ஒரு ஐந்து வருடங்கள், 10 வருடங்கள், அல்லது ஒரு வருடம் காப்பாற்ற முடியும்? நீங்களே சொல்லுங்கள்?. 

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தோடு,  அப்பனே, ஒரு மனிதன் பொறாமை பட்டால் ஐந்து ஆண்டுகள் ஏறும் அப்பா, அப்பனே, தவறான வழியில்  மனதை செலுத்தினால், அது ஒரு ஐந்து வருடம் (ஏறும்.,  அப்பனே 10 வருடங்கள் எளிதாக, ஒரு மனிதனுக்கு அப்பனே, காலங்கள் சேருகின்றது அப்பனே.

அப்பனே, இப்படியே, பல பல வழிகளில் கூட, அப்பனே, நீங்கள் செய்வது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, 70, 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுலபமாக, அப்படி, நிச்சயம், தன்னில் கூட, பின், ஆனாலும், இக்கலியுகத்தில், அதெல்லாம் கழிக்க முடியுமா என்றால், இறைவன் மிகப்பெரியவன் அப்பா. 


==========================================================

(ஏன் குடும்பம் என்ற வாக்கு )

==========================================================

இதனால் ஒரு மனைவியை வரவழைக்கின்றான் அப்பனே, பிள்ளைகளை வரவழைக்கின்றான் அப்பனே.  அவ் 80 ஆண்டுகளை அவர்களுக்கும், அப்பனே, நிச்சயம், தண்டனை அளவு என்று, பாதியாக பிரிக்கின்றான் அப்பா. 

இறைவன் எவ்வளவு பெரிய இறைவன், அப்பனே, பார்த்துக் கொண்டீர்களா நீங்கள்?

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- 
(மனிதன் பொறாமை, கெட்ட எண்ணங்கள் போன்ற தவறுகளை—even சிறிய தவறுகளாக இருந்தாலும்—செய்வதனால், அவை பல ஆண்டுகள் அனுபவமாக ஏறிக்கொள்கின்றன. ஒரு மணி நேர தவறுக்கே 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். 25 வயதில் தவறு செய்தால், 90 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இறைவன் அந்த அனுபவங்களை குடும்பத்தின் மூலம் கொடுக்கிறார் —மனைவி மூலமாக 20 ஆண்டுகள், பிள்ளைகள் மூலமாக 10 ஆண்டுகள். ஒருவரின் தவறுக்காக ஒரு குடும்பமே சேர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டியதாயிருக்கும். இறைவன் மிகப்பெரியவர்; அவர் எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு, தீர்வு அளிக்கிறார். இதை அகத்தியர் தான் விளக்குகிறார்.)

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இறைவனை வணங்கினாலும், இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பா. ஆனாலும்  நீங்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருப்பீர்கள். இறைவனுக்கு, அவை செய்தேனே, இவை செய்தேனே என்று. ஆனால், அப்பனே, நீ என்ன செய்தாய் என்பது, நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அப்பனே, 

“””” அதாவது, நான் என்ன, பின் செய்தேன் என்று, நிச்சயம், அப்பனே, பின், நினைவுக்கு வந்துவிட்டால், அப்பனே, இறைவன் அங்கு வந்து வந்து விடுவான் அப்பா. “”””

அப்பனே அப்பொழுது, நிச்சயம்  பாதி, பாதியாக குறைப்பான் அப்பா.

அப்பனே, அதனால்தான்  இறைவன் சாதாரணமாணவன் இல்லை என்பேன் அப்பனே. இறைவனை பிடிக்க, அப்பனே, பல இன்னல்கள், பல வேதனை என்பேன்  அப்பனே.  அதற்கு, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, ஆனால், பின், நேரடியாக, இறைவனை சென்று தரிசித்தால், அப்பனே, மின்சாரம் தாக்கி போல், அப்பனே, விழுந்து விடுவான் என்பேன்  அப்பனே, மனிதன் என்பேன்  அப்பனே. 
மனிதனுக்கு தெரிவதே இல்லையப்பா இறைவனை பற்றி.

அப்பனே, இதனால், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வாறு, பின், பத்திரமாக, நிச்சயம், தன்னில் கூட, மின்சாரத்தை, நிச்சயம், தன்னில் கூட, தொட வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே, தெரிந்து கொண்டால்தான் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, சரியாகவே. 

இதனால், எப்படி இறைவனை தொட வேண்டும் என்பதெல்லாம்  அப்பனே, நிச்சயம், மனிதனுக்கு தெரிவதில்லை அப்பா, எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றான், பிதற்றிக் கொண்டிருக்கின்றான். அனைத்தும் பொய்தான் என்பேன்  அப்பனே. 

ஆனாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன்  அப்பனே, நிச்சயம், சாதாரணமாக, அப்பனே, மின்சாரத்தையே உங்களால் தொட முடியாது என்பேன்  அப்பனே, இறைவனையா தொடப்போகின்றீர்கள் நீங்கள் அப்பனே? சொல்லுங்கள் என்பேன்  அப்பனே?????

அப்பனே, நிச்சயம், மெதுமெதுவாக, அதாவது வாகனத்தை  இயக்கும் பொழுது கூட, மெதுமெதுவாகவே, இயக்க வேண்டும் என்பேன்  அப்பனே.

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம், இறைவனைக் காண, மெதுமெதுவாக, திருவாசகத்தை, கந்தபுராணத்தை, அப்பனே, இப்படியே, ஓதி , ஓதி வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரியும். அப்பா. 

அப்படி இல்லை என்றால், அப்பனே பின், மனிதனுக்கு, உண்மை நிலையும் தெரியாது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஏதோ பாடல் பாடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். நிச்சயம், பாடிக்கொண்டே இருப்போம் என்று அப்பனே.

அதாவது தன்னில் குடிப்பது போல் என்பேன்  அப்பனே.  ஒரு பலனும் இல்லையப்பா. ஆனால், அந்த நேரத்தில்  தாகம், தனிமை தவிர, ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை சொல்லிவிட்டேன். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 29 October 2025

சித்தன் அருள் - 1971 - திரு.ஹனுமந்ததாசன் அவர்களின் கஞ்சமலை வாக்கு - 7!



சித்தன் அருள் - 1962ன் தொடர்ச்சியாக... 

ஆக இந்த இடம் முருகப்பெருமான் உலா வந்த இடம் ! இதற்கு கீழே நந்தவனம் பத்து காத தூரத்திற்கு இருந்தது. நந்தவனங்கள் புஷ்பங்கள் எல்லாம் பூத்து குலுங்கிய இடம். அங்கு வெற்றிலையை முதலில்முதலில் உலகிற்கு கொண்டு வந்த இடம் இதுவென்று கூட சொல்லலாம். ஏனென்றால் வெற்றிலை என்பது தேவர்களுக்கு மட்டுமே உண்டான இலை. இன்றைக்கும் வெற்றிலை பற்றி சொல்லும் போதெல்லாம், எந்த இலைக்கும் கிடைக்காத பெருமை வெற்றிலைக்கு உண்டு. எந்த நல்ல காரியம் என்றாலும் கெட்ட காரியம் என்றாலும், வெற்றிலை வைத்து விட்டு தான் எல்லா காரியமும் செய்வார்கள். மற்ற இலைகளுக்கு, ரோஜா பூவுக்கு ஏன் அந்த மரியாதையை இல்லை ? மல்லிகை பூவுக்கு ஏன் அந்த மரியாதையை இல்லை ?எத்தனையோ செடிகள் எல்லாம் இருக்கிறதே, அந்த இலைகளை வைத்து வணங்க கூடாதா ? அதனையெல்லாம் தாண்டி இந்த வெற்றிலைக்கு மரியாதையை குடுத்த காரணம், தேவலோகத்தில் இருந்த வெற்றிலை, பூமிக்கு இறங்கி வந்து அதை சீர் பயிரிட்ட இடமும் கூட இந்த புனிதமான கஞ்சமலை தான் !

