​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 22 September 2025

சித்தன் அருள் - 1940 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் காசி வாக்கு!







14/9/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.

அழகாக வீற்றிருக்கும் 
அழகாக வீற்றிருக்கும் விக்னேஸ்வரனே!!!
விக்னேஸ்வரனே!!!

அழகாக பாய்ந்து அனைத்தும் சமமாக்கும் கங்கை தாயே!!!..... ஈசனே!!!...

மனதில் எண்ணி வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியனே!!!

அழகாக எம்முடைய ஆசிகள்!!!!

அறிந்தும் எவ்வளவு பின்... அறிந்தும் உண்மைதனை பின் தெரியாமலும் கூட மக்கள் பல வழிகளிலும் கூட... திரண்டு திண்டாடுவார்கள்!!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம்... தெரியாமலும் கூட!!...

வழி வழியாக வந்த எதை என்றோ?.. நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று உணர்த்தும் அளவிற்கு.. அப்பனே பல வழிகளிலும் கூட.. செப்பி விட்டேன் அப்பனே. பல வழிகளிலும் கூட!! சுவடிகளிலும் கூட!!

ஆனாலும் அவையெல்லாம் எதை எதற்கோ? பயன்படுத்தி அப்பனே பின்  அதில் உள்ள பின்... பல வகையான சில மூலிகைகளையும் கூட.. சிலவற்றையும் கூட... எவ்வாறெல்லாம்?? பின் பயன்படுத்த வேண்டும்? எப்படி என்றெல்லாம் நிச்சயம்...

(அச் சுவடிகள்) அவையெல்லாம் பின் காசுகளுக்காகவே.. விற்கப்பட்டது!!!

ஆனாலும் நிச்சயம் இவையெல்லாம் அப்பனே பின் சந்தோசமாய்.. வரும் காலத்தில் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட.. எவ்வாறு??.. யார் மூலம்? எதன் மூலம்? பரப்ப வேண்டும்???... என்பதையெல்லாம்.. பரப்பி அப்பனே.. நல் முறைப்படுத்தி மக்களை.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.. பல வகையிலும் கூட... அப்பனே அதாவது நிச்சயம் இக்கலியுகத்தில் என்னென்ன??? ஏது? என்பதையெல்லாம்... நிச்சயம் தெரிந்ததே!!!

இவை தன் நிச்சயம் தன்னில் கூட... எவை என்று அறிய அறிய பின்... மனிதன் எத்தனை ஏது.. என்று அறியாமலும் கூட மூடனாகவே இருக்கின்றான்!!!

அவற்றையெல்லாம் நிச்சயம் வரும் காலத்தில்... இன்னும் கூட பல வகையான... இன்னல்களை எல்லாம் மாற்றி.. அறிந்தும் எதை என்று கூட இன்னும் விளக்கங்களுடன்.. சொல்வேன். 

ஆனாலும் இங்கு பல வகையிலும் கூட ஏன்? எதற்கு? பின் தொழுகின்றோம்??? ஏன்? எதற்கு? அதாவது பின்...இவ் எதை என்று கூற...""""'''"""மகாளய பட்சை""" (பட்சம்) தன்னில் கூட !!!

ஏன் எதற்காக செய்கின்றோம்?? என்பதையெல்லாம் வழி வழியாக.. நிச்சயம் பின் அப்படியே பின் செயல்பட்டதை பின் நீங்களும்.. பின் செயல்பட்டு வந்து கொண்டே இருக்கின்றீர்கள். 

ஆனாலும் இதன் உண்மை மறைமுகமாக.. என்னவென்று நிச்சயம் பின்... இங்கிருக்கும் பின்... அழகாக!!!

""". இளவரசி!!! லோபா முத்திரையும் அழகாகவே.. பல வகையிலும் கூட பின்.. பல  எண்ணற்ற பின் கண்டுபிடிப்புகளையும்.கூட!! எதை என்று நிரூபிக்க!!!... 

நிச்சயம்.. அவற்றை இப்பொழுது சொல்கின்றேன்!!!

(நமது அன்னை லோப முத்திர தாயார் காசியின் இளவரசி அவருக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் காசி.. இங்குதான் சுற்றி திரிந்து கொண்டிருப்பார் என்று குருநாதர் ஏற்கனவே வாக்குகள் உரைத்திருப்பது நினைவில் கொள்க!)

எத்தனை? ஏது? என்று அறிய!!... அதாவது பின்... வளிமண்டலத்தில் பல கிரகங்கள்!!!

அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய  தெரியாமலும் தெரிந்தும் சில சில விஷயங்கள்!!!

(பிரபஞ்சத்தில் மேலே இருக்கும் கிரகங்கள் மற்றும்... இயக்கங்கள் முழுமையாக தெரிந்தும் தெரியாமலும்)



அறிந்தும் இதைத் தன் சமநிலைப்படுத்த நிச்சயம் தன்னில் கூட எப்படி??... ஏது? என்று அறிய... அதாவது பின் பல உரைகளிலும்.. சொல்லிவிட்டேன். 

 காந்தகம் இறைவனே என்று!!!

ஆனாலும் பல வகையான சில பின்.. அதிர்வினுடைய நிச்சயம் தன்னில் கூட.. அனைவரும் பின் அதாவது... மனிதரிடத்தில் அனைவரிடத்திலும்.. நிச்சயம் பின் அதிர்வெண்கள் பல பல பின் எதை என்று.. நிரூபிக்க!!

ஆனாலும் அவை தன் கூட... சரியான பின்... பூதம் தன்னிலே.. அதாவது பூத பிம்பம்  எதை என்று.. அறிய அறிய நிச்சயம் பின் காணலாம்!!

(பூதக்கண்ணாடி.. லென்ஸ். அதாவது நுண்ணோக்கி  மைக்ரோஸ்கோப் இதன் மூலம் மனித உடம்பில் உள்ள அதிர்வெண்களை காணலாம்)

அதையெல்லாம் நிச்சயம் பின்.. எதை என்று கூற பிம்பத்தை.. நிச்சயம் கண்டுபிடிக்க லோபா முத்திரை பல வழிகளிலும் கூட... பாடுபட்டு !! பாடுபட்டு !!

அதனை நிரூபிக்க எதை என்று.. புரிய அதாவது... குறித்தான பின்....இவை தன் உண்மைதனை நிலை அறிந்து அப்பனே பல வகையிலும் கூட எதை என்று புரிய.

இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது...குறி!!.. அறிந்தும் புரிந்தும் கூட இதை தன் நிச்சயம் இவை தன் விளக்கங்களாகவே அதை பின் துகளாகவே.. குறி என்றே நிச்சயம் எதை என்று புரிய. 

இதை தன் நிச்சயம் தன்னில் கூட.. இறைவனிடத்தில் அதாவது.. காந்தகம் இடத்தில் நிச்சயம்.. பல வகையிலும் கூட பல பல கதிர்வீச்சுக்கள் பின் எவ்வாறு என்பதும் சுற்றிக் கொண்டே இருக்கும். (காந்த புலம் போல கதிர் இயக்கங்கள்)

இதில் கூட எவை என்று புரிய...இக் குறி (துகள்) எதை என்று புரிய கதிரியக்கங்கள் பலமாகவே நிச்சயம் பின் மேலே அதாவது பின் சுற்றிக்கொண்டே.. கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும்.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்.. இவை என்று புரிய. 

(அதாவது இறைவன் என்ற காந்தகத்திலிருந்து கதிர்வீச்சுக்கள் வெளிப்பட்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் மேலே பட்டு பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் சுற்றி சுற்றி)



அப்பனே பின் அதாவது வட்டம் வட்டமாக பின் பல கோடி நிச்சயம்.. வேகத்தில் அதாவது நிச்சயம் தன்னில் கூட.. வேகத்திலே சுற்றிக் கொண்டிருக்கும்.

இதை தன் நிச்சயம் தன்னில் கூட... யாராலும் கணிக்க முடியாது. 

நிச்சயம் அவ்வாறாக கணிக்கவும்.. எதை என்று புரிய அதற்கும்.. தகுந்த வாய்ப்பாடு உள்ளது. 

அதையும் கூட நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே லோபா முத்திரையும்.. நிச்சயம் தன்னில் கூட சரியாக.. கண்டுபிடித்து!!!


நிச்சயம் இன்றைய...... எவ்வளவு பின் விஞ்ஞானிகள்.. எதை என்று அறிய அறிய பின் எதை என்று கூற இவ்வாறு.. பல மைல் பின் நிச்சயம்.. தன்னில் எவை என்று கூற.. எதை என்று அறிய அறிய பின் நிச்சயம் சுற்றுகின்ற பொழுது.. நிச்சயம் அவை தன் அதாவது... ஒரு துளி!! அதாவது கடுகளவு நிச்சயம் தன்னில் கூட... கண்ணிமைக்கும் நேரத்தில் நிச்சயம்.. பல கோடி பின் மைல்களை கடந்து விடும்.

இவ்வாறு இருப்பதை யாராலும்... எதனாலும் கண்டுபிடிக்க முடியாது 

(இன்றைய விஞ்ஞானிகளால்) 

இதனால் பின்.. நடுவில் தன்னில் கூட காந்தகம் ... பரிபூரணம் பரிபூரணம் இவை அறிந்தும்.

(நடுவில் காந்தகம் எனும் இறைவன் அதைச் சுற்றி கிரகங்கள் நட்சத்திரங்கள்)

இவை தன் நிரூபிக்கவே.. எதை பொறுத்து நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும்... அவற்றுக்குள்ளே செல்ல வேண்டும்...அக் குறி!!... அறிந்தும் புரிந்தும் கூட!!




இதனை எப்படியோ வைத்துக் கொள்ளலாம் இக் குறி யானதை அதாவது.. இவ்வாறு கிரகங்களாக பின்.. அதாவது நாமத்தையும் பின் நட்சத்திரங்களின் நாமத்தையும் அதே போல்...குறி.... என்ற நிச்சயம் ஒரு துகளே... என்று நிச்சயம்.. இவை தன் அறிந்தும் கூட அப்பனே..

இதனால் அப்பனே இதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. இவ்வளவு வேகத்தில் நிச்சயம் பின்... கதிரியக்கங்கள் பல வழிகளிலும் கூட.. நிச்சயம் எவை என்று புரிய.. கதிர்கள் பின் இன்னும் சிறிய சிறிய அணுக்கள்... எவை என்பதெல்லாம் சுற்றி கொண்டிருக்கும் பொழுது நிச்சயம் தன்னில் கூட இவை.. நிச்சயம் அவ் காந்தகத்தில் பின்... அதாவது ஒட்டி கொள்வது என்பது.. சாதாரண விஷயம் இல்லை. 

ஆனாலும் இதை என்று புரிய.. எவை என்று அறிய.. இதைத் தன் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்... இவ்வளவு வேகத்தில் நிச்சயம் சுற்றுகின்ற பொழுது நிச்சயம் பின் அக் கதிரியக்கம் எதை என்று.. பொறுத்து அனுகூலம்!!

இன்னும் அதிலிருந்து துகள்களும் இன்னும் இன்னும் ஏராளம்...அவை பின் நாமத்தையும்.. கூட வரும் வரும் காலத்தில்.. எங்கு எதை என்று... குறிக்க.... நிச்சயம் குறித்த இடத்திலே யான் சொல்வேன்.. எதை என்று புரிய. 

இதனால் நிச்சயம் அக் காந்தகத்தில்... நிச்சயம் பின் இவ்வளவு.. அதாவது வேகத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது.. சில சில நேரங்களில் கூட நிச்சயம்.அக். காந்தகம் நிச்சயம் பின் அசைவடையும்!

இவ்வாறு அசைவடைகின்ற பொழுது நிச்சயம்...அக் குறி!... துகளானது... நிச்சயம் கீழே விழும். அறிந்தும் புரிந்தும். 

இதனால் அவ் குறி பின்.. துகளானதிற்கு உயிர் இருக்கும்.. நிச்சயம் தன்னில் கூட. 

அதேபோல் நிச்சயம் தன்னில் கூட... இப்பொழுது பின் மனிதர்கள்.. எதை எதை என்று அறிய அறிய... பின் எவை என்று கூற... சரியான நிச்சயம் தன்னில் கூட... சக்தி படைத்தவர்களுக்கு மட்டுமே... நிச்சயம் தன்னில் கூட அக் குறி... நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரிந்தும் கூட ....அவை என்றே நிச்சயம்... அதை ஈர்த்துக் கொள்ளும். 

இதனால் நன் முறைகளாகவே... இதை தன் நிச்சயம் உடம்பில் பட்டு பட்டு... இதனால் எவர்??... அதை தன் பின் நிச்சயம்... அங்கிருந்து விழும் நிச்சயம்... அது தன் குறியானது.. எதை என்று கூற துகள் நிச்சயம்.. மனிதனின் பின் உடம்பில் அதாவது ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் தன்னில் கூட அதற்கு ஏற்ற... பின் குறிகளையும் கூட.. நிச்சயம் குறிகள் அறிந்தும் கூட பின் அனைத்தும் ஒன்றாக இணைக்கும்.

இதனால் நிச்சயம் எங்கெங்கு... அதாவது நிச்சயம் இவை எங்கிருந்து.. பின் சென்றதென்றால்.... குவியில் இருந்தே சென்றது... 

(காந்தக குவியில் இருந்து)

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.. தெரியாமல் எதையும் செய்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

தெரியாமல் நிச்சயம் செய்து விட்டாலும் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின்.. இறைவனை உணரப்போவதில்லை. 

அதனால் தெரிந்தும் அனைத்தும் கூட... அப்பனே இதனால் புதுமையான.. விஷயங்களை யான் சொல்வேன் அப்பனே.. நீங்களே அப்பனே புது புது விஷயங்களை கூட அவற்றை அப்பனே நிச்சயம்.. பின் அகத்தியன் சொல்லி இருக்கின்றான்...

எவ்வாறு பயன்படுத்தலாம்?? என்றெல்லாம்.. யோசனைகள் வரும்!!

ஆனாலும் அப்பனே அவ் யோசனைகள் வருவதற்கும் சில புண்ணியங்கள் வேண்டும்...அவ் புண்ணியத்தை கூட வரும் காலத்தில் யானே புகுத்துவேன் என்பேன் அப்பனே.. நீங்கள் கேட்கா விடிலும் கூட அப்பனே...

இதனால் நிச்சயம் தன்னில் கூட அக் குறி துகளானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய... அப்பனே அக் குறியானது அப்பனே நிச்சயம்... பலவற்றாக (பல்வேறாக) பிரியுமப்பா!!

அப்பனே ஒவ்வொரு எதை என்று கூற அப்பனே ஒன்று இரண்டு.. அப்பனே இதற்கு பல பெயர்கள்.. பின் வைத்துக்கொள்வோம் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே பின் எதை என்று அறிய .. இதனால் அக்குறி எதை என்று கூற துகள் பின் நிச்சயம் தன்னில் கூட பின்...குவி எதை என்று அறிய அறிய...... அங்கங்கு பிரிந்து கிடக்கின்ற பொழுது.. நிச்சயம் பின் மனித உடம்பில் அதிக சக்திகள் பின் இருக்கின்ற பொழுது நிச்சயம் ஒட்டும். 


இதனால் நிச்சயம் ஏற்கனவே பல அவ் பின் சொந்தங்கள் நிச்சயம் தன்னில் கூட.. மனிதனிடத்தில் நிச்சயம் இருக்குமப்பா!!!

இதனால் எதை என்று புரிய இதனை பொறுத்தே நிச்சயம் சொந்த பந்தங்கள் கூட நிச்சயம்... திருமணங்களும் கூட இன்னும்... தாய் தந்தையர் என்றெல்லாம்... நிச்சயம் அப்பனே தீர்மானிக்கப்படுகின்றது என்பேன் அப்பனே.

இவையெல்லாம் நிச்சயம் எவை என்று புரிய... இதனால் அப்பனே அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்பவை எல்லாம்... உங்களுக்கு தெரியும். 

ஆனாலும் எப்படி தீர்மானிக்க ப்பட்டது?? என்பதையெல்லாம் அப்பனே தெரியாதப்பா!!

இதேபோல் அப்பனே நிச்சயம் அப்பனே... இதற்கு பல வகையிலும் கூட.. கருவிகள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.... சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட....

பின் இளவரசியான லோபா முத்திரை... அப்பனே அறிந்தும்.. எதை என்று அறிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பல வகையான கண்டுபிடிப்புகளால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட..

ஏனென்றால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே.... ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய... காந்தகம் அப்பனே பல வகையான.. எதை என்று புரிய அப்பனே ஆங்காங்கு பிரிந்து கிடக்கும். 

இதேபோல் அப்பனே இறைவன் ஏன் அப்பனே.. (இறைவன் பல்வேறு அவதாரமாக பல்வேறு நாமங்களாக பல்வேறு இடங்களில் பரவி பரந்து விரிந்து கிடக்கின்றார்)

பின் ஆனாலும் இறைவன் ஒருவனே!!!

எதை என்று கூற ஏன் இவ்வளவு அவதாரங்கள்??? ஏன் எதற்கு பின்... இத்தனை பூஜைகள்????
ஏன் இத்தனை மந்திரங்கள்????... என்பதை எல்லாம்... வரும் காலத்தில் யான் செப்புவேன் அப்பனே. 

இதை சரியாக ஒவ்வொன்றாக அப்பனே புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே... அப்பொழுது நீங்கள் எதைச் செய்தாலும்.. வெற்றியாகும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பன நிச்சயம் தன்னில் கூட.. கலியுகம் அப்பனே அழிவுக்காலம் என்பதை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே வந்து கொண்டே இருக்கின்றேன்..

அப்பனே நிச்சயம் பாவம் செய்த மனிதர்களே...  இங்கு அதிகமாக பிறக்கின்றார்கள்... இதனால் அப்பனே உண்மை நிலை.. அப்பனே மாறாகவே எதை என்று.. உரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ் பாவம் செய்தவர்கள் அப்பனே.. உண்மையாக இருந்தாலும் அவை பொய்.. என்றே சொல்வார்கள்.. எதை என்று புரிய அப்பனே அவர்களையும் கூட.. மாற்றி எதை என்று கூற புண்ணிய நிலையை பெற செய்து அப்பனே எதை என்று கூற புண்ணிய நிலை அப்பனே நிச்சயம் பின் பெற்றால் மட்டுமே.. நிச்சயம் பல உண்மைகள் தெரியுமப்பா!!!

இல்லையென்றால் குழப்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான் அப்பனே

வாழ்க்கையில் பின் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பரிசுத்தமாக அப்பனே எவை என்று அறிய அதாவது குறி துகள்.. சொன்னேனே அப்பனே அவை தன்.. அப்பனே நிச்சயம்.. ஓரிரு இடங்களிலே நிச்சயம் விழும் அப்பா.. எதை என்று அறிய பல முக்கியமான அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையான பின் புண்ணிய.. தீர்த்தங்களில் கூட..

எதை என்று கூற அவற்றுக்கெல்லாம்.. ஈர்க்கும் சக்தி...

முதலில் அப்பனே வருபவை...

""""கங்கை நதியே என்பேன் அப்பனே!!

அதாவது நிச்சயம் தன்னில் கூட இமயத்தில் இருந்து 
. அப்பனே பின் ஈசனின்.. தலையில் இருந்து அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட...

பின் ஓடுவது எங்கெல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எவை.... என்று கூற அவ்வளவு சக்திகள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அவையும் கூட...

வில் விஷ்ணு ரகசியம்


 அப்பனே பின்.. எதை என்று அவ் காந்தகத்தை.. எதை என்று அறிய அப்பனே இன்னொரு.. அதாவது எவை என்று கூற பின் !!
..

"""...... வில் வடிவத்தில் அப்பனே......

நிச்சயம் அப்பனே ஒரு ஒளி அப்பனே இப் புரட்டாதி... மாதத்தில் அப்பனே நிச்சயம்.. நேராக சென்று அக் காந்தகத்தை அடையும் அப்பா...

அப்பனே மீண்டும் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று.. அறிய அறிய அவ்.. அப்பனே பின் செல்கின்றதே ...அவ் "" வில்லானது... அப்பனே அதுதான்... விஷ்ணு என்றே... தெரிவிக்கின்றார்கள்  அனைவருமே.. அப்பனே..

அதுதான் விஷ்ணு அப்பனே.....

அங்கு நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எதை என்று கூற...அவ் காந்தகத்தை ஒரு....      """" இடி..."""".. இடிக்கும் என்பேன் அப்பனே 

அதற்கும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. இவை தன் அப்பனே நிச்சயம் சில வருடங்கள் என்பேன் அப்பனே.

அதாவது நிச்சயம் இவை தன் அப்பனே
.. எவ்வளவு அதாவது ஒரு கோடி அப்பனே... எவை என்று அறிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாத அளவிற்கு கூட.. இருந்தாலும் அப்பனே.. நல்விதமாகவே பல மைல்கள் எட்டி நிச்சயம் தன்னில் கூட.. தொடும் என்பேன் அப்பனே. 

அவை தொட்டுவிட்டு மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் திரும்புகின்ற பொழுது.. அப்பனே அதாவது எதை என்று.. அறிய அறிய அதைச் சொன்னேனே... குறி துகள் என்று அப்பனே.. அவை தன் நிச்சயம் தன்னில் கூட சில சில.. அப்பனே நிச்சயம் குறி துகள்கள் அப்பனே மீண்டும்.. அப்பனே அவை இடிக்கின்ற பொழுது... அங்கு நிச்சயம் தன்னில் கூட..அக் காந்தகத்தில் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் அல்லவா...

அப்பனே நிச்சயம் அவை தான் கூட திரும்பி.. பூலோகத்தில் வருமப்பா!!

அப்பனே எதை என்று கூற... இதைத்தான் அப்பனே ஆன்மாக்கள் என்று.. வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே... எதை என்று பொறுத்து. 

இதனால் அப்பனே மீண்டும் அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம்.. உங்களை அதாவது உடம்பை.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே தியானங்கள்... இன்னும் தவங்கள் அப்பனே... யோகாசனங்கள்... மனதை கட்டுப்படுத்தி அப்பனே.. இன்னும் இயற்கை உணவுகளை நிச்சயம் தன்னில் கூட... உட்கொண்டு இறைவன் எப்பொழுதும் செப்பி கொண்டு இருந்தாலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அவை தன் அதாவது.. அவை தன் இடித்தாலும் நிச்சயம்.. கீழே வராதப்பா...

அப்பனே பின் அவை தன் நிச்சயம் தன்னில் கூட அப்படி பின் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே உடம்பை சரி இல்லாமல்.. அப்பனே நிச்சயம் வைத்துக் கொண்டாலும்.....

அவ் அணு எதை என்று புரிய அப்பனே... குறி துகள் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் கீழே விழுந்து விடுமப்பா!!

இதனால் எதை என்று புரிய மீண்டும்.. பிறப்பெடுத்துவிடும்.

அப்பனே அறிந்தும் புரிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அதுவும் கூட இவ்... புரட்டாதி பின்... மாதத்தில்தான் நிச்சயம் தன்னில் கூட...

அவ் வில் அம்பானது இடித்து... மீண்டும் வரும். 

ஆனாலும்.. அப்பனே எதை என்று புரிய... அதன் சொந்தங்கள் அப்பனே...அக் குறி துகள் எதை என்று புரிய 
அப்பனே நிச்சயம் அதன் சொந்தங்கள்.. கீழே இருக்குமப்பா... அப்பனே எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட. 

அவ் அப்பனே.. எதை என்று பொறுத்து பொறுத்து...

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும் அக் குறி துகளுக்கானது....

அனைத்து ஞாபகங்களும் இருக்குமப்பா!!!

ஆனாலும் காந்தகத்தில் பின் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது.. அப்பனே நிச்சயம் எதுவும்.. தெரியாதப்பா. 

அதாவது காந்தகம் என்பது இங்கு இறைவன் என்று சொல்லிவிட்டேன். 

அப்பனே அக் காந்தகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அக் குறி துகளுக்கு ஒன்றும் தெரியாதப்பா. 

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..அக் குறி துகளானது.. நிச்சயம் பின் சொந்தங்கள் அப்பனே.. புவியில் இருக்கும் அல்லவா அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதை என்று புரிய.. நீங்கள் அதாவது உங்கள் உடம்பில் இருக்கும் அப்பா. 

அவை தன் நிச்சயம் அவ்வாறாக நிச்சயம் அப்பனே எங்கெங்கு பல வகையான பின் ராமேஸ்வரம் 
காசி 
இன்னும் அப்பனே பல வகையான புண்ணிய நதிகளிலும் கூட.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. சக்திகள் அதிகம். .. உடனடியாக ஆற்றல் இங்கிருந்து அப்பனே...

இங்கு நினைத்து அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் அதாவது... அறிந்தும் புரிந்தும் கூட மனதில் நினைத்துக் கொண்டாலே இக் குறி எதை என்று அறிய அறிய அப்பனே துகளானது... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் கூட அப்பொழுது நிச்சயம்... அங்கு பின் காந்தகத்தில்... ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவா நிச்சயம் தன்னில் கூட... அதாவது இறைவனிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவா...
அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று அறிய அப்பனே... அவ்வளவு சக்திகள்...இக் குறி துகளானது அப்பனே நிச்சயம் இங்கு மனதார நினைத்துக் கொண்டு... அப்பனே நிச்சயம் இவ்வாறு.. எதை என்று புரிய புண்ணிய நதிகளில்.. நீராடி அப்பனே இவை விடுகின்ற பொழுது.. அப்பனே  நிச்சயம் எதை என்று அறிய... யாரோ பின் நிச்சயம் தன்னில் கூட... அதற்கும் அப்பனே ஒரு சத்தம் கேட்கும் அப்பா.. நினைக்கின்றார்கள் என்று அப்பனே. 

இவை தன்.. அப்பனே அதாவது ஓங்கி அடித்தால்... எப்படி சத்தம் கேட்கின்றதோ!?
அதேபோல் அப்பனே.. அமைதியாக பின் மனதில் நினைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற நினைத்தாலே அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அக் குறி துகளுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 
... அடி போல்..... சப்தம் போல் கேட்கும் அப்பா... நிச்சயம் தன்னில் கூட..
அப்பொழுது ஞாபகம் வரும்.. நிச்சயம் தன்னில் கூட... நம் சொந்தங்கள் பின் கீழே இருக்கின்றது.. நிச்சயம் பின் அப்பொழுது காந்தகத்தில்.. எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே... சிறிதளவு மேலே செல்லும்.... கீழே செல்லும் உராய்ந்து கொண்டே நிச்சயம் தன்னில் கூட. 

பின் காந்தகம் பின் புரிந்துகொள்ளும்!!... அதாவது.. இறைவன் புரிந்து கொள்வான்!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட நினைக்கின்றான் என்று!!

அப்பனே நிச்சயம் எவை என்று கூற.. அவ் அணு அதுதான் ஆன்மா என்பேன் அப்பனே.. இறைவனிடத்தில் கூறும் என்பேன் அப்பனே..

நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான்!!

ஏதோ ஏதாவது கொடு என்று  அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... இவை எல்லாம் நிச்சயம் எவை என்று.. அறிய அறிய நிச்சயம் அப்பனே... இவையெல்லாம் பின் பொதுவாக அனைவருக்கும்.. தெரிந்ததே!!!

ஏன் எதற்கு பின் கொடுக்கின்றார்கள்?? (தர்ப்பணம்) என்பதை எல்லாம் நிச்சயம் ஏதோ.. கொடுக்கின்றோம் ஆன்மாக்களுக்கு என்றெல்லாம்! அப்பனே!!

ஆனாலும்... ரகசியம் அப்பனே உடம்பு... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே... பல.. நிச்சயம் தன்னில் கூட கம்பிகளால் பின் உருவாக்கப்பட்டது என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அதாவது சாதாரணமாக.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவை என்று கூற ஒரு மின்சாரம்...எதை என்று அறிய அப்பனே எத்தனை? எத்தனை? அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று அறிய ஆனால் உடம்பில்.. அப்பனே பலவகையான... நரம்புகள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எதை என்று கூற அப்பனே பின்.. மின்சாரம் போன்று அப்பனே.. நிச்சயம் அதில் கூட பல வகையான துகள்கள் ஒட்டி உள்ளது என்பேன் அப்பனே நிச்சயம்.. இதற்கெல்லாம் அப்பனே சாதாரணமாக 
... எவை என்று கூற அதனால் தான் அப்பனே உண்மை நிலை... என் பக்தர்கள் நிச்சயம் வரும் காலத்தில் புரிந்து கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. புதுமை புதுமையான விஷயங்கள். 

ஏனென்றால்... அப்பனே பின் மனிதன் எதை என்று.. எவை என்று அறிய அப்பனே... அதாவது கலியுகத்தில் பின் அழிவுகள் எதை என்று கூட... மற்றவனை அழித்துக் கொண்டே இருக்கின்றான்.. அவை இவை என்றெல்லாம் சொல்லி சொல்லி... அப்பனே 

ஆனாலும் உண்மை நிலையை யாங்கள் தெரிவிப்போம் அப்பனே..

யார் எதைச் செய்தாலும் எத் தடங்கல் கொடுத்தாலும் அதை எல்லாம்.. அடித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எதை என்று கூற புது புது... விஷயங்களைக் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரும் சந்ததிகளுக்கு.. எடுத்துச் செல்வோம் என்போம் அப்பனே. 

நிச்சயம் அப்பனே ஒருவன். ஆனாலும் சரி... பல கோடி பேர்கள் பிழைப்பார்களப்பா.

இதனால் அப்பனே நிச்சயம் தண்டனைகள்.. உண்டு  அப்பனே... சித்தர்கள்... எதை என்று புரிய அப்பனே..

இது எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இளவரசியான அப்பனே லோபா முத்திரை சரியாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் கண்டுபிடித்து.. அப்பனே பின் பல தெளிவுகளும் பெற்று.. அப்பனே இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே பல வழிகளிலும் கூட பின் சுவடிகளில் எழுதி வைத்து !! எழுதி வைத்து!!

அவையெல்லாம்.. அப்பனே நிச்சயம் இன்னும்.. கங்கை தன்னில் அடியில் மிதந்து கொண்டு... எதை என்று அறிய அறிய அப்பனே பின் அடியில்.. தான் உள்ளது. 

பல சுவடிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய... பின் தஞ்சை (தஞ்சாவூர்) தன்னில் கூட!!!

அப்பனே பின் தஞ்சையில் இருக்கும் பல வகையிலும் கூட அப்பனே சுவடிகள் அதாவது... எங்கேயோ எடுத்துச் செல்லப்பட்டது என்பேன் அப்பனே...

இன்னும் அப்பனே சில எவை என்று அறிய சுவடிகள்... பழனி தன்னில் கூட அறுபடை வீடுகளிலும் கூட... நிச்சயம் தன்னில் கூட 
பஞ்ச பூத தலங்கள் அடியிலும் கூட.. அப்பனே நிச்சயம்.

இதனால்தான் அப்பனே... அதற்கும் எவை என்று கூற பின் சக்திகள் என்பேன் அப்பனே. 

சுவடிகள் எப்பொழுதும் அழியாதப்பா... நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மை.. சுவடிகள் எப்பொழுதும் அழியாதப்பா. 

பின் நிச்சயம் தன்னில் கூட பலவகையான.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் எதை என்று பொறுத்தே.. அதனால்தான் அப்பனே.. இன்னும் இன்னும் அப்பனே.. பின் அங்கங்கு செல்லச் செல்ல அப்பனே.. புண்ணியம் எவை என்று அறிய... நிச்சயம் திருத்தலங்களுக்கு செல்ல செல்ல..அப்பனே இன்னும் மாற்றங்கள் இதனால்தான்.. நிச்சயம் தன்னில் கூட... இவை தன் தொடர்ந்து தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எவ்வாறு... நிச்சயம் எவை என்று புரிய....

அவை மட்டும் இல்லாமல் அமாவாசை திதிகளில் கூட ஏன் இவை எல்லாம் அப்பனே பின் தர்ப்பணம்... இடுகின்றோம் என்றால் அப்பனே... இதற்குத்தான் காரணம் என்பேன் அப்பனே. 

ஏனென்றால்.. அப்பனே கதிரியக்கம் அதிகமாக.. இருக்குமப்பா அமாவாசை திதிகளில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறாக பின் சுற்றுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே காந்தகத்தில் உள்ள சில..குறி துகள் அப்பனே... ... மீண்டும் எவை என்று அறிய அப்பனே.. எதை என்று அறிய அப்பனே மீண்டும்... அதாவது எதை என்று புரிய ... அதாவது ஆசைகள் அதிகமாக இருக்கின்ற பொழுது.. அப்பனே இவ் ஆன்மாவானது மீண்டும்.. அப்படியே கீழே விழும். 

அதேபோலத்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட. அப்பனே அதாவது சக்திகள் இல்லாது அப்பனே .. பின் அதாவது எதை என்று புரிய ஒட்டிக்கொள்ளும் குறி துகள் அப்பனே மீண்டும்.. கீழே விழுந்து விடும் என்பேன் அப்பனே.

அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.... இவை செய்து செய்து அப்பனே பின் எதை என்று கூற இறைவனை நினைத்து நினைத்து.... அதை சக்தி ஊட்டினால் அப்பனே... அப்படியே இறைவனிடத்தில் நிற்குமப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ்வாறு நிற்கின்ற பொழுது.. அது தன் அப்பனே நிச்சயம் இவ் சொந்த துகள்களுக்காக அவை வேண்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே...

இதனால் பரிசுத்தமான தன் சந்ததிகள் பெருகும் அப்பனே... இன்னும் அப்பனே ஆசிர்வாதங்கள் கிடைத்து.. அப்பனே பின் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எதை என்று புரிய அப்பனே... புரிந்து கொள்ளுங்கள் அப்பனே... 

புரியாமலும் கூட வணங்கி!?!? எதை என்று... அப்பனே நிச்சயம்...

இதனால்தான் அப்பனே.. நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... அதாவது புறப்படும் என்பேன் அப்பனே... பட்சை அதாவது மஹாளய பட்சை தன்னில் கூட..

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... வேகம் எடுக்கும் என்பேன் அப்பனே.. சரிசமமாக... அப்பனே அதாவது முக்கால் பங்கு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் வில்லானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எட்டிவிடும். 

அப்பனே பின்... பதினொன்று (நாட்களில்) எவை என்று கூற அதாவது சில நாட்களிலே.. எதை என்று புரிய அப்பனே பின்.. அவை எட்டுகின்ற பொழுதே கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அவை தொடுகின்ற பொழுதே அப்பனே... இதையெல்லாம் செய்து கொண்டு வந்தாலே அப்பனே. பின் நிச்சயம் இன்னும் பலமாக... எதை என்று புரிய அப்பனே பின்..அத் துகள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இன்னும் அப்பனே விளக்கத்தோடு இன்னும்... பல வகையான... ஆனாலும்.. சித்தர்கள் ரகசியங்கள் அப்பனே.. புரியாதப்பா. 

அங்கு இவை.. செப்பினார்கள்!!... இங்கு இவை செப்பினார்கள்!!!.. அப்பனே சித்தன் இப்படி சொல்லுகின்றான்.. எதை என்று கூற அங்கு.... அப்படி வாக்கு வந்தது!!!!.. எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் .. அதாவது சித்தன்.. எதை என்று புரிய இங்கும் அங்கும்.. என்றெல்லாம் எதை எதையோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் சித்தர் வழி அப்பனே பின் பைத்தியக்கார வழி என்பேன் அப்பனே. 

ஆனாலும் உண்மை நிலையை புரிந்து கொண்டால்... அப்பனே பின் உத்தமமாக போகுமப்பா!!!... அப்பனே பின் புண்ணியங்கள் சேருமப்பா!!!

இதனால் தான் அப்பனே.. உடம்பை சக்தியாக்குங்கள் என்பேன்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய அப்பனே... இதனால்தான் அப்பனே இயற்கை உணவுகளையும் கூட.. அப்பனே சரியாகவே உட்கொண்டாலே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

செயற்கைக்கு எவ்வளவு மர்மம்.. இருக்கின்றது என்பதை எல்லாம்... அடுத்தடுத்த வாக்கில் சொல்வேன். என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

இதனால் குறைகள் இல்லை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எம்முடைய ஆசிகள்.. அப்பனே பின்.. அதாவது காசிநாதனின் நிச்சயம் தன்னில் கூட காசி தேவியையும் பணிந்து... அப்பனே நிச்சயம் தன்னில் கூட மறுவாக்கும் இன்னும் பல வாக்குகளும் கூட சித்தர்கள் பின்.. எவை என்று கூற பின் வாக்குகள் உரைக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே..

லோபா முத்திரையோடு அப்பனே பின் நலன்கள்.. ஆசிகள்!! ஆசிகளப்பா!! ஆசிகள்!! கோடிகளப்பா!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

    குருநாதர் இந்த வாக்கில் அறிவியல் பூர்வமாக... குறி... மற்றும் துகள்களாக... குறிப்பிடுவது... ஆத்மா என்று வைத்துக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்... மனிதர்கள் இறக்கும் பொழுது ஆத்மா வெடித்துச் சிதறும் அணுக்களாக... அப்படி அணுக்களாக மூலக்கூறுகளாக துகள்கள்.. காடு மலை புண்ணிய நதியென பரவி வியாபித்து இருக்கும்... மகாளய பட்சம் தன்னில்... புண்ணிய நதிகளில் நீராடும் பொழுதும் தர்ப்பணம் கொடுக்கும் பொழுதும்... அந்த அணுக்கள்... வரும் இல்லத்திற்கு தெய்வங்களையும் அழைத்து வரும். இறைவனிடம் சொந்தபந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளும்... நவ தேவதைகளை.. இல்லத்திற்கு அழைத்து வருவார்கள். அதன் பிறகு ஐப்பசி... இல்லத்திற்கு வந்த ஆத்மா அணு துகள்கள் எல்லாம் சொந்த பந்தங்கள் என நினைத்துக் கொண்டு இங்கேயே இருந்து விடும்...... தீபாவளியின் போது பட்டாசு வெடித்து அவர்களை அனுப்பி வைத்தல் குறித்த ரகசியங்கள் அனைத்தும் குருநாதர் ஏற்கனவே ஒவ்வொரு புரட்டாசி மாதத்தின் பொழுதும் முன்கூட்டியே வாக்குகள் கொடுத்து நமக்கு உண்மை என்பது என்ன என்பதை புரிய வைத்திருக்கின்றார்.



    வில் வடிவில் செல்லும் கதிர்வீச்சை பற்றி இந்த வாக்கில் வில் என்பது விஷ்ணு என்று குருநாதர் குறிப்பிடுவது குறித்தான

    இந்த வாக்கினை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள..

    சித்தன் அருள் 1441...

    இந்த பதிவு எண்ணில் சென்று மீண்டும் படிக்கும் பொழுது புரியும்.

    புரட்டாசி மாசத்தில் தோன்றும் அந்த வில் காந்தகத்தில் போய் இடிக்கும்.

    ஒட்டிக்கொண்டிருக்கும் துகள்கள் மீண்டும் பூலோகத்திற்கு வரும்..
    முக்தி பெறாத ஆத்மாக்கள் கீழே வரும் பொழுது மீண்டும் தர்ப்பணம் கொடுத்து மேலே அனுப்பி வைத்து.. ஒட்டிக்கொள்ள வைக்க வேண்டும்..



    இதனைப் பற்றி குருநாதர்
    ஏற்கனவே இந்த பதிவில் வாக்கில் கூறி இருக்கின்றார் மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது மேலும் புரியும்.

    2023 ஆண்டு குருநாதர் கூறிய இந்த வாக்கில் இதைப்பற்றி அறிவியல் ரீதியாகவும் அறிவியல் வழியாகவும் எடுத்துரைப்பேன் அப்பனே என்று கூறியிருந்தார்

    அதேபோன்று காசிவாக்கில் அறிவியல் விளக்கமாக குருநாதர் கூறியிருக்கின்றார் புரிந்து கொள்ளவும்.



    இறைவன் என்பவன் காந்தகம் அந்த காந்தகத்தில் இந்த அணுக்கள் எல்லாம் போய் ஒட்டிக்கொள்ள வேண்டும்... என்பதைப் குருநாதர் வாக்குகளில் கூறியிருக்கின்றார்

    இந்த வாக்கினை புரிந்து கொள்வதற்கு இதற்கு முன்பாக... சித்தன் அருள் 1501.. அன்புடன் அகத்தியர்.... பதிவில்...

    ஆத்மாக்கள் காந்தகத்தில் ஒட்டிக் கொள்வது எப்படி என்பதை குறித்து குருநாதர் விளக்கமாக கொடுத்துள்ளார்

    அதனால் அடியவர்கள் அனைவரும் அந்த பதிவினை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது நன்றாக புரிந்து கொள்ளலாம்.

    மேலும் சித்தன் அருள் 1461

    சித்தன் அருள் 1190

    சித்தன் அருள் 1225


    சித்தன் அருள் 1461

    இவ் பதிவுகளை எல்லாம் படிக்கும் பொழுது ஆத்மாக்கள் அணுக்கள் காந்தகம் முன்னோர்கள் வழிபாடு பித்ருக்களுக்கு தர்ப்பணம்... இவற்றை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    (1)நவராத்திரி வாக்கு
    https://www.youtube.com/watch?v=zpYXIbTe_R0&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=1

    (2) சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=tuTXHEDs8Ws&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=2

    (3)நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்?
    https://www.youtube.com/watch?v=dhnjL-8qcgA&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=3

    (4)நவராத்திரி சூட்சும ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=qnkDoDPvw9Q&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=4

    (5) நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=o9wZB4GIDb8&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=5

    (6)புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=nZf6y4kVppo&list=PLr-rfmzhELfpOCuDGJZhLaGYCHHxIH2K4&index=6


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  3. வில் அம்பு ரகசியம்

    விஷ்ணு ரகசியம்

    சித்தன் அருள் 1668 இந்த வாசனை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது பல விஷயங்கள் புரியும்


    இவ் மாதத்தில் தான் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழிபடுவது எதற்கென்றால் அப்பனே காக்கும் கடவுள் பெருமான் விஷ்ணு இவ் ஆன்மாக்களை முக்தி பெற செய்வான் அப்பனே. அவ் ஆன்மாக்கள் இப்புவியில் தங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!! பெருமான் ஆன்மாக்களை மேலே அனுப்பி விடுவான் அப்பனே!!!! ஆன்மாக்களுக்கு நல்ல முறையாக உதவி செய்வான் அப்பனே!!!

    முக்தி பெறாத ஆத்மாக்கள் தன் பந்தங்களை தேடி இவ் மாதத்தில் தான் புவியை நோக்கி வரும் அப்பனே அவை மனித உடலில் சேரக்கூடாது என்பேன் அப்பனே!!!!! அவை சேராத படி அவற்றிற்கு முக்தியை அளிக்க வேண்டும் என்பேன் அப்பனே இதற்கு பெருமான் உதவிடுவான் என்பேன், அப்பனே.

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    உலகம் அறியாத புரட்டாசி விஷ்ணு வில் ரகசியங்கள்.

    Youtubelink
    https://www.youtube.com/watch?v=pi6DTriMJOs

    சித்தன் அருள் - 1940 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் காசி வாக்கு!

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  7. குருநாதரின் அருளால் அனுபவ பதிவுகள் உரையாடல் வடிவில். உங்களுக்கான ஓய்வான நேரத்திலோ அல்லது பணி செய்யும் பொழுது FMரேடியோ போல் கேட்கலாம்.

    https://youtube.com/playlist?list=PLOFkZsZXbWDLF_vtsq3TroFlldNUdHeWv&si=JPscy7BCgX44aS2N

    ReplyDelete
  8. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete