ஆதி சிவசங்கரியின் திருக்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே எனது ஆசீர்வாதங்கள் அனைவருக்கும். குறைகள் வேண்டாம் அப்பனே. நீயும் சொன்னாய் அப்பனே, அதாவது கேள்விகள் என்னிடத்தில் இல்லை என்று. ஆனால், உந்தனை யான் கேள்விகள் கேட்க போகின்றேன் அப்பனே! அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.
அறிந்தும், பாபங்களில் முதலில் வருவது பித்ரு சாபங்கள். ஏனப்பா? நீங்கள் சொல்லுங்கள்! பல விளக்கங்கள் கொடுத்துவிட்டேன் நான். அக்காவே உங்களிடம் கேள்வியை கேட்டு, பார்ப்போம் நீங்கள் எப்படி (கூறுகின்றீர்கள்) என்று!
அடியவர்: பித்ரு சாபங்கள் என்றால் ஜாதகத்தில் கடுமையாக காட்டும். ஏதாவது நல்ல நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்றால் (குடும்பத்தில்) அதற்கு தடங்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். இதில் எனக்கு அந்தப்பக்கம் (உண்ணலிடம்) திருப்பி ஒரு கேள்வி இருக்கிறது. என்ன தெரியுமா? நல்லபடியாக வாழ்ந்து கரையேற்றிவிட்டு போனவர்கள் தானே, அப்புறம் எதுக்கு அவர்கள் சபிக்கிறார்கள்? ஒருத்தருக்கு நாலு குழந்தைகள் இருக்கு என்றால் ஒருவர் கர்மா செய்தால் போதாதா? நான்கு பேருமே எதற்க்காக பண்ண வேண்டும்?
அகத்தியர்: அப்பனே இதுவும் உண்மைதான். யான் ஒன்று கேட்கின்றேன். நான்கு பேரில் ஒருவனுக்கு அனைத்தும் கிடைக்கின்றது, வேறொருவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இன்னொருவனுக்கு ஏதுமே கிடைப்பதில்லை. இன்னொருவன், சாதாரணமாக தர்மம் ஏந்துகின்றான். அப்பொழுது அனைவரும் ஒன்று தானே அப்பா?
அடியவர்: அவனவன் கர்மவினையை பொறுத்துதான் கிடைக்கின்றது.
அகத்தியர்: அதுபோல்தான் அப்பனே! நீ சொல்கிறாய் அப்பனே, இப்படி நடந்தால் நல்லது என்று. நிறைய நபர்களுக்கு கூறுகிறாய். அதில் ஒருவன் நீ சொன்னதை செய்தால், உன் ஆன்மா மகிழும். அதாவது, நீ சொல்கிறாய் அல்லவா, அதனால், உன் புண்ணியம் அவனை போய் சேரும். அதனால் அவன் நன்றாக இருப்பான் அப்பனே. மற்றவன், இவன் ஏதோ சொல்கின்றான், நான் ஏன் கேட்க வேண்டும் என்று. மற்றொருவன், ஏதோ சொல்கின்றான், பார்ப்போம் என்று. மற்றொருவன் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கின்றான் என்று மட்டும் நினைக்கிறேன். இதனால் தான் அப்பனே, நிச்சயம் ஒருவன் எண்ணம் எப்படியோ அது போல் தான். அப்பனே, முன்னோர்களும் நல்லவைகளை எடுத்துரைக்கின்றார்கள் அப்பனே! ஒருவன் கேட்கின்றான், ஒருவன் கேட்க்காமல் அப்படியே திரிகிறான். பித்ருக்கள் ஆத்மா பாதிப்படையும் பொழுது ஒருவன் கஷ்டங்கள்தான் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவனவன் செய்த விஷயங்களுக்கு அவனவன் தான் செய்ய வேண்டும் அப்பனே! கேள் இன்னும் அப்பனே!
அடியவர்: நான் கேட்பது என்னவென்றால், என் தந்தை, அவருக்கு நன்கு பிள்ளைகள். அவரை உட்காரவைத்து நான்கு சாப்பாடுகளை போட்டால் தான் அது சரியாகுமா?
அகத்தியர்: பாசத்தை காட்டுங்கள் அப்பனே. தாயும் தந்தையும் தன குழந்தைகள் அழுதால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமப்பா. அது போல் தான் ஆன்மாக்களும். இப்படி எல்லாம் வளர்த்தோம், பசி என்றதும் எல்லாம் கொடுத்தோம் என்றெல்லாம் அவ் ஆன்மாக்கள் நினைத்து அலையும். அவைகள் ஏங்கிக்கொண்டிருந்து திரியுமப்பா! ஒரு ஆத்மாவும் அனைத்தையும் உட்கொள்வதில்லை அப்பனே! இன்னும் சூட்ச்சுமமாக சொல்கின்றேன். நீங்கள் கொடுத்தீர்களல்லவா, யான் உங்களுக்கு கொடுக்கின்றேன் என்று நினைத்து செய்திட அவைகள் திருப்த்தியுறும். இன்னும் தெளிவுகள் பெற வைக்கின்றேன் அப்பா!
அடியவர்: நீங்கள் சொல்கிற அத்தனை சாஸ்திர சம்பிரதாயங்களும், விபரீதமாக நடக்கின்ற பொழுதுதான் அத்தனையும் கேள்விக் குறியாக இருக்கின்றது!
அகத்தியர்: கேள்வி வந்தால் தான் அதை பற்றி அறிய முடியும். அப்பொழுது நீ ஒரு படி மேல் ஏறுகின்றாய் அப்பனே! அதனால் கேள்விகள் வரட்டும் அப்பனே, யங்கள் உரைக்கின்றோம் அப்பனே! அனைத்தும் உரைப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே!
அடியவர்: அடுத்தமாதம் நிறைய தூமகேதுக்கள் பூமியின் சுற்று பாதைக்குள் வரப்போகின்றது. என்ன நடக்கும்?
அகத்தியர் : நிச்சயம் அப்பனே! இதனால் தான் அப்பனே கருணை காட்டி அப்பா! அப்பா! என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்! நிச்சயம் தவறு செய்யாதீர்கள், மனதை ஒன்று போல் எண்ணுங்கள், போட்டிகள் வேண்டாம், பொறாமைகள் வேண்டாம், ஒன்றாக இருங்கள் என்று. ராகுவும், கேதுவும் சக்திகளை ஒன்றிணைத்து அனைத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவேன்.
அடியவர்: அதில் ஒரு தூமகேதுவானது செவ்வாய் கிரகத்தில் பதிந்துவிடும் என்கிறார்களே! அது உண்மையா?
அகத்தியர்: நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் உண்மை தானப்பா! அதிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் மனிதனை தாக்கும். அதற்காகத்தான் ஏன் ருத்திராட்சம் அணியச்சொன்னேன் என்று உணருங்கள். ருத்திராட்சம் ஆனது கதிர் வீச்சுக்கள் மனிதனை தாக்காமல் தடுக்கும்,. ஆகவே ஏன் ருத்திராட்சம் அணியச்சொன்னோம் என்பதை அனைவரும் உணர வேண்டுமப்பா. ருத்ராக்ஷத்திற்கு இருக்கும் சக்தி வேறு எதிலும் இல்லை அப்பா.
அடியவர்: இரண்டு முறை சிவபுராண கூட்டு பிராத்தனை நடந்த இரு இடங்களிலும் (பாபநாசம், திருவண்ணாமலை) நிறைய கெட்டகர்மாக்களை சேர்த்துக் கொண்டவர்கள் வந்திருக்கிறார்களே!
அகத்தியர்: நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே. ஒரு சக்தி மிகுந்த இடத்தில் வைத்து அனைத்தும் ஒழித்து ஏறிய வேண்டும் என்பதே! அதனால், ஒவ்வொருவரும், எங்கெங்கோ, எதை என்றோ ஓடி ஓடி! யாங்கள் முன்னரே சொன்னோமே, எங்கெங்கு சக்திகள் அதிகமோ அங்கு தான் திருத்தலங்கள் அமைப்போம் என்று! அதனால், ஒரு இடத்திற்கு, பல சிறப்புக்கள் உண்டப்பா! பல சக்திகள் உண்டப்பா. அவ்சக்தி இடமானது யங்களே அறிவோம் அப்பனே! இங்கு பாபம் என்பது தீய சக்தி, புண்ணியம் என்பது நல்ல சக்தி. இவை அப்பனே! அங்கும் இங்கும் திரியுமப்பா! அப்படி திரியும் பொழுது, அவ்விடத்தில் எங்கேனும் யாரினிலேனும் ஏறுவோமா என்று அலையும். போகப்போக புரிய வைக்கின்றேன் அப்பனே, உந்தனுக்கு ரகசியமாகவே.
அடியவர்: இப்படிப்பட்ட சக்திகளால், இதனை நடத்துபவர்கள் உடல் அளவிலும், மனஅளவிலும் நிறையவே பாதிக்கப்படுகின்றார்கள். என்ன செய்ய?
அகத்தியர் : இதனை நீயே அறிவாய். காப்பு அணிவது முதல் அனைத்தையும் சொல்லிக்கொடு. கூட்டமாக இருந்தால் வலுவாக அமையும் அப்பனே. இவ்வாறாக பக்தர்களிடம் கூட்டு இல்லை என்றால் இறைவனே இல்லை. பல திருத்தலங்கள் அழிந்துவிடுமப்பா. வரும் சந்ததிகளும் எப்படி எப்படியோ போகுமப்பா. தலை கீழாக மாறுமபப்பா. இது கலியுகம் என்பேன். அப்பனே! கடைசி வாக்கை வழங்கியிருக்கின்றேன், இவ்வாறாகவேனும் திருந்தட்டும் என்று. அவ்வாறும் திருந்தவில்லை என்றால், ஒருவராலும், இறைவனே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா.
அடியவர்: போன முறை மதுரை சென்ற பொழுது அம்மாவை பார்க்க முடியவில்லை!
அகத்தியர்: ஆம், முன்னரே சொன்னேன்! நீ செல்லவில்லை ஆயினும் அம்மாவுக்கு உன் சார்பாக சீர் வரிசை சென்று விட்டது.
அடியவர்: ஆமாம்! அந்த புடவையை (அம்மா மீனாக்ஷிக்கு) என் சார்பாக எதுக்காக கொடுக்க சொன்னீர்கள்?
அகத்தியர் : இப்பொழுதுதான் சொன்னேனே! சீர் வரிசையாக போயிற்று!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete