6/7/2025 வளர்பிறை ஏகாதசி அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே எது தேவை??? எது தேவை இல்லாதவை என்பதையெல்லாம் உணர்ந்து யானே அப்பனே அனைத்தும் நல்குவேன்.
இதனால் குறைகள் கொள்ள வேண்டாமப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. மனிதன் அப்பனே நினைத்துக் கொண்டே இருக்கின்றான்.. அப்பனே பின் அவை இவை.. என்றெல்லாம் அப்பனே.
ஆனாலும் அப்பனே எங்கள் அருகில் வந்து விட்டால்... அப்பனே அவை கொடுப்பதா? இல்லை எதை என்று அறிய புரிய.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எடுப்பதா???.. என்பதையெல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் அப்பனே வரும் காலத்தில்.. அப்பனே சில ரகசியங்கள் கூட... அப்பனே
அவ் ரகசியத்திற்கும் கூட.... அதாவது அவ் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கும் கூட சில புண்ணியங்கள் அப்பனே அவசியம் ஆகின்றது என்பேன் அப்பனே.
அதனால்தான் என் பக்தர்களை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பக்குவங்கள் ஏற்படுத்தி அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே...அவ் பக்குவங்கள் மூலம் அப்பனே பின்... தன்னைத்தானே உணர்ந்தால் அப்பனே... அப்பொழுதுதான் அப்பனே யாங்களும் சில ரகசியங்கள் சொல்ல முடியுமப்பா!!!
அப்பனே அவ் ரகசியங்கள் அப்பனே தெரிவித்து விட்டாலும் அப்பனே அதை நிச்சயம் தன்னில் கூட அவ் பக்குவங்கள் இல்லையென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தவறான வழியில் அப்பனே எடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... தானும் அழிந்து அப்பனே பின் பிறரையும் கூட அழிப்பான் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... என் பக்தர்களுக்கு அனைத்தும் யான் தெரிவிப்பேன் அப்பனே.
அப்பனே கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது??????
என்பதெல்லாம் அப்பனே... நிச்சயம் வரிசையாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே எழுதி எதை என்று புரிய அப்பனே பின் ஏற்கனவே... அப்பனே பின் இப்படித்தான்... நடக்கும் என்பவை எல்லாம் அப்பனே... அழகாக அதாவது பின் நாராயணன் எழுதி.. அப்பனே பின் அவந்தன் பின்.. அதாவது அவந்தன் பின் கீழே.. வைத்திருக்கின்றான்ப்பா. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அவை ரகசியங்கள் எல்லாம் அப்பனே பின் வரும் காலத்தில் செப்புவேன் அப்பனே.
அவன் என்ன எழுதி வைத்திருந்தான்??? எப்படி இருந்தால்???? கலியுகத்தில் பின் தன்னைத் தானே... ஜெயிக்கலாம்????? என்பதையெல்லாம் அப்பனே!!!
பின் தன்னைத் தானே பின் வியாதிகளையும் கூட எப்படி நீக்கலாம்?? என்பதையெல்லாம் அழகாக குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்ப்பா!!
அப்பனே அதுவும் கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அது வெளிக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட வரும் !!!! என்பதை எல்லாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதனால் அப்பனே பின்.. பொறுத்திருந்து...
இதனால்தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... உடனடியாக பின் கஷ்டங்கள் நீக்க வேண்டும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை இவை... பின் அனைத்தும் கொடுக்க வேண்டும் என்றால் அப்பனே....
நிச்சயம் கலியுகத்தில் முடியாதப்பா!!! அப்பனே பின் யாராலும்!!
இதனால்தான் அப்பனே... நிச்சயம் பக்குவங்கள் வேண்டும்.அவ் பக்குவங்கள் அப்பனே பட பட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
அதாவது அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட... மனித உடம்பு எடுத்திட்டாலே அப்பனே குறைகள் தான் அப்பா.
குறையில்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லையப்பா.
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அக்குறைகளை நிறையாக்குவது அப்பனே சித்தர்கள் யாங்களே.
ஏன்? எதற்காக? யாங்கள் உங்களை தேடி வர வேண்டும் என்றால் அப்பனே... நிச்சயம் பாவத்தில் அப்பனே.. அதாவது மிதந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.. அப்பனே!
அவ் பாவத்திலிருந்து வெளியில் வர தெரியாமல் அப்பனே மிதந்து கொண்டிருக்கையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்கள் தானப்பா!!
இதனால் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் அவை தன் அங்கிருந்து எடுத்து வந்து அப்பனே புண்ணியம் என்ற நீரில் அப்பனே பின் விட்டு விட்டால்... அங்கு நீந்தினால் அப்பனே அனைத்தும்.. புரியுமப்பா!!!
இதனால்தான் அப்பனே!!
ஆனாலும் பாவ நீரில் இருந்து அப்பனே நிச்சயம். தன்னில் கூட மனிதனை மீட்டு கொண்டு வருவதே மிக கடினம் தானப்பா எங்களுக்கு!!!
இதனால்தானப்பா நிச்சயம்.. தன்னில் கூட எங்களை பின் வணங்கினாலும் சில கஷ்டங்களை ஏற்படுத்தி அப்பனே.. உண்மை நிலையை அப்பனே யாங்கள் புரிய வைப்போம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே பின் மனித வாழ்க்கை அப்பனே பின் எப்படி எல்லாம் போகும்.. என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அதாவது அப்பனே எவை எவையெல்லாம் நீங்கள் நினைத்து கொண்டிருக்கின்றீர்களோ!!!
அப்பனே.. அவைக்கெல்லாம் எதிர்வினையாக செயல்படும் என்பது தான் நிச்சயம் அப்பனே கலியுகத்தில்.. அப்பனே.
நீங்கள் நன்மையாக எதை நினைக்கின்றீர்களோ அது வரும் காலத்தில் தீமையாக முடியும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே.
அவை இவை எவை என்று புரிய அனைத்தும் இப்படித்தானப்பா!! இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே! நிச்சயம் தன்னில் கூட!
இதனால் அப்பனே... சொற்களை வரிசையாக.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... இலக்கணங்கள் கூட அப்பனே எப்படி.. என்பதெல்லாம் நீங்கள்.. அறிவீர்கள் ஆக நிச்சயம். இலக்கணம் ஓதி அப்பனே... அதைத்தான் அப்பனே எடுத்தாலே.. உங்களுக்கு பல விஷயங்கள் தெரியும் அப்பா.
(இலக்கணத்தை நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தான் எழுதியவர்)
ஏனென்றால் (விதிமுறையில்) முதலில் கூட... அதாவது முதலில் இருந்தே அப்பனே வரவேண்டிய சூழ்நிலை.
. அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே... என் பக்தர்கள் ஆயினும் என்பேன் அப்பனே.
இதனால் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று.. எவை என்று புரிய அப்பனே.. நீங்களே அப்பனே இலக்கணத்தை பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... சிறிதளவு அப்பனே நிச்சயம் எடுத்து எவை என்று அறிய அப்பனே... ஓதிப் பாருங்கள் பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.
நிச்சயம் சரியான இலக்கணத்தை அப்பனே... நீங்கள் அப்பனே படித்து இருந்தால்... அப்பனே அனைத்து விஷயங்களும்.. தானாக அப்பனே தெரிந்து விடும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே.. உங்களிடையே சக்திகள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அவை எழுப்பி விட்டால் போதுமானதப்பா!!
நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு வேலையே இல்லையப்பா.
இதனால்தான் அவ் சக்திகளை எழுப்பவே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் என் பக்தர்களை.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய!!
இதனால் அப்பனே... நிச்சயம் தெரியாமல் அப்பனே... அப்படி இப்படி நின்றாலும் அலைந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
இதனால்தான் அப்பனே இறைவனும் ஒன்றும்.. கொடுக்கப் போவதில்லை அப்பனே... ஏன் எதற்கு அப்பனே இறைவன்... அப்பனே சரியாக அதாவது... உலகத்திற்கு அனுப்புகின்றான் அல்லவா...
இறைவன் விருப்பப்படி இருந்தால் மட்டுமே.. இறைவன் அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே.
அப்படி இல்லை என்றால்... அப்பனே கஷ்டங்கள் தான் அப்பா.. நிச்சயம் தன்னில் கூட.
ஆனால் இறைவனுக்கு எவை? எவை.?.... எப்படி பிடிக்கும் என்பதை எல்லாம் யான் தெரிவித்து விடுவேன் வரும் காலத்தில்!! அப்பனே பின் அப்படி இருந்தால்... நீங்கள் வெற்றி கொள்ளலாம் என்பேன். அப்பனே.. நலன்களாகவே உண்டு ஏற்றங்கள் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல்.. அப்பனே அவ் சக்தியை எப்படி??? இயக்குவது.. என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அவ் சக்தியை இயக்கிவிட்டால்... அப்பனே உங்களை நீங்களே... அறிவீர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
கிரகங்களின் பாதைகளும் கூட நட்சத்திரங்களின் பாதைகளும் கூட அப்பனே... எப்படி? ஏது? செயல்படும் என்பதையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் விளக்கமாகவே.. எடுத்துரைப்பேன் அப்பனே.
ஆனாலும் அதற்குள்ளே அப்பனே... நிச்சயம் பலவிதமான பொது அறிவுகளை நீங்கள் பெற்று இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அதாவது பலவிதமான நிச்சயம் அறிவுகளை அப்பனே எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பெற்று இருக்க வேண்டும் என்பேன் அப்பனே... அதை நிச்சயம் பெற்று இருந்தால் மட்டுமே.. அப்பனே யான் பின் சொல்லிய வாக்குகள்.. உங்களுக்குப் புரியும் அப்பா.
அப்படி நிச்சயம் பின் புரிந்து அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் புரிந்து விட்டால் அப்பனே உங்களை நீங்களே.. வெல்வீர்களாக.
இதனால் அப்பனே உங்களுக்குள்ளே அவ் சக்தியும் கூட.. அப்பனே செயல்பட்டு விடும்.. அப்பனே வெற்றிகள் பின் அப்பனே தானாகவே.. தேடி வரும் அப்பா.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் அப்பனே மனிதன்... எதற்கு அலைகின்றானோ??? அதன் மூலமே நிச்சயம் அப்பனே அறிந்தும் அப்பனே.. முறிந்தும் அதாவது முற்றிற்று என்று வாழ்க்கை என்பதை கூட.. அப்பனே சரியாகவே எடுத்துக்காட்டாகும் அப்பனே.
இதை வரும் காலத்தில் நிச்சயம் செப்புவேன் அப்பனே... என்ன மந்திரங்கள்??
எவை என்று புரிய அப்பனே பின்... என்ன திருத்தலங்கள்?? அப்பனே... எப்படி வணங்குவது? என்பதையெல்லாம் கலியுகத்தில்... அப்பனே தவறாக போகுமப்பா !!
அப்பனே முன்பெல்லாம் அப்பனே எப்படி.. வெற்றி பெற்றார்கள்?? என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின்... எங்கிருந்து எதை அப்பனே பின் அதாவது ஒரு காலில்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட நின்று... அப்பனே பின் ஒன்றரை.. மணி நேரங்கள் அப்பனே எப்படி... தவம் செய்தால் அப்பனே எங்கு. சரியான திருத்தலத்தில் இருந்து அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட கைகளை உயர்த்தி... ஒரு காலில் நின்று அப்பனே நிச்சயம் தன்னில்.. இறைவனை நினைத்தால் அப்பனே.. இறைவன் இங்கு வருவான் எவ் சக்திகள்.. வரும் என்பதை எல்லாம் அப்பனே மனிதனுக்கு... தெரியாதப்பா.
இதனால் அப்பனே பின் அவையெல்லாம் அப்பனே பின்... சுவடிகளில் அழகாக ரிஷிகளும்.. அப்பனே பின் எவை என்று அறிய.. எழுதி!!
ஆனாலும்... அதை எல்லாம் அப்பனே பின் காசுகளுக்காகவே.. பின் அதை எவை என்று கூற... அங்கங்கு சென்று விட்டது என்பேன் அப்பனே.
ஆனால் அவை பின் பயன் படுத்திக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் யான்.. பயன்படுத்தினேன் (கண்டுபிடித்தேன்) யான் நிச்சயம் தயாரித்தேன்!!! என்றெல்லாம் நிச்சயம்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
பல சுவடிகள் அப்பனே இப்படித்தானப்பா!!!
இதனால்தான் அப்பனே... எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட காசுக்காக... எதையும் செய்யக்கூடாது என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே அறிந்தும்... இதனால் அப்பனே எவை எவை... எதை என்று புரிந்து அப்பனே... விளக்கமாக இன்னும்.. விளக்கங்கள் அப்பனே.
அதனால் குறைகள் இல்லை... நாராயணனும் அழகாக அப்பனே... அதாவது அப்பனே பின் அமைதியான... நேரத்தில் அப்பனே பின் திரிந்து கொண்டிருப்பான் அப்பனே. (திருமலையில்)
அதாவது.. அப்பனே நடு இரவில் தன்னில் கூட கூட அப்பனே அதாவது அனைவரும்... தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவன்.. விழித்து அப்பனே அப்படியே திரிந்து கொண்டிருப்பான் அப்பனே... நிச்சயம் ஒவ்வொரு இடத்திலும் கூட... நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பின் சந்தித்தான் என்பேன் அப்பனே அழகாகவே...
இதனால் அப்பனே பின் நன்றாகவே. அப்பனே அவந்தனக்கு எங்கு பிடித்த இடம் என்பவை எல்லாம்... அப்பனே ஓரிடம் இங்கு இருக்கின்றதப்பா!!
சரியான நேரத்திலே அப்பனே அதாவது அப்பனே பின் 12. அதாவது இரவு 12 மணிக்கு தொடங்கி பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதிகாலையில் 3 1/2 அதாவது மூணரை மணிக்கு... ஓரிடத்தில் அவன்.. அமர்வானப்பா!
அவ்விடம்.. எங்கு என்பவை எல்லாம்.. சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..
அவையும் கூட நிச்சயம் தன்னில் கூட.. நீங்கள் அருள் பெற்றால் தான் அப்பனே அவனுடைய அருள் பெற்றால் தான் உண்டு என்பேன் அப்பனே.
ஆனாலும் சொல்லிவிடுகின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இவ்வாறாகவே... அமர்ந்தாலே போதுமானதப்பா.
அப்பனே உங்களுக்கு தேவையானதை!!!
(நாராயணன் வழங்கிவிடுவார்)
அப்பனே ஆனாலும் இறைவனிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அமைதியாக உட்கார்ந்தாலே... போதுமானதப்பா.
இறைவனுக்கு... நன்கு உணர்வான் அனைத்தும் கொடுப்பான்.
இதனால் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.. அப்பனே.
நிச்சயம் பின் இறைவனின் திருவிளையாடல்கள்.. எப்படி என்றும் எதை என்றும்.. யாருக்கும் புரியாதப்பா.
அதை நிச்சயம் உணர்ந்தால் மட்டுமே உண்டு!!
அவ் உணர்விற்கும் சக்திகள் அப்பனே உங்களிடத்தில் அப்பனே அழகாகவே.. அப்பனே!!!
அதை இயக்கிக் கொண்டே வருகின்றேன் வரும் காலத்தில் என்பேன் அப்பனே.
அதை இயக்கி விட்டால் அப்பனே சில கஷ்டங்கள் அப்பனே முதலில்... அதாவது முதலில்.. துவங்குவதற்கு அப்பனே... அதை துவங்கி விட்டால் அப்பனே அப்பனே நிச்சயம் சில கஷ்டங்கள் வரும் தான். அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
போகப் போக அதன் வேகத்தை கூட்ட கூட்ட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பறந்தோடும்.
அனைத்தும் தெரியும் அப்பனே... அவையெல்லாம் நிச்சயம் பின்.. தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே.
அதாவது பின் அகத்தியன் தருவான் அகத்தியன் தருவான்.. என்றெல்லாம் அப்பனே பின் சுயநலத்திற்காக வணங்கிக் கொண்டிருக்கின்றான்.. அப்பனே.
பின்பு தரவில்லை என்றால் அகத்தியன் இல்லை!!!
நிச்சயம் பின் அதாவது அகத்தியனை வணங்கினேன் அவனுக்கு என்ன..? என்ன? பூசைகள்!! இன்னும் விசேஷங்கள் இன்னும் அன்னதானம் பின் இட்டேனே.... என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.. நிச்சயம்
ஆனாலும் அப்பனே... நிச்சயம் யாங்கள் எதையுமே கேட்கவில்லை!!
அப்பனே நீங்கள் தான் பாவம்!!!
அதனால் தான் அப்பனே உங்களுக்காக பின் இறங்கி வந்து அப்பனே.. பல வழிகளிலும் கூட உண்மைகளை பின் உண்மை நிலைகளை தெரிவித்து.. வைக்கின்றோம் அப்பனே.
இதனால் அப்பனே எப்படி எப்படி இருக்கும்?? அப்பனே எப்படி எப்படி அதாவது பின் நட்சத்திரங்கள்.. இப்படி இருந்தால்.. அப்பனே கிரக பாதை அப்படி இருந்தால்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்படி. எல்லாம் வாழ்க்கை அமையும்??.. எப்படி எல்லாம் எந் நேரத்தில் நிச்சயம் தன்னில் கூட சில.. கண்டங்கள் ஏற்படும்?? என்பதை எல்லாம்... வரும் காலத்தில் நிச்சயம் அப்பனே.. உரைப்பேன் அப்பனே... நிச்சயம்!!
அதாவது உங்களை விட்டு யான்... நிச்சயம் பிரிவதில்லை என்பேன் அப்பனே..
ஏனென்றால் அப்பனே பின்.. அகத்தியன் என்று சொல்லிவிட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் யான் ஓடோடி.. வந்திடுவேன் அப்பனே!!
எந்தனுக்கு!!!
மந்திரங்களும் வேண்டாம்!!!......
தந்திரங்களும் வேண்டாம்!!!......
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... எவையும் வேண்டாம் என்பேன். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
அதாவது அன்பு தான்!!! அன்பு தான்!!.... என்றெல்லாம்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட குறிப்பிட்டுக் கொண்டே வருகின்றோம் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சில வகையான அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... சில சில சுவாசக் கோளாறுகளும்... அப்பனே பின் அதாவது.. மார்பு தன்னில் கூட எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல.. வகையிலும் கூட அப்பனே பின் அதாவது பின்.. அனைவருக்குமே நோய்கள் வரப் போகின்றது என்பேன் அப்பனே.
அதை தாக்கினால் உடனடியாக.. உடனடியாக மூச்சு நின்று விடும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் முடிந்த போதெல்லாம் அப்பனே நிச்சயம்.. பின் அதாவது அரச மரத்தின் அடியில் கூட நிச்சயம் தன்னில் கூட... அமர்ந்து அப்பனே... அதாவது சுவாசம் பலமாக இழுத்து... இழுத்து அதாவது...அப்பனே பின் சுவாசிப்பதற்கு பத்மாசனத்தில் அமர்ந்து நிச்சயம்.. தன்னில் கூட செய்து கொண்டே வாருங்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே.. பின் தூய காற்றுகள் உள் புகுந்து.. அப்பனே சில.. சக்திகளை கூட அப்பனே மேல் இருந்து அப்பனே பின் அவை தன் இழுக்கும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா.
அப்பனே எவன் ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது பத்மாசனத்தில் அமர்ந்து.. அப்பனே பின் அதாவது அரச மரத்தடியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சுவாசித்து... வலதும் இடதும் சுவாசம் விடுகின்றானோ (பிராணயாமம்) அவந்தனக்கு சில ஞானங்கள் தோன்றுமப்பா!!!
(ஏற்கனவே குருநாதர் சூரத் சசங்கத்தில் அரசமரத்தை பற்றி அதன் மகிமையை பற்றி குருநாதர் ஏற்கனவே கூறி இருக்கின்றார் நினைவில் கொள்க... எதிர்காலத்தில் சுவாசக் கோளாறு நோய்கள் வருவதிலிருந்து அரச மரத்தடியில் முடிந்த வரை அனுதினமும் சென்று ஒரு 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்து வருவது மார்பு சுவாசக் கோளாறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்)
அப்பனே.. அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... உள்ளிருக்கும் பொழுதும் அப்பனே
"""""""""""" ஐம் """"""""""
என்றும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
பின் வெளியேற்றும் பொழுது காற்றை.. அப்பனே பின்...
""""""""""" க்லீம் """"""""""""""
என்றும் கூட.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின்... இவ்வாறாகவே அப்பனே பலமாக.. நிச்சயம் தன்னில் கூட பின்... எவை என்று புரிய..
ஐம் க்லீம் சௌம் நமக!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சுவாசித்தலும் அப்பனே பின் பலமாக உள்ளிழுத்து.. அப்பனே மீண்டும் அப்பனே.. வெளியே தள்ள வேண்டும் அப்பனே காற்றை!! அப்பனே!!
நிச்சயம் அப்பனே.. பின் காற்றை இவ்வாறாகவே அப்பனே பின் உள்ளிழுத்து வெளியிட்டு.. அப்பனே வந்தாலே... நிச்சயம்.. அப்பனே பின் அனைத்து பின் உறுப்புக்களும் கூட புத்துணர்ச்சி பெறும் என்பேன் அப்பனே.
நலன்கள் ஆகவே.
இதனால் அப்பனே.. இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம்... சில சில அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே பின் பல பரிசுத்தமான திருத்தலங்களில் மட்டுமே சொல்ல முடியும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம்... அப்பனே அவ்வாறாக... நிச்சயம் தன்னில் கூட இறைவனின் அனுமதி பெற்றே சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பொழுதுதான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட... அனைவருக்கும் அப்பனே அவ்.. காந்த விசைகளால் அப்பனே.. அனைத்தும் அப்பனே நிச்சயம்... எவை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
காலங்கள் காலங்களாகவே அப்பனே பின் வாக்குகள் என்பேன் அப்பனே.
இன்னும் கூட அப்பனே எதை என்று புரிய..அப்பனே எழுதி எதை என்று புரிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எப்படி எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உலகத்தில் எப்படியெல்லாம் அப்பனே பின் எதை என்று புரியாமல்.. வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையெல்லாம் அப்பனே.
ஆனாலும் அப்பனே இப்பொழுது.. உண்மையை அப்பனே பின் உணர வைக்க போகின்றேன் அப்பனே உங்களுக்கு. எதை என்று புரிய.
இதனால் அப்பனே... ஒவ்வொரு இடத்திலும் (ஒவ்வொரு திருத்தலங்களிலும் ஒவ்வொரு புனித இடங்களிலும்) ஒவ்வொரு ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே.அவ் ரகசியங்கள் எவை என்று.. புரியாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது... மனிதன் பின் தெரிந்து கொள்வதற்காகவே... அனைத்தும் என்பேன் அப்பனே.
அதை தெரியாமல் அப்பனே சென்றால்... அப்பனே அதை அப்பனே தெரியாமல் அதாவது நிச்சயம்... தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அப்பனே... நிச்சயம் கஷ்டங்கள் தானப்பா!!.. வாழ்க்கையில்!
அதனால் தெரிந்து கொண்டு இவ்வளவு தான்.. வாழ்க்கையா???? என்று ஒருவன் சொல்லிவிட்டால்.. அப்பனே நிச்சயம் அவந்தனக்கு .. மோட்ச கதியப்பா!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில பக்குவங்கள் ஏற்பட்டு விட்டால் இவ்வளவு தானா??? வாழ்க்கை என்று அப்பனே... நிச்சயம் அவ் நிலைக்கு வந்து விட்டால் அப்பனே நிச்சயம் மோட்ச கதி என்பேன் அப்பனே.
மீண்டும் மீண்டும் அப்பனே பின் மனிதன் கேட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டே எவை என்றும் புரிய அப்பனே இருந்தால்? அப்பனே எப்படியப்பா?
எதை என்று புரிய அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது...
(கொங்கணர் சித்தர்)
கொங்கணனை பற்றி சொல்கின்றேன் அப்பனே!!!
அப்பனே கொங்கணன் அங்கும் இங்கும் திரிந்து.. அப்பனே பின் எங்கு இறைவன்?? எதை என்று புரிய பின் ஏதேதோ வடிவத்தில் வருகின்றானே!!... பின் எப்படி? ஏது? என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
பல வகையான கஷ்டங்கள்... ஆனாலும்... கொங்கணனுக்கு அனைத்துமே தெரியுமப்பா!! அனைத்து வித்தைகளும் தெரியுமப்பா!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் இறைவனை காண வேண்டும்.. என்பதே!!
ஆனாலும்.. இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன்.. தன்னை மறைத்துக் கொண்டே..
அதாவது எங்கங்கோ???? அதாவது இறைவனை தேடி அண்ணாமலைக்கு சென்றான்... நிச்சயம் தன்னில் கூட பல வருடங்களாக வாழ்ந்தான் நிச்சயம். பின் எவை என்று அறிய பின்... சொன்னேனே அப்பனே முன்பே..
பாபநாசத்தில்... அறிந்தும் இன்னும்... அப்பனே நவ திருப்பதி களிலும் கூட... அப்பனே பின் எங்கு இறைவனை காண வேண்டும்...????
நாம் எங்கு இறைவனை காண்போம்??? என்றெல்லாம் அப்பனே!!!!!... நிச்சயம் தன்னில் கூட
அப்பனே... கொங்கணன் பல வித்தைகளை கற்றுக்கொண்டு... அப்பனே இறைவனை நினைத்துக் கொண்டே!!
ஆனாலும் இறைவன் விட்டு விடுவானா? என்ன!!!
இறைவனும் நிச்சயம் பார்ப்போம்.. பின் தவ வலிமையால் மறைந்து மறைந்து... கண்ணாமூச்சி அறிந்தும்... சிறுவயதிலே அப்பனே அறிந்தும்.. அதேபோலத்தான் அப்பனே இறைவனும் விளையாடினானப்பா இவனிடத்தில்.
(இறைவன் மறைந்து ஒளிந்து நின்று சிறுவயதில் குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போல கொங்கனர் சித்தருக்கு போக்கு காட்டினார் இறைவன்)
2021 ஆம் ஆண்டு நவ திருப்பதி களில் ஒன்றான கார்க்கோடகநல்லூரில் கொங்கணர் சித்தர் ஜீவநாடியில் வந்து வாக்குரைத்த பதிவு
சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு ல் வெளிவந்ததுள்ளது
அதில் சித்ரா பௌர்ணமி சிறப்பினை குறித்தும்
திருவண்ணாமலை சித்தர்கள் குறித்தும்
சித்த மார்க்கத்தில் வருவதை குறித்தும்
ராகு காலத்தில் கார்கோடகநல்லூரில் வந்து பரிகாரங்கள் செய்தால் பலன் அளிக்கும் என்பதை பற்றியும்
ஒன்பது மாதங்கள் தொடர்ந்து மூன்றாம் பிறையை கண்டால் தரிசித்து கண்டு வணங்கினால் ராகு நன்மைகளை செய்யும் என்பதை பற்றியும்
பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் கோடகநல்லூர் அதனால் திருப்பதி யிலிருந்து அடிக்கடி இங்கு வந்து அமர்ந்து கொள்வார் அவரை இங்கிருந்து திருப்பதிக்கு மீண்டும் இழுத்து அழைத்துச் செல்வேன்... என்றும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா ஜீவானாடியில் முதல்முறையாக வந்து வாக்குகள் உரைத்தார் அதை மீண்டும் படிக்கும் பொழுது மகத்துவம் புரியும்)
இதனால் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமலும்...
அப்பனே ஆனாலும்... இத்தனை அதாவது ஒவ்வொரு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் ஒவ்வொருவருக்கும் இத்தனை.. பிறவிகள் தான் நிச்சயம் தன்னில் கூட... இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே... நிச்சயம் அவ் ஆன்மாவிற்கு அப்பனே.
இதனால் நிச்சயம் பல கோடி பின் ஆண்டுகளாக... அப்பனே நிச்சயம் பிறந்து பிறந்து... எங்கு தான் இறைவன் வாழ்கின்றான்???... என்று... அப்பனே வந்தவன் தானப்பா கொங்கணன்!!
(கொங்கணர் சித்தர் ஆவதற்கு முன்பாக பல கோடி பிறவிகள் எடுத்து இறைவனை தேடி தேடி அலைந்து)
ஆனாலும்... இறைவனின் விளையாட்டோ !?!.. நிச்சயம் கண்ணாமூச்சி விளையாட்டே என்பேன் அப்பனே!!!
நிச்சயம் அவ்வாறாக ஆனாலும்... நிச்சயம் கொங்கணனுக்கு தெரிந்து விட்டது...
ஆனாலும் (பிறவி) முடியப்போகின்றது... பல கோடி பிறவிகள் எடுத்து விட்டோம்...
ஆனாலும் நிச்சயம் இறைவனை காண முடியவில்லையே!??... நிச்சயம் இதற்கு.
. அனைத்தும் தெரிந்து கொண்டும் (சித்திகளை)
இறைவனை காண!! அறிந்தும் புரியாமல் போய்விட்டதே!!!!..... என்றெல்லாம் நிச்சயம்... அறிந்தும்.!
அப்படியே நிச்சயம் பின் நடந்து வந்தானப்பா!!!
நடந்து வந்து நிச்சயம் இவ்மலையில் (திருமலை திருப்பதி) தங்கினானப்பா!!!
அறிந்தும்.
இதனால் நிச்சயம் அறிந்தும் பின் சில நாட்களில் இருக்கின்றது.... அவ்வளவுதான் நிச்சயம்... அதாவது இவ் உடம்பை எங்கு பாதுகாப்பது???
நிச்சயம் அறிந்தும் புரிந்தும்... அதாவது இவ் உடம்பை அறிந்தும்.. பாதுகாத்தால் அதாவது. மக்களுக்கு சேவை செய்ய முடியுமே. மீண்டும் பின் அதாவது.. அறிந்தும் கூட பின் எவை என்று அறிய அறிய...
உடம்பை பாதுகாக்காவிட்டால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதே!!!... என்றெல்லாம்... நிச்சயம்!!
ஆனாலும் உடம்பை அழகாக பாதுகாக்க வேண்டும்... எப்படி? என்றெல்லாம்!!
ஆனாலும் இது இறைவனால் தான் சாத்தியம் என்று பின் கொங்கணனும் கூட...
ஆனாலும் கொங்கணனுக்கும் அனைத்து விஷயங்களும் தெரியும்...
இருந்தாலும் கூட மிகப்பெரியவன் பின் இறைவன் மட்டுமே.. அவன் நினைத்தால் மட்டுமே என்று!!
இதனால் பல கோடிகள் பிறவிகளும் பிறந்து பிறந்திட்டேனே!!!
நிச்சயம் இறைவா நீ எங்கு இருக்கின்றாய்?? என்றெல்லாம் கூக்குரலிட்டு... அங்கும் இங்கும் திரிந்து....
அப்பொழுதெல்லாம் நிச்சயம் இவ்மலையில் பல பல பின் விஷ ஜீவராசிகளும் கூட... எதை என்றும் புரிய.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... அதையெல்லாம் அடக்கிக் கொள்ள... நிச்சயம் பின் அதாவது..அவ் ஜீவராசிகளும் உங்களை நெருங்காமல் இருக்க.. அப்பனே நிச்சயம் பின்.. கொங்கணன் பின் மந்திரத்தை கண்டுபிடித்து இருக்கின்றானப்பா.
அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட வரும் காலத்தில்!!
இதனால்தான் அப்பனே... இன்றைய மனிதர்கள் அப்பனே பின்... அங்கும் இங்கும் அச் சுவடிகளை எடுத்துக்கொண்டு... மந்திரத்தைக் கூட சொல்லிக்கொண்டு.. அப்பனே தாராளமாக அப்பனே காட்டுக்குள்.. இருக்கின்றார்கள்ப்பா.. காட்டுக்குள் செல்கின்றார்களப்பா!! மக்களுக்குப் பரப்புகின்றார்களப்பா!!
இவை எல்லாம் அப்பனே கொங்கணனின் செயலே என்பேன் அப்பனே.
நிச்சயம் அவை கூட அப்பனே உங்களுக்கு விளக்கமாக.. விளக்கம் அளிக்கின்றேன் வரும் காலத்தில்..அப்பனே
இதனால் அப்பனே தெளிவு பெற வேண்டும் தெளிவு பெற வேண்டும்... என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின். அதாவது நிச்சயம் மதிப்பெண்கள் அப்பனே.. பெற வேண்டும் அப்பனே.
அதாவது 20 மதிப்பெண் பத்து அடி பெண்ணிலேயே இருந்தால் எப்படியப்பா?? புரியும் என்பேன் அப்பனே???
ஒரு 50, 60 மதிப்பெண்கள் இருந்தால்தான் அப்பனே.. நிச்சயம் யாங்கள் அப்பனே பின் சொல்லியதை அப்பனே நீங்கள் கவனிப்பீர்கள் என்பேன் அப்பனே.
இப்பொழுது இன்னும் 10, அப்பனே 20 அப்பனே தேர்ச்சி கூட பெறவில்லை என்பேன். அப்பனே அப்படி வகுப்பில் கூட.
அவ்வாறு இருக்கையில் அப்பனே உங்களுக்குச் சொன்னாலும் புரியாதப்பா... சில விஷயங்கள் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே பின் அனைவருமே.. பிள்ளைகள்... பின் யான் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... பல வகையிலும் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே.
இதனால் கொங்கணனும் கூட அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின்... வருந்தினான்!!!
இவ்வளவு?? பின் ஆண்டுகள் பின் நிச்சயம் பிறந்து பிறந்து வந்தோமே??!!... அனைத்தும் பின் செய்தோமே!?!?.. ஆனாலும் பின் இறைவனை காண முடியவில்லையே????
நம் தவ பயனால் என்ன???? என்று!!
ஆனாலும் அறிந்தும் ஆனாலும் எவை என்று புரிய... மீண்டும் ஈசனாரும் பின் அண்ணாமலையில்... இருந்து அறிந்தும் கூட...
பார்வதி தேவியும் நிச்சயம்..
.இவ் பக்தனுக்கு இப்படி எல்லாம்???.. இப்படி எல்லாம்???? (சோதனைகள்) கொடுத்தல் ஆகாது!!!
நிச்சயம் அதாவது இன்னும் சில நாட்களே இருக்கின்றது (கொங்கணருக்கு பிறவி ஆயுள்)
நிச்சயம்.. ஏதாவது நாம் அவனுக்கு சொல்லிக் கொடுப்போம் என்று!
ஈசனாரும்!!!
நிச்சயம் பின் அதாவது... இதுவும் அவனுடைய நிச்சயம் தன்னில் கூட !!! (விதியில்)
அறிந்தும் புரிந்தும்.... அவந்தன் கஷ்டங்களுக்கு ஏற்ப.. நிச்சயம் அவன் புகழ்.. நிச்சயம் அதாவது... புகழ் என்று சொல்வதை விட நிச்சயம் அவன்.. நாமம் அழியாது!! என்றெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட!! ஈசன்... நிச்சயம்!
பின் ஆனாலும்...
பார்வதி தேவியும் கூட நிச்சயம்... எவ்வாறு அழியாமல் இருக்க???
பின் அழிய.. போகின்றான் அறிந்தும் கூட..அவ் உடம்பை கூட என்றெல்லாம்!!! நிச்சயம்.
ஈசனார்.
நிச்சயம் ஆனாலும் தேவியே!!!
பின் அண்ணாமலையிலிருந்து.. ஈசன் பின் தேவியே!!!
நிச்சயம் அவன் உடம்பும் கூட பின் அழியாது.
நிச்சயம் பின் அவனை அதாவது இவ்வளவு பின் கோடி ஆண்டுகள் பல பல பின்கோடி ஆண்டுகள் பின் நினைத்து நினைத்து!!!!
(இறைவனை நினைத்து)
பல வகையிலும் பின் வாழ்ந்தவனுக்கு நிச்சயம்.. உடம்போடு நிச்சயம் உயிரும்.. அப்படியே இருக்கும் என்று.
பின் அதாவது தேவியும் கூட நிச்சயம்... எப்படி??
அது எப்படி?? பின் அன்பானவனே??? என்றெல்லாம்!!
ஈசனார்.
ஆனாலும் தேவியே!!!
பின் அதாவது சற்று நேரத்தில் பார்!!! என்று
அண்ணாமலையிலிருந்து ...
இங்கு நடக்கப்போவதை (திருப்பதியில்) நிச்சயம்... பின் அதாவது அங்கேயே.. இருந்து கொண்டு அதாவது அண்ணாமலையிலிருந்து கொண்டு இருவரும் பார்த்தார்கள்!!
இதனால் நிச்சயம் மனமுவந்து நிச்சயம் தன்னில் கூட பின் இவ் உடம்பைப் பெற்றதும் நிச்சயம் பின் ஏன்? எதற்கு ?என்று கொங்கணனுக்கு!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் ஆனாலும்...
நாராயணன் அழகாகவே இங்கு வீற்றிருந்தான்.
ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் இவனுக்கு தெரியும் எதை என்று புரிய அதாவது கொங்கணனுக்கும் புரியும்.
பின் அவன் (பெருமாள்) நின்றிருக்கின்றான்!!!!.. எங்கோ? ஏதோ? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
நாராயணனும் ஆனாலும் எதை என்று புரிய... ஆனாலும் பின் கொங்கணன்.. என்ன சொன்னாலும் நேரில்.. சொன்னால்தான் நிச்சயம் நம்புவான்... என்பதையெல்லாம் பரிசுத்தமாக.. அறிந்தும் புரிந்தும்!!
இதனால் நிச்சயம் அங்கும் இங்கும் பல பல வழிகளிலும் கூட தெய்வங்கள் எதை என்று அறியாமலும் புரியாமலும் நிச்சயம் கொங்கணன் கூட... கடைசியில்...
ஆனாலும் நிச்சயம் அதாவது அறிந்தும் பின் அதாவது விஷ்ணுவும் கூட அழகாகவே நிச்சயம் தன்னில் கூட சக்கரத்தோடு.. சிறு குழந்தை ரூபம் எடுத்து வந்தான்!! நிச்சயம் தன்னில் கூட பின்!
அதாவது அவ் சக்கரத்தை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... உருட்டலாம் என்று நிச்சயம் உருட்டிவிட்டு.... அது நிச்சயம் கொங்கணன் தலையில் பட்டது.
கொங்கணனுக்கு கோபம் வந்தது...
பின்... அட !! குழந்தையே!!!! அறிந்தும்... யானே எவ்வாறாகவோ யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!
நிச்சயம் தன்னில் கூட.
நீ இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின்... என்னிடத்திலா விளையாடுவது!?!?! என்றெல்லாம்!!.. நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் அக் குழந்தையின் முகத்தை பார்த்தான்... கொங்கணன் கூட.
பின் அழகாகவே!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட.... குழந்தாய்!!!... அருகே வா!!!
எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட
ஆனாலும் கொங்கணனுக்கு தெரியும்... அனைத்து விஷயங்களும் தெரியும்.. நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் நிச்சயம் மறைத்திட்டான்.. மாயை.. எதை என்று புரிய.
அதேபோலத்தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கும் அப்பனே புண்ணியங்கள்.. இருக்கின்றது என்பேன் அப்பனே..
அனைவருக்குமே பின் இவ்வுலகத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் புண்ணியங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அப் புண்ணியங்களை அப்பனே பின் அதாவது.. புண்ணியங்கள் மட்டும் செயல்பட ஆரம்பித்தால் அப்பனே.. நிச்சயம் உங்களுக்கு ஒன்றும் தெரியாமல் போய்விடும் அப்பா...
இதனால் அப்பனே இறைவனே..அப் புண்ணியங்களை மறைத்து வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே...
பாவத்தை முதலில் அனுபவியுங்கள் என்று அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.
அவ் பாவத்தை முதலில் அனுபவிக்கையிலே.. அப்பனே நிச்சயம் இன்னும் அப்பனே பின் மனிதன் தேவையில்லாமல்... பாவத்தை சம்பாதித்து சம்பாதித்து....அப் புண்ணியங்களை அனுபவிக்காமலே சென்று விடுகின்றான் என்பேன் அப்பனே.. நிச்சயம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து அப்பனே நிச்சயம்... இதே போலத்தான் அப்பனே மனிதன்..
இதை பணமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே... நிச்சயம் பின் நிறைய சம்பாதிப்பது.. அதாவது அப்பனே பின் ஓரிடத்தில் இட்டுக் கொள்வது சேமிப்பு வங்கியில் அப்பனே அதை பயன்படுத்தாமலே சென்று விடுவது போலத்தான்.. இருக்கின்றது அப்பனே இக்கதை!!
அப்பனே இக்கதை என்பது அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட மனிதனின் எவை என்று அறிய அப்பனே.. அதாவது பணத்தின் கதை.. எதை என்று புரிய அப்பனே
நன்முறையாக இதனால் அப்பனே அறிந்தும்... இதனால் கொங்கணனும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட்டான்.
நிச்சயம் உன் அன்னை பின் அதாவது உன் தந்தை எங்கு இருக்கின்றார்கள்?? என்று கூட!!
அக்குழந்தையும் நிச்சயம் என் அன்னை தந்தை யாரும் இல்லை.. ஆனாலும் அறிந்தும் கூட பின் இச்சக்கரத்தை வைத்துக்கொண்டு தான் யான்.. விளையாடிக் கொண்டிருக்கின்றேன் என்று.
கொங்கணனும்!!!
அடடா!!! உன்னை பெற்றவர்கள் இப்படியா விட்டுட்டு செல்கின்றது???... நிச்சயம்.. அறிந்தும் கூட அவர்களுக்கெல்லாம் என்ன? ஏது? என்றெல்லாம் நிச்சயம்!!
சரி அறிந்தும் புரிந்தும் எதை என்று... அறிய இதனால் பின்.... அதாவது குழந்தை கொங்கணனிடம் கேட்டது...
பின் அதாவது பின்.. தந்தையாகவே நீ இருந்து அன்னையாகவே நீ இருந்து பின் நிச்சயம் என்னை பெரியவன் ஆக்கு.. அனைத்தும் அறிந்தும் புரிந்தும் கூட.
அதனால் பின் துணை எந்தனுக்கும் யாரும் துணை இல்லை!!
அதனால் நீயே துணை என்று.
ஆனாலும் பின் கொங்கணனோ... பின் நிச்சயம் தன்னில்... கூட பின் கண்ணீர் தாரை தாரையாக விட்டான்.
நிச்சயம் ஆனால் இருப்பதோ சில நாட்களே!!!
ஆனாலும் இக் குழந்தையே நம்மிடத்தில்... கேட்கின்றதே!!..... எவ்வாறு நிச்சயம் அறிந்தும் புரிந்தும்.. எவ்வாறு குழந்தையை காப்பது???
இறைவா !!!..என்ன சோதனை இது!!!
அதாவது பல பல கோடி பிறவிகள் பிறந்திளைத்தேன்.
ஆனாலும் பின் கடைசியில்... இவ்வாறு சோதனையா???
இக் குழந்தையை யான் பின் எப்படி விட்டு விட்டு செல்வேன்??? நிச்சயம் தன்னில் கூட!!
அவ்வாறாகவே... அதாவது இன்னும் சில மாதங்களே இருக்கின்றது என்று..
ஆனாலும் அக் குழந்தையோ ... நிச்சயம் பின் ஐயோ!!!.. ஏதாவது யான் தவறாக பேசி விட்டேனா!! என்று!!
கொங்கணன்
இல்லை குழந்தையே நிச்சயம்.. தன்னில் கூட பின் உன்னை அவ்வளவு பின் சாத்தியமில்லை..
(நெடுங்காலம் காப்பாற்ற சாத்தியமில்லை)
..யான்... இன்னும் பின் முப்பதோ!? அல்லது நாற்பதோ!!!.. அல்லது 50 நாட்களோ தான்... இருக்கப் போகின்றேன்.
மடியப்போகின்றேன் என்று.
குழந்தையும்
அடடா !! பெரியவனே!! இப்படி சொல்கின்றாயே!! நிச்சயம் தன்னில் கூட!! ஏன்? எதற்காக? பின் அதாவது.. நீயே முடிவெடுத்து விடுவாயா?? என்ன!!! என்றெல்லாம்!!!
ஆனாலும்.. நிச்சயம் எவ்வாறாக நீ முடிவெடுத்தாய்??? என்று!!
ஆனாலும் கொங்கணனுக்கு பின் யோசனை..... என்னடா? ஏது எவை என்று புரிய.. என்று கூற எப்படி?? நம் தனே முடிவெடுக்க முடியும் என்றெல்லாம் நிச்சயம் ஆனாலும்... மாயையா என்றெல்லாம்..
ஆனாலும் அவந்தன் பின் முடிவெடுத்தது.. சரிதான் அறிந்தும்.. பின் அனைத்தும் உணர்ந்தவனே... கொங்கணன்.
ஆனாலும்... இவ்வாறாக இக்குழந்தை பின் பல.. விதங்களிலும் பேச பேச நிச்சயம்... பின் கொங்கணனுக்கு சந்தேகங்கள் ஆயிற்று.. நிச்சயம்.
இருப்பினும் மீண்டும் அக்குழந்தை... அதாவது பின் நாராயணனே... நிச்சயம் இவை பின்... தெரிந்து கொள்வானா??
என்று மீண்டும் மாயையில்... பின் நிச்சயம் மூளையை... பின் சலவை செய்து விட்டான்.
இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட.. அதாவது நாட்களும் பின் ஓடிக்கொண்டேருந்தது
ஓடிக்கொண்டே இருந்தது.
அப்பனே இன்னும் அப்பனே... பல வகையான ரிஷிமார்களை பற்றி யான்.. குறிப்பிடுவேன் அப்பனே இன்னும்... வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் அப்பனே...
நிச்சயம் அப்பனே மக்களுக்காக.. பின் மக்களுக்காகவே... பல கோடி அப்பனே பிறவிகள் பிறந்து பிறந்து வாழ்ந்தவர்களப்பா!!
அவர்களைப் பற்றி எல்லாம் தெரியாமல் போய்விட்டது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் என் பக்தர்களை.. அப்பனே பின் யான் உருவாக்கி... அப்பனே அவர்களையும் கூட... அப்பனே நிச்சயம்.. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கொண்டு செல்வேன் அப்பனே.
இதனால் அப்பனே.. அதனாலும் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும் அப்பா... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே... உங்கள் வாரிசுகள் அப்பனே அழகாகவே அப்பனே பின் இறைவனை பிடித்துக் கொண்டு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட மாற்றம் அடைய அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்கள் இருக்கின்றோம் நலன்கள் ஆகவே.
இதே போலத்தான் அப்பனே
அப்பனே நிச்சயம் மீண்டும் மீண்டும்.. நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது அப்பனே.
நிச்சயம் பின் அழுது கொண்டே.. கொங்கணன்.
இறைவா!! உன் படைப்பு எத்தனை ???எத்தனை??
நிச்சயம்... எதுவுமே வேண்டாம் என்று இங்கு வந்து விட்டேன்.
ஆனால் குழந்தையின் மீது பாசத்தை காட்டி.. நிச்சயம் தன்னில் கூட இக்குழந்தையை யார்? கவனிப்பார்கள்? என்று!!
ஆனாலும் நாராயணன் அனைத்தையும் உணர்ந்து கொண்டே இருந்தான். அறிந்தும் புரிந்தும்!!
ஆனாலும் நாராயணனோ (குழந்தை ) நிச்சயம் தன்னில்.. எதை என்று புரிய... எந்தனுக்கு இனிப்புகள் வேண்டும் இனிப்புகள் வேண்டும் என்று அழுது கொண்டே.. அதாவது அச்சிறுவனும் இனிப்பு கள்.. வேண்டுமென்று.
ஆனாலும்.. இருப்பதோ சில நாட்களே!!!.. நான் எங்கு செல்வேன்??.. எதை கொண்டு வருவேன் என்பதை எல்லாம்.. நிச்சயம் கொங்கணன் அறிந்தும் புரிந்தும்!!!
எவை எவை எல்லாம் நிச்சயம் எதை என்று யான பின் எவ்வாறு என்பதையெல்லாம் பின் இங்கு அதாவது... அடர்ந்த காட்டில்!!... எங்கு ??அறிந்தும் புரிந்தும்!!
இதனால் அதாவது அறிந்தும் பின் நிச்சயம் தன்னில் கூட..
.நந்தியான்!!!!
அதாவது
நந்தியம்பெருமானும் அழகாகவே!!!...
(நந்தி பகவான் பசு மேய்ப்பாளர் ரூபத்தில் தாய் பசு கன்றோடு அங்கு வந்து அவர் முன்பு நடமாடிக் கொண்டு)
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு
ஆனால் கொங்கணனுக்கு பின் சரியாகவே பின் இறைவன் ... கொடுத்த பிறவி அதாவது முடியப்போகின்றது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... இன்னும் அதாவது கடைசி தன்னில் கூட!!!
நந்தி பகவான் பசு கன்று போல வேடம் விட்டு... என்ன தேவை?? என்றெல்லாம்
நிச்சயம்
அதாவது நந்தியம்பெருமான் வந்து நிச்சயம்.. பசு கன்றோடு நிச்சயம்... அதாவது ஏதோ பின் தெரியும்படி!!! (கொங்கனர் கண் முன்பாக)
அதாவது பின்...
அக் குழந்தையோ நிச்சயம் பின். இவர்களைப் பார்த்து.. அதோ அங்கு இருக்கின்றார்கள்!
(அதோ பசு!!!... அந்தப் பசு பால் தரும் அவர்களை அழையுங்கள் என்று கொங்கணரை பார்த்து குழந்தை)
நிச்சயம் பின்... அவை தன் நிச்சயம் பின்... அதில் கூட இனிப்பு எவை என்று கூட.. அதாவது நிச்சயம் தன்னில் கூட பின்.. பாலாகவே !!!
நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட பின் இனிப்பாகவே.. அறிந்தும்!
இதனால் நிச்சயம் இதற்கும் பல வகையிலும் பாலை கொங்கணன் தயாரித்து.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும்... எதை என்று அறிய நிச்சயம் தன்னில்.கூட இதனால் பின்.. சீராட்டினான் அக்குழந்தையைக் கூட.
பின் இதோ அவை உருண்டையாக பின் நிச்சயம் தன்னில் கூட.. பாலுடனே சில மூலிகைகளை இட்டு நிச்சயம் தன்னில் கூட பின் அக்குழந்தைக்கு கொடுத்தான் நிச்சயம்.
மீண்டும் பின் சாரை சாரையாக நிச்சயம்.. தன்னில் கூட அவை கொடுக்கும் பொழுதே... நிச்சயம் தன்னில் கூட பின் கொங்கணனின் கண்களில்.. பின் நீர் வழிந்து நிச்சயம் தன்னில்.....நிச்சயம் தன்னில் கூட பின்... அவை தன் அப்படியே... அதாவது உண்டு கொண்டிருக்கும் பொழுது குழந்தையின் வாயில் உள்ளே அப்படியே சென்றுவிட்டது நீர் (கண்ணீர்)
ஆனாலும் அனைத்தும் திருவிளையாடல் தானப்பா!!!
அப்பனே இவையெல்லாம் அழகாகவே இன்னும் அதாவது திருத்தலத்திற்கு வந்து வந்து செல்கின்றீர்கள் அல்லவா??
(திருப்பதியில் கல்வெட்டுக்கள்)
அங்கு என்ன எழுதி வைத்திருக்கின்றார்கள் என்பது யாருக்காவது தெரியுமா????
நிச்சயம் தெரியாதப்பா.
அவை யாவும் உங்களுக்கு கற்பிப்பேன் அப்பனே.
கலியுகத்தில் என்ன ஏது என்று புரிய அப்பனே பின்... என்னென்ன எப்படி வாழ்ந்தால் நன்மை பெறும்? எப்படி வாழ்ந்தால் வெற்றி பெறும்? என்பதை எல்லாம்... அங்கு எழுதி வைத்திருக்கின்றானப்பா!!!
ஆனாலும் அப்பனே உண்மையான பக்தனுக்கு மட்டுமே பின் தெரிய வேண்டும் என்று நாராயணனிடத்தில் ஒரு பக்தன்.. உரிமை அதாவது இப்பொழுது உரிமை என்று சொல்வார்களப்பா!!! அதாவது அவ் உரிமையை வாங்கிட்டு சென்று விட்டானப்பா.
அவ் உரிமையை அப்பனே நிச்சயம்...அவ் ஆன்மாவிடம் எடுத்துக் கூறி உங்களுக்கு..
(பெருமாளிடம் வரம் வாங்கிய அந்த உண்மையான பக்தனின் ஆத்மாவிடம் குருநாதர் பேசிவிட்டு அனைவருக்கும் உரிமையை வழங்கப்போகின்றார் தெரிவிக்க போகின்றார்)
நிச்சயம் வழங்குவேன் அப்பனே.
பொது நலமாகவே இருக்க வேண்டும்!!
சுயநலமாக இருக்கக் கூடாது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அனைத்தும் யான்... பின் அதாவது நீங்கள் கேட்டதெல்லாம்.. தர யான் தயாராக இருக்கின்றேன்.
ஆனாலும்.. அதை தந்து விட்டாலும் பின் நீங்கள் கர்மா பாதையைப் பிடித்துக் கொண்டு..
அதனால் தேவையானதை கொடுப்பேன்...
இதனால் அப்பனே நல்விதமாகவே அறிந்தும் புரிந்தும்... கொங்கணனும் இப்படியே நாட்களாக நாட்களாக... நிச்சயம் அறிந்தும் புரிந்தும்.
ஆனாலும் பின் ஒரு நாள் நிச்சயம் எஞ்சி (ஒரு நாள் மட்டும் மிச்சம் இருந்தது)
கொங்கணன் அழுது கொண்டே அழுது கொண்டே.
ஆனாலும் பின் அக்குழந்தையும்.. கொங்கணனை விடக்கூடாது என்றெல்லாம்.
கொங்கணனை இழுத்து பின் அழுது கொண்டே.. இருக்கும் கொங்கணனின் தலையில்.. குட்டினான்.பின் கெட்டியாக!!
கொங்கணன்... ஐயோ!!!!? பின் வலிக்கின்றதே என்று !!!
குழந்தையும்!!!
கொங்கணா!!!
அதாவது இத்தனை நாட்களாக... எவ்வளவு? எவ்வளவு? எத்தனை வருடங்கள் வாழ்ந்தாயே...
யான்? யார் என்று? பின் புரியவில்லையா? கொங்கணனே....
அறிந்தும் புரிந்தும்.. எங்கெங்கெல்லாம்? பல ஞானிகளையும் பல ரிஷிமார்களையும்.. பல வழிகளிலும் கூட தெய்வத்தையும் எங்கெல்லாம்... அறிந்தும் புரிந்தும் அதாவது.. அலைந்து திரிந்தாயே!!!
(எங்கெங்கோ அலைந்து திரிந்து பல தெய்வ தரிசனங்கள் ஞானிகள் ரிஷிகள் தரிசனங்கள் என பல பிறப்புகள் எடுத்து எடுத்து கடந்து வந்தாலும் என்னை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று)
யான் தான்!!! நாராயணன்!!! என்றெல்லாம்.
பின் அடடா!!!!! என்றெல்லாம்!!!!
நிச்சயம்.. இவ்வாறாக கெட்டியாக பிடித்துக் கொண்டான் நாராயணனை கொங்கணன்.
குழந்தையே !!!! உன்னை விட்டு யான் நிச்சயம்... இனிமேலும்!!!
நாராயணனே நீயா!!!
அனைத்தும்.. மாயையாக மறைத்து விட்டாயே குழந்தையாக...
உன்னை இறுக்கி கொள்ள வேண்டும்...
யான் அதாவது எந்தனுக்கு அதாவது முற்று என் உடம்பிற்கும் ஆன்மாவிற்கும் கூட.
நாராயணனும் கொங்கனனிடம்
நிச்சயம் பின் என் தந்தை இதனால்... உன்னை விட்டு...
அதாவது என் அருகிலே இருப்பாய் நிச்சயம் எப்பொழுதும் என்று.
ஆனாலும் பல ரிஷிகள் உன்னிடம் அதாவது உன்னிடத்திலே இருக்க வேண்டும் என்று கொங்கணனும் கூட.
பின் எப்படி என்றெல்லாம் நிச்சயம் பின் வலது கையாகவும் பின் இடது கையாகவும்.. இரு கால்களிலும் என்னை மிதித்துக் கொண்டு இரு.. குழந்தாய்... என்றெல்லாம்.
இதனால் அப்பனே... இப்பொழுது தரிசனம் கண்டீர்களே (தரிசனம் செய்துவிட்டு வந்து வாக்குகள் கேட்டுக் கொண்டிருந்த அடியவர்களுக்கு)
அங்கு நிச்சயம் கொங்கணன் படுத்து உறங்கிக் கொண்டே இருக்கின்றான்.
(திருப்பதியில் பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கும் இடத்தில் பெருமாளின் திருப்ப பாதங்களுக்கு கீழே கொங்கணர் சித்தர் இருக்கின்றார்)
அப்பனே நாராயணன் மிதித்துக் கொண்டே இருக்கின்றான் பாசப்பிணைப்போடு அப்பனே.. நாராயணன் என்பேன் அப்பனே.
அவைமட்டும் இல்லாமல் பின் வலது கரத்திற்க்கும் பின் இடது கரத்திற்கும்... சில தொலைவிலே அழகாக வடக்கிலும் தெற்கிலும் அப்பனே... இதனால் அழகாகவே மார்பின் மீது விளையாடிக் கொண்டிருக்கின்றான் அப்பா. நாராயணன் என்பேன் அப்பனே.
இவ்வாறாக இப்படி விளையாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு வருவோருக்கெல்லாம் தெரியாமல் அப்பனே.. வாரி வழங்கி கொண்டிருக்கின்றான் அப்பா... தரிசனங்களை கூட வரங்களை கூட... அப்பனே.
ஆனால் இவை தெரியாமல்... மனக்குழப்பத்தோடு வந்தால் மீண்டும்... இவன் தெரிந்து கொள்வான் நிச்சயம்...
(திருப்பதிக்கு மனக்குழப்பத்தோடு வரக்கூடாது... அப்படி வந்தால் கொங்கணர் அதை தெரிந்து கொண்டு குழந்தையாக நாராயணன் வரத்தை கொடுத்து விட்டால் என்ன ஆவது.. என்று கொடுத்த வரத்தை தடுத்து விடுவார் கொங்கணர் சித்தர் அதனால் மனக்குழப்பத்தோடு மனதில் நிறைய எண்ணங்களோடு திருப்பதிக்கு வரக்கூடாது)
குழந்தை நிச்சயம் தெரியாமல் வரம் கொடுத்து விடுமா???? என்று எண்ணி.. நிச்சயம் கொங்கணனும் கூட அவ் வரத்தை... நிச்சயம் பிடிங்கிடுவானப்பா.
சொல்லிவிட்டேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே எதையும் நிச்சயம்... நாராயணனிடம் கேட்கக் கூடாது என்பேன் அப்பனே.
அவன் விளையாடுகின்றது போலே நீங்கள் மனதில் நினைத்தாலே!!!
கொடுத்து விடுவான் என்பேன் அப்பனே அழகாகவே.
இன்னும் கொங்கணனின் லீலைகள் இன்னும் தொடருமப்பா.. இன்னும் பேசுகின்றேன் அப்பனே
ஆசிகள் !! ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.
https://www.youtube.com/watch?v=C0Cbs8M4_5g
உலகம் அறியாத கொங்கண சித்தரின் செல்லக் குழந்தை திருப்பதி நாராயணர் அருள் ரகசியங்கள்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
https://siththanarul.blogspot.com/2025/09/1938.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !
🙏
ReplyDelete