அகத்தியப்பெருமானின் அடியவர்களுக்கு வணக்கம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அவர் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த அகத்தியர் மைந்தனை (திரு.ஹனுமந்ததாசன்), கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர், திருப்பதி, மந்த்ராலயம் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம்.
நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே சமர்ப்பிக்கிறோம். அவற்றை குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, நல்லது செய்து அவர் அருள் பெற்றுக் கொள்ளுமாறு, வேண்டிக் கொள்கிறேன்.
"கவலைகள் இல்லை யான் அருகிலேயே இருந்து வழி நடத்துவேன். என்னென்ன தேவை என்பதைக் கூட யான் அறிவேன். என் பிள்ளைகளுக்கு கூட அறிந்தறிந்து நிச்சயம் செய்வேன் அதனால் குறைகள் ஒன்றும் இல்லை." என அனைவருக்கும் பொதுவான வாக்கை அகத்தியப் பெருமான் அளித்தார்.
அனைவரையும் கூட இறைவன் பார்த்து கொண்டே தான் இருக்கின்றான். நல்லோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று. இறைவன் எங்கெல்லாம் அவர்களை அழைக்க வேண்டுமோ நிச்சயம், வந்து அழைத்துச் செல்வான்.
அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம். இவ்வாறு புண்ணியங்கள் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் அனைவரும் மகிழ்வார்கள், என்ன தேவையோ அதையும் கொடுப்பார்கள.
நிச்சயம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளுங்கள் எவையென்று கூட புண்ணியங்கள், யான் சொல்லிவிட்டேன். பின் நீர் ( தண்ணீர் மோர் மூலிகை குடிநீர்) இன்னும் பல வகையான பழங்களை கூட மற்றவர்களுக்கு தரும் பொழுது எப்படியாவது ஞானிகள் வந்து நிச்சயம் கர்மத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்!
புண்ணியங்கள் செய்தால் உன்னை தேடியே இறைவன் வருவானப்பா. அதனால் ஈசனின் பார்வையும் பார்வதி தேவியின் பார்வையும் கிடைக்க நல்லாசிகள். இனிமேலும் உயர்வுகள் தான் உண்டு என்பதைப் போல் நிச்சயம் என்னுடைய ஆசிகள்!
மேற் கூறியதை, ஒவ்வொரு அடியார்களும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
இனி இந்த "பராபவ" வருடத்தில்" முக்கியமான நாட்களை கீழே தெரிவிக்கிறேன்.
ராமரும் சீதையும் ராமேஸ்வரத்தில்:-
ராமேஸ்வரத்தில் சிவபெருமான் தானே விரும்பி அமர்ந்தார். சித்திரை மாதத்தில், ராமரும், சீதையும் அங்கே வந்து, வளர்பிறை ஏகாதசி அன்று (27/04/2026, திங்கள்கிழமை) சிவபெருமானுக்கு பூசை செய்து பத்து நாட்கள் அங்கு உறைவார்கள்.
ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-
16/05/2026 - சனிக்கிழமை & 12/06/2026 - வெள்ளிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம். பழனி போகர் சமாதிக்கு செல்லலாம். பழனி போகர் சமாதியில் விசாரித்ததில் 12/06/2026 அன்று பரணி நட்சத்திர அபிஷேக பூஜைகள், நடத்துவார்கள் என்று தெரிய வந்தது. (போகர் சமாதி, பழனியில் அபிஷேக பூஜை தேதியை உறுதிப் படுத்திக் கொள்ளவும்)
நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)
24/07/2026 - ஆடி மாதம் - வெள்ளி கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம்
பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)
25/07/2026 - ஆடி மாதம் - சனிக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி/துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.
திருச்செந்தூர்:- (முருகர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)
26/07/2026 - ஆடி மாதம் - ஞாயிற்றுகிழமை- சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.
ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் திருநட்சத்திரத்தை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே (ஓதிமலையில்)ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.
08/09/2026 -ஆவணி மாதம் - செவ்வாய்க்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்.
ஓதிமலை - முருகர், விநாயகர், அய்யப்பன்:-
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேஷமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள் - 15/12/2026 செவ்வாய் கிழமை.
பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2026 முதல் 14/01/2027 க்குள் வருகிறது. பாபநாச தாமிரபரணி கட்ட ஸ்நானம் மிக இன்றி அமையாதது.
ஸ்ரீ லோபாமுத்திரா தாயின் திரு நட்சத்திரம்:-
16/12/2026 - புதன் கிழமை & 12/01/2027 செவ்வாய் கிழமை, மார்கழி மாதம், சப்தமி & சதுர்த்தி திதிகள், சதயம் நட்சத்திரம். (குறிப்பு: இரண்டு முறை வருகிறது).
குருநாதர் அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்.
27/12/2026 - ஞாயிற்றுகிழமை - சதுர்த்தி திதி, ஆயில்யம்
ராமர் கோதாவரி தாய்க்கு பூசை செய்யும் நாள்:-
ராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், அனுமனுடன் வைகுண்ட ஏகாதசி அன்று மாலை பத்ராசலம் கோவில் முன்பாக ஸ்நான கட்டத்தில் வந்து, கோதாவரி தாய்க்கு பூஜை செய்து, ஆரத்தி எடுக்கிற முகூர்த்தம்.
20/12/2026 - ஞாயிறு கிழமை, மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி.
சிவபெருமான், உத்தரகோசமங்கை:-
24/12/2026 - வியாழக் கிழமை, பௌர்ணமி திதி, திருவாதிரை நட்சத்திரம். ஆருத்திரா தரிசனம். உத்திரகோசமங்கை கோவிலில் சிவபெருமான், அபிஷேக நேரத்தில், ஸ்தல வ்ருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அன்று சிவபெருமானே விரும்பி அமர்கிறார். நாமும் அன்று அங்கு அமர வேண்டும் என்கிறார் அகத்தியப் பெருமான். (உத்திரகோசமங்கை ஆலயத்தில், எந்த தியதியில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது என்பதை விசாரித்துக் கொள்ளவும்)
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteகோடகநல்லூர் பூஜை தேதி கூறுங்கள்
ReplyDeleteயாம் பார்த்து நடத்திக் கொள்கிறேன் என இரண்டு வருடங்களுக்கு முன் குருநாதர் கூறியதிலிருந்து, இந்த தொகுப்பில் தேதியை கண்டு குறிப்பிடுவதில்லை. அவரிடமிருந்து செய்தி வரும்போது, தனி தொகுப்பாக தெரிவிக்கப்படும்!
DeleteOm Agatheesaya Namaha🙏🙏
ReplyDeleteNandrikal aiya🙏
யாத்திரைக்கு முன்தினம் ரயில் பயணம் தேதி - 60 நாள் முன்பதிவு ஆரம்பிக்கும் நாட்கள்
ReplyDeleteநம்பிமலை செல்ல 23 ஜூலை - 24 மே
பத்ராசலம் செல்ல 19 டிசம்பர் - 20 அக்டோபர்
உத்திரகோசமங்கை செல்ல 23 டிசம்பர் - 24 அக்டோபர்
ஓதியப்பர் பிறந்த நாள் செல்ல 07 செப்டம்பர் - 09 ஜூலை
ஓதிமலை - முருகர், விநாயகர், அய்யப்பன்: செல்ல 14 டிசம்பர் - 15 அக்டோபர்
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete