அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 12
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
………..
………..
………..
( பகுதி 11 அதன் தொடர்ச்சியாக ….)
===========================
# அடுத்தடுத்த வாக்கில் மூலிகைகள்….
===========================
குருநாதர் :- நிச்சயம் அடுத்தடுத்த வாக்கில் பல மூலிகைகள் பற்றியும் சொல்கின்றேன். கவலைகள் வேண்டாம். உங்களை நீங்கள் வெல்வதற்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தடுத்து இதுல வந்து… நான் மூலிகைகள் எல்லாம் கூட சொல்றேன். உங்களை நீங்கள் வெல்வதற்கு
குருநாதர் :- ஆனாலும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நிச்சயம் தன்னில் கூட பின்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் நீங்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
குருநாதர் :- எதை எது என்று கூட அனைத்தும் தானாகவே நடக்கும். எவை என்று கூற பின் . ஏனென்றால் உலகம் எவை என்று கூற பின் . அனைவரும் உணர்ந்திருக்கிறீர்கள். நிச்சயம் உலகம் சுற்றுகின்றது என்பது இதனால் மனிதனுடைய வாழ்க்கையும் நிச்சயம் மாறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் தெரியும்ல, உலகம் சுற்றுறதா இல்லையா? நம்புறீங்களா இல்லையா? அதேபோலத்தான் கண்டிப்பாக?
அடியவர்கள் :- வாழ்க்கையும் மாறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கையும் மாறும்.
===========================
# அனைத்தும் கொடுக்க கண் இமைக்கும் நேரம் போதும்….
===========================
குருநாதர் :- எதை ஏது என்று கூற இவை எல்லாம் விஞ்ஞானபூர்வமாக விளக்கி வைக்கின்றேன் பொறுத்திருந்தால். நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு பின் நிச்சயம் ஒரு கண் இமைக்கும் நேரத்தில், பின் நிச்சயம் யான் கொடுத்து விடுவேன் அனைத்தும்.
குருநாதர் :- ஆனாலும் சில அனுபவங்கள் எவை என்று புரிய பின் ஏது என்று அறிய, நிச்சயம் அடுத்தடுத்து பின் நிச்சயம் இவ் ஆன்மா அடுத்த நிலையில் செல்வதற்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- உடனே என்னால கண்ணை இமைக்கும் ….அப்படி கண்ணு அடிச்சு (முடிப்பதற்குள்) உனக்கு யோகம் கொடுத்துருவார் என்ற ரகசியம் வந்து, ஏனால் இந்த ஆன்மா அடுத்த கட்டை நோக்கி செல்லும். இந்த ஆன்மா வந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அப்ப அந்த செல்லும் பொழுது…அம்மா புரியுதுங்களா?
அடியவர்கள் :- புரியுதுங்க அய்யா….
===========================
# எங்கு உங்கள் உயிர் உள்ளது?
===========================
குருநாதர் :- எதை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் இதனால் நல்விதமாகவே பின் உடம்பு எப்படி வேலை செய்கின்றது? என்பதை எல்லாம் அடுத்தடுத்த வாக்கில் எடுத்துரைக்கும் பொழுது, நிச்சயம் எங்கு உங்கள் உயிர் உள்ளது, எங்கு எவை என்று அவ் உயிருக்கு ஏற்ப, நிச்சயம் பாவமும் புண்ணியம் எங்கு உள்ளது என்பதை எல்லாம் சாவியோடு விளக்குகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- சாவியோடுனா என்னது?
அடியவர் :- பூட்டை திறக்குறது.
சுவடி ஓதும் மைந்தன் :- பூட்டை திறக்குறது. அப்ப உங்க உடம்புல வந்து எங்கெங்க உயிர் இருக்குது? ஒருத்தர் ஒருத்தருக்கு வந்து சொல்றாரு. வந்து
குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூற, நெற்றியில் பின் இட வேண்டும். எவை என்று அறிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு பிரிந்துள்ளது உங்களுக்கு .
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த செல், அந்த உயிர் வந்து இங்க (நெற்றியை சுட்டிக்காட்டி) எடுத்துட்டு வரணும். (நெற்றி) அங்க எடுத்துட்டு வந்தாதான் சக்சஸ். உங்களுக்கெல்லாம் எங்கெங்க இருக்குது?
அடியவர்கள் :- அங்கங்க இருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒருத்தர் ஒருத்தருக்கு அங்கங்க இருக்குதுன்றார் வந்து
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட கால் பாதத்திலும் ஒருவருக்கு இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கால் பாதத்தோட போய் இருக்குமாம் வந்து
குருநாதர் :- நிச்சயம் அவையெல்லாம் எப்படி கொண்டு எவை என்று கூட சேர்ப்பது? எவை என்று புண்ணியம். இதனால் அனைத்தும் யார் எடுத்துரைக்கின்றேன் பொறுத்திருந்தால்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் எப்படி கீழ கால் பாதத்துல இருந்து எப்படி இங்க வந்து நிறுத்துன்னு வரீங்க? வந்து கால் பாதத்துல இந்த லைஃப் க்ளோஸ்.. நினைச்சது எப்படி நடக்கும்ன்றார்? வந்து அதெல்லாம் நான் வந்து வரும் காலத்துல
அடியவர் :- சொல்லித்தரேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லித்தரேன்.
===========================
# அனைவரின் கூடு, பழுது அடைந்து உள்ளது.
===========================
குருநாதர் :- எதை ஏது என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்குமே எவை என்று கூட கூடு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பழுது அடைந்துள்ளது.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் கூடு என்றது என்னது?
அடியவர்கள் :- உடம்பு பழுது அடைந்து விட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- உடம்பு?....... பழுது அடைந்து விட்டது.
குருநாதர் :- அறிந்தும் பின் அப்பழுது அடைந்துகளுக்கு முதலில் பின் எவை என்று அறிய, பின்ன அவுஷதங்கள் இடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பழுதடைந்த உடம்புக்கு முதல்ல?
அடியவர் :- மருந்து கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- மருந்து கொடுக்கின்றேன்.
குருநாதர் :- மருந்து.. என்ன மருந்து? நீங்களே சொல்லுங்கள் ?.
சுவடி ஓதும் மைந்தன் :- மருந்து என்ன மருந்து ?
அடியவர் :- பாடல் தாங்க. பாராயண பாடல்தான்.
குருநாதர் :- எதை எவை என்று கூற, ஏதாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும். எவை என்று புரிய, எவை என்று கூற பின் .
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்கணும். அதுதான் மருந்து என்றார்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் இக் கூன் உடம்பிற்கே. நிச்சயம் தன்னில் கூட பின் என்னவென்று ஆகும். இவ் உடம்பு என்று தெரிவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கூன் உடம்பிற்கே நம்ம என்ன? அப்படி என்ன சொல்றது? வந்து நம்ம என்ன ஆகுமனே நம்மளுக்கு வந்து தெரியும். அந்த கூன் உடம்புக்கு வந்து அடுத்து என்ன ஆகப்போறதுன்னே தெரியல. அய்யா புரியுதுங்களா?
குருநாதர் :- நிச்சயம் பின் அவ்வாறு பின் தன்னைத்தானே பின் நிச்சயம் எவை என்று பின் காப்பாற்ற முடியாத பின் இவ் கூடுக்கு பின் மற்றவரை பற்றி எல்லாம் கேட்கின்றது.
அடியவர்கள் :- ( அமுக்க சிரிப்புகள் )
அடியவர் :- வயசாக வயசாக இந்த உடம்பு என்ன ஆகும் ? எப்படி இருக்கும் ?
சுவடி ஓதும் மைந்தன் :- நம்மளே நாமளே வந்து காப்பாற்றிக் கொள்ள முடியாம, இந்த கூண்டு என்பது என்ன ஆகுது? வந்து
அடியவர் :- மத்தவங்களை பத்தி கேக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- மத்தவங்களை பத்தி கேக்குது.
குருநாதர் :- இதனால் வாழ்க்கை வட்டம். எவ்வாறு உங்களுக்கு நல்லது நடைபெறும் என்றால், நிச்சயம் தன்னில் கூட ஒன்றாம் வகுப்பை நீங்கள் தாண்ட வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்னா என்ன பண்ணனும்?
அடியவர் :- ஒன்றாம் வகுப்பில் இருக்கின்றோம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னாவது வகுப்பில் நீங்க… அப்பன்னா ஒரு பத்தாவது வரணும் அம்மா… அவர் சொல்றது புரியுதுக்கு.
===========================
# ஆற்றலை பெருக்க பலவகையான திருத்தலங்கள் உள்ளது…
===========================
குருநாதர் :- இதனால் தான் எது என்று கூற பின் அதனால் நிச்சயம் தன்னில் கூட பலவகையான திருத்தலங்கள் உள்ளது. எவை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய.
குருநாதர் :- இதனால் நல்விதமாகவே ஆற்றலை தருகின்றேன். ஆற்றலை பெருக்கினால் அனைத்தும் நலமாகும். பின் இறைவன் என்ன கொடுப்பது? யான் என்ன கொடுப்பது?
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வகையான ஆற்றலை வந்து உங்களுக்குள்ள பெருக்கிட்டாங்கன்னா….. எல்லாமே கிடைச்சிடும்ன்றார். அப்ப இறைவன் கொடுத்தது என்ன?
அடியவர் :- நான் கொடுத்தது என்ன?
===========================
# சித்தர்கள் வாக்கு, சிந்திக்க முடியாத வாக்கு.
===========================
குருநாதர் :- தாயே நிச்சயம் **** எதையும் பின் யாரும் கொடுப்பதில்லை. ****
**** நிச்சயம் நீங்களாகவே பெற்றுக் கொள்கிறீர்கள். ****
அவ்வளவுதான்.
பின் எவை அகத்தியன் அங்கு சொன்னான், இங்கு சொன்னான் என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது, நிச்சயம் அறிவுள்ளவனுக்கு எதை என்று கூற மாற்றி மாற்றி யான் சொல்வேன்.
**** சித்தர்கள் வாக்கு எவை என்று அறிய சிந்திக்க முடியாத வாக்கு. ****
சுவடி ஓதும் மைந்தன் :- அங்க அப்படி சொன்னாரு. அதெல்லாம் என்னடா? இப்படி சொல்றாரு, இப்படி சொல்றாரு. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க என்ன சொன்னாரு? இப்ப நான் கொடுக்க
அடியவர்கள் :- ஆற்றல் உங்களுக்கு கிடைச்சிட்டா, நீங்களே எல்லாம் பெற்று இருக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான்.
குருநாதர் :- அவ் ஆற்றல் பின் இயக்க வேண்டும். எது என்று வரும் காலத்தில் அவையும் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஆற்றல் ?
அடியவர் 7:- எப்படி இயக்கலாம்…
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் உங்களை நீங்கள் பின் நம்பாமல், நிச்சயம் மற்றவரை நம்பினால் எது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை நீங்கள் நம்பாத வரையில்…… உங்களை நீங்கள் அந்த ஆற்றல் பெருக்காத வரையில்……. நீங்க எதை பத்தி இது பண்ணாலும்….. மற்ற இது பண்ணாலும்… ஒன்னும் மைனஸ் இருக்குது.
===========================
# யாத்திரை குழுவினர் - உங்கள் பிறவியின் ரகசியம்
===========================
குருநாதர் :- இதனால் எது என்று கூற பின் உங்கள் பிறவியின் ரகசியம் என்ன? அனைத்தும் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எதுக்காக வந்தீங்க? எதுக்காக? பிறவியின் ரகசியத்தை யான் சொல்கின்றேன்.
குருநாதர் :- இவ் பிறவியின் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கும் பன்மடங்கு புண்ணியம் வேண்டும். பின் யானே அவையெல்லாம் கொடுத்து நிச்சயம் சொல்கின்றேன்.
அடியவர் :- குருநாதா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பிறப்பின் ரகசியத்துக்கும் ?
அடியவர்கள் :- புண்ணியம் வேண்டும். அந்த புண்ணியத்தை கொடுத்து,
சுவடி ஓதும் மைந்தன் :- அதை கொடுத்து?
அடியவர் :- ரகசியத்தை சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ரகசியத்தை சொல்கின்றேன்.
குருநாதர் :- இதனால் வருத்தப்பட தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு குறை. நிச்சயம் தன்னில் கூட ஏதோ சில வகையான பின் எவை என்று கூட தவறுகளாலோ அல்லது எது என்று கூற பின் காலத்தின் கட்டாயமாகவோ இருக்கலாம். ஆனாலும், நிச்சயம் கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ எல்லாருக்கும் ஒரு காலத்தின் சூழ்நிலைகளோ…. இல்ல. ஏன்னா, அது வந்து
அடியவர் :- ஒரு பிறவி பற்றி கவலை வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலை வேண்டாம். வேண்டாம் என்றால், வந்து
குருநாதர் :- அனைத்தும் எது என்று அறிய, நிச்சயம் கவலையோடு பின் மனிதன் பிறந்தாலும், கவலையோடு எது என்று புரிய பின் போவானா என்ன? இவையெல்லாம் சொல்லிவிட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலையோடு பிறக்கின்ற மனுஷன் எப்பவுமே கவலையோடு போவானா?
===========================
# மாறி மாறி அமையும் விதியின் விளையாட்டு……
===========================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட மாறி மாறி அமையும் இன்பமும் துன்பமும்
சுவடி ஓதும் மைந்தன் :- மாறி மாறி அமையும். இன்பமும் துன்பமும்
குருநாதர் :- அறிந்தும் எவை என்று ஒரு ஆரோக்கியமும், நிச்சயம் நோயும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆரோக்கியம் வரும். நோயும் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நோயும் வரும்.
குருநாதர் :- அறிந்தும் பணமும் வரும். பின் இழப்பும் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பணமும் வரும். பணமும் வரும். இழப்பும் வரும்.
===========================
# இங்கு யார் பெரிய அறிவாளி?
===========================
குருநாதர் :- நிச்சயம் யார் இங்கு அறிவாளி கொடுத்ததை அப்பா அல்லது பின் இறைவன் கொடுத்துள்ளான். நிச்சயம் இதை தக்க வைக்க என்ன செய்வது என்று யோசிக்கின்றானே. அவன்தான் பெரிய அறிவாளி.
சுவடி ஓதும் மைந்தன் :- யார் இங்க அறிவாளி? பணம் வருது. டேய், இது போகும்டா? பணம் வரும். நம்மளுக்கு வந்து இது போகப்போகுதுடா? இது எப்படி தக்க வைக்கிறது? இப்ப எப்ப தக்க? அதை யோசிக்கிறான் பாரு. அவன்தான்
குருநாதர் :- நிச்சயம் எப்படி தக்க வைப்பது?
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி தக்க வைப்பது?
அடியவர்கள் :- தர்மம் செய்யணும்
அடியவர் :- பணமா இருந்தாலும் , புண்ணியம் first செய்யணும்.
குருநாதர் :- எதை காசு வந்தாலும் புண்ணியம் செய்ய மனம் வராது.
சுவடி ஓதும் மைந்தன் :- காசு வந்தாலும்
அடியவர் :- புண்ணியம் செய்ய மனம் வராது.
குருநாதர் :- எதை இந்த காசு இல்லாவிட்டால் நிச்சயம் தன்னில் கூட காசு வந்தால் யான் புண்ணியம் செய்வேன் என்று சொல்வது
சுவடி ஓதும் மைந்தன் :- காசு வந்து இல்லாதபோது என்ன சொல்லுவாரு? காசு இல்லடா. காசு இருந்தா நான் புண்ணியம் செய்வேன்.
குருநாதர் :- வந்துவிட்டால், நிச்சயம் தன்னில் இறைவன் யாரோ, நீ யாரோ.
சுவடி ஓதும் மைந்தன் :- அட போடா, இறைவன் யாரோ, நான் யாரோ. போடா, காசு இருந்துச்சா? எஸ்கேப்,
அடியவர் 7:- ஜூட்
சுவடி ஓதும் மைந்தன் :- ஜூட். அவ்வளவுதான். அப்படித்தான் சொல்றார்.
===========================
# இவ்வுலகத்தில் சிறந்த படிப்பு எது?
===========================
குருநாதர் :- இதனால் தான், நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு படிப்புகள் வாழ்க்கையில்.
குருநாதர் :- **** அனுபவ படிப்பை விட இவ்வுலகத்தில் சிறந்த படிப்பே இல்லை. ****
சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவம் விட சிறந்த படிப்பு?
அடியவர்கள் :- இவ்வுலகத்தில் இல்லை
குருநாதர் :- இப்படிப்பு எங்கு படிக்கலாம்?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த படிப்பை எங்க படிக்கலாம்?
அடியவர்கள் :- ( சில பதில்கள் )
குருநாதர் :- அப்பனே, யானே சொல்கின்றேன்.
**** இறைவனிடத்தில் மட்டும்தான் படிக்கலாம். ****
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ஏதாவது சொல்லி இருப்பீங்க. அதனால, அகத்தியர் என்ன சொல்றாரு?
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் :- நான் சொல்றேன்..
சுவடி ஓதும் மைந்தன் :- யாருகிட்ட படிக்கலாம்?
===========================
# எப்போது மிகச் சரியாக இறைவனிடம் நன்றி சொல்ல வேண்டும் ?
===========================
குருநாதர் :- அப்பொழுது இறைவன் எவை என்று நெருங்கினால், அப்பொழுது அனுபவம் தர, துன்பத்தை கொடுப்பான். அவ்வளவுதான். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு? அப்ப இறைவனை நெருங்கினால், துன்பத்தை வைத்து, அதன் மூலம் அனுபவத்தை கொடுப்பார்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது நீங்கள் இறைவனுக்கு நன்றிதான் செலுத்த வேண்டுமே. தவிர, எதையும் கேட்கக்கூடாது இறைவனிடத்தில்….
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா, இந்த அனுபவத்தை நீ தந்தியேடா எப்பா. போதும்டா எப்பான்னு சொல்லிட்டு…. என்ன சொல்லணும்? இறைவன் கிட்ட
அடியவர் :- நன்றி சொல்லவேண்டும்….
சுவடி ஓதும் மைந்தன் :- நன்றி சொல்லனுமே தவிர, அதை கொடு, இதை கொடுன்னு கேட்கக்கூடாதுன்றார்.
குருநாதர் :- பின் நிச்சயம் பின் கேட்டாலும், இறைவனுக்கு கோபம் தான் வரும். ஏனென்றால், இவனுக்கு இவ்வளவு துன்பங்கள் கொடுத்து மீண்டும் கேட்கின்றான் என்று இன்னும் அழுத்துவான்.
அடியவர் :- ( சிரிப்புகள் )
ஒரு அடியவர் :- என்ன அடி ? என்ன அடி ?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் ஐயா,
அடியவர் 7 :-புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் என்ன பண்ணுவாரு? இறைவன் ஒன்னும் கேட்டா என்ன பண்ணுவாரு? ஏன்னா, இவன் திருந்தவே இல்லடா. ஒன்னும் இவன் எவ்வளவு கொடுத்தும் கஷ்டங்கள் கொடுத்தும்,
அடியவர் :- இன்னும் திருந்தல…
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் திருந்தல. இவர் வந்து அப்ப இன்னும் என்ன பண்ணுவான்? அடிடா, அப்படின்னு சொல்லிட்டு,
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, போதுமடா, சாமி என்று சொல்ல வேண்டும் அளவிற்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா போதும் என்ற போதும்டா. இந்த துன்பம்னு சொல்லி எப்ப சொல்றீங்களோ, அப்ப என்ன பண்ணுவாரு? கொஞ்சம் கொஞ்சம் வந்து,
குருநாதர் :- நிச்சயம் தன்னில் யோசிப்பான். அப்பொழுது,
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் என்ன பண்ணுவாரு? அப்பதான் என்ன பண்ணுவாரு?
அடியவர் 7 :- இறைவன் யோசிப்பார்….
===========================
# சித்தர்களை தேடி வந்தவர்கள், புண்ணியசாலிகளே.
===========================
குருநாதர் :- எது என்று புரிய இதனால் கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் என்னை தேடி வந்துவிட்டீர்கள்.
**** சித்தர்களை தேடி வந்தவர்கள், புண்ணியசாலிகளே. ****
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களை தேடி வந்தவர்கள்?
அடியவர்கள் :- புண்ணியசாலிகளே.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியசாலிகளே.
குருநாதர் :- ஒரு நாள் அனைத்தும் சரியாகும். எந்நாள் என்பது நீங்கள் கேட்கக்கூடாது. யாங்கள் முடிவெடுக்க வேண்டும்.
அடியவர் : - பொறுமையாக இருக்கனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் ஒரு நாள்?
அடியவர் : - சரியாகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சரியாகும், ஆனால் எந்நாள் என்று நீங்க கேட்கக்கூடாது.
===========================
# தொடர் வண்டியின் சிவப்பு விளக்கை பார்த்து காத்திருக்கும் வாழ்க்கை
===========================
ஜோதிடர் :- அய்யா எங்க போனாலும் கேட் போட்டா எப்படி அய்யா ?
குருநாதர் :- எது என்று அப்பனே, நிச்சயம் அப்படித்தான் அப்பா.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- தொடர் வண்டியை பார். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவை யோசித்து…
பாடகர் :- எங்க போனாலும் கேட்டு போறீங்க என்று சொல்லறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் எங்க போனாலும் கேட்டு போனா. ஆமா, தொடர வேண்டியது என்ன?
பாடகர் :- கேட்டு போட்டுதான் போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எது ?
