​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 19 September 2025

சித்தன் அருள் - 1937 - திரு ஹனுமந்ததாசனின் கஞ்சமலை (சித்தர் கோயில்) வாக்கு - 3!


சித்தன் அருள் - 1936ன் தொடர்ச்சி.........

சந்தோஷம் கிடைக்கும்! பணத்தால் அல்லடா சந்தோஷம், பணத்தை யார் சம்பாதிக்கவில்லை? 

இவர்கள் சம்பாதிக்காததா காலாங்கிநாதர் சம்பாதித்து விட்டார்? காலாங்கிநாதரே வியக்கும் அளவுக்கு கோடி கோடியாய் இவர்களால் சம்பாதிக்க முடியும்! குபேரனே மலைத்துப்போய் நிற்கும் அளவுக்கு இவர்களால் பொருளை ஈட்டக்கூடிய வன்மை இந்த மாந்தர்களுக்கு உண்டு! ஆனால் அதைவிட மிகப்பெரிய புண்ணியம் இப்பணம் சம்பாதிப்பதல்ல, புண்ணியத்தை சம்பாதிப்பது! அந்த புண்ணியத்தை காலாங்கிநாதரும் தான் செய்த 3747 ஆண்டுகளாக தவம் செய்தேன் என்று சொன்னேனே, அந்த தவத்தின் புண்ணியத்தில் 1 / 8 இல் பகுதியை, இங்குள்ள அத்தனை பேருக்கும் பிரித்து கொடுக்கிறானாம்!  அதையும் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்! அகத்தியன் கொடுத்த புண்ணியம் என்பது வேறு, நேபாள நாட்டிலே எனக்கு கிடைத்த புண்ணியம் அளிப்பது வேறு, சிலருக்கு ஏற்கெனவே புண்ணியத்தை வாரி வழங்கியிருக்கிறேன், அதை கணக்கு போட்டு கொடுத்திருக்கிறேன். இவனோ கணக்கில்லாமல் ஓர் ஆழாக்கு என்கிறான். ஆழாக்கு என்றால் எட்டில் ஒரு பங்கு, ஒரு படி. ஆழாக்கு புண்ணியம் என்று விளையாட்டாக சொல்லுவார்கள் அந்த காலத்திலே. ஆழாக்கு என்றால் ஆழமான நாக்கு உள் நாக்கில் இருந்து... ஆத்மார்த்தமாக சொல்லக் கூடிய புண்ணியம். காலாங்கிநாதர் தான்பெற்ற 3747 ஆண்டுகளாக கடும் தவம் செய்து பெற்ற புண்ணியத்தை, இங்கு அமர்ந்து கேட்கின்ற அத்தனை பேர்களுக்கும், தானமாக வழங்குகின்றான், தாரைவார்த்து கொடுக்கிறான் !

சற்று நேரத்தில் கூட வானத்திலே மேகம்கூடியது. மேகத்தைக் கூடியது கூட அங்கங்கே ஒருதுளி விழுந்தது, அந்த துளியே தாரையாக எண்ணிக்கொண்டு நீங்கள் பெற்றிட வேண்டும். இன்னும் சில சமயத்தில் துளி விழலாம், அந்த துளியில் காலாங்கிநாதரின் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரலாம்! ஆகவே இதுவும் நல்ல நாள்!

இன்று காலாங்கி எதற்கு வரச் சொன்னான் என்று இன்னும் வரவில்லை. ஆனால் சந்தோஷப்படுகிறேன்! ஏனென்றால் இப்பொழுதெல்லாம் ஆன்மீகத்திலே எல்லாவிதத்திலும் நுழைந்து கொண்டு உலகத்திற் ஜெயிக்கவேண்டிய வன்மை நிறைய பேருக்கு  இருப்பதில்லை. பணம் என்றும், புகழ் என்றும், கெளரவம் என்றும், கீர்த்தி என்றும் அன்றாடம் கணக்கிட்டு கணக்கிட்டு தான் வாழ்கை வாழ்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிற காலமடா இது. ஆக பணத்தை சம்பாதிப்பது பெரிய காரியமில்லை என்று குபேரனே வியக்கும் அளவுக்கு உங்களால் சம்பாதிக்க முடியும். அது பெரும் காரியமாக அகத்தியன் எண்ணவில்லை. ஆனால் அதைவிட புண்ணியம் சம்பாதிக்க வேண்டுமே? அந்த புண்ணியத்தை நீங்கள் தேடிவந்து காத்திருந்து பெறுவது என்பது சற்று கடினமான காரியம், ஆக உங்களை காக்க வைக்காமலே, கால்நடை செல்லாமலே, மலை ஏறாமலே, நீர்வீழ்ச்சியில் நீராடாமலே, உங்களுக்கு அத்தனை புண்ணியத்தையும் அகத்தியன் தந்திருக்கிறேன், காலாங்கிநாதரும் தன் பங்கிற்கு தந்திருக்கிறார். காலாங்கிநாதர் தன் வாழ்க்கையிலே முதல் முதலாக செய்த தானம் இதுதான். இதுவரை அவன் தானம் செய்து, புண்ணியத்தை தானம் செய்ததாக அகத்தியன் யான் கேட்டதில்லை . அவன் அழைத்தும் கேட்டதில்லை, அவன் அழைத்தும் தன் புண்ணியத்தை  உங்களுக்கு குடுக்கிறானென்றால், நீங்கள் மிகப்பெரிய புண்ணியசாலிகள்தான். ஏனென்றால் இது கிடைக்காததுதான். நாளைக்கே உங்கள பணம் சம்பாதிக்க முடியும், புகழ் சம்பாதிக்க முடியும், ஆபரணங்கள் சம்பாதிக்க முடியும், வீடுகள்  சம்பாதிக்க முடியும், மனிதர்களை சம்பாதிக்க முடியும், புதையல்களை சம்பாதிக்க முடியும், ஆனால் உங்களால் காலாங்கிநாதர் பெற்ற புண்ணியத்தை சம்பாதிக்க முடியாது. அந்த புண்ணியத்தை இன்றைக்கு அவர் தந்திருக்கிறார்! ஆகவே நீங்கள் அத்தனை பேருமே மிகச்சிறந்த பாக்கியசாலிகள் என்பதால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! என் மைந்தர்கள், என் குழந்தைகள், என் பேரப்பிள்ளைகள், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுமென்று அகத்தியன் ஆசைப்படுவதுகூட, ஒரு சமயம் தன் நிலையை விட்டு, என் சித்தநிலையயை விட்டுக்கூட இறங்கி வந்திருக்கின்றேனோ என்று நான் நினைப்பது உண்டு. ஆனால் அது அல்ல, பக்திக்கு முன் எல்லாமே பித்து பித்தர்கள் தான், சித்தர்கள் தானடா. அந்த பக்தியின் அடிப்படையில் தான் அகத்தியன் நான் சொல்லுகிறேன், இங்கு உள்ள அனைவருக்கும் நல்லதொரு பொற்காலம்  ஆரம்பித்திருக்கிறது ! சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் போகலாம், அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனிதர்கள் மாறுவார்கள் கவலைப்படாதே. உனக்கு நானிருக்கிறேன் இதுவரைக்கும், இப்போ எனக்கு துணையாக மட்டுமல்லாமல் உங்களுக்கு துணையாக காலாங்கிநாதர் இங்கு வந்திருக்கிறார். காலாங்கிநாதருக்கு என்று ஒரு சிறப்பு உண்டடா, அன்னவன் எதற்காக உங்களையெல்லாம் முதன்முதலில் வரவழைத்தான். இத்தனை அரும்பெரும் பாக்கியத்தை கொடுத்தான் என்று இதுவரை அகத்தியன் யான் எண்ணியதில்லை. இப்பொழுது தான் நினைக்கிறன், அவன் கால் அங்கி என்பதெல்லாம் தெய்வத்தின் தன்மை, காலால்  அங்கியாலே எதையும் செய்யக்கூடிய வன்மை உடையவன். ஒற்றை பாதத்திலே உலகத்தை சுற்றி வந்தவன்.காற்றாக சுற்றி வந்தவன், நெருப்பாக சுற்றி வந்தவன், நிழலாக சுற்றி வந்தவன், நெருப்பாக  விளையாடியவன். வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்க கூடிய வாயு பகவானிடம், அவன் உரிமையோடு கொண்டாடுகின்ற வன்மை அவனுக்குண்டு. இன்றைக்கு ஆரோக்கியமாக நீ மூச்சு விடவேண்டுமென்றால், அதை காலாங்கிநாதன் ஒருவனால் செய்ய முடியும். நீ நெருப்பிலே தாண்ட முடியும் என்றால்கூட, நெருப்பால் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்றும் எண்ணினால் கூட, அதை காலாங்கிநாதனால் செய்ய முடியும். அதுமட்டுமல்ல அவன் இறைவனுக்கு மிக்க வேண்டியவன்!

இறைவன் சற்று கண்ணமர்ந்து தூங்கும்போதெல்லாம், காலாங்கிநாதனை தட்டி எழுப்பி என்னை பார்த்துக்கொள் என்றுசொல்லி, தம் பொறுப்பை, மூவுலகத்தை ஆளுகின்ற பொறுப்பை எல்லாம் எனக்கு முன்பே காலாங்கிநாதனும் கூட பெற்றுருக்கிறான். எனக்கு எத்தனையோ வேலை இருப்பதால், அங்கங்கே உலா சென்று விடுவேன். அப்பொழுதெல்லாம் காலாங்கிநாதன் அந்தப்பொறுப்பை அற்புதமாக செயல்பட்டு பூலோகத்தை  காத்திருக்கிறான்! இன்றைக்கு மழை பெய்கிறது என்றாலும், வெயில் அடிக்கிறது என்றாலும் கூட, இன்று சிவபெருமானோ, முக்கண்ணனோ, இயற்கையோ, பஞ்சபூதங்களோ தாம் செயல்களை மறந்தாலும் கூட, இந்த நிமிடம் அதை நிறைவேற்ற பிசகில்லாமலும், எந்த வில்லங்கமும் இல்லாமலும் இந்த உலகத்தை காத்து வருபவன் காலாங்கிநாதனைக்கு ஒரு சக்தி உண்டு! 

நிறைய பேருக்கு அவன் யாரென்று புரியாமல், ஒரு காலத்தில் இந்த மலை ஏறத்தாழ 7417 அடி உயரமாயிருந்தது. அதிலே இத்தனை பெரும்பாலான மலைகள் பூமிக்கடியிலே மறைந்துவிட்டது. இந்த பூமிக்கு கீழே நீரோட்டமிருக்கிறது, தெய்வம் இருக்கிறது, நந்தவனம் இருக்கிறது, நீராடி மண்டபம் இருக்கிறது, ஆயிரம்கால் மண்டபம் இருக்கிறது.அன்னை பார்வதி உள்பட அத்தனை பேரும் இங்கு அந்த நந்தவனத்தில், தோட்டத்தில் உலாவந்து கொண்டிருந்த இடமடா. 7000 அடி உயரம் இருந்தது. இன்றைக்கு நிறைய பேருக்கு செய்திகள் விசித்திரமாக இருக்கலாம். ஏனென்றால் விஞ்ஞானத்தால் வளரக்கூடிய நீங்கள் எல்லாம் நீங்களே ஆராய்ந்து பார்க்கலாம், அறிவு உடையோர்களை சேர்த்து, அறிவுடையோர்களை சேர்ந்து கண்டு ஆலோசிக்கலாம். கார்த்திகை மாதத்தில்  கடைசி நேரத்தில், ஹிமாலயம் என்று சொல்லப்படுகின்ற பனிப்பிரதேசத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மேலே தள்ளி இருந்தது. ஹிமாலயாஸ் என்று சொல்லப்படுகின்ற அந்தஇடம் படு பள்ளமாக பாதாளமாக இருந்து, பிரளயம் ஏற்பட்ட பொழுதுதான் அந்த கடல்நீர் இங்கு வந்தது, இமயம் அங்கு சென்றது. அந்த இடத்தை இடம்மாற்றி வாய்த்த பெருமை எல்லாம் காலாங்கிநாதருக்கு உண்டு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் ஞான குருநாதர் அகத்தியர் சித்தர் அப்பன் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் காலங்கி நாதர் சித்தர் அப்பன் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. அருமை அருமை அகத்தியர் பெருமானே போற்றி

    ReplyDelete