ஆக முதலில் வெற்றிலை தோன்றிய இடம், முதலில் ஏழு இலை விழுந்தது, பிறகு அதை பிடுங்கி நட்டார்கள், வேறிடமும் மாறிற்று. ஆக வெற்றிலையயை பூமிக்கு கொண்டு வந்த புனிதமான நாள், அந்த அரும்பெரும் காரியத்தை செய்தவன் காலாங்கிநாதன் !!

அந்த காலாங்கிநாதன் தான் செய்த சாதனைகள் எல்லாம் எனக்கு ஓரளவுக்கு தெரியும், அவன் வாய் திறந்து சொல்ல மாட்டான், ஆனால் அந்த புனிதமான நாள், இன்றைக்கு வெற்றிலை வைத்து வணக்கம் அத்தனை பேரும் காலாங்கிநாதனுக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும் ! செலுத்துவது இல்லை ஏனென்றால் அவர்களுக்கு விஷயம் புரியவில்லை.அந்த வெற்றிலையில் தான் உலகத்தில் மகத்துவமான சக்தி இருக்கின்றது !

அந்த வெற்றிலையை  மட்டும் நீங்கள் உண்டு, வெறும் காம்பால் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று இரண்டு இலைகள் உண்டு. அந்த வெற்றிலையை எப்படி விழுங்க வேண்டும் என்பதல்ல, அந்த வெற்றிலை சாற்றை உட்கொண்ட அத்தனை பேருக்கும், ஏறத்தாழ 43 கொடிய வியாதிகள் குணமாகும். எலும்பு சத்து அதிகமாகும். வெற்றிலையயை நிறைய போடுகின்ற நிறைய பேரை நன்றாக பார், அவர்கள் எலும்பு நிறைய கடினமாக இருக்கும். எலும்பும் தோலுமாக தான் இருப்பர்.

ஆனால் உன்னை விட வேகமாக நடப்பார். ஒருபோதும் துவண்டு விட மாட்டார். மூட்டுவலி என்று சொல்லி முனங்க மாட்டார். வேகமாக நடப்பார்கள். எலும்பு, நரம்பு பலம் அதற்கு உண்டு. ஆக வெற்றிலை கூட என்ன செய்யவேண்டும் என்ற முறை எல்லாம் கூடச் சொல்லுகிறார்கள். வெற்றிலை சாறை முழுங்கிவிட்டு அதை துப்ப வென்றும் என்றெல்லாம் சொல்லுவார்கள், வெறும் வெற்றிலையை வாயில் மென்றாலே போதும், அதன் சாறு எலும்புக்குள் சென்று, நரம்புக்குள் புகுந்து, எலும்பு - நரம்பு சம்பந்தப்பட்ட உயிர்கொல்லியான நோய்கள் அத்தனை நோய்களையும போக்குகின்ற வன்மை அந்த வெற்றிலைக்கு உண்டு ! அந்த வெற்றிலையை மேலோகத்திலிருந்து, பூலோகத்துக்கு கொண்டு வந்த நாள். பொதிகைமலை என்றாலும் கூட, அதற்கு முன்னாலே இங்குதான் வைத்து பயிரிடப்பட்டு, பிறகு தான் வெளியே கொண்டு வந்தது. அந்த புண்ணியதொரு காரியத்தை செய்ததும் காலாங்கிநாதன் தான் ! ஆக எத்தனை பெரிய காரியங்களை செய்திருக்கிறான் என்று சொன்னேன் !

அதுமட்டும் இல்லை, இன்னும் கூட சொல்லுவேன். துருவ நட்சத்திரங்கள் என்றெல்லாம் சொன்னேன். சப்தரிஷி மண்டலங்களில் ஏழு ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். ஏழு ரிஷிகளும் ஏழேழு மோட்சம் வேண்டுமென்று, ஏறத்தாழ பல ஆண்டுகள், பிள்ளை முன் நடந்தும் கூட, அதற்கு பிறகு கூட அவர்கள் வந்து பிரார்த்தனை செய்து தவம் செய்தார்கள் ! அந்த சப்த ரிஷியெல்லாம் வானுலகில் உட்கார வைத்து, ஆனந்தப்பட்டு, அவர்களுக்கு வாழ்வு குடுக்க வேண்டுமென்று பிரளயம் ஏற்பட்டால் கூட, விண்மீனாக ஜொலிக்கவேண்டும் என்றெல்லாம், முக்கண்ணனிடம் போராடி, என்னிடமும் போராடி, அவர்களையெல்லம் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த நாளும் இந்த நாள் தான் !

அகத்தியன் இங்கு வரச்சொன்னான் என்றாலோ, காலாங்கிநாதன் வரச்சொன்னான் என்றாலோ, மிக முக்கியத்துவம் இருக்கும் ! அதுதான் சொல்லுகிறேன் இந்த அருமையான நாள் ! ஏனென்றால் அந்த சமயத்தில் அந்த நட்சத்திரத்தில், அந்த மாநிலத்தில் சப்தரிஷிகள் வந்து மேலோங்கி அமர்ந்திருக்கின்ற ஒரு நாளில், அந்த நல்லதொரு கண்ணை, விசித்திரமான காட்சியெல்லாம் இங்கிருந்த அத்தனை பேரும் கண்டிருக்கிறார்கள் ! அதனால் தான் அவர்கள் ஒன்று கூடி இங்கு வந்திருக்கிறார்கள் ! ஆக இங்கு வரதவர்க்கெல்லாம் அந்த பாக்கியம் இல்லை என்று எண்ணிக்கொள்ளுங்கள். ஆக இவர்கள் எல்லாம் இன்றைக்கு நேற்றைக்கு பிறந்தவர்கள் அல்ல. பல ஜென்மங்களை வளர்ந்து பிரார்த்தனை செய்து, காடு மலை எல்லாம் சுற்றி, இறைவனுக்கு தொண்டாற்றியர்வகள்தான் நீங்கள் எல்லாம் ! உங்களில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வுருவரும் ஒவ்வொரு விதத்தில் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் ! காலத்தின் கட்டாயத்தில் வெவ்வேறு திசையில் பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம், வாழ்ந்துகொண்டிருக்கலாம். இந்த காலத்தின் கட்டாயம் என்பது அவரவர் கர்ம வினையின் பயன் என்றாலும் கூட, நீங்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் இங்கு வந்து சித்தர்களுக்கு பணிவிடை செய்திருக்கிறீர்கள்.

சித்தர்களின் அருளாசி பெற்று இருக்கிறீர்கள்! ஆக இங்கே நந்தவனத்தில் தோட்டம் போட்டு பயிரிட்டு, அன்றாடம் மலர்ந்த புஷ்பங்களையெல்லாம் ஆண்டவனுக்கு அர்ப்பணத்தியிருக்கிறீர்கள் ! உங்கள் அத்தனைபேருக்கும் அவர்கள் ஒருபோலதான், யார் யார் ஆண்டவனுக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தார்களோ ? அவர்கள் மட்டும் தான் இங்கு வந்திருக்கிறார்கள் ! என்றைக்கு ஏறத்தாழ என்னுடைய கணக்குப்படி, எங்கள் நினைவு மிக சரியாக இருக்க வேண்டும். ஏறத்தாழ 2017 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இதே நட்சத்திரத்தில் எல்லாம் நீங்கள் எல்லாருமே ஒன்றுகூடியவர்கள். இங்கிருக்கும் அத்தனை பேரும் சகோதரர்களாகவோ, நண்பர்களாகவோ,வெளியூர் வாசிகளாகவோ, ஆன்மீக பற்றில் தழைத்தவர்களாகவோ, சித்தர்களின் அடியார்களாகவோ இருந்துகொண்டு நெடியதொரு தொண்டாற்றி வந்திருக்கிருறீர்கள். அந்த நல்ல தொண்டு ஆற்றியதனால், மீண்டும் நீண்ட நாள் கழித்து, உங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, ஆனந்தப்பட்டு கொண்டிருக்கிறான் காலாங்கிநாதன் !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!