3/9/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு.
அப்பனே வரும் காலத்தில் சில.. அழிவுகள் இருந்தாலும்.. ஏற்றங்கள் நிச்சயம் தன்னில் கூட.
அவரவர் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நிச்சயம் அவரவரை காத்துக் கொள்வது சிறப்பு. அதையெல்லாம் அப்பனே யாங்கள்.. சொல்லிக்கொண்டே!! மீண்டும் மீண்டும் அப்பனே!
இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே.. அதை கடைப்பிடித்து வந்தாலே போதுமானதப்பா.
அப்பனே வாழ்க்கையில் உயர்வுகள் உண்டு.
அப்பனே இதனால் சொல்லிக் கொண்டே தான் வருகின்றோம்.. எவ்வாறு அழிவுகள்?? என்பதையெல்லாம் அப்பனே!!
ஆனாலும் அப்படி நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறெல்லாம் செய்தால்.. தன்னைத்தானே நிச்சயம் காத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.
நிச்சயம் அவை மட்டும் இல்லாமல்.. நிச்சயம் பின் பாதிப்புகள் நிச்சயம் தன்னில் கூட
பெரிய பெரிய பாதிப்புகள் அப்பனே!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட செயற்கை முறையிலே மனித உடம்பில்.. சில விஷ!!!.. எதை என்று புரிய அப்பனே சில அதிர்ச்சிகள்.. அப்பனே நிச்சயம் ஊடுகின்ற பொழுது.. மனிதனால் அப்பனே பலவகையிலும்.. அதாவது சொல்லிவிட்டேன் கண்ணில்!!!... இன்னும் புத்தி மாறுதல்... இன்னும் அறிந்தும் புரிந்தும் எவை எவை என்று தெரியாமலே!!!..
அவை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாலும்.. அப்பனே அதை நீங்கள்... பாதுகாக்க நிச்சயம் தன்னில் கூட.
அது மட்டும் இல்லாமல் நிச்சயம் எவ்வாறு.. எதை என்று புரிய இதனால்.. அப்பனே நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன்...
இதையும் அப்பனே ஆனாலும் சில ரகசியங்கள்... சில இடத்திலே சொல்ல வேண்டும்.. அப்படி சொன்னால் தான் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நாராயணனின் அருளும் கூட.
அதாவது அப்பனே பின் அவ் அவ் தெய்வத்தை நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின்பற்றி... அவனிடத்திலே அனுமதி வாங்கி.. அப்பனே அதை செப்பினால் மட்டுமே அப்பனே நிச்சயம்.. பலிதமாகும் (பலிக்கும்). அப்பனே செய்யும் விஷயங்கள் எல்லாம் கூட பலிதமாகும். என்பேன் அப்பனே.
அப்படி இல்லாமல் எதை எதையோ செப்பி கொண்டு இருந்தாலும்.. அப்பனே சாபங்கள் ஏற்பட்டு அப்பனே சில வினைகள் தானாகவே.. அப்பனே பின்.
இதனால்தான் அப்பனே நல்லது எங்கு சொல்லவேண்டும்???
எப்படி ஏது என்று.. அறிய அவரவர் சம்மதத்துடனே தெரிவிக்க வேண்டும் அப்பனே.
அதனால் அப்பனே நாராயணனின் சம்மதத்துடனே இப்பொழுது.. ரகசியத்தை தெரிவிக்கின்றேன் அப்பனே.
இது போலத்தான் அனைத்து ரகசியங்களையும் கூட அப்பனே.. அவரவர் அருள்பெற்றே அனைத்தையும்.. செப்பி !! உலகத்தவருக்கு..
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காலங்கள் காலங்களாகவே இவை தங்குமப்பா.
இதனால் அப்பனே புண்ணியவான்களுக்கு.. இதை சேர்த்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட உயர்வுகளும் கூட.
மற்றவர்களுக்கும் கூட செப்பி இதன் மூலம் அப்பனே.. நிச்சயம் பின் நல்வழிப்படுத்துவார்களப்பா. வரும் வரும் காலத்தில் அப்பனே.
அப்பனே நிச்சயம் அதாவது தற்பொழுது கூட... பார்த்தசாரதி எனும்..(திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்) திருத்தலத்தில் அப்பனே... அதன் முன்னே அப்பனே எதை என்று புரிய அப்பனே பெரும் ஆழி!!... அதாவது நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பொழுதெல்லாம்.
ஆழி = கடல்.
கடல் என்று இப்பொழுது.
அறிந்தும் கூட இதனால் அப்பனே.. நிச்சயம் அங்கு ஒருவன் இருந்தானப்பா!!!
அவன் யார்? என்பதை எல்லாம் அப்பனே!!.. பின்பு உரைப்பேன் அப்பனே!!
அப்படியே நிச்சயம் தன்னில் கூட அனைவரும் கூட அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார்கள் அப்பனே... பலமாகவே அப்பனே பின் நாராயணனே பார்த்தசாரதியே.. என்றெல்லாம் செப்பிக் கொண்டிருந்தார்கள்.. அப்பனே.
ஆனாலும்.. அவனும் அங்கே அமைதியாக.. உட்கார்ந்து நிச்சயம் அதாவது... பல வழிகளிலும் கூட அப்பனே அவன் ஞானத்தை.. பெற்றவன் தான்... அதாவது சிறு வயதில் இருந்தே அப்பனே பின்.. யாராவது கொடுத்தால் உட்கொள்வான்.. பின் நிச்சயம் அமர்ந்து விடுவான்... அப்படியே தூங்கி விடுவான் என்பேன் அப்பனே... இதேபோல் நிச்சயம் அனைவருமே... நாராயணனை பார்க்க செல்கின்றார்கள்.. அனைவரின் இல்லத்திலே காசுகள் பொங்கி வழிகின்றது!!
இதனால்தான் நாராயணன் இடத்தில் செல்கின்றார்கள்.
ஆனால் நாமோ!?... பின் அதாவது நம்மிடம் எதுவும் கிடையாது.. அதனால்தான் நாராயணன் நம்மிடத்தில் வரவில்லை என்று.. எண்ணிக்கொண்டிருந்தான்.
ஆனாலும்... மீண்டும் பின் அவன் எண்ணம் இப்படியே தான் இருந்தது..
ஆனாலும் நிச்சயம் பின் அனைவரையும் பார்த்தான்.. நிச்சயம் அதாவது அனைவரிடத்திலும்.. காசுகள் இருக்கின்றது!!
அதனால்தான்.. மீண்டும் நாராயணன் இடத்தில் செல்கின்றார்கள் என்று!!
ஆனாலும் எதை எவை என்று புரியாத அளவிற்கு கூட இதனால் நிச்சயம்.. பல வகையிலும் இன்னல்கள் இன்னும் இன்னும்.. தொந்தரவுகள் இன்னும் மழையினாலும்.... எதையெதையோ.
ஆனாலும் பின் அனைத்தும்.. நாராயணன் செய்த லீலைகளே!!!
அதாவது நாராயணன் அவனையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்... அதாவது இவன் என்ன செய்கின்றான்? என்று!!
இதேபோல் பின் பல வருடங்கள்!!!
ஆனாலும்.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. இன்னும் வயது எட்டியது... அதாவது முதியோன் வயது எட்டியது.. நிச்சயம் பின் கண்களும் கூட மங்கியது.. கால்களிலும் நடுக்கங்கள் அதாவது.. கைகளும் கூட நடுங்கியது..
இதனால் பின் யாரும் சரிவர உணவும்... கொடுக்கவில்லை..
இதனால் நாராயணனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான்.. தரிசனம்!!
அதாவது உனை பின்.. பார்க்க வருகின்றார்கள்.
இவ் ஏழைகளுக்கு எல்லாம் நிச்சயம் அனுமதி இல்லையா!! என்று!!
ஆனாலும் நிச்சயம் அனைத்தும் பின் மீண்டும் என்னதான்? பேசுகின்றான்? என்று.. நாராயணனும் பார்த்துக் கொண்டே இருந்தான்!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய!!.. அதாவது.. இதை இவை தவிர்த்து நிச்சயம் தன்னில் கூட.. அதேபோல்... எதை என்று அறிய கொங்கணனும் கூட...அவ் சமயத்தில் நிச்சயம் பல ஆலயங்களுக்கு சென்று அதாவது. நிச்சயம் பறக்கும் திறனை பின் பெற்றிருந்தான்.. கொங்கணன்.
பின் எப்பொழுதும்.. சித்தர்கள் இதனைக் கூட!!..(நினைத்த இடங்களுக்கெல்லாம் பறந்து செல்லும் சக்தி)
இதனால் பின் அப்படியே சுற்றி வருவோம் என்றெல்லாம் நிச்சயம் அதாவது அங்கே.. நிச்சயம் கொங்கணனும் அப்பொழுது இருந்தான்.
நாராயணரே.. நிச்சயம் உன் லீலை.. பின் புரிகின்றது!!
இதனால் பின் எத்தனை வருடங்கள் தான்... இவனை சோதிப்பாய்???
இதனால் நிச்சயம் தன்னில் அதாவது.. எதை என்று புரிய...
நாராயணனும்
கொங்கணனே... நீயும் புரிந்திருப்பாய்!!
அதாவது ஏதாவது ஒரு விளக்கத்தை சொல்!! இவனுக்கு!!
அதனால் நிச்சயம் இவனும்.. நல்படியாகவே நிச்சயம் இவ்வாறு கஷ்டப்பட்டு இருப்பவன் நம்மிடத்திலே.. இருக்கட்டும்.
வருபவருக்கெல்லாம் ஆசிகள் வழங்கட்டும் என்றெல்லாம்.. அப்பனே!!
இதனால்தான் அப்பனே.. இறைவன் அப்பனே நிச்சயம் பின் நல் மனிதர்களை அப்பனே நிச்சயம்.. கஷ்டங்கள் கொடுத்து பக்குவங்கள். ஏற்படுத்தி தன்னிடத்திலே வைத்துக் கொள்ள.. ஆசைப்படுகின்றானப்பா இறைவனே!!!
ஆனால்... மனிதனோ!? எந்தனக்கு கஷ்டங்கள் வந்து விடுகின்றது... எவ்வாறு ஏன் எதற்கு என்றெல்லாம்.. தெரியாமல் அப்பனே அவை இவை என்றெல்லாம் பின் செய்து... கடைசியில் ஒன்றும் நடக்காமல் அழிந்து.. அப்ப நீங்க மீண்டும் எதை என்று கூற பிறந்து... பிறந்து அப்பனே அதாவது.. தான் ஒருவன் மட்டும் அழியவில்லை என்பேன் அப்பனே.. தன்னைச் சார்ந்தோரையும் அழித்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல்... அவை பொய் இவை பொய் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் எதை என்று கூறிய.. பின் பைத்தியக்காரர்கள் போல் செப்பி கொண்டே செப்பிக்கொண்டே மனிதன்!!கூட.. அப்பனே..
எவ்வாறு? நியாயம் என்பேன் அப்பனே!!
முதலில் அப்பனே தன்னைத் தானே.. பாதுகாக்க முடியவில்லை என்பேன் அப்பனே.. தன்னைத்தானே அப்பனே சீர்படுத்தி அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட வாழத் தெரியாமல்... எப்படி வாழ்வது என்று...
பிரச்சனைகளோடு பின் வாழ்ந்தவர்கள் மட்டுமே.. அப்பனே இவ்வாறெல்லாம் செப்புவார்களப்பா!!!
நிச்சயம் அப்பனே யாங்கள் சொல்லியதை கடைப்பிடித்தால் அப்பனே நிச்சயம்.. ஓடுமப்பா அதாவது எதை என்று அறிய அறிய அதாவது நீர்!!!
அப்பனே பின் ஆற்றில் நீர் எவ்வாறு ஓடுகின்றது??.... என்பதெல்லாம் அப்பனே ஓடி ஓடி அதாவது.. நிச்சயம் கடலில் கலந்து விடும் அப்பா!!
அதேபோலத்தான் அப்பனே நிச்சயம்... கடல் என்பது இங்கு இறைவன்.
நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறு தான் என்பேன் அப்பனே.
ஆனாலும் பிரச்சனைகள் அதிகமாக அப்பனே மனிதனுக்கு இறைவன் மீது வெறுப்புகள் வரும் அப்பா.
அதாவது நல்லதை செய்தால் கோபங்கள் வரும் அப்பா.. நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பனே!!!
நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே எங்கள் வழியில் வருவோருக்கெல்லாம்.. அப்பனே நிச்சயம் யாங்கள் சொல்லியதை.............. செய்து வந்தாலே!!!...
.நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு பாவங்கள்??.. இருந்தாலும்!!.... அவை இங்கேயே நீக்கப்படும் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் செய்து வர செய்து வர!!.. செய்து வர.. அப்பனே நிச்சயம் படிப்படியாக.. அனைத்தும் மாறுமப்பா!!
இதனால் கொங்கணனும்.. நிச்சயம் தன்னில் அறிந்தும்.. புரிந்தும் இதனால்.. கொங்கணன் நிச்சயம் ஒரு குழந்தை போல்.. அதாவது குழந்தை வடிவில் சென்று நிச்சயம் தன்னில் கூட பின் கெட்டியாக.. எடுத்துக் கொண்டான் நிச்சயம்...அவ் முதியவனை.
அதாவது நிச்சயம் தன்னில் கூட யார் இக் குழந்தை??? யார் இக் குழந்தை ??? என்று முதியவனும் கூட!!
ஆனாலும் நிச்சயம் நம் தனக்கு பந்த பாசங்கள் யாரும் இல்லை... அதனால் இக்குழந்தையும் ஏதோ..!!!
நம் தனக்கு இவ்வளவு வயதாகியும் யாரும்..நம் தனை தொடக்கூட இல்லை!!! இக் குழந்தையோ கெட்டியாக.. பிடுத்து கெட்டியாக பிடித்து...
ஆனாலும் அங்கு வருபவர்கள் எல்லாம் நிச்சயம் பின் இக் கிழவனை அதாவது.. எப்படி இருக்கின்றான் பைத்தியக்காரன்... இவனிடம் போய் தாய் தந்தை எவர்???.. இவனிடத்தில் குழந்தையை விட்டு விட்டனர் என்றெல்லாம்!!!
நிச்சயம் அக்குழந்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு... நிச்சயம் தன்னில்.
ஆனாலும் அக்குழந்தையின் பாசத்திற்கு அடிமையாகி விட்டான்.. அதாவது அக் கிழவனும் கூட நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது அக்குழந்தையை பார்த்து குழந்தையே உனக்கு என்ன வேண்டும் ?? என்று!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் பின்... இதை என்று அறிய நிச்சயம்.. அதாவது கையை காட்டினான்... பின் கடல்!!
அதாவது பேசினான்!!
அதாவது நிச்சயம்..(கடலில்) கல்லை எடுத்துக்கொண்டு வா என்று!!!
ஆனாலும் பாசத்திற்கு அடிமைப்பட்டவன் நிச்சயம் கடலில் சென்று அக்கிழவன் ஒரு கல்லை.. எடுத்தான் பின் நிச்சயம்.. எதை என்று புரிய!!
அதாவது இவை என்று அறிய நிச்சயம் அக் கல்லை எடுத்து நிச்சயம் தன்னில் கூட.. இங்கே வை !! என்று..
ஆனாலும் கல்லை மணலிலே வைத்தான்.. அவனும் கூட.
இதனால் நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் அங்கே கல்லை வைத்திட்டு நிச்சயம்.. ஓடிவிட்டான்... அதாவது அக்குழந்தை ஓடிவிட்டது.
ஆனாலும். அவன் தான் கொங்கணன்.
அறிந்தும் ஓடிவிட்டு எதை என்று புரிய... ஆனாலும் மீண்டும் பின் யாரோ!?... எதை என்று அறிய அறிய ஒரு குழந்தை வந்தது... நம் தனை நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் எவை என்று அறிய அறிய பாசத்தை காட்டிவிட்டு ஓடி சென்றது..... ஆனாலும் இதுவே போதும்... பிறவி!!!
பின் இறைவனாகவும் இருக்கலாம் என்று கணித்தான்!! அக்கிழவன்!! அறிந்தும் கூட!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அக் கல்லும் கூட சரியாகவே எதை என்று புரிய ஆனாலும்.. எவை என்று அறிய நிச்சயம்... அதனைக் கூட கெட்டியாக பிடித்துக் கொண்டு... நிச்சயம் ஆனாலும் குழந்தை கொடுத்தது என்று...
ஆனாலும் மேலிருந்து நிச்சயம்.. எதை என்று கூற ஒரு குரல் வந்தது!!(அசரீரி)
கிழவனே!!!... பின் நிச்சயம் வந்தது...யானே!!!... நிச்சயம் தன்னில் கூட!!
அதாவது எவை என்று புரிய அதாவது பின் பாசத்திற்கு அடிமை ஆனாய் அல்லவா... நிச்சயம் இக்கல்லை எடுத்து எவை என்று புரிய... அதாவது.. ஏழுமலை ஏறு!!
நிச்சயம் உன் வேண்டுதல் அதாவது கடைசி காலத்தில் என்ன வேண்டுமோ!?! அது நிச்சயம்.. பலிக்கும் என்று!!!
ஆனாலும்.. நிச்சயம் அவன் பாசத்திற்கு அடிமைப்பட்டு விட்டான் அதாவது நிச்சயம் அக்குழந்தை வேண்டுமே என்று.. எப்பொழுது பார்க்க வேண்டுமே என்று... இதனால் நிச்சயம் அக்கல்லை தூக்கினான். அழகாக பின் நடந்து வந்து.. ஏழுமலைக்கு!!! குழந்தையை நினைத்துக் கொண்டே.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... இங்கு வந்து (திருமலை திருப்பதிக்கு) எதை என்று அறிய அறிய.. நாராயணனிடம் நிச்சயம் தன்னில் கூட.. கேட்டான்!
நிச்சயம் அக்குழந்தையை அனுதினமும் யான் பார்க்க வேண்டும்...
பின் யார்? தாய் தந்தையர்!!... எங்கே இருக்கின்றார்களோ பின் என்னை அங்கே நிச்சயம் விட்டு விடு!!! யான் வெளியே கூட அதாவது கடை காலங்களில் பிச்சை எடுக்க கூட அக் குழந்தையை யான் பார்த்து ரசித்துக்கொண்டே.. இருக்கின்றேன் என்றெல்லாம்.
நிச்சயம் அதே போல் எதை என்று புரிய... எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.. பின் அதாவது சரியாகவே அக் கல்லை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று எடுத்து நிச்சயம்
மீண்டும்.. அதாவது கொங்கணனும் கூட.. எதை என்று புரிய.. எதை என்று அறிய இதனால் நிச்சயம்.. எவை என்று கூற அதாவது கல்லை.. வைத்துக்கொண்டே கேட்டான்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்படியே.. நிச்சயம் மீண்டும் அமர்ந்தான். அறிந்தும் புரிந்தும் கூட.
இதனால் நிச்சயம் பின் கொங்கணனை.. நாராயணன் நிச்சயம் அழைத்து... கொங்கணனே நிச்சயம் அவன்.. வரத்தைக் கேட்டு விட்டான்!!
அதாவது நீதான் குழந்தையாக செல்ல வேண்டும்... இதனால்.. அவன் பின் என்ன விரும்புகின்றானோ!?? அதனை செய் என்று!!
மீண்டும் அறிந்தும்.. எதை என்று அறிய!!
அதேபோல்.. நிச்சயம் கல்லை வைத்துக் கொண்டு... ஆனால் நிச்சயம் கல்லருகே.. கொங்கணனும் வந்து பல வழிகளிலும் கூட நிச்சயம் குழந்தை ரூபத்தில் அதாவது!!! முதியவனே!!!
குழந்தை ரூபத்தில் வந்தவன் யானே!!!
நாராயணன் சொற்படி(சொன்னபடி) தான் யான் வந்தேன்!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட.
அதனால் அக் கிழவனும் மகிழ்ந்தான்!!
நிச்சயம் வந்தது யார்? என்று தெரியும்!! இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய.. பின் எனை!!!! அதாவது... எதையுமே யான் ஆசைப்பட்டதில்லை!!
ஆனாலும் பின் பந்த பாசத்திற்கு நிச்சயம் தன்னில் கூட... அதாவது உங்கள் மீதுதான் யான்.. பாசம் வைத்து விட்டேன்... இதனால் நிச்சயம் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என்னை... நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.
இதனால் எவை என்று புரிந்தாலும் கூட ஆனாலும் பின்... கொங்கணனும் கூட.. மீண்டும் எதை என்று அறிய அறிய...
நீ எங்கே இருந்தாயோ!!!... அங்கேயே செல்!!
(திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)
நிச்சயம் பின் இக் கல்லையும் எடுத்துச் செல்... இதனால் பின் அங்கே... வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. உன்னைப் போல் நிச்சயம் பல பேர் இருப்பார்கள் அல்லவா... அவர்களுக்கெல்லாம் நிச்சயம் ஆசிகள் வழங்கிக் கொண்டே வா!!! அறிந்தும் புரிந்தும் கூட!!
இதனால் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட இதனால்... எதை என்று கூற இதுவும் கலியுகத்திலே.. நடந்தது.
அக் கிழவன் மீண்டும் சென்றான்.. நிச்சயம் தன்னில் கூட அக்கல்லை வைத்துக்கொண்டு.. வருபவருக்கு எல்லாம் சில பாவங்களை கூட தொலைத்தான்!
இப்பொழுதும் கூட மறைமுகமாக நிச்சயம்..அக் கல்லை வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட.. எதை என்று அறியாமல் கூட.. பாவத்தை தொலைத்துக் கொண்டே!!
பின்.. அருளாசிகள் கொடுத்துக்கொண்டே!!!
இவ்வாறாகவே நிச்சயம் பார்த்தசாரதி.. பின் அஷ்டலட்சுமியும் கூட காளிகா தேவியும் கூட... ஒரே நாளில் பின் அமாவாசை நிச்சயம் பௌர்ணமி.. தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாக பின் வணங்கி கொண்டு வந்தாலே.. பின் நிச்சயம் அனைத்தும் மாறும்!!
(சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் கடல் ஓரத்தில் இருக்கும் அஷ்டலட்சுமி திருக்கோயில்
பார்த்தசாரதி திருவல்லிக்கேணி திருக்கோயில்
சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயில்.
இக் கோயில் முன்பு கடலோரத்தில் அமைந்திருந்தது.)
அதேபோல் நிச்சயம் தன்னில் கூட நீங்களும்.. பார்த்தசாரதியையும் கூட நிச்சயம் நினைத்து நிச்சயம் பின் கடலிலே சென்று.. நிச்சயம் பின் பெருமானை நினைத்து நிச்சயம் ஒரு கல்லை எடுத்து அதை தன் நிச்சயம். தன்னில் கூட அறிந்தும் புரிந்தும்.. எவை என்று அறிய அறிய நிச்சயம் பின் பெருமானிடம் பின் எத்தனை.. சுலபமாக நிச்சயம் அதாவது பெரிய.. கல்லா?? சிறிய கல்லா???..
(என்றெல்லாம் மனக்குழப்பங்கள் வேண்டாம்)
உங்களுக்கு தேவையானதை உங்கள் மனதில் பட்டதை.. சிறு கல்லாவாவது இருக்கட்டும் எப்படியோ..தாம் தான்.. நிச்சயம் மனப்பூர்வமாக எடுத்து நிச்சயம் தன்னில் கூட... அதாவது ஏழுமலைக்கு ஏறி (அக் கல்லை எடுத்து திருப்பதி மலைக்கு கொண்டு சென்று) அக் கல்லை நிச்சயம் தன்னில் எவை என்று புரிய.. சிறிய கற்கள் ஆனாலும் சரி எவை என்று புரிய தான் தன் விருப்பத்திற்கு ஏற்ப கூட எவை விரும்புகின்றீர்களோ... அதை நிச்சயம் நாராயணனிடம் கேட்டு... நிச்சயம் பின் அக் கல்லை நிச்சயம் தன்னில் கூட சரியாகவே தான் தம் இல்லத்தில் வைத்து.. நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற... அதிலும் கூட... வெள்ளி தகடு.... அதாவது என்னால் முடியவில்லையே... என்றாலும் ஏதோ ஒன்று... நீரில் வைத்து பச்சைக் கற்பூரத்தை இட்டு நிச்சயம் பின் அதில் கூட சரியாக அக்கல்லை இட்டு நிச்சயம் அனுதினமும் நாராயணா நாராயணா என்றெல்லாம் வேண்டிக்கொண்டே!!!
(அதாவது அக்கல்லை வெள்ளி பாத்திரத்தில் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் அவரவர் வசதிக்கேற்ப பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அந்த கல்லை விட்டு அதில் பச்சைக் கற்பூரத்தை பொடித்து கலந்து நாராயணனாக நினைத்துக் கொண்டு வணங்கி வருதல் வேண்டும்)
இவ்வாறாக பலமுறை நிச்சயம் தன்னில் கூட பின்... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அனுதினமும்.. நிச்சயம் பின் அவைகளுக்கெல்லாம்.. எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. பின் அதாவது..அக் கல் இருக்கின்றதே!!!.(அக்கல்லை நாராயணனாக பாவித்து). சில சில... இனிப்புகளையும் கூட அவை தன் கூட வைத்து
அதை சிறியவர்களுக்கும் கொடுக்க கொடுக்க நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய!!
(இனிப்புகளை நைவேத்தியமாக படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்)
பின் அதாவது அவ் ஞானி (கிழவர்) இருக்கின்றானே!!!.. அவனும் கூட நீங்கள் கேட்டதை நிச்சயம் பின் அள்ளித் தருவான்.. குழந்தை வரத்தை கொடுப்பான்!! பின் நிச்சயம் பணத்தையும் சந்தோசமான வாழ்க்கையையும் நிச்சயம் கொடுப்பான்!
இவை தன் நிச்சயம் செய்து கொண்டே ஆக வேண்டும்.
ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட... ஒரு பணி செய்தால் ஒரு நாள் மட்டும் செய்யக்கூடாது தொடர்ந்து செய்து கொண்டே வந்தாலே வெற்றிகள்.. மாற்றங்கள்!!! உண்டு.
அவை மட்டுமில்லாமல்.. வரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட நிச்சயம் ராகு கேதுக்கள்.. நிச்சயம் எவை என்று புரிய பின்.. அதாவது மனைவி கணவன்மார்களுக்கு இடையே நிச்சயம்.. சண்டை சச்சரவுகள் இவையெல்லாம்.. ஏற்படுத்தி பிரிவு நிலைகளை.. ஒருவருக்கொருவர் பிரிவு நிலைகள் என்றெல்லாம்.(பிரச்சனைகளால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி இவர்களும்)
நிச்சயம் அவ்வாறாக இருப்பவர்கள் எல்லாம் நிச்சயம் முதலில் கூட பின் அதாவது.. அறிந்தும் ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து.. நிச்சயம் (பசும் மஞ்சள் துண்டு கோர்த்து கட்டிய தாலி கயிறு)... நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே... தன் மனைவிமார்களிடம் கழுத்தில் இட்டு.. நிச்சயம் தன்னில் கூட பின் நாராயணனுக்கும் ராகுவிற்கும் கேதுவிற்கும் நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட பின் தியானங்கள் செய்து.. காயத்ரி மந்திரங்களையும் கூறி நிச்சயம்
(நாராயணன் காயத்ரி மந்திரம் ராகு கேது காயத்ரி மந்திரங்கள் துர்கா தேவி காயத்ரி மந்திரங்கள் கூறி வணங்கி)
பின் துர்கா தேவியின் மந்திரத்தையும் கூறி வணங்கி.. வணங்கி எடுத்துரைத்து எடுத்துரைத்து.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் கூட.. நிச்சயம் பெருமானிடம் அதாவது.. ஏழுமலை ஏறி பெருமானிடம் சமர்ப்பித்து !! நிச்சயம் இதோடு எவை என்று.. பிரச்சனைகள் வரக்கூடாது என்று.. நிச்சயம் இவ்வாறாகவே.. இடையிடையே!! அதாவது மூன்று மாதங்கள் 5 மாதங்கள்.. செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் பிரச்சினைகள் அகலும் அப்பா... நிச்சயம் வருங்காலத்தில் ரகசியங்கள் எல்லாம் சொல்லுகின்றேன் அப்பனே
(கணவன் மூலம் புதிய தாலி கயிறு கட்டி பெருமாளை ராகு கேதுவை துர்கா தேவியை நினைத்து அனுதினமும் வணங்கி காயத்ரி மந்திரங்கள் சொல்லி ஜெபம் செய்து திருப்பதி மலைக்கு சென்று உண்டியலில் அதை சமர்ப்பணம் செய்ய வேண்டும் இவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை இடையிடையே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செய்து கொண்டே வர வேண்டும்)
நாராயணர் காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்"
துர்கா காயத்ரி மந்திரம்
ஓம் காத்யாயனய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி தன்னோ துர்கிப்ரசோதயாத்
ராகு கேது காயத்ரி மந்திரம்
ராகு காயத்ரி மந்திரம்:
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத்!
கேது காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே சூல அஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரசோதயாத்!)
நிச்சயம் இன்னும் வருங்காலத்தில் ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன்.. நிச்சயம் நாராயணனிடமும் முருகனிடமும்.. நிச்சயம் இன்னும் தெய்வங்களுடன்.. அவர்களுடன் கேட்டு எடுத்து (தெய்வங்களின் அனுமதியுடன்).. எவை என்று அறிய சொன்னால் அப்பனே நிச்சயம்.. உடனே வந்து அப்பனே தீர்வுகள் கிடைக்கும் என்பேன் அப்பனே!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஆன்மாக்கள் பின் எவை என்று அறிய அறிய... அதாவது முதல் புரட்டாதி முதல்.. அதாவது எதை என்று அறிய இதனால்.. அதன் முன்னே அப்பனே பின் நவ நாட்கள் முன்னே.. இவை தொடர்ந்து செய்துவரும் சிறப்புக்கள் ஏற்படும் என்பேன் அப்பனே... முன்னோர்களும் கூட பின் பெரிய மாற்றத்தை.. ஆசிர்வாதங்களை கொடுப்பார்கள் அப்பா.. இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் நலன்கள் ஆசிகள் அப்பா!!
(இந்த ஆண்டு 2025 புரட்டாதி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி துவங்குகின்றது அதற்கு முன்பாக அதாவது எட்டாம் தேதியில் இருந்து.. புண்ணிய நதியில் நீராடுதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல் பசு பைரவர் ஜீவராசிகளுக்கு உணவு அகத்திக்கீரை அளித்தல் இவையெல்லாம் செய்து வர வேண்டும் இதைப் பற்றி குருநாதர் கடந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசைக்கு ஒன்பது நாட்கள் முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை குருநாதர் கூறியிருந்தார் அதையே இந்த ஆண்டும் செய்ய சொல்லி இருக்கின்றார்)
இவையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. நிச்சயம் வெற்றிகள் கிடைக்கும் அப்பா.. இன்னொரு வாக்கிலும் இன்னும் உரைக்கின்றேன் அப்பனே..
இன்னும் சித்தர்கள் வருவார்களப்பா!! நல்லதை காக்க.. பின் நல்லதைச் செப்ப!!!
அப்பனே உலகத்தை காக்க நிச்சயம் தன்னில் கூட.. எவ்வாறாக இருந்தாலும் யாங்கள். காப்போம் அப்பனே.. அதனால் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே இன்னும் சிறப்பானது எல்லாம் சொல்கின்றேன் அப்பனே... இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில்.. வெற்றி பெறுக !! ஆசிகள் ஆசிகள்!! ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment