அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு. - பகுதி 1
நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.
வாக்குரைத்த ஸ்தலம் :- ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.
ஆதி முதல்வனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, மனிதர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் கலியுகத்தில் என்பதை எல்லாம் சித்தர்கள் சொல்லப் போகின்றார்கள் அப்பனே.
கிளியோனே, மேடை ஏறச் சொல்.
(ஆதி ஈசனாரின் ஓர் அம்மை அடியவர் தனது தோள்களில் எப்போதும் ஒரு கிளியினை ஏந்தி செல்பவர். இவ் அடியவரை குருநாதர், கருணைக்கடல் அங்கு மேடை ஏறச்சொன்னார்கள்.)
குருநாதர்:- அறிந்தும் புரிந்தும் மனிதனின் ஆசைகள் கலியுகத்தில் பேராசைகள், இப்பேராசைகள் மனிதனையே கொன்றுவிடும்.
ஆனாலும் ஒன்றும் தெரியாத நிச்சயம், இக்கிளியானது என்ன, ஏது, பாசத்திற்கே அடிமை. அதேபோல், இறைவனிடத்தில் நீங்கள் பாசத்திற்கு மட்டும் அடிமையானால், இறைவன் அனைத்தும் கொடுப்பான்.
“”””அப்படி மீறி, பின் எதைக் கேட்டாலும், நிச்சயம் அதைக் கொடுத்து, அதன் மூலம் கஷ்டங்களை ஏற்படுத்தி, திருந்தச் செய்வான். அதனால், நிச்சயம் தன்னில் கூட, இறைவனை, பின் இறைவனிடம் எதையும் கேட்டுவிடாதீர்கள்.”””
பின், நிச்சயம் கேட்டுவிட்டாலும், அப்படி கொடுத்துவிட்டாலும், அதனால் பெரும் தொல்லைகள். ஆனால், இப் பெண் (பெண் = அதாவது இவ் அம்மையின் மேல் அமர்ந்துள்ள கிளி), நிச்சயம் தன்னில் கூட, பின் எதற்கு, ஏது, என்று அவள் மீது அமர்ந்திருக்கின்றாள் நிச்சயம்.
பின் ஆனாலும், எதையும் எதிர்பார்த்து இல்லை. நிச்சயம் பாசத்திற்காகவே. தாயே, ஈசனைப் பற்றி, பின் எடுத்துரை, பின்பு யான் எடுத்துரைக்கின்றேன்.
—---------------------------------------------------------------------------------------------------------------------
"கிளியோன்" என்ற அம்மை அடியவர் ஆதி ஈசனாரை அழகாக எடுத்துரைத்தார்கள். நீங்கள் அவசியம் கேட்கவேண்டிய பதிவு
https://www.youtube.com/watch?v=GALfYBtiU84&t=1h29m02s
இவ்வடியவர் பேசிய வாக்கின் சுருக்கம் :-
1. ஒற்றுமையும் சைவ வளர்ப்பும்: அடியார்கள் அனைவரும் ஒத்துமையுடன் இருக்க வேண்டும். கலியுகத்தில் பிரிவுகளினால் வரும் இழிவுகளைத் தவிர்த்து, சைவத்தை ஓங்கி வளர்க்க வேண்டும்.
2. அன்பு மற்றும் கோபம் தவிர்த்தல்: யாரையும் யார் மீதும் கோவப்படாதீர்கள். அறியாதவர்களுக்கு அன்பாகச் சைவத்தைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
3. உயிர்வதை தவிர்த்தல்: ஒரு உயிரைக் கொன்று தின்றால் பாவம் வந்து சேரும் என்ற உண்மையை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
4. சித்தர்கள் மற்றும் மூதாதையர் வழியைப் பின்பற்றுதல்: நம் மூதாதையர்கள் கடைபிடித்த அத்தனை வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். சித்தர்கள் வழிபாடு மிக அவசியம்.
5. திருவாசகப் பயிற்சி: திருவாசகத்தை அனைவரும் படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும். அதை மனதுக்குள் ஏற்றி, வாசிக்கும்போது கண்ணில் நீர் வர வேண்டும். வருங்காலக் குழந்தைகளுக்கு திருவாசகத்தைக் கற்பிக்க வேண்டியது நம்முடைய கடமை.
6. இறை வழிபாட்டின் முக்கியத்துவம்: குடும்ப வாழ்க்கையில் மூழ்கி, இறை வழிபாட்டை மறந்து போகக்கூடாது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிவத்தை வணங்கினால் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் வராது.
7. ருத்ராட்சம் அணிதல்: ருத்ராட்சம் அணிவதற்குத் தயக்கம் காட்டக்கூடாது; இது காலம் காலமாக நம் மூதாதையர்களால் பின்பற்றப்பட்டது.
8. தொண்டு செய்தல்: நாம் இந்த பூமிக்கு வந்ததன் நோக்கம் சுவாமிக்குத் தொண்டு செய்வதுதான். பழுதடைந்து கிடக்கும் சிவன் கோயில்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
9. அடியார்களை மதித்தல்: அடியார்களுக்குள் சிவம் இருப்பதால், அடியார்கள் வர நேர்ந்தால் அவர்களுடைய பாதங்களை வணங்க வேண்டும்.
10. அன்னதானம் மற்றும் தொண்டு: பசியோடு வருபவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும். ஒரு பிடி அரிசியை அரைத்து வில்வ மரம் அல்லது வன்னி மரத்தடியில் வைத்தால், எறும்புகள் எடுத்துச் சென்று உண்பதால் அது ஆயிரம் பேருக்குச் சாப்பாடு கொடுத்ததற்குச் சமம். இறைவன் நம்மிடம் பணத்தையோ நகைகளையோ கேட்கவில்லை, வெறும் அன்பை மட்டுமே கேட்கிறார்
(இவ் அம்மை பேசி முடிந்தபின்பு மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பம் ஆனது)
—-------------------------------------------------------------------------------------------------------------------
குருநாதர் :- அப்பனே , அம்மையே , எதற்கு ஏன் இறைவனை வணங்க வேண்டும் என்பதெல்லாம் புரியாது.
அதாவது நாய் போல் சுற்ற வேண்டும். இறைவனை நாய் போல் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் அனைத்தும் கிட்டும். அதாவது எதையும் எதிர்பார்க்காமலே. அதாவது நிச்சயம் தன்னில் கூட இறைவன் அனைத்து படைப்புகளும் பின் படைக்கின்றான். நிச்சயம் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் பின் முன் கணிக்கப்பட்டது. அவ்வாறுதான் நடக்கும்.
ஆனாலும் மனிதனோ , அதற்குள்ளே பேராசைகள். அவை இவை என்றெல்லாம் ஓடுகின்றான். ஆனாலும் நிச்சயம் நடக்கப்போவதில்லை. ஆனாலும் ஒன்றுமே நடக்கவில்லையே, இறைவனை தொழுதேனே என்றெல்லாம் மீண்டும். அதாவது கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாக வேண்டும் என்பது விதி. அதனால்தான் சித்தர்கள், யாங்கள் விடப்போவதில்லை.
கலியுகத்தில் மனிதனுக்கு ஒப்படைத்துவிட்டான் இறைவன். அதாவது உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று.
ஆனால் மனிதன் என்னவோ, இக்கலியுகத்தில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, நிச்சயம் பின் பாவத்தை சேர்த்துக்கொண்டு, மற்றவர்களையும் கூட பாவத்தில், அதாவது குதிக்க வைக்கின்றான். அதாவது இப்படியே விட்டுவிட்டால், மனிதனை மனிதனே கொன்று தின்னுவான். அவை மட்டுமில்லாமல் இன்னும் நிறையவே செய்து விடுவான்.
அதனால்தான் சித்தர்கள், யாங்கள் மீண்டும் ஈசனிடத்தில் நிச்சயம் கேட்டு, மக்கள் மக்களை எப்படியோ திருத்துவோம் என்று. ஆனாலும் ஈசனோ, நான் ஒப்படைத்துவிட்டேன் மனிதனிடத்தில். ஆனாலும் அவர்கள் திருந்துவார்களா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
“””” ஆனாலும் சித்தர்கள், யாங்கள் நிச்சயம் திருந்த ஒரு வாய்ப்பு கொடுப்போம். அப்படி இல்லை என்றால், நிச்சயம் அவரவர் வினைக்கு அவரே (பொறுப்பு). “””””
இதனால், அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். இதுதான் நரகம். நீங்கள் அனைவருமே சாபம் பெற்று வந்தவர்கள் தான். நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு மனிதர்கள் சாபம் பெற்று வந்தவர்கள் அப்பா. அப்பொழுது எப்படி நிம்மதியாக வாழ முடியும்? நீங்களே சொல்லுங்கள்?.
ஏனென்றால் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனிடத்தில் சொல்லும் பொழுது, ரிஷிகளும், அதாவது குருமார்களும், இன்னும் பல கோடி சித்தர்களும் நிச்சயம். ஆனாலும் அவ்வாறு அவர்களை நீங்கள், அதாவது இவ்வான்மா தாண்டி சென்றுதான் இறைவன் பார்க்க வேண்டும். ஆனாலும் முடியவில்லையே. பாதியிலே நீங்கள் செய்த பாவங்கள், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட.
சித்தர்கள், இப்படி செய்துட்டாயே ?? நியாயமா?? என்று நிச்சயம் கோபத்தோடு சாபம் விட, மீண்டும் அவ்வான்மா திருப்ப அனுப்பப்படுகின்றது.
இதனால் ஒரு ஆன்மாவும் இறைவனிடத்தில் செல்ல முடியாது நிலை வந்தடைகின்றது. ஆனாலும் இன்றைய நிலை, காலம், எதை சூழ்நிலைக்கு ஏற்பவே. ஆனாலும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
—----------------------------------------------------------------------------------------------------------------------
(உலகம் அறியாத ஜாதக ரகசியங்கள். ஏன் உங்கள் ஜாதகம் யாருக்கும் வேலை செய்வதில்லை என்ற ரகசியம்.)
—----------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தை எடுப்போம் என்பது எல்லாம். ஆனாலும் பல பேர்களுக்கு ஜாதகத்தை பற்றி தெரியவில்லை. அதன் ரகசியத்தை தான் இப்பொழுது சொல்ல போகின்றோம்.
ஆனாலும் சித்தர்கள், அவையெல்லாம் அழகாக பின் எழுதி வைத்து விட்டார்கள். ஆனாலும் நிச்சயம் மனிதர்களோ, நிச்சயம் இவையெல்லாம் கலியுகத்தில் மனிதன் தெரிந்து கொண்டால் வாழ்ந்து விடுவான் என்று எண்ணி, அச்சுவடிகள் எல்லாம் ஆற்றில் பின் இட்டு, எங்கேயோ மறைத்து புதைத்து விட்டார்கள். ஆனாலும் சித்தர்கள், நிச்சயம் யாங்கள் விடப்போவதில்லை.
அதாவது ஒருவனுக்கு நல்படியாகவே, நிச்சயம் கர்மத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும். (ஜாதகத்தை பார்த்து) தவறான வழி, நிச்சயம் நீங்கள் செப்பினாலும், அதற்கு பின் இறைவனிடத்தில் பதில் நீங்கள் நிச்சயமாக பின் அளித்து, அதாவது கையை தட்டி பதில் எடுத்துரைக்க வேண்டும்.
இதனால் இப்பொழுது நட்சத்திரங்களை பற்றி சொல்ல போகின்றேன். இதை கூர்ந்து கவனித்தால், நிச்சயம் உங்களுக்கே தெரியும் ஜாதகத்தை பற்றி.
அதாவது நிச்சயம் நவகிரகங்கள், எதை அனைவருக்குமே புரியும். ஆனாலும் நவகிரகத்தின் சக்தியானது, நிச்சயம். அதாவது ஒவ்வொரு, அதாவது நட்சத்திரங்கள் பல பல பல. ஆனாலும் பின் 28 நட்சத்திரங்கள் (27 + அபிஜித் நட்சத்திரம் ) மட்டும், நிச்சயம் மனிதனுக்கு தெரியும். ஆனால் பன்மடங்கு இன்னும் இருக்கின்றது என்பது தெரியவே இல்லை மனிதனுக்கு.
ஆனால் (அந்த 28 நட்சத்திரங்கள்) அதைப்பற்றித்தான், நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றான் மனிதன். ஆனால் அதைப்பற்றி கூட, ஆனாலும் 10% மேல் தான் இப்பொழுது உரைக்கின்றார்கள். ஆனாலும் அப் பத்து சதவீதத்தை வைத்து, நிச்சயம் எதுவும் செய்ய முடியாது.
இதனால்தான் தொந்தரவுகள். இன்னும் கலியுகத்தில், நிச்சயம் ஜாதகத்தை, நிச்சயம் பின் கையாலே எடுத்து எடுத்து சுற்ற வேண்டும். ஏனென்றால் அவ்வளவு கஷ்டங்கள், அப்பொழுதுதான் தெரியும். அதாவது ஜாதகத்தை கூட எடுத்துச் செல்லலாம், பின் எங்கேயாவது பார்க்கலாம் என்றெல்லாம், நிச்சயம் மனிதன். அதாவது இங்கு வந்தவர்கள் கூட, நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் தான். (ஜாதகத்தை) எடுத்து எடுத்து திரிந்தவர்கள் தான். மீண்டும் கண்டுபிடிக்கலாமா, என்ன ஏது என்றெல்லாம், நிச்சயம். ஆனாலும் அவ்வாறு இவ்வாறு, பின் இவ்வாறுத்தான் நடக்கும் என்றெல்லாம்.
ஆனாலும் அதையும் மறந்து விடுகிறார்கள். அதாவது இப்பொழுது சொல்கின்றேன், பின் ஒவ்வொரு கிரகம், நிச்சயம் அறிந்தும், அதாவது சூரியன் என்றால், நிச்சயம் அவ் ஒளியானது, பின் நூறு, அதாவது அறிந்தும் புரிந்தும், இப்படியும் வைத்துக்கொள்ளத்தான், வைத்துக்கொள்ளலாம். 99 நட்சத்திரங்களே கடந்தாக வேண்டும்.
அதாவது அனைவருமே மூன்று பாதங்கள் தான் சொல்கின்றார்கள். ஒவ்வொரு பாதத்தையும் கடக்க, மூன்று மாதங்கள் ஆகின்றது. சூரியன் ஒளியானது, அதாவது மூன்று மாதங்கள், நிச்சயம் அடுத்த மூன்று மாதங்கள், அடுத்த மூன்று மாதங்கள். இவ்வாறாக, நிச்சயம் 99 ஐ கடக்க வேண்டும். அதாவது 99, நிச்சயம் தன்னில் கூட பாதத்தை கடக்க வேண்டும்.
ஒவ்வொரு, அதாவது இதே போலத்தான், நிச்சயம் தன்னில் கூட. அதனுள்ளே சூரியனால், பின் ஒளியானது கடக்க போவதற்குள்ளே, நிச்சயம். அதாவது ஒரு 50 பாதங்கள் கடக்க போவதற்குள்ளே, நிச்சயம் அடுத்த கிரகம், அதன் நேர்கோட்டில் வந்துவிடும். நிச்சயம் அதையும் கூட, அப்பொழுது சூரியன் கூட கீழே கீழிறங்கி , அதாவது அப்படியே நின்று, அப்படியே நின்று, நிச்சயம் அவ், அதாவது ஒளியானதை, நிச்சயம் மற்றொரு கிரகம் மூடிக்கொள்ளும் வந்து, அப்பொழுது அவ் கிரகம், நிச்சயம் தன்னில் கூட ஒளி வீச்சானது, நிச்சயம். அவ்வாறு மூன்று மூன்று என்றெல்லாம் பிரிந்து பிரிந்து, மூன்று மாதங்கள்.
ஆனாலும் இங்கே உரைக்கின்றேன், அதாவது நிச்சயம் ஏன், எதற்காக நட்சத்திரம், நிச்சயம் தன்னுடைய நட்சத்திரத்தில் கூட பிறந்தவர்கள் எதை என்று புரிய, அன்றைய தினத்தில் அமைதியாக, அதாவது பின் அவ் ஒளியானது மூன்று மாதங்கள் ஆகும்.
நிச்சயம் தன்னில் கூட மூன்று மாதத்திலாவது, நிச்சயம் அதாவது எதை என்று புரிய, ஒரு மாதத்திலாவது, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் தன் பிறப்பு நட்சத்திரமான, பின் நிச்சயம் ஒவ்வொரு திருத்தலம் பற்றி நான் எடுத்துரைக்கின்றேன். அவ் திருத்தலம் நீங்கள் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதி கிட்டுமே தவிர.
நிச்சயம் இவ் ஒளியானது மீண்டும் அவ் பின் 20 நட்சத்திரங்களை, அதாவது இதைத்தான் பொதுவாகத்தான், நிச்சயம் தன்னில் கூட.
நிச்சயம் 20 பாதத்தை தொடுகின்ற பொழுது, மற்றொரு கிரகம் வந்து குறிக்கிடும். ஆனாலும் மீண்டும் முதலிலே வந்துவிடும். இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி நலமாகும்? நீங்களே சொல்லுங்கள்?.
அதாவது சரியாகவே நூற்றை, அதாவது 100 தான் இறைவன். அதாவது நீங்கள் நிச்சயம் தன்னில் கூட 20, 30 இவ்வாறு பாதங்களுக்கு பின் செல்கின்ற பொழுதே, அடுத்த கிரகம் நிச்சயம் வந்து அறிந்தும் கூட ஒளியானது, நிச்சயம் தன்னில் கூட தடுத்து நிறுத்தி, நிச்சயம் மற்றொரு ஒளியானது. இவ்வாறாகவே இருந்தால், நிச்சயம் பிறப்பு பின் வந்து கொண்டே தான் இருக்கும். கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனாலும் நீங்களோ (ஜாதகத்தை) எடுத்து எடுத்து, பின் எங்கு எதற்காக, பின் பரிகாரங்கள் தேடி தேடி, ஆனாலும் எதை என்று பொறுத்துக் கொள்ள.
ஆனாலும் சிலருக்கு நல்ல நேரங்களாக சென்று கொண்டே இருக்கும். ஆனாலும் அதில் கூட தீமை நடக்கும். ஏனென்றால் இதுதான் பின் இயற்கை. அதுமட்டுமில்லாமல் சிலருக்கு அறிந்தும் புரிந்தும், அதாவது தீய நேரங்கள், அதாவது இதில் நல்ல நேரங்கள், தீய நேரங்கள்.
நான் எதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நிச்சயம் பின் உங்கள் மனதை, அதாவது..
************உங்கள் மனது நல்லெண்ணங்களாக நினைத்தால், எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட நல் நேரமே. *************
****** அதாவது தீயவை உங்கள் மனதை நினைத்தால், எப்பொழுதுமே தீய நேரங்கள் தான். *****
“”” இது நீங்களே பின் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நம் தனக்கு நடக்கப்போவது நல்ல நேரமா?, தீய நேரமா?. “”””
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வாழ்க்கையின் ரகசியத்தையும் கூட இன்னும் இன்னும் பாதியாக எடுத்துக்கொண்டால், அதாவது நிச்சயம் பின் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பின் அதாவது 99, நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஒவ்வொரு அறிந்தும் புரிந்தும் கூட, நிச்சயம் இவ்வாறாகவே பின் எப்பொழுது உங்கள் மனது சரியாகவே,
அதாவது திருவாசகத்தை ஏன் அமைத்தான் ஈசன் என்றால், நிச்சயம் தன்னில் கூட பின் ஒரே சமயத்தில் ஒரே நேர்கோட்டில், நிச்சயம் அடைய வேண்டும். அதாவது அறிந்தும் இதற்கு பக்தி அதிகமாக தேவைப்படுகின்றது. அவை மட்டுமில்லாமல் வாசகம் இன்னும் கந்தபுராணம் , நிச்சயம் இவையெல்லாம் சாதாரணம் இல்லை. பின் ஏதோ ஓதச் சொல்கின்றார்கள் என்றெல்லாம். நிச்சயம் ஆனாலும் அதையும் எடுக்க நேரமில்லை.
ஆனாலும் இதை ஓதிக்கொண்டே வந்தால், நிச்சயம் தன்னில் கூட மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள் என்று சொல்லி, நிச்சயம் பின் 99 அறிந்தும் புரிந்தும் கூட பாதங்களை எளிதில் தொட்டுவிடலாம்.
நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் நூறாவது நிச்சயம் தன்னில் கூட தொட்டால் தான், நிச்சயம் அப்பொழுதுதான் அதுதான் இறைவன். ஆனாலும் யாருமே நிச்சயம் தன்னில் கூட தொடுவதில்லை. அதனால்தான் நிச்சயம் கஷ்டங்கள். அவ்வாறாக இப்பொழுது பின் எடுத்துக்காட்டாகவே கூறுகின்றேன்.
இதைத்தன் நிச்சயம், அவ்வாறாக இப்பொழுது நிச்சயம் சந்திரனை பார்ப்போம். அதாவது சந்திரனானவன் ஒளியானது, பின் அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட மூன்று, அதாவது பாதங்கள் எதை எவை என்று அறிய.
அதாவது ஒரு பின் பாதத்தை கடக்க, நிச்சயம் மூன்று மாதங்களே. ஆனாலும், அதாவது மூன்று மாதங்களை கடக்க, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும், பின் நிச்சயம் எவ்வளவு நிச்சயம் மாதங்கள், நீங்களே சொல்லுங்கள்?.
நிச்சயம் தன்னில் கூட இவ் சந்திரன் ஒன்பது, நிச்சயம் மாதத்தில் எப்படி ஜாதகத்தில் கடப்பான் என்பதை எல்லாம் சொல்கின்றேன். ஆனால் சரியாக சந்திரனன் கடக்கும் பொழுது, பின் ஒன்பது மாதங்கள், நிச்சயம் எதையும் பேசக்கூடாது. நிச்சயம் இவ் ஒன்பது மாதங்களில் வாயால் தான் பிரச்சனைகள், மனக்குழப்பங்கள், பைத்தியங்கள்.
அதனால், நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாக நீங்கள் பேசிவிட்டால், நிச்சயம் தன்னில் கூட, பின் ஏதாவது, நிச்சயம் தன்னில் கூட, அதாவது சண்டைகள், நிச்சயம் மனக்குழப்பங்கள், பிரிவினைகள் வந்துவிடும்.
இதே போலத்தான், நிச்சயம் நீங்களே பின் எடுத்து எடுத்து, பின் ஒவ்வொரு கிரகத்திற்கும், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக எங்கு, பின் நிச்சயம் தன்னில் கூட, சந்திரனில் இருந்தோ, சூரியனில் இருந்தோ, நிச்சயம் பின் தொடர்வது போல், நிச்சயம் அவ்வாறு அமைத்துக் கொண்டால், எப்பொழுது உங்களுக்கு கண்டம் வரும் என்பதை எல்லாம், நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் ஒவ்வொரு ஒளியானது, மூன்று மாதங்கள், நிச்சயம் தன்னில் கூட, ஒரு பாதத்தை கடக்க, நிச்சயம் இவ்வாறாகவே, பின் 99 கடக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள், நீங்களே கூறுங்கள், பார்ப்போம் ?????
அடியவர்கள் :- ( 99 பாதங்கள். ஒவ்வொரு பாதத்திற்கும் 3 மாதங்கள். எனவே 99*3 = 297 மாதங்கள். அதாவது 297/12 = 24.75 வருடங்கள். அதாவது 25 வருடங்கள் ஆகும் அய்யா.)
குருநாதர் :- அப்பனே, அறிந்த ஒரு கூட்டு ஒருவனுக்கு பக்குவங்கள் அறியவே, இவ்வளவு ஆண்டுகள் ஆகியது என்று நம்பினேன்.
நிச்சயம், இவ் ஆண்டுகள் வீணாகவே கழிக்கின்றான் மனிதன். அப்பனே, இவ்வாறாக வீணாக கழித்து, பின் 20 வயது, ஐந்து வயதிற்கு மேல் தான் ( 25 வயதிற்கு மேல் தான்) , நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுதுதான் மீண்டும், பின் பிறக்கின்றான் மனிதன். நிச்சயம், இன்னும் பக்குவம் அடைய, எத்தனை ஆண்டுகள் கூட்டிக்கொள்ளுங்கள், நீங்களே?.
சுவடி ஓதும் மைந்தன் : - ( இறைவனை தேடாமல் மனிதன் தனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகளை வீணாகக் கழிக்கிறான்; அடுத்த 25 ஆண்டுகளில் தான் இறைவனை பற்றி கொஞ்சம் புரிதல் வர ஆரம்பிக்கிறது. ஆனால் 50 வயதுக்கு பிறகே இறைவனை பற்றி வாழ்க்கையின் உண்மை அர்த்தம் முழுமையாக புரிகிறது. இந்த உண்மையை அகத்தியர் மட்டுமே சொல்லக்கூடியவர்; மற்ற யாராலும் இதைச் சொல்ல முடியாது. எனவே, 25 வயதிலேயே வாழ்க்கையை வீணடிக்காமல், இறை உணர்வோடு வாழ்வது முக்கியம்)
குருநாதர் :- அப்பனே, அடுத்து 25 ஆண்டுகள், இறைவனை பார்க்க போராடுகின்றான். அப்பனே. எப்படியப்பா 25 ஆண்டுகளில் இறைவன் தெரிவான்?. நீங்களே எடுத்துரைக்க வேண்டும்?.
சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப 50 வயசு வரைக்கும் வீண். அப்ப நான் வந்து 25 வயசு, 25 ஆண்டுகளிலே இறைவனை பார்க்கணும்னா, 50 வருஷம் வெயிட் பண்ணிட்டு, அப்ப 25 ஆண்டுகளிலேயே இறைவனை பார்க்கணும்னா, எப்படின்னு சொல்றாரு. புரியுதுங்களா?
குருநாதர் :- நிச்சயம், அப்பனே, அப்பொழுது நிச்சயம் இறப்பின் காலமே வந்துவிடும் என்பேன் அப்பனே,
அப்பனே, முதல் 25 வயதிலே, இறைவனை பாடி துதித்து வந்தாலே, அப்பனே, மற்ற ஆண்டுகள் சுலபமாக செல்லும் அப்பா. ஆனால் கலியுகத்தில் அது சாத்தியமில்லை. அப்பா.
அப்பனே, ஆனாலும் இதிலே வீணடிக்கின்றீர்களா? அப்பா, வாழ்க்கையை என்பேன் அப்பனே. ஆனால் கலியுகத்தில் இப்படி இருந்தால், அப்பா, நிச்சயம், பின் வீணடித்து , வீணடித்து , வாழ்க்கை, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின்பு, அப்பனே, அறிந்து, 30 வயது ஆயிடும் என்பேன் அப்பனே. அப்பொழுது, நிச்சயம், இறைவனிடத்தில் ஓடுவான், ஓடுவான், ஓடிக்கொண்டே இருப்பான் அப்பனே.
இறைவன் என்ன செய்வான் அப்பனே? நிச்சயம், அவ் 30 ஆண்டுகளில் நீ என்னென்ன செய்துள்ளாயோ, அடுத்து 20 ஆண்டுகளில் அதை கொடுப்பான் அப்பா. அப்பனே, நீங்கள் எப்படி தாங்கிக் கொள்வது அதனை ?
அப்பனே, மீண்டும் சொல்கின்றேன். 30 வயதில் அப்பனே, இறைவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான் அப்பா. அதாவது (நட்சத்திர) பாதங்கள், அதாவது சொன்னேனே, நட்சத்திரம், இங்கு 50 எட்டி இருக்கும் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அவ்வாறு அங்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான்.
அதுவும் திருந்தவில்லை என்றால் அப்பனே, மீண்டும் ஐந்து வயது, ஐந்து ஆண்டுகள் எகிறிவிடும் என்பேன் அப்பனே. மீண்டும் அதிலிருந்து 25 கணக்கு எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே.
இதே போலத்தான் அப்பனே, மீண்டும், பின், மீண்டும் 40, அப்பனே, ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான் என்பேன் அப்பனே.
அதிலும் திருந்தவில்லை என்றால் அப்பனே, அழகாக இறைவன் அப்பனே, நிச்சயம், மீண்டும், அப்பனே, அறிந்து கூட, மீண்டும், அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பனே ஆண்டுகளை அப்பனே.
இதனால் வாழ்வதும், வீழ்வதும் அப்பனே, உங்களிடத்திலே என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே, உங்களை அழைத்து வந்து, அனைவருக்கும் வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது. ஏனென்றால் அப்பனே, எங்களுக்கு ஒரு பிள்ளை விட்டுவிட்டு, மறுகுழந்தை நிச்சயம், பின் சந்தோஷப்படுகின்றதெல்லாம். அப்பனே எங்களுக்கு அனைவருமே குழந்தைகள் தான் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே, பொய்யானவைகள் எல்லாம் பின்பற்றி, பொய்யானவைகள் எல்லாம் அப்பனே, பின் அறிந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எதை பின்பற்றுகின்றோம், அதையாகவே நீங்கள் மாறிவிடுகிறீர்கள் என்பேன் அப்பனே.
இவையெல்லாம் ஏற்கனவே பெரியோர்கள் அப்பனே, அழகாக உடைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே. நீங்கள் வீழ்வது எதற்காக? அப்பனே, பார்த்தால், நிச்சயம், அப்பனே,
பின், வீழ்வதெல்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதனால்தான், வீழ்வது.
அப்பனே, ஏன் துன்பப்படுகின்றீர்கள்? அப்பனே, துன்பம் வருவதெல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே,
நிச்சயம், இறைவன் மிகப்பெரியவன். அப்பா, அப்பனே, அதாவது, ஒரு நட்சத்திரத்தையே, உங்களால் அடைய முடியவில்லையே. அப்பனே, அதற்கு மேலே, இறைவன் இருக்கின்றான். அப்பா, எப்படி நீங்கள் கூறுங்களேன்? அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:- (அகத்தியர் கூறுவதாவது, இறைவனை நேரடியாக காண வேண்டுமென்றால், முதலில் 99 நட்சத்திரங்களை கடக்க வேண்டும். நூறாவது நட்சத்திரம் தான் ஒருவரின் தனிப்பட்ட நட்சத்திரம், அதற்கு மேலே தான் இறைவன் இருக்கிறார். ஆனால் அந்த 99 நட்சத்திரங்களை கடக்க முடியாது என்பதே உண்மை. கடந்து விட்டால், இறைவனை நேரடியாக காண முடியும். இதைச் செய்ய இயலாததால், திருவாசகம், கந்தபுராணம் போன்ற புனித நூல்களை பாடுவதன் மூலம், இறைவனின் உண்மை அர்த்தம் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு வெளிப்படும். இதை அகத்தியர் மட்டுமே விளக்க முடியும்.)
குருநாதர் :- அப்பனே, அம்மையே, இன்னும் தெரியாதனால்தான் துன்பங்கள். ஆனாலும், திருத்தலத்திற்கு , திருத்தலத்திற்கு ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டே. ஆனாலும், நிச்சயம், பின் எப்படி ஏன் வணங்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியாமல் மனது அழுக்காக வைத்துக்கொண்டு, இறைவனை வணங்கினாலும், இன்னும் அழுக்கு தான் வந்து சேரும். அதேபோல், இறைவன், நிச்சயம், அறிந்து புரிந்தும்,
“”””” நல் மனதோடு வணங்கினால், நல்லவைகளை கொடுப்பான். “”””””
“”””” தீயவையோடு வணங்கினால், நிச்சயம், தீயவைத்தான் கொடுப்பான். “””””
நீங்களும் கேட்கலாம். அதாவது, நிச்சயம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், அதாவது, பாதங்கள் மூன்று மாதங்கள், மூன்று மாதங்கள் என்று சொன்னேனே. நிச்சயம், ஒவ்வொரு பாதத்திற்கு எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம், அவை 40 தாண்டும் பொழுது, நோய்கள் வந்துவிடும். அப்பொழுது, எத்தனை ஆண்டுகள், நீங்களே கூறுங்கள்?.
அடியவர்கள் : - ( 40 * 3 = 120 . மாதங்கள். அதாவது 10 ஆண்டுகள் )
குருநாதர் :- ஆனாலும், இப்பொழுது அதன் தன்மையில் அவ் 40 பாதத்தை தொடுகின்ற பொழுது, நிச்சயம், உடம்பில் நோய் வந்துவிடும். ஆனாலும் உங்களுக்கு தெரியாதே. ஆனாலும், நிச்சயம், இவ்வாறாகவே, இன்னும் பின் ஏற, ஏற, நோய் - ஆனாலும், அறிந்தும் அதைப்பற்றி நிச்சயம் தெரியாது.
அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, ஒரு 18, 20 வயதுகளில் இயற்கையை உண்ணுங்கள் என்று, யாங்கள் எடுத்துக் கூறிக்கொண்டே இருக்கின்றோம். அது தெரியாமல், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின்,
இவ்வாறு 40 தொடுகின்ற பொழுதே, நோய்களை, உடம்பிற்கு வந்துவிடும்.
அதாவது இவ்வாறாக, நிச்சயம், 20 தன்னிலே பின் பலவகையான இயற்க்கை (உணவுகளை) எடுத்துக் கொண்டால், அந்நோயின் தாக்கம் குறைந்துவிடும். ஆனாலும், மனிதனுக்கு தெரிவதில்லை.
அப்படியே, நிச்சயம், பின், வயதை கணக்கின்றான் 40, 45, 50 என்று. ஆனாலும், அது, நிச்சயம், தன்னில் கூட, வெளிவந்து விடுகின்றது அதற்குள்ளே, நோய். ஆனாலும், இத்தனை வருடங்களில், நிச்சயம், நோய் கொண்டே வாழ்ந்துள்ளான் மனிதன்.
எப்படி, ஒரு ஐந்து வருடங்கள், 10 வருடங்கள், அல்லது ஒரு வருடம் காப்பாற்ற முடியும்? நீங்களே சொல்லுங்கள்?.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தோடு, அப்பனே, ஒரு மனிதன் பொறாமை பட்டால் ஐந்து ஆண்டுகள் ஏறும் அப்பா, அப்பனே, தவறான வழியில் மனதை செலுத்தினால், அது ஒரு ஐந்து வருடம் (ஏறும்., அப்பனே 10 வருடங்கள் எளிதாக, ஒரு மனிதனுக்கு அப்பனே, காலங்கள் சேருகின்றது அப்பனே.
அப்பனே, இப்படியே, பல பல வழிகளில் கூட, அப்பனே, நீங்கள் செய்வது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, 70, 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுலபமாக, அப்படி, நிச்சயம், தன்னில் கூட, பின், ஆனாலும், இக்கலியுகத்தில், அதெல்லாம் கழிக்க முடியுமா என்றால், இறைவன் மிகப்பெரியவன் அப்பா.
==========================================================
(ஏன் குடும்பம் என்ற வாக்கு )
==========================================================
இதனால் ஒரு மனைவியை வரவழைக்கின்றான் அப்பனே, பிள்ளைகளை வரவழைக்கின்றான் அப்பனே. அவ் 80 ஆண்டுகளை அவர்களுக்கும், அப்பனே, நிச்சயம், தண்டனை அளவு என்று, பாதியாக பிரிக்கின்றான் அப்பா.
இறைவன் எவ்வளவு பெரிய இறைவன், அப்பனே, பார்த்துக் கொண்டீர்களா நீங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்:-
(மனிதன் பொறாமை, கெட்ட எண்ணங்கள் போன்ற தவறுகளை—even சிறிய தவறுகளாக இருந்தாலும்—செய்வதனால், அவை பல ஆண்டுகள் அனுபவமாக ஏறிக்கொள்கின்றன. ஒரு மணி நேர தவறுக்கே 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். 25 வயதில் தவறு செய்தால், 90 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இறைவன் அந்த அனுபவங்களை குடும்பத்தின் மூலம் கொடுக்கிறார் —மனைவி மூலமாக 20 ஆண்டுகள், பிள்ளைகள் மூலமாக 10 ஆண்டுகள். ஒருவரின் தவறுக்காக ஒரு குடும்பமே சேர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டியதாயிருக்கும். இறைவன் மிகப்பெரியவர்; அவர் எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு, தீர்வு அளிக்கிறார். இதை அகத்தியர் தான் விளக்குகிறார்.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இறைவனை வணங்கினாலும், இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பா. ஆனாலும் நீங்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருப்பீர்கள். இறைவனுக்கு, அவை செய்தேனே, இவை செய்தேனே என்று. ஆனால், அப்பனே, நீ என்ன செய்தாய் என்பது, நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அப்பனே,
“””” அதாவது, நான் என்ன, பின் செய்தேன் என்று, நிச்சயம், அப்பனே, பின், நினைவுக்கு வந்துவிட்டால், அப்பனே, இறைவன் அங்கு வந்து வந்து விடுவான் அப்பா. “”””
அப்பனே அப்பொழுது, நிச்சயம் பாதி, பாதியாக குறைப்பான் அப்பா.
அப்பனே, அதனால்தான் இறைவன் சாதாரணமாணவன் இல்லை என்பேன் அப்பனே. இறைவனை பிடிக்க, அப்பனே, பல இன்னல்கள், பல வேதனை என்பேன் அப்பனே. அதற்கு, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, ஆனால், பின், நேரடியாக, இறைவனை சென்று தரிசித்தால், அப்பனே, மின்சாரம் தாக்கி போல், அப்பனே, விழுந்து விடுவான் என்பேன் அப்பனே, மனிதன் என்பேன் அப்பனே.
மனிதனுக்கு தெரிவதே இல்லையப்பா இறைவனை பற்றி.
அப்பனே, இதனால், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வாறு, பின், பத்திரமாக, நிச்சயம், தன்னில் கூட, மின்சாரத்தை, நிச்சயம், தன்னில் கூட, தொட வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே, தெரிந்து கொண்டால்தான் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, சரியாகவே.
இதனால், எப்படி இறைவனை தொட வேண்டும் என்பதெல்லாம் அப்பனே, நிச்சயம், மனிதனுக்கு தெரிவதில்லை அப்பா, எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றான், பிதற்றிக் கொண்டிருக்கின்றான். அனைத்தும் பொய்தான் என்பேன் அப்பனே.
ஆனாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே, நிச்சயம், சாதாரணமாக, அப்பனே, மின்சாரத்தையே உங்களால் தொட முடியாது என்பேன் அப்பனே, இறைவனையா தொடப்போகின்றீர்கள் நீங்கள் அப்பனே? சொல்லுங்கள் என்பேன் அப்பனே?????
அப்பனே, நிச்சயம், மெதுமெதுவாக, அதாவது வாகனத்தை இயக்கும் பொழுது கூட, மெதுமெதுவாகவே, இயக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அதேபோலத்தான் அப்பனே நிச்சயம், இறைவனைக் காண, மெதுமெதுவாக, திருவாசகத்தை, கந்தபுராணத்தை, அப்பனே, இப்படியே, ஓதி , ஓதி வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரியும். அப்பா.
அப்படி இல்லை என்றால், அப்பனே பின், மனிதனுக்கு, உண்மை நிலையும் தெரியாது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஏதோ பாடல் பாடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். நிச்சயம், பாடிக்கொண்டே இருப்போம் என்று அப்பனே.
அதாவது தன்னில் குடிப்பது போல் என்பேன் அப்பனே. ஒரு பலனும் இல்லையப்பா. ஆனால், அந்த நேரத்தில் தாகம், தனிமை தவிர, ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை சொல்லிவிட்டேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

வணக்கம் ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி, இந்த பதிவை வெளியிட்ட சித்தனருள் வலைத்தள குழுவினருக்கு நன்றி. குரு அருளால் இறை அருளால் திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை குழு ஒருங்கிணைப்பாளர்கள் இயன்றவரை மிக சிறப்பாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கும், உலக நன்மைக்காக இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர்களுக்கும் எல்லா நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். நன்றி
ReplyDelete