​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 16 December 2024

சித்தன் அருள் - 1753 - அகத்தியர் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், இனி வரப்போகும் காலத்தை பற்றி குருவிடம் கேட்ட பொழுது, இவ்வாறு கூறினார்.

"ஆண், பெண், குழந்தைகள், வித்தியாசமின்றி அனைவரும் ஒரு சிறு ருத்திராக்ஷத்தை கழுத்தில் அணிவது, வரப்போகும் காலத்தின் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த கவசமாக மாறும்" என்றார்.

குறிப்பிட்ட நட்பு வட்டத்துக்கு மட்டும் தெரிவித்து முடித்தபின், அனைவருக்கும் தெரிவித்து விடலாம் என்ற எண்ணம் உதிக்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அனைவரையும் அகத்தியர் அருள் காக்கட்டும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 14 December 2024

சித்தன் அருள் - 1752 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 5


சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3
சித்தன் அருள் - 1750 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 4

சற்று நேர அமைதிக்குப் பின் நண்பர் பேசத் தொடங்கினார்.

"ஹிமாலயத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். எப்படி வந்தீர்கள்? ரயிலா? அல்லது விமானமா? இங்கு எங்கு தங்கியிருக்கிறீர்கள்?" என்றார்.

எல்லா இடமும் எங்களுடையதுதான். இதில் எதற்கு ரயில், விமானம்? வாயு பகவானை விட வேகமாக கடத்தி செல்லும் ஒரு வண்டி இங்கு உள்ளதா?" என்றார் சிரித்தபடி.

புரிந்து கொண்ட நண்பர் "அஷ்டமா சித்தியோ" என்றார் மெதுவாக. அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. சிரித்தபடி நின்றிருந்தார் அவர்.

"சரி! புரிந்தது! ஆனால், நான் சாதாரண மனிதன்! என்னை தேடி வரவேண்டிய காரணம் என்ன? அதுவும் அந்த ஈசான மூலையிலிருந்து, இந்த கன்னி மூலைக்கு?" என்றார் நண்பர்.

"ஆஹ்! எனக்கு ஒரே ஒரு மூச்சு சொல்லிகுடுங்க போதும்! அது மட்டும் நீள அகலம் தெரிய வேண்டும்! நீங்கள் அந்த பயிற்சியில் சிறந்தவர் என கேள்விப்பட்டேன். இங்கேயே இப்பொழுது ஒரு மூச்சு!" என்றார்.

"சரி! என்று கூறி, சரியான விகிதத்தில் நீள அகலத்துடன் மூச்சை உள்ளிழுக்க, அந்த பெண்மணி ஒரே வினாடியில் கண் மூடி திறக்க, நண்பரின் மூலாதாரத்திலிருந்து குளிர்ச்சியை வெளுப்படுத்தி ஒரு சக்தியானது எல்லா சக்கரங்களையும் கடந்து உச்சியில் சஹஸ்ராரத்தை சென்று அடைந்தது. ஒரு நிமிடத்தில் சித்தம் ஆடிப்போனது. சற்றே நிலை குலைந்தார் எனலாம்.

பொதுவாக மூலாதாரத்திலிருந்து உயரும் சக்தி உஷ்ணத்தை வெளிப்படுத்தித்தான் உயரும். இது குளிர்ச்சியை வெளுப்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் இது போன்று உணர்ந்ததில்லை. எப்படி? என்று மனதில் யோசிக்க, அந்த பெண்மணி பதிலை தொடர்ந்தார்.

"போதும்! ஒரு மூச்சுதான் வேண்டும்!" என்றார் சிரித்தபடி.

"ஏன் அக்னி மட்டும்தான் மூலாதாரத்திலிருந்து உயருமா? குளிர்ச்சி வராதா என்ற, உங்கள் இத்தனை நாள் கேள்விக்கு, இன்று அனுபவம் கிடைத்தது இல்லையா?  இவை எல்லாம் எந்த சக்ராவின் எந்த இதழை தூண்டுகிறோம் என்பதை பொறுத்தது. இதை பற்றி நிறைய படியுங்கள்! இனி வரும் நாட்களில் பலருக்கும் நன்மை செய்ய பிரயோசனப்படும்!" என்றார் சிரித்தபடி.

ஒரு நிமிடத்தில் புத்துணர்ச்சி பெற்று நின்ற நண்பர், "சரி என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா? டீயா? எப்படி வேண்டும்?" என்றார்.

சிரித்தபடியே கடைக்காரரை திரும்பி பார்த்தபின், "எனக்கு, அவர் இப்ப டம்பளரில் விடுகிறாரே, அந்த நீர் சூடாக ஒரு கப் வாங்கி குடுங்க!" என்றார்!

கடைக்காரரை திரும்பி பார்த்த நண்பர், அவர் மிக கட்டியான டிகாஷனை ஒரு பாத்திரத்துக்குள் விடுவதை கண்டார்.

"அண்ணே! அந்த டிகாஷன் சூடாக ஒரு கப்பில் விட்டு இவங்களுக்கு வேண்டுமாம். குடுங்க!" என்றர் நண்பர்.

நண்பரை அருகில் அழைத்த கடைக்காரர், "என்ன சொல்லறீங்க! இந்த ஒரு கப் டிகேஷன்ல ஐம்பது காப்பி போடலாம், அவ்வளவு கெட்டியானது. அதையா குடுக்க சொல்றீங்க. இதை அப்படியே குடிச்சா குடல் எரிந்துவிடும்! சொல்லுங்க!" என்றார்.

அவரை திரும்பி பார்த்த நண்பர், "இது போதுமா? உங்களுக்கு?" என்றார்.

நண்பர் கடைக்காரரிடம் திரும்பி "அவங்க கேட்கறாங்க இல்ல? குடுத்திடுங்க!" என்றார்.

கடைக்காரரும் "என்னவோ! நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்!" என்ற படி ஒரு கப் நிறைய கெட்டியான டிகேஷனை சூடாக கொடுத்தார்.

அதை பெற்றுக்கொண்ட அந்த பெண்மணி, முகத்தில் எந்த பாவ மாற்றமும் இன்றி அந்த டிகேஷனை குடிக்க தொடங்கினார்.

"கடைக்காரர் என்ன சொன்னார்?" என்றார்!

அவர் கூறியதை தெரிவித்ததும்,

"அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இன்றைய சந்திப்பு முடிந்து நாம் சென்ற பின்னிலிருந்து இங்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அவர் ஞாபகத்திலிருந்து அழிக்கப்படும். முடிந்தால் , நீங்கள் நாளை இதே நேரத்தில் வந்து நம்மை பற்றி கேட்டுப் பாருங்கள். என்ன சொல்கிறார் என்பது அப்போது புரியும்" என்றார்.

மேலும் ஒரு விஷயத்தை கூறி, "இதற்கு என்ன வழி?" என்று கேட்டார் அந்த பெண்மணி.

"எனக்குத் தெரிந்து, திரு.எம் அப்படினு ஒரு பெரியவர் பெங்களுருவில் இருக்கிறார். அவர் ஆஸ்ரமத்தில் போய் அவரை பார்த்தால் இது சரியாகும்" என்ற தகவலை பகிர்ந்தார் நண்பர்.

"ம்! சரி!" என்றபடி தான் டிகாஷன் குடித்த கப்பை கடைக்காரர் முன் வைத்தார். ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினார். கடைக்காரர் நண்பரை பார்க்க, "அவர் குடித்த டிகேஷனுக்கு மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் நண்பர்.

கடைக்காரர் கொடுத்த பாக்கியை பையில் வைத்துக் கொண்டு நண்பரை நிமிர்ந்து பார்க்க, நண்பரோ, "பின்னாடி பாருங்கள். ஒரு முரட்டு நாய் நம்மை நோக்கி நேராக வந்து கொண்டு இருக்கிறது. அது பக்கத்தில் வந்தால், உங்களை பார்த்து, குரைத்து பிரச்சினை பண்ணும்!" என்றார்.

"ஆம்! மிருகங்களுக்கு அனைத்தும் தெரியும்" என்று கூறி நாயை திரும்பி பார்த்தார்! நாய் ஏதோ ஒன்றினால் செலுத்தப்பட்டது போல் இவர்கள் திசையை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது.

"அந்த மின் கம்பம் வரை வரும். பின் நின்று இரு பக்கமும் பார்த்துவிட்டு வந்த வழியே சென்று விடும்!" என்றார்.

"பார்ப்போம்!" என்றார் நண்பர், சிரித்தபடியே.

இருவரும் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

அந்த நாய் வேகமாக மின் கம்பத்தின் அருகில் வரை வந்தது. ஏதோ தோன்றி அங்கேயே நின்று இரு புறமும் பார்த்தது. மண்ணை முகர்ந்து பார்த்தது, சட்டென திரும்பி வந்த வழியே, குறைத்தபடி சென்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 11 December 2024

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!








18/11/2024 அன்று குருநாதரின் அன்பு சீடர் புலஸ்திய மகரிஷி உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ லோபா முத்ரா அன்னை சமேத அகத்தீசர் ஆலயம். பண்பொழில்.மேக்கரை. செங்கோட்டை .மேற்கு தொடர்ச்சி மலை. 

கலியுகம் எப்படி இருக்கும் மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை எல்லாம் அறிந்து உணர்ந்து அமைதியாக போதும் என நினைத்து தவத்தில் சென்று அமர நினைத்த குருநாதர் அகத்தியர் பெருமானை அனைத்து தெய்வங்களும் சித்தர்களும் வந்து மீண்டும் கலியுகத்தில் உங்களுடைய சேவை வேண்டும் என வேண்டுகோள் விடுத்து விளையாடிய விளையாட்டு!!!!!

பரலோகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவா போற்றி!!!!

குரு முனியே !! போற்றி!!

உனை பணிந்தே வாக்குகள் ஈகின்றேன் புலத்தியனே!!!

அப்பப்பா !! எண்ணற்ற பிறவிகள் மனிதன் கடந்தாலும்!!!.........

ஆனாலும் அறிந்தும் உண்மையை புரிவதே இல்லை!!!!

என் மனதில் அழகாகவே இருக்கும் குரு முனியை பற்றி யானே பின் எடுத்துரைப்பேன்!!!

எடுத்துரைப்பேன் நிச்சயம்!!

 கலியுகத்தில்!!! 
கலியுகம் தொடங்குவதற்கு !!!........

(கலியுகம் துவங்கும் நேரம்)

பின் குரு முனியே!!! நிச்சயம்... இவ்வாறெல்லாம் மனிதன் இருக்கின்றானே!!! என்று ஓடோடி வந்து நிச்சயம் பின் அதாவது இங்கே!!!! அமர்ந்தான்!!!

(கலியுகம் துவங்கும் பொழுது மனிதர்கள் இப்படி இருக்கின்றார்களே என்று வருந்தி குருநாதர் அகத்தியர் பெருமான் இந்த இடத்தில் வந்து தவத்தில் அமர்ந்தார்)

ஆனாலும் பின் என்னிடத்தில்... புலத்தியனே!!!.... போதும்!!!

கலியுகம் தொடங்கி விட்டது மனிதனிடத்தில் புத்திகள் அதாவது தாழ்வடைந்து விடும்.

தாழ்வடைந்து தர்மமும் தலைகீழாகும்!!

இதனால் நிச்சயமாய் யான் எங்கும் அலையப்போவதில்லை!!!!

பின் மக்களை தர்மத்தை கடைபிடியுங்கள் என்றாலும் அதர்மத்தை தான் கடைப்பிடிப்பார்கள். 
உண்மையைச் சொல்!! என்றால்.. பின் பொய்யை தான் கூறிக் கொண்டிருப்பார்கள். 
நிச்சயம் நியாயமாக இருங்கள் என்று சொன்னாலும்... பின் அநியாயமாகத்தான் இருப்பார்கள்..

அதனால் நிச்சயம் பின் புலத்தியனே போதும்...

நிச்சயம் பல மக்களுக்கு எடுத்துரைத்து.. பல பல தெய்வங்களுக்கும் எடுத்துரைத்தது... போதும் 

அதனால் பின் இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள்!!! என்று!!!

அதனால் கலியுகமும் தொடங்கி விட்டது... நிச்சயம் மனிதன் நோய் நொடிகளோடும் புத்திகள் இருந்தும் புத்திகள் இல்லாமலும் நிச்சயம் கஷ்டங்களோடு வாழ்வான். 

இதனால் யான் இங்கேயே அமருகின்றேன்... யாரும் வேண்டாம் எந்தனுக்கு என்று!!! என்று!!... 

புலத்தியர் பெருமான் குருநாதரிடம் வேண்டுகோள்

அறிந்தும் உண்மையை எடுத்துரைக்க.. யாரும் இல்லையே!!!

நிச்சயம்... குருமுனியே!!! குருமுனியே!!...

நீங்களே இப்படி சொல்லிட்டால்!!????????!... பின் யாங்கள் எப்படி?? என்று!! பின் அறிந்தும் கூட!!!

குருநாதர் அகத்திய பெருமான்!! மறுமொழி 

ஆனாலும் பின் நிச்சயம் வேண்டாம்! வேண்டாம்! போதும்!!

 யான் நிச்சயம் தவத்தில் இறங்குகின்றேன்!!! அறிந்தும் அறிந்தும் என்று. 

அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!!

நிச்சயம் ஓடோடி வந்து நிச்சயம் குருமுனியே!! மகா முனியே!! அன்புள்ளம் கொண்டவரே கருணை மிகுந்தவரே... அன்பு எங்கு நிறைந்திருக்குமோ.. அங்கெல்லாம் நிச்சயம் வந்து!! வந்து !! 

நிச்சயம் உன் அதாவது உன் அன்பு மனைவி பேசுகின்றேன்!!!

நிச்சயம் பின் வாருங்கள் உலகத்தை காக்க என்று!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி!
 
தேவியே!!! நிச்சயம் வேண்டாம்!!!... போதும்!! நீயும் இங்கேயே அமர்ந்திடு!!... நிச்சயம் கலியுகத்தில் அதாவது இறைவனிடத்தில் பக்திகள் மட்டும் செலுத்துவான் மனிதன்! 

ஆனால் உண்மைகள் தெரியாமல் பக்திகள் செலுத்துவான் மனிதன்... ஒன்றும் லாபம் இல்லாமல் லாபங்கள் இல்லாமல் போகும். 

அதனால் நிச்சயம் வேண்டாம்.. அதாவது அறிந்தும் 

அன்னை லோபா முத்திரை தேவி குருநாதரிடம் வேண்டுகோள் !!

கருணை மிகுந்து படைத்தவரே... நீங்களா??? இப்படி ? சொல்கிறீர்கள்!!!!?????

ஈசன் கட்டளை ஏற்று நிச்சயம் பாரெங்கும் இருக்கும் மனிதர்கள் அதாவது ஏழ்மையோடு கூட அதாவது இன்னும் அறிந்தும் கூட பின் தீயோர்களையும் கூட பின் நல்லோர்களையும் கூட.... காக்க வந்து!!!......

 ஆனால் இப்போது இப்படி சொல்கின்றீர்களென்றால் !?!?!?  எப்படி?? கலியுகத்தில் மனிதன் வாழ கூடும்????????????????

அகத்தியர் பெருமான்  மறுமொழி 
 
நிச்சயம் தேவியே!!! தேவியே !! நில்லும்!!.. போதும்... நீயும் இங்கே இருந்து விடு!

 ஏனென்றால் கலியுகத்தில் மக்கள் நோய்கள் நொடிகளோடும் நிச்சயம் அதாவது அறிந்தும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுவார்கள். 

அதனால் இங்கேயே உந்தனுக்கு காட்டுகின்றேன்... பின் மக்கள் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்றெல்லாம். 

புலத்தியர் பெருமான் வேண்டுகோள் 

நிச்சயம் குருமுனியே!!! அனைத்தும் வாரி வழங்கினீர்கள் அதாவது நீங்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் என்னிடத்தில் பின் நிச்சயம் பின் அறிந்தும் அனைத்தையும் செப்பினீர்கள்!!!

பின் அதாவது பின் இப்பொழுது இப்படியா??

 நிச்சயம் வாருங்கள் என்று!!

அகத்தியர் பெருமான் மறுமொழி .

புலத்தியனே!!! நிச்சயம் வேண்டாம்!!
 அறிந்தும் என்று. 

ஆனாலும்... சரி புலத்தியனே... என் பேச்சை நீ கேட்பாயா?? இல்லையா? 

புலத்தியர் பெருமான் பணிவுடன்!!!!. 

ஐயோ குருமுனியே!! நீங்கள் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்!!!

நிச்சயம் உன்னை தவிர எந்தனுக்கு ஆள் இல்லை !!!

நிச்சயம் உண்டு உண்டு குருமுனியே!!! வாருங்கள்!! பின் உலகத்தை காப்போம் என்று..ஆனாலும் குரு முனியே!! குருமுனியே!! 

குருநாதர் அகத்தியர் பெருமான் மறுமொழி 

பின் புலத்தியனே!!!! அனைத்து விஷயங்களையும் யான் சொல்லிவிட்டேன்!!!

 முடிந்தால் மக்களை காப்பாற்று என்று. 

புலத்தியர் பெருமான் வேண்டுகோள். 

நிச்சயம் குருமுனியே!!! பின் அனைத்தும் அதாவது பின் குருவிற்கு நிகர்!!! குருவே!!!

அதாவது சீடனுக்கு அனைத்தும் தெரிவித்து விட்டீர்கள்!!!

ஆனாலும் நிச்சயம் பின் குருவானவன் எவ் வழியோ??.... சீடர்களுக்கு அவ்வழி தான் என்று நீங்கள் தான் சொன்னீர்கள்! 
அதனால் யானும் உங்களுடன் நிச்சயம் அமர்கின்றேன்.. பின் அறிந்தும்.

ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் குருவானவன்!;

 அதாவது சீடன்... குருவாக பின் குருவானவன் இடத்திற்கு அடைய பார்ப்பான். இதுதான் கலியுகம்.. நிச்சயம் அறிந்தும் அறிந்தும்... உண்மைதனை எடுத்துரைக்க. 

நிச்சயம் சரி பின் குரு முனியே!!! குருமுனியே!! நீங்கள் நிச்சயம் முடிவெடுத்தது முடிவெடுத்தது தான்!!

ஏனென்றால் பின் உங்களிடத்திலே யான் இருந்திருக்கின்றேன் என்று.. சரி பார்ப்போம் என்று!!!

அனைத்து சித்தர்களின் வேண்டுகோள்!!

பின் அனைத்து சித்தர்களும்... புசுண்ட முனியும்... இன்னும் அறிந்தும்... தேரையனும்..(தேரையர் சித்தர்) இன்னும் பாம்பாட்டியும்....(சித்தர்) இன்னும் ரிஷிகளும்... இன்னும் இன்னும் இடைக்காடனும்... இன்னும் இன்னும்... பல பல சித்தர்களும் வந்து வந்து... 

நிச்சயம் மாமுனிவரே!!! பின் உலகத்தை காக்க.. ஈசன் உன்னிடத்தில் நிச்சயம்... அனைத்தும்!!

அனைத்து வித்தைகள் தெரிந்தவன் அகத்தியனே!!!... அகத்தியனால் மட்டுமே முடியும் என்று..

ஆனால் நிச்சயம் நீங்கள் அமர்ந்து விட்டீர்களே  சாதாரணமாக இங்கு வந்து!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் நிச்சயம் பின் நீங்கள் உணர்ந்தவைகளே!!! அனைத்தையும் நீங்கள் உணர்ந்தவர்களே நீங்கள்!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி 

நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் மனிதனால் என்ன? ஏது? என்று அறிய நிச்சயம் உண்மைதனை கூட அனைவருக்கும் தெரியும் என்று... தெரியும் என்று...(கலியுகத்தில் மனிதன் தனக்கு அனைத்தும் தெரியும் என்று தன்னுடைய புத்தியை பயன்படுத்திக் கொண்டு வாழ்வான்)

புலத்தியர் உள்பட அனைத்து சித்தர்களும் !!!!

சரி !! பின் அகத்தியன் ஒரு சொல்லை விட்டு விட்டால் அதை நிச்சயம் பாதுகாப்பான்... பின் அகத்தியன் நிச்சயம் முடிவெடுத்து விட்டாலும் அப்படித்தான் என்று நிச்சயம் பின்.... பின் அறிந்தும் கூட....

நிச்சயம் பின் குருமுனியே !!  நிச்சயம் உன் தவத்தை தொடங்கும் என்று!!!

ஐயப்பன் வருகை!!

 நிச்சயம்!!! ஓடோடி வந்து நிச்சயம் அறிந்தும் பின் அதாவது பின்.... மணிகண்டனே தேடினான்!!

எங்கே என் தந்தை???? அகத்தியன் எங்கே??? என்றெல்லாம் நிச்சயம் தேடி தேடி மலைகள் மீதும் அறிந்தும் என் தந்தை எங்கே??? என் தந்தை எங்கே?? என்று அறிந்தும்!!

அகத்தியர் 

ஆனால் இங்கே... குருமுனி அழகாகவே நிச்சயம்.. தன் மகன் தன்னை தேடுகின்றானே என்று.. பின் ஆனந்த கண்ணீரோடு!!!

மணிகண்டா!!!!... என்று பின் மணிகண்டா!!! மணிகண்டா!! என்று பின் குரு முனியும் கூட!!! (இங்கிருந்து குருநாதர் மறு குரல் கொடுத்தார்)

ஐயப்பன்

தந்தையே தந்தையே
ஆனால் உங்கள் குரல் மட்டும் கேட்கின்றது!! தந்தையே!!!!
 நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்???

எந்தனுக்கு அனைத்தும் சொல்லி இருக்கின்றீர்கள்!! நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்??? மறைந்திருக்கின்றீர்களா??? என்றெல்லாம்!!!
நிச்சயம் பின் மலைகளிலும் காடுகளின் மீதும் அதாவது...அவை தன் இவ் கார்த்திகை திங்களில் (மாதத்தில்) தான் நடந்தது!!!

அதனால்தான் நிச்சயம் மணிகண்டனை தேடி தேடி இக் கார்த்திகை திங்களிலும் மார்கழி திங்களிலும் கூட 

(பக்தர்கள் மாலை அணிந்து மண்டலகாலம் விரதம் அனுசரித்து ஐயப்பனை காண செல்வது..இவ் மாதங்களில் தான்)

புலத்தியர்

 பின் அங்கங்கு தேடினான் மணிகண்டன் இன்னும் கூட இன்னும் அதாவது வந்து கொண்டே வந்து கொண்டே மணிகண்டன்... அதனால்தான் பக்தர்கள் பின் மாலை அணிவித்து பின் மலைகளில் ஏறி வரும் பொழுது நிச்சயம் பின் அறிந்தும்... இதைப்பற்றி இன்னும் விளக்கமாகவே இங்கே விவரிக்கின்றேன்...

பல ரகசியங்கள் இங்கிருந்தே விளக்குகின்றேன்... அறிந்தும் அறிந்தும் கூட. 

ஐயப்பன்

அதனால் நிச்சயம் பின் தந்தையே!! தந்தையே!! பின் அனைத்தும் பாலூட்டி சீராட்டி பின் என்னை வளர்த்தீர்களே!!! நிச்சயம் பின் மணிகண்டா!!! என்ற பெயரையும் நிச்சயம் பின் எந்தனுக்கு வைத்தீர்களே... இன்னும் அனாதை ரட்சகனே!!!... எனும் பெயரும் கூட !!
இன்னும் சபரிநாதனும் எனும் பெயரும் கூட..... ஐய்யன் பெயரும் கூட.... இன்னும் பின் இன்னும் மலையோன்!!! இன்னும் காடுடையோன்.. பின் அழகாக... பின் அழகாக வேந்தனே! வேந்தனே! என்று புலியனே! புலியனே! என்று நீங்கள் அழைத்தீர்களே... நீங்கள் எங்கு சென்று விட்டீர்கள்???

 அனைத்தையும் எந்தனுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே என்று!! ஐய்யனும் கூட அதாவது மணிகண்டன் கூட!!

(குருநாதர் ஐயப்பனுக்கு வைத்த பெயர்கள் 
மணிகண்டன் 
அனாதை ரட்சகன்
சபரிநாதன் 
ஐயன்
மலையோன்
காடுடையோன் 
வேந்தன் 
புலியன் )

புலத்தியர் 

அதாவது இங்கே சொல்வேன் என் குருநாதரை பற்றி... யான் பெருமையாக பேசுகின்றேன் இங்கு. 

ஏன்? எதற்கு? என்றால்
பின் கருணை படைத்தவர்களை  நிச்சயம் பின் குரு ஆவதற்கு தகுதியாக தகுதி!! தகுதி!!

ஆனால் மனிதனிடத்தில் அத் தகுதிகள் இல்லை!! இல்லை!!!

மீண்டும் ஆனால் பின் அறிந்தும் பின் அறிந்தும் இவை என்று அறிய நிச்சயம் பின்...

அகத்தியர் மறுகுரல்

 மணிகண்டனே!!! என்று!!

 பின் ஆனாலும்... இன்னும் என் குரு 
அதாவது குரு முனியும்... பின் 

ஆனாலும்... தந்தையை தேடி தேடி அழுது கொண்டே (ஐயப்பன்)

பின் குரு முனியே... தந்தையே நிச்சயம் இப்படி என்னை அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டீர்களே... என்னை!!

யான் என்ன ? தவறு செய்தேன்???

பின் உன்னையே பின் அறிந்தும் இவை என்று கூட 

அகத்தியர் பெருமான்!!

 இதனால் நிச்சயம் மகனே!! மணிகண்டா!! வா !! என்று!!!

ஆனாலும் ஓடோடி வந்து விட்டான் ஓடோடி வந்து விட்டான் மணிகண்டனும்..

ஐயப்பன்

தந்தையே!!! பின் உன் மடியில் யான் உறங்குகின்றேன்!!!

குருநாதர் அகத்தியர் பெருமான் 

 நிச்சயம் பின்... மணிகண்டனே உன் தந்தையிடன் நிச்சயம் அறிந்தும் கூட நீ எங்கு வேண்டுமானாலும் உறங்கலாம்... 

பின் ஆனாலும் மணிகண்டன் மடியின் மீது அழகாகவே உறங்கினான்.. உறங்கினான். 

அகத்தியர் பெருமான்

பின் மணிகண்டனே என்ன வேண்டும்? என்று நிச்சயம்!!

ஐயப்பன் 

தந்தையே ஏன் இப்படி?? மனிதனை எல்லாம் அதாவது அறிந்தும் கூட காத்து நிச்சயம் எங்களுக்கு எல்லாம் நல்வழிப்படுத்தினாய்!!

ஆனால் இப்பொழுது நீங்கள் இங்கே அமர்ந்து விட்டார்களே என்று!!

அகத்தியர் பெருமான் 

மணிகண்டனே கேளும்!!!

கலியுகத்தில் நிச்சயம் மனிதர்கள் ஒழுங்காகவே வாழப் போவதில்லை!!! அதனால்தான் யான் இங்கே அமர்ந்து விட்டேன்!!! போதும்!!!

ஐயப்பன்

நிச்சயம் பின் தந்தையே... இப்படி நீங்களே சொல்வீர்கள் அதாவது எனக்கெல்லாம் நிச்சயம் நல்லோர்கள் அதாவது நல் மனதோடு வந்தவருக்கெல்லாம் நிச்சயம் அருள் கொடுங்கள்  என்று அறிந்தும் எவை என்று அறிய!!! (நீங்கள் தான் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்தீர்கள்)

தந்தையே நிச்சயம்.. பின் நல்லோருக்கெல்லாம் வழிகாட்டுங்கள் என்று நிச்சயம் நீங்கள் தான் சொல்லிக் கொடுத்தீர்கள் 
அதனால் நிச்சயம் வாருங்கள் என்று!!!

அகத்தியர் பெருமான் மறுமொழி 

பின் மணிகண்டா!!! உந்தனுக்கு தெரியாது!!!!

 மணிகண்டன் அறிந்தும்!!!

அகத்தியர் பெருமான் உபதேசம் 

மணிகண்டா !! நிச்சயம் உந்தனுக்கு தெரியாது அறிந்தும். 

ஏனென்றால் மனிதன் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு இறைவனை வணங்குவான் கலியுகத்தில்...

மணிகண்டா !! அதனால் வேண்டாம் என்று 

ஐயப்பன்  வேண்டுகோள் 

தந்தையே!!  நிச்சயம் நிறுத்தும்!!!... வா!!! அதாவது என்னிடத்தில்... நிச்சயம் தந்தையே!!  என் அன்புக்கு வா!! நிச்சயம் அடிபணிந்து என்று நிச்சயம் பின் அறிந்தும்...

அதனால் நிச்சயம் இவை என்று அறிய அறிய... நிச்சயம் இவை உணர்ந்து நிச்சயம் உண்மைதனை எடுத்துரைக்க...வா... தந்தையே வா ஒரு முறையாவது வா... என்னிடத்தில் அதாவது...இவ் மலையின் கீழே வா !!  பார்ப்போம்!! என்று!!

அகத்தியர் பெருமான்

சரி மணிகண்டா... அன்பினாலே யான் வருகின்றேன் என்று நிச்சயம் தற்பொழுது கூட... பின்  """"'"""அச்சன் பின் தலைமை என்று அவை அழைக்க !!! அங்கே நிச்சயம் அறிந்தும் கூட!!!

 (அச்சன்கோவில் அரசே!!!! என்று ஐயப்பனை துதித்து பாடும் ஸ்தலம் )

(அச்சன் கோயில் தர்மசாஸ்தா கோயில்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள கோவிலாகும் தமிழ்‌நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுபாதை வழியாக அச்சன்கோவில் அய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம்)

பின் நிச்சயம் இவை என்று அறிய அறிய பின் என்னுடைய குருமுனி அகத்தியனும் கூட அங்கு அமர்ந்து...

நிச்சயம் மணிகண்டா!!! நீ இங்கு (அச்சன்கோவில்) வருவோருக்கெல்லாம் அள்ளிக் கொடு!!! நிச்சயம் எதை என்று புரிய... அதனால் இங்கேயே நீ இருக்க வேண்டும்... அதனால் பின்!!! என்னை தேடி வராதே!!! என்னை தேடி வராதே!!!..... என்றெல்லாம் நிச்சயம் குரு முனியும் கூட!!!

ஐயப்பன் வேண்டுகோள் 

பின் தந்தையே... ஏன் இப்படி சொல்கின்றீர்கள்... பின் கருணை பாசம் அன்பு காட்டிவிட்டு... இப்படி அறிந்தும் நிச்சயம் ஏன்!!??

அகத்தியர் பெருமான் 

பின் நிச்சயம் மணிகண்டனே.. பின் இங்கே தங்கி விடு... இங்கு வருவோருக்கெல்லாம் வரத்தை பின்.... நிச்சயம்!!

ஆனாலும் ஒன்று.... அனைத்தும் ( தவறுகள்)செய்து விட்டு வருவோருக்கெல்லாம் நிச்சயம் தண்டனை கொடுத்து.... தண்டனையை கொடு தைரியமாக!!! கலியுகத்தில் தவறு செய்து விட்டு தான் பின் வருவான் மனிதன்... அதனால் நிச்சயம் தண்டனை கொடு!!!! விட்டு விடாதே என்று... நிச்சயம் குரு முனியும் கூட!!!

ஐயப்பன் கூறியது 

தந்தையே நிச்சயம் உன் சொல்லை யான் கேட்கின்றேன்...

குருநாதர் அகத்தியர் கூறியது 

நிச்சயம் மணிகண்டனே!!! கலியுக வரதனாக இரு!!!
நிச்சயம் எதற்கும் மயங்கிடாதே!!! பாசங்கள் காட்டுவார்கள்!! அன்பு காட்டுவார்கள் மயங்கி விடாதே!!
நிச்சயம் பின் அறிந்தும் உண்மைதனை கூட பின் அடியோடு நிச்சயம் பின் பக்தர்களை காக்க நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று. 

நிச்சயம் பின் அதாவது அங்கே மறைந்தான் பின் மணிகண்டன்!!

மீண்டும் பின் அறிந்தும் இங்கே வந்து பின் தவத்தை தொடங்கினார் குருநாதர் அதாவது பின் அறிந்தும் எவை என்று மீண்டும்...

ஐயப்பன் மீண்டும்!!!

 மணிகண்டன் அங்கிருந்து தந்தையே!!! தந்தையே!! இங்கே இருக்கின்றேன் உன்னை யான் பார்க்க வேண்டும் என்று!!!

நிச்சயம் பின்  அறிந்தும் பின் அதாவது குரு முனியும் கூட பின்

குருநாதர் ஐயப்பனுக்கு இட்ட கட்டளை

 மணிகண்டனே... மீண்டும் இங்கு வந்து விடாதே!! என்று!!!

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் பாசத்திற்கு அடிமையானவன் பின் மணிகண்டனே!!!!

மீண்டும் என்ன செய்தான்???

நிச்சயம் பின் அதாவது குரு முனிக்கு தெரியும் இவன் வருவான் என்று!!!

நிச்சயம் மணிகண்டன் ஓடினான்... அங்கும் இங்கும்!!!

குரு முனி  மறைந்தான்!!! (அதாவது குருநாதர் அகத்தியர் மறைந்து கொண்டார்.)

 நிச்சயம் மணிகண்டன் தேடி வந்தான்!! காடுகளிலும் மலைகளில் மீது நிச்சயம் அறிந்தும் கூட கடைசியில் நிச்சயம் இவை என்று அறிய அறிய எருமேலி..

(எருமேலி சாஸ்தா கோவில் கேரள மாநிலத்தில் கோட்டையம் பத்தனம்திட்டா எல்லையில் உள்ள  தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ளது மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான இடமாக  அமைந்துள்ளது)

எருமேலி சென்று நிச்சயம் அங்கும் இன்னும் பல மலைகளை கடந்து கடந்து கடைசியில் இப்பொழுது சபரிமலை என்று அழைக்கின்றார்களே 
அங்கே நிச்சயம் குருநாதன் ஒளிந்து கொண்டான்!!

ஒளிந்து கொண்டு நிச்சயம் ஆனாலும் பின் அதாவது மணிகண்டனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை குரு முனியை!!

நிச்சயம் தன்னை கூட மீண்டும் மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய.. பின் இவை என்று அறிய மீண்டும்..

ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் தேட தொடங்கினான்... தந்தையே என்று அழுது கொண்டு...

ஆனால் லோபா முத்திரையும் நிச்சயம் மணிகண்டனே!!! மணிகண்டனே!!! உன் தந்தை !!....

ஒரு மலை இருக்கின்றதல்லவா...!! அங்கே இருக்கின்றான் நிச்சயம் நீ சென்று விடு என்று!!

மணிகண்டன் ஓடினான் சபரிமலைக்கே!!!

நிச்சயம்  அதனால்தான் அறிந்தும் இக் கார்த்திகை மார்கழியில் தான் அது நடந்தது!!!

அதனால்தான் நிச்சயம் பின் மாலை அணிவித்து நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் மணிகண்டன் சென்ற பாதையில் எல்லாம் இப்பொழுது மனிதன் செல்கின்றான். 

தூய உள்ளமாக செல்கின்ற பொழுது கர்மா அழியும்!!

ஆனால் இவையெல்லாம் மனிதனுக்கு தெரிவதே இல்லை 

நிச்சயம் பல பல புராணங்களில் கூட சுவடிகளில் கூட நிச்சயம் தன்னில் எழுதி வைத்தார்கள்.. பன்மடங்கு. 

ஆனாலும் அவற்றையெல்லாம் அழித்து விட்டார்கள்...

ஏனென்றால் கலியுகம் அழிவு பாதைக்கு செல்ல வேண்டும் என்று.. நிச்சயம் இவை என்று அறிய..

மீண்டும் சரி பின் சபரிநாதனும் பின் அதாவது அறிந்தும் கூட... பின் நிச்சயம் தந்தையே!!! நீங்கள் எங்கு ஒளிந்து இருக்கின்றீர்கள்??? நிச்சயம் பின் அறிந்தும் கூட. 

அகத்தியர் மறுமொழி 

பின் நிச்சயம் உன் அன்னை லோபா முத்திரை பின் உந்தனுக்கு சொல்லிவிட்டாளா?????

 மணிகண்டனே....யான் இங்குதான் ஒளிந்திருக்கின்றேன் என்று. 

நிச்சயம் அப்பப்பா!!!! அறிந்தும் கூட நிச்சயம் எவை என்று அறிய அறிய!! இதை என்று புரிய நிச்சயம் 

தந்தையே ஏன் இப்படி?? என்று!!

ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்!

அகத்தியர் பெருமான் கூறியது

நிச்சயம் நீ இங்கே இருக்க வேண்டும்!! நிச்சயம் உடம்பை விட்டுட்டு வா என்று!!

 நிச்சயம்... தற்பொழுது பின் உடம்பை அங்கே விட்டிட்டான் சபரிநாதன்... !!

அதாவது பின் பக்கத்திலே பின் ஜீவசமாதியாக இருக்கின்றான்... அதுவும் யாரும் அறியாதது...

நிச்சயம் மீண்டும் அறிந்து எவை என்று புரிந்தும் கூட பின் அதாவது இன்னும்... ஆனாலும் மீண்டும் இங்கு வந்து அமர்ந்தான்.

அகத்தியர் ஐயப்பனுக்கு மீண்டும் கட்டளை

நிச்சயம் மணிகண்டா இனிமேலும் வரக்கூடாது நீ!!
நிச்சயம் இவ் மலையிலேயே இரு நீ !!!

 நிச்சயம் மனிதன் உன்னை தேடி வரட்டும் நிச்சயம் அன்பும் பண்பும் யார்? ஒருவனுக்கு இருக்கின்றதோ? அவந்தனக்கு அள்ளி கொடு என்று!!!

நிச்சயம் இப்பொழுது வரை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டு தான் கொடுத்து கொண்டே இருக்கின்றான் மணிகண்டன் !!!

அதாவது பின் என் குருமுனியின் சொல்லை மணிகண்டன் ஏற்று!! ஏற்று!

மீண்டும் சரி!! என்று அதாவது அள்ளி கொடுத்துக்கொண்டே இரு!!! நல் மனதோருக்கு!!!

அதுதான் நீ காட்டும் பின் அன்பு!!!

அப்படி நீ.. அள்ளி கொடுத்துக் கொண்டே இருந்தால்  யான் உன்னிடத்தில் வருவேன் என்று.. என் குரு முனியும் கூட சொல்லிச் சொல்லி!!  வழி நடத்தி!!!

மீண்டும் இங்கே வந்து அமர்ந்தான் குரு முனி!!

முருகன் குருநாதர் அகத்தியருக்கு விடுத்த அழைப்பு!!

மீண்டும்... தந்தையே!!! தந்தையே !! என்று  கூக்குரலிட்டு தந்தையே தந்தையே என்று.. 

பின் இவந்தன் யார் ??? என்றால் முருகனே!!!

பின் தந்தையே!! எங்கு இருக்கின்றீர்கள்?? எங்கு இருக்கின்றீர்கள்??? ஏன் வரவில்லை... எந்தனுக்கும் அனைத்தும் சொல்லிவிட்டீர்கள் என்று..(அனைத்தும் கற்றுக் கொடுத்தீர்கள் என்று) ஆனாலும் மயில் மீது வந்து!! 

ஆனாலும் பின்  சிறிது விளையாட்டு... விளையாட்டு புத்தி பின்  முருகனுக்கு... மயில் மீது ஏறி வந்து விட்டான்!!!

தந்தையே ஏன் இந்த கோலம்??? ஏன் இங்கு வந்து விட்டீர்கள்??? நீங்கள் அனைத்தும் சொல்லிக் கொடுத்தீர்கள் ஆனாலும்!! இப்பொழுது நீங்களே இப்படியா என்று!!

அகத்தியர் பெருமான் முருகனிடம் கூறியது 

முருகா உன் வேலையை பார்!!

முருகன் பிடிவாதம் 

நிச்சயம் பின் பார்க்க மாட்டேன்...  !!

என்னுடன் நீங்கள் மயில் மீது வந்து அமருங்கள் பின் செல்வோம் என்று. 

அகத்தியர் பெருமான் மறுமொழி 

நிச்சயம் பின் அறிந்தும் கூட யான் வருவதில்லை... நிச்சயம் நீ திரும்பி செல் என்று!!!

நிச்சயம் அவை இவை என்றெல்லாம் நிச்சயம் அதாவது விளையாட்டு புத்திகாரன் முருகனும்..

பின் நிச்சயம் தந்தையே நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நிச்சயம்... யான் ஏதாவது செய்து விடுவேன் என்று!!!

அகத்தியர் பெருமான் 

அடடா!!!!.... முருகா!!! நிச்சயம் யான் வருகின்றேன் என்று 

முருகன்

நிச்சயம் அறிந்தும் கூட என் மயில் மீது உட்கார்!! என்று நிச்சயம் பின் குருமுனியை அமர வைத்து.... நேராக தோரணமலை!!! தற்பொழுது கூட அறிந்தும் கூட பின் இலஞ்சி இன்னும் திருமலை அறிந்தும் இவையென்று சுற்றிப் பார்த்து!!!

தோரணமலை. முருகன் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் எனும் ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் மலைக்கோயில் ஆகும். தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழியில் இருக்கின்றது.அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது

குருநாதர் அகத்தியர் பெருமான் தோரண மலையை தேரையர் மலை தற்போது தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது என்று திருவனந்தபுரம் சத்சங்கத்தில் கூறியதை நினைவுபடுத்துகின்றோம். தேரையர் சித்தர் பெயரில் இந்த மலை அழைக்கப்பட்டு தற்பொழுது மருவி தோரணமலை என்று அழைக்கப்படுகின்றது. 

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, தென்காசி. இத்திருக்கோயில் தென்காசி- செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும்,குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, திருநெல்வேலி, தென்காசியிலிருந்து பேருந்து தொடர்வண்டி மற்றும் சிற்றுந்து வசதிகள் உள்ளன.

திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் 

திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நட்சத்திர கோயில்கள் வரிசையில் விசாகம் நட்சத்திரத்திற்கு உரியது இக் கோயில் என்பது சிறப்பாகும்.)

குருநாதர் அகத்திய பெருமான் 

ஏனடா? முருகா!!!

 யான் அமைதியாக அங்கு இருந்திருந்தேனே!!!........!!!!

 நிச்சயம் இவை எல்லாம் சுற்றி பார்க்கத்தான்!!!  என்னிடம் வருகை புரிந்தாயா என்று!!

முருகன் விளையாட்டு 

பின் தந்தையே அமருங்கள் அமைதியாக!!!

இவையெல்லாம் நீங்கள் தான் நிச்சயம் எனக்கே அனைத்தும் சொல்லிக் கொடுத்து!!!

அதனால் உன்னை என் வாகனத்தில் இயக்குகின்றேன்.. என் பின்னால் அமைதியாக உட்கார் !! அது போதும் என்று... பின் அறிந்தும் கூட..

அப்பப்பா!! நிச்சயம் இதோ நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பின்

முருகனின் ஆனந்தம் 

 எந்தனுக்கு மயங்கி விட்டான் அகத்தியன்..!!!

. பின் பார்த்தீர்களா?? என் தந்தை!!
என் தந்தைக்கு என் மீது தான் அன்பு என்று!!!

பின் அடடா!!! என்று குரு முனியும்!!!!

ஆனால் மயில் வாகனத்திலே பின் புறப்படும் பொழுது கத்திக் கொண்டே இருந்தான் முருகன்!!

பிள்ளையார் வருகை

அப்படியா!!! என்று நிச்சயம் இதை பிள்ளையோனும் கேட்டான்!!!(கணபதி)

அடடா!!!! அகத்தியனே!!!... அவன் மட்டும் தான் உந்தனுக்கு சொந்தமா?????
நிச்சயம் எங்கே?? அறிந்தும் நிச்சயம் அதாவது!! காகம் வடிவிலே வந்தான் நிச்சயம் அறிந்தும் இவை என்று அறிய!! நிச்சயம் பிள்ளையோன்.

அதாவது பறந்து கொண்டே இருக்கின்றான் மயில் வாகனத்தில் மீது.. பின் நிச்சயம் பின்... அகத்தியனே... தந்தையே..

பின் முருகன் மட்டும் தானா உந்தனுக்கு???

நிச்சயம் யானும் இருக்கின்றேன்... எனது வாகனம் சிறிய காகமாகவே உள்ளது.... வந்து உட்கார்!! உட்கார்!!! என்று!!

நிச்சயம் ஐயோ!!! முருகா..!!!. ஏனடா!!!??? உந்தனுக்கு புத்தி விளையாட்டு புத்தி அறிந்தும் எதை என்று புரிய!!

யான் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன்... வேண்டாம் என்று மனிதர்களுடைய தொல்லையே வேண்டாம் என்று... 

பின் இப்படி இழுத்து விட்டாயே என்று நிச்சயம் பின் அதாவது.. ஓடோடி காகத்தில் நிச்சயம் உட்காரு என்று நிச்சயம்... இவை தட்ட!!! அவை தட்ட !!! 

( பறந்து கொண்டே மயிலும் காகமும்... இடித்துக்கொண்டு)

முருகா நீ ஓடடா!!!

 என்று காகத்தில் அமர்ந்து விட்டான் பின் குருமுனியே!!

(முருகன் பின்னால் மயில் வாகனத்தில் இருந்து பிள்ளையாரின் காக்கை வாகனத்தில் அகத்தியர்)

பின் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய பின்!!!

 அதனால்தான் பின் நிச்சயம்.... பிள்ளையோனையும் அகத்தியனையும் நிச்சயம் அதாவது மனதில் நிறுத்தியவர்களுக்கு சனீஸ்வரன் பின் நிச்சயம் அருளாசிகள் கொடுப்பதுண்டு!!

முன்னோர்களின் ஆசிகளும் பெறுவதற்கு சமம் அகத்தியனே... அதாவது குருமுனியே....

இன்னும் இன்னும் பல பல பின் சூட்சுமங்கள் ரகசியங்கள் நிச்சயம் பின் அதாவது சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். 

தெரிந்துவிட்டால் நீங்கள் நினைத்தது பின் நடந்தேறும்.. நிச்சயம் நோய் நொடிகளும் வராது பின் உங்கள் பரம்பரையும் வளர்ந்து வரும். 

ஆனால் தற்போதைய நிலையில் அவை இல்லை. 

பொய் சொல்லி நிச்சயம் சித்தர்கள் எல்லாம் இங்கு இருக்கின்றார்கள் என்றெல்லாம் ஏமாற்றி நிச்சயம் பின் பணங்கள் பறித்து நிச்சயம் பின் அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்று உருவமாக எல்லாம்... விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்!!!

(சித்தர்களின் சிலைகள் உருவங்கள் படங்கள்)

தேவையா இது???

நிச்சயம் பின் அன்பிற்கு மட்டுமே குருமுனியானவன் அடி பணிவானே தவிர... அவை இவை என்றெல்லாம் நிச்சயம் வேண்டும்... இவையெல்லாம் பொறுத்துக் கொண்டு!!! பொறுத்துக் கொண்டு !!!

அகத்தியர் பெருமான் முருகனிடம் பிள்ளையாரிடம் கூறியது

இதனை என்று அறிய மீண்டும் மீண்டும்.....

அப்பப்பா!!! என்னை விட்டு விடுங்கள்...!!! நிச்சயம் நீங்கள் செல்லுங்கள் !!!என்று 

மீண்டும் அதாவது பின் பின் கணபதியும் கூட காகத்தின் வழியே!!!

பின் பார்த்தாயா!!! என் மீது அகத்தியன் பக்தி கொண்டான் என்று... பக்தி கொண்டான்!! அன்பு கொண்டான்!! என்று.. மீண்டும் மீண்டும்!!

நாராயணன் வருகை

 பின் அதாவது... நாராயணனும் கூட.... அகத்தியனே!!! நிச்சயம் அவர்கள் மீது மட்டும் அன்பா ? பக்தியா?

 நிச்சயம் யான் மட்டும் எங்கு சென்று விட்டேன்??...
எந்தனுக்கு அனைத்தும் சொல்லி கொடுத்தீர்கள் அல்லவா என்று!!

நிச்சயம் பின் அதாவது குரு முனியும் கூட....

இது என்னடா?? தொந்தரவு??

எவ்வாறு அறிந்தும் பின் யான் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன் ஆனாலும் இவையெல்லாம் விளையாட்டுத்தான் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய 

அப்படியா நிச்சயம் இதை என்று புரிய எவை என்று அறிய மீண்டும் பின் கருட வாகனத்தில்... நிச்சயம் பின் அதாவது.... நாராயணன் 

அகத்தியனே நியாயமா?? இது!!!

யான் என்ன தவறு செய்தேன்??? நிச்சயம் என் வாகனத்தில் வாருங்கள்.. பின் அதாவது  என் கருடன் வாகனத்தில் பின்னாலே !!!!

 நிச்சயம் ஐயையோ கணபதியே....ஏனடா??? இந்த வேலை என்று!!! நிச்சயம் அறிந்தும் இவை என்று அறிய அறிய மீண்டும்.. பின் அமர்ந்தான் குரு முனி கருட வாகனத்திலே!!!!

நிச்சயம் இதை என்று அறிய... இவை என்று புரிய மீண்டும் பின் சுற்றி சுற்றி 
அதாவது நவ திருப்பதி களை சுற்றி!! சுற்றி !! 

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள
நவதிருப்பதி ஸ்தலங்கள்:

1. திருவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோவில்.
2. நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் திருக்கோவில்.
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்.
4. திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள் திருக்கோவில்.
5. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவில்.
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில்.
7. பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில்.
8. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-1) தேவர்பிரான் திருக்கோவில்.
9. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-2) அரவிந்தலோசனர் திருக்கோவில்.

நிச்சயம் நாராயணனே ஏன் இந்த வேலை??? அறிந்தும் இவை என்றும் புரிந்தும்!!!!

பின் எதை என்று புரியப் புரிய !!

ஈசன் வருகை!!!

பின் ஈசனாரும் அகத்தியனே!!!... என்ன வேலை இது???... நீயும் சிறு விளையாட்டு பிள்ளையாக இருக்கின்றாயே!!!

உலகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன்.. நல்முறையாக பார்ப்பாய் என்று 

ஆனால் நீயோ!? இவர்களுடன் சேர்ந்து விளையாட்டு புத்தியாகவே பிள்ளையாகவே இருக்கின்றாயே என்று !!!

குருநாதர் அகத்தியர் பெருமான் மறுமொழி 

ஐயனே!!!! அப்படியெல்லாம் இல்லை... பின் இவர்கள்தான் என்னை கெடுத்தார்கள். பின் நிச்சயம் யான் ஒழுங்காக அமைதியாக அமர்ந்து தான் இருந்தேன் என்று நிச்சயம்.. எதை என்று அறிய அறிய 

பின் இவை என்று அதாவது தன் வேலையை எவ்வாறு என்பதையும் கூட பின் ஈசனும் கூட இவ்வாறெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட பின் நிச்சயம் பின் 

அகத்தியர் பெருமான் கூறியது 

ஈசனாரே!!!!  நிச்சயம்  இவர்கள்தான் என்னை!!.....

 நிச்சயம் யான் அமைதியாக நிச்சயம் வேண்டாம் என்று என்றெல்லாம் நிச்சயம் எதை என்று அறிய அறிய 

முருகனும் தந்தையே!!!! அப்படி இல்லை... நிச்சயம் அறிந்தும் பின் இவை என்றும் இன்னும் இன்னும் விளக்கங்கள் கொடுக்க!!! கொடுக்க !!!!

ஆனாலும் பின் 

ஈசனார் 

நிச்சயம் பின் அகத்தியனே!!! நிச்சயம் இதை என்று புரிய நிச்சயம் மனிதன் (கலியுகத்தில் மனிதர்களின் செயல்) பின் அதாவது நீ ஏற்றது அதாவது மனதில் நினைத்தது சரியாகவே என்று இருக்கட்டும் !!!

ஆனாலும் அதற்கும் ஒரு விடிவெள்ளி கொடு!!! 

நிச்சயம் இவை என்று அறிய அறிய நீ அமர்ந்திருக்கின்றாயல்லவா ??!!

அங்கிருந்தே பாவங்கள் தொலைய எவ்வாறு? என்று வழிகாட்டும் என்று !!!!!

(கலியுகத்தில் மனிதர்களின் பாவங்கள் தொலைவதற்கு குருநாதர் செய்த கருணை

 மற்றும் தாமிரபரணி உருவாக வேண்டிய காரணம்!

குருநாதர் மறுமொழி!!!

ஈசனாரே !!! நிச்சயம் பின் எவ்வாறு என்பதையும் கூட உருவாக்குகின்றேன். 

"""தாமிரபரணி என்று நிச்சயம் !!!!

அது மட்டும் இல்லாமல் பின் நீயும் அதாவது பாவத்தை பின் அழிக்க வேரோடு அழிக்க... பாப நாசனாக கீழே இரு!!!!
 போதுமானது என்று!!

(பாபநாசர் திருக்கோயில்
தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் எனும் இடம் இடத்தில் உள்ளது. குருநாதர் உருவாக்கிய நவகைலாயங்களில் முதல் கோயிலாகவும் சூரியனுக்கு உகந்த கோயிலாகவும் உள்ளது)

பின் நிச்சயம் பின் ஈசனாரும் அப்படியா!!!!.... நீயே இங்கு இரு நிச்சயம் என்று! 

ஐயோ.. என்று பின் அதாவது பின் ஈசனாகவே நிச்சயம் பின் அகத்தியனும் லோப முத்ராவும் நிச்சயம் அறிந்தும் கூட பாபநாசத்தில் நிச்சயம் இருந்து கொண்டு பாவங்களை நிச்சயம் நசுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நிச்சயம் அறிந்தும் இதை தன் புரிய புரிய.

(பாபநாசம் ஆலயத்தில் ஈசன் பார்வதி தேவியார் வடிவாக அகத்தியர் பெருமானும் உலோபா முத்திரை அன்னையும் இருந்து கொண்டு பாவங்களை அகற்றி வருகின்றார்கள்)

பிரம்மன் வருகை

நிச்சயம் இவை என்று அறிய கடைசியாக... பிரம்மனும் கூட எவை என்று அறிய 

அகத்தியனே... பின் இவை என்று புரிய... என்னென்ன வேலைகள் என்று???

ஆனாலும் இதை என்று கூட அகத்தியன் நிச்சயம் !!!

அகத்தியர் பிரம்மனுக்கு மறுமொழி!!

ஐயையோ... அப்பா!!!... பின் அறிந்தும் எவை என்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ஆனால் நிச்சயம் நீங்கள் விடப்போவதில்லை என்று!!

நிச்சயம் பின் இதை என்று புரிய  புரிய இப்பொழுது நீங்கள் குளித்தீர்களே !!! 

( மலைப்பாதையில் மூன்று பெரிய பாறைகள் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி போல நீரோடை ஓடிக் கொண்டிருக்கின்றது அங்கு அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மற்றும் உடன் சென்ற அடியவர்கள் குளித்துவிட்டு சென்றார்கள். மழைக்காலங்களில் பெரிய அருவியாக இந்த மூன்று பாறைகளை அரவணைத்து பெரிய வெள்ளோட்டமாக ஓடி வரும்.. அந்த இடத்தை பாறைகளை குறிப்பிடுகின்றார்)

 அங்கு பார்த்தீர்களென்றால் !!

பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அழகாக கற்கள் வடிவில் நிற்கின்றார்கள்.

(அங்கு மூன்று பாறைகள் உள்ளது)

நிச்சயம் பாவங்கள் தொலையும். 

ஆனாலும் நிச்சயம் என் பக்தர்கள் யாரொருவன் நீதி பின் தர்மத்தை கடைப்பிடிக்கின்றார்களோ!!!!!! அவர்களுக்கு நிச்சயம் அறிந்தும் பின் அதாவது எதை என்று புரிய புரிய... என்றெல்லாம் நிச்சயம் பின் குரு முனியும் சொல்லி இருக்கின்றான். 

அதனால் நிச்சயம் பின் குரு முனியை கூட நிச்சயம் காண வைக்க யான் போராடுவேன். (குரு தரிசனம்)

நிச்சயம் அவ் பக்தியும் அன்பும் கூட நிச்சயம் நிறைந்த பின் மக்களுக்கு யானே (புலத்தியர்) வழிகாட்டியாக இக்கலி யுகத்தில் இருக்கத்தான் போகின்றேன்!!


குருநாதர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காப்பதற்கு எடுத்த முடிவு முன்பு எடுத்த முடிவிலிருந்து செய்த பரிசீலனை


இதை என்று அறிய அறிய கடைசியில் நிச்சயம் குருமுனியும் கூட!!! போதுமடா.. கடைசியில் நிச்சயம் வேண்டாம்... அமைதியாக உட்கார்ந்து பார்த்தேன்.. மீண்டும் என்னை விடவில்லை நிச்சயம்...

யானே மக்களுக்கு சேவையாற்ற வருகின்றேன் என்று.. பின் என் குருநாதன் வந்து விட்டான்..!!!

இப்பொழுது கூட சேவையாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்... நிச்சயம் மனிதர்களுக்கு !!!!!

ஆனால் பின் என் குரு முனியை வைத்து ஏமாற்றுகின்றார்கள். அவ் மந்திரங்கள் ஜெபியுங்கள்!! இவ் மந்திரங்கள் ஜெபியுங்கள் என்றெல்லாம் நிச்சயம்... இவையெல்லாம் வீண்!!!


சொல்கின்றேன் யான்!!! இவ் மலையில் இருந்து.. இங்கே நிச்சயம் அமர்ந்து கொண்டு...!!!

 இன்னும் பின் அதாவது பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!! (சித்தர்கள்)

 ஏன் எதற்கு?! ஒரு மந்திரமாவது!?!?!?? நிச்சயம் ஒரு உயிரை காக்குமா?!?!?! நோயில் இருந்து காக்குமா?!?!?!?! நிச்சயம் வாழ்க்கையை பாதுகாக்குமா!?!?!?!?
நிச்சயம் தன்னை சுற்றி உள்ளவர்களை பார்க்குமா!?!?!?
என்றெல்லாம்!!

 நிச்சயம் பின் மீண்டும்.... என் குருநாதனிடம் வந்தேன் அழகாக பின்..

குருமுனியே!!! நிச்சயம் கருணை படைத்தவரே!!!!
தந்தையே!!!
நிச்சயம் எவை என்று அறிய அறிய... எப்படித்தான் இவ் கலியுகத்தை வெல்வது???

அகத்தியர் மறுமொழி

நிச்சயம் பின் யான் சொல்கின்றேன் கலியுகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் கூட....

உண்மையானவர்கள் எவர் இருக்கின்றார்களோ... அவர் மூலம் எடுத்துரைத்து பல வழிகளிலும் பின் தேற்றி நிச்சயம் விதியையும் கூட மாற்றலாம்... என்று!!!


 இதனால் நிச்சயம் என்று... பின் அனைவருக்கும் தேவாதி தேவர்களுக்கும் கூட சந்தோஷமாயிற்று!!!

மீண்டும் அகத்தியன் அறிந்தும் கூட பின் வந்து விட்டான் என்று!!

இதுதான் எதை என்று இன்னும் ரகசியங்கள் அதாவது...இவ் ரகசியங்கள் எல்லாம் நடந்தது... இவ் கார்த்திகையில் இருந்து நிச்சயம் தை திங்கள் பின் தொடங்குவதற்கு அறிந்தும் இவ் இரண்டு மாதங்களிலே இப்படி நடந்து விட்டது....

(கார்த்திகை மார்கழி) 

  இதனால்தான் இவ் மாதங்களில் கூட காடுகளில் மலைகள் மீது ஏறும் போது நிச்சயம் அங்கங்கு ஓடினாலே நிச்சயம் அவ் சக்தி அங்கங்கே இருக்கும் !! 

இதனால் இங்கெல்லாம் செல்கின்ற பொழுது நிச்சயம் சில பாவங்கள் அழிந்து போகும் நிச்சயம். 

அனைவருக்குமே பின் நிச்சயம் ஆசிகள்!! அருளாசிகள் !!!

குரு முனியின் அருள்கள் பின் உங்களுக்கு கூட பலம். 

இதனால் குறைகள் இல்லை !!

என் குரு முனி சோதிப்பானே தவிர... அனைத்தும் கொடுத்து விடுவான்!!
 கருணை படைத்தவன்...

 நிச்சயம் அறிந்தும் இவை என்று தெரிந்து கொண்டீர்களா!!

இன்னும் ரகசியங்கள் இங்குதான் வைத்து யான் சொல்லப் போகின்றேன்.. என் குருமுனியை பற்றி கூட !!!

(நம் குருநாதர் உலகத்தை காப்பதற்கு தன்னுடைய முடிவிலிருந்து மாற்றிக் கொண்டு மீண்டும் வந்து விட்டார்)

ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!!

கடந்த ஆண்டு ஜூலை மாசத்தில் பொதிகை மலையில் வைத்து அகத்தியர் மகரிஷி குருநாதர் அகத்திய பெருமானுக்கு சூட்டிய புகழ் மாலை வாக்கு சித்தன் அருள் பதிவு எண் 1353 மீண்டும் படித்து நாம் அனைவரும் குரு பக்தியை உணரலாம்.!!!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 10 December 2024

சித்தன் அருள் - 1750 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 4


சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3

தான் கேட்ட காப்பியை அருந்தி முடித்தபின், எதுவும் பேசாமல், கீழே வைத்த சாமான்களை எடுத்துக் கொண்டு நேராக நடந்து வந்த வழியில் கோட்டையை கடந்து வலது புறம் திரும்பி சென்றான்.

"போதுமா?" என்றார் அந்த பெண்மணி, நண்பரை பார்த்து.

"இல்லை! போதாது. இது இயல்பாக நடந்தது போல இருக்கிறது! இன்னொரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டுங்கள்! அதோ வருகிறாரே, அந்த பெரியவர் தினமும் இங்கு வந்து ஏதேனும் அருந்தி செல்வார். இன்றும் காப்பி அருந்தத்தான் வருகிறார். கடைக்காரர் எப்போதும் போல என்ன வேண்டும் என்று கேட்ப்பார். ஆனால், அந்த பெரியவர், நான் தலையாட்டுகிறவரை எந்த பதிலும் கடைகாரருக்கு கூற கூடாது.  நடத்திக் காட்டுங்கள் பார்ப்போம்!" என்றார்!

இதற்குள், அந்த பெரியவர் பாதையை கடந்து இவர்கள் அருகிலூடே சென்று காப்பி கடை முன் நின்றார்!

"டன்!" எனக்கூறி அந்த பெண்மணி கட்டை விரலை உயர்த்தி காட்ட, நண்பரும் அவரும் பொறுமையாக காத்திருந்தனர்.

பெரியவரை பார்த்து "வாங்கய்யா!" என்றழைத்தபடி கடைக்காரர் காப்பி குடித்த பாத்திரங்களை திரும்பி நின்றபடி, சுத்தம் செய்து கொண்டிருந்தார்!

"என்ன சாப்பிடறீங்க? எப்போதும் போலவா?" என்றார் கடைக்காரர்.

வந்தவர் பேசாமல் நின்று கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. தலை எல்லாம் வியர்த்து இருந்தது. கையில் இருந்த துண்டினால் தலையை துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்.

இவர்கள் இருவரும் அந்த பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் அந்த பெண்மணி "நீங்கள் தலையாட்டத வரை அவர் பேசமாட்டார்!" என்று மெதுவாக கூறினார்.

காப்பி கலக்க பாத்திரத்தை எடுத்து வைத்த கடைக்காரர் அந்த பெரியவரிடம், மறுபடியும் " அய்யா, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றார்.

பதில் இல்லை. பெரியவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பேச முடியவில்லை. கடைக்காரர் மேலும் இரண்டு முறை கேட்டும், பதில் இல்லை.

சூழ்நிலை, அந்த பெரியவருக்கு, சற்று சிரமமாக மாறுவதை கண்டு, கடைகாரரும் இவரை ஆச்சரியத்துடன் பார்ப்பதை கண்ட நண்பர், அந்த பெண்மணியை நோக்கி, தலையை ஆட்டினார். அதற்குள் மேலும் இரண்டு முறை "என்ன வேண்டும்" என்று கடைகாரார் கேட்க, பெரியவர் தான் நின்ற நிலையிலிருந்து விடுபட்டு " என்ன என்று தெரியவில்லை. எந்த எண்ணமும் வரவில்லை. சரி! நீங்கள் ஸ்டராங் காப்பி போடுங்க!" என்று கூறினார்.

"அதெப்படி முடிந்தது? உங்களை ஒத்துக் கொள்கிறேன்!" என்றார் நண்பர்!

"இதெல்லாம் மிக எளிது. ஆக்ஞா சக்கரத்தின் ஒரு இதழை தொட்டு நிறம் மாற்றி விட்டால், பேச்சு வராது, யோசனையும் இருக்காது!" என்றார் சிரித்துக் கொண்டே.

"வாங்க! காப்பி சாப்பிடுவோம்! உங்களுக்கு என்ன வேண்டும், காப்பியா? டீயா?" என்று கேட்டார் நண்பர்.

"நான் எதுவும் சாப்பிடுவதில்லை!" என நிதானமாக சிரித்தபடி கூறினார் அந்த பெண்மணி.

"ஓ! ஏதேனும் விரதமோ?" என்றார் நண்பர்.

"இல்லை! எனக்கு சாப்பாடு தேவை இல்லை. உடலுக்கு தேவையானதை, காற்று, ஆகாயம், சூரிய வெளிச்சத்திலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வேன்!" என்றார் அவர், புன்னகைத்தபடி.

"முதன் முறையாக சந்திக்கிறோம். ஏதேனும் சாப்பிடுங்களேன்!" என்றபடி, கண்ணாடி பெட்டிக்குள் கையிட்டு உளுந்து வடை ஒன்றை எடுத்து அவருக்கு கொடுத்தார், நண்பர்.

ஒரு வினாடி அந்த வடையை உற்று பார்த்து, யோசனைக்குப்பின் சிரித்தபடி அதை வாங்கி சாப்பிட தொடங்கினார், அந்த பெண்மணி.

"என்ன யோசனை? நல்ல வடைதான். இங்கு நல்லவிதமாக தயாரிப்பார். நான் காப்பி சாப்பிட வரும்போதெல்லாம் ஒன்று வாங்கி சாப்பிடுவேன். வயிற்றுக்கெல்லாம் பிரச்சினை செய்யாது!" என்றார் நண்பர்.

"இந்த வடையை உண்டபின் அதில் ஒன்று சேர்ந்து இருக்கும் கர்மா உடலுக்குள் சென்ற பின் என் உடலை விட்டு வெளியேற எத்தனை நாட்கள் ஆகும் என்று கணக்கிட்டேன். இரண்டு மாதம் என் உடலுள் இருந்து கழியும் என தோன்றியது. பற்று இல்லாவிடினும் எனக்கு அனுபவித்து கழிக்கும் விதி உள்ளது என்று தோன்றுகிறது!"என்றார் புன்னகைத்தபடி.

இதற்குள், காப்பி அருந்திய பெரியவர், இவர்களை அதிசயமாக பார்த்தபடி கடந்து சென்றார்.

"ஒரு வடைக்குள் இத்தனை நாள் நீண்ட கர்மாவா?" என்று கேட்டபடி தானும் ஒருவடையை எடுத்து சாப்பிட தொடங்கினார் நண்பர்.

"ஆம்! ஒவ்வொரு பொருளும் உருவாகும் முன்னரிலிருந்து கடைசியாக வடை ரூபத்தில் சேரும் வரை, எந்தெந்த பொருட்கள் வழி எத்தனை பேர் தன் கர்மாவை அதில் பகிர்ந்து கொள்கிறார்களோ அத்தனையும், நம்முள் சென்று உடலை வருத்தும். யோசித்துப் பாருங்கள். அதனால் தான் உணவு என்பதை இங்கிருந்து எடுத்துக் கொள்ளாமல், உணவு தரும் சக்தியை, மனித கர்ம பதிவுகள் இன்றி பஞ்ச பூதத்திலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வேன். மனிதர்கள் விடும் மூச்சில் கூட அவர்கள் சேர்த்துக் கொண்ட கர்மா நிறைந்திருக்கும். அந்த கர்ம வாசனை நம்முள் படர வேண்டாம் என்று தான் என்னை போன்றவர்கள் மனிதர் முன் வருவதில்லை." என்றார்.

அவர் பேச்சு அனைத்தும் நண்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில் புதுப் பாடமாகவும் இருந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 7 December 2024

சித்தன் அருள் - 1748 - அன்புடன் அகத்தியர் - அருணாச்சல தாண்டவம்!!

 




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!! இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் கடும் மழை பொழிவு ஏற்பட்டு மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு.. அதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு என சில நாட்களே இருக்கும் பொழுது அண்ணாமலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் பக்தர்களுக்கு சில மனகலக்கத்தை ஏற்படுத்தியது... இதைக் குறித்து அனைவரும் கவலை கொண்டிருந்தனர். 

அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு குருநாதர் அகத்திய பெருமான்... திருவண்ணாமலையில் இப்படி நடக்க என்ன காரணம் என்பதை சுவடியில் வாக்குகளாக கூறினார். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே முன்பே ஏனைய வாக்குகளிலும் கூட அப்பனே உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே அழிவு காலம் அப்பனே.... மனிதனின் செயல்கள் அத்துமீறுகின்ற பொழுது அப்பனே இறைவனை இப்படி ஆட்டத்தை ஆரம்பிப்பானப்பா !

அப்பனே மனிதர்களுக்கு பக்தி என்பது என்னவென்றே தெரியவில்லை அப்பனே பக்தியை எப்படி காட்ட வேண்டும் என்பதையும் தெரியவில்லை அப்பனே சாதாரண மலை இல்லை என்பேன் அப்பனே அண்ணாமலை!!!

இறைவன் கண்ணெதிரே அப்பனே அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகி வழிகின்றன அப்பனே அண்ணாமலையிலே என்பேன் அப்பனே!!! பொய் கூறிக் கொண்டும் அப்பனே இறைவன் பெயரை வைத்துக் கொண்டும் ஏமாற்றித் திரிகின்றார்கள் அப்பனே!!!

அனைத்தும் பணத்திற்காகவே என்பேன் அப்பனே!!!

எல்லை மீறுகின்ற பொழுது இப்படித்தான் நடக்கும் என்பேன் அப்பனே!!

 ஈசனே நடத்திய நாடகமப்பா இது!!!!

ஈசன் கொடுத்த எச்சரிக்கை அப்பா !!!

இதை எதை என்று அப்பனே அறிவியல் பூர்வமாகவே விளக்குகின்றேன் அப்பனே அப்பனே அவ் மலையானது அப்பனே பஞ்சபூதங்களையும் அடக்கி உள்ளது அப்பனே... அதன் உள்ளே நீரும் நெருப்பும் கொதித்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

அதன் அடியிலே ஏராளமான தண்ணீர் உள்ளது என்பதை அப்பனே!!!! நெருப்போடு சேர்ந்து அப்பனே மேலே எரிமலை போல் எடுத்து கிளம்பியது என்பேன் அப்பனே!!!


அவ் நீரை ஈசன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளான் அப்பனே... இதை யாராலும் எவ் விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது என்பேன் அப்பனே!!

அப்பனே எப்போது வேண்டுமானாலும் மலை பொங்கி வரும் அப்பா எரிமலை போல!!!

மனிதர்கள் அப்பனே இவை ஒரு அபாய எச்சரிக்கை என்பேன் அப்பனே 
மனிதர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈசன் ஒரு சிறு எச்சரிக்கை மட்டுமே தற்போது விடுத்துள்ளானப்பா

இவ் அண்ணாமலையை சுற்றி அப்பனே ஆசிரமங்களை அமைப்பது இன்னும் கூட அப்பனே விடுதிகள் ஏற்படுத்துவது.. அதன் மூலம் அப்பனே பணத்தை ஈட்டுவது அப்பனே மனிதர்களின் ஈன புத்தி அப்பனே... பணம் பணம் என்று திரிந்து கொண்டே இருக்கின்றான் .... இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள் அப்பா 

இனியும் அப்பனே இம் மலையை சுற்றி அநியாயக்கிரமங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் ஈசன் மீண்டும் அடிப்பான் அப்பனே!!!... நல்லோர்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துவிட்டு அனைவரையும் வெளியேற்றிவிட்டு அப்பனே மலையாக அப்படியே பொங்கி எழுவானப்பா!!.... அனைத்தையும் மண்ணால் நிரப்புவானப்பா!!!! இது ஆரம்பம் தான் அப்பா.....

அவனிடத்திற்கே யாரையும் வராமல் செய்து விடுவான் அப்பனே... அவன் தலத்தையும் மலையை பொங்கச் செய்து மண்ணை கொண்டு மூடி விடுவான் என்பேன் அப்பனே!!! கலியுகத்தில் இதுவும் நடக்கும் அப்பனே.....

ஈசன் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே அனைத்தும் பொய்கள் அப்பா பணத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணி மனிதன் நடந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே....

அப்பனே நாங்கள் சித்தர்கள் மலையை சுற்றி குருகுலத்தை நடத்தி இருக்கின்றோம் அப்பனே அன்று எல்லாம்... பணத்திற்காக இல்லை அப்பனே மனிதர்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே அனைத்தையும் கற்றுக் கொடுத்தோம் அப்பனே ஆனால் இன்றைய நிலையில் அப்படி இல்லை அப்பனே மலையை சுற்றி ஆசிரமங்களை அமைத்து பணத்திற்காகவே பணம் பணம் என்று அப்பனே இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை மறந்து விட்டார்கள் அப்பனே

ஈசன் கொடுத்த அபாய எச்சரிக்கை அப்பனே... மனிதர்கள் இப்படியே நடந்து கொண்டிருந்தால் யாரையும் இங்கு வரவிடாமல் செய்து விடுவான் என்பேன் அப்பனே. 

உண்மையான ஞானிகள் அப்பனே மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே..... அவர்களை எல்லாம் விரைவில் யான் காண்பிப்பேன் அப்பனே... அவர்களும் மலையை சுற்றிக் கொண்டே வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பா.... இங்கு நடக்கின்ற அநியாயங்களை கண்டு ஈசனிடம் முறையிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பா 

உன்னை நீ நம்பு!!

அப்பனே இங்கு வருபவர்கள் தன்னை முதலில் நம்ப வேண்டும் அப்பனே!!! பிறரை நம்பி இங்கு வந்தால் அப்பனே!!! அழிவுகள் தான் என்பேன் அப்பனே!!!

நீர் அதன் அடியில் கொதித்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே நெருப்பின் அப்பனே வெப்பம் கூட கூட அப்பனே மேலே பொங்கி வழியும் அப்பா
இவ் ரகசியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா!!!

இனியும் யான் வாக்குகள் கூறுகின்றேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு திரிவார்களப்பா மனிதர்கள்!!

ஆனால் இதனைப் பற்றி எல்லாம் அப்பனே அறிவியல் பூர்வமாகவே வாக்குகளாக கொடுத்து உணர்த்துவேன் என்பேன் அப்பனே 

இனி இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாகவே வாக்குகளாக கூறுவேன் என்பேன் அப்பனே... மனிதர்கள் அதை பிறகுதான் உணர்வார்கள் என்பேன் அப்பனே!!!

அழிவு காலங்கள் என்பேன் அப்பனே!!!!.... இவ்.... (சென்னை மழை வெள்ளம்) தலைநகரிலும் பேரழிவுகள் காத்திருக்கின்றது கடல் பொங்கி உள்ளே வரும் என்பேன் அப்பனே 
கடல் ஊருக்குள் வந்தால் என்ன ஆகும் என்பதை அறிந்ததே என்பேன் அப்பனே

 அப்பனே ஈசனும் சித்தர்களும் கட்டுக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!!

அழிவுகள் வரக்கூடாது என்பதற்காகவே அப்பனே பல ஞானிகளும் சித்தர்களும் ஜீவசமாதி ஆகி காத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே !!

ஞானிகளும் சித்தர்களும் ஈசனிடத்தில் முறையிட்டு நல்லோர்களும் இருக்கின்றார்கள் ஈசனே அவர்களை காக்க வேண்டும் ஈசனே என்றெல்லாம் போராடி காத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.... எப்பொழுது அழிவுகள் வரும் என்பதை தெரியாது அப்பனே மனிதர்களுக்கு காஞ்சி (காஞ்சிபுரம் )வரை கடல் நீர் பொங்கி வழியும் அப்பா!!!

(சென்னையை சுற்றி பல சித்தர்கள் ஜீவசமாதி ஆகி இருப்பது நகருக்கு அழிவுகள் வரக்கூடாது என்பதற்காக அழிவுகளில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்)


அப்பனே நவதானியங்களை வைத்து ஏன் தீபங்களை ஏற்ற சொன்னேன் என்றால் அப்பனே....

அப்பனே ஈசன் மறுத்துவிட்டானப்பா...இவ் கார்த்திகை தீபம் தனை ஏற்றக்கூடாது.. எந்தனுக்கு. மனிதர்களின் செயல்கள் கண்டு ஈசன் தீபம் தனை நடத்தி விடக்கூடாது  என்று அப்பனே முடிவெடுத்து விட்டான் என்பேன் அப்பனே..

ஆனால் பொறுத்திருக!!! ஈசனே பொறுத்திருக என்றெல்லாம் யாங்கள் போராடிய அப்பனே அழிவில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே....

ஈசன் கருணை உள்ளவன் தான் அப்பனே ஆனால்... ஒரு நிலை வரை நான் பார்ப்பான் என்பேன் அப்பனே அடித்து நொறுக்கிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே...அவந்தனுடைய ஆலயத்தையும் கூட மண்ணை கொண்டு நிரப்பி விடுவான் அப்பனே யாரும் இங்கு வர முடியாமல் செய்து விடுவான் என்பேன் அப்பனே!!!

ஈசன் ஒரு சிறிய எச்சரிக்கை மட்டும் தற்பொழுது காட்டி உள்ளான் அப்பனே !!!

என் பக்தர்களை ஏன் தீபம் ஏற்றச் சொன்னேன் என்றால் யாரெல்லாம் யான் கூறியபடி விளக்கேற்றி வழிபட்டார்களோ அவர்களுக்கு பரிபூரண ஆசிகள் உண்டாப்பா!!!... பேரழிவுகள் ஏற்பட்டு இன்னும் பல பேர் காணாமல் போய் இருக்க வேண்டியது என்பேன் அப்பனே..... நீங்கள் ஏற்றிய விளக்கு அவர்களுடைய ஆத்மாவை சாந்தி படுத்தவே என்பேன் அப்பனே!!!! உயிரிழந்த ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் இவ் தலத்திலேயே பிறப்பெடுத்து உயர்வாக வாழ்வார்கள் என்பேன் அப்பனே...இவ் ஆன்மாக்களை சாந்திப்படுத்த யாரெல்லாம் தீபங்களை ஏற்று வழிபட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அவ் புண்ணியங்கள் கிட்டும் என்பேன் அப்பனே!!!! தீபம் ஏற்றி வழிபாடு செய்தவர்கள் குடும்பமே செழித்து வாழும் என்பேன் அப்பனே பிள்ளைகள் பரம்பரை என அப்பனே நீடூழி வாழ்வார்களப்பா!!

நவகிரகங்களின் சக்தியானது மொத்தமாக அண்ணாமலையிலே படிகின்றது என்பேன் அப்பனே!!..... மனிதர்களுடைய பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க அப்பனே அதன் உள்ளே எரிந்து கொண்டிருக்கும் நீரும் நெருப்பும் அப்பனே அப்படியே பொங்கி வழியும் அப்பா எரிமலை போல.... இதையெல்லாம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பேன் அப்பனே 

அவ் நெருப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் ஈசன் என்பேன் அப்பனே 

தற்போது அதில் ஒரு சிறு துளை மட்டுமே ஏற்படுத்தியுள்ளான் அப்பனே சிறு எச்சரிக்கையாகவே என்பேன் அப்பனே....

ஈசன் கருணை உள்ளவன் என்பேன் அப்பனே.... அப்பனே புனிதமான இடத்தில் எப்படி வாழ வேண்டும் என்பது தெரியாமல் உயிர்களை கொன்று தின்பது அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வது பணம் பணம் என்று ஏமாற்றி வாழ்வது என ஈசன் கண் முன்னே இப்படி நடந்தால் விட்டு விடுவானா என்ன??? அப்பனே!!!!

ஈசன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பேன் அப்பனே... 

ஆனால் அப்பனே!!!! அடிக்க ஆரம்பித்து விட்டால் உலகத்தையே அழித்துவிட்டு சென்று விடுவான் அப்பா இன்னும் கடல் பொங்கி வரும் அப்பா... பூமியவளும் குலுங்குவாள். என்பேன் அப்பனே...(பூகம்பம்)

ஜீவகாருண்யத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!! பணத்தாசை இல்லாமல் இருக்க வேண்டும் அப்பனே!!!!

இது கலியுகம் என்பேன் அப்பனே... கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் வாக்குகளாக செப்பி செப்பி வழிநடத்திக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஆனால்... மனிதர்கள் திருந்துவதே இல்லை என்பேன் அப்பனே 

இன்னும் அப்பனே மறைமுகமாக ஞானிகள் ரிஷிகள் அப்பனே.. தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் அப்படி மனித ரூபத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ் மலையை சுற்றி.... மனிதர்கள் பணத்தை பிடித்து நடந்து கொள்வதை கண்டு அப்பனே அவர்களும் அப்பனே இங்கு நடப்பதை கண்டு வெறுத்து அப்பனே சாபமிட்டு செல்கின்றனர் என்பேன் அப்பனே.....

அது மட்டுமில்லாமல் அப்பனே உண்மையான பக்தர்களும் அப்பனே அவர்கள் ரூபத்தில் முற்றுப்பெற்ற ஆத்மாக்களும் ஞானிகளும் ரிஷிகளும் கூட உண்மையான பக்தியில் முதிர்ச்சி பெற்றவர்களும் கூட அப்பனே அப்பனே பௌர்ணமி தினங்களில் வலம் வருகின்ற பொழுது என்ன நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை கண்டு... ஈசனே என்ன இது?? உன் கண் முன்னே இப்படி எல்லாம் நடக்கின்றதே!! இதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாயா இதற்கெல்லாம் விடிவு இல்லையா!!!!! இதற்கெல்லாம் தண்டனைகள் கிடையாதா என்று ஈசனிடம் முறையிட்டு வேண்டிக் கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே!!!!

இப்படி எல்லாம் மக்கள் இருக்கின்றார்களே.... நாங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... என்ன ஈசனே இதெல்லாம் நியாயமா!!! இதையெல்லாம் கண்டு கொண்டு நீ அமைதியாக தான் இருப்பாயா? ஈசனே!!! என்றெல்லாம் அப்பனே முறையிட்டு செல்கின்றார்களப்பா!!! சிலர் ஈசனைத் திட்டி தீர்த்து விடுகின்றார்கள் அப்பா 

இவர்களும் கூட அப்பனே உண்மையான பக்தர்களை கண்டு பேசுவார்கள் அப்பா.. அப்படி பேசி செல்கின்றார்கள் அப்பா வழி நடத்துகின்றார்கள் அப்பா 

ஈசன் தன் ஆட்டத்தை தொடங்கினால் யாரும் தாங்க முடியாத அப்பா.... அடியில் இருந்து பொங்கிக் கொண்டே இருக்கின்றதப்பா ஈசன் அதனை தன் கட்டுக்குள் வைத்துள்ளான்ப்பா!!!

மனிதர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு சிறு விளையாட்டு காட்டியுள்ளான் என்பேன் அப்பனே 

 இனியும் மனிதன் எல்லை மீறும் பொழுது நடப்பதெல்லாம் அப்பனே... என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாதப்பா எவ் விஞ்ஞானியாலும் கணித்து சொல்ல முடியாதப்பா

எதிர்பார்க்காத நேரத்தில் அழிவுகள் வருமப்பா யாராலும் அவைகளை கணித்து கூற முடியாதப்பா!!! மனிதர்கள் அது நடக்கும் இது நடக்கும் என்பதெல்லாம் பொய்யாகி போய்விடுமப்பா!!!..... பெரிய பெரிய அழிவுகள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே..... கடல் பொங்குமப்பா !!!!

ஆனால் சித்தர்கள் நாங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பேன். அப்பனே நல்லோர்கள் வாழட்டும் என்று அப்பனே.... இவ். பூமியும் ஒரு நெருப்பு கோளம் என்பேன் அப்பனே...... வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடலும் பொங்கும் அப்பா நிலமும் அதிருமப்பா

அனைத்தையும் ஏற்கனவே யான் வாக்குகளில் கூறியிருக்கின்றேன் அப்பனே அதை படிப்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே... புண்ணியங்கள் இல்லையென்றால் என்னவோ ஏதோ என்று கடந்து சென்று கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே வாக்குகளை படிக்கவும் முடியாது அப்பனே 

வாக்குகளை கூட பொய் என்று மனிதர்கள் கூறி திரிவார்களப்பா!!! இந்த உலகத்தில் நன்மை நடந்து விடக் கூடாது என்பதற்காகவே கலிபுருஷன் கலியின் வேலையப்பா!!!

யார் மூலம் இவ்வுலகத்தில் நன்மைகள் நடக்கின்றதோ அவர்களை எல்லாம் அவர்களுக்கெல்லாம் அப்பனே தடைகளை ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே கலியவன்.

அவந்தனுடைய வேலையே இப்பொழுது அப்பனே பக்தியை பொய்யாக்க வேண்டும்... பக்தியை பொய்யாக்கினால் மனிதர்களால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவன் தன் வேலையை செய்து கொண்டிருக்கின்றான் கலியவன் என்பேன் அப்பனே...

 கோடி கோடி திருடர்கள் பக்திக்குள் வருவார்களப்பா வந்து... வந்து யான் தான் இறைவன்!! யான்சொல்வது என்னிடத்தில் ஈசன் பேசுவான் என்னிடத்தில் அகத்தியன் பேசுவான் இன்னும் சித்தர்கள் பேசுவார்கள் என்றெல்லாம் அப்பனே யான் உரைப்பது தான் வாக்கு.... அவை பொய் அங்கு பொய் இன்னும் கூட அப்பனே  இங்கு தான் இறைவன் உள்ளான் இவ் பரிகாரம் செய் இவ் மந்திரம் செப்பி வா என்றெல்லாம் பொய்கள் கூறி பக்தியை பொய் ஆக்குவார்களப்பா ஏமாற்றி திரிவார்களப்பா!!!

இப்படி எல்லாம் மனிதர்களை ஏமாற்றினால் கடைசியில் மனிதன் ஒன்றும் நடக்காமல் இறைவனே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவான் அப்பா... கலியவன் இதனை செய்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே...

மனிதர்கள் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டால் கலியவன் வேலை சுலபமாக போய்விடும் என்பேன் அப்பனே இன்னும் மாந்திரீகம் தாந்திரீகம் அனைத்திலும் நுழைந்து மனிதர்களை ஏமாற்றி அப்பப்பா.... இப்படி எல்லாம் செய்து தன்னைத்தானே அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான் அப்பனே 

ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே.....

திருவண்ணாமலையில் தாரக மந்திரமே உன்னை நீ நம்பு இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமோ என்பேன் அப்பனே... அப்படி உன்னை நீ நம்பி வந்தால் இறைவன் ஆசிகள் கிட்டும் என்பேன் அப்பனே மற்றவரை நம்பி வந்தால் அப்பனே ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே... பணத்தை இழப்பது தான் நடக்கும் என்பேன் அப்பனே....

சாதாரண மலை இல்லை என்பேன் அப்பனே

ஈசன் ஒரு முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டான் அப்பனே இன்னும் அநியாயங்கள் அக்கிரமங்கள் கூடிக்கொண்டே போனால் மலையின் மீது
தீபமும் ஏற்றக்கூடாது மலையின் மீதும் யாரும் கால் வைக்க கூடாது...தன் ஸ்தலத்திற்கும் யாரும் வரக்கூடாது என்றெல்லாம் ஈசன் முடிவெடுத்து இருந்தான் அப்பனே

ஈசன் முடிவெடுத்து விட்டால் அப்பனே

யாரும் இங்கு வர இயலாது என்பேன் அப்பனே அப்படி ஒரு முடிவை ஈசன் எடுத்து விடுவான் என்பேன். அப்பனே... அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்துவிட்டு மலையை பொங்க செய்து அப்படியே மூடி விடுவான் என்பேன் அப்பனே...

ஆனால் யாங்கள் ஈசனை சாந்தப்படுத்தி அழிவிலிருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே

இன்னும் இவ்வுலகத்தில் எங்கெல்லாம் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது அதனை எல்லாம் அறிவியல் பூர்வமாகவே விளக்கப் போகின்றேன் அப்பனே

ஏனென்றால் அங்கு அவ்வாக்குகள் இங்கு  இவ்வாக்குகள் என்றெல்லாம் மனிதர்கள் கூறும் வாக்குகளை கேட்டு கேட்டு ஒன்றும் நடக்காமல் இறைவனே இல்லை என்று ஏமாற்றம் அடைந்து... பக்தியை பொய்யாக்குவார்கள் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே இனியும் அறிவியல் பூர்வமாக வாக்குகள் தந்து அனைத்தையும் உணர்த்துவேன் என்பேன் அப்பனே

காசுக்கு ஆசைப்படாதவன் சித்தன் அப்பனே 

எங்கெல்லாம் காசுக்காக ஆசைப்படுகிறார்களோ அங்கு சித்தர்கள் இருப்பதில்லை என்பேன் அப்பனே

பணத்திற்கு ஆசைப்படுபவன் மனிதன் என்பேன் அப்பனே....

யாரும் இங்கு நல்லதை சொல்லுவதில்லை என்பேன் அப்பனே... ஆசிரமங்கள் ஆகட்டும் அப்பனே குருகுலங்கள் ஆகட்டும் அனைத்தும் பணத்திற்காகவே இயங்குகின்றன என்பேன் அப்பனே

யாரும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதில்லை என்பேன் அப்பனே அசைவம் உண்ணுதல் கூடாது என்பதை பற்றி உபதேசிப்பதில்லை என்பேன் அப்பனே..... பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்று யாரும் சொல்வதில்லை என்பேன் அப்பனே..... அதை சொல்லிக் கொடுக்காமல் எவ்வித தீட்சையை கொடுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே 

தீட்சை என்பது என்ன ? அப்பனே.....

யார் ஒருவனுக்கு தீட்சை பெற தகுதி இருக்கின்றது என்றால் அப்பனே 

எவன் ஒருவன் எந்தனக்கு எதுவும் தேவையில்லை.... யான் தர்மத்தை கடைப்பிடிப்பேன்... எந்தனக்கு எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் எவ்வளவு கஷ்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்.. யான் தாங்கிக் கொள்வேன் என்ற மனநிலை இருப்பவர்களுக்கு தான் அப்பனே தீட்சை வாங்குவதற்கு.... தகுதியானவர்கள் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் ஞானம் கிட்டும் என்பேன் அப்பனே.... அவை தேவையில்லை இவை தேவையில்லை பணம் தேவையில்லை இறைவன் மட்டும் தான் தேவை என்று எவன் ஒருவன் நினைக்கின்றானோ அவன் ஒருவனுக்கு மட்டும்தான் தீட்சை பெறுவதற்கு தகுதி என்பேன் அப்பனே

யானும் தர்மத்தை கடைபிடிப்பேன் இன்னும் பல பேருக்கு தர்மத்தை பற்றி எடுத்துரைப்பேன்!! எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்று எடுத்துக் கூறுவேன் தன்னை போலவே பிறரையும் எண்ணுவேன்!! பிறரிடம் போட்டி பொறாமை கொள்ளுதல் கூடாது என்பேன் அனைத்தும் இறைவனுடைய செயல் இறைவனுடைய கட்டளை என்று எண்ணுவேன்... இப்படி யார் யோசிக்கின்றார்களோ அவர்கள்தான் தீட்சை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பேன். அப்பனே 

ஆனால் இது போல யாரும் ஆள் இல்லை அப்பா 


இனியும் யாங்கள் நிரூபிப்போம் என்பேன் அப்பனே மனிதர்களுக்கு சொன்னால் புரிவதில்லை என்பேன் அப்பனே நிரூபித்து காட்டினால் தான் தெரியும் என்பேன் அப்பனே...

இனியும் யாங்கள்  யார் என்பதை காட்டுவோம் என்பேன் அப்பனே!!!!

இனிமேலும் மனிதர்கள் திருந்திக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!!

நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே அப்பனே யாங்கள் வாக்குகள் தந்து தந்து வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்பேன். அப்பனே!!!

இனியும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே இன்னும் அடுத்த வாக்கில் விளக்கமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே ஆசிகள்! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியார் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 6 December 2024

சித்தன் அருள் - 1747 - அன்புடன் அகத்தியர் - ஷீர்டி வாக்கு!




11/11/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.சீரடி சாய்பாபா சமாதி.மந்திர்.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் ஏற்கனவே ஜல்காவ்  சத்சங்கத்தில் கூறியபடி திரு ஜானகிராமன் ஐயா மற்றும் அடியவர்கள் சீரடி வந்து நல்முறையாக பாபாவை தரிசனம் செய்தனர் பாபாவை தரிசனம் செய்ததற்கு வெளியே வரும் பொழுது ஒரு எளிமையான தோற்றத்தில் ஒரு முதியவர் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும் குடிநீர் குழாய்களில் தனது கையில் இருந்த பாட்டில்களில் நீரை பிடித்து அங்கே இருக்கும் மற்ற ஜீவசமாதிகள் போல் இருக்கும் பீடங்கள் மற்றும் மரங்களுக்கு அதாவது பெரிய பெரிய மரங்களுக்கு கீழே இருக்கும் சிறு சிறு துளைகளில் நீரை ஊற்றிக் கொண்டு இருந்தார். 


அடியவர்களையும் திரு ஜானகிராமன் அய்யாவையும் பார்த்து புன்னகைத்த அவர் அருகில் வந்து பேசினார்!! அதன் பிறகு உடன் வந்த அடியவர்களும் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை அறிமுகப்படுத்தி அகத்தியரின் சுவடி இது என சொல்லிய போது அவரும் அப்படியா என்று கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டே வந்து நானும் அமருகின்றேன் என்று அமர்ந்தார். 



ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.


அப்பனே நல் முறையான ஆசிகள் அப்பனே அனைவருக்கும்.. இவந்தனும் (அருகில் அமர்ந்திருந்த சாது முதியவர் ) கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது பின் இவந்தனிடம் (பாபாவிடம்) சீடனாக இருந்து நிச்சயம் பின் பல வழிகளிலும் கூட பின் நிச்சயம் சேவைகள் செய்தவன் தான் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே பின் இல் ஞானியைப் பற்றி இப்பொழுது சுருக்கமாக கூறப்போகின்றேன்.


அப்பனே நல்விதமாகவே அப்பனே இவந்தனும் (பாபா) கூட அப்பனே பின் அதாவது பல பல வகைகளில் கூட பின் ஏழை குடிலில் பிறந்து அப்பனே நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே 


ஆனாலும் இவந்தனைக் காக்க ஆள் இல்லையப்பா..

ஆள் இல்லையப்பா அப்பனே அறிந்தும் கூட 


இதனால் இவ் ஞானி அப்பனே அதாவது எவை என்றும் கூட பின் பின் எதை என்று புரிந்து இதனால் அப்பனே பின் நல் முறையாகவே அப்பனே அறிந்தும் கூட பின் உணர்ந்தும் கூட அப்பனே பல வகையிலும் கூட அப்பனே பின் அதாவது இவ் ஞானி... அதாவது அப்பனே பின்.. பின் அறிந்தும் கூட ஏழை குடிலில் கூட இவ்வாறு வளர்ந்து ஒரு பிறவியில் அப்பனே... பின் ஒன்றும் இல்லாமலே அப்பனே 


மீண்டும் மறுபிறவி எடுத்தானப்பா நிச்சயம்.. அப்பொழுது கூட அப்பனே ஒன்றுமில்லாமல் அப்பனே 


அப்பனே நிச்சயம் ஒவ்வொரு பிறவியிலும் கூட அப்பனே பின் ஒவ்வொரு பிறப்பெடுத்து அப்பனே வாழ்ந்து வந்தான் அப்பனே 


பின் அதனால் அப்பனே என்ன? ஏது ? என்று கூட அப்பனே... ஆனாலும் அனைத்தும் தெரிந்து கொண்டான் அறிந்து கொண்டான்...


அப்பனே அறியும் வண்ணம் நிச்சயமாய் எதை என்றும் கூட இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே செப்ப போனால்.. அப்பனே  நிச்சயம் ரகசியத்தை சொல்லப் போகின்றேன் 


இதனால் ஒரு பிறவி எடுத்து அப்பனே கஷ்டங்கள் பட்டுப் பட்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே பின் சிறு வயதில் இருந்தே அப்பனே ஞானம் பெற்றான் 


அவ் ஞானம் கூட அப்பனே எப்படி?? பெற்றான் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது சொன்னால் மனிதனுக்கு புரியாதப்பா!!!


அப்பப்பா !! இதனால் பின் அனைவரின் இல்லத்திற்கும் கூட சென்று பிச்சை அதாவது தர்மம் ஏந்தி நிச்சயம் பின் உண்டு வந்தான்!!!


ஆனாலும் பின் தர்மம் ஏந்துகின்ற பொழுது நிச்சயம் அறிந்தும் கூட...அவ் இல்லத்தில் என்ன பிரச்சனை?? என்று பின் ஆராய்ந்து உடனடியாக சரி செய்வான். 


நிச்சயம் பின் இப்படியே பின் பல பல ஊர்களுக்கும் சென்று நிச்சயம் பின் பிச்சை ஏந்தி அதாவது அவ் இல்லத்தில் என்ன பிரச்சனைகள்?? என்று நிச்சயமாய்... அறிந்தும் கூட பின் இவந்தனக்கு தெரிந்துவிடும்.. பின் நல்படியாகவே அனைத்து செயல்களையும் செய்து வந்தான். 


இதனால் அனைவருக்குமே மாற்றங்கள். 


இதனால் பின் மறு ஊருக்கு செல்கின்ற பொழுது நிச்சயம் பின் இவந்தன் இவ்வாறு நிச்சயம் பின் நம் இல்லங்களுக்கு வந்த பிறகுதான் மாற்றங்கள் என்று நிச்சயமாய் பல வழிகளிலும் கூட ஊரில் அதாவது பக்கத்து கிராமமே கொண்டாடியது 


நிச்சயம் அறிந்தும் உண்மைதனை எதுவென்று கூற இதனால் நிச்சயம் பின் இவ்வாறு பின் இவ்வாறு ஞானியானவனை அறிந்தும் கூட பல பல மக்களும் கொண்டாடினார்கள்.. இவரால்தான் நிச்சயம் பிழைத்துக் கொண்டோம் என்று. 


ஆனாலும் பல மனிதர்கள் நிச்சயம் அறிந்தும் இவை என்றும் கூட நிச்சயம்.. இவந்தன் பைத்தியக்காரன் ஆனால் மக்களும் பைத்தியக்காரர்கள்.. யாரோ இவன்!!!!!!!!!!? நிச்சயம் பின் இல்லத்திற்கு வந்தானாம் !?!?!?!?!?!?!?!?!?!

தர்மம் கொடுத்தார்களாம்!?!?!?!?!?!? பின் உயர்ந்துவிட்டார்களாம்!?!?!?!?!?!?!... என்று நிச்சயம் இதையெல்லாம் பின் நம்புவதா?????.... என்றெல்லாம்! 


நிச்சயம் இதனால் இவந்தன் இவ் ஊருக்கே வரக்கூடாது... அதனால் நிச்சயம் இனிமேல் இவந்தன் இங்கு தர்மமும் ஏந்த கூடாது.... என்று 


இதனால் தன்னந்தனியாக அப்பொழுதெல்லாம் இவையெல்லாம் காடுகள் !!!


நிச்சயம் பின் இவந்தனை ஒதுக்கி விட்டார்கள்...


 நிச்சயம் இனிமேல் நீ அதாவது... பிச்சைக்காரனுக்கு இவ்வளவு... அறிந்தும் இவ்வளவு நிச்சயம் பின் இவ்வளவு திமிரா ???? என்றெல்லாம்!! என்றெல்லாம் நிச்சயம் சில பேர்... பின் இவந்தன் ஆடைகளையும் கூட கழற்றி நிச்சயம் இவை என்று கூட ஓட விட்டனர். 


ஆனாலும் பின் நிச்சயம் கோபங்கள் வரவில்லை இவந்தனுக்கு... பின் அழகாகவே... இதையென்று நிச்சயம் பின் அமைதி காத்தான். 


நிச்சயம் மேல் நோக்கி....


இறைவா!!!!.... என்னை நீ படைத்தாய்!!!!!


ஆனாலும் மக்கள் இப்படி இருக்கின்றார்களே!!!.....


நிச்சயம் மக்களை மக்கள் மதிக்க தெரியவில்லையே 


நிச்சயம் இறைவா!!! என்னை அழைத்துச் செல் உன்னிடம் என்றெல்லாம்! 


ஆனாலும் அமைதியாக நிச்சயம் சரி...நம் தனக்கும் ஒரு இடம் உண்டு... என்றெல்லாம் நிச்சயம் இங்கு வந்து அமர்ந்தான். நிச்சயம் இங்கு வந்த அமர்ந்தான். 


நிச்சயம் இறைவா!!! யான் நல்லதை செய்தேன்.. உன் ஆணைப்படி!!!


ஆனால்... எனது ஆடைகளை கூட கழற்றி விட்டார்கள்... நிச்சயம் பின்....தா!!!!!!


அதாவது இப்பொழுது தந்தால் யான் வாழ்வேன்... இல்லையென்றால் நிச்சயம் இங்கேயே சாவேன் என்று!!


 அழகாக மேலிருந்து உடைகள் வந்ததப்பா!!!!


 ஆடைகளை சரியாகவே இவந்தன் அணிந்து கொண்டான்!!!


அணிந்து பின் இங்கே அமர்ந்தான்... அதாவது அப்பொழுதெல்லாம் இங்கு நிச்சயம் காவலாளிகள் (ரோந்து பணி) எல்லாம் பின் சுற்றி பார்க்க அதாவது யார்? யார்? வந்திருக்கின்றார்கள் என்றெல்லாம்!!!


நிச்சயம் இங்கு வந்து பார்த்தார்கள்... நிச்சயம் பின்  நேற்றைய பொழுதில்... இவந்தனுக்கு அதாவது ஒன்றுமே இல்லாமல் துரத்தினார்கள். 


ஆனால் இங்கே வந்து அமர்ந்திருக்கின்றான்... 


நிச்சயம் இவந்தன் கூட இங்கே எதன் மூலம்??? பின் அதாவது நிச்சயம் பின் அதாவது உடுக்க ஆடைகளும் நேற்று இல்லையே ஆனால்..????


 இன்று உடுத்தி இருக்கின்றானே... இவன் திருடன் என்று... ஊரார்களிடம் சென்று நிச்சயம் தளபதிகளிடம் எல்லாம் சென்று நிச்சயம் அழைத்து வந்து...


 பின் நீ ஆடைகளை எங்கே திருடினாய்??? என்றெல்லாம்!!!


இவந்தன் நிச்சயம் யான் திருடவில்லை... இறைவன் தான் கொடுத்தான் என்று!!


ஆனாலும் பின் அறிந்தும் கூட.... நிச்சயம் இறைவன் கொடுத்தானாம்!????????


அவ் இறைவன் எங்கு இருக்கின்றான்??? நிச்சயம் காட்டு என்று!!


நிச்சயம் ஆனாலும் பின் பார்ப்போம்... இறைவனை காட்டு!!!


அதாவது நீ திருடவில்லை என்றால் இறைவனை காட்டு என்று !!!!


நிச்சயம் இவந்தன் தன் கைகளை மேலே தூக்கி.. வானை நோக்கி பின் உடைகள் அங்கிருந்து தான் வந்தது என்று.


ஆனாலும் நிச்சயமாய் இது இக்கலியுகத்திலே நடந்தது 


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் பல பல மனிதர்கள் நிச்சயம்... உடைகள் மேலிருந்து வந்ததா????????

இதை நாங்கள் நம்ப வேண்டுமா???????


இவந்தன் பொய் கூறுகின்றான்... நிச்சயம் பின் அறிந்தும் கூட.... ஒருவன் இவனிடம் வந்தான் பின் இவந்தன் வாயின் மேலே குத்தினான்... அறிந்தும் கூட..


அப்பொழுதும் கூட இவந்தன் மேல் நோக்கி... இறைவா!!!! பின் அதாவது இப்பொழுது கூட தண்டனையா?????


நீ தான் கொடுத்தாய்... வந்து தான் இவந்தனுக்கு பின் காண்பி !! என்று!! நிச்சயம் அறிந்தும் கூட! 


இதனால் நிச்சயம் பல பல மனிதர்கள் நிச்சயம் எதை என்று... நிச்சயம் இவன் திருடன்.... திருடன் தான் இவனை சங்கிலியில் இட்டு நிச்சயம் பின்... ஊர் முன்னே நிறுத்தி அதாவது...


ஊர் முன்னே வேண்டாம்... இன்னொருவன் அதாவது இன்னொருவன் இவனை இங்கே நிறுத்தி நிச்சயம் பலமாக கற்களால் அடித்து இவன் சாகட்டும் என்று


 இதனால் பின் நிச்சயம் அனைத்தும் அதாவது சங்கிலியால் கட்டி துணியில்லாமல் நிச்சயம் பின் அடித்து அடித்து!!!


இதனால் மேலிருந்து நிச்சயம் ஒரு சப்தம் (அசரிரீ ஆகாசவாணி) கேட்டது !!


நிச்சயம் இவனை அடித்தால் நிச்சயம் பின் அனைவரின் வாழ்க்கையும் நிச்சயம் இப்பொழுதே தொலைந்து போகும் என்றெல்லாம். 


நிச்சயம் அதாவது அடித்தவர்கள் அதாவது மறுகணமே நிச்சயம் பின் கற்களை வீசினோர்கள்.. அவர்கள் மீது கற்கள் திருப்பி நிச்சயம் படிந்தது மீண்டும்.. பின் அறிந்தும் கூட..


அப்பொழுதுதான் தெளிவு பெற்றார்கள்... இறைவன் எதை என்று அறிய நிச்சயம்.. தூதன்.. என்று 

(இறைதூதன்).... அனைவருமே வந்து நிச்சயம் இவந்தனை தொழுது... நிச்சயம். இவந்தனை பின் நிச்சயம் நீங்கள் தான் காக்க வந்த தெய்வம்.. என்றெல்லாம் நிச்சயம் பின் போற்றி துதித்து!!!!


ஆனாலும் சில கயவர்கள் நம்பவில்லை 

...இவந்தனை விட்டுவிட்டால் நிச்சயம் மக்கள் இவனை நம்புவார்கள் என்று நிச்சயம்... மத கலவரத்தையும் தூண்டினார்கள்..



 நன்முறைகளாகவே மதக் கலவரத்தை தூண்டினால் நிச்சயம் எவை என்று அறிய அறிய பின் அதாவது... பல சுற்று வட்டார பகுதிகளில் கூட... நிச்சயம் இவந்தன் அறிந்தும் கூட... பின் ஏதோ ஒன்றைக் கூட..


(பாபா உருவத்தோற்றத்தினை குறித்தும் வசித்து வந்த இடத்தினை குறித்தும் (ஒரு பழைய பள்ளிவாசல்) மக்கள் பல்வேறு விதமான சந்தேகங்களுடனே இப்பொழுதுமே இருக்கின்றனர்... அவர் அந்த மதம்  இந்த மதம் என்ற உரிமை கொண்டாட்டமும் வெறுப்பும் இன்றளவும் இருக்கின்றது!!


குருநாதர் வாக்குகளில் கூறுகின்றபடி இந்த கலியுகத்தில் அந்த சமயத்திலும் அதாவது அவர் உயிர் உடலாக இருந்த பொழுதும் இந்த பிரச்சினை இருந்திருக்கின்றது! மனிதர்கள் அப்போதிலிருந்து இப்போது வரை திருந்தவில்லை என்று தான் எண்ணிக் கொள்ள வேண்டியிருக்கின்றது !!


மதங்களைக் கடந்த மகானை மதம் எனும் வட்டத்தில் அடைத்து பார்ப்பது தவறு என்பது மக்கள் குருநாதரின் இந்த வாக்கினை படித்தாவது திருந்திக் கொள்ள வேண்டும்)


இதனால் மதவாதிகள் அனைவரும் வந்துவிட்டனர்.. யார் இவன்??? என்ன ஏது?? என்றெல்லாம் நிச்சயம்!! அறிந்தும் கூட !!!



(அன்றைய காலகட்டத்தில் பாபா எங்கள் மதத்திற்கு தான் சொந்தம் அவர் எங்கள் மதம் என்று இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர் அவர்களை எல்லாம் பாபா அழைத்து)



இதனால் அப்பொழுதே யான் பின் அதாவது இவந்தன் ... அனைவரின் முன் தோன்றி அதாவது...


"""யான் அனைவருக்குமே பின் அதாவது சொந்தக்காரன்!!!


என்னை எந்த மதத்திலும் சம்பந்தப்படுத்த கூடாது...


 என் சம்மதம் இல்லாமல் நிச்சயம் எவ் மதத்தையும் நிச்சயம்...யான் என்னை எதிலும் எந்த மதத்திலும் சேர்க்கலாகாது..... அதனால் இப்பொழுதே... மாறுகின்றேன் என்று!!!


 நிச்சயம்... அனைத்தும் அறிந்தும் கூட பின்... அதாவது நிச்சயம் எவை என்று கூட... அறிந்தும் அறிந்தும் கூட சேவைகள் செய்ய பல வழிகளும் கூட இறைவன் அனுப்பினான்...!!


 நிச்சயம் அதாவது நிச்சயம் இவர்கள் தான் அதாவது... இவர்கள் நிச்சயம் !!!


அதாவது மறைமுகமாக இவந்தனக்கு ஒரு சக்தி இருந்தது!!!




அனைவரும் வருவார்கள் இவர்களை பார்த்து!!!


இதோ இவர்கள்... அதாவது முன்பெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பின் இவை என்று கூட... இந்து மதத்தில் இருப்பவர்கள் இதோ இவர்கள்தான் பாருங்கள்... எந்தனுக்கு சொந்தக்காரர்கள் !!


இன்னும் கிறிஸ்தவம் இவர்கள்தான் எந்தனுக்கு சொந்தக்காரர்கள்...


இன்னும் இஸ்லாமியர்கள் இவர்கள்தான் எந்தனுக்கு சொந்தக்காரர்கள்... என்று அனைவரையும் வரவழைத்தான்... இன்னும் பௌத்த மதத்தையும்... இன்னும் சமண (ஜெயின் )மதத்தையும்... அனைவருக்குமே 

யான் சொந்தக்காரன் தான் அனைவருமே என் சொந்தக்காரர்கள் தான் 


நிச்சயம் யான் ஒரு அனாதை தான்...




 ஆனாலும் நிச்சயம் நீங்கள் ஏன் இப்படி எல்லாம் சொல்கின்றீர்கள்???


இதனால் நிச்சயம் நீங்கள் அனைவருமே எந்தனுக்கு சொந்தக்காரர்கள் தான்... 


நிச்சயம்... என்னிடத்தில் வந்தால் அனைவருமே ஒன்றுதான் என்று நிச்சயம் அப்பொழுது தெரிவித்தான். 


இதனால் அனைவருமே அவந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள்...




 நிச்சயம் அன்றிலிருந்து நிச்சயம் இன்று வரை நிச்சயம் இங்கே இருந்து மறைமுகமாக பல வழிகளிலும் கூட.. பின் சூட்சமமாக வந்து அனைவருக்குமே 


பின் ஜாதி மதம் நிச்சயம் அறிந்தும் கூட மொழி பாகுபாடின்றி சேவைகள் செய்து கொண்டே வருகின்றான்...

இவந்தன் பின் சாதாரண பிறப்பல்ல...


ஆனால் இப்பொழுது கூட சேவைகளை செய்து கொண்டே வருகின்றான்... மனிதனைப் போன்றே!!!!


ஆனால் இவ்வாறு நிச்சயம் யாராவது செய்ய முடியுமா??? என்ன???


நிச்சயம் செய்ய முடியாது.. நன்முறைகளாகவே...


ஆனால் பின் நிச்சயம் இவனை தூற்றுவதும் நிச்சயம் அறிந்தும் கூட.... மகா பெரிய பாவம் என்பேன்....!!!


அவ் பாவங்களை நிச்சயம் சுமக்கத்தான் ஆக வேண்டும்..


நிச்சயம் இவன் செய்யும் லீலைகள் யாராவது செய்ய முடியுமா??? என்ன!!!



 இக்கலி யுகத்தில் பின்... இவனை நம்பி எத்தனையோ பேர்கள்

நிச்சயம் பின் அன்னத்தை உண்கின்றார்கள்.



 எத்தனையோ பேர்கள் மருத்துவர்கள்... எத்தனையோ பேர்கள் நிச்சயமாய் பின்  அறிந்தும் கூட பின் கல்வி....


இன்னும் இன்னும் பின் எத்தனை எத்தனையோ? பேர்கள் இன்னும் பின் அதாவது இன்னும்  பின் எண்ணும் அளவிற்கு கூட வசதி இல்லாமல்!!!

 அவர்களுக்கெல்லாம் வசதி வாய்ப்பை தந்து கொண்டே இருக்கின்றான் 


அதனால் இவனைப் போன்று யார்?? என்று சொன்னால் நிச்சயம் பின் அறிந்தும் எதை என்றும் புரியப் புரிய  இதனால் இவ் ஞானி பின் அனைவருக்கும் பின் ஆசிகள் தந்து!!!


 பின் அதாவது ஏழை எளியோர் பின் பாகுபாடின்றி அதாவது இன்னும் பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி இங்கு வருவோருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான்...!!!



 அவ்வளவு மகத்தான பின் கோடீஸ்வரன் இவன் !!!!


இவனைப்போய் ???அறிந்தும் கூட!!!!


ஆனால் நீங்கள் எதைச் சொன்னாலும் இவன் ஏற்றுக் கொள்வான் ...


இவனுடைய ஒரே தத்துவம்!!! 


நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் எதை என்று உணர்கின்ற அளவிற்கு கூட எதைச் சொன்னாலும் அதாவது அடித்தாலும்.!!!!.


பின் அதாவது இறைவா!!!!! இவனை... நல்லவனாக வாழ வை!! பின் நன்றாக வாழட்டும் என்றுதான்..


ஆனால் இப்படிப்பட்டவர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்களா....?? என்றால் இல்லை நிச்சயம் இல்லை!!!


இவ் ஞானியை பற்றியும் இன்னும் சிறப்பான வாக்கு ஒன்றை கூட கூறி தெளிவுபடுத்துகின்றேன்.. ஆசிகள் !!!!


பின் இவந்தனும் அதாவது பக்கத்தில் இருக்கின்றானே... இவந்தன் கூட(அருகில் அமர்ந்திருந்த பெரியவர்) அவனோடு இருந்தவன் தான்... பின் அதாவது.. அவந்தனுக்கு சேவைகள் செய்தவன் தான்.. பின் அருகில் இருப்பவர்களிடம் அவன்(பாபா) தண்ணீர் கேட்பான்... இவன்(முதியவர் அந்த பிறவியில் சீடனாக)நிச்சயம் அவந்தனக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தான்.


நிச்சயம் இப்பொழுதும் கூட பின் மறைமுகமாக வந்து.. பின் இவனிடத்தில் பின் ஏதோ ஒன்றை தந்து கொண்டே தான் இருக்கின்றான். 


நலன்களாக ஆசிகளாக இவந்தனும்..!!அவந்தனுக்கு பின் சேவைகள் அதாவது தண்ணீர் இப்பொழுதும் கூட ஊற்றிக் கொண்டே இருக்கின்றான். 


ஆகும் !! நலமாகும்!!! ஆசிகள் !! ஆசிகள்!! அனைவருக்குமே!! அனைவருக்குமே!!




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!


குருநாதரின் வாக்கினை கேட்பதற்கு அருகில் வந்து அமர்ந்த பெரியவருக்கு மொழிபெயர்த்து குருநாதர் கூறிய வாக்கினை கேட்ட பொழுது மிகவும் ஆனந்தம் அடைந்தார்.


 ஏனென்றால் அவர் ஒரு சந்நியாசி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார் நாடோடியாக அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றவர் குடும்பம் என்று எதுவும் இல்லை இறைவனை மட்டும் துணையாக குறிப்பாக சாய்பாபாவை மட்டும் நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருபவர்... எங்கேயாவது இவர் சுற்றிக் கொண்டிருப்பார் திடீரென சீரடி செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வந்துவிட்டால் உடனடியாக எப்படியாவது இங்கு வந்து விடுவார்!! வந்து மாத கணக்கில் தங்கி அன்னதான கூடத்தில் உண்டு விட்டு அங்கேயே உறங்கி விட்டு  தினமும் பாபாவை தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள சில இடங்களில் சென்று நீரை ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார். 


குருநாதர் அகத்தியர் பெருமான் கூறிய வாக்கினை கேட்டு விட்டு அடியேன் கைகளால் நீரை அருந்துகின்றாரா?? பாபா.. அவருக்கு சீடனாக இருந்திருக்கின்றேனா?? என்றெல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். 


ஒரு உண்மையான சாது எப்படி இருப்பார்கள் என்பதை புரிய வைத்தார் அவருக்கு உதவி கரம் நீட்டுவதற்கு உதவிகள் செய்த போது அவர் கட்டாயமாக மறுத்துவிட்டார்!!! எனக்கு எதுவும் தேவையில்லை ஒரு ரூபாய் கூட உங்களிடமிருந்து தேவையில்லை....


என்னிடம் பணம் வந்து விட்டாலே அது தேவையில்லாத சிந்தனையை எனக்கு கொடுக்கின்றது... அதனால்  எனக்கு பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் அன்பாக... 


அதன் பிறகு சரி வாருங்கள் எங்களுடன் வந்து உணவு அருந்துங்கள் என்று வற்புறுத்திய பொழுது கூட  இல்லை இல்லை ஆலயத்திற்கு உள்ளே அன்னதான கூடத்தில்  அன்னம் அளிக்கின்றார்கள் அதுவே எனக்கு போதும்!!!

என்று அனைவரையும் ஆசீர்வதித்து மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்று விட்டார்....

சில ஆலயங்களில் காவி அணிந்து கொண்டு கட்டாயப்படுத்தி அது வேண்டும் இது வேண்டும் என்று ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களை தொல்லை செய்யும் சாதுக்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு சாது!!! இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு!!!

எல்லாம் குருவின் திருவருள் என்று நினைத்துக் கொண்டு!!! மகாராஷ்டிரா யாத்திரை குருநாதரின் திருவருளால் நல்படியாக நிறைவு பெற்றது!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!