அடியவர் 7:- கேட்டு போட்டா, நின்னு போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நின்னு போகுது இல்ல? அது மாதிரி நீ எண்ணி கொள்ளுப்பா. அதான் வாழ்க்கைப்பான்றாரு. ரயில் நினைச்சு சொல்றாருங்க. ஐயா,
அடியவர் 7:- அதான் கேட்டு ரயில்ல
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கங்க கேட்டு போடுவாங்க இல்ல?
அடியவர் 7:- அதுதான்.
குருநாதர் :- அதனால் மீண்டும் எவை என்று கூற பின் காத்திருப்பான். எப்பொழுது சிவப்பு எரிகின்றது என்று.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் 7:- ஆமா….நீ கேட்டு சொல்லிட்டார், அதுக்கு பதில்
சுவடி ஓதும் மைந்தன் :- நிக்கணும். ஆமா, வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு…. எப்படா இறைவன் கொடுப்பாருன்னு….. அந்த சிவப்பு பார்த்துட்டே இருப்பான்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கொடுப்பான். மீண்டும் செல்லலாம். இப்படித்தான் அப்பா, அனுபவம் கற்க முடியும். பிறவி பலனை அப்பனே முழுமை அடைய செய்ய முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி இருந்தா மட்டும்தான்?...... பிறவி பலனை வந்து?
அடியவர் :- முழுமை அடைய செய்ய முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- முழுமை அடைய செய்ய முடியும்.. இல்லை என்றால்?
அடியவர் :- முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- முடியாது.
===========================
# இறைவனை நெருங்க, நெருங்க….என்ன நடக்கும்?
===========================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இதனால் , அப்பனே, பின் பிறவி வேண்டாம் என்றே, அப்பனே, இறைவன் உங்களுக்கு உணர்த்துவான் அப்பா. இறைவனை நெருங்க, நெருங்க…..
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை நெருங்க, நெருங்க. என்னது?
அடியவர் :- பிறவி வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா………………… இந்த பிறவி வேணாம்டா. எப்பா………………… போதும்டா, சாமி………………… என்று சொல்லிட்டு…. உணர்த்திவைப்பார். ஓகேங்களா?
குருநாதர் :- அறிந்தும் கூட, ஆனால் மனிதன் என்னவோ அறிவாளி என்று நினைத்து, இறைவனை எவை என்று புரிய பின் நெருங்கினால் அனைத்தும் கொடுப்பான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் மனுஷன் என்ன நினைச்சுட்டு இருக்கான்? வந்து இறைவன்ட்ட போனா என்ன கிடைக்கும்?
அடியவர் :- இறைவனை நெருங்குனா எல்லாம் கிடைக்கும்னு மனுஷன் நினைக்கிறான் அய்யா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் கிடைக்கும் அப்பா. அனுபவத்தின் மூலமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்கும்.
அடியவர் 9 :- அனுபவம்…
சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவத்தின் மூலமாக
அடியவர் 9 :- உடனே கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உடனே கிடைக்காது. கொஞ்சம் லேட்டா கிடைக்கும். அனுபவம், ஐயா,
அடியவர் 9 :- அனுபவிச்சு தீர்க்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம்.அப்பதான் கிடைக்கும்.
குருநாதர் :- இதனால் , அப்பனே, முதலில் அனுபவமே உங்களுக்கு தெரிவில்லை. இதனால் , அப்பனே, பின் சொல்லிவிட்டேன்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சந்தர்ப்பத்தை தருகின்றேன். பார்ப்போம், உங்களுக்கு என்னென்ன தேவை என்று ஒருவர் ஒருவராக கேளுங்கள்.
ஆனால், நிச்சயம் தன்னில் கூட பின் என்ன எது என்று என்னிடத்தில் கேட்பதற்கு முன்பே ஒரு பாடலை பாடிட்டுத்தான் கேட்க வேண்டும்.
அடியவர் :- சூப்பர், சூப்பர்! போன தடவை மாதிரி….
(கருணைக்கடல், கடந்த சென்னை சத்சங்கத்தில் இதே போல இவ் யாத்திரை குழு அடியவர்கள் பாடல் பாடி பின்னர் வாக்குகள் அளித்தார்கள்.)
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு சான்ஸ் குடுத்துட்டாரு. என்ன சொன்னாரு? திருப்பி வந்து நான் சொல்றேன், உங்களுக்கு என்ன கேள்வின்னு சொல்லிட்டு ஒரு பாடலை பாடிட்டு தான் என்கிட்ட கேட்கணும். பாடல் பாடி, எல்லாருக்கும் உண்டு.
===========================
# அடியவர் #1
===========================
……………
……………
……………
……………
( “முத்தைத் தரு பத்தித் திருநகை" பாடல் பாடி முடித்தார்கள் )
குருநாதர் :- தாயே நிச்சயம் யான் சொன்னாலும், மீண்டும் நீ கேள்விகள் தான் கேட்கப் போகின்றாய். அதனால் உன்னிடமே கேட்டு விடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் என்ன சொன்னாலும் திருப்பி என்ன பண்ண போறீங்க? அதையே தான் நீங்க கேட்க போறீங்க. அதனால முழுசா உன்னையே கேட்டு.. நீயே சொல்லுமான்னுட்டாரு. கேட்கலாம்.
===========================
# அடியவர் #1 கேட்ட கேள்வி இவ் உலகில் பலரும் பரம்பரை பரம்பரையாக தொடரும் சில அடையாளங்கள்/நோய்கள் குறித்த… இவ் கேள்வி பதில் பலருக்கு நல் புரிதல்கள் உண்டாகும்
===========================
அடியவர் #1 :- ஐயா! பரம்பரையா வரக்கூடிய நோய்கள் வந்துட்டு… நம்ம பரம்பரையோட முடிஞ்சு போயிரணும். அடுத்த நம்ம தலைமுறைக்கு அடுத்து தொடரக்கூடாது. அப்படிங்கறதுக்காக என்னங்க, ஐயா?
குருநாதர் :- தாயே, எது என்று புரிய. இப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் மனிதன் வகுத்துக் கொண்டான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் வந்து என்ன பண்றது? இதெல்லாம் மனுஷன் வந்து வகுத்துக் கொண்டது.
குருநாதர் :- எது என்று புரிய யோசித்து பார். தாயே, நீயே யோசித்து கேள் இதனை, நன்றாக.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை யோசித்து கேட்கணும்ன்றார். நன்றாக திரும்பி கேட்கணும்.
அடியவர் #1 :- ஆனா இதுதாங்க, ஐயா! கேள்வி இப்ப ( 3 ஆம் தலைமுறை முன்னோர்கள்) அவங்களுக்கும் இருக்கு, (2 ஆம் தலைமுறை முன்னோர்கள்) அவங்களுக்கும் இருக்கு, (முதலாம் தலைமுறை) எனக்கும் அதே மாதிரி பிரச்சனை இருக்கு. அப்படிங்கிறப்ப, அந்த எங்க போனாலும்……..?.
குருநாதர் :- எது என்று புரிய இவையெல்லாம் ஒரு அடையாளம். எதை என்று புரிய இப்படியும் வைத்துக்கொள்ளலாம். அதாவது, நிச்சயம் தன்னில் கூட சில ஆன்மாக்கள் எதை என்று புரிய.
அதாவது, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இருந்தது, பின், அதாவது, மனிதன் பின் ஏது பூலோகத்திற்கு வந்துவிட்டாலும், நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் தேடி தேடி அலைந்து விடும்.
இதனால் , நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் எது என்று புரிய.
பின் இவ்வாறாக, நிச்சயம் தனி இருக்கின்றார்கள் என்றால், பின் அவ்வா ஆன்மாவிற்கு தெரிந்துவிடும்.
ஓடோடி வந்துவிடும். சுலபமாக. அனைத்தும், நிச்சயம் தன்னில் கூட பின் இணைந்து எவை என்று கூட காத்துவிடும். இவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றது தெரியுங்களா? இது ஆத்மா வந்து என்ன ஆகுமா? நம்மளுக்கு எதுவோ அடையாளமா இருக்கணும். அப்பதான் நம்ம ஈஸியா போய் அவங்கள காக்க முடியும். புரியுதுங்களா?
அடியவர் 7 :- புரியுது.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வந்து நீங்க ஒரு ஆன்மா வச்சுக்கோங்களேன். உங்களுடைய அம்மா இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். அதுக்கு அவங்க அம்மா இருக்காங்கன்னு சொன்னாங்கன்னா, ஒரு இது கொடுத்துருவாங்க. அப்ப அவங்க அம்மா என்ன? ஃபர்ஸ்ட்ல ஒரு அம்மா இருக்காங்க இல்ல? அப்ப ரெண்டாவது அம்மா, மூணாவது அம்மா, இன்னைக்கு நாலாவது அம்மா. அந்த அம்மா வந்து என்ன நினைப்பாங்களாம்? ஒரு இது, ஒரு ஏதாவது நமக்கு கொஞ்சம் அப்போ ஓகே.
அடியவர் 6 :- ஐடென்டிஃபிகேஷன்,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐடென்டிஃபிகேஷன்க்காக நம்ம ஈஸியா வந்து அவங்கள காப்பாத்தலாம். உலகத்துக்கு போயிட்டு சிக்னல் மாதிரி, ஏன்னா தேட முடியாது இல்ல? என்னென்னன்னு சொல்லிட்டு, இப்ப உங்களுக்கு அடையாளம் வந்துச்சுன்னா, அவங்க என்ன பண்ணும்? ஆன்மா டக்குனு கண்டுபிடிச்சு உங்ககிட்ட வந்துரும்.
அடியவர் #1 :- நம்ம காப்பாத்துறதுக்காக,
சுவடி ஓதும் மைந்தன் :- காப்பாத்துறதுக்காக அந்த அடையாளங்களுக்காக,
அடியவர் #1 :- அந்த அடையாளமே நம்மளை துன்புறுத்துற மாதிரி இருந்தா என்னங்க?
குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் இல்லை என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, துன்புற்ற, துன்புத்த, துன்புறுத்தாது.
குருநாதர் :- ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட அவர்களுக்கு முன்னால், அவர்களுக்கு முன்னால், அவர்களுக்கு முன்னால் முழுமை அடையாத ஆன்மாக்கள் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் இவர்களாலும் பின் முடியாததால் தான், நிச்சயம் தன்னில் மீண்டும் பின் அடையாளப்படுத்தி, இவர்களால் முடியுமா என்று. அதனால்தான் நீங்கள் அலைந்து கொண்டிருக்கின்றீர்கள். அவ்வளவுதான் உங்கள் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? புரியலையா? யாருக்கும் புரியலையா? அதனாலதான் அகத்தியர் வந்து நல்லா படிக்குமா, படிக்குமான்னு சொல்றது. அந்த ஆன்மாவால முடியாது. ஏன்னா, எத்தனையோ பிறவிகளை வந்து முழுமை பெற வந்து வைக்க முடியாது. அப்ப என்ன பண்ணுவாங்க? அவ்வளவுதானே. நம்ம ஆர்டிகுலர்ஸ் நம்மளால முடியாது. அடுத்து இதுக்கு பண்ணுவோம், அப்படி பண்ணுவோம், அப்படி பண்ணுவோம்னு சொல்லிட்டு, சரிங்க, புரியுதுங்களா? அப்ப கடைசில என்ன பண்ணாங்க? அந்த முன்னோர்கள் உங்களால காக்க முடியும்னு சொல்லிட்டு, உங்க மேல வந்து ஒரு இதை வச்சு, உங்கள் மூலமா எல்லாம் தீர்த்துக்கொள்வாருமா? புரியாதுங்களா? அப்ப நீங்க என்ன பண்ணனும்? என்ன பண்ணுவீங்க? நீங்க வந்து
அடியவர் #1 :- இதற்கான கோயில், கோயிலா அலைந்து கொண்டிருக்கின்றோம்….தீர்வு எங்க கிடைக்கும் என்று அலைந்து
சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்ட். அப்ப எங்க கிடைக்குது? எங்க கிடைக்குது? அங்க போய் அது பண்ணலாமா? இது பண்ணலாமா? என்று அப்படி பண்ணும்போது… உங்களை வச்சு அந்த ஆத்மா என்ன பண்ணுது?
அடியவர் #1 :- அவர்களுக்கான பசியை ….
சுவடி ஓதும் மைந்தன் :- முக்தி ஆகும் பொழுது, அப்ப என்ன? கடைசில வந்து உங்களை வாழ்த்திட்டு, உங்களுக்கான குறைகள் நீக்கிட்டு போகும். புரியுதுங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ஆமா, ( உலகோருக்கு தெரிய வைக்க வேண்டும் ) இதெல்லாம் டைப் பண்ணுங்க ஐயா, சரி.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகும்? வந்து கடைசில எல்லாம் முழுமை பெற்ற பின்ன, எம்மா, நீதான்ப்பா, மூணு முழுமை பெற்ற. நான் புரிஞ்சுக்கணும். உங்களுக்கு என்ன செய்வீங்க? அது உங்களுக்கு செஞ்சுட்டு பரிபூரணமா. அவங்க மோட்சத்துக்கு போவாங்க. உங்களுக்கு குறைகள் நலமாகும். நீங்க சந்தோஷமா இருந்துருங்கன்றார்.
அடியவர் #1 :- சரிங்க,
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete