​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 30 September 2025

சித்தன் அருள் - 1945 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தரின் காசி வாக்கு!





 15/6/2025 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மீர்காட் கங்கை கரை.காக்கும் சிவன் காசி.

ஆதி நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவனே!!!

அறிந்தும் இன்னும் பல பிறவிகள் மனிதன் எடுத்தாலும்.. அதனைப் பற்றி உணர்வதில்லை. 

அதனால்தான் சித்தர்கள் வந்து நிச்சயமாய் பின் பிறவியை முடித்துக் கொள்ளுங்கள் முடித்துக் கொள்ளுங்கள்... அதாவது புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் பின் கூறிட்டு கூறிட்டு!!

ஆனாலும் மனிதன் தன் போக்கிலே போயிட்டு அனைத்தும் இழந்து மீண்டும் இறைவன் பாதையை பின் வந்தடைகின்றானே!!...

நிச்சயம் இதுதான் பின் அறிவா?????

நமச்சிவாயன் கொடுத்த பின் அறிவா???

அறிவின் பயனை என்னவென்று சொல்வது???

அறிந்தும் யான் இதைத்தான்.. அறிந்தும்... ஆனாலும் பின் இப்படியே இப்படியே காலங்கள் செல்லச் செல்ல அழிவுகள் எதனால் என்பதை எல்லாம் புதுப்புது அழிவுகள் எதற்கு? ஏன்? 

ஏனென்றால் இறைவன் இருக்கின்றான் என்று காட்டுதல்!!

அதாவது வேண்டும் நிச்சயம். 

இதனைத் தான் நிச்சயம் இறைவன் உணர்த்தி வைப்பான். 

அப்படி உணர்த்தினால் மட்டுமே மனிதனுக்கு பயம் தோன்றும். 

இறைவன் இருக்கின்றான் நிச்சயம் அதாவது பின் தவறுகள் செய்தால் அறிந்தும் நிச்சயம் தண்டனைகள் கொடுப்பான் என்று நிச்சயம்.. இக்கலியுகத்தில் பின் உணர வேண்டும்.

ஏன்? எதற்கு? அறிந்தும் நிச்சயம் பின் சித்தர்கள் சொல்லிச் சொல்லி அதாவது... கலியுகம் என்பதன் பொருள்..அழியுகம்.

நிச்சயம் இக்கலி யுகத்தில் அனைவருமே பின் துன்பங்களோடு தான் வாழ்வார்கள்.

துன்பங்களோடு தான் பிணைத்து வாழ்வார்கள்.

இன்பம் இறைவன் கொடுத்தாலும் அதை அதை ஏற்றுக்கொள்ளும் சக்தி மனிதனிடத்தில் இல்லை.

இதனால் நிச்சயம் பின் இவை அறியாமல் இருந்தாலும்...அதை அத் தத்துவத்தை இறைவன் புகுத்தி புகுத்தி நிச்சயம் வெற்றிகளை தர வெற்றிகளை தர இன்னும் ஆழ்ந்த மனதோடு தியானங்கள் செய்ய அதற்காகவே ஓர் சித்தன் பின் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!

அச் சித்தன் எங்கு? ஏது? மர்மமாக ஒளிந்து இருப்பான். 

அனைத்து பின் ஜீவசமாதிகளுக்கும் சென்று கொண்டே இருப்பான். 

நிச்சயம் அறிந்தும் ஏன்? எதற்கு? ஒவ்வொரு பின் ஜீவ சமாதிக்கும்..எவ்? நேரத்தில் பின் செல்லுதல் அவசியம் என்பவை எல்லாம்! 

அவ்வாறு சென்றடைதல்... ஒவ்வொரு ஆன்மாவிற்கும் நிச்சயம் என்ன பிடிக்கும்? என்பவை எல்லாம் பின் அகத்தியன் சொல்லி பக்குவங்கள் ஏற்படுத்தி பின் நிச்சயம் அதை எடுத்துச் சென்றால் அவன் ஆன்மா மகிழ்ந்து! மகிழ்ந்து! 

ஆனாலும் அனைத்து ஞானிகளுக்கும் பின் பிடித்தது ஒன்றே!!

"""அன்னத்தை அளித்தல்!!!...

(அன்னதானம்)

பரிபூரணமாக!!!... பின் நல் மனதை ஏற்படுத்துதல்.

நல் மனதை ஏற்படுத்தி பின் உண்மையை கூறுதல். 

போட்டி பொறாமையை நீக்குதல். 

ஞானங்கள் அதாவது அனைத்திற்கும் பின் காரணங்கள் பின் அறிந்தும்.. ஆசைகள்.

இதனால் அவ்வாறாக இல்லை என்றாலும் நிச்சயம் அறிந்தும் அமைதி காத்தல். 

இதனையே  அனைத்தும் பின் ஞானிகள் உணர்ந்திருந்து!! உணர்ந்திருந்து!!

இதனால் யாம் என்ன? ஏது? செய்ய?...

அதனால் நிச்சயம் தன்னில் கூட நமச்சிவாயனும் அறிந்தும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்க ! கொடுத்துக் கொண்டே இருக்க! 

கலியின் நிச்சயம் தன்னில் கூட காலம் முற்றிக் கொண்டே!! முற்றிக்கொண்டே!!

முற்றிக்கொண்டே வருகின்ற பொழுது நிச்சயம் துன்பத்தோடு தான் வாழ்வான். 

அதற்காகத்தான் சித்தர்கள் பல வழிகளிலும் தோன்றி நிச்சயம் வாக்குகள் செப்பி செப்பி... அதை பயன்படுத்த நன்று என்று சொன்னால்..

ஆனாலும் நிச்சயம் அதையும் கூட மனிதன் பொய்யாக்குகின்றான். 

அதாவது சித்தர்கள் சொன்னார்களே!!!... உண்மையை பின் பொய்யாக்குவான்! 

பொய்யை உண்மையாகுவான். 

கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் பொய்களாகவே 

கலியுகம் பொய்யுகம் என்பதை எல்லாம் அறிந்ததே!!

இங்கு நியாயத்தையும் தர்மத்தையும் எதிர்பார்க்க முடியாது!!

இதனால் இறைவன் கடுமையான தண்டனைகள் கொடுத்தால் அனைவரும் அமைதியாகி விடுவார்கள். 

நிச்சயம் பின் கொடுக்கத்தான் போகின்றான்...

நிச்சயம் அமைதி மனிதன் ஆகத்தான் போகின்றான்... நிச்சயம் உணரத்தான் போகின்றான்... நம்மால் பின் ஏதும் முடியாது என்று!!

அப்படி இறைவன் நிச்சயம் அறிந்தும் பின் நிச்சயம் பின் புரிந்தும் பின் தண்டனைகள் பல பல! 

அதாவது தண்டனைகள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் மனிதன் திருந்துவான். 

ஆனால் மனிதனோ இன்பங்களாக வாழ வேண்டும்!!

இறைவா அனைத்து துன்பங்களையும் களைய வேண்டும் நீதான்.. உத்தரவு அதாவது ஆசிகள் கொடுக்க வேண்டும்.. என்றெல்லாம் இறைவனிடத்தில் பின் சென்று!! சென்று!! வழிபட்டாலும் நிச்சயம் அறிந்தும் பின் அதாவது இறைவன் தர மாட்டான். 

ஏன்? எதற்கு? என்றால் நிச்சயம் உன் எண்ணத்தை அதாவது பின் மேன்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம்... பல சித்தர்கள் நிச்சயம் ஞானிகள் சொல்லிவிட்டனர்.

அவ் மனதை பின் உயர்வாக நிச்சயம் பின் வைத்துக் கொண்டால் அறிந்தும்.. இறைவனே உங்களிடத்தில் வருவான் இக்கலி யுகத்தில்!!

நிச்சயம் பல யுகங்களாக யான் பார்த்திட்டேன்!!

பல ஹோமங்கள் நிச்சயம் மந்திரங்கள் நிச்சயம் பரிசுத்தமான எதை எதையோ செய்து கொண்டு இறைவனை தேடி தேடி அலைந்தார்கள். 

ஆனால் கலியுகத்தில் உண்மையான பின் பக்தியும் அன்பும் கருணையும் நிச்சயம் இருந்தால்... அதோடு நல் மனதும் இருந்தால் பின் இப்படிப்பட்டவன் ஒருவனா? என்றெல்லாம் நிச்சயம் இறைவன் வந்து உங்களை ஆசீர்வதித்து நிச்சயம் மேலே அழைத்துச் செல்வான். 

மேலே அழைத்துச் செல்வான் என்பதை எல்லாம் நிச்சயம் உயர்வான இடத்தில் வைத்து நிச்சயம் அழகு பார்ப்பான்...

இதுதான் நிச்சயம் உண்மை. 

இதனால் இறைவனை தேடுங்கள் தேடுங்கள்.. ஆனால் கிட்டி விடுவானா??? என்ன!! இறைவன்!!

பைத்தியக்கார மனிதனே அறிந்தும்!!

ஆனாலும் எதை? யான்!! எதற்கு? சொல்கிறேன்.. நிச்சயம் தன்னில் கூட தந்தையானவன் ஒரு பிள்ளையை திட்டி தீர்த்தால்தான் புத்திகள் வரும்.

அதேபோலத்தான் பிள்ளைகளாகிய உங்களை.. நிச்சயம் திட்டி தீர்த்தால் மட்டுமே!!

பின் நிச்சயம்.

அவ்வாறாக பின் திட்டி தீர்த்தாலும் திருந்தவில்லை என்றால் நிச்சயம் தண்டனைகள்.. அதிகமாகும். 


இவ்வாறு தண்டனைகள் அதிகமாக அதிகமாக... நிச்சயம் மனிதன் திருந்துவான். 


அவ்வாறு தண்டனைகள் குறைய குறைய... நிச்சயம் யான் தான் பக்தன்!!

யான் இறைவனின் சேவகன்!!.. என்றெல்லாம்!!


அதாவது கலியுகத்தின் எப்பொழுது? முற்றிய காலம் தொடங்கும்? என்பதை எல்லாம் நிச்சயம் அதாவது மனிதனை தெய்வமாக எண்ணுவார்கள்! 


இதை தன் எப்படி?? அதாவது மனிதனுக்கு பூசைகள் பின் அபிஷேகங்கள் நடக்கும்! 

நிச்சயம் மனிதனை வணங்குவான் மனிதனே!!!


இதெல்லாம் எப்பொழுது நடக்கின்றதோ? 

அப்பொழுது கலியின் முற்றிய காலம் பின் தொடங்கிவிட்டது. 


எப்பொழுது பின் மனிதனுக்கு அபிஷேகங்கள் பின் மனிதனுக்கு பல ஆராதனைகள் செய்கின்றார்களோ!?!? 


அப்பொழுதே அழிவுகள் தொடங்கிவிட்டது!!


ஏனென்றால் மனிதன் மனிதன் தான். 

நிச்சயம் இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் ஒரே அறிவைத்தான் நிச்சயம் கொடுத்து அனுப்புகின்றான். 


ஆனால் மனிதனோ அவ் அறிவை பயன்படுத்திக் கொண்டு... நிச்சயம் பொய்களாக்கி திரிந்து கொண்டிருக்கின்றான்.. வேடங்களாக அணிந்து...


யாம் எதையும் ஏற்கப்போவதில்லை.. நிச்சயம் தன்னில் கூட...


யான் ஈசனின் நண்பன்!!... இன்னும் இன்னொருவன் பார்த்தால் நிச்சயம் தன்னில்... எந்தனுக்கு ஈசனையே தெரியும் என்பது...


அப்பப்பா!!... கலியுகத்தில் இப்படி.. அதாவது பக்திகள் பொய்யாக வேண்டும் என்பதை கூட!!! கலியின் கட்டாயம்!!


அதாவது கலியுக புருஷனின் கட்டாயம். 


இதனால் நிச்சயம் கலி அதாவது நிச்சயம் தன்னில் கூட கலியின் காலம் நிச்சயம் தன்னில் கூட கையில் இருப்பதால் !! எங்கு? இங்கு!! ஒழுங்காக வாழப்போகின்றான்?? மனிதன்!!


நிச்சயம் பின் எங்கள் பேச்சைக் கேட்டால் பிழைத்துக் கொள்வார்கள். 


ஆனாலும் கலியும்  அதாவது கலியனும் (கலிபுருஷன்)கொடுப்பான்!!.... ஆனாலும்.. நிச்சயம் கடைசியில் பின் இப்படியே நின்று விடு. 


நீ!! இறைவனால் படைக்கப்பட்டவன்!!

இதனால்  பின் என் பின்னே வந்தாய் அல்லவா!!!

நிச்சயம் அறிவுகள் இறைவன் கொடுத்தான் அல்லவா!!

அதை நீ பயன்படுத்தி கொள்ளவில்லை.. அப்படியே நின்று விடு! என்று நிச்சயம் நடுக்காட்டில் விட்டு விடுவானப்பா. 


இதனால் அப்பனே மீண்டும் துன்பங்களோடு துன்பங்களோடு...


இதனால் நிச்சயம் பின் நல்லோர்கள் எல்லாம் தீயோர்கள் ஆவார்கள்!!

தீயோர்கள் எல்லாம் இறைவன் நல்லோர்கள் ஆக்குவதற்கு நிச்சயம் ஏன் எதற்கு என்றெல்லாம். 


இதனால் எதை புரிந்து கொள்ள நிச்சயம்.. கலியுகத்தில் நிச்சயம்.. கலியின் காலம் தான் பின் கை ஓங்கி நிற்கும்!!!


அவ் கையை நிச்சயம் பின் கீழ் இழுக்க நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம். 


இதனால் மனிதன் இன்னும் வாழ்க்கையைப் பற்றி பின் நிச்சயம் தெரிந்து கொள்ளவே இல்லை. 



அவை தெரிந்து கொண்டால்... எங்கு பிரச்சனை வரப்போகின்றது??


நிச்சயம் துன்பம் இல்லாமல் வாழலாம். 


ஆனாலும் நிச்சயம் மனிதன் எவ்வளவு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை கலியுகத்தில். 


ஏனென்றால் நிச்சயம் மனிதன் ஒரு சோம்பேறி... எதைச் சொன்னாலும் நிச்சயம் பின் அதை அதாவது பணத்திற்காக இவ் மந்திரத்தை சொன்னால் பணம் வரும் என்பது!!


நிச்சயம் பின் அவ்வாறு இவ்வாறு செய்தால் நிச்சயம் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும் என்பது. 

நிச்சயம் இவ்வாறு செய்தால் தொழில் வந்துவிடும் என்பது. 

இவ்வாறு செய்தால் பின் திருமணம் நடந்து விடும் என்பது!!!


நிச்சயம் ஆனால் மனிதன் மனிதன் கணக்கு இட்டுக் கொண்டே இருக்கின்றான். 


ஆனால் இறைவன் இட்ட கணக்கு நிச்சயம் பின் எப்பொழுதும் பின் மாற்றவும் இயலாது.. மனிதனாலும் கூட..


ஏனென்றால் மனிதன் சொல்லலாம் அவை நடக்கும் இவை நடக்கும் என்று!!!


ஆனாலும் உண்மையைக் கூட எடுத்துரைத்தால் நிச்சயம்... ஆனாலும் மனிதன் சொல்லலாமே.. யானே தடுக்கின்றேன் என்று!!


முடியவில்லையே!!


நிச்சயம் அவ்வாறு பின் அறிந்தும் கூட... வாயால் மட்டுமே!!!


இதனால்தான் பின் யாங்களும் சொல்வதில்லை... எங்களால் பின் நிச்சயம் அனைத்தும் தடுக்க முடியும்..


இறைவன் கோபப்பட்டாலும் நிச்சயம்... உலகம் தலைகீழாகவே....

ஆனாலும் தடுத்துக் கொண்டிருக்கின்றோம். 

பின் ஏதோ ஒரு ரூபத்தில் அனைவரையும் சித்தர்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் நலமாகவே. 


இதனால் நிச்சயம் இன்னும் ஒரு சக்தி ஏன்? எதற்கு? இன்னும் பலங்கள் காசி தன்னிற்கு... ஏற்பட்டது என்று பின் இங்கு விவரிப்பேன்.


அதாவது பின் விஷ்ணு பக்தன்.. ஒருவன் இருந்தான். 


அதாவது அறிந்தும் பின் இப்பொழுது  மலையில் ஏழுமலையில் (திருப்பதியில்)


அவ்வாறாக.. அவனையே நினைத்து நினைத்து... நினைத்து நினைத்து உருகி கொண்டு உருகி கொண்டு!!


இதனால் பின் விஷ்ணுவோ... இன்னும் அதிகமாக அதிகமாக பின் தண்டனைகள்... தண்டனைகள் என்று சொல்லப் போவதில்லை இதை.. நிச்சயம் துன்பங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தான்... நிச்சயம் பார்ப்போம்... இவன் நம் தன்னை நம்பி விடுகின்றானா??.. இல்லை பின் கடைசியில்.. அதாவது பாதியில் விட்டு செல்கின்றானா??.. என்று!! மீண்டும் பல அதாவது... அவனுக்கு உண்ணுவதற்கு உணவு கூட கிடைக்கவில்லை. 

பல பிரச்சினைகள் பின் வந்தது.. வீழ்ந்தது எதை என்று புரியாமலும் துன்பத்திலே... ஆழ்ந்து ஆழ்ந்து!!!


இன்னும் எப்படி எல்லாம் துன்பம் கொடுக்க வேண்டுமோ!? அப்படியெல்லாம்... அதாவது நம் தனை வணங்க கூடாது... நம் தன் மேல் பின் அதாவது.. வெறுப்பு ஏற்பட வேண்டும்... என்றெல்லாம் அறிந்தும் கூட பின்!! விஷ்ணு அவன். 


இதனால் நிச்சயம் ஆனாலும் நிச்சயம் அவனோ!? பின் விடவில்லை விடவில்லை!!! பின் அதாவது... நாராயணா நாராயணா என்றெல்லாம்!!!

மீண்டும் அறிந்தும்!!



ஆனாலும் தேவர்களும் இந்திரர்களும் இன்னும் ஏனைய ஞானியர்களும் கூட...ஏன்??? விஷ்ணு பகவான்...இவ் நிலைக்கு வந்து விட்டான்???


தன் பக்தனை இவ்வாறு சோதிப்பதா???? என்றெல்லாம் நிச்சயம் அனைவரும் இந்திரனும் கூட பின் தேவர்கள் கூட நிச்சயம்.. விஷ்ணுவிடத்திற்கு வர!!


 பின் நிச்சயம்...

இறைவா!!!... இவையெல்லாம் பின் சாத்தியம் இல்லை... அதாவது உன் பக்தன்... ஏழை பக்தன் ஒருவன் இருக்கின்றான் அல்லவா... நிச்சயம் இவந்தனக்கு இவ்வளவு கஷ்டங்களா???

கடைசியில் இவந்தனுக்கு பின் நோய்களும் ஏற்படுத்தி விட்டாய் அல்லவா..

நிச்சயம் இவ்வாறு...

எப்படி பிழைப்பான்?? இவன்!


ஆனாலும் நிச்சயம் இது தவறு என்றெல்லாம்!!


ஆனாலும் பின் விஷ்ணுவோ.... இவன் என் பக்தன். 

சோதிப்பது என் கடமை. 

ஏன்? எதற்கு? என்றெல்லாம் முடிவில் தெரியும்! 


ஏன் ?எதற்காக? இவனை சோதிக்கின்றேன்?... என்றெல்லாம் நீங்கள் முடிவில் உணரத்தான் போகின்றீர்கள். 


அதனால் என்னை யார் தடுத்தாலும்... நிச்சயம் தன்னில்... அறிந்தும் கூட... இவந்தனுக்கு கஷ்டங்கள் தான் கொடுப்பேன் என்று!!!


ஆனாலும் பத்மாவதி தாயாரும்... நிச்சயம் பின் வந்து... அறிந்தும் நிச்சயம்... விஷ்ணு எதை என்று புரிய.. அமைதி காத்தாள்!!!


ஆனாலும் மீண்டும் மீண்டும்... அடித்தான்... ஆனாலும் பின் அனைத்தும் தாங்கினான்... இதனால் பின் பைத்தியக்காரனாகவே.. அவனை ஆக்கிவிட்டான் விஷ்ணுவே!!!


அறிந்தும் அப்பொழுதும் பின் சென்று பிச்சைகள் ஏந்தி அறிந்தும் நிச்சயம் ஆனாலும் பின் அதாவது உடம்பில் கூட... துணி இல்லாமல் வலங்கள்.... எங்கெங்கோ சென்று சென்று. 


ஆனாலும் அனைவருக்குமே பின் விஷ்ணுவின் பின் விஷ்ணுவின் மீது கோபங்கள் ஏற்பட்டுவிட்டது.. அறிந்தும். 


ஆனாலும் இப்படியா அதாவது... நிச்சயம் விஷ்ணுவின் கருணை யாங்கள் என்னவென்று நினைத்தோம்!!!


ஆனால் இதற்கு தகுந்தார் போல் இல்லை!!!


இதனால் நிச்சயம் அறிந்தும் கூட... புரியாமலும் கூட நிச்சயம் நிச்சயம்..இவை தன் உணர்ந்து... உணர்ந்து இதற்கு மேற்கொண்ட பல வகையிலும் கூட. 


இதனால் பின் அனைவரும் வெறுத்தார்கள்... இந்திரர்களும் தேவர்களும் இன்னும் தேவாதி தேவர்களும் கூட!!... நிச்சயம் விஷ்ணுவின் இவ்வாறா??... கருணை படைத்தவன் இல்லையே... என்றெல்லாம். 


ஆனாலும் நிச்சயம் பின் பலமாக இந்திரனும் வந்து!!!


பின் விஷ்ணுவே!!!... உனை யான் எங்கேயோ வைத்திருந்தேன்!!... நிச்சயம் தன்னில் கூட..

பின் கருணை இல்லாதவன் நீ. 

அவ் ஏழையை இவ்வளவு சோதிக்கின்றாயே என்று!!!


இன்னும் பல ஞானிகளும் கூட பின் நிச்சயம் அதாவது...


விஷ்ணுவே இவ்வாறு கருணை அறிந்தும் பின் நிச்சயம்... இவ்வாறாக கருணை படைத்தவனாகவே.. நீ இல்லையே!!!


இதனால் என்ன? ஏது? என்றெல்லாம்.. அனைவருமே கூட!!


இதனால் எதை என்று புரிந்து கொள்ள... இங்கு ஆள் இல்லை. 

இங்கு இறைவனை நிச்சயம் புரிந்து கொள்ள ஆள் இல்லை. 


இறைவனை யான் பார்த்தேன்... அறிந்தும் இறைவன்... என் வாக்கில்!!... அதாவது இறைவன் எனக்குள் வருகின்றான்.. நிச்சயம் இவையெல்லாம் பின் இக்கலியுகத்தில்... ஏற்க முடியாது. 


ஏனென்றால் இறைவன் வந்து விட்டால்... நிச்சயம் அமைதியாகி விடுவான்..

நிச்சயம் இதோ இதைத்தான்.. சொல்லிக் கொண்டு சொல்லிக்கொண்டு!!


இதனால் நிச்சயம் இவ்வாறாகவே... அலைந்து திரிந்து கடைசியில்... எங்கெங்கோ அவன் சென்று அரங்கத்தை... அதாவது தற்பொழுது ஸ்ரீ அரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கத்தில் அமர்ந்து விட்டான். 


அமர்ந்திட்டு நிச்சயம் அறிந்தும் இவைதன் உணராமலும் கூட.. ஆனாலும் மீண்டும் வயதாக... அதாவது கண்களும் மங்கி போயிற்று!! நிச்சயம் காதுகளும் கேட்காமலும்... நிச்சயம் நடக்கவும் முடியாமல்.. வயதான காலத்தில்!!


ஆனாலும்.... இறைவா!! இறைவா!!.. அரங்கனே!! அறிந்தும் இவ்வளவு சோதனைகள் கொடுத்திட்டாய்!!


யான் என்ன உன்னை வெறுப்பேனா!?!? என்ன!! அறிந்தும் புரிந்தும்!!


இதனால் நிச்சயம் தன்னில் கூட... யான் எப்பொழுதும் பின் சந்தோசமாகவே!!!... நீ துன்பங்கள் அனைத்தும் கொடுத்தால்... ஆனால் இவை துன்பமாக யான் எண்ணவில்லையே!!!


நிச்சயம் பின் உன் மேல் அன்பு கொண்டதனால் இவையெல்லாம் எனக்கு இன்பமாகவே!!!


அடடா!!... மனிதா!!!.. அறிந்தும் இவந்தனும் ஒரு மனிதன் தான்.

நிச்சயம் பக்திகள் இருந்தால்... இப்படி இருக்க வேண்டும். 


அப்படி இல்லை என்றால்... ஒதுங்கிக் கொள்ள வேண்டும். 


ஆனாலும் இப்படி இல்லையே !!!


கஷ்டங்கள் கொடுத்தால் நிச்சயம் இறைவனை... நிச்சயம் நினைப்பது.... இறைவா!! கஷ்டத்தை கொடுத்து விட்டாயே!!!

நிச்சயம் தீர்க்கும் வழிகள் நிச்சயம்... ஓடோடி செல்வது!!!


இன்பம் வந்தால் இறைவனா??? எங்கு இருக்கின்றான்??

அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றது... என்னிடத்தில் காசுகள் இருக்கின்றது பொருள்கள் இருக்கின்றது... இதோ இன்னும் பின் இன்ப நிகழ்ச்சிகள் இருக்கின்றது. 

இவை எல்லாம் நிச்சயம் என்றெல்லாம்.



இதனால் இன்பம் வந்தால் இல்லை!!!

துன்பம் வந்தால் இருக்கின்றது...


எப்படிப்பட்ட மனிதன்?? அதாவது அறிவுகள் படைத்த மனிதனா ? இது!?


ஆனாலும் நிச்சயம் வயதும் அதிகமாகிவிட்டது ஆனாலும் அறிந்தும்.. ஆனாலும் ஒரு துளி கூட பின் நிச்சயம் தன்னில் கூட துன்பத்தை... துன்பமாகவே எண்ணவில்லை!!!


துன்பத்தை துன்பத்தாலே அடித்தான்!!

துன்பத்தால் அடித்து இன்பமாய் அவனே மாற்றிக் கொண்டான். 


ஆனாலும் கடைசியில் நிச்சயம் விஷ்ணு பார்த்து... பின் அறிந்தும் பின் கண்ணீர் சிந்தினான்...


இப்படி ஒரு பக்தனா!????

இதுவும் கலியுகத்தில் நடந்ததுதான். 


இப்படி ஒரு பக்தனா? என்று!!!.. ஆனந்தக் கண்ணீர்... பார்த்துக் கொண்டே அரங்கத்தில் நிச்சயம்.. அறிந்தும்! 


அக் கண்ணீர் ஆனது.. நிச்சயம் அவன் தலை மேல் விழ நிச்சயம்.. அறிந்தும் அறிந்தும். 


ஆனாலும் மேலே கீழே பார்த்தான். 


ஆனாலும் பின் படும் படியாக நிச்சயம் வெளிச்சம்... அதாவது வெயில் என்று அறிந்தும்...


ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் நிச்சயம் அறிந்தும் பின் இங்கு விழுகின்றது...எது? ஏது? என்றெல்லாம்... நிச்சயம்!!


இதனால் பின் மறுரூபம் எடுத்து கீழே வந்தான் விஷ்ணுவே!!

அறிந்தும்... வந்து இதை தன்... புரிய நிச்சயம்..


. முதியவனே!!!... ஏன்? இந்த நிலைமை?....இவ் வெயில் தன்னில் கூட இப்படி... அமர்ந்திருக்கின்றாயே!!


நிச்சயம் தன்னில் பின் யாராவது உந்தனுக்கு.. இருக்கின்றார்களா? என்று கேட்க!!



அறிந்தும் புரிந்தும் எனக்கு... பெரிய சொந்தங்கள் இருக்கின்றது...


பின் ஏது சொந்தம் என்று விஷ்ணு அவன் கேட்க!!


நிச்சயம் எனக்கு ஒருவன்... நாராயணன் மட்டுமே சொந்தம்!!!

இவன் இவ்வுலகத்தில் மிகப்பெரியவன்... இவன் சொந்தக்காரன் என்றால் இவ்வுலகத்தில் பின் என்னை விட அதிர்ஷ்டசாலி... இங்கு இல்லை என்று. 



நிச்சயம் பின் விஷ்ணுவோ... குபு குபுவென்று பின் கண்ணீர் விட்டான்...


இப்படி ஒரு பக்தனா???


இவ்வளவு சோதனைகள் செய்தேனே அறிந்தும்.. எதை என்று புரிய என்று!!!


ஆனாலும் அவ் முதியவன் விஷ்ணுவை  பார்த்து... நிச்சயம் அறிந்தும் பின் மகனே!!!... ஏன் எதற்காக இவ்வளவு...(கண்ணீர்) நீர்?? 


யானே... அதாவது எந்தனுக்கே பல கஷ்டங்கள்... யானே வருத்தப்படவில்லை!!

யான் ஒரு வார்த்தை தானே சொன்னேன். 

நிச்சயம் பின் நீ இவ்வாறு... அழுகின்றாயே!!!

நியாயமா???... அறிந்தும் புரிந்தும்! 

இதனால் வாழ்க்கை தத்துவத்தை உந்தனுக்கு புரியவில்லையா என்று!!



ஓடோடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான்...அவ் முதியவனை!!!


முதியவனும் கூட மகனே!!... மகனே!!..ஏன்? என்று!!


 நிச்சயம்!!

நீங்கள் என் தந்தையே என்று விஷ்ணுவும்..கூட!!


பின் விஷ்ணுவும் அழகாகவே நிச்சயம் காட்சிகள் கொடுத்தான். 


ஏனென்றால் இவனை உள்ளே அனுப்பவில்லை


(அந்த பக்த முதியவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை உள்ளே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அனந்த சயன கோல ரூபத்தில் விஷ்ணு பகவான் அந்த முதியவருக்கு தரிசனம் கொடுத்தார்) இதனால்... சராசரியாகவே நிச்சயம் அறிந்தும் அதாவது பின் பாற்கடலில் பள்ளி கொண்டார் போல் நிச்சயம் அழகாக... இதனால் கெட்டியாக பிடித்துக் கொண்டு!! பிடித்துக் கொண்டு!


 பின் நிச்சயம் அறிந்தும்.. அதாவது பின் இதை என்று அறிய... நீயே என் தந்தை என்று... விஷ்ணுவும் கூற!!!


நிச்சயம் அறிந்தும் அவ்வாறாக... பின் இறைவா உன்னை காணவே... ஓடோடி வந்தேன் இப்பிறவி தன்னில். உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். 



அப்படியெல்லாம் நிச்சயம் நீ கூறக்கூடாது.. நிச்சயம் இவை புரிய... புரிந்துகொள் என்றெல்லாம். 


நிச்சயம் இவ்வாறாக எவ்வளவு கஷ்டங்கள் வைத்தாலும்.. இவையெல்லாம் நிச்சயம் தன்னில் பின் துன்பம் பின் இன்பமாக மாற்றினாயே!!!!!!! நிச்சயம் இவ்வாறாக.. இருக்கும் மனிதன் தான் எந்தனுக்கு தேவை.. என்று அறிந்தும்!


பின் அதாவது பின்.. எவை புரிய எதை என்று கூட.... தந்தையே இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன வேண்டும்?? என்று!!



நிச்சயம் அதாவது இவ்வுலகத்தில் நிச்சயம் கலியுகத்தில் பின் பாவங்கள் தான் மனிதன் அதிகம் செய்யப் போகின்றான்.. நிச்சயம் அவற்றின் தன்மையைப் போக்க நிச்சயம்.. ஒரு வரம் பாருங்கள் என்று. 


அவ்வளவு கஷ்டங்களிலும் கூட மனிதனுக்கு... அறிந்தும் கூட நன்மைகள் செய்யத்தான்.


ஆனாலும் பல மனிதர்களையும் பார்த்து விட்டான்... இவந்தனுக்கு பின் அதாவது... முதியவனுக்கு எங்கு சென்றாலும் உணவு வேண்டுமென்று. ஆனாலும் உணவு இல்லை என்று.. நிச்சயம் எதையெதையோ..

ஆனாலும் மனிதனுக்காக...


(முதியவர் பிச்சை ஏந்தி கொண்டு இருந்த பொழுது ஒருவேளை உணவு கூட தர மறுத்த மனிதர்களுக்காக நன்மையே செய்ய நினைத்தார்)



ஆனாலும் நிச்சயம் தந்தையே அருள்கின்றேன்!!!


 நிச்சயம் பின் அதாவது பின் கங்கை நதிக்கு செல்!!!! 


அங்கு நீராடு!!!


நிச்சயம் அங்கு நீராடிக் கொண்டே இருப்பாய் நீ எப்பொழுதும்!!!

அதை நிச்சயம் அங்கு வந்து.. நீராடுபவர்கள் எல்லாம் தன் பாவத்தை நிச்சயம்.. போக்கிக் கொள்வார்கள் என்று. 


இதனால் அதாவது சாகா வரத்தை உந்தனுக்கு.. கொடுக்கின்றேன் என்று!!!


நிச்சயம் தேவாதி தேவர்களும் இந்திரர்களும்... கூட இப்படிப்பட்ட... கருணையா??.. விஷ்ணுவிற்கு என்று!! எண்ணி!!!


நிச்சயம் இதனால்... சாகா வரத்தோடு... அறிந்தும் கூட இன்னும் கூட...


 இங்கு அதாவது காசி தன்னில்... அடியில் கூட பின் நிச்சயம்..(கங்கை நதியில் உள்ளே). அமர்ந்து அழகாக இருக்கின்றான். 


நிச்சயம் அறிந்தும் கூட பின்... தண்ணீர் அவன் மேலே ஓடுகின்றது!!


இதனால் நிச்சயம் அனைத்து பாவங்களையும் கூட நிச்சயம் பின் கரைந்து ஓடிக் கொண்டே இருக்கின்றது. 


இதனால்தான் இறைவனை நம்பினோருக்கு நிச்சயம்.. விடிவெள்ளி உண்டு. 


துன்பங்கள் துன்பங்கள் என்ற வாழ்க்கையை கொடுத்து... இன்பம் என்பதை கூட நிச்சயம்.. காலங்கள் காலங்களாக கொடுத்து விடுவான். 


ஆனால் பின் மனிதன் எவ்வளவு? புத்தி கெட்டவன்!!... பின் அதன் உள்ளே.. ஒரு பத்து, இருபது ஆண்டுகள் கஷ்டங்கள் கொடுத்துவிட்டால்.... அய்யய்யோ!!!!.... கஷ்டங்கள் வந்துவிட்டதே!!!...


இறைவனே இல்லை!! இறைவனை வணங்கினால் கஷ்டம் தான்.. என்று!!


உண்மை இக்கலி யுகத்தில் நீ எதை எதையோ பின் செய்து கொண்டு இறைவனை வணங்கினால் இன்பத்தை கொடுத்து விடுவானா?? என்ன!!


இறைவனை காண்பது அவ்வளவு சுலபமில்லை!!


நிச்சயம் இறைவனை உணர்வது அவ்வளவு சுலபமில்லை!!


நிச்சயம் தன்னில் கூட... இறைவன் நினைப்பு பின் சொல்லலாம்... என் தந்தை அவை செய்வான் இவை செய்வான் என்று!!


நிச்சயம் செய்யப் போவதில்லை!!


உன் எண்ணத்திற்கு தகுந்தவாறு தான் அனைத்தும் நடக்கும். 


இதை உணர்ந்து கொள்ள வேண்டும்..


பின் அறிந்தும் இதனால் தான் நிச்சயம் இன்னும் சிறப்புகள் இருக்கின்றது. 

அவையெல்லாம் வருகின்ற காலத்தில் அழகாகவே செப்புவேன்!!


ஆசிகள்!! ஆசிகள்!! கோடி மனிதர்களே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: