அடியவர் : தகப்பன் என்ற ஒருவனை அமர்த்தி இலை போட்டு , நான்கு பேரும் சேர்ந்து , நான்கு முறை சாப்பாடு போட்டால் அவரால் சாப்பிட முடியுமா?
குருநாதர் : அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய, அங்கு அதாவது அப்பனே இங்கு பாசம் என்ற வார்த்தையை இங்கு எடுத்து வந்து விட்டேன் அப்பா.
அடியவர் : பாசம் என்பதை எல்லா இடத்திலும் நாங்கள் காட்டுகிறோம், தாய் தகப்பனிடம் காட்டுகிறோம்,சத்தம் போடுவோம் , சண்டை போடுவோம் , கட்டி பிடிச்சிப்போம் , சிரிச்சிப்போம் ,கிண்டல் அடிப்போம் , அதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருந்தாலும் ?
குருநாதர் : நிச்சயம் அவர்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருந்தாலும், அப்பனே எத்தனை பேர் இருந்தாலும், அவர்கள் நிச்சியம் தன்னில் கூட , அப்பனே நிச்சியம் தன்னில் பின், பாசத்தோடு வருவார்கள் தான் என்பேன் அப்பனே, முடிந்து விட்டது என்பேன் அப்பனே.
அடியவர் : எனக்கு கிடைத்த அனுபவங்கள் என்பது வித்தியாசமானது.
குருநாதர் : அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு பல கோடி மனிதர்கள் வித்தியாசமான வித்தியாசமான அனுபவங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட , ஆனாலும் ஒரு அனுபவம் அப்பனே , அதை பின் விவரமாக பின் வாக்குகள் , இதனால் அப்பனே உன் கேள்விக்கெல்லாம் பின் நிச்சயமாக பதில் வந்திருக்கின்ற பொழுது, அப்பொழுது நீ அமைதியாக வாயை மூடிக்கொள்வாய் என்பேன் அப்பனே. அதுவரை நான் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்.
அடியவர் :ஆமாம், பதில் கிடைக்கும் வரை, மனம் சமாதானம் ஆகும் வரை..
குருநாதர் : அப்பனே நிச்சயம் எதை என்று புரிய, அதாவது பல தேவைகள் மனிதனுக்கு, எப்பொழுது பின் பூர்த்தி, பின் நிச்சயம் எவை என்று அறிய, பின் நிச்சயம் ஆகாது , எவை என்று அறிய, அப்பனே பின் தன்னில் கூட எவை என்று அறிய,என்னுடைய அருள்கள் பலமாக இருந்தால் அப்பனே, எப்பொழுது எவை என்று அறிய மறைத்து அப்பனே உண்மைகள்.
அடியவர் : நான் ஒரே ஒரு விஷயத்தை கேட்கிறேன்,தெளிவாக சொல்லுங்கள்.என்னுடைய பிதுர்களுக்கு 2019 வரையிலும்,பிதுர்களுக்கு எந்த குறையும் இல்லாமல்,லட்சக்கணக்கான ரூபாய் செலவுபண்ணாலும் சரி,பரவாயில்லை போகட்டும் என்று அத்தனையும் ஒழுங்காக பண்ணினேன், எனது பெற்றோருக்கும், முன்னிருக்கும் , உடன் பிறந்தவர்களுக்கும், எல்லோருக்குமே. ஆனால் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அடிதான் கிடைத்தது மட்டும் இல்லாமல், நான் நம்பிய நம்பிக்கையும் வீண் போனது என்று சொல்லணும். ஏனென்றால்......
குருநாதர் : அப்பனே எதை என்று பொறுத்து , அமைதி.அப்பனே இதை அப்பனே நிச்சயம், அப்பனே பின் எங்கெங்கோ அப்பனே நிச்சயம் அப்பனே,அறிந்தும் புரிந்தும் புரியாமலும் அப்பனே சுற்றி வந்தாய் ஒரே அடியில் நிச்சயம் அப்பனே, இதனால் தான் அப்பனே உன்னருகில் இறைவன் வந்துவிட்டான் அப்பனே, இதனால் அப்பனே.
அடியவர் : அருகில் இறைவன் வந்தது இருக்கட்டும். அப்படி என்றால்,ஏன் இன்னும் மனம் அடங்கவில்லை? எதுவுமே வேண்டாம்,யாருமே வேண்டாம் ....
குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, மனிதனோடு சேர்ந்தால் இப்படி தான் அப்பா , இறைவனோடு சேர்ந்தாலும் இப்படி தான் அப்பா. அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் இறைவனோடு ஒன்றாக , அதாவது இறைவன் அருகில் ஒன்றாக இருக்கின்ற பொழுது, அப்பனே இப்படித்தான் தோன்றும் அப்பா, மனிதரிடத்தில் பழக கூடாது என்று அப்பனே.
அடியவர் : நீங்கள் சொல்கின்ற அத்தனை சாஸ்திரங்களும் , சம்பிரதாயங்களும் விபரீதமாக நடக்கின்ற பொழுது தான், நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது ? இதெல்லாம் உண்மை தானா ?
குருநாதர் : அப்பனே நிச்சயம் பின் கேள்விக்குறியாக இருந்தால் தான் அப்பனே ,அதுவும் கூட அப்பனே , அதாவது நீ வகுப்பு , அதாவது கல்வியில் சேருகின்றாய் அப்பனே,நிச்சியம் உந்தனுக்கு ஒரு கேள்வி வந்தால் தான்,ஆசிரியன் அப்பனே இப்படி என்று தெளிவு படுத்த முடியும். அப்பொழுது நீ ஒரு படி மேல் ஆகிவிடுவாய் என்பேன் அப்பனே.அதனால் வரட்டும் அப்பனே,யாங்கள் உரைக்கின்றோம் அப்பனே, எதை என்று அறிய அப்பனே,அனைத்தும் உரைப்பதற்கு யாங்கள் தயார் என்பேன் அப்பனே.
குருநாதர் : சரி, அடுத்து கேள்விக்கு போகலாம்.
குருநாதர் : அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே,தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் அப்பனே. அங்கு செல்ல வேண்டும்,இங்கு செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.நிச்சியம் பல பல வழியிலும் கூட இன்னும் சீர் செய்ய வேண்டும் அப்பனே,பிறவிகளுக்கு கூட அப்பனே,எப்பொழுது செய்வாய் என்பேன் அப்பனே? நிச்சியம் வாங்கி கொள்வார்கள் என்பேன் அப்பனே. எப்பொழுதெல்லாம் வாங்கிக்கொள்ள வேண்டுமோ? அப்பொழுதெல்லாம் வாங்கி கொள்வார்கள் அப்பனே, நிச்சயம் உந்தனுக்கே புரியும் என்பேன் அப்பனே. இன்னும் அப்பனே எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட வழி வழியாக வந்த நிச்சயம் தன்னில் கூட பாபநாசத்திலும் தென்காசியிலும் கூட அப்பனே இன்னும் பின் அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே தெரிந்து கொள்வாய் அப்பனே.
அடியவர் : ஒவ்வொருமுறை வாக்குரைக்கும்போது அடியவர்களை அறுபடை வீடுகளுக்கும் , பஞ்சபூத தலங்களுக்கு செல்ல அறிவுறுத்துவது எனக்கு மட்டும் சம்பந்தம் இல்லாததா?
குருநாதர்:அப்பனே எதை என்று அறியறிய அப்பனே,நிச்சயம் தன்னில் கூட சொல்லிக் கொடுப்பவர் யார்? நிச்சயம் அப்பனே அதை தெரிவிப்பது யார் அப்பனே? நிச்சியம் அவர்கள் செய்த புண்ணியம் உன்னை வந்து சேரும் பொழுது, பின் எப்படி அப்பா ? இதையும் புரிந்து கொள் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, நீ தான் முதலில் கேட்டாய் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் சிந்தித்து பார் அப்பனே.
வாக்குரைக்கும் அடியவர்: முன் குருநாதர் பித்ருக்களுக்கான கேள்விக்கான பதிலையும், இப்பொழுது கூறிய பதிலையும் இணைத்து பார்க்க குருநாதர் கூறுகிறார்.
குருநாதர்: அப்பனே கீழிருந்து மேல் நோக்கி அப்பனே மின்சாரத்தை ,அதாவது கம்பி பத்தவில்லை, அப்பொழுது எப்படி நிச்சயம் தன்னில் கூட ,வாங்கி வந்து மீண்டும் இணைத்து அப்பனே எரிய வைப்பாய் அல்லவா பின் விளக்கை? அப்படி யோசி அப்பனே,இன்னும் அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் அப்பனே, பின் இன்னும் உன் மூளைக்கு வேலை கொடுத்தால் தான் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது தான் நீ எதை என்று புரிய புரிய நீ புரிந்து கொண்டு , உந்தனுக்கே நீ தலையை ஆட்டி அமைதி காது விடுவாய்.இதனால் அப்பனே நானும் சில கேள்விகள் கேட்பேன் அப்பனே, அதற்கு சரியான பதில்கள் கிடைத்து விடும் அப்பனே, இன்னும் சிறப்பான வாக்குகள் எல்லாம் உண்டு அப்பனே, நலன்களாகவே.
வாக்குரைக்கும் அடியவர்: அய்யா , அடுத்து வேறு என்ன கேள்விகள் ?
குருநாதர்:அப்பனே யான் தான் கேட்க வேண்டும் என்பேன் அப்பனே. அதாவது நிச்சயம் தன்னில் கூட முதலிலே சொல்லி விட்டான் அப்பனே, நிச்சயம் என்ன கேள்விகள் இருக்கின்றது என்று. அப்பனே நிச்சியம் தன்னில் கூட, மதுரை தன்னில் வாழும் மீனாக்ஷிக்கு என்ன செய்தாய் நீ ?
அடியவர்: நான் ஒன்றுமே செய்ததில்லை.
குருநாதர்: அப்பனே ஒருமுறை சென்று வந்து அப்பனே அனைத்து கேள்விகளையும் கேட்கலாமா என்னிடத்தில் கூறு? அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே, சூழ்நிலை நிச்சியம் தன்னில் கூட எதை என்று கூட அவளிடம் எடுத்துரை என்பேன் அப்பனே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் சமமாக உந்தனுக்கு இறங்குவாள் என்பேன் அப்பனே.ஏனென்றால் அப்பனே நிச்சயம் ஒரு பிறவியில் கூட நீ அங்கு பலமாக பூஜைகள் செய்து வந்தாய் அப்பனே.இதனால் ஒன்றும் நடக்கவில்லை என்று நிச்சியம் பொய் என்று வந்துவிட்டாய் அப்பனே.ஆனாலும் பின் மீனக்ஷி தேவி நிச்சயம் தன்னில் கூட , செல் , எப்பொழுதாவது வரத்தான் போகிறாய் என்று ,ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் உனக்காக காத்து கொண்டு இருக்கிறாள் அப்பனே ,வேண்டிக்கொள் அப்பனே.அப்பனே இப்பொழுது செல்வாயா என்ன ? கேள்வி தான் கேட்டேன் ? அப்பனே நிச்சயம் மற்றொன்றும் கூட,கல்யாண தீர்த்தத்தில் கூட ,எவை என்று கூற , அடிக்கடி நீராட வருவதாக நிச்சயம் தன்னில் கூட என்னிடத்தில் முறையிட்டு ,நிச்சயம் எதை என்று கூற ,பின் வேண்டுமானுலும் பின் அனைத்து விஷயங்களும் யான் பெற்று கொண்டேன்,பின் எப்பிறவி பிறந்தெடுத்தலும் பின் நிச்சயம் தன்னில் கூட வருவேன் என்று சத்தியம் செய்து விட்டாய் என்னிடத்தில்,வரவே இல்லை அப்பா? அப்பனே பின் அதேபோல் எதை என்று புரிய,இவ்வாறெல்லாம் பின் தெரியாததை வைத்து கொண்டு ,நிச்சயம் தன்னில் கூட தெரியாததை என்னிடத்தில் கேட்டால் எப்படி அப்பா ? அப்பனே பார்ப்போம் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றோம்! அப்பனே பின் தெரிந்ததை கேள்?
அடியவர் : குருநாதரிடம் ஒரு பிரார்த்தனை செய்த பொழுது
குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர்கள் நடத்தி கொள்வார்கள் அப்பனே. இப்பொழுது நீ எதற்காக இந்த கேள்வியை கேட்டாய் ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரவழைப்பதும் அவர்களே.அப்படி இருக்கையில் நிச்சயம் தன்னில் கூட , அவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறாய் ஏனப்பா ? அப்பனே நிச்சயம் எதை என்று அறிய , நிச்சயம் நீ வரவில்லை, யங்களே அழைத்து வந்தோம், அவ்வளுதான் என்பேன் அப்பனே.இதனால் அப்பனே உனது வேலையே செய் அப்பனே போதுமானது.அவர்கள் இறைவன், இறைவனை பார்த்து எதை என்று அறிய அதாவது அவர்கள் மிக பெரியவர்கள் அப்பா ,அவர்கள் காத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே,உன்னை நீ பார்த்துக்கொள் அப்பனே போதுமானது.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட , ஏன் சிரிப்பு வருகிறது அப்பா அனைவருக்கும் கூறுங்கள் ? அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அப்பனே,அப்பொழுது துன்பம் இருக்கின்ற பொழுது ,ஏனப்பா அழுகின்றோம்?
அடியவர் : பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும் பொழுது.
குருநாதர் : அப்பனே இல்லை அப்பா , இன்பம் அதிகமாகும் பொழுது அப்பனே துன்பம் வருகின்றது.அப்பனே இவ்வளவுதான்,இதற்கு ஆளானது சிந்தியுங்கள் என்பேன் அப்பனே.அப்பனே சிரிப்பதும் , அழுவதும், அப்பனே சிரிப்பு அதிகமாக போய்விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்ன செய்வது என்று தெரியாமல் பின் கண்ணீரில் அப்பனே பின் நிச்சயம் அதாவது கண் அப்பனே நீர் அப்பனே வந்து ஓடுகின்றது என்பேன் அப்பனே. இவ்வளவுதான் வித்தியாசம் என்பேன் அப்பனே.அப்பொழுது துன்பத்தில் தான் நீங்கள் சிரிக்கிறீர்கள் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.சரியான பதிலை கூறுங்கள் என்பேன் அப்பனே.யாரெல்லாம் அப்பனே , சித்தர்கள் யாங்கள் அப்பனே கரடுமுரடான நிச்சயம் பின் தன்னில் கூட தங்களுக்கு புரியாததை எல்லாம் புரிய வைத்து ,அப்பனே புரியாத கேள்விகளை எல்லாம் கேட்டு, அப்பனே உங்கள் மூளையை கசக்கி அப்பொழுது தான் நீங்கள் சிந்திப்பீர்கள் அப்பனே.அப்பொழுது தன பின் சில பாவங்கள் தொலையும் என்பேன் அப்பனே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,அதனால் அப்பனே எங்கள் பாதை எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நிச்சயம் உங்களை இயக்குகிறேன் நல்வழியாகவே.
அப்பனே நிச்சயம் அப்பொழுது எதை என்று அறிய , நிச்சயம் நீர் வராமல் இருக்க, இன்பத்தை கொடுக்க கூடாது என்பேன் அப்பனே.புரியுதா அப்பனே ? கூறுங்கள் அப்பனே இதற்கு பதில் ? அப்பனே நிச்சயம் கூறுங்கள் என்பேன் அப்பனே ? இவ்வாறாக அப்பனே அனைவரும் இன்பத்தை தாருங்கள் தாருங்கள் என்று பின் நிச்சயம் இறைவனிடத்தில் , அதாவது பின் இறைவன் பின் என்ன செய்வான் அப்பா நிச்சயம் தன் பிள்ளைகளை ? நீங்களே கூறுங்கள் அப்பா ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் நீங்கள் தான் துன்பத்தை கேட்கின்றீர்கள் என்பேன் அப்பனே, அது மறைமுகமாக. (மக்கள் இன்பத்தை கேட்பது முடிவில் துன்பத்தில் முடிகின்றது). அப்பனே நீங்களே கேட்டுவிட்டு அப்பனே துன்பத்தை அதிகமாக கொடுத்து விட்டால் , நிச்சயம் ஏனப்பா அவனிடத்தில் அழுகின்றீர்கள் ? அப்பனே அதனால் தான் அப்பனே மனிதனை இன்னும் அறிவில்லாதவன் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான பொருத்தம் அப்பனே மனிதன் அறிவில்லாதவன்.அணைத்து உயிர்களுக்கும் அனைத்தும் தெரிகின்றது அப்பனே,ஏன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ,பிள்ளைகளை தான் தான் போக்கில் கூட கடமைகளை செய்து கொண்டு கூட அப்பனே பின் நிச்சயம் விழுந்து கொண்டே இருகின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் தான் கடமையில் இருந்து தவறி விடுகின்றான் அப்பனே, அப்பொழுதுதான் அப்பனே .
அடியவர் : கடமை கடமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ? அதை கடனாக வைத்து விட்டு போனது சரி , ஆனால் என்ன என்ன கடனை வைத்து விட்டு போனது என்று தெரியாமலே? .....
குருநாதர் : நிச்சயம் தன்னில் கூட இருகின்றது அப்பா, அதனால் தான் அப்பனே ஒவ்வொரு பின் நிச்சயம் தன்னில் கூட மனிதரிடத்தில் கடன் பலமாக இருகின்றது அப்பா , அப்பனே அவ் கடன் அடையாமல் ,துன்பமும் நிச்சயம் அடையாதப்பா.அதனால் தான் அப்பனே பக்குவங்கள் ஒன்று வேண்டும். அப்பக்குவங்கள் மூலம் அக்கடனை அடைத்து விட்டால்,நீங்கள் கேட்கின்றீர்கள் அதனை யாங்கள் சுலபமாக கொடுத்து விடுவோம். கடனை அடைக்க முடியவில்லை அப்பனே. எப்படி அப்பா யாங்கள் தருவது ? இன்னும் அப்பனே தந்தால் கடன் தான் அதிகமாகும் உங்களுக்கு.
அடியவர் : சரி , நீங்களே ஒரு வழி சொல்லி இருக்கின்றீர்கள். எதுலேயும் பற்று அறுத்து இருந்து , அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து முன்னோக்கி போகணும்னு சொல்லி இருக்கின்றீர்கள். எனக்கு பாபமும் வேண்டாம் , புண்ணியமும் வேண்டாம் , எல்லாம் இறைவனே எடுத்து கொள்ளட்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் விடிவுகாலமே வரவில்லையே ?
குருநாதர் : அப்பனே பற்று அறுத்து இரு,எதன் மீதும் அப்பனே.நிச்சயம் அவ்வாறாக இருந்தால் இப்படி தான் அப்பா.
அடியவர் : அப்படி என்றால் கடன் தீந்து மனது நிம்மதியாக இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இல்லையே ?
குருநாதர் : அப்பனே நிச்சயம் எது என்று புரியும். அப்பனே அதாவது பல பிறப்புகளில் செய்த தர்மங்கள் , அதாவது பல பிறப்புகள் நிச்சயம் இவ்வான்மா அலைந்து திரிந்து, அப்பனே இறைவனை தேடி தேடி அலைந்தாலும் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,பல வழிகளிலும் கூட அப்பனே ,பின் இறைவனே இவ்ஆன்மாவை தேடி வருவானப்பா.இதனால் அப்பனே எதை என்று புரிய,அதனால் அப்பனே பல பிறவிகள் அப்பனே நீ எங்களை சுற்றி வந்துள்ளாய் அப்பா.எதை என்று புரிய அப்பனே,இதனால் எது என்று அறிய பல பிறவிகளில் நீ பிறந்திட்டு நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அதாவது எங்களிடத்தில் கூட அண்ணாமலையில் வந்து அடுத்த பிறவி என்று வந்தால், யாங்கள் அதாவது நிச்சயம் யான்,உங்களை தேடி வருவதில்லை ,அதாவது நிச்சயம் எதை என்று கூற ? இறைவனை தேடி யான் வர மாட்டேன் என்று , என்னை தேடி வாருங்கள் என்று கர்வமாக கூறி விட்டு சென்றவன் தானப்பா நீ.அதனால் தான் அப்பனே ஏதோ ஒன்று பிள்ளை தெரியாமல் சொல்லிவிட்டு வந்துவிட்டான் கோபத்தோடு என்று அப்பனே யாங்கள் பரிசுத்தமாக சந்தோஷமாக வந்து ,பின் உங்களை காத்துக் கொண்டிருக்கிறோம் ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.இன்னும் அப்பனே இவை அப்பனே நிச்சயம் பூஜ்யம் தான் அப்பனே சதவீதம் என்பேன் அப்பனே ,இன்னும் வாக்குகள் வருகின்ற பொழுது தெரிந்து கொள்வாய் அப்பனே,அதனால் அப்பனே இவ்வான்மா அப்பனே எதற்காக வந்தோம் , எதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டால் அப்பனே பிறவி கடன் தீருமப்பா. இல்லை என்றால் அப்பனே பிறவி கடனும் முடியாதப்பா.தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அப்பனே.அதனால் அப்பனே சில வழிகளிலும் கூட அப்பனே நன்மைகளை செப்பி இவ்வாறு செய்தல் ஞானம் வந்துவிடும். அவ் ஞானத்தின் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டு, அப்பனே எதற்காக தான் வந்தோம் என்று தெரிந்து நிச்சயம் தன்னில் கூட பிறவி பெருங்கடலை நெருங்கி அப்பனே அழகாக இறைவனிடம் இவ் ஆன்மா சரண் அடைந்து விடும்.அப்படி இல்லை என்றால் எவ்வளவு மந்திரங்கள் எவை என்று அறிய பரிசுத்தமாக திருத்தலங்கள் சென்றாலும் நிச்சயமாக இவ்ஆன்மா முழுமை பெறாது,கஷ்டங்களும் தீராதப்பா சொல்லிவிட்டேன்.
அடியவர்: அப்படி என்றால் நீங்கள் இவ்வளவு கோவில்களுக்கு போ என்று சொல்லும் போதெல்லாம், விடுதலை என்ற ஒரு நிவாரணம் இல்லை என்கிறது கர்மா ?
குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று அறிய அப்பனே , அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே ,அதாவது நீ உயர்வான பின் இடத்தில் அப்பனே உயர்பதவியில் வகிக்க வேண்டும் என்றால் அப்பனே ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ,மூன்றாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு என்றெல்லாம் நிச்சயம் படித்து வந்தால் மட்டுமே அப்பனே, யான் ஒன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டேன் , நீ எனக்கு அப்பனே எனக்கு பெரும் பதவி வேண்டும் என்றால் எப்படி அப்பா ? கூறு அப்பா ?
அடியவர் : நான் பதவியே கேட்கவில்லை.புகழை கேட்கவில்லை , பொருளை கேட்கவில்லை,பொன்னை கேட்கவில்லை , எதையுமே கேட்கவில்லை.
குருநாதர் : அப்பனே ஒன்றை கேட்கிறேன் அப்பனே உன்னை பார்த்து? நீயே மருத்துவரிடம் செல்கிறாய் அப்பனே, அதாவது அவர்களும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது இவை, அதாவது ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொள் நன்றாகிவிடும் என்று ஏன் சொல்வதில்லை ? என்று அப்பனே ? இதை நீ நிச்சயம் கூற வேண்டும் அப்பனே.
அடியவர் : இன்றைய மருத்துவர்கள் பிழைப்புக்காக தொழிலாக நடத்துகிறார்கள், உண்மையாக குணப்படுத்த வேண்டும் என்று ...
குருநாதர் : அப்பனே அதுபோலத்தான் அப்பனே பிழைப்புக்காக ஒரு முறை சென்று வருகிறார்கள் இறைவனை தேடி தேடி அவ்வளவு தான் என்பேன் அப்பனே. இறைவன் எப்படி அப்பா ? இறைவன் பாவம் அப்பா,உண்மையான அன்பை செலுத்தி சென்று கொண்டு இருந்தாலே நலன்கள் ஆகும் அப்பா. இன்னும் மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் இருக்கும் அப்பா மனிதனுக்கு. மனிதன், அவனுக்கு கலியுகத்தில் அனைத்தும் கொடுத்திருக்கிறான் இறைவன், பின் சரியாக பயன்படுத்தி பிழைத்து கொள் என்று, ஆனால் சரியாய் வாழ அப்பனே தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பா. இதனால் தான் அப்பா யாங்கள் பரிதாபப்படுகிறோம், உன்னிடத்தில் அனைத்து திறமைகளும் இருக்கிறது , அதையெல்லாம் முதலில் எடுத்து வா என்றெல்லாம் பின் ஏங்கி, எவை என்று சொல்லி சொல்லி கொண்டிருக்கிறோம் அப்பனே. அப்பனே ஆனால் இதில் திருந்துபவர்கள் சிலரே என்பேன் அப்பனே, போதும் என்பேன் அப்பனே.அச்சிலர்கள் திருந்தி ஏறக்குறைய அப்பனே ,பல நன்மைகளை அப்பனே போய் செய்வார்கள் அப்பனே.
பக்குவங்கள் அடைந்தவர்களை யாங்கள் அழைத்து சென்று மேலிடத்தில் சென்று வைப்போம் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறு மேலிடத்தில் வைத்து பல நன்மைகள் செய்ய வைப்போம் அப்பனே. போதும் அப்பா அனைத்தும் எதை என்று கூற, எவை என்று கூற அதிக புண்ணியங்கள் இருக்கின்றதோ அவனை அழைத்து வந்து, எங்களிடத்தில் அழைத்து வந்து பல வகைகளிலும் கூட உண்மையை சொல்லி யாங்கள் நல்முகமாக வெற்றிகள் கொடுத்தால் போதுமானதப்பா. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல கோடி அப்பனே இன்னும் அப்பனே ஆயிரக்கணக்கில் அப்பனே எவை என்று அறிய எதை என்று புரிய.மின் அன்பும், மிகுந்த அன்பு கூட எதை என்று அறிய அப்பனே , கொடு அப்பனே , மின் அன்பும் கூட எதை என்று பொறுத்தே அமைகின்றது (மின் அன்பு என்றால் சொல்ல முடியாத அளவுக்கு மக்களை திருத்தி விடலாம் என்று சொல்லுகிறார் குருநாதர்). அப்பனே இவ்வுலகத்தில் என்று அறிய அப்பனே, எவை என்று அறிய அப்பனே மனிதர்கள் பிறக்கிறார்கள் அப்பனே , நீ மட்டும் ஏன் அப்பா இப்படி உள்ளாய் அப்பா?
அடியவர் : ஏனென்றால் நம்பி நம்பி முன்னாடி ஓடிஓடி , கடைசியில் ஓடுவதற்கு எதுவும் இல்லாமல் ,உடம்பில் சக்தியும் இல்லாமல் இந்தளவுக்கு செய்து உட்கார வைத்திருக்கிறீர்களே ?
குருநாதர் : அப்பனே நிச்சயம் ஒன்றை சொல்கிறேன் அப்பனே. வாகனம் ஓடுகிறது அப்பனே, ஏன் அப்பனே அதில் எது என்று அறிய சக்கரம் , எவை என்று சுற்றி சுற்றி பின் அவை தேய்ந்து மற்றவர்களை பின் புண்ணியத்தை சேர்க்க வைக்கிறது அப்பனே. மற்றவர்களை பத்திரமாக அழைத்து சென்றுள்ளது. அதுபோலத்தான் அப்பனே புண்ணிய ஆத்மாக்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.இதில் நீ புண்ணிய ஆன்மாவா ? பாவ ஆன்மாவா ?
அடியவர் : இதற்கு தான் நான் புண்ணியமும் வேண்டாம் , பாவமும் வேண்டாம் என்று கேட்கிறேன்.
குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நீ கேட்டுவிட்டால் நாங்கள் கொடுத்து விடுவோமா என்ன அப்பனே ?
அடியவர் : நான் எதுவுமே கேட்கவில்லையே ?
குருநாதர் : அப்பனே அப்பொழுது கேட்டுவிடாதே என்பேன் அப்பனே. கேட்டுக்கொண்டே இருந்து அப்பனே பின் கேட்காமல் அப்பனே இருந்து வாய்தான் தான் சொல்கின்றது அப்பனே.
அடியவர் : நான் எந்த ஒரு பொருளும் , பதவியும் கேட்கவில்லையே ?
குருநாதர் : அப்பனே நிச்சயம் அவ்வாறு தான் என்பேன் அப்பனே.உயிரில்லாத பொருள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது இருக்கின்றது. அது தானாகவே வந்தடைகிறது? நிச்சயம் மனிதன் போய்த்தான் இதை எடுத்து, நிச்சயம் இதை உபயோகித்தால் இதை நிச்சயம் தன்னில் நன்றாக இருக்கும் என்று , எப்படி அப்பா? இதுபோல அப்பனே நிச்சயம் தன்னில் கூட,நினைத்து பாருங்கள் அப்பனே , அனைவரும் இவந்தனுக்கு சொல்லுங்கள்.
அடியவர் : நான் கேட்பது ஒன்று தான் என்னை இயல்பாக இருக்க விடுங்கள் .
குருநாதர் : அப்பனே அதெல்லாம் முடியாதப்பா.
வாக்குரைக்கும் அடியவர்:அய்யா நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். இறைவன் என்ன செய்கிறார் என்றால் வேண்டாம் என்று வைத்து விட்ட மின் விசிறியை திரும்பவும் மாட்டி மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று, புண்ணிய பாதைக்கு அழைத்து செல்ல உதவுமாறு பயன்படுத்துகிறார். (அங்கிருந்த அனைத்து அடியார்களுக்கும் சிரிப்பலை !)
குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து கடவுளின் வழியிலும் கூட சித்தரிடத்தில் பல வழியிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றவன் தான் நீ என்பேன் அப்பனே. அதனால் தான் உன்னிடத்தில் வந்து நிச்சயம் வாக்குகள் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட
அடியவர்: இந்த உடம்பில் உயிர் இருந்து ஓரளவுக்கு சக்தி இருந்தது என்றால் நான் எழுத்து நின்று விடுவேன்.
குருநாதர்:அப்பனே நிச்சயம் எது என்று அறிய அறிய, அப்பனே நிச்சயம் யாங்கள் கொடுத்திருக்கிறோம் அப்பனே. அப்பனே மின்கலத்திலும் கூட எவ்வளவு மின்சாரம் வேண்டும் என்று கூட,யாங்கள் அறிவோம் அப்பனே.
வாக்குரைக்கும் அடியவர் : பேட்டரி இல் எவ்வளவு சார்ஜ் இருக்கு என்று எங்களுக்கு தெரியும் என்று சொல்லுகிறார். அவ்வளவு சார்ஜ் நாங்கள் கொடுப்போம் என்று சொல்லுகிறார்.
குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட யூகித்து பார் அப்பனே.அப்பனே 100 சதவீதம் இருந்தால் அப்பனே நீ கையில் எடுக்கின்றாயே அதை பார்ப்பாயா அப்பனே? 20 சதவீதம் இருந்தாலும் நீ பார்ப்பாய் அல்லவா அப்பனே? அதே போலத்தான் அப்பனே. அனைத்தும் பழகி பின் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே.
வாக்குரைக்கும் அடியவர் :100 % இருந்தால் தான் நீங்கள் செல்போன் பார்ப்பீர்களா ? 20 % இருக்கும் போதும் நீங்கள் பார்ப்பீர்கள் அல்லவா ? அதனால் அவர்களுக்கு என்ன சார்ஜ் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.நாங்கள் சார்ஜ் செய்வோம் என்கிறார்.
குருநாதர் : அப்பனே எதை என்று புரிய அப்பனே,இதனால் அப்பனே கிரகங்கள் பின் எப்படி இயங்குகின்றது அப்பனே,நிச்சயம் எதை என்று கூற , நிச்சயம் அப்பனே யாங்கள் அப்பனே உங்களை பின் கேள்விகள் கேட்க போகின்றோம் அப்பனே. இதனால் கிரகங்கள் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.எத்தனை எத்தனையோ அப்பனே பின் எவை என்று கூற, எதை என்று கூற எவை என்று புரிய.
அடியவர் : மனிதன் பெயர் வைத்தது 9 அல்லது 10 கிரகங்களுக்கு தான் பெயர் வைத்திருக்கிறான். மற்றவையெல்லாம் என்ன என்னமோ பெயர் வைக்கிறான். அது என்னமோ பாதிக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
குருநாதர் :அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அப்பனே,மனிதனை பார்த்து ஒருவன் கேட்கிறான் இவன் பெரிய கிரஹமடா என்று. அதற்கு என்ன அர்த்தம் ?
அடியவர் : அவ்வளவு மோசமானவர் என்று அர்த்தம்.
குருநாதர் : அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் அதாவது கிரகங்கள் தான் அப்பனே மனிதனை ஆட்டுகின்றது என்பேன் அப்பனே.இதனால் பல கிரகங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே,ஆனால் மனிதன் என்னவோ 9 என்று 9 என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்,ஏன் அதனை அப்பனே ?
அடியவர் : ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகம் பற்றி மட்டும் சொல்லியதால் ஜோதிடர்கள் அதை சொல்கிறார்கள்.
குருநாதர் : அப்பனே நிச்சயம் இன்னும் ஜோதிட புத்தகங்கள் இன்னும் மறைந்து காணப்படுகிறது என்பேன் அப்பனே.நிச்சயம் யாங்கள் இன்னும் தெளிவுரைகள் இன்னும் அப்பனே பல வழிகளிலும் எழுதி வைத்திருக்கிறோம் அப்பனே. ஆனால் அவை நிச்சயம் தன்னில் கூட பின் பக்தர்கள் எடுத்து வருவார்கள் என்று பல பல கோடி ஆண்டுகள் பார்த்துவிட்டோம் அப்பனே.நிச்சயம் தன்னில் கூட யாராலும் எடுக்க முடியவில்லை ஏனப்பா ?
அடியவர்:ஏனென்றால் நீங்கள் கொடுப்பதற்கு தயாராக இல்லை. எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கிறீர்கள்.
குருநாதர் : அப்பனே நிச்சயம் கொடுத்து விடலாமே என்ன ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட காசாக்கி விற்றுவிடுவானப்பா. அதை நிச்சயமாக எடுத்து நல்வழிக்காக பயன்படுத்த வேண்டும். அதாவது நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு காசுகள் தேவை இல்லை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அதாவது இலவசமாக இறைவன் வாழ்வதற்கு காற்றை தந்திருக்கிறான் அப்பனே, இன்னும் பல வகையிலும் கூட எதை எதையோ கொடுத்திருக்கிறார் அப்பனே, அப்பனே நிச்சயம் எங்களை நம்பி வந்துவிட்டால் இதேபோலத்தான் அப்பனே,சேவைகள் செய்ய வேண்டுமே தவிர காசுகள் எடுத்து அப்பனே நிச்சயம் காசுக்காக. அப்பனே சொல்லுகின்றான் பலபேர் அப்பனே, நான் நிச்சயம் தன்னில் கூட அகத்தியனுக்காக பூஜை செய்கிறேன், மாலை போடுகிறேன், நிச்சயம் தன்னில் கூட சந்தனத்தை வாங்க வேண்டும் என்று கூட, எதையுமே நாங்கள் கேட்கவில்லை அப்பா, அன்பை மட்டும் செலுத்துங்கள் என்று, ஆனாலும் அப்பனே உண்மை பக்தனுக்கு மட்டும் தான் எங்களை பற்றி தெரியும் அப்பா. அது மட்டுமில்லை புண்ணியங்கள் பல பிறவிகளிலும் கூட பல பல வழிகளிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே எங்களை நிச்சயம் தன்னில் கூட காணவும் முடியும் , நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் நாங்கள் சொல்வதை கேட்கவும் முடியும். அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் பாவ கணக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதனால் தான் அப்பனே, அப்பனே அப்பனே என்று செல்லமாக கருணை வடிவமாக அணைத்துக் கொண்டு இருக்கின்றேன், வேண்டாமப்பா என்றெல்லாம் அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDelete