​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 October 2025

சித்தன் அருள் - 1962 - திரு.ஹனுமந்ததாசன் அவர்களின் கஞ்சமலை வாக்கு - 6!



சித்தன் அருள் 1954ன் தொடர்ச்சியாக!

அதற்கு சித்தர்கள் தான் உறுதுணையாக இருந்து, உங்களையும் இந்த மனித சித்தர்களையும், மனித உருவங்களையும் காப்பாற்ற போகிறார்கள், ஏனால் இறைவன் எப்பொழுது ஒதுங்கி விட்டானோ, அதற்கு காரணம் இருக்கிறது. அவன் இறைவன் இத்தகைய பொறுப்புகளை ஏற்று செய்தால் இத்தகைய அவலங்கள் ஏற்படாது. அவை எதோ தெய்வங்கள் மூன்றும் ஒன்றுகூடி எதோ திட்டமிட்டு ஒதுங்கி கொண்டிருக்கிறார்கள். எப்போது அவர்கள் ஒதுங்கி விட்டார்களோ எதோ ஒன்று நடக்கப்போகிறது என்று தெரிகிறது. அதன் காரணமாக மனிதர்கள் எல்லாம் நொந்துபோய் விடக்கூடாது, அவர்களை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் கருணை கொண்டு காலங்கிநாதன் உங்களை அழைத்துயிருக்கிறான். காலங்கிநாதன் சொல்லுகிற இந்த மலையை பற்றி சொல்லும்போதெல்லாம், இந்த மலையை பற்றியெல்லாம் காந்தமலை என்று பெயர். காந்தம் எப்படி இழுக்கின்றதோ, அந்த காந்தமலை தான் கஞ்சமலை என்றாகிவிட்டது. 

கஞ்சமலை என்பதற்கெல்லாம் எத்தனையோ காரணம் இருக்கின்றது, உருவச்சொற்களாக மாறியிருக்கலாமே தவிர, நாம் உட்கார்ந்து அமர்ந்திருக்கின்ற இந்த மலை 7500 அடிக்கு உயர்ந்த இந்த மலை, இங்குதான் சித்தர்கள் நடமாடி இருகிறார்கள். அகத்தியன்  உட்கார்ந்து வாக்குரைக்கிரேனே, இந்த இடத்தில் தான் அகத்தியன் நான் இருந்தேன். எனது வலது பக்கத்தில் காலாங்கிநாதன் இருந்தார். மற்ற சித்தர்களும் அப்படியே அமர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அதே நிலையில் தான் அமர்ந்திருக்கிறார்கள். அந்த காலாங்கிநாதர் வந்து சொன்னதெற்கெல்லாம் எத்தனையோ காரணம் உண்டு என்று சொன்னேன். இனி அவன் வாய்திறந்து என்ன சொல்ல போகிறான் ? தானத்தை வழங்கினான் ! சித்தர்களோடு தெய்வத்துக்கு நடந்த ஒப்பந்தத்தை பற்றி சொன்னான் ! இனி எதிர்காலம் சித்தர்கள் காலம் என்று சொன்னான் ! அதையும் அகத்தியன் உங்களை போல் தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அவன் என்ன விட விஷயம் தெரிந்தவன் சில விஷயங்களில். அவன் சொல்வதிலும் சில சூட்சுமங்கள் இருப்பதனால்தான் அவன் வாக்கிற்கு செவி சாய்த்து, அவன் சொல்வதையெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது காலாங்கிநாதர் சொல்லுகிறார், இந்த மலையில்1247 மூலிகைகள் இன்றைக்கும் இருக்கிறது, இந்த மண்ணிலே மறைந்து கொண்டிருக்கிறது.

அந்த மூலிகைகள் எல்லாமே இறந்தவர்களை எழுப்பி வைக்கும், அற்புதமான மூலிகை உண்டு. இதோ அமர்ந்திருக்கின்ற இடத்தை சுற்றியெல்லாம், இதற்கு கீழே பூமியை தோண்டினால், ஏறத்தாழ 247 அடிக்கு மேல் தோண்டினால், அற்புதமான மூலிகைகள் எல்லாம் அப்படியே இன்றும் உயிரோடு இருக்கின்றது, அழிந்துபோய்விடவில்லை.

கண்களுக்கு கண் திறக்காவிட்டாலும், கண் பார்வை மறைந்துபோனாலும், கண்களுக்கு ஆங்கிலத்தில் சொல்லுவார்களே குளுக்கோமா என்று அந்த மாதிரி மோசமான பார்வையையை செயலிழக்கச்செய்கின்ற, மோசமா வ்யாதிகளுக்குஎல்லாம் இங்கே, இதற்கு கீழே பூமிக்கு 247 அடிக்கு கீழே, 9 வகையான மூலிகைகள் இன்றும் உயிரோடு இருகின்றது. அதை தோண்டி எடுப்பதற்கு கல்பம், அதை மூலிகைக்கு மேல் அமர்த்துக்கொண்டுதான் அகத்தியன் இந்த வாக்கை சொல்லுகிறேன். ஆகவே ஒரு மனிதனின் உடம்பில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், 4448  வியாதிகள் உண்டடா. அச்சென்று தும்முவது முதல் கண்டமாலை வரை என்று அன்றைக்கே நான் சொன்னேன். என் அருமை நண்பன் போகன் கூட இதையெல்லாம் கண்டுபிடித்து, ஆகவே அதற்கு ஒரு காயகல்பத்தை கண்டுபிடித்தான்.

அந்த காயகல்பத்தை உண்டுவந்த அத்தனை பேருக்கும் வியாதிகள் நெருங்காது என்பது உண்மை. அந்த காயகல்பம் மிகவும் கஷ்டமான காரியமில்லை. அதுவும் உங்களுக்கு கிடைக்க வாய்பிருக்கிறது. ஏனென்றால் இதே இடத்தில் தான் முதன் முதலாக ரசவாதம் என்று சொல்லப்படுகின்ற, காயகல்பத்தை போகனே இங்கு பண்ணினான். அதையும் காலாங்கிநாதர் சுட்டிக்காட்டுகிறர் என்பதால் சொன்னேன்.

போகர் இங்கு வந்துதான் காயகல்பத்தை உண்டாக்கினான்.அதற்கான ஒப்புதலை கலங்கிநாதரிடம் கேட்டான், காலாங்கிநாதர் அதை என்னிடம் வந்து கேட்டார், நான் எனது தலையாய சித்தனான முக்கணனிடம் போய் காண்பித்தேன். ஏற்கலாம் என்று, ததாஸ்து என்று வாழ்த்துரை கூறினான் ! அந்த நல்ல இடம் கூட இங்கிருந்து 1 காத தூரத்தில் தான் முக்கண்ணன் அமர்ந்திருந்து, அந்த காயகல்பத்தை அங்கீகாரம் செய்யப்பட்ட இடமாகும் இந்த இடம். ஆகவே இந்த இடத்தின்  புண்ணியத்தி பற்றி சொல்லவேண்டுமென்றால் நிறைய சொல்லலாம்.

காலாங்கிநாதர் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த இடம், தான் செய்த தவத்தை எல்லாம் உலகெலாம் காட்டி மெய்சிலிர்க்க வாய்த்த இடம். முக்கண்ணன் உட்பட அத்தனை தெய்வங்களும் அவனை வியந்து பாராட்டி, அவன் ஆச்சர்யப்பட்டு நின்ற இடம். ப்ரளயம் தோன்றி மறுபிரளயம் அழிந்து, பிறகு புதியதோர் உலகம் ஆரம்பித்த நல்ல நாள், காலங்கித்தேவர் பிறந்தநாள், அவன் இங்கு முதன் முதலாக 4000 ஆண்டுகளுக்கு முன்னால், உங்களையெல்லாம் வரவழைத்து பேசியிருக்கிறானே, அந்த நாள் இந்த புனிதமான நாள் ! இதற்கு முன் இப்படி அழைத்து கிடையாது, அவன் பேசியது கிடையாது, அவன் வாய் மூடி மௌனியாகவே இருப்பான். ஏதுவெனும் வேண்டுமென்றால் செய்வான், வேண்டாமென்றால் வாய் திறக்கமாட்டான், அவன் உங்கள் கணக்குப்படி பார்த்தால் முசுடு என்று சொல்லலாம், எப்போது பேசுவான், எப்போது சிரிப்பான் என்று தெரியாது. அப்படிப்பட்டவன் வாய்திறந்து, மனம் மகிழ்ந்து புன்னகை பூத்து, தன் குழந்தைகையெல்லாம் ஆரத்தழுவி கொண்ட தாய்போல, அமர்ந்து பக்கத்தில் உட்கார்ந்து சிரிக்கிறானே ! அவன் வாழ்க்கையில் சிரித்து இன்னைக்குத்தான் நன் பார்க்கிறேனடா. அந்த நல்ல நாளும் இந்த நாள் தான், ஏனால் சித்தர்கள் சிரிக்க மாட்டார்கள், சோதனைக்காக  சிரித்துவிட்டால் அதை இழக்க  மாட்டார்கள், அது ஒரு குணம். அந்த நிலையும் தாண்டி ஒரு வைராக்கியமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எந்த சித்தர்களையாவது நீ படத்தில் பார்த்திருக்கிறாயா? புன்னகை பூத்துக்கொன்டு கண்ணை மூடிக்கொண்டு அகமாக சிரித்துக் கொண்டா இருக்கிறார்கள் ? ஆக சிரிப்பது தெரிய கூடாது என்பதற்காகத்தான் தாடியை காட்டுகிறார்கள். சிரித்துவிட்டால் அவன் பலவீன பட்டுவிடுவான் என்பதற்காக, அவன் முகத்தை புரிந்து கொள்ள்ளக்கூடாது என்பதற்காகத்தான் சித்தர்கள் எல்லாரும் தாடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக அப்படிப்பட்ட சித்தன் வாய் திறக்க முடியாதவன், பேசாதவன், முசுடு என்று உங்க வார்த்தையிலே சொல்லலாம், அவனை தைரியமாக சொல்லுவேன், அவன் கோபித்துக் கொள்ள மாட்டான் என்று எண்ணுகிறேன், அன்னவன் முன்னாலே அகத்தியன் சொல்லுகின்ற வாக்கு இது. அப்படிப்பட்ட முகத்திலே புன்னகை பூக்கிறது என்றால்?  அவனை புன்னகை பூக்க வாய்த்த அருமையான நாளும் இந்த நாள் தான் !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete