​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 9 April 2026

சித்தன் அருள் - 2182 - அன்புடன் அகத்தியர் - ஆதி இராமாயண காவியம் - பகுதி 7



அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 7

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக  அப்பனே பின் ஈசன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தன் அடியார்களுக்கு மிக உயர்ந்த அப்பனே பின் வரத்தையும், உயர்ந்த பதவியும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தன் பிள்ளை போல் என்று எண்ணி அப்பனே, அனைத்தும் செய்து அப்பனே தருகின்றான் அப்பா ஈசன். 

அவனைப் போல் அப்பன் நிச்சயம் கருணை படைத்தவன் அப்பனே.

===========================
# தர்மத்தை நிலைநாட்ட போராடும் அடியவர்களுக்கு……
===========================

குருநாதர் :- அதனால் தர்மத்தை நிலைநாட்ட போராடினால் அப்பனே, நிச்சயம் தன்னில் ஈசன் அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே. 

கருணை படைத்தவன் என்பேன் அப்பனே. 

அனைத்து ஜீவராசிகளும் ஈசனுக்கு சொந்தம். 

இதனால் ஈசன் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. 

இதனால் ஈசனைப் போற்றி  அப்பனே பின், நிச்சயம் போற்றி எதை என்று அறிய  அப்பனே பின், எவை என்று அறிய. வேற்றாகி என்னும் பாடலை அழகாக பாடுங்கள் அனைவருமே. 

சுவடி ஓதும் மைந்தன் :- வேற்றாகி விண்ணாகி . அந்த பாட்டை எல்லாரும் பாடணும் என்றார் வந்து. வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி. அந்த பாட்டு. ஐயா சொல்லிக் கொடுங்க ஐயா.  அதனால வந்து ஈசன் மிகப் பெரியவர், எல்லா வரத்தையும் கொடுக்க கூடியவர். தன் அடியார்கள் வந்துவிட்டால், ஐயோன்னு வந்துவிட்டால், எல்லா இதையும் கொடுப்பவர். அதனால் அவர் நினைச்சு இந்த திருத்தலத்தில் ஒரு பாடல், போற்றி பாடல்ல இருந்து பாடுவோம்ன்றார் வந்து, பாடுங்க ஐயா.

அடியவர்கள் :- (வேற்றாகி விண்ணாகி பாடலை பாட ஆரம்பித்தனர். )

===============================
# 6.055 - திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம் - வேற்றாகி, விண்ணாகி  “பதிகம் ரகசியம்”.

ஈசனார் கோபத்தை தனித்து , மனசாந்தி அடையச்செய்யும் பதிகம். 

பிறர் நலனுக்காக வேண்டினால் மகத்தான புண்ணியத்தை அருளும் பதிகம். 

இது குறித்து குருநாதர் உரைத்த ஒரு வாக்கு - உங்கள் பார்வைக்கு மீண்டும் இங்கு கீழே…. அவசியம் அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள் இவ் பதிகத்தின் ரகசியத்தை. 

சித்தன் அருள் - 2064 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை - பகுதி - 4
https://siththanarul.blogspot.com/2026/01/2064-4.html

குருநாதர் :-  இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று அறிய அப்பனே, பின் அடிக்கடி, அப்பனே, பின் அதாவது, அப்பனே, கோபம் கொள்வான் ஈசன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறு, அப்பனே, மீண்டும், அப்பனே, ஈசனை மன சாந்தி அடைய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, வேற்றாகி விண்ணாகி என்ற பாடலை இவர்களுக்காக, அப்பனே, ஈசன் இரங்கட்டும். 

அனைத்தும் இவர்களுக்கு கொடுக்கட்டும். உங்கள் புண்ணியங்கள் பெருகட்டும், அப்பா. 
===============================


===============================
# ஈசனார் கோபத்தை தனித்து , மனசாந்தி அடையச்செய்யும், அனைத்தும் ஈசன் கொடுக்கும் , புண்ணியங்கள் பெருகும் -  வேற்றாகி விண்ணாகி பதிகம் பாடி முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது.
===============================

சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா படிக்கிறேன். 

குருநாதர் :-  இவ்வாறாக பின் எத்தனை, எதை என்று புரிய அதாவது சாதாரண எவை என்று கூற. 

குருநாதர் :-  ஈசன் யாருக்கும்…. அதனால் பின், அதாவது முப்பத்தி   முக்கோடி தேவர்களும் அனைவரும் நிச்சயம் பின், அவ்வாறாக ஒரு நிச்சயம் தன்னில் கூட பின், சீதைக்கு, அதாவது ஒரு பெண்ணுக்கு பின் உதவிகரமாக இருக்கின்றானே என்று எண்ணி, அனைத்து தேவாதி  தேவர்களும் இத் தேசத்துக்கு வந்து பின் அடைந்தனர், பல வழிகளில் கூட, சேவையாற்ற.

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும்  இந்த தேசத்துக்கு வந்தாங்க. ஈசனே அங்க போயிட்டாரு, நாமும் போவோம்னு சொல்லிட்டு எல்லாரும் வராங்க.

அடியவர் :- அதாவது சீதை அம்மா இங்க இருக்காங்க. சிவனே..ஆஞ்சநேயர் ரூபத்தில்  இங்க வந்துட்டாரு. இதை பார்த்த தேவாதி தேவர்களும் ஈசனே இங்க போயிட்டாரு, என்று நினைச்சு அவங்களும் என்ன செய்றாங்க? பேசிட்டு கொண்டிருக்காங்க. 

குருநாதர் :- இதனால்தான் எதை என்று புரிய,  எவை என்று அறிய, இது இறைவனுடைய தேசமாகவே திகழ்ந்தது. ஆனாலும் காலப்போக்கில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றது. அழியும் நிலைக்கு வந்துவிட்டது. பின் அழியாமல் காக்கத்தான் சித்தர்கள் இன்னும் போராடுகின்றோம், பின் நிச்சயம் தன்னில் கூட. 

அடியவர் :- அதாவது இந்த தேசம் அவ்வளவு ஒரு விசேஷமானது. எல்லாரும், தேவாதி தேவர்களும், இறைவன் கொண்ட இந்த தேசம் வந்து… இன்னைக்கு இப்ப… அழிவு மாதிரி போயிட்டு இருக்கு. அதனாலதான் இதை காப்பாத்தி,  இந்த தேசத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர சித்தர்கள் எல்லாரும் போராடிக்கொண்டு இருக்காங்க. 

குருநாதர் :- உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். 

அனைத்தும் ஒவ்வொரு உயிரும் கூட இறைவனுக்கே சொந்தம் என்ற எண்ணத்தை நிச்சயம் விதைக்க வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

அதனால் எதை என்று கூற, பின் அதாவது எவ்வாறு என்பதெல்லாம் நீண்டு எவை என்று அறிய, பின் இவ் தேசம் நீண்டு  மிக மிக எவை என்று கூற.

===============================
# குமரிக்கண்டத்தில் மறைந்துள்ள சிலைகளின் ரகசியங்கள்….
===============================

குருநாதர் :-  ஆனாலும் காலப்போக்கில் பல பல திருத்தலங்களில் இங்குதான் எதை என்று அறிய. 

ஆனாலும் காலப்போக்கில் அவை அழிந்தும் கிடக்கின்றது. கடலுக்கு அடியில் பின் எது என்று புரிய. 

பின் இன்னும், பின் அதாவது அழகான சிலைகள் எல்லாம் நிச்சயம் அப்படியே தன்னைத்தானே சிந்தித்துக் கொண்டு, அதாவது இறைவன், இறைவனை சிந்தித்துக் கொண்டு ஆற்றலை கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றது, இவ் நாட்டின் பின்  மக்களுக்கு எதை என்று புரிய.

ஆனாலும் மக்கள் அதை நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் எது என்று எல்லாம் நிச்சயம் பின், அதாவது நல் மனதாக அது இருந்தாலே அவ்வாற்றல்கள்  வந்து விழுந்து அனைத்தும் தந்துவிடும். 

ஆனால் மனிதன் வருங்காலத்தில் எதை என்று யோசிப்பதனால் மட்டுமே அவ்வாற்றல் மனிதனுக்கு வந்துவிடுவதே இல்லை. அதனால்தான் வந்தடைய இத்தனை போராட்டங்கள்.


குருநாதர் :- அப்பனே எதற்காக இத்தனை ஏது என்று புரிய, இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை மீண்டும் பின் நிலைநாட்ட வேண்டும். 

அப்பனே உண்மையெல்லாம் கொண்டு வர வேண்டும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்தான் சித்தர்களும் யாங்களும் போராடிக் கொண்டே எது என்று அறிய அப்பனே. இதனால்  அப்பனே அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் பல ஞானிகள் அப்பனே பின் காக்க வந்தனர் தேசத்தை அப்பனே. 

அதனால்தான் அவர்கள் நிச்சயம் தன்னில் கூட,  தியானத்தில் அனைவரும் அமர்ந்திருக்கின்றார்கள் அப்பனே. அவர்கள் மீண்டும் எழுப்பத்தான் அப்பனே. இவ்வளவு வார்த்தை சொல்லி சொல்லி… அப்பனே எழுப்பினால் அவர்கள் நிச்சயம் பார்த்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே.

அடியவர் :- தர்மத்தை நிலை நாட்டி , மீண்டும் அந்த உண்மையான விஷயத்தை கொண்டு எல்லாம் வெளியில் வருவதற்குத்தான்,  சித்தர்கள் இவ்வளவு போராடுகின்றார்கள். இந்த தேசத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது. 

குருநாதர் :- அப்பனே நல்விதமாக இன்னும் அப்பனே பல தேசங்கள் அப்பனே எதை என்று புரிய,  அப்பனே எவ்வாறெல்லாம் இயற்கை சீற்றங்கள் என்பதை எல்லாம்,  அப்பனே தெரிவித்துக் கொண்டே. 

இதனால் அப்பனே அனைத்தும் அப்பனே பின் அவரவர் வரட்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே அப்பனே பின் பல வழியில் கூட ஞானிகள் பற்றி நீங்கள் அப்பனே போற்றி துதிக்கின்றீர்கள் அல்லவா? 

அப்பனே நிச்சயம் அவர்கள் எழுந்து வரட்டும் அப்பனே. 

அவரவர்களும் அப்பனே  நிச்சயம் காக்கட்டும். 

அப்பனே  நிச்சயம் தன்னில் கூட ஒரு தெளிவு பெறட்டும், என்பதற்காகத்தான் அப்பனே பின் நிச்சயம் அவரவர் அப்பனே வாழ்க்கை இன்னும் கூட… 

அப்பனே புத்தரின் வாழ்க்கை பற்றி கூட… அப்பனே பின் இயேசு நாதரின் வாழ்க்கை பற்றி கூட… அப்பனே இன்னும் நபிகள் நாயகம் இன்னும்… அப்பனே எத்தனை எத்தனை அப்பனே நிச்சயம் பின் காக்க வந்தனர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லி வரச் சொல்கின்றேன் அப்பனே.  

காக்கட்டும் ! 

காக்கட்டும் !!

அடியவர் :- தேசத்தை வந்து அப்ப இயற்கை அனர்த்தங்கள் பல அழிவு வந்திருக்கின்றன. அந்த தேசத்துக்கு உண்மை என்னன்னு தெரியாது. அதனாலதான் தேசத்தை காத்துட்டு இருக்கு. அது நல்ல ஞானியாக இருந்தாலும் சரி, இயேசுநாதர் இருந்தாலும் சரி, இல்லாட்டி அது புத்த பகவானா இருந்தாலும் சரி, இந்த  தேசத்தை வந்து அவங்க எல்லாம் அந்த தர்மத்தை போதித்து,  சேர்த்து இந்த தேசத்தை காப்பாற்றுவதற்கு எல்லோரையும் வர சொல்லி இருக்காங்க. எல்லாரும் இப்ப வந்து தேசத்தை காப்பாத்துங்கன்னு சொல்லி இருக்காங்க. 

குருநாதர் :- அப்பனே இன்னும் கூட அப்பனே இராவணேசனின் வாழ்க்கை வரலாற்றை அப்பனே நிச்சயம் சொல்வேன் அப்பனே. மீண்டும் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே இது போதும் அப்பா இன்றைக்கு அப்பனே. 

மீண்டும் அப்பனே பல ரகசியங்கள் உள்ளது. அவனிடத்தில் கேட்டுத்தான் நான் சொல்ல வேண்டும் என்றேன் அப்பனே. எதை என்று புரிய அப்பனே மீண்டும் அவன் கோபித்துக் கொள்வான். 

அதனால் அவனிடத்திலே கூறி இன்னும் உரைக்கின்றேன் ஆசிகளோடு ஏனென்றால் பின் அவனுடைய ஆசிகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா? 

அதனால் அவனிடத்திலே பின் முறையிட்டு சொல்கின்றேன் அப்பனே.  இன்னும் வாக்குகள், பல தத்துவங்கள் அவன் எழுதி வைத்த மந்திரங்கள் உபதேசங்கள் இன்னும் என்னென்ன அவையெல்லாம் சொல்கின்றேன். அவன் அனுமதி பெற்றே.  கவலைப்பட வேண்டாம். அப்பனே இன்னும் ஈசனை போற்றி பின் பாடல் பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன சொல்றாருன்னா… இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குது. அது யார்கிட்ட கேக்கணும்?

அடியவர் :- இராவணேஸ்வரர் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் கிட்ட கேட்டு சொல்றேன். அவர் கோவப்பட்டா என்ன? அதே ஒரு சாபமா போயிடுது எல்லாருக்கும் வந்து… அதனால  இன்னும் அவரை கேட்டு சொல்றேன். அவர் சொன்னாருன்னா அது நமக்கு இன்னும் புண்ணியமா போகும். அப்ப இதுவரைக்கும் சொன்னதுனா போதும்.

அடியவர் :-  ஒரு விஷயம் கேட்டேன். இப்ப நம்ம அகத்தியர் ஸ்தாபனத்துல,  யாகம் மட்டும் செய்யறதுக்கு உத்தரவு.

குருநாதர் :- அப்பனே ஏன் எதற்கு?  யான் செய்து கொள்கின்றேன் அப்பனே. ஏனென்றால் அப்பனே நீங்கள் செய்தால் அப்பனே ஊரார்கள் எது என்று புரிய, பின் அதாவது அனைவரும் எவை என்று, இப்படி இருக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்ற நினைப்பு வந்துவிடும் என்பேன் அப்பனே. இதனால் அனைவரும் கூடி பின் திருவிழா போல் செய்யுங்கள் அப்பனே.

(……சில உரையாடல்கள்……)

குருநாதர் :- அப்பனே எது என்று அதனாலதான் உங்களுக்காக யான் செய்து கொள்கின்றேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்காக நானே அங்க செய்றேன்பான்ட்டாரு வந்து. 

குருநாதர் :- ஏன் எதற்கு சொல்கின்றேன் என்றால் அப்பனே, இதிலும் அப்பனே, சரி அப்பனே பின் நீங்களே அலசி ஆராயுங்கள். 

( அடியவர்கள் சிந்தித்து சில உரையாடல்கள் அங்கு )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசா போற்றி

    ReplyDelete