சித்தன் அருள் - 2189 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் ஜீவ நாடி வாக்கின் தொடர்ச்சியாக.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
அகத்தியர் பக்தர் திரு சசிகாந்த் அவர்கள் இல்லத்தில் குருநாதர் வாக்கு பாகம் 2
குருநாதர் அகத்திய பெருமான் பக்தரும் இந்திய விமானப்படை முன்னாள் கமாண்டோ அதிகாரியான திரு சசிகாந்த் அவர்களது இல்லத்தில் புட்டபர்த்தி சாய்பாபா வாக்குகள் தந்த பின் குருநாதர் அகத்தியர் பெருமான் வந்து மீண்டும் அருளாசிகள் வழங்கினார்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறவி எடுத்து வந்து!!!
எதற்காக பிறவி எடுத்து வந்தோம் என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைக்காக இங்கு பிறவி எடுத்து வந்திருக்கின்றார்கள்.
அப்படி பிறவி எடுத்து வந்த வேலையை சரியாக செய்தவன் நீதானப்பா என்று குருநாதர் மெச்சும்படி அருளாசிகள் வாக்குகள் நல்கினார்.
அவ்வாக்குகள் பின்வருமாறு!!!
அப்பனே, எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு என்பேன் அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, நலமாகவே வெற்றிகளும் உண்டு அப்பனே, எதை என்று புரிய.
இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன் அருகில் இருந்தே அனைத்தும் யான் காப்பேன் அப்பனே, பின் குறைகள் இல்லை.
இதுவரை பின் உன்னுள் இருந்து உன்னை இயக்கினேன் அப்பனே,
இனிமேலும் இயக்குவேன் கவலை கொள்ள வேண்டாம்.
நலமாக உன் பிள்ளைகளுக்கும் எம்முடைய ஆசிகள் யான் பார்த்துக் கொள்கின்றேன், கவலையை விடு.
இதனால் உங்கள் நிலை எனக்கு புரிகின்றது, கவலைகள் வேண்டாம். அனைத்தும் பின் உங்களிடத்திலே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட, அதாவது பின் ஆற்றல்கள் நிச்சயம் எங்களுடைய ஆற்றல்கள் உங்களிடத்தில் இருக்கின்ற பொழுது அனைத்தும் கடந்து போகும்.
அறிந்தும் ஏது என்று கூற, பின் புண்ணியங்கள் பல உனக்கு கொடுத்து, பின் ஆயுளையும் நீட்டி இருக்கின்றேன்.
திரு சசிகாந்த் அவர்களின் மனைவிக்கு குருநாதர்
அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு
தாயே, நீயும் சரியான உணவுகளை கீரை வகைகளை உட்கொள்ள நன்று.
அறிந்தும் எவை என்று புரிய, துர்க்கையின் ஆசி பரிபூரணம்
இவ்வாறாக இருக்கின்ற பொழுது யானே வழிகள் செய்வேன், கவலைகள் இல்லாமல் இருங்கள்.
பின் உங்களுடனே யான் இருக்கின்றேன், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக.
அதனால் குறைகள் இல்லை. இதனாலே பின் உன்னிடத்தில் இருந்து உன்னை இயக்கினேனப்பா.
அப்பனே, எப்பொழுதும் நீ குழந்தை தானப்பா எனக்கு!!!!.
வயது ஆகிவிட்டதே என்று எண்ணிவிடாதே.
இதனால் குழந்தையை எவ்வாறு? பார்த்துக் கொள்வது என்பதை யான் அறிவேன்,
பக்கத்திலே தான் உறங்குகின்றேன், கவலை விடு.
இதனாலும் பின் நன்கு உணர்ந்து யானும் அறிந்தும் பல வகையான நட்புக்கள், அதிலும் நின்று!!!
நிச்சயம் பின் அதாவது உறங்கின்ற பொழுது சிறிது மூச்சு பயிற்சி செய்து உறங்கு.
ஆசிகள்!!
மீதி யான் பார்த்துக் கொள்கின்றேன், அனைத்து சித்தர்களின் ஆசிகள்.
வசிஷ்டனின் ஆசிகளும் பரிபூரணம்.
அழகாக பின் (மகா) பாரதத்தில் ஏது புரிய, அதாவது ராமாயணத்திலும் ஒரு பகுதியாக வந்தாய்,
(திரு சசிகாந்த் அவர்கள் மகாபாரதத்திலும் ராமாயணம் நடந்த காலகட்டத்திலும் பிறவிகள் எடுத்து வாழ்ந்து பங்களிப்பு செய்திருக்கின்றார்)
கலியுகத்திலும் பிறந்திருக்கின்றாய்.
எங்களுடைய ஆசிகள் பின் கிடைத்திருக்கின்றது, அனைத்து விஷயங்களும் நீ தெரிந்து கொண்டாய், அனைத்தும் பின் யான் சொல்லிக் கொடுத்திருக்கின்றேன்.
கவலைகள் இல்லை, நலமாக எம்முடைய ஆசிகளப்பா, லோபா முத்திரையோடு.
ஆசிகள் !!!
தேடிக் கொண்டிருந்தாய் அப்பா, எப்பொழுது வருவேன்??? என்று!!!
வந்து கொண்டே இருக்கின்றேனப்பா,!!
யாங்கள் பல உரைகளை உனக்கு உரைத்திருக்கின்றோம்,
ஆனாலும் பின் நிச்சயம் நீயும் பின் பிறவி கேட்டாய், உங்களைப் பற்றி நாங்கள் அதாவது பின் உலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்றே வந்தாய்,! குழந்தாய்!!.
ஆசிகளப்பா,!!! ஆசிகள், கோடிகள், உன்னருகிலேயே இருக்கின்றேன் யான், கவலைப்படாதே.
அறிந்தும் அப்படி எங்காவது செல்ல வேண்டுமென்றால் பின் அஷ்ட பின் விநாயகனிடத்தில் பின் ஏதாவது விநாயகனை வணங்கிக் கொண்டே இரு.
(மகாராஷ்டிரா மாநிலம் துணைவியில் அமைந்துள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்களில் ஏதாவது ஒரு திருத்தலத்திற்கு சென்று கொண்டே இரு என்று அருளாசிகள்)
பின் ஏனென்றால் பின் அவனும் உன் அருகிலே தான் இருக்கின்றான், ஏனென்றால் நீயும் இங்கே இருந்தால் பின் உனக்கும் ஒரு வேதனை,
(ஓய்வு பெற்று தனது இல்லத்திலேயே இருந்து கொண்டிருப்பதால் எங்கேயாவது செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் இவருக்கு இருந்து கொண்டே இருக்கின்றது இதற்காக குருநாதர் அருகில் இருக்கும் அஷ்ட விநாயகர் திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வா என்று அருள் ஆசிகள்)
வந்த வேலை சரியாக செய்தவன் நீதான்,
எதற்காக வந்தாயோ.
அந்த வேலையை சரியாக செய்தவன் நீ தானப்பா!!!
கவலைகள் வேண்டாம், எம்முடைய ஆசிகள் எப்பொழுதும் நீ குழந்தை தான்,
அதேபோலத்தான் அனைவருக்கும் ஒரு வேலை இருக்கின்றது, ஆனால் வயது ஆகும் பொழுதுதான் அவை தன் தெரியப்படுத்துவேன்.
அறிந்தும் அப்பா!!! சரியான வேலையை அப்பனே செய்தாய்,
உலகத்திற்கு கொண்டு சேர்த்தாய், இதுதான் அப்பனே, இதற்காகத்தான் பிறவியே எடுத்தாய் நீ.
(திரு சசிகாந்த் அவர்கள் குருநாதர் அகத்தியர் பெருமானை பற்றியும் சித்தர்களை பற்றியும் நீண்ட வருடங்களாக ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் நாடி கிரந்த பவிஷ்ய /NAADI PREDICTIONS...
SHASHIKANT OAK... பெயரில் அமேசான் மற்றும் flipkart வலைதளங்களில் கிடைக்கின்றது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது.
ஓலைச்சுவடி சித்தர்கள் ரகசியம் இவற்றையெல்லாம் மக்கள் அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக வட இந்தியாவில் வாழும் சித்தர்களின் பக்தர்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் சித்தர் மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் இவர் எழுதிய புத்தகங்கள் அதில் இருக்கும் வழிமுறைகள் ரகசியங்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை தந்தது அனைவரும் அடிப்படையாகவும் ஆழமாகவும் தெரிந்து கொள்வதற்கு பேரு உதவியாக இருந்ததா இதன் மூலம் பல நட்புகள் உருவாகின பல தொடர்புகள் உண்டாகின அதன் மூலம் ஒருங்கிணைந்து பல புண்ணிய செயல்களும் இப்பொழுது வரை வட இந்தியாவில் நடைபெற்று வருகின்றது... இந்த நிகழ்வுகளை தான் குருநாதர் குறிப்பிட்டு பெருமையுடன் மெச்சும்படி அருளாசிகள் வழங்கினார்)
ஆசிகளப்பா, ஆசிகள்!
போகனின் ஆசீர்வாதங்கள் கூட.!!!!
திருமூலனின்
ஆசீர்வாதங்கள் கூட,!!!!
புசுண்டனின் ஆசீர்வாதங்கள் கூட!!
பின் கோரக்கனின் ஆசீர்வாதங்கள் கூட.
புலிப்பாணியின் ஆசீர்வாதங்கள் கூட
அறிந்தும் கூட பின் கவலைகள் வேண்டாம்,
நிச்சயம் தன்னில் கூட பின் பாம்பாட்டி சித்தனின் பின் ஆசிகளும் கூட.!!!
ஆசிகள்!!!
அனைத்து சித்தர்களின் ஆசிகள் இருக்கும் பொழுது கவலைகள் வேண்டாம்!!
விடு கவலையை!!!,
யாங்கள் பார்த்துக் கொள்வோம், ஒவ்வொன்றும் எதை என்று புரிய.
அறிந்து கூட நினைத்தால் உன்னுள் பேசுவார்கள்.
(சித்தர்களை இவர் மனதில் நினைத்தால் இவருடைய உள்ளத்தில் வந்த வாக்குகள் தருவார்கள் இவரிடம் மனதில் இருந்து பேசுவார்கள்)
அப்பனே ஆசிகள்!!!
பல சாதனைகள் படைத்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கள் அருகில் இருப்பவன், அப்பனே பெரிய சாதனை
அப்பனே ஆசிகளோடு ஆசிகள், அப்பனே பின்
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் மீண்டும் அப்பனே சொல்வேன் அப்பனே,
ஆசிகள் ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)


ